எடை
தங்கத்தை, தங்க ஆபரணங்களை தானம் செய்ய வேண்டும் என்ற இறை
நியதி
இருப்பதைப் போல, அவரவர் எடை அளவு உள்ள தங்கத்தை ஒரு சேர
தங்கள்
வாழ்வில் ஒரு முறையாவது அவசியம் தரிசனம் செய்ய வேண்டும்.
அதாவது
ஒருவருடைய எடை 80 கிலோ என்றால் அவர் ஒரு முறையாவது 80
கிலோ
தங்கக் கட்டியை தன் வாழ்நாளில் ஒரு முறையாவது தரிசனம் செய்ய
வேண்டும்.
அப்போதுதான் மனிதப் பிறவியில் முக்தி பெற முடியும். இந்த
நியதியின்
பின்னால் உள்ள ஆன்மிக ரகசியம் புரியாவிட்டாலும், இவ்வளவு
அளவு
உள்ள தங்கத்தை ஒரு சேரப் பார்த்தால் அது நிச்சயமாக ஒரு
மனிதனைச்
சேரும் திருஷ்டி தோஷங்களை நீக்கும் என்பதைப் புரிந்து
கொண்டாலே
போதும். இன்றைய உலகில் இது நடக்கக் கூடியதா என்று
பலருக்கும்
சந்தேகம் தோன்றலாம். உண்மையில் சாத்தியமல்லாத ஒரு
நியதியை
இறைவன் வகுத்து வைத்திருக்க மாட்டார் அல்லவா?
இவ்வாறு
எடைக்கு எடை தங்க தரிசனப் பலன் தரும் இடங்கள் நிறைய
உண்டு
நமது புண்ணிய பூமியில். உதாரணமாக, திருஅண்ணாமலையில்
கிரிவலப்
பகுதியில் ஸ்ரீகாமாட்சி அம்மன் சந்நிதிக்கும் ஸ்ரீசேஷாத்ரி
ஸ்வாமிகள்
ஆஸ்ரமத்திற்கும் இடைப்பட்ட பகுதியில் அமைவதே
ஸ்வர்ணாகர்ஷண
முகட்டு தரிசனம் ஆகும். ரோஹிணி நட்சத்திரம் 60 நாழிகை
நிரவும்
நாட்களிலும், மூன்றாம் பிறையை தரிசனம் செய்த ஒரு நாழிகை
நேரத்திற்குள்ளும்
(24 நிமிடங்கள்) இந்த ஸ்வர்ணாகர்ஷண தரிசனத்தைப்
பெறுவோர்களுக்கு
அவர்கள் எடைக்கு எடை தங்கம் தரிசனம் செய்த பலனை
திருஅண்ணாமலையார்
அருள்வார்.
அது
போல மேற்கூறிய நாட்களில் திருச்சி அருகே உள்ள ஐயர்மலை
திருத்தலத்தில்
கிரிவலப் பாதையில் ஹிருதய கமல தரிசனம்,
மலையடிப்பட்டியில்
சிவ லிங்கத்தின் ஆவுடை எதிரே நின்று மலையைப்
பார்த்தபடி
பெறும் தரிசனம் போன்றவையும் தங்க தரிசனப் பலன்களைத் தரும்
என்று
சித்தர்கள் உறுதி அளிக்கின்றனர். பழனி போன்ற மலைத் தலங்களில்
பெறும்
தங்கத் தேர் தரிசனமும் இத்தகைய பலன்களை வர்ஷிக்கக் கூடியதே.
உண்மையில்
முற்காலத்தில்பல திருத்தலங்களிலும் திருஷ்டி
தோஷங்களைக்
களைவதற்காக இறை விக்ரஹ மூர்த்திகளை சுத்தமான
தங்கத்தில்
வார்த்து பூஜித்து வழிபட்டனர். கலியுக மக்களின் பேராசை
காரணமாக
இத்தகைய ஸ்வர்ண விக்ரகங்கள் தற்போது மறைபொருளாகி
விட்டன.
ஆனால், நம்பிக்கையுடன் இத்தகைய இறை மூர்த்திகளை வழிபட
விரும்புவோர்களுக்கு
அம்மூர்த்திகளை கண்ணால் பார்த்து வழிபட
முடியாவிட்டாலும்
தீர்த்த யாத்திரைகளின் போது இத்தலங்களில் மறை
பொருளாக
உள்ள தங்க மூர்த்திகளின் அனுகிரக சக்திகளையும்
அத்தலங்களில்
நிரவியுள்ள திருஷ்டிக் காப்பு சக்திகளையும் பெற முடியும்.
வாகனங்களைக்
காக்கும் வழிபாடுகள்
இன்றைய
உலகில் இரு சக்கர வாகனங்களும், சிலருக்கு
நான்கு சக்கர
வாகனங்களும்
இன்றியமையாத வசதிகள் ஆகிவிட்டன. இந்நிலையில்
வாகனங்களை
திருஷ்டிக் கண்களிலிருந்து பாதுகாத்துக் கொண்டால்தான்
மனிதனுடைய
அன்றாட அலுவல்களைப் பிரச்னைகள் இல்லாமல் கவனித்துக்
கொள்ள
முடியும். சில எளிய வழிபாடுகளை மேற்கொள்வதன் மூலம்
வாகனங்களின்
மேல் திருஷ்டி தோஷங்கள் படியாமல் அவை நமது உற்ற
நண்பர்களாக
மாற வழி தேடிக் கொள்ளலாம்.
வாகனங்களை
எப்போதும் கிழக்கு நோக்கி நிறுத்தும் வழக்கத்தை ஏற்படுத்திக்
கொள்ள
வேண்டும். முதன் முதலில் வாகனத்தை ஓட்ட ஆரம்பிக்கும் போது
சிறிது
தூரமாவது கிழக்கு நோக்கி ஓட்டிச் சென்று விட்டு பிறகு நாம் செல்ல
வேண்டிய
இடத்தை நோக்கி வண்டியை ஓட்டுவது நலம்.
எக்காரணம்
கொண்டும் பழைய வாகனத்தை வாங்க வேண்டாம். நமது சக்திக்கு
ஏற்ற
புது வாகனத்தை வாங்கிக் கொள்வதால் தேவையில்லாத பலவித
பிரச்னைகளிலிருந்து
காத்துக் கொள்ளலாம்.
திருக்கோயில்களுக்குச்
சென்று அங்கு பெறும் சுவாமி பிரசாத மாலைகளை
பலரும்
வாகனத்தின் முன்னால் கட்டி விட்டு விடுகிறார்கள். இது தவறான
பழக்கம்
என்பதை நினைவில் கொள்ளவும். இதனால் இறைவனின்
பிரசாதமான
மலர்கள் தெருவில் விழுந்து மக்கள், விலங்குகளின் பாதங்களில்
மிதிபடும்
சூழ்நிலை உருவாகும். இதனால் ஏற்படும் தோஷங்கள்
வாகனத்தையும்
அதன் உரிமையாளரையும் பாதிக்கும். இறைப் பிரசாதமாக
பெற்ற
மலர் மாலைகளை காரின் உட்புறத்தில் வைத்து அம்மலர்கள் உதிர்ந்த
பின்
அவைகளைக் கவனமாகச் சேகரித்து ஓடும் நதிகளில், கடலில் விட்டு
விடுதலே
முறையான வழிபாடாகும்.
அது
போல திருஷ்டிக்காக வாகனங்களின் கீழ் எலுமிச்சை பழங்களை
வைத்து
நசுக்காமல் அவற்றை கார்களின் உள்ளே வைத்திருந்து காய்ந்த
பின்
மலர்களுடன் சேர்த்து நீர் நிலைகளில் சேர்த்து விட வேண்டும். இதைக்
குறித்த
புராண சம்பவம் ஒன்று உண்டு. குந்தியின் மைந்தனான கர்ணன்
முற்பிறவி
ஒன்றில் நிம்புபூஷணன் என்ற காரணப் பெயருடன் மகத நாட்டின்
இளவரசனாக
விளங்கினான். கிருஷ்ண பகவான் தன்னுடைய தலையில்
மயிற்
பீலியைச் சூடி இருப்பது போல நிம்பு பூஷணன் தான் வளர்த்திருந்த
தீட்சையில்
(குடுமியில்) எப்போதும் இறை பிரசாதமாகப் பெற்ற ஒரு எலுமிச்சை
கனியை
சூட்டியிருப்பான். ஒரு முறை நண்பர்களுடன் சேர்ந்து விளையாடிக்
கொண்டிருக்கும்போது
அவன் தலையிலிருந்த எலுமிச்சைக் கனி வீழே
விழுந்து
தரையில் உருண்டோடியது. அதை அவன் குனிந்து எடுப்பதற்குள்
அவ்வழியே
வந்த எருமை மாடு ஒன்று அதைத் தன் கால் குளம்பால் நசுக்கி
விட்டது.
அதனால் ஏற்பட்ட சாபம் காரணமாகவே மகாபாரத யுத்த களத்தில்
கர்ணனின்
ரதம் பூமியில் அழுந்தி அவன் உயிர் விட நேர்ந்தது என்பதை
உணர்ந்து
இனியேனும் எலுமிச்சை கனி பிரசாதத்தை சரியான முறையில்
பயன்படுத்தும்படிக்
கேட்டுக் கொள்கிறோம்.
வாரம்
ஒரு முறையாவது சிறப்பாக செவ்வாய்க் கிழமை அன்று கட்டாயம்
வாகனங்களை
சுத்தமான நீரால் சுத்தம் செய்து விபூதி குங்குமத்தால்
அலங்கரித்து, வாகனங்களை வலம் வந்து சாஷ்டாங்கமாக தரையில் விழுந்து
நமஸ்காரம்
செய்து வழிபடுவதால் எத்தகைய ஆபத்துகளிலிருந்தும்
அவை
நம்மைக் காப்பாற்றும் என்பதை மறந்து விடாதீர்கள். வாகனங்களை
அலம்பும்போது
டயர்களை நீர் விட்டு சுத்தம் செய்யத் தவறாதீர்கள்.
வாகனச்
சக்கரங்கள் எச்சில், மலம் போன்ற பல அசுத்தங்களின் மேல்
உருண்டோடுவதால்
டயர்களால் செய்யப்பட்ட பாதணிகளை அணிவதும்,
பழைய
டயர் பைகளில் உடைத்த ஐஸ் கட்டிகளை பயன்படுத்துவதும்
தேவையில்லாத
பல கர்ம வினைப்படிவுகளை ஏற்படுத்தும் என்பதை உணர்ந்து
கொள்ளவும்.
இதனால் விளையும் தோஷங்கள் ஏராளம்.
இல்லங்களில்
படியும் திருஷ்டி தோஷங்கள்
வாகனங்களைப்
போல அவரவர் இல்லங்களின் மீது படியும் திருஷ்டி
தோஷங்கள்
நிறைய உண்டு. எமது ஆஸ்ரமத்திலிருந்து பெறப்படும்
கருவலரி
போன்ற சங்குகள் கடுமையான கண்திருஷ்டி தோஷங்களையும்
களையும்
வல்லமை உடையவை. இத்தகைய சங்குகளை இல்லங்களின்
முன்
வாயிலில் வைத்து உரிய வழிபாடுகளை மேற்கொள்வதால் கண்
திருஷ்டி
தோஷங்களிலிருந்து எளிதில் நிவாரணம் பெறலாம்.
பொதுவாக, வீடுகளுக்கு சுண்ணாம்பு, பெயிண்ட் போன்ற பூச்சுகளைப் பூசி
எப்போதும்
வீடுகளைத் தூய்மையாக வைத்துக் கொள்வது அவசியம். எந்த
அளவிற்கு
உங்கள் இல்லங்களில் தூசி, ஒட்டடை, அழுக்கு, குப்பை கூளங்கள்
போன்றவை
சேராமல் இருக்கிறதோ அந்த அளவிற்கு உங்கள் இல்லங்கள்
திருஷ்டி
தோஷங்களால் பாதிக்கப்படாமல் இருக்கும். குப்பை கூளங்களே
தோஷங்களை
ஈர்க்கும் பெட்டகங்கள். கண்ணாடி போல் உங்கள் இல்லங்கள்
தூய்மையாக
இருந்தால் கண்ணாடியில் விழும் சூரிய ஒளியைப் போல்
திருஷ்டி
எண்ணங்கள் பிரதிபலிக்கப்பட்டு வந்த இடத்திற்கே திரும்பிச் சென்று
விடும்.
வீட்டின்
முன்புறம் பாதுகாப்புச் சுவர்களில் உள்ள கதவுகளை இரும்புக்
கம்பிகளால்
அமைத்து கருப்பு வண்ணங்களைப் பூசுவதால் திருஷ்டி
தோஷங்கள்
வீட்டின் உள்ளே புகாதவாறு பாதுகாத்துக் கொள்ளலாம். இரும்பு
உலோகத்திற்கும்
கருப்பு வண்ணத்திற்கும் திருஷ்டி சக்திகளை ஈர்த்து
வைத்துக்
கொள்ளும் தன்மை உண்டு.
கோபுர
தரிசனம் கடுமையான
திருஷ்டி
விளைவுகளையும் களையும்
அவ்வப்போது
வீட்டில் உள்ள அனைவரையும் வீட்டின் முன் வாசலில் அமர
வைத்து
ஒரு பூசனிக்காய் மேல் கற்பூரத்தை ஏற்றி வைத்து திருஷ்டி கழிப்பது
நலம்.
இதனால் வீட்டில் வசிப்பவர்கள் மேல் படியும் தோஷங்களும் வீட்டின்
மேல்
படியும் கண் திருஷ்டி தோஷங்களும் விலகும் என்பது உண்மையே.
ஆனால், இவ்வாறு திருஷ்டி கழித்த பூசனிக்காயை முச்சந்தியிலோ,
நாற்சந்தியிலோ
உடைத்து விடுவதை நடை முறையில் பலரும் பழக்கமாக
வைத்திருக்கிறார்கள்.
இவ்வாறு
திருஷ்டி பூசனிக்காயை நடுரோட்டில் உடைத்தால் பரவெளியை
அடைந்த
திருஷ்டி தோஷங்கள் மீண்டும் யதா ஸ்தானத்தை சேர்ந்து விடும்
என்பது
நியதி, அதாவது எங்கிருந்து திருஷ்டி வந்ததோ அங்கேயே
திரும்பிச்
சென்று
விடும், அதனால் திருஷ்டிகள் கழியாத நிலையே உருவாகும்.
மேலும்
அவ்வாறு
உடைந்த பூசனிக்காய் துண்டுகள் மீது ஏதாவது வாகனங்கள் ஏறி
வழுக்கி
விழுந்து, குழந்தைகளுக்கோ மக்களுக்கோ துன்பங்கள் ஏற்பட்டால்
அந்த
துன்பங்களும் வேதனைகளும் பூசனிக்காயை உடைத்தவர்களைச்
சென்று
சேரும் என்பது உண்மை. எனவே, இது குளிக்கப் போய் சேற்றைப் பூசிக்
கொண்டு
வந்த கதையாகி விடுமல்லவா?
இத்தகைய
துன்பங்களைத் தவிர்க்க வேண்டும் என்றால் திருஷ்டி கழித்த
பூசனிக்காயை
நடுரோட்டில் உடைக்காமல் முச்சந்தி அல்லது நாற்சந்தியில்
வாகனங்களுக்கோ, மற்றவர்களுக்கோ இடையூறு இல்லாத வண்ணம் ஒரு
ஓரத்தில்
வைத்து விட்டு வந்து விட வேண்டும். அந்த பூசனிக்காய் வெயிலில்
காய்ந்து
உலர்ந்து விட்டாலோ அல்லது பூசனிக்காயை ஏதாவது ஆடோ,
மாடோ
தின்று விட்டால் திருஷ்டி தோஷங்கள் விரைவில் கழிந்து விடும்
என்பது
சித்தர்கள் கூறும் அறிவுரை.
வீட்டைக்
கட்டிய பின் அதில் படியும் கண் திருஷ்டி தோஷங்களைக் களைவது
ஒரு
புறம் இருக்க வீட்டைக் கட்டும்போதே சில வாஸ்து லட்சண விதிகளைப்
பின்
பற்றுவதால் பெரும்பாலான தோஷங்கள் வீட்டை அண்டாதவாறு
பார்த்துக்
கொள்ளலாம். இத்தகைய வாஸ்து இரகசியங்கள் எமது ஆஸ்ரம
வெளியீடுகளான
”பூமி அந்தர வாஸ்து சுந்தர இரகசியங்கள் (இரண்டு
பாகங்கள்)” என்னும் நூல்களில் காணலாம்.
பொதுவாக, நிலம் எந்த வடிவத்தில் இருந்தாலும் அதில் சதுரம் அல்லது
நீண்ட
சதுரம்
(செவ்வகம்) வடிவத்தில் வீடுகளைக் கட்டுவதால் பெரும்பாலான
கண்
திருஷ்டி தோஷங்கள் அண்டாதவாறு பாதுகாத்துக் கொள்ளலாம்.
நிறைய
பணம் கொடுத்து இடத்தை வாங்கி விட்டோம் என்ன செய்வது? என்று
நினைத்துக்
கொண்டு கோணல்மானலாக நிலம் முழுவதும் கட்டிடத்தைக்
கட்டி
வேதனையை அனுபவிப்பதை விட சரியான வடிவத்தில் வீட்டைக் கட்டி
எஞ்சிய
இடத்தில் மணம் பரப்பும் மலர்ச்செடிகளை வளர்த்து, இறைவனை
பூஜிப்பதால்
நிம்மதியான, அமைதியான, சந்தோஷமான வாழ்வைப் பெறலாம்.
தம்பதிகள்
மேல் படியும் திருஷ்டி தோஷங்கள்
மனித
வாழ்விற்கு இன்றியமையாத திருமண வைபவங்களில் புது மணத்
தம்பதிகள்
மேல் படியும் திருஷ்டி தோஷங்கள் ஏராளமானவை. இத்தகைய
தோஷங்களைக்
களைவதற்காகவே பண்டை காலத்தில் பலவிதமான ஹோம
வழிபாடுகளையும், சடங்குகள் சம்பிரதாயங்களையும் வைத்தார்கள். இவை
அனைத்துமே
அர்த்தமுள்ளவை, தம்பதிகள் நீண்ட காலம் அமைதியுடனும்
ஆரோக்கியத்துடன்
வாழ்ந்து சமுதாயத்தை அமைதிப் பூங்காவாக
வளப்படுத்தும்
தன்மை கொண்டவை.
திருமணத்தை
மூன்று நாள், ஐந்து நாள், ஏழு நாள் வைபவமாக
கொண்டாடுவது
வழக்கம். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தெய்வத்தின்
அதாவது
முருகன், பெருமாள், சிவ பெருமான் இவர்களின் திருமண
வைபவங்களின்
நிகழ்த்தி அன்னதானம், மங்கலப் பொருட்களைத் தானமாக
அளித்து
வந்தார்கள். இது எத்தகைய திருஷ்டி தோஷங்களையும் களையும்
வல்லமை
படைத்தது.
மேலும்
திருமணத்திற்குப் பின் நிகழும் சாந்தி முகூர்த்த வைபவத்தை திருமண
நாள்
அன்றே நிகழ்த்தாது பல நாட்கள் அல்லது மாதங்களுக்குப் பின் ஒரு நல்ல
முகூர்த்த
நாளைக் குறித்து நிகழ்த்தினர். இதனால் அத்தம்பதிகளின் மேல்
எந்தவித
எதிர் வினை எண்ணங்களும், துராசை தாக்குதல்களும் ஏற்படாமல்
புது
மணத் தம்பதிகள் காப்பாற்றப்பட்டனர்.
No comments:
Post a Comment