மன சூட்சுமம்
1.இயற்கையாகவே மனிதர்காளாகிய நாம், நம் முன்பு வாழும் மற்றும் வாழாத,
உயிர்கள் உள்ள மற்றும் உயிரற்ற பொருட்கள் ஆகியவற்றில் இருந்து கண்ணுக்குத்
தெரியாத ஒரு சூட்சும இழை மூலமாக அனைத்தும் இணைக்கப்பட்டிருக்கின்றோம்
.அந்த சூட்சும சங்கிலியின் விதிகளுக்குட்பட்டுசங்கிலியில்
இணைக்கப்பட்டுள்ள மற்றவற்றின் இயக்கங்களோடும் சேர்ந்து நாம் இயங்க
வேண்டும்.
2.ஆனால் அப்படிப்பட்ட இழையோ சங்கிலியோ நம்மை இனைக்கவேயில்லை என்றும்
இப்படிப்பட்ட செய்தியைக் கேள்விப்பட்டால் கூட அது பைத்தியக்காரத்தனம்
என்றும் அறிவியல் ரீதியாக இதற்கு ஆதாரம் உண்டா என்றும் கேட்க
வேண்டும்?மற்றும் இது ஒரு வேளை உண்மையாகக் கூட இருக்குமோ? சரி இதெல்லாம்
நமக்கெதற்கு என்கின்ற குழப்ப மனநிலையோடு வாழ்ந்து கொண்டே இருக்கின்றோம்.
3.பிறக்கும் போதே சமூக வாழ்க்கைக்கு மட்டுமே நான் தயார் என்ற மனநிலையில்
நாம் இருக்கின்றோம் .சமூகத்தைத் தவிர்த்த தனிப்பட்ட வாழ்க்கை முறையில்
இருக்கவே முடியாது என்று நம்ப வேண்டும்.இயற்கையில் நம்மைச் சுற்றி உள்ள,
பொருட்களின் உயிர்களின் வாழ்க்கை முறையை உன்னிப்பாகக் கவனித்து அவற்றின்
சிறப்புப் பண்புகளை உணர்ந்தும் .
4.இயற்கையை அனுசரித்து அவைகள் இயற்கையைக் குறிப்பிட்ட விசயத்தில்
எப்படிப் புரிந்துள்ளன என்பதை உணர்ந்து அவற்றை நமது வாழ்வில்
எப்படிப் பயன்படுத்துகின்றோம் என்பதைப் பொறுத்து மட்டுமே நம்மில்
இருக்கும் தனித்துவத்தை அடையாளம் காட்ட முடியும் என்று
நம்புகின்றோம்.ஆனால் இந்த நம்பிக்கைகள் எதுவும் நமக்கு வெளிப்படையாகப்
புரிவதில்லை.
5.நாம் காணும் இயற்கை தன்னிடம் இருக்கின்ற இயக்கம் இல்லாத, பிரபஞ்ச
சக்தியுடன் தொடர்பு வைக்க முடியாத பொருட்களை உடனே அதன் தற்போதைய இருப்பு
நிலையில் அழித்து தன்னுடன் இணைத்து வேறு ஒரு பொருளாகவோ ஆற்றலாகவோ உயிராகவோ
மாற்றும் என்பதை உணர்ந்திருக்கின்றேன் என்று நம்ப வேண்டும்.
6.ஆனால் அந்த நம்பிக்கை நமது வெளி மனதிற்குத் தெரியக்கூடாது .அதன் பிறகு
ஒரு குறிப்பிட்ட கால அளவில் அந்தப் பொருளும் அழிக்கப்பட்டு வேறு ஒரு
பொருளாக மாற்றப்பட்டு விடும் என்று நம்பி இந்த விதியைக் கூட நமது
வாழ்வில் பயன் படுத்துகின்றோம் என்பதை அறியாமல் வாழ வேண்டும்.
7.நாம் சாப்பிடும் எந்த ஒரு உணவும் நமது இரைப்பையை அடைந்தவுடனேயே அடுத்த
நொடியில் செரிமானம் ஆகி விடுவதில்லை .நமது இரைப்பையானது அது உணர்ந்த
இயற்கை விதியான குறிப்பிட்ட கால இடைவெளியில் பிரபஞ்ச தொடர்பு இல்லாத
பொருட்களை அழித்து வேறு ஒன்றாக மாற்றல் என்னும் விதியைப் பயன் படுத்தி
முதலில் தான் உண்டவற்றை அவை தனிப்பட்ட உயிர்மை இயக்கத்தில் இல்லை என்பதை
உறுதி செய்கின்றது.
8.பின்பு பிரபஞ்ச தொடர்பு இல்லாத பொருளை அழித்து வேறு ஒரு ஆற்றல் சக்தியாக
மாற்றம் செய்யும் இயற்கையின் செயலைப் பயன் படுத்தி ஏற்கனவே உள்ள ஒரு
சக்தி தரும் பொருளை தனது உடல் மன வளர்ச்சிக்கு ஏற்ற விதத்தில் மற்றொரு
ஆற்றலாகப் பயன் படுத்துகின்றான்.
9.இந்த செரிமானம் என்னும் நிகழ்வுக்கு இயற்கையிடம் இருந்து நாம் அதனுடைய
செயலை காப்பியடித்து இயற்கையின் செயலைப் போலவே நமது செரிமானத்தை
நிகழ்த்துவது போல் நாம் நமது ஒவ்வொரு செயலிலும் பயன்படுத்தும்
விதிகளை,தத்துவங்களை , முழுக்க முழுக்க இயற்கையிடம் இருந்தும் நம்மைச்
சுற்றியுள்ள தாவரங்கள் விலங்குகள் உலோகங்கள் ஆகியவற்றிடம் இருந்து பெற்றும்
வாழ்ந்து வருகின்றோம்.இதனைப் பற்றி சிந்தனை செய்தால் எவ்வளவு
தூரத்திற்குப் புரிவது போல் இருக்கின்றதோ அவ்வளவு தூரத்திற்கு புரியாமையும்
இருக்கும் இதுவும் இயற்கையின் மற்றொரு விதி தான் என்பதை உணரும் வரை.
10.இந்தப் புரிதல் என்னும் சக்தியை மட்டுமே மனிதன் தன்னுடைய தனித்த
குணமாகப் பெற்றிருக்கின்றான்.மற்றும் ஒவ்வொரு நொடியும் தான் எந்த
குறிப்பிட்ட உயிர் உள்ள உயிரற்றவைகளிடம் இருந்து இந்த தனித்த பாடங்களை
ஈர்த்துத் தான் அவைகளிடம் இருந்து அந்தப் பாடங்களுக்குரிய சக்தியை
இடையறாது கண்ணுக்குத் தெரியாத அலையாகப் பெற்று தனது சொந்த சக்தியைப்
போன்று பயன் படுத்தி வருகின்றான்.
11.அதனாலேயே இந்த இயற்கையான உயிருள்ள உயிரற்ற பொருட்களின் தனித்த
பருப்பொருள் ரீதியிலான வளர்ச்சியும் அவற்றின் தத்துவ ரீதியிலான
வளர்ச்சியும், மனிதனது மனதிற்கு உடனடியாக புளூடூத்தில் டேட்டாக்கள் பரி
மாற்றப் படுவதைப் போன்று மனிதனை வந்து இடையறாது சேர்ந்து கொண்டே
இருக்கின்றது .
12.இந்த இயற்கை பற்றிய புரிதல்களை நாம் உணரும் போது தான் ஏற்கனவே நாம்
பெற்ற உணருதல்களை சரி பார்க்கவும் ,மேம்படுத்தவும் புதிய உணருதல்களை
உருவாக்கவும் முனைந்தால் இதுவும் ஒரு சுயமுன்னேற்றச் சிந்தனை இல்லை
என்று யாரால் தான் சொல்ல முடியும்.
No comments:
Post a Comment