Saturday, 4 April 2026

#பிரபஞ்சத்தின்ரகசியம்:

 #பிரபஞ்சத்தின்ரகசியம்:

நீ எதை விதைக்கிறாயோ, அதையே அறுவடை செய்வாய்!
​இந்த உலகம் ஒரு பெரிய #கண்ணாடி. நீ எதைக் காட்டுகிறாயோ, அதையே அது பிரதிபலிக்கும்...
​உன் ஆழ்மனதில் நீ எதை அடிக்கடி நினைக்கிறாயோ, எதை உண்மையாக நம்புகிறாயோ, அதை நோக்கியே #உன்வாழ்க்கை நகர்கிறது...
​பயத்தை விதைத்தால்: தடைகளும், தோல்விகளும் உன் கண்ணுக்குப் பெரிதாகத் தெரியும். "என்னால் முடியுமா?" என்ற சந்தேகம் உன்னைச் சூழ்ந்து கொள்ளும்.
​நம்பிக்கையை விதைத்தால்: #மூடப்பட்டகதவுகளுக்குப் பின்னால் இருக்கும் புதிய வாய்ப்புகள் உன் கண்ணுக்குத் தெரியும். பிரபஞ்சம் உனக்கான பாதையை ரகசியமாகச் செப்பனிடும்...
⚡ உன் எண்ணமே உன் ஆயுதம்
​சூரிய ஒளி ஒரு காகிதத்தின் மேல் சாதாரணமாகப் பட்டால் ஒன்றும் ஆகாது. ஆனால், ஒரு #பூதக்கண்ணாடி (Magnifying Glass) கொண்டு அந்த ஒளியை ஒரு புள்ளியில் குவித்தால், அந்தக் காகிதம் எரியத் தொடங்கும்...
​உன் கவனமும் அப்படித்தான்! உன் ஆற்றலைச் சிதறவிடாமல், உன் #இலக்கில்மட்டும் குவிக்கத் தொடங்கினால், எந்தப் பெரிய இலக்கும் சாத்தியமே....
✨ பிரபஞ்சத்திடம் நீ கேட்க வேண்டியது இதுதான்:
​வெளியில் நடக்கும் #சலசலப்புகளைக் கண்டு அஞ்சாதே...
அவை மேகக்கூட்டங்கள் போல வந்து போகும். ஆனால் நீ #வானத்தைப் போல நிலையாக இரு...
​தெளிவான முடிவு: நீ எதை அடையப் போகிறாய் என்பதில் துளியும் #சந்தேகம் இருக்கக்கூடாது....
​தொடர் செயல்: பலன் கிடைக்குமா கிடைக்காதா என்ற #கவலைஇன்றி, இன்றைய வேலையை முழுமையாகச் செய்....
​காத்திருப்பு: விதை போட்ட அடுத்த கணமே கனி கிடைக்காது. காலத்தின் மீது #நம்பிக்கைவை....
​"தகுதியுள்ளவனுக்குத் தான் சோதனைகள் வரும். அந்தச் சோதனைகளைக் கடப்பவனுக்குத் தான் #சாதனைகள் சொந்தமாகும்."
​இந்த உலகம் உன்னை #வீழ்த்த நினைக்கும் போது, நீ உன் #இலக்கை மட்டும் பார்....
நீ #பிரபஞ்சத்தின்செல்லப்பிள்ளை. உன் மன உறுதி இமயமலையாய் இருந்தால், #தடைகள் எல்லாம் வெறும் #தூசியாக மாறும்!
​வெற்றி உன்னிடமே இருக்கிறது...

#பருவத_மலையின்_சிறப்பம்சம்


 #பருவத_மலையின்_சிறப்பம்சம்

#திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள இந்த மலையில் தான், ஈஸ்வரன் இமயத்தில் இருந்து தென்பகுதியான தழிழகத்திற்கு வந்தபோது முதன் முதலாக காலடி வைத்த மலை என்கிறார்கள்.
திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த தென்மாதி மங்கலம் கிராமத்தில் தென்கைலாயம் என்று அழைக்கப்படும் 4560 அடி உயரம் கொண்ட பருவத மலை உள்ளது.
இந்த மலையில் மல்லிகார்ஜுசாமி கோவில் உள்ளது. மலைக்கு செல்ல 700 அடிக்கு செங்குத்தான கடப்பாறை படி, தண்டவாளப்படி, ஏணிப்படிகள் உள்ளன. பவுர்ணமி மற்றும் சாதாரண நாட்களிலும் பக்தர்கள் மலைக்கு சென்று தங்கி சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
அமாவாசையிலும் கூட மலையின் கீழ்ப்பகுதி முதல் உச்சி வரை இரவில் இறைவனுடைய ஒளி வழி காட்டுவது இங்கு மட்டும்தான். சித்தர்கள் வாழும் மலையான இதில் பல பேருக்கு சித்தர்கள் காட்சி கொடுத்துள்ளார்கள்.
வட மாநிலங்களில் செய்வதுபோல இங்கும் அவரவரே இறைவனுக்கு அபிஷேகம் செய்வது பெரிய பாக்கியம் ஆகும். இந்த பர்வதமலையை ஒரு முறை தரிசித்தால் பூமியிலுள்ள அனைத்து சிவாலயங்களையும் தரிசித்த பலன் உண்டு என்கிறது தல புராணம்.
சிறப்புகள்:
பருவத மலையில் தீபம் ஏற்றி ஒரு நாள் அபிஷேகம் செய்தால் 365 நாட்கள் பூஜை செய்த பலன் கிடைக்கும். ஆஞ்சநேயர் இமயத்திலிருந்து சஞ்சீவிமலையைத் தூக்கி வரும்போது விழுந்த ஒரு துளி தான் இந்த மலை என்றும் கூறுவதுண்டு.
இந்த மலை மொத்தம் ஏழு சடைப்பரிவுகளைக் கொண்டது. 3 ஆயிரம் அடி உயரமுள்ள செங்குத்தான கடற்பாறைப்படி, தண்டவாளப்படி, ஏணிப்படி, ஆகாயப்படிகளைக் கொண்ட அதிசய மலையான இதில் எப்போதும் மூலிகைக் காற்று வீசி தீராத நோயும் தீர்க்கும்.
இம்மலையில் நூற்றுக்கணக்கான குகைகளில் சித்தர்கள் இன்றும் வாழ்ந்து வருகிறார்கள் என்று வரலாறு கூறுகிறது.. இத்தலத்திலுள்ள சிவனின் கருவறையிலிருந்து கோயிலைச் சுற்றி நறுமண மலர்களின் வாசனையை நுகரலாம். அம்மன் அழகு வேறெங்கும் காணமுடியாத பேரழகு.
இரவு அம்மன் கன்னத்தில் ஜோதி ஒளியைக் காணலாம். அம்மன் கருவறையிலிருந்து பின்நோக்கி செல்ல அம்மன் உயரமாக காட்சி தந்து நேரில் வருவதுபோல் இருக்கும். மலை உச்சியில் ராட்சத திரிசூலம் உள்ளது. தலைக்கு மேலே மேகம் தவழ்ந்து போவதைக் காணலாம்.
சித்தர்கள் கழுகாகத் திகழும் திருக்கழுக்குன்றம் போல் இங்கும் மூன்று கழுகுகள் இந்தமலையை சுற்றிய வண்ணம் உள்ளதைக் காணலாம். பவுர்ணமி பூஜை இங்கு சிறப்பாக நடக்கும் இத்தலத்திற்கு தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர். மனித உடலில் 6 ஆதாரங்களைக் கடந்து குண்டலினி சக்தி உச்சியில் உள்ள சதாசிவத்துடன் சேர்கிறது.
அது போல் நாமும் கடலாடி மெத்தகமலை, குமரி நெட்டுமலை, கடப்பாறை மலை, கணகச்சி ஓடை மலை, புற்று மலை, கோவில் உள்ள மலை ஆகிய 6 மலைகளையும் கடந்து இங்குள்ள சிவ சக்தியினை தரிசித்தால் ஞானம் பெறலாம். 48 பவுர்ணமி, அமாவாசை தொடர்ந்து இந்த மலையில் உள்ள சிவ பார்வதியை தரிசித்தால் கைலாயத்தை தரிசித்த பலன் கிடைக்கும் என்கிறது தல புராணம்.
சகல நோயும் தீர்க்கும் பாதாளச் சுனைத் தீர்த்தம் இங்கு உண்டு. 26 கி.மீ., சுற்றளவுள்ள இந்த மலையை பவுர்ணமி தினத்தில் ஒரு முறை கிரிவலம் வந்தால் கைலாயத்தையே சுற்றி வந்த பலன் கிடைக்கும் என்பது ஐதீகம். கன்னியாகுமரி போன்று இங்கும் சூரிய உதயம், அஸ்தமனம் காண கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும்.
அமாவாசையிலும் கூட மலையின் கீழ்ப்பகுதி முதல் உச்சி வரை இரவில் இறைவனுடைய ஒளி வழி காட்டுவது இங்கு மட்டும்தான். இத்தலத்திலுள்ள சிவனின் கருவறையிலிருந்து கோயிலைச் சுற்றி நறுமண மலர்களின் வாசனையை நுகரலாம். அம்மன் அழகு வேறெங்கும் காணமுடியாத பேரழகு. இரவு அம்மன் கன்னத்தில் ஜோதி ஒளியைக் காணலாம்.
பின்_குறிப்பு:
மலைக்கு வருபவர்கள் உணவு, தண்ணீர், போர்வை, டார்ச் லைட், தீபம் ஏற்றுவதற்கு விளக்கு எண்ணெய், பூஜைப் பொருட்கள் வாங்கி வருவது முக்கியம். வாழ்வில் ஒரு முறையேனும் மலைக்கு வந்து செல்வது பூர்வ ஜென்ம புண்ணியம். மலையிலுள்ள சாதுக்களின் தரிசனம் பாப விமோசனம்.
போக்குவரத்து_வசதி::
சென்னை கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்தும் சேலத்தில் இருந்தும் இந்த பருவத மலைக்கு செல்ல நேரடி பஸ் வசதி உள்ளது.அல்லது திருவண்ணாமலை சென்று பின் அங்கிருந்தும் இந்த கோவிலுக்கு செல்லலாம். நன்றி

ஆயுள் தோஷம் போக்கும் எமதர்ம விருட்சம் பிரண்டை !*

 *


ஆயுள் தோஷம் போக்கும் எமதர்ம விருட்சம் பிரண்டை !*

************************************
ஜோதிடத்தில் ஒருவரின் ஆயுளை அறிய லக்னம், லக்னாதிபதி, ஆயுள் ஸ்தானம், ஆயுள் ஸ்தான அதிபதி மற்றும் ஆயுட்காரகன் சனி ஆகியோரின் நிலைகளை ஆராய வேண்டும்.
8-ஆம் இடத்தில் அசுப கிரகங்கள் இருந்து சுபர் தொடர்பின்றி திசா புத்தி நடத்தும் காலங்களில் சிலருக்கு ஆயுள் பங்க பிரச்னைகள் ஏற்படுவதுண்டு.
எட்டாம் இடத்தில் ஆயுள்காரகன் சனி இருந்தால் பாவக காரகோ நாஸ்தி கிடையாது. ஆனால், 8ல் உள்ள சனி நித்ய கண்டம், பூரண ஆயுசு என்ற நிலையை ஏற்படுத்தி விடும்.
*வச்சிரவல்லி 😘
பிரண்டை கொடித் தாவரமாகும். மருத்துவ பயன்பாடு உடைய அற்புத மூலிகையான பிரண்டை காடுகள் வேலிகளில் வளர்கிறது. பொதுவாக இது வெப்பமான இடங்களில் வளரும் தன்மை உடையதாகும்.
தானே விளையும் பிரண்டையின் மகத்துவங்கள் பற்றி பலர் அறிந்திராத காரணத்தினால் பிரண்டை வீணடிக்கப்படுகிறது
ரத்த மூலம் வாயு பிடிப்பு கை - கால் குடைச்சலுக்கான சிறந்த மருந்தாக பிரண்டை விளங்குகிறது. பிரண்டை வச்சிரவல்லி என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறது.
பிரண்டையின் வகைகளாக சாதாரண பிரண்டை சிவப்பு பிரண்டை, உருட்டு பிரண்டை, முப்பிரண்டை, தட்டை பிரண்டை ஆகியன குறிப்பிடப்படுகின்றன.
இதில் சாதாரண பிரண்டை எனப்படும் நான்கு பட்டங்களை கொண்ட பிரண்டை அதிகமாக காணப்படும் வகையாகும்.
சிலர் உடல் மெலிந்து எப்போதும் சோகமாக காணப்படுவார்கள். இவர்கள் எவ்வளவு சாப்பிட்டாலும் உடல் தேறாமல் இருப்பார்கள். இவர்கள் பிரண்டையை நெய் விட்டு வதக்கி துவையலாக செய்து வாரம் இருமுறை சாப்பிட்டு வந்தால் தேகம் வலுப்பெறும். உடல் நன்கு தேறும்.
பெத்த வயித்துல பிரண்டையை வைத்து கட்டி இருக்கலாம் என்பது அந்த காலம் தொட்டு புழக்கத்தில் இருக்கிற பிரபலமான வசவு வாசகம்.
*எமதர்மராஜனின் விருட்சம்*
பிரண்டை எமதர்ம ராஜனின் விருட்சமாக குறிப்பிடப்படுகிறது. எமதர்மனின் விருட்சமான பிரண்டையை நினைத்தாலே யோகம்தான்.
நோய் பாதிப்பு உள்ளவர்கள் பிரண்டையை பார்த்து வந்தால் நோய் குணமாகும். எதிர்பாராத பிரச்சினைகள் ஏற்படாமல் இருக்க செல்போனில் டிஸ்பிளே பிக்சராக பிரண்டை படத்தை சனிக்கிழமை அன்று வைத்து பார்த்து வரவும்.
எமதர்மனின் சகோதரரான ஆயுட்காரகன் சனீஸ்வர பகவானின் கிழமையான சனிக்கிழமை அன்று பிரண்டைத் துவையல் சாப்பிட்டுவந்தால் ஆயுள் பங்க தோஷங்கள் நீங்கும். பிரண்டை துவையலில் நல்லெண்ணெய் விட்டு சூடான சாதம் சாப்பிடவும்.
மாதம் ஒரு முறை பரணி, சதயம் நட்சத்திரங்கள் வரும் நாட்களில் பிரண்டை துவையல் சாப்பிட்டு வந்தால் ஆயுள் விருத்தி ஏற்படும் ஏனெனில் எமதர்ம ராஜன் பரணி நட்சத்திரத்திற்கு அதி தேவதையாகவும், சதயம் நட்சத்திரத்திற்கு தேவதையாகவும் குறிப்பிடப்படுகிறார்.
செய்வினை தோஷம் நீங்க பிரண்டை கொழுந்தை சனிக்கிழமை அன்று பறித்து அரைத்து அன்றே துவையலாக சாப்பிட வேண்டும் தொடர்ந்து எட்டு சனிக்கிழமைகளில் சாப்பிட வேண்டும். பிரண்டை துவையல் சாப்பிட்டால் தொடர் பிரச்னைகள் விபத்துக்கள், அகால மரணங்கள் ஏற்படாது.
பிரண்டை செடியை வீட்டின் பின்புறம் வளர்ப்பதன் மூலம் எதிர்மறை சக்திகள் மற்றும் கண் திருஷ்டி முன் ஜென்ம வினைகள் நீங்கும். குடும்பத்தில் வசியம் ஏற்படும்.
திருமீயச்சூர் லலிதாம்பிகை கோவிலில் எமன், பிரண்டையால் சாதம் செய்து சிவனுக்கு நிவேதித்து வழிபட்டாராம். அதனால் பிரண்டையை உணவில் சேர்த்துக் கொண்டால் ஆயுள் வளரும்.
*பிரண்டை தீபம்*
நான்கு கணுக்கள் உள்ள பிரண்டையை எடுத்து நான்கு துண்டுகளாக வெட்டி தனித்தனியாக நான்கு மண் அகல்விளக்கில் போட்டு நல்லெண்ணெய் ஊற்றி பஞ்சுத்திரி மூலம் தீபம் ஏற்றவும்.
தொடர்ந்து 48 நாட்கள் செய்யவும். இதன் மூலம் கடன் பிரச்னைகள் தீரும். ஆயுள் விருத்தி ஏற்படும்

*சக்கரை நோயை இந்த நாட்டை விட்டு அடித்துத் துரத்தும் வேளை வந்து விட்டது*

 *சக்கரை நோயை இந்த நாட்டை விட்டு அடித்துத் துரத்தும் வேளை வந்து விட்டது*

சக்கரை நோயை வைத்து
இந்தியாவில் மட்டுமே
*700 மருந்து நிறுவனங்கள்* (கம்பெனிகள்) ஆண்டுக்குப்
*பல இலட்சம் கோடி ரூபாய்களை* அள்ளிச் செல்கின்றனர்.
இனிமேலாவது இதற்குச் செலவு செய்யும் பணத்தை உணவுக்காகச் செலவு செய்தால் உறுதியாக வேளாண்மை செழிக்கும் ;
வேளாண்மை செழித்தால் எல்லாத் தொழில்களும் வீறுநடை போடும்.
இதற்கான
*அரு மருந்து நம்மிடமே உள்ளது.*
சக்கரை நோய்க்குக் காரணம் *இன்சுலின் ஒழுங்காகச் சுரக்காதது தான்;*
ஆனால், இயற்கையாகச் சுரக்க ஒரே மருந்து எது?
*உமிழ்நீர் தான்.*
சக்கரை நோய்க்கும் வாயில் ஊறக்கூடிய உமிழ்நீருக்கும் என்ன தொடர்பு உண்டு என்பதைப் பார்ப்ப்போம்.
*உணவுடன் கலந்து செல்லும் உமிழ்நீர்தான்,*
கணையத்திலிருந்து இன்சுலினைச் சுரக்கத் தூண்டும் *இயற்கை மருந்து.*
உமிழ்நீர் எனும் இயற்கை மருந்தை நம் முன்னோர்கள், தாங்கள் உண்ணும் உணவுடன், அதிக அளவு எடுத்துக் கொண்டனர்.
வாழ்வதற்காக உண்டனர்.
அதனால்தான் பொறுமையுடனும்
அமைதியுடனும்
பொறுப்புடனும் உணவருந்தினர்.
அதனால் அவர்கள் சாப்பிடும் உணவுடன் உமிழ்நீர் அதிக அளவு கலந்து வயிற்றுக்குள் சென்றது.
கூடுதல் உமிழ்நீரைச் சுரக்கச் செய்வதற்காக *ஊறுகாயைச்* சிறிதளவு எடுத்துக் கொண்டனர்.
அதேபோல் உணவு உண்பதற்கு
30 நிமிடம் முன்னதாகவும்
உணவு உண்டபின் 30 நிமிடம் கழித்தும்
நாம் *கடலைமிட்டாய் , வெல்லம் , பனங்கற்கண்டு, பனங்கருப்பட்டி* இவற்றில் ஏதாவது ஒன்றை எடுத்துக் கொண்டால் கட்டாயம் *உமிழ்நீர் நன்கு சுரக்கும்.*
நம் முன்னோர்களுக்கு உமிழ்நீரின் அருமை தெரிந்திருந்ததால் ஊறுகாய் என்ற உணவுப் பொருளை கண்டுபிடித்துப் பயன்படுத்தினர்.
தூண்டல், துலங்கல் என்ற விதியின் படி *உமிழ்நீர் என்ற தூண்டுதலால் இன்சுலின் என்ற துலங்கல்* சுரக்கப்படுகிறது.
நமது வாழ்க்கையின் வேகம் அதிகரித்து விட்டது.
உணவு சாப்பிடும் வேகமும் அதிகரித்துவிட்டது.
வாழ்க்கைக்கான சாப்பாடு என்ற மனநிலை மாறி,
சாப்பிடுவதும் ஒரு 'வேலை'தான் என்ற மனநிலைக்கு வந்துவிட்டோம்.
உணவை ரசித்து, ருசித்து; உமிழ்நீர் கலந்து சாப்பிடாமல்,
அவசர அவசரமாக வாயில் போட்டு விழுங்குகிறோம்.
நாம் விழுங்கும் உணவில் உமிழ்நீர் இல்லாததால், அந்த உணவுக்கு இன்சுலின் சுரக்காது.
உணவிலுள்ள குளுக்கோசு, கிளைக்கோசனாக மாறாமல், அது சக்கரையாகவே இரத்தத்தில் தங்கிவிடும்.
நாளடைவில் அது *சக்கரை நோய் என்று அழைக்கப்படும் நீரிழிவு நோயாக* மாறிவிடுகிறது.
சக்கரை நோய்க்கு மிகச்சிறந்த இயற்கை மருந்து நம் வாயில் ஊறும் உமிழ்நீர்தான்.
எனவே,
நாம் சாப்பிடும் ஒவ்வோர் உணவிலும் உமிழ்நீர் கலந்து சாப்பிடப் பழகிக் கொள்ள வேண்டும்.
நாம் குடிநீர் அல்லது தேநீர் அருந்தினால் கூட உமிழ்நீர் கலந்துதான் வயிற்றிற்குள் அணுப்ப வேண்டும்.
நீரிழிவு நோய் எனும் செயற்கையான நோயை *உமிழ்நீர் எனும் இயற்கையான மருந்து* கொண்டு அழித்து ஒழிப்போ

Friday, 3 April 2026

vசூலாயுதங்களில் எலுமிச்சை குத்தப்படுவதன் ஆன்மீக ரகசியம்


 சூலாயுதங்களில் எலுமிச்சை குத்தப்படுவதன் ஆன்மீக ரகசியம் என்ன? 🍋🔱

​நமது கலாச்சாரத்திலும் வழிபாட்டு முறைகளிலும் எலுமிச்சைக்கு என்று தனித்துவமான ஒரு இடம் உண்டு. குறிப்பாக அம்மன் கோவில்களிலும், வழிபாட்டு தலங்களிலும் சூலாயுதத்தில் எலுமிச்சையை குத்தி வைத்திருப்பதை நாம் பார்த்திருப்போம். அதற்கான ஆழமான காரணங்கள் இதோ:
✅ தேவகனி: எலுமிச்சை எவ்வித குற்றமும் இல்லாத ஒரு புனிதமான தேவகனியாக கருதப்படுகிறது.
✅ குற்றமற்ற கனி: முக்கனிகளான மா, பலா, வாழை ஆகியவற்றில் கூட வண்டு, வியர்வை, புள்ளி என ஏதோ ஒரு சிறு குறை இருக்கும். ஆனால், எலுமிச்சையில் மட்டுமே அத்தகைய குறைகள் எதுவும் இருக்காது.
✅ ஈர்ப்பு சக்தி: மனிதர்களுடைய எண்ணங்களையும், நேர்மறை சக்திகளையும் ஈர்க்கும் ஆற்றல் மற்ற கனிகளை விட எலுமிச்சைக்கு மிக அதிகம்.
​இறைவனின் சக்தியை நமக்குள் கொண்டு சேர்க்கும் இந்த அற்புத கனியின் சிறப்புகளைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ளுங்கள்! 🙏✨
​ஆலயங்களில் நம் முன்னோர்கள் வழிமுறைகளில்
எல்லாமே நன்மைகள் தான்

Thursday, 2 April 2026

தருமம் தலைக் காக்கும் ! தக்க சமயத்தில் உயிர் காக்கும்!

 


தருமம் தலைக் காக்கும் ! தக்க சமயத்தில் உயிர் காக்கும்!

ஒரு ஊரில் ஒருவர் இருந்தார். மிகவும் நல்லவர். யாருக்காவது ஏதாவது கொடுத்துக் கொண்டே இருப்பார். தினமும் யாராவது ஒருவருக்கு ஏதாவது கொடுக்கவில்லை என்றால் அவருக்கு தூக்கம் வராது. அப்படி ஒரு பழக்கம். அதுமட்டுமல்ல அவர் கொடுப்பது அடுத்தவர்களுக்கு தெரியாது. அவ்வளவு ரகசியமாக கொடுப்பார்.
ஒரு நாள் இரவு அவர் ஏற்கனவே தயாராக கட்டி வைத்திருந்த பணம் முடிப்பை கையில் எடுத்துக்கொண்டார். வீட்டை விட்டு வெளியில் வந்தார். தெருவில் இறங்கி நடந்தார். இன்றைக்கு யாருக்கு தர்மம் செய்வது என்று யோசித்துக் கொண்டே இருட்டில் நடந்து கொண்டிருந்தார். அப்போது எதிரில் ஒருவர் வருவது போல் இருந்தது. உடனே அவரிடம் போனார் . தன்னிடமிருந்த பண முடிப்பை அவசரம் அவசரமாக அவர் கையில் திணித்து விட்டு திரும்பி வந்துவிட்டார்.
அப்பாடா ஒரு வழியாக தருமம் செய்தாகி விட்டது என்கின்ற மகிழ்ச்சி! மனநிறைவு அவர் முகத்தில்! நிம்மதியாக தூங்கி எழும்பினார்.
மறுநாள் காலையில் ஊர் பூராவும் ஒரே பேச்சு . நேத்து ராத்திரி ஒரு திருடன் கையில் யாரோ பணத்தை கொடுத்து விட்டு போய் விட்டார்கள் என்று பேசிக் கொண்டிருந்தார்கள்.
இதை கேள்விப்பட்டதும் பெரியவருக்கு வருத்தமாகிவிட்டது. போயும் போயும் ஒரு திருடனுக்கு உதவி செய்தோம் பிரயோஜனம் இல்லாமல் போய்விட்டதே என்று நினைத்தார்.
சரி இன்றைக்கு யாருக்காவது உதவி செய்வோம் என்று முடிவு பண்ணினார். எதிரில் ஒரு பெண்ணின் உருவம் மங்கலாகத் தெரிந்தது. உடனே அந்தப் பெண்ணிடம் பணத்தை கொடுத்துவிட்டு போனார்.
மறுநாள் காலையில் ஊர் பூராவும் நேத்து ராத்திரி விபச்சார பெண்ணின் கையில் யாரோ பணத்தை கொடுத்து விட்டு போய் இருக்கிறார்கள் என்று பேச்சு.
அடடா இன்றைக்கும் தவறு நடந்து விட்டது என்று வருத்தப்பட்டார்.
இருக்கட்டும் இன்றைக்கும் ஏதாவது தர்மம் செய்வோம் என்று நினைத்தார்.
மூன்றாம் நாள் இரவும் புறப்பட்டார். அப்போதும் எதிரில் ஒருவர் வந்தார். இவர் பணத்தை கொடுத்தார்.
மறுநாள் மக்கள் இரவு ஒரு செல்வந்தர் கையில் யாரோ பணத்தை கொடுத்துவிட்டு போய் இருக்கிறார்கள் என்று பேசிக் கொண்டிருந்தார்கள்.
தினம் தினம் இப்படி ஆகிவிட்டதே என்று நினைத்துக் கொண்டு படுத்து தூங்கினார். அன்று இரவு ஒரு கனவு. அந்த கனவில் இறைவன் வந்தார். நீ கொடுத்த தர்மம் வீணாகப் போய்விடவில்லை. உன்னிடம் பணம் வாங்கிய அந்த திருடன் திருந்தி விட்டான். அந்தப் பெண்ணும் திருந்தி விட்டாள். அந்த செல்வந்தனும் கொடையாளி ஆகிவிட்டான் என்று கடவுள் சொன்னார்.
அதாவது நல்ல மனதுடன் தர்மம் செய்தால் அது ஒருபோதும் வீணாகப் போய் விடாது.
அது மட்டுமல்லாமல் தருமம் தன்னை மட்டுமல்ல அடுத்தவர்களையும் தீமையிலிருந்து காப்பாற்றும் சக்தி வாய்ந்தது.......

செம்பு குடங்களில் வீடுகளில் தண்ணிர்


 செம்பு குடங்களில் வீடுகளில் தண்ணிர்

ஏன் தெரியுமா ?
அந்த காலங்களில் நமது வீடுகளில் தண்ணிர்
செம்பு குடங்களில் பிடித்து வைப்பார்கள்.ஏன் தெரியுமா ?
கேன் வாட்டர், மினரல் வாட்டர் என்று பணத்தைத் தண்ணீராக செலவு செய்யும் காலமிது. ஆனால்,
''வீட்டுக்கு ஒரு செம்புத் தகடு இருந்தாலே போதும், அருமையான மினரல் வாட்டர் கிடைத்துவிடும். மாசம்
நூத்துக் கணக்கான ரூபாய் மிச்சமாகும்...
''மைசூர்ல இருக்கற அஜய் நினைவு குடிநீர் நிறுவனத்தைச்
சேர்ந்தவங்க, செம்புப் பாத்திரத்துல
தண்ணியை வெச்சி ஒரு ஆராய்ச்சி நடத்தினாங்க. அதோட முடிவுல, 'செம்புப் பாத்திரத்தில் 24-மணி நேரம்
குடிநீரை வைத்திருந்து பரிசோதித்துப் பார்த்ததில், மனிதர் களுக்குப் பாதிப்பு ஏற்படுத்தும் நுண்ணுயிரிகள் எதுவும் அந்த நீரில் இல்லை' என அந்த
நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்தத் தகவல் அறிந்ததிலிருந்து செம்புக்
குடத்துல வெச்சிருந்துதான் தண்ணியைக்
குடிக்கின்றார்கள். கிணத்துல கிடைக்கறத்
தண்ணி, செம்புக் குடத்துக்குப் போனதும்
மினரல் வாட்டர் மாதிரி அருமையாக
மாறிவிடுகிறதாம்.
செம்பு குடம் இலலைனாலும் பரவாயில்லை.
ஒரு கையளவு செப்பு தகட்டை குடத்துக்குள்ள
போட்டு வெச்சா கூட உங்க வீட்டுத்
தண்ணி தரமானதா மாறிடும்.
மூணு நாளைக்கு ஒரு தரம்
செம்பு தகட்டை எடுத்துப்
பார்த்தா பாசி புடிச்ச மாதிரி இருக்கும்.
அதெல்லாம் பாக்டீரியாக்கள்தான். தகட்டைச் சுத்தமா கழுவிட்டுத் திரும்பவும் குடத்துக்குள்ள போட்டு வைக்கலாம். அந்தக் காலத்துல பல வீடுகள்ல செம்புக்குடம்தான். இன்னிக்கும் சில கிராமங்கள்ல
செம்பு குடத்துலதான் தண்ணி வைத்துக் குடிக்கிறார்கள். .

ஒரு மனிதன்.

 ஒரு மனிதன்....

எந்தக்குறையும் இல்லை அவனுக்கு... ஆனாலும் மனசில் நிம்மதி இல்லை. படுத்தால் தூக்கம் வரவில்லை. சிரமப்பட்டான்...
அவன் மனைவி பரிதாபப்பட்டு ஒரு யோசனை சொன்னாள்... "பக்கத்துலே உள்ள காட்டுலே ஒர் ஆசிரமம் இருக்கு... அங்கே ஒரு பெரியவர் இருக்கார்... போய்ப் பாருங்கள்".
ஆசிரமத்துக்குப் போனான். பெரியவரைப் பார்த்தான். "ஐயா... மனசுலே நிம்மதி இல்லே... படுத்தா தூங்க முடியலே".
அவர் நிமிர்ந்து பார்த்தார்...
"தம்பி... உன் நிலைமை எனக்குப்புரியுது. இப்படி வந்து உட்கார்".
பிறகு அவர் சொன்னார்:
"உன் மனசுக்கு சில ரகசியங்கள் தெரியக் கூடாது. தெரிந்தால் உன் நிம்மதி போயிடும்".
"அது எப்படிங்க?"
"சொல்றேன்... அது மட்டுமல்ல மனம் தேவையில்லாத சமயங்களிலே, தேவையில்லாத சுமைகளைச் சுமக்கறதும் இன்னொரு காரணம்"
"ஐயா... நீங்க சொல்றது..
எனக்கு புரியலே''
"புரியவைக்கிறேன்.... அதற்கு முன் ஆசரமத்தில் விருந்து சாப்பிடு.."
வயிறு நிறைய சாப்பிட்டான். பெரியவர் அவனுக்கு சுகமான படுக்கையைக் காட்டி, "இதில் படுத்துக்கொள்" என்றார். படுத்துக் கொண்டான்... பெரியவர் பக்கத்தில் உட்கார்ந்து கதை சொல்ல ஆரம்பித்தார்...
கதை இதுதான்:
ரயில் ஒன்று புறப்படப்போகிறது...
அவசர அவசரமாக ஒருவன் ஓடி வந்து ஏறுகிறான்.. அவன் தலையில் ஒரு மூட்டை.. ஒர் இடம் பிடித்து உட்கார்ந்தான். ரயில் புறப்பட்டது... தலையில் சுமந்த வந்த மூட்டையை மட்டும் அவன் கிழே இறக்கி வைக்கவில்லை..
எதிரே இருந்தவர் கேட்கிறார்:
"ஏம்ப்பா எதுக்கு அந்த மூட்டையைச் சுமந்துக்கிட்டு வர்ற.. இறக்கி வையேன்".
அதற்கு அவன் சொல்கிறான்... "வேணாங்க.. ரயில் என்னை மட்டும் சுமந்தா போதும் என் சுமையை நான் சுமந்துக்குவேன்.'
பெரியவர் கதையை முடித்தார். படுத்திருந்த நம்ம ஆசாமி சிரித்தான்.
"ஏன் சிரிக்கிறே?"
"பைத்தியக்காரனா இருக்கானே.. ரயிலை விட்டு இறங்கும் போது, மூட்டையை தூக்கிட்டு இறங்கினா போதாதா? அது அவனுக்கு தெரியவில்லையே.. யார் அவன்?" இயல்பாக கேட்டான் நிம்மதி தேடி வந்த ஆசாமி.
"நீதான்" என்றார் பெரியவர்..
"என்ன சொல்றீங்க?"
பெரியவர் சொன்னார்..
"வாழ்க்கை என்பதும் ஒரு
ரயில் பயணம் மாதிரிதான்... பயணம் பூராவும் சுமந்து கொண்டே போகிறவர்கள் நிம்மதியாக வாழமுடியாது. தேவைப்படுகிறதை மட்டும் மனசில் வைத்துக்கொள்".
அவனுக்கு தனது குறை மெல்லப் புரிய ஆரம்பித்தது... சுகமாக தூக்கம் வந்தது. தூங்க ஆரம்பித்து விட்டான்...
கண் விழித்த போது எதிரே பெரியவர் நின்று கொண்டிருந்தார். "எழுந்திரு" என்றார்
எழுந்தான்...
"அந்த தலையணையைத் தூக்கு" என்றார். தூக்கினான்... அடுத்த கணம் "ஆ"வென்று அலறினான்.
தலையணையின் அடியில் ஒரு நாகப் பாம்பு, சுருண்டுபடுத்திருந்தது.
"ஐயா என்ன இது?"
"உன் தலைக்கு வெகு அருகில் ஒரு பாம்பு.. அப்படி இருந்தும் நீ நிம்மதியாய் தூங்கி இருக்கிறாய்".
"அது ... அது எனக்குத் தெரியாது"...
"பாம்பு பக்கத்தில் இருந்த ரகசியம் உன் மனசுக்குத் தெரியாது... அதனால்
நிம்மதியாகத் தூங்கியிருக்கிறாய்".
அவன் புறப்பட்டான்,,
"நன்றி பெரியவரே...
நான் போய் வருகிறேன்".
"நிம்மதி எங்கே இருக்கிறது என்பதைப் புரிந்து கொண்டாயா?
"புரிந்து கொண்டேன்..
என் மனசுக்குள்ளேயே ஒளிந்து கொண்டிருக்கிறது. அறிவின் வெளிச்சத்தால் அதைக்தேடிக்கண்டு பிடித்து விட்டேன்.. 

பழமொழிகளும் அதன் உண்மையான அர்த்தமும்


 பழமொழிகளும் அதன் உண்மையான அர்த்தமும்...

⏩⏩⏩
#நல்ல மாட்டுக்கு ஒரு சூடு...
நல்ல மாட்டுக்கு ஒரு சுவடு.
சூடு வைக்கிறது இல்லங்க,சுவடு சுவடு. சந்தையில் மாட்டை வாங்கும்போது அது பதிக்கும் தடம் சுவடு. அழுத்தமான சுவட்டை பதிக்கும் மாடே அதிக பலம் வாய்ந்ததாக கருதுவார்கள். அதை விடுத்து ஒருவரை குத்தி காட்டுவதற்கு மட்டுமே இந்த பழமொழி இப்போ பயன்படுது.
🐢
#ஆமை புகுந்த வீடு விளங்காது...
கல்லாமை, இயலாமை, முயலாமை இல்லாதவங்க வீடு விளங்காதுனு பொதுவாக சொல்வாங்க, அதே நேரம் ஆம்பி(காளான்) பூத்த வீடும் உருப்படாதுனு சொல்வதுண்டு. ஆன ஆமை வந்தாலும் வராட்டியும் விளங்கறது தான் விளங்கும்.
🐍
#பாம்பைக் கண்டால் படையும் நடுங்கும்...
தனியா இருந்த நடுங்குவோம் சரி, நாலு பேர் இருந்தாலே போட்டு பொதைச்சிடுவொம், இதுல படை வேறயா. இது நாகாஸ்திரம் பற்றி சொல்லறது. மகாபாரத மற்றும் இராமாயண கதைகள் வரும் மிக சக்தி வாய்ந்த இந்த ஆயுதம் எதிரி படையை தெறிச்சு ஓட செய்யும். இராமரே ஒருமுறை இந்திரஜித்தின் நாகாஸ்திரத்தில் சிக்கி பின் கருடனால் காக்கப்படுவார்.
🐕
#கல்ல கண்டால் நாயைக் காணும், நாயைக் கண்டா கல்லை காணும்..
கல்லைக் கண்டால் நாயகனைக் காணோம், நாயகனைக் கண்டால் கல்லைக் காணோம்.
இங்க நாயகன் என்பது திருமாலை குறிக்கும், மருவி வருவதற்கும் ஒரு அளவில்லையா. நாயகன் நாயாவதா.
🐨
#சிவ பூஜையில் கரடி...
முக்கியமான வேலை செய்யும் போது யாரவது குறுக்க வந்துட்ட போதும் கரடியாக்கிடுவோம். ஆனால் மன்னர் காலத்தில் சிவபூஜை செய்யும் போது கரடி வாத்தியம் வாசிக்கச் செய்வர். அதான் சிவ பூசையில் கரடி. இசைக்காக சொன்னது, இப்போது தொந்தரவுக்காக பயன்படுகிறது.
🐕
#குரைக்கிற நாய் கடிக்காது:
குழைகிற நாய் கடிக்காது
குரைக்கிற நாய் ஏன் கடிக்காது? ஒரு தடவ நாய்க்கு அன்பா சாப்பாடு போட்டு வருடி விட்டா, அதுக்கப்புறம் குழைஞ்சி கிட்டே உங்கள சுத்தும். அன்பு காட்டறவன யாரும் அடிக்கவும் மாட்டாங்க, நாய் கடிக்கவும் செய்யாது.
🐎
#மண்குதிரையை நம்பி ஆற்றில் இறங்காதே....
மங்குதிரையை நம்பி ஆற்றில் இறங்காதே
குதிர் என்றால் ஆற்றில் இருக்கும் மண் திட்டுகள், அது இருக்குதுனு நம்பி எறங்குனா ஆபத்து.
இன்னொரு பார்வை : மங்குதிரை- வானம் மங்கியிருக்கிறது என்றால் மழை வருவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம், அதனால் ஆற்றில் வெள்ளம் வரக்கூடும் எனவே இறங்கக்கூடாது. மங்கு திரை என்றால் கானல் நீர் என்றும் அர்த்தம் வரும்.
🐘
யானைக்கு ஒரு காலம் வந்தால் பூனைக்கு ஒரு காலம் வரும்:
ஆனை = ஆ + நெய் = பசுவின்(ஆவின்) நெய். பூனை = பூ +நெய் = பூவின் நெய் (தேன்) அதாவது சிறு வயதில் பசுவின் நெய் சாப்பிடுவது நல்லது.
அதே நெய் வயதான காலத்தில் சாப்பிட உடல் ஒத்துக் கொள்ளாது.ஆனால் தேன் சாப்பிடலாம். ஆனாலும் ரொம்ப ஆடக்கூடாது, எல்லாருக்கும் ஒரு காலம் வரும் என்கிற அர்த்தமே நல்லருக்கிறது.
🐴
கழுதை கெட்டால் குட்டிச் சுவர்:
கழுதையின் தோல் கெட்டால் குட்டிச் சுவர். பொதி சுமக்கும் கழுதை தோல் அரிப்பால் அவதிப்பட்டால் தன் உடலை போய் சுவத்தில தேய்க்கும். அது தான் குட்டி சுவர், மற்றபடி இளைஞர்கள் ஓய்வு எடுக்கும் இடமல்ல.
🐴
#கழுதைக்குத் தெரியுமா கற்பூரவாசம்?
கழு தைக்க தெரியுமாம் கற்பூர வாசம். கழு என்பது ஒரு வகையான கோரைப்புல். அதுல பாய் தைக்கும் போது கற்பூர வாசனை அடிக்கும். குழந்தைகளை அந்த பாயில் படுக்கப் போட்டால் பூச்சிகள் கிட்டே வராது.
🐴
#வரவர மாமியார் கழுதை போல் ஆனாள்....
கயிதை என்பது ஊமத்தம்காயை குறிக்கும். ஊமத்தம்பூ அதன் ஆரம்ப பருவத்தில் மென்மையாய் வளர்ந்து அழகாய் பூத்து கடைசியில் காயில் கடின விஷமாய் முள்ளாய் மாறும்.

#பிரபஞ்சத்தின்ரகசியம்:

  #பிரபஞ்சத்தின்ரகசியம் : நீ எதை விதைக்கிறாயோ, அதையே அறுவடை செய்வாய்! ​இந்த உலகம் ஒரு பெரிய #கண்ணாடி . நீ எதைக் காட்டுகிறாயோ, அதையே அது பிரத...