ஆணவம் மட்டும் இருந்தால்
ஆண்டவனுக்கே என்ன கதி ஏற்பட்டது
என்பதை தெரிந்துகொள்ளுங்கள்.
என்பதை தெரிந்துகொள்ளுங்கள்.
ஒருசமயம் பிரம்மன் சிவபெருமானை
கண்டும் வணங்காமல் ஆணவமாக சென்று விட, மகா விஷ்ணுவே கூட மகேஸ்வரனை வணங்கி விட்டு தான் சாந்த சொரூமாக செல்கிறார்.
ஆனால் பிரம்மனுக்கு மட்டும் ஏன்
இந்த கர்வம் என்று கைலாய மலையில் இருக்கும் தேவரிஷிகள் தங்களுக்குள் பேசி
கொள்ள ஈசன், பிரம்மனின் செயலை பெரிதாக எடுத்து கொள்ளவில்லை.
இருந்தாலும்
இருந்தாலும்
, உலகமே வணங்கும் தம் கணவரை, பிரம்மதேவன் இப்படி அலட்சியம்
செய்கிறாரே என்று மனம் வருந்திய பார்வதிதேவி, சிவனிடம் முறையிட, சிவன்
பிரம்மனுக்கு புத்தி சொல்ல.... அதை காது கொடுத்து கேட்காமல் அங்கும்
இங்கும் பார்ப்பது மாக சைகை செய்வதுமாக சிவனின் பேச்சை அலட்சியம் செய்தபடி
இருந்த பிரம்மன்,
சிவனே..
எமக்கும் எல்லாம் தெரியும்.
உங்களுக்கு மட்டுமல்ல எனக்கும் ஐந்து தலை
தான். அதனால் நீங்கள் எனக்கு எந்த அறிவுரை சொல்லியும் என் நேரத்தையும் உங்கள் நேரத்தையும் வீணாக்க வேண்டாம் என்று பிரம்மன் சொல்ல, பிரம்மனின் பேச்சும் செயலும் ஈசனுக்கு பெரும் கோபத்தை ஏற்படுத்த அதனால் தன் உடலில் இருந்து ஒரு சக்தியை வெளிப்படுத்துகிறார் ஈசன்.

அந்த சக்தி தான் “பைரவர்”
என்று அழைக்கப் படுகிறார். உடல் முழுவதும் திருநீறு பூசி, சர்பங்களை தன்
உடலில் சூட்டி கொண்டும், பாதத்தில் சலங்கையை கட்டி கொண்டும், மண்டை ஓடுகளை
மாலையாக அலங்கரித்து அணிந்து, சூலம், பாசம் வைத்து கொண்டு சிவந்த விகாரமான
சடைகளை கொண்டவராக கோபம் நிறைந்தவராக பைரவர் உருவாகி,
சிவபெருமானை மதிக்காதவர் கதி என்னவாகும் என்பதை, பிரம்மனின் நிலையே ஒரு உதாரணமாக உலகுக்கு காட்டுகிறேன் என்று சூளுரைத்து கிளம்பும் பைரவரிடம், சிவபெருமான்... ஐந்து தலை இருக்கிறது என்கிற ஆணவத்தில்தானே பிரம்மன் எம்மை அலட்சியம் செய்கிறான். போனால்

போகட்டும் என்று விட்டால், பிரம்மனின் போக்கு பிரம்மனுக்கே அழிவை தந்திடும் போல இருக்கிறது. அதனால் பிரம்மனுக்கு ஆணவ புத்தியை தந்த, அவன் ஐந்தாவது தலையை மட்டும் எடுத்து வந்து விடு பைரவா என்கிறார் பரமேஸ்வரர்
.
சிவபெருமானால் உருவானதால் சிவபிள்ளையாக சிவபெருமானுக்கு
மட்டுமே கட்டுப்படுபவராக திகழும் பைரவர், தங்கள் ஆணைப்படி செய்வேன் என்று
கூறிய பைரவர், பிரம்மனின் ஐந்து தலையில் இருந்து ஒரு தலையை தன் நுனி
நகத்தால் மலரை பறிப்பது போல் பிரம்மனின் ஒரு தலையை கிள்ளி எறிந்து
விடுகிறார் பைரவர்.
தான் செய்த தவறுக்கு தண்டனையாக தன் தலையை கீரை கிள்ளுவது போல்
கிள்ளி எறிந்த நீங்களே என்றும் உங்கள் கையில் வைத்து கொள்ள வேண்டும் என்று
பிரம்மன் பைரவரிடம் சரணாகதி அடைந்து, உங்கள் கையில் இருக்கும் என் தலையை
பார்ப்பவர்களுக்கு ஆணவத்தால் பிரம்மன் தன் ஐந்து தலையில் ஒரு தலையை
இழந்தான் என்று தெரிந்து கொண்டு, அவர்களும் என்னை போல் திருந்த
வேண்டும்என்று பிரம்மன், பைரவரிடம் வேண்டி கொண்டதால் தான், பிரம்மனின்
மண்டை ஓட்டை பிக்ஷ பாத்திரமாக வைத்து கொண்டிருக்கிறார் பைரவர். இந்த
சம்பவத்தை கேள்விபட்ட தேவலோகமே பைரவரை கண்டு பயந்தது. இது வரலாறு..
ஓம் நமசிவாய.
No comments:
Post a Comment