நோயை
தீர்க்கக் கூடிய இசை மருத்துவம்
இசையை அடிப்படையாக வைத்து நோயை
தீர்க்கக் கூடிய மருத்துவம் உலகின் பல்வேறு நாடுகளில்
பின்பற்றப்படுகிறது. உடலின் அதிர்வுகளை கடத்தக் கூடிய நரம்பு மண்டலத்தை சீர்படுத்துவதில் இசை பெரும் பங்கு வகிக்கிறது. பொதுவாக உடலின் அனைத்து உணர்வுகளையும் தூண்டுவதற்கும், கட்டுப்படுத்துவதற்கும் தனித்துவமான இசை உண்டு.
நரம்பு தொடர்பான கோளாறுகள், சில அதிர்ச்சி சம்பவங்களால் ஏற்படும் உடல் கோளாறுகள் போன்றவற்றை சரி செய்ய சில வகையான இசை பயன்படுத்தப்படுகிறது. அமெரிக்காவில் மசாசூஸ் என்ற நகரில் ஒரு பல் மருத்துவர் பல் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் போது, அவர்களுக்கு பல் வலி தெரியாமல்
இருப்பதற்காக இசை எழுப்பிக்கொண்டே சிகிச்சையினை
மேற்கொள்வாராம். அந்த இசையை நோயாளிகள் கேட்கும் போது மயக்க மருந்தோ, வலி மருந்தோ இல்லாமல் பல் சிகிச்சையை எளிதாக எடுத்துக் கொள்கின்றனர்.
மனிதனுக்கு மனநோயின் அறிகுறிகள்
தோன்றினால் சில குறிப்பிட்ட ராகங்களை அடிக்கடி கேட்குமாறு அநேக
நாடுகளில் மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். இந்த இசையும், ராகமும் மன நோயாளிகளின்
பாதிக்கப்பட்ட நரம்புகளை சரி செய்து அவர்களது மன நோயினை விரட்டும்
என்று நம்புகிறார்கள். பொதுவாக பலரையும் பாதிக்கும் ஒற்றைத் தலைவலி
கொடுமையானதாகும். இந்த தலைவலியை போக்குவதற்கு வயலின் இசையை தொடர்ந்து கேட்குமாறு சில மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள்.
ஒற்றைத் தலைவலிக்கு வயலின் ஒரு
சிறந்த மாமருந்தாக பயன்படுகிறது என்பது பலரும் அறியாத உண்மையாகும்.
மேலும் இசை கேட்கும் பசுக்கள் அதிக அளவில் பால் தருவதாகவும் நம்பப்படுகிறது. இசையை கேட்கும் செடிகளும் அதிக அளவில் பூப்பூத்து காய் காய்க்கின்றன என்று விவசாயிகள் நம்புகிறார்கள். வெளிநாடுகளின் பல்வேறு மருத்துவமனைகளில் நோயாளிகளை பராமரிக்கும் அறைகளில் மெல்லிய இசை தொடர்ந்து இசைக்கப்படுகிறது.
அறுவை சிகிச்சைக் கூடங்களிலும், பிரசவ அரங்குகளிலும், இருதய சிகிச்சை கூடங்களிலும் மெல்லிய இசை தொடர்ந்து இசைக்கப்படுகிறது. கண்ணுக்கு தெரியாத இன்னிசையானது நோயாளியின் நாடி, நரம்புகளில் ஊடுருவி ஏதாவது ஒரு
வகையில் நோய் குணமாவதற்கு ஆதாரமாக
இருப்பதாக மருத்துவர்கள் நம்புகிறார்கள். நமது நாட்டில் கூட அமிர்தவர்சினி ராகத்தை இசைத்தால் மழை வரும் என்பது நம் முன்னோர்களின் நீண்ட கால நம்பிக்கையாக உள்ளது.
No comments:
Post a Comment