Thursday, 6 April 2017

மாறித்தான் ஆக வேண்டும்.

                                              மாறித்தான் ஆக வேண்டும்.




 மாற்றங்களுக்கு அஞ்சுபவரா நீங்கள்.அப்பொழுது ஒரு 15 வயதிருக்கும் அதற்கு முன்பாக எங்கள் வீட்டில் சமையல் செய்ய விறகடுப்புத்தான்,அப்பொழுது கேஸ் எல்லாம் கேள்விப்பட்டதே கிடையாது .
எனது தாயார் வேலைக்கு செல்பவர் என்பதால் சீக்கிரம் சமையல் செய்ய வேண்டும் என்று மண்ணெண்ணெய் அடுப்பை வாங்கினோம்.அந்த அடுப்பானது காற்றை பம்ப் செய்து எரி பொருளை வெளிப் படுத்தும் அடுப்பு.ஒரு இரண்டு நாட்கள் அதனை பற்ற வைக்க பின்பு அடுப்பின் நாசிலை ஸ்டவ் பின் வைத்து குத்தி எரிய விட இப்படி ஒரே போராட்டமாக இருந்தது                                                                                 
எனது தாயார் கற்பனை செய்து வாங்கி வந்ததைப் போல் அந்த ஸ்டவ் இல்லை என்றுஇதற்கு விறகு அடுப்பு எவ்வளவோ மேல் என்று மூச்சுக்கு மூச்சு ஒரே பேச்சுத்தான் ,ஒரே சத்தம் எங்களைத்தான் ,வேறு காரியங்களில் எல்லாம் கோபப் படுகிறார் ,அப்பொழுது நான் நினைத்தேன் என்னதான் நடக்கின்றது என்று பார்ப்போம் என்று .
முதல் ஒரு வாரம் அந்த ஸ்டவ்வையும் விறகடுப்பையும் ஒப்பிட்டு பேசிக் கொண்டே இருந்தார்,பின்பு இது தான் கதி வேறு வழி இல்லை என்றவுடன் ஸ்டவ்வின் மெக்கனிசத்தை குறை கூறிக் கொண்டே சமையல் செய்தார்.
அதன் பின்பு ஒரு மாதம் கழித்து அந்த அடுப்பை நன்கு பயன் படுத்த தெரிந்தவுடன் அதற்கு பழக்கமாகி டென்சன் ஆவதை விட்டார்.அதன் பின்பு ஒரு ஆறு மாதங்களில் அந்த அடுப்பிற்கு நன்கு பழகி விட்டார்.
அதற்கு பிறகு ஒரு 10 ஆண்டுகள் கழித்து கேஸ் ஸ்டவ்விற்கு மாறும் பொழுது முன்பைப் போல டென்சன் இல்லை ,வாங்கும் பொழுதே இதன் மெக்கானிசம் என்ன ?எப்படி பயன் படுத்த  வேண்டு ம் என்று கேட்டு வாங்கி பயன்படுத்தினார்.
இதிலிருந்து நான் கற்றுக் கொண்டது மாற்றம் என்பது ஒவ்வொரு காலகட்டத்திலும் நாம் எதிர்கொள்ள வேண்டிய ஒரு கட்டாயமான நிகழ்ச்சியாகும்.
"பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையினானே"
"மாற்றம் என்னும் சொல்லைத்தவிர எல்லாமும் மாறக்கூடியது"
இதெல்லாம் மாற்றங்கள் பற்றி நாம் படித்தது.
ஒவ்வொரு நொடியும் பூமி சுமார் 30 கி.மீ. வேகத்தில் சுற்றி வருகின்றது நமக்கு முன்னே உள்ள வெற்றிடத்தில் ஏதோ ஒரு காலத்தில் சூரியன் கூட இருந்திருக்கலாம் இப்பொழுது ஒரே நொடியில் சுமார் 30 கி.மீ. தள்ளிச் சென்று விட்டது .
1.மாற்றம் என்பது கட்டாயமானது.
2.எல்லா சூழ்நிலைகளும் ஒவ்வொரு நொடியும் மாறிக் கொண்டே இருக்கின்றது.
3.மாற்றம் நாமாக ஏற்படுத்திக் கொள்வது ,நம்மையும் அறியாமல் நம்மை வந்து சேர்வது.
4.எந்த மாற்றமும் நம் வாழ்வில் ஏற்படும் பொழுது மனது பழைய சூழ்நிலையையே விரும்பும்.
5.புதிய சூழ் நிலைக்கு எப்படி நாம் எதிர் வினையாற்றுகின்றோம் என்பது தான் மனப் போராட்டங்கள் .
6.மாற்றங்கள் வாழ்விற்கு சுவை கூட்டுகின்றது.
7.எப்படி என்றாலும் மாற்றத்திற்கு உட்படத்தான்  போகின்றோம் என்பது உறுதி.
ஆகவே மாற்றங்களை இன்முகத்துடன் வரவேற்போம்.

No comments:

Post a Comment

ஆண் அழுவான்...

 தாய் தந்தை இறந்தால் ஆண் அழுவான்... *தனக்கு குழந்தை பிறக்கப்போகிறது என்று நற்செய்தி கேட்டு ஆண் அழுவான்... *தன் குழந்தைகளில் ஒருவர் நோய்வாய்ப...