குழந்தைகளுக்கு அடிக்கடி மாதுளையை சாப்பிடக்
கொடுப்பதனால் கிடைக்கும் நன்மைகள்!
இன்றைய காலத்தில் குழந்தைகள்
ஆரோக்கியமான உணவுகளான பழங்கள், காய்கறிகளை விரும்பி சாப்பிடுவதை விட, ஜங்க் உணவுகளைத் தான் அதிகம்
விரும்புகிறார்கள். இதனால் குழந்தைகளுக்கு வேண்டிய
சத்துக்கள் கிடைக்காமல், பல குழந்தைகளுக்கு ஊட்டச்சத்துக் குறைபாடுகள் ஏற்படுகின்றன.
ஆகவே குழந்தைகளின் ஆரோக்கியத்தை
மேம்படுத்த ஒவ்வொரு பெற்றோரும் ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தைக்
கொண்டு வர வேண்டியது அவசியம். அதில் தினமும் ஏதேனும் ஒரு பழத்தை
கட்டாயம் உட்கொள்ள வேண்டும் என்ற பழக்கத்தைக் கொண்டு வருவதன் மூலம், அவர்களின் ஆரோக்கியத்தை
மேம்படுத்தலாம்.
அதில் தினமும் குழந்தைகள்
சாப்பிட ஏற்ற ஒரு பழம் மாதுளை. இப்பழத்தை சாப்பிடுவதால், பல பிரச்சனைகளைத் தடுக்கலாம். இங்கு மாதுளையை தினமும் குழந்தைகளுக்கு கொடுப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்று கொடுக்கப்பட்டுள்ளது.
செரிமான பிரச்சனைகள்
மாதுளை செரிமான பிரச்சனைகளை சரிசெய்யும். எனவே உங்கள் குழந்தைக்கு ஏதேனும் செரிமான பிரச்சனை இருப்பின், இப்பழத்தை கொடுங்கள் விரைவில் குணமாகும்.

குடல் புழுக்கள்
குழந்தைகளுக்கு வயிற்றில் புழுக்கள் அதிகம் இருக்கும். இப்படி வயிற்றில் புழுக்கள் அதிகம் இருந்தால், அவர்கள் உட்கொள்ளும் உணவுகளை புழுக்கள் உறிஞ்சிவிடும். ஆனால் மாதுளை ஜூஸை அடிக்கடி கொடுப்பதன் மூலம், குடல் புழுக்களை அழித்து வெளியேற்றலாம்.

காய்ச்சல் குணமாகும்
மாதுளை ஜூஸ் காய்ச்சலைக் குணப்படுத்த உதவும். மேலும் இதில் உள்ள அத்தியாவசிய சத்துக்கள் குழந்தைகளின் வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமானவை. குறிப்பாக இதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் குழந்தைகளுக்கு காய்ச்சல், சளி போன்றவை வருவதைத் தடுக்கும்.

வாய் பிரச்சனைகள்
மாதுளை குழந்தைகளின் பற்களில் உள்ள பிரச்சனைகளைப் போக்க உதவும். இதற்கு அதில் உள்ள ஆன்டி-வைரஸ் மற்றும் ஆன்டி-பாக்டீரியல் பொருள் தான் காரணம்.

கல்லீரல்
மாதுளையை அடிக்கடி குழந்தைகளுக்கு கொடுப்பதனால், கல்லீரல் செயல்பாடு மேம்படும். மேலும் இதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் கல்லீரலுக்கு நல்ல பாதுகாப்பை வழங்கும்.

நல்ல பாதுகாப்பு
மாதுளையில் பாக்டீரியா, நுண்ணுயிரிகள் மற்றும் அழற்சிகளை உண்டாக்கும் கிருமிகளை அழிக்கும் தன்மை உள்ளது. ஆகவே இதனை குழந்தைகளுக்கு கொடுப்பதன் மூலம், அவர்களது உடலானது நோய்க்கிருமிகளின் தாக்குதல்களில் இருந்து பாதுகாக்கப்படும்.

No comments:
Post a Comment