Tuesday, 11 April 2017

ஏழு என்கிற எண்ணுக்கு இந்திய ஞான மரபில் . மிகச் சிறப்பான இடம் உண்டு…


ஏழு என்கிற எண்ணுக்கு இந்திய ஞான மரபில் .
மிகச் சிறப்பான இடம் உண்டு…





புண்ணிய நதிகள் ஏழு…

வார நாட்கள் ஏழு…
...
ஸப்தரிஷிகள் ஏழு…

ஸப்தஸ்வரங்கள் ஏழு…

ஸப்தகன்னிகைகள் ஏழு…

சிரஞ்சீவிகள் ஏழு…

வானவில்லின் நிறங்கள் ஏழு...

பிறவிகள் ஏழு…

கடல்கள் ஏழு…

கண்டங்கள் ஏழு…

வால்மீகி ராமாயணத்தின் காண்டங்கள் ஏழு…

கடையெழு வள்ளல்கள் ஏழு…

ஸப்த நாடி ஏழு…

சூரிய பகவானின் ரதத்திலுள்ள குதிரைகள் ஏழு…

திருவேங்கடத்தான்…திருப்பதி…ஏழுமலை.

ஆண், பெண் பருவங்கள் ஏழு..

உலக அதிசயங்கள் ஏழு…

தமிழ் மொழியில் நெடில் உயிரெழுத்துக்கள் ஏழு…

இப்படி நம் கலாச்சாரம் எங்கும் ஏழின் மயமே…மேற்கத்தியக் கலாச்சாரத்திலும் ஏழின் தாக்கமே அதிகம்..

கிறிஸ்துவத்தில் கொடிய பாவங்கள் ஏழு…

சிலுவையில் இயேசு கூறிய வார்த்தைகள் ஏழு…

குரானில் சொர்க்கங்கள் ஏழு…

தமிழில் பக்தி இலக்கியங்களில் ஏழுக்குத் தனி மரியாதை…

எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன் தன்னோடு உற்றோமே யாவோம்….கோதை நாச்சியாரின் திருப்பாவை.

கடுகைத் துளைத்தேழ் கடலைப் புகுத்தி குறுகத் தெரிந்த குறள்… ஒளவையார்..

நுண்ணறிவாய் உலகாய் உலகேழுக்கும் எண்ணறிவாய் நின்ற எந்தை பிரான்…. திருமந்திரம்.

ஏழ்கடல் சூழிலங்கை அரையன் தனோடும் இடரான வந்து நலியா… திருஞானசம்பந்தர் தேவாரம்…

ஏத்தும் அடியவர் ஈரேழ் உலகினையும் படைத்தும் காத்தும் அழித்தும்…. அபிராமி அந்தாதி..

கம்பன் தன்னுடைய இராமாவதாரத்தில் ஏழாம் எண்ணைப் பல இடங்களில் சிறப்பித்திருக்கிறான்..

ஏழு வேலையும் உலகம் மேல் உயர்ந்தன ஏழும்
ஏழு குன்றமும் இருடிகள் எழுவரும் புரவி
ஏழும் மங்கையர் எழுவரும் நடுங்கினர் என்ப
ஏழு பெற்றதோ இக் கணைக்கு இலக்கம் என்று எண்ணி…

கிஷ்கிந்தா காண்டம்….மராமரப் படலம்.

இராமன் ஒரு கணையால் ஏழு மராமரங்களைத் துளைக்கிறான்..ஏழு கடல்களும், மேல் உள்ள ஏழு உலகங்களும், ஏழு மலைகளும், ஏழு முனிவர்களும், கதிரவனின் தேரில் பூட்டப்பட்ட ஏழு குதிரைகளும், ஏழு கன்னியர்களும், “ இந்த அம்புக்குக் குறி ஏழு என்னும் தொகையுடையது எல்லாமோ..! “ என்று எண்ணி அஞ்சினர்…

ஏழு கழுதை வயசாச்சு என்று திட்டு வாங்காதவர்கள் யாரேனும் இருக்கிறீர்களா….?!

அழகு தமிழில் வசவு வாங்கிய தலைமுறை நாம் என்பதில் பெருமை கொள்வோம்

No comments:

Post a Comment

என் அப்பா வயதாகிவிட்டார், நடந்து செல்லும்போது சுவரின் ஆதரவைப் பெறுவார்

 என் அப்பா வயதாகிவிட்டார், நடந்து செல்லும்போது சுவரின் ஆதரவைப் பெறுவார். இதன் விளைவாக சுவர்கள் நிறமாற்றம் அடைந்தன, அவர் தொட்ட இடமெல்லாம் அவர...