Wednesday, 5 April 2017

ஊக்கம்

                                                                        ஊக்கம்



  • ஊகம் என்பது நடக்கும் முன்பே நல்லறிவால் உணர்வதுவே
  • ஊக்கம் என்பது நடக்க இயலாததை நற்செயலால் செய்வதுவே
  • கிடைக்கவில்லையே என்று ஏங்கி அழவது ஏக்கம்
  • கிடைக்கவிலையே என்று ஒங்கி உழைப்பது ஊக்கம்
  • விரலுக்கு ஏற்பவே வீக்கம்
  • உழைப்புக்கு தக்கவே ஊக்கம்
  • மெய்மையும் வாய்மையும் வீர ஆசாரமும்
  • புத்தி சேர் உத்தியும் யுத்தி சேர் ஊக்கமும் உடையவன் தலைவன்
  • தனது மூளை சிறப்பானது என நினைப்பவன் கர்வத்தில் சறுக்குகிறான்
  • தனது வேலை சிறப்பானது என செய்பவன் உலகத்தில் சாதிக்கிறான்
  • கலகலப்பாக வாழ்பவருக்கு கண்ணீர் சுரக்க நேரமில்லை
  • சுறுசுறுப்பாக உழைப்பவருக்கும் துயரை நினைக்க நேரமில்லை
  • எறும்புகள் விதை உருட்டும்
  • ஆனைகள் மரம் உருட்டும்
  • குறும்புகள் கோள் பேசும்
  • அறிஞர்கள் கோள்களை சுற்றுவார்
  • வென்றவர்களோ மறுவாய்ப்பு தேடி ஒடுகிறார்கள்
  • தோற்றவர்களே ஒரு சாக்கு தேடி அசைகிறார்கள்
  • உற்சாகமில்லாத தொழிலாளி எரிபொருள் இல்லாத வாகனம்
  • உணர்வில்லாத தலைவன் உயிர் இல்லாத பொம்மை.                    
ஆர்வம்
  • அரைக் கதவை திறந்து வைத்தால் எலியும் பூனையுமே வரும்
  • அரை மனதில் செய்து வைத்தால் தோல்வியும் துயரமுமே வரும்
  • ஆர்வத்தோடு செய்யும் செயல்கள் உயர்வைத் தரும்
  • ஆர்வமில்லாது  செய்யும் செயல்கள் அயர்வைத் தரும்
  • ஆசையென்ற தீயெரிந்தால் மானமெல்லாம் கரிசாம்பலாகும்
  • ஆர்வமென்ற ஆனைநடந்தால் தடையெல்லாம் தவிடுபொடியாகும்
  • ஈர்ப்புடன் கேட்கும் பாடமும் இசையாக இனிக்கும்
  • ஈடுபாட்டுடன் சுமக்கும் பாரமும் எளிதாக இருக்கும்
  • விருப்பமில்லாது முயல்பவர்கள் துவங்குமுன்பே தோற்றவராவார்
  • விருப்பமில்லாது மணந்தவர்கள் பிறக்கு முன்மே இறந்தவராவார்
  • ஆர்வமில்லாத உழைப்பு எண்ணெய் இல்லாத விளக்கு
  • அறிவில்லாத முனைப்பு மூடி இல்லாத விளக்கு
  • இரக்கம் இல்லாதவனுக்கு கொடுக்க வராது
  • ஈடுபாடு இல்லாதவனுக்கு படிப்பு வராது
  • உறக்கம் இல்லாதவனுக்கு அமைதி வராது
  • உழைப்பு இல்லாதவனுக்கு எதுவும் வராது
  • நாம் ஒரு கார்யத்தை விரும்பி செய்தால் மகிழ்வோம்
  • நாம் செய்யும் கார்யர்த்தை விரும்ப ஆரம்பித்தால் மிக மகிழ்வோம்
  • சுறுசுறுப்பு என்பது அமைதியானவரது விவேகம்
  • பரபரபப்பு என்பது அவசரப்பட்ட வந்து அடங்காத வேகம்.             
முனைப்பு
  • கற்று விட்டோம் என்ற களைப்பு உள்ளவரெல்லாம் முதியவரே
  • கற்க வேண்டும் என்ற துடிப்பு உள்ளவரெல்லாம் இளையவரே
  • முகவரியில்லாத கடிதங்கள் வேண்டியவரை சேர்வதில்லை
  • முனைப்பில்லாத மனிதர்கள் முன்னேற்றம் அடைவதில்லை
  • கடையில் நின்று இனிப்புக்காக ஏங்கும் குழந்தையாய் வளராதே
  • கடலில் சென்று மக்களுக்காக போராடும் தலைவனாக உயர்ந்திடு
  • ஏற்றுக் கொள்ளாமல் எதிர்ப்பவர்கள் தரும் துயரம் சிறிது
  • ஏற்றுக் கொள்ளாமல் சம்மதிப்பவர்கள் தரும் துயரம் பெரிது
  • தானே உலகைச் சுற்றி வருபவன் தலைவனாவான்
  • வீணே ஊரைச் சுற்றி வருபவன் கழுதையாவான்
  • மண்ணுக்குள் கிடப்பதுவும் மகுடத்தில் மிளிர்வதுவும் முன் விளைப்பயனே
  • மண்ணில் சிறப்பதுவும் மனிதனாக உயர்வதுவும் நம் செயலில் பயனே
  • ஒரு ஙாலை மடிக்கும் போது அறிவு மட்டுமே கிடைக்கிறது
  • ஒரு செயலை முடிக்கும் போது அனுபவமும் கூட கிடைக்கிறது
  • விதியும் சதியும் நடந்தால் பசுமைகளும் பாலையாகும்
  • நதியும் மதியும் நடந்தால் பாலைவனமும் சோலைவனமாகும்
  • நன்றாகப் பாடுபவன் ஊருக்கே தெரிந்தவனாவன்
  • நன்றாகப் பாடுபடுப‌வன் உலகுக்கே தெரிந்தவனாவான்
  • நேரமும் காற்றும் இளமைப்பொழுதும் காத்திருப்பதில்லை
  • வாய்ப்பும் வாகனமும் நொடிப்பொழுதும் காத்திருத்ததில்லை                
ஆற்றல்

  • வினை தெரிந்து உரைத்தல் பெரிதல்ல‌
  • அதை நன்கு ஆற்ற்லே ஆற்றலெனப்படும்
  • உள்ளத்து எழுச்சியும் உவகையும் ஊக்கமும்
  • தளராத முயற்சியும் தகுந்தவர் சார்பு மிகுந்தால் விதியையும் வெல்லலாமே
  • அவித்த கிழங்கை வெட்டுவது வீரமாகாது
  • அடுத்தவர் திறமையை திருடுவது தர்மமாகாது
  • கொடுத்தால் மழை போல கொட்ட வேண்டும்
  • எடுத்தால் கடல் போல எடுக்க வேண்டும்
  • விடுத்தால் அம்பு போல பாய வேண்டும்
  • அழித்தால் தீ போல அழிக்க வேண்டும்
  • எழுத்தறியாதவன் எழுத்தைப் படுக்கும் போது குருடன்
  • இசையறியாதவன் இசையைக் கேட்டும் போது செவிடன்
  • கொடுத்தறியாதவன் ஏழைவந்து கேட்கும் போது முடவன்
  • கொள்கையில்லாதவன் சபை வந்து பேசும் போது ஊமன்
  • அறிவின் நீளமே ஆற்றல் வளரும் 
  • செறிவின் நீளமே போற்றல் வளரும்
  • அன்பின் நீளமே சொந்தம் பெருகும்
  • பண்பின் நீளமே பந்தம் பெருகும்
  • ஆற்றல் என்பது நம்மை போற்றி வந்தவரை காப்பது
  • போற்றல் என்பது நம்மை வாழ வைத்தவரை வணங்குவது
  • துயரம் ஒரு தடைகல் தூக்க முடியாது தாண்டி செல்வோம்
  • துன்பம் ஒரு நதிநீர் மூழ்க கூடாது நீந்தி செல்வோம்

No comments:

Post a Comment

ஆண் அழுவான்...

 தாய் தந்தை இறந்தால் ஆண் அழுவான்... *தனக்கு குழந்தை பிறக்கப்போகிறது என்று நற்செய்தி கேட்டு ஆண் அழுவான்... *தன் குழந்தைகளில் ஒருவர் நோய்வாய்ப...