Sunday, 15 March 2026

கல்வியில் பாதிப்பை ஏற்படுத்தும் கிரகநிலைகள்...

 கல்வியில் பாதிப்பை ஏற்படுத்தும் கிரகநிலைகள்...

1)கல்விக்காரகனான புதன் பகை, அஸ்தங்கதம்,நீசம் மற்றும் முன்பின் பாவக்கிரகங்கள் நின்றால் கல்வியில் பாதிப்பை ஏற்படுத்தும்.
2)புதனுக்கு திரிகோணங்களில் சுபகிரகங்கள் இல்லாமல் பாவக்கிரகங்கள் இருந்தால் கல்வியில் பாதிப்பை ஏற்படுத்தும்.
3)புதன் நீசமாகி பாவ கிரகங்களின் தொடர்பு ஏற்பட்டால் கல்வியில் பாதிப்பை ஏற்படுத்தும்.
4)மனோகாரகனான சந்திரனுக்கு சனி, செவ்வாயின் பார்வை விழுந்தால் கல்வியில் பாதிப்பை ஏற்படுத்தும்.
5)சந்திரனோடு ராகு 5 பாகைக்குள் நெருங்கி நின்றால் மறதித்தன்மையை கொடுத்து கல்வியில் பாதிப்பை ஏற்படுத்தும்.
6)சூரியன்,சந்திரன்,செவ்வாய்,சனி ஒரே ராசியில் சேர்க்கை பெற்றிருந்தால் கல்வியில் பாதிப்பை ஏற்படுத்தும்.
7)புதனுக்கு முன்பின் பாவ கிரகங்கள் அமர்ந்தாலும் கல்வியில் பாதிப்பை ஏற்படுத்தும்.
8)புதனுக்கு திரிகோணங்களில் சர்ப்ப கிரகங்களான ராகு/கேதுக்கள் நின்றாலும் கல்வியில் பாதிப்பை ஏற்படுத்தும்.
9)வக்ர புதன் சுபத்தன்மை அடையாமல் அசுபத் தன்மை அடைந்திருந்தால் கல்வியில் பாதிப்பை ஏற்படுத்தும்.
10)புதனுக்கு திரிகோணத்தில் நீச கிரகம் இருக்கக் கூடாது.அப்படி இருந்தால் புதனின் வலிமையை இழக்கச் செய்து கல்வியில் பாதிப்பை ஏற்படுத்தும்.
11)புதனுக்கு அடுத்து சனி நின்று புதன் பலமிழந்திருந்தால் கல்வியில் பாதிப்பை ஏற்படுத்தும்.புதன் பலம் பெற்றிருந்தால் முயற்சியால் கல்வியை முடிப்பார்.
12)புதனுக்கு அடுத்து ராகு நின்றால் கல்வியில் பாதிப்பை ஏற்படுத்தும்.கேது நின்றால் முயற்சியால் கல்வியை முடிப்பார்.
13)சந்திரன் நீசமாகி சனியின் தொடர்பு ஏற்பட்டாலோ,சந்திரன்,சனி 5 பாகைக்குள் நெருக்கமாக சேர்க்கை பெற்றிருந்தாலோ கல்வியில் மந்தத்தன்மையை கொடுத்து பாதிப்பை ஏற்படுத்தும்.
14)புதன் பகை வீடான கடகத்தில் சனிபகவானின் நட்சத்திரத்தில் நின்றாலும் படிப்பில் மந்தத்தன்மையை கொடுத்து பாதிப்பை ஏற்படுத்தும்.
15)சனிபகவானின் வீடுகளான மகரம்,கும்பத்தில் சூரியன் புதன் சேர்க்கை பெற்றிருந்தாலும் கல்வியில் பாதிப்பை ஏற்படுத்தும்.
மேற்கண்ட கிரக நிலைகளுக்கு சுபத்தன்மையின் அடிப்படையில் விதிவிலக்குகளும் உண்டு.கல்வியில் பாதிப்பை ஏற்படுத்தினாலும் தடையை தாண்டி கல்வியில் வெற்றி பெறும் சூட்சமங்களும் சுய ஜாதகத்தில் இருக்கும் நண்பர்களே.

No comments:

Post a Comment

#பிரபஞ்சத்தின்ரகசியம்:

  #பிரபஞ்சத்தின்ரகசியம் : நீ எதை விதைக்கிறாயோ, அதையே அறுவடை செய்வாய்! ​இந்த உலகம் ஒரு பெரிய #கண்ணாடி . நீ எதைக் காட்டுகிறாயோ, அதையே அது பிரத...