Tuesday, 13 June 2017

அன்னதானம்

           

அன்னதானம் 


மறுபிறவியில்லாத முக்தி கிடைக்கும். ஆதாரம்:

 (சிவபுராணம்).பூர்வபுண்ணியம் உள்ளவர்களே இவ்வாறு அன்னதானம் செய்ய முடியும் என்பதையும்,

அந்த துவாதசி அன்னதானத்தை நமது முன்னோர்கள் சூட்சுமமாக வந்துஏற்றுக்கொள்வார்கள் என்பதையும் உணர்வுபூர்வமாக உணர முடிந்தது.

நமது கடந்த ஐந்துபிறவிகளில் நாம் செய்த நல்வினை மற்றும் தீவினைகளின் தொகுப்பை அனுபவிக்கவே நாம் இந்த ஜன்மத்தில் மனிதபிறவி எடுத்திருக்கிறோம்
.அதே போலநமது பெற்றோர்களின் ஐந்து முந்தைய தலைமுறையினர் செய்த நல்வினைகள் மற்றும் தீவினைகளின் தொகுப்பில் எட்டில் ஒரு பங்கையும் சேர்த்தே அனுபவிக்கும் 

விதமாக நமது பிறப்பும், நமது ஜனன ஜாதகமும் அமைந்திருக்கிறது. மீதி ஏழு பங்குகள் பிற நமதுதாத்தா பாட்டியின் பேரன் பேத்திகளுக்கு பிரிந்துவிடும்.

நமது கர்மாக்களை நாம்தான் அனுபவிக்க வேண்டும்.நம் சார்பாக வேறு யாரும் அதைச் சுமக்க முடியாது. மாற்ற முடியாது; பூஜைகள், பரிகாரங்கள் மூலமாக நமதுதீயக்கர்மாக்களை நம்மால் குறைக்க முடிந்தாலும்,

அந்த பூஜைகள், பரிகாரங்களில் நாம் நேரடியாகக் கலந்து கொண்டால் மட்டுமே நமது தீயக்கர்மவினைகள் குறையதுவங்கும்;அதே சமயம் அந்த பூஜைகள், பரிகாரங்களை நாம் மனப்பூர்வமாகச் செய்ய வேண்டும்.அப்போதுதான் அவைகள் சூட்சுமமாகச் செயல்படும்.

நமது கர்மவினையை மாற்றும் சக்தி (கலியுகத்தில்) அன்னதானத்துக்கு மட்டுமே உண்டு
.
அன்னதானம் செய்தால் நமது மும்மலங்கள், அறியாமை, அகந்தை (தான் என்ற கர்வம்) போன்ற குணக்கேடுகள் நம்மை விட்டு விலகி விடும். இறை ஆசி கிட்டும். அன்னதானம் செய்தால் நற்பண்புகள் கைகூடும் அன்னதானம் செய்தால் அறிவு மலரும். அன்னதானம் செய்தால் துன்பங்கள் தீரும்.

தானத்தில் சிறந்தது அன்னதானம் என்கிறது தர்மசாஸ்திரம்.

அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன் 
பெற்றான் பொருள்வைப் புழி.(226)
ஆற்றுவார் ஆற்றல் பசிஆற்றல் அப்பசியை
மாற்றுவார் ஆற்றலின் பின்.(225)
திருக்குறளும் அன்னதானத்தின் அருமைகளை அறிவிக்கின்றன.
கீதையில் கிருஷ்ணபகவான், “ எவன் தனக்காக மட்டும் ஆகாரம் தேடிச்சாப்பிட்டுக் கொள்கிறானோ அவனுடைய பாபத்தை, முழுக்க அவனேதான் அனுபவித்தாக வேண்டும் வேறு எவரும் அதில் பங்கு எடுத்துக்கொள்ள மாட்டார் என்கிறார்”.

நம்மிடம் இருக்கும் பொருளை மற்றவர்க்கு ஈந்து – கொடுப்பவரும், பெறுபவரும் மகிழ்ச்சி அடைவதால் ஏற்படும் – பெரும் புண்ணியம் பெறுவதற்கான புனிதச் செயல்.

வாழ்க்கைக்கான அத்தியாவசிய தேவையான உணவை மற்றவர்க்கு தானமாக அளிப்பதே அன்னதானம் ஆகும். அன்னதானம் அளவற்ற புண்ணியத்தினை நல்கும்.

பணம், காசு, வஸ்திரம், நகை, பூமி, வீடு போன்ற மற்றப் பொருட்களையெல்லாம் தானமாகக் கொடுத்தாலும், பெறுபவர், இன்னும் கொஞ்சம் அதிகம் கொடுத்தால் நன்றாக இருக்குமே என்ற எண்ணம் தோன்றச் செய்யும். ஆனால்,

அன்னதானம் செய்தால் மட்டுமே போதும் என்ற சொல்லை தானமாகப் பெறுபவரிடமிருந்து கொண்டு வரும். ஆகையாலே பூரணமான தானம் – அன்னதானம் மட்டுமே ஆகும்.
அன்னத்தை துவேஷிக்கக் கூடாது. அன்னத்தை மிகுதியாக உண்டாக்க வேண்டும். அன்னத்தை வேண்டி வந்த எவருக்கும் இல்லை என சொல்லக் கூடாது.

உதரம் (வயிறு) நிறைந்து, உள்ளம் நிறைந்த வாழ்த்துக்கள் ஈரேழு ஜன்மங்களையும் தொடர்ந்து வரும். அன்னதானம் மட்டுமே செய்தவரை மட்டும் சென்றடையாமல், செய்தவரின் சந்ததியினரையும் காத்துத் தொடரக் கூடியது.
தானம் செய்வதில் பெரும் பெயர் அடைந்தவன் –
கர்ணன்.
மஹாபாரதப் போரில் கர்ணனின் மார்பை அம்புகளால் துளைத்தெடுக்கின்றான் அர்ஜுனன். ஆயினும் கர்ணனின் உயிர் பிரியவில்லை.

அவன் செய்த தர்மம் அவனின் தலையைக் காக்கின்றது. பகவான் கிருஷ்ணர் ஒரு வேதியர் வடிவம் கொண்டு கர்ணனிடம், இதுவரை கர்ணன் செய்த புண்ணியத்தை அனைத்தையும் தானமாக வேண்டுகின்றார்.

இறந்த பிறகு சொர்க்கத்திற்கு செல்கின்றான் கர்ணன். எல்லாவிதமான சௌகரியங்களும் கிடைக்கின்றது கர்ணனுக்கு. ஆனால், கடுமையான பசி எடுக்கின்றது. சொர்க்கத்தில் பசி என்ற உணர்வே கிடையந்தாயிற்றே! தனக்கு மட்டும் பசியெடுக்கக் காரணம் என்று எண்ணியபோது, நாரத மகரிஷி அங்கு தோன்றுகின்றார்.

கர்ணனிடம் நாரதர், பசி நீங்கவேண்டுமானால், உன் ஆட்காட்டி விரலை வாயில் வைத்துக் கொள் என்கிறார். அதன்படி, ஆட்காட்டி விரலை வாயில் வைத்தால், பசி நீங்குகின்றது. ஆனால், மறுபடிப் பசியெடுக்கின்றது.

மறுபடியும் நாரதரை கர்ணன் நினைக்க, அவர் தோன்றுகின்றார். அவரிடம் கர்ணன் தனக்குப் பசியெடுப்பதற்கும், ஆட்காட்டி விரலை வாயில் வைத்தால் பசி நீங்குவதற்கும் காரணம் கேட்கின்றார்.
அதற்கு, நாரதர் உன் வாழ்வில் நீ அனைத்து தானங்களையும் செய்திருக்கின்றாய்,

ஆனால், ஒரே ஒரு தானத்தைத் தவிர. அது அன்னதானம். அன்னதானம் செய்யாமல் சொர்க்கத்திற்கு வந்ததால், இங்கு வந்தும் உனக்குப் பசியெடுக்கின்றது.

உன் பூலோக வாழ்நாளில் ஒருநாள் உன்னிடமிருந்து தானம் பெற்றவர் அன்னசத்திரம் எங்கிருக்கிறது எனக் கேட்க அதற்கு நீ உன் ஆட்காட்டி விரலைக் காட்டி அங்கிருக்கின்றது என்றிருக்கின்றாய்.

நேரடியாக அன்னதானம் செய்யாவிட்டாலும், அன்னதானத்திற்கான காரணியாக விளங்கிய உன் ஆட்காட்டி விரல் மட்டும் அன்னதானப் பலன் பெற்றது. ஆகையால், உன் ஆட்காட்டி விரலை வாயில் வைக்கும்போது, சொர்க்கத்தின் முழுப்பலனாகிய பசியின்மையும் சேர்த்து உனக்குக் கிடைக்கின்றது என்றார்.

அன்னதானம் செய்யாமலேயே,அன்னசத்திரம் இருந்த இடத்தைக் காட்டியமைக்கே இந்தப் புண்ணியம் என்றால், அன்னதானத்தின் மகிமையை எப்படி அளவிடமுடியும்.

மற்ற எந்தத் தானம் செய்யினும் யாரையும் போதுமென்ற அளவுக்குத் திருப்தி்ப்படுத்த முடியாது. எத்தகைய பசியாக இருப்பினும் ஒரு எல்லையில் போதுமென்று கூறுவர். மற்ற எந்தத் தானங்களையும் விட அன்னதானம் என்னும் உயிர்காக்கும் தானம் மிக உயர்வான அறமாகும்.

அன்னதானம் செய்வோம் இன்புற்று வாழ்வோம்.

"இருப்பின் பசியாற்று
இல்லையெனில் பரிமாறு."
எல்லா உயிர்களையும் நேசிப்போம்..!
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க..!
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.. நிம்மதியாக வாழ முயற்சி செய். உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்.


ஆத்துப்பொள்ளாச்சி என்கிற கிராமத்தில் அன்னை ஸ்ரீஆனந்தாய்பேச்சியம்மன் கோவிலில்

மாதா மாதம் பெளர்ணமி அன்று யாகம்,  அபிஷேகம்,  அலங்காரம், அன்னதானம்,சிறப்பு பூஜைகள் செய்வதற்கும், ஆலய கட்டிட திருப்பணிக்கு, பணம் உதவி செய் கருணை உள்ளம் நிறைந்த எதுவும் தான் என்று  வெளிக்காட்டாத குடும்பத்தாருக்கு நன்றிகள் இவர்கள் குடும்பத்திற்கு சகல ஐஸ்வர்யாங்களும் செல்வமும், செல்வாக்கும் பெருகும், வியாபாரம் அபிவிருத்தியாகி, கோடிஸ்வர யோகம் தரும்குடும்பத்தில் அமைதி நிலவும் தெய்வ அனுக்ரஹம் கிடைக்கும் அதிர்ஷ்டமான திருப்பங்களும் ஏற்பட வாழ்த்துக்கள் 




இப்பதிவை பார்க்கின்ற 100000 பேர்களும் மனமாற வாழ்த்துக்கள்  மற்றவர்களைவாழ்த்தினால் நீங்களும் வாழ்வீர்கள்


வாழட்டும் பல்லாண்டு காலம் 


No comments:

Post a Comment

ஆண் அழுவான்...

 தாய் தந்தை இறந்தால் ஆண் அழுவான்... *தனக்கு குழந்தை பிறக்கப்போகிறது என்று நற்செய்தி கேட்டு ஆண் அழுவான்... *தன் குழந்தைகளில் ஒருவர் நோய்வாய்ப...