Friday, 21 April 2017

ஃபேஸ்புக் எனும் அமெரிக்க உளவாளியால் நாம் இழந்தவை என்னென்ன என்று தெரியுமா?

ஃபேஸ்புக் எனும் அமெரிக்க உளவாளியால் நாம் இழந்தவை என்னென்ன என்று தெரியுமா?

நமது வாழ்க்கையை, அதில் மறைத்து வைக்க வேண்டிய அந்தரங்க பக்கங்களை எல்லாம் ஃபேஸ்புக் எனும் மாற்றானிடம் தாரைவார்த்துக் கொண்டிருக்கிறோம். இதை ஒருவருக்கு ஒருவர் போட்டிப் போட்டு அதிகமாக பகிர்ந்து வருகிறோம். பொதுவாகவே மனிதர்களின் அடிப்படையில் நாம் மற்றவரது வாழ்க்கையை படிக்கவே அதிகம் முயற்சிப்போம். இதில் ஆண், பெண் என்ற பேதம் எல்லாம் இல்லை.
நடுத்தெருவில் கூறுபோட்டு விற்பதும், ஃபேஸ்புக்கில் பதிவேற்றம் செய்வதற்கும் எந்த வித்தியாசமும் இல்லை. இதில், நமது வாழ்க்கை பக்கங்களுக்கு வேறொருவர் பதிப்பெண் இட வேண்டும் என்று வேண்டுகிறோம். நமது வாழ்க்கை நமக்கு நாமே எழுதிக் கொள்ளும் பரீட்சை. அதை பொத்தாம் பொதுவாக அனைவரின் பார்வைக்கும் வைக்க ம்யூசியம் இல்லை….
உண்மையான மகிழ்ச்சி
ஃபேஸ்புக் எனும் அமெரிக்க உளவாளியால் நாம் இழந்த முதல் விஷயம் உண்மையான மகிழ்ச்சி, உறவு மற்றும் கருத்துள்ள வாழ்க்கை. இதன் வரவால் நாம் வாழ்க்கையின் மதிப்பை குறைத்து வருகிறோம் என்பது தான் உண்மை. மற்றவரது வாழ்க்கையை பார்க்க நமது வாழ்க்கையை இரையாக்கி வருகிறோம்.
உற்பத்தி திறன் குறைவு
குறைந்தபட்சம் அரைமணி நேரத்திற்கு ஒருமுறையாவது நாம் ஃபுக்கை நோண்டாமல் இருப்பது இல்லை. இது தான் நமது உற்பத்தி திறனை பெருமளவில் குறைக்கிறது.
கடமையை நிறைவேற்ற முடியும்
உங்கள் வாழ்க்கையின் கடமையை கொஞ்சம், கொஞ்சமாக கரையான் போல அரித்து வருகிறது ஃபேஸ்புக். மாயை உலகான ஃபேஸ்புக் நமது நிஜ உலகை திரையிட்டு மறைத்து வருகிறது. லைக்ஸ் மற்றும் கமண்ட்ஸ் என்ற இரட்டை வார்த்தைகளில் நாம் நமது பொன்னான நேரத்தை விரயம் செய்து வருகிறோம்.
உறவுகள் மேம்படும்
முன்பெல்லாம் ஓர் நட்பு வட்டாரம் என்றிருந்தால் கலகலப்பாக இருக்கும். நண்பரின் வீட்டுக்குள் சென்றால் ரகளையாக இருக்கும். இப்போதெல்லாம் நண்பனின் வீட்டுக்குள் செல்லும் போதே, வை-பை பாஸ்வேர்டு என்னடா.. என்று சொல்லியபடி தான் செல்கிறார்கள். உடனே ஃபேஸ்புக், ஒருவர் மற்றொருவது ப்ரொபைலை பார்ப்பது, லைக் கேட்டு கெஞ்சுவது என்ற போக்கிலேயே நேரம் கழிந்துவிடுகிறது.
உண்மையான அழகு
நமது உலகில் இருக்கும் உண்மையான அழகை நாம் காண மறந்து வருகிறோம். ப்ரொபைல் படத்திற்கு போட்டோஷாப் செய்வது போல தான், நமது ஊர்களையும் எடிட் செய்து அழகாக காண்பித்து வருகிறோம். அதை ஏன் நாம் நேரடியாக செய்ய முன்வரக் கூடாது?
சிறப்பான மாற்றம்
சமூக வலைத்தளமே வேண்டாம் என்று யாரும் கூறவில்லை. அதில் தேவையின்றி கழிக்கும் மிகுதியான நேரத்தை நல்ல வழியில் செலவழிக்கலாம். இதன் மூலம் உங்கள் வாழ்வில் நீங்கள் சிறந்த முன்னேற்றத்தை, நல்ல மாற்றத்தை காண இயலும்.
எதிர்காலம் சிறக்கும்
இவ்வாறு நீங்கள் செய்வதால், நாளை இரண்டடி உயரம் செல்வதற்கு மாறாக, பல அடிகள் உங்கள் வாழ்வில் உயரம் காணலாம். தொழில், கல்வி, உறவு என அனைத்திலும் இது சாத்தியமாகும்.

No comments:

Post a Comment

என் அப்பா வயதாகிவிட்டார், நடந்து செல்லும்போது சுவரின் ஆதரவைப் பெறுவார்

 என் அப்பா வயதாகிவிட்டார், நடந்து செல்லும்போது சுவரின் ஆதரவைப் பெறுவார். இதன் விளைவாக சுவர்கள் நிறமாற்றம் அடைந்தன, அவர் தொட்ட இடமெல்லாம் அவர...