Thursday, 29 June 2017

புறங்கூற்று…

புறங்கூற்று…


* குற்றம் சொல்லவும்
குறைகள் பேசவும்
முற்றம் தேவையில்லை
இவர்களுக்கு!


* வென்றவனைக் கண்டால்
அதிர்ஷ்டம் என்று
அலட்டிக் கொள்வர்!


* தோற்றவனை கண்டால்
தேவை தானா என்று
எகத்தாளம் பேசுவர்!


* உள்ளவனைக் கண்டால்
கொள்ளை அடித்த பணமென்று
குற்றம் சொல்வர்!


* இல்லாதவனைக் கண்டால்
பிழைக்க தெரியாதவனென்று
இகழ்ந்து பேசுவர்!


* தப்பு செய்தவன்
தண்டனை பெற்றால்
சட்டம் சரியில்லை என்பர்!


* தப்பு செய்யாதவன்
தண்டனை பெற்றால்
சரியான நீதி என்பர்!


* பிழைப்பு தேடி
பிற நாடு சென்றால்
பேராசை பிடித்தவன்
என்று பிதற்றுவர்!


* உழைப்பு தேடி
உள்நாட்டில் உலவினால்
ஊர் சுற்றியென்று
உதாசினம் செய்வர்!


* ஊருக்கு உதவினால்
ஊர்கழுதை என்று
பட்டம் சூட்டுவர்!


* சும்மா சுற்றினால்
சோம்பேறி என்று
முத்திரை குத்துவர்!



* மற்றவர் குறைகளை
மணிக்கணக்கில் பேசும்
இவர்களுக்கு
ஒரு நிமிஷம் கூட
கிடைப்பதில்லை
தம் குறைகளை
நினைத்துப் பார்க்க!


No comments:

Post a Comment

குளிக்கும் போது அல்லது திசை நோக்கி நின்று

 குளிக்கும் போது வடக்கு அல்லது கிழக்கு திசை நோக்கி நின்று குளிக்கவேண்டும். (இவை இரண்டும் உத்தம திசைகள். (கர்மம் செய்தபின்னும், மயானத்திற்கு ...