எதிர் மறை சக்திகளை விரட்டியடிக்க முட்டை பரிகாரம் !
எப்போதும் தடங்கல், எந்த காரியங்களும் முடிவு வரை வந்து பின்பு நடக்காமல்
போதல், எப்போதும் மனக்கவலை, தோல்வி பற்றியே எப்போதும் சிந்தனை போன்ற எதிர்
மறை சக்திகளை கீழ்க்கண்ட பரிகாரம் மூலம் நம் உடலில் இருந்து விரட்டி
அடிக்கலாம். இதை முதல் முதல் ஆரம்பிக்கும் நாள் அமாவாசை நாளாக இருத்தல்
நலம். பின்பு தேவைப்படும் போதெல்லாம் செய்து கொள்ளலாம்.
தேவை : 2 கோழி முட்டை
உடைகளை முழுதும் கலைந்து குளியல் அறையில் கிழக்கு நோக்கி நின்று கொள்ளவும்.
பின்பு 1 முட்டையை எடுத்து அதை ராக் சால்ட் அல்லது கல் உப்பு நீரால் கழுவி
கொள்ளவும்.பின்பு சிறிது எலுமிச்சை நீரால் கழுவவும்.
பின்பு கண்களை மூடி கொண்டு பிரபஞ்சத்தை உங்கள் எதிர் மறை சக்திகள்
அனைத்தும் விலக வேண்டி கொள்ளவும். பின்பு உச்சந்தலையில் ஆரம்பித்து உடல்
முழுதும் மெதுவாக ஒரு இடம் விடாமல் முட்டையால் தடவ ஆரம்பிக்கவும். உடலில்
உள்ள எதிர் மறை சக்திகள் அனைத்தும் முட்டை சுவீகரித்து கொள்ளும். உடலில்
ஒரு இடம் விடாமல் தடவி கொள்ளவும்-ஏதேனும் இடத்தில் வலி இருந்தால் அந்த
இடத்தை பிரத்யேகமாக கவனித்து தடவி கொள்ளவும். உள்ளங்கால் வரை தடவ வேண்டும்.
முக்கியமாக கழுத்தின் பின் புறம், கை கால்களின் முட்டிகளின்
பின்புறங்களில் நன்கு தேய்க்கவும் -இந்த இடங்களில் தான் எதிர் மறை சக்திகள்
அதிகம் தங்கும். நன்கு தேய்து முடித்ததும் ஒரு பாத்திரத்தில் அதை உடைத்து
விட்டு பார்க்கவும்.
முட்டையில் கொப்பளம் அல்லது குமிழ்கள் வரின் எதிர் மறை சக்திகள்
எடுக்கப்பட்டு விட்டது என அறிந்து கொள்ளவும். சாரங்களாக வந்தால் மேலும்
எடுக்கப்பட வேண்டும் என அர்த்தம். ரத்தம் அல்லது கருப்பு புள்ளிகள்
இருப்பின் ஏதோ பெரிய எதிர் மறை சக்தி இருந்தது க விட்டது என அர்த்தம்
கொள்க. பின்பு இதை கழிவறையில் கொட்டி அதில் எலுமிச்சை நீர் சிறிது மற்றும்
கல் உப்பு போட்டு நீர் விட்டு கழுவி விட்டு, பின்பு நீங்கள் யாம் ஏற்கனவே
கூறியுள்ள நம் புற ஒளியை (Aura Cleansing)மிளர செய்யும் குளியல் செய்யலாம்
அல்லது ராக் சால்ட் குளியல் செய்யவும். மற்றொரு முட்டையை மூன்று நாட்கள்
இரவு தூங்கும் சமயம் ஒரு பாத்திரத்தில் நீர் விட்டு அதில் முட்டையை
போட்டு,தலை மாட்டில் வைத்து உறங்கி பின்பு காலையில் அந்த நீரை கழிவறையில்
கொட்டி விடவும். மூன்று நாட்களும் புதிய நீரை எடுத்து கொள்ளவும். நான்காம்
நாள் முட்டையை கழிவரை அல்ல்து தெரு சாக்கடையில் எறிந்து விடலாம்.
No comments:
Post a Comment