Wednesday, 5 April 2017

கடமை

                                                                      கடமை




  • கதவைத் திறந்து வை காற்று தானே வரும்
  • கடமையை செய்து வை புகழ் தானே வரும்
  • கயமை என்பது மற்றவர் துன்பத்திலே இன்பம் தேடுவது
  • கடமை என்பது மற்றவர் இன்பத்திலே இன்பம் தேடுவது
  • கயமைக்கு உடனே பலன் கிடைக்கும் நெடுநாள் சிறையிருக்க வேண்டும்
  • கடமைக்கும் பலன் கிடைக்கும் நெடுநாள் காத்திருக்க வேண்டும்
  • கள்ளமில்லாதவன் செல்வம் வளர் பிறை போல வளரும்
  • கடைமையறியாதவன் வளமை தேய் பிறை போலத்தேயும்
  • சிலர் வாழ்க்கையை கடமைக்காக சலித்து வாழ்கின்றனர்
  • சிலர் வாழ்க்கையையே கடமெயென அர்ப்பணித்து வாழ்கின்றனர்
  • உரிமையை இழந்தவன் அடிமை என இகழப்பவொன்
  • கடமையைச் செய்யாதவன் கயவன் என இழிவுபவொன்
  • ஒரு செயலை செய்து விடுவதால் சில துயரம் வரும்
  • ஒரு செயலை செய்யாமல் விடுவதால் பெருந்துயரம் வரும்
  • விளையாட்டை விளையாட்டாக விளையாடி மகிழுங்கள்
  • கடமையை கண் போல கருத்தோடு செய்யுங்கள்
  • கண்ணோடு பிறக்கும் 
  • ஒவ்வொரு மனிதனுக்கும் உலகில் ஒரு காட்சியிருக்கிறது
  • கையோடு பிறக்கும் 
  • ஒவ்வொரு உயிருக்கும் உலகில் ஒரு வேலையிருக்கிறது
  • ஒரு துளி உதிரம் போகப்போக உன் உயிரும் போகிறது
  • ஒரு துளி நேரம் வீணாகப் போக உன் உதிரம் உதிர்கிறது
பொறுப்பு

  • முணுமுணுப்பவன் வேலையை முழுமையாக முடிப்பதில்லை
  • தொணதொணப்பவன் வேலையை செய்யவும் விடுவதில்லை
  • நாளைக்காக  இன்று வருத்தப்படுவது சோர்வு தரும்
  • நாளைக்காக இன்று திட்டமிடுவது தீர்வு தரும்
  • ஒரு நல்ல இதயம் ஓராயிரம் தலைகளுக்கு ஈடாகாது
  • ஒரு நல்ல செயல் ஓராயிரம் வார்த்தைகளுக்கு ஈடாகாது
  • பொறுப்புடன் பொன்னான வேலை செய்பவர் அமைதியாயிருப்பார்
  • வெறுப்புடன் வீணான வேலை செய்பவர் ஆர்ப்பரிப்ப்பார்
  • புது மனைவியின் பளபளப்பும் புது பதவியின் சலசலப்பும் சிலநாளே
  • புது பணக்காரன் மினுமினுப்பும் 
  • புது வேலைக்காரன் சுறுசுறுப்பும் சிலதானே
  • அறிஞர்கள் ஒரு செயலைப் பற்றி விவாதித்தே கெடுக்கிறார்கள்
  • அறிவாலிகள் ஒரு செயலை யோச்க்காது செய்து கெடுக்கிறார்கள்
  • பேசக் கூடாத நேரத்தில் பேசுவதும் குற்றம்
  • பேச வேண்டிய நேரத்தில் பேசாததும் குற்றம்
  • சந்தர்ப்பத்தால் விழுபவன் விதி வழி போகும் ஓடம்
  • சங்கல்பத்தால் வெல்பவன் மதி வழி போகும் பாடம்
  • பூவினது உயர்வு பொய் கையுள் ஆளத்தளவே
  • உள்ளமது கலங்காத ஊக்கமே ஒருவனது ஆக்கத்தளவு
  • பொறுப்பை விரும்பும் திறமையே அவனை அளவிடும் அளவீடு
  • புகழை விரும்பும் முனைப்பே அவனை மதிப்பிடும் மதிப்பீடு
கவனம்

  • நெருப்பால் அழியும் கயிற்றுப் பாலம் அல்லவோ
  • விழித்துக் கொண்டிருந்தவர் எல்லாம் பிழைத்துக் கொள்வார்
  • நடக்கும் போது விழுவது காலின் குற்றமல்ல கண்ணின் குற்றமே
  • முயற்சியின் போது தோற்பது செயலின் குற்றமல்ல மனிதனின் குற்றமே
  • நிலவுக்கு பறந்து செல்ல ஆசைப்படுங்கள் ஆனால்
  • பூமியில் கால் ஊன்றி வாழப்பழகுங்கள்
  • குறுக்கு வாட்டில் தலையாட்டியதால் தோற்றுப் போனவர் ஏராளம்
  • நெடுக்கு வாட்டில் தலையாட்டியதால் மாட்டி கொண்டவர் ஏராளம்
  • வாழும் போது கண்களை மூடிக்கொண்டே வாழ்கிறோம்
  • இறக்கும் போது கண்களை திறந்து கொண்டே இறக்கிறோம்
  • நடக்கும் போது வானம் பார்க்காதே தரையைப்பார்
  • கற்கும் போது வாயைப் பார்க்காதே கைளயப்பார்
  • குளக்கரை இருக்கும் கொக்கென அடங்கி
  • கால நேரம் பார்த்து இருப்பார் கர்ம வீரர்
  • ஆத்திரத்தில் முடிவெடுத்தது எல்லாம் சாவகாசமாக வருத்தப்படு
  • அவசரத்தில் முடித்தது எல்லாம் சர்வநாசமாகப் போய்விடும்
  • கவனமாக கேட்கத் தெரிந்தால் முட்டாளின் பேச்சுக் கூட புரியும்
  • கவனமாக செய்யத் தெரிந்தால் முடியாத செயல் கூட முடியும்
  • கார்யத்தை கெடுப்பவர்கள் வெளியில் மட்டும் இல்லை
  • கவனத்தை சிதறடிப்பது வெளியில் இருந்து வருவதில்லை
காலம்

  • சிரிக்க மறந்தவன் சீரழிந்து சிரமப்படுவான்
  • சீக்கிரம் எழுபவன் சிகரத்தை தொடுவான்
  • கண்மூடி உறங்கி விட்டு காலத்தை குறை சொல்வதேன்
  • வாய் மூடி வணங்கி விட்டு மற்றவரை குற்றம் சொல்வதென்ன‌
  • கப்பல் போல நாம் காலத்தை நடத்திச் சென்றால் புகழடைவோம்
  • கழுகு போல நம்மை காலம் தூக்கிச் சென்றால் இகழடைவோம்
  • காலத்தை பராமரிக்க கற்ற பின் மனிதனானான்
  • காமத்தை பாரமரிக்க கற்றவனே அறிஞனானான்
  • காலத்தை கடத்துபவர் புழுதியில் கிடப்பார்
  • காலத்தை நடத்துபவர் புகழில் நடப்பார்
  • காலத்தை விட காயத்தை ஆற்றும் சிறந்த மருத்துவனில்லை
  • காலத்தை விட பாடத்தை சொல்லும் சிறந்த ஆசானில்லை
  • நேற்று காலத்தை நான் உதாசீனம் செய்தேன்
  • இன்று காலமே என்னை உதாசீனம் செய்கிறது
  • காலம் வரும் வரை கழுகு போல அமைதியாக காத்திருங்கள்
  • வாய்ப்பு வரும் போது புயல் போல புறப்பட்டு செல்லுங்கள்
  • காலத்தின் கால்கள் திரும்பி நடப்பதில்லை நடந்ததை மறந்து விட்டு
  • கடிகாரத்தில் கால்கள் திரும்பி சுழல்வதில்லை கடந்ததை துறந்து விடு
  • துயர் என்பது நம் வீட்டு எல்லை வரட்டும் என சிந்திக்க வேண்டும்
  • துயரின் வீட்டு எல்லை சென்று நாம் சிந்திக்க வேண்டும்
வாய்ப்பு

  • மக்கு போல வந்த வாய்ப்பை நழுவ விட்டவன் ஏமாளி
  • கொக்கு போல வரும் வாய்ப்புக்கு தவம் இருப்பவன் அறிவாளி
  • அலைகள் கூட ஆற்றல் உள்ளவன் பக்கமே
  • அதிட்டம் கூட அறிவு உள்ளவர் அருகிலே
  • வாய்ப்பு வரும் போது வாய் திறந்து பேசாதவர் மனாதுக்குள் அழுவார்
  • வாய்ப்பு வரும் போது கை நீட்டி பிடிக்காதவர் காலத்துக்கும் அழுவார்
  • வாழ்வென்பது விளையாட்டு எதிர் வரும் துயரை பலமாக அடி
  • வாழ்வென்பது விளையாட்டு வாய்ப்பு வரும் போது இலாவகமாக பிடி
  • வல்லவனுக்கு பதவி மறுக்கப்பட்டாலும் பலருக்கு பதவி தரும் தலைவனாவான்
  • நல்லவனுக்கு உதவி மறுக்கப்பட்டாலும் பலருக்கு உதவி தரும் அறிஞனாவான்
  • அதிட்டம் கண்ணடித்த போது உறங்கினான்
  •        அவள் அடுத்தவனுடன் போய் விட்டாள்
  • அதிட்டம் கதவை தட்டிய போது உறங்கினான்
  •         அவள் அடுத்த வீட்டுக்குப் போய் விட்டாள்
  • திறமையுள்ளவர் புறக்கணிக்கப்பட்டால் தீமை வளரும்
  • வறுமையுள்ளவர் வஞ்சிக்கப்பட்டால் வன்முறை வளரும்
  • வாங்காமல் வருவது வம்பு மட்டுமே
  • கேட்காமல் கிடைப்பது வசை மட்டுமே
  • நிர்ப்பந்தங்கள் வரும் போது முதுகு வளைந்து விடாதே
  • சந்தர்பங்கள் வரும் போது கதவு சாத்தி விடாதே
முன்னேற்றம்


  • முடவனுக்கு கல் தடையாகும் முயல்வனுக்கு அது படியாகும்
  • பயந்தவனுக்கு துயரம் துக்கமாகும் வியந்தவனுக்கு அது ஞானமாகும்
  • ஏழ்மை கல்வித்கு தடையென்பது
  •  உண்மையானால் அறிஞரே இருக்கமுடியாது
  • வறுமை வாழ்வுக்கு தடையென்பது 
  •  உண்மையானால் உலகே இருக்கமுடியாது
  • எதிர்காலமென்பது முகபக்கம் அதை பார்ப்பவர்க்கு தடுமாற்றம் இல்லை
  • இறந்தகாலமென்பது முதுகுபக்கம் இதை பார்ப்பவர்க்கு முன்னேற்றம் இல்லை
  • தொண்டனாக வாழ்ந்து சிறந்தவனே நல்ல தலைவானாவான்
  • தொழிலாளியாக வாழ்ந்து உயர்ந்தவனே நல்ல முதலாளியாவான்
  • கடமைகளை முடித்து வா
  • உரிமை உன் மணைவி போல காத்திருக்கு
  • தகுதிகளை சேர்த்து வா
  • பதவி உன் செருப்பு போல காத்திருக்கு
  • இளைஞனின் வேகம்
  • முதுமையின் விவேகம் உள்ள தொழிலாளிவிரவில் முதலாளியாவார்
  • ஆண்மையின் வேகம்
  • அறிஞனின் விவேகம் உள்ள தொண்டன் விரைவில் தலைவணாவான்
  • உழைக்காமல் உயர நினைப்பது சாவியில்லாது பூட்டை திறக்கும் முயற்சி
  • கற்காமல் வாழ நினைப்பது ரணியில்லாமல் மாடி ஏறும் முயற்சி
  • உயர்ந்த கட்டிடங்கள் ஏற உயர்ந்த ஏணிகள் தேவை
  • உயர்ந்த புகழிள் சிகரங்கள் ஏற உயர்ந்த எண்ணங்கள் தேவை.

No comments:

Post a Comment

ஆண் அழுவான்...

 தாய் தந்தை இறந்தால் ஆண் அழுவான்... *தனக்கு குழந்தை பிறக்கப்போகிறது என்று நற்செய்தி கேட்டு ஆண் அழுவான்... *தன் குழந்தைகளில் ஒருவர் நோய்வாய்ப...