Monday, 12 June 2017

சூத்திரத்திலிருந்து சில பகுதிகள்.

                             சூத்திரத்திலிருந்து சில பகுதிகள். 



சாணக்கிய சூத்திரத்திலிருந்து
சில பகுதிகள்.

1. தர்மம் சந்தோஷத்தைக் கொடுக்கும்.

2.பணம் இருந்தால் தர்ம
காரியங்கள் செய்யலாம்.

3.பணத்தினால் நாட்டின்
சுபிட்சம் பெருகும்.

4. புலனடக்கம் நாட்டின்
மேன்மையைப் பெரிதாக்கும்
.
5.பணிவு இருந்தால் புலனடக்க முடியும்.

6.பெரியோர்களுக்குச் சேவை
செய்தால் பணிவு வளரும்
.
7.முதியோர் சேவைதான்
உண்மையான அறிவு.

8.பாமர ஜனங்களின் கோபம்
எல்லாக் கோபங்களையும் விட
மோசமானது.

9.ஒரு சக்கரம் ஒரு வாகனத்தை
நடத்தி செல்ல முடியாது.

10.விவாதத்திற்கும் ஆலோசனைக்கும்
பிறகே எல்லாக் காரியங்களையும்
ஆரம்பிக்க வேண்டும்.

11.அதிர்ஷ்டம், கடுமையாக
உழைப்பவர்களுக்கு
மட்டும்தான் கிடைக்கும்.

12. அதிர்ஷ்டத்தை மாத்திரம்
நம்பினவன் ஒருபோதும்
வெற்றி அடைவதில்லை.

13.உங்களிடம் இருக்கும்
குறைகளை யாரிடமும்
சொல்லாதீர்கள்.

14.பொறுமை இல்லாதவனுக்கு
நிகழ்காலமும் எதிர்காலமும்
கிடையாது.

15.அளவோடு சாப்பிடுவது
உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது.

16.வயதான காலத்தில்
சிறு உபாதைகளையும்
அலட்சியப்படுத்தாதீர்கள்.

17.திருடுவதைவிடச் சாவது மேல்

18.பசியைவிடப் பெரிய எதிரி இல்லை.

19.பாத்திரமறிந்த
 தானம்செய்.

20.வயதுக்கேற்ற ஆடை அணி.

21.மேதை, முட்டாள், நண்பன்,
ஆசிரியர் மற்றும் உன் எஜமானன்,
இவர்களுடன் தர்க்கம் செய்யாதே.

22.தாயார்தான் எல்லா குருமார்களைவிடச்
சிறந்தவள்.

23.முட்டாள் நண்பனைவிட
புத்திசாலி எதிரி சிறந்தவன்

24.எதுவும் சாஸ்வதம் இல்லை.

25.அஹிம்ஸைதான் மதத்தின் சின்னம்.
சாணக்கிய நீதி

1.கடவுள் இருப்பிடம்
கல்லிலோ, மரக் கட்டையிலோ,
மண்ணிலேயோ இல்லை.
மனிதர்களின் உணர்ச்சிகளிலும்
 எண்ணங்களிலும்தான்.

2.எப்படி பூக்களில் நறுமணம்
இருக்கிறதோ, 

எண்ணெய் விதைகளில்
எண்ணெய் இருக்கிறதோ,
 
மரக் கட்டையில் நெருப்பு
இருக்கிறதோ, 

பாலில் நெய்யும், 

கரும்பில் சர்க்கரையும்
இருக்கிறதோ, 

அப்படித்தான்
கடவுள் நம்முடைய
உடம்பில் வாசம் செய்கிறார். 

புத்தியுள்ள மனிதன் இதைப்
புரிந்துகொள்ள வேண்டும்.

3.மனித வாழ்க்கையின்
முக்கியமான 5 விஷயங்கள்-
வயது, வேலை
,
பொருளாதார வசதி,
படிப்பு, மரணம் — 

அவன் கருவில் இருக்கும்போதே
தீர்மானிக்கப்பட்டுவிடுகின்றன.
4.ஒரே ஒரு காரியத்தினால்
இந்த உலகத்தை
ஜெயிக்க ஆசைப்பட்டால்,
அது முடியும் — 

மற்றவர்களை தூஷணையாகப்
பேசத் துடிக்கும் உன் நாக்கை
அடிக்கி வைத்தால் —
நா காக்க.

5.வெளி தேசத்தில்,
உன் அறிவு, உனக்கு நண்பன்.
வீட்டுக்குள், உன் மனைவிதான்
உன் நண்பன். 

வியாதிஸ்தனுக்கு மருந்துதான்
நண்பன். 

மரணத்திற்குப் பின் உன் நண்பன்
நீ செய்த தர்மம்தான்.

6.ஆசைப்பட்டவர்களிடமிருந்து பிரிவு,
நெருங்கிய உறவினர்களிடமிருந்து
அவச் சொற்கள், தீர்க்க முடியாத கடன்,
 
கொடுங்கோல் அரசனுக்குச்
செய்யும் சேவை,
 
கெட்ட புத்தியுள்ளவர்களுடன் நட்பு -
இவை போதும், ஒரு மனிதனை எரிக்க.
வேறு நெருப்புத் தேவையில்லை.

5.வயதான காலத்தில் மனைவியின்
மரணம், சகோதரர் கையில் பண
அதிகாரம், தினசரி உணவுக்காக
மற்றவரை அண்டி நிற்பது —
இவை வாழ்க்கையின் முரண்பாடுகள்.

இவையே துக்கத்திற்கு காரணங்கள்.
8.நல்ல படிப்பு வேண்டும் என்று
நினைக்கிற மாணவன் 

தவிர்க்க வேண்டிய விஷயங்கள் —
காமம், குரோதம், லோபம், 

அழகு படுத்திக்கொள்வது,
வேண்டாத பொழுதுபோக்குக்காக
நேரம் செலுத்துவது, 

அதிகமான தூக்கம்,
எல்லா விஷயங்களிலும்
எல்லை மீறி நடப்பது.

9.இந்த உலகம் ஒரு அழகான மரம்.
எப்பொழுதும் இரண்டு
ருசிமிக்க பழங்களைக்
கொடுக்கும் —
 
அழகான,மிருதுவான பேச்சு;
நல்லவருடைய சேர்க்கை.
10.பாம்பிற்குப் பல்லில் விஷம்.
விஷப் பூச்சிக்கு அதன்
தலையில் விஷம்
.
தேளுக்கு அதன் வாலில் விஷம்.
கெட்ட குணம் படைத்த
மனிதனுக்கு 

உடல் பூரா விஷம்.
11.கடந்த காலத்தை நினைத்து
வருந்தக் கூடாது. 

எதிர்காலத்தை நினைத்துக்
கவலைப்படக் கூடாது.
 
புத்திசாலிகள் நிகழ்காலத்தை
மட்டும் நினைத்துத்
தங்கள் வாழ்க்கையை
அமைத்துக்கொள்வார்கள்.

12.எக்காரணத்தைக் கொண்டும்
கீழே சொல்லப்பட்டவற்றை
உங்கள் காலால் தொடதீர்கள் —
நெருப்பு

, ஆசிரியர்

, பிராமணர், 

பசு

, கன்னிப் பெண், 

வயதானவர்கள்,

குழந்தைகள்.

13.ஒரு தனிமனிதனைக்
குடும்ப நலத்திற்காகவும்,
ஒரு குடும்பத்தைக் கிராம
நலத்திற்காகவும், 

ஒரு கிராமத்தை தேச
நலத்திற்காகவும்,
மனச்சாட்சிக்காக
உலகத்தையும் 

தியாகம் செய்யலாம்.

14.எதிலும் அளவோடு
செயல்பட வேண்டும்.
எல்லாமே ஒரு அளவோடு
இருக்க வேண்டும். 

'சீதையின் மிக அதிகமான அழகு
அவள் கடத்தப்படுவதற்குக்
காரணமாக இருந்தது. 

ராவணனின் அளவுகடந்த திமிர்
அவன் மரணத்திற்குக் காரணமாக
அமைந்தது. 

மகாபலியின் அளவுக்கதிகமான
தானம் செய்யும் புத்தி
அவன் ஏமாறுவதற்கு
வழிசெய்துகொடுத்தது.

15.மனிதன் தனியாகவே
இந்த உலகத்திற்கு
வருகிறான். 

தனியாகவே உலகத்தை
விட்டுச் செல்கிறான்.
தனியாகவே தான் செய்த
நல்லது- கெட்டது காரியங்களின்
பயனை அனுபவிக்கிறான். 

தனியாகவே தனக்கு உண்டான
முடிவான நிலையை அடைகிறான்.

No comments:

Post a Comment

ஆண் அழுவான்...

 தாய் தந்தை இறந்தால் ஆண் அழுவான்... *தனக்கு குழந்தை பிறக்கப்போகிறது என்று நற்செய்தி கேட்டு ஆண் அழுவான்... *தன் குழந்தைகளில் ஒருவர் நோய்வாய்ப...