Tuesday, 31 March 2026

சிற்றின்பத்திற்கும் பேரின்பத்திற்கும் என்ன வித்தியாசம்


 சிற்றின்பத்திற்கும் பேரின்பத்திற்கும் என்ன வித்தியாசம் ?*

*சிற்றின்பம் - இது நிலையற்றது*
*பேரின்பம் - இது நிலையானது*
இந்த இரண்டிற்கும் உள்ள வேறுபாடுகள் பற்றிப் பார்ப்போம்
1. படைப்பினால் ஈர்க்கப் பட்டால் சிற்றின்பம்.
படைத்தவனால் ஈர்க்கப் பட்டால் பேரின்பம்.
2. படைப்புகளை அனுபவித்தால் சிற்றின்பம்.
படைப்புகளை ஆராதித்தால் பேரின்பம்.
3. படைப்புகளை படைப்புகளாய் கண்டால் சிற்றின்பம்.
படைப்புகளில் படைத்தவனைக் கண்டால் பேரின்பம்.
4. என்னால் தான் இந்த வாழ்க்கை எனில் சிற்றின்பம்.
இறைவனால் தான் இந்த வாழ்க்கை எனில் பேரின்பம்.
5. நான் இந்த உடல் என எண்ணினால் சிற்றின்பம்.
நான் இந்த உயிர் என எண்ணினால் பேரின்பம்.
6. அமைதி ஆனந்தம் சிறிதே பெற்று பின் இழந்தால் சிற்றின்பம்.
அமைதி ஆனந்தத்தை நித்தியமாகப் பெற்றால் பேரின்பம்.
7. செய்வதெல்லாம் தனக்காக என்றால் சிற்றின்பம்.
செய்வதெல்லாம் இறைவனுக்காக என்றால் பேரின்பம்.
8. செய்வது நான் என எண்ணினால் சிற்றின்பம்.
செய்வது இறைவன் என எண்ணினால் பேரின்பம்.
9. புறப் பொருட்களில் நிகழ்வில் சுகமுறுவது சிற்றின்பம்.
அகத்திலேயே நித்திய சுகம் பெறுவது பேரின்பம்.
10. இன்பத்தை அடைந்தாலும் மீண்டும் வேண்டுவது திருப்திஅடையாதது
சிற்றின்பம்.
வேறு எதனையும் விரும்பாதது பூரணமானது பேரின்பம்.
11. நிரந்தர பேரின்பத்தை மறைப்பது சிற்றின்பம்.
நிலையற்ற சிற்றின்பத்திற்கு அப்பாற்பட்டது பேரின்பம்.
12. உடலோடு மனதை தொடர்புப் படுத்துவது சிற்றின்பம்.
உயிரோடு மனதை இணைப்பது பேரின்பம்.
13. இன்பம் என்கிற வடிவிலிருக்கும் துன்பமே சிற்றின்பம்.
துன்பம் போல் அறியப்பட்டு இன்பமாவது பேரின்பம்.
14. எங்கோ இருக்கிறான் இறைவன் எனில் சிற்றின்பம்.
எங்கும் இருக்கிறான் இறைவன் எனில் பேரின்பம்.
15. பலவீனம், நோய், துன்பம், மரணம் தருவது சிற்றின்பம்.
மரணமிலாப் பெருவாழ்வைத் தருவது பேரின்பம்.
16. பயம், சஞ்சலம், சந்தேகம், குற்ற உணர்வு தருவது சிற்றின்பம்.
பயமறியாதது, ஸ்திரமானது, தூய்மையானது பேரின்பம்.
17. சிறு உணர்ச்சிகளில் இன்பம் அடைவது சிற்றின்பம்.
எல்லையற்ற பிரம்மத்தில் கலப்பது பேரின்பம்.
18. பிறரை தனக்காக பயன்படுத்துவது சிற்றின்பம்.
தன்னை பிறருக்காக அர்ப்பணிப்பது பேரின்பம்.
19. அளவுடையது, முடிவுடையது சிற்றின்பம்.
அளவற்றது, முடிவிலாதது பேரின்பம்.
20. அறிவை மழுங்கடிப்பது சிற்றின்பம்.
அறிவைப் பிரகாசிக்கச் செய்வது பேரின்பம்.
21. அழகை மட்டும் ஆராதித்தால் சிற்றின்பம்.
அழகற்றதும் அழகும் ஒன்றானால் பேரின்பம்.
22. பயன் கருதி செயல் புரிந்தால் சிற்றின்பம்.
பயன் கருதாது செயல் புரிந்தால் பேரின்பம்.
23. முதலில் இனித்து பின் கசப்பது சிற்றின்பம்.
முதலில் கசந்து பின் என்றும் இனிப்பது பேரின்பம்.
24. இரக்கமற்றது, ஒழுக்கமற்றது சிற்றின்பம்.
கருணையுடையது, தர்மமானது பேரின்பம்.
25. உடலாய் அனைத்தையும் கண்டால் சிற்றின்பம்.
உயிராய் அனைத்தையும் கண்டால் பேரின்பம்.
26. புலன்களில் இன்பம் துய்ப்பது சிற்றின்பம்.
புலன்களுக்கு அப்பால் சென்றால் பேரின்பம்.
27. மனம் உலகில் அலைந்தால் சிற்றின்பம்.
மனம் இறைவனில் ஒடுங்கினால் பேரின்பம்.
28. மரண பயம் ஏற்படுத்துவது சிற்றின்பம்.
மரணத்தையும் வெல்வது பேரின்பம்.
29. மனமாய் இருந்தால் சிற்றின்பம்.
மனதைக் கடந்தால் பேரின்பம்.
30. வேறு வேறாய்க் கண்டால் சிற்றின்பம்.
எல்லாம் ஒன்றெனக் கண்டால் பேரின்பம்.
31. பகுதியாய்க் கண்டால் சிற்றின்பம்.
மொத்தமாய் கண்டால் பேரின்பம்.
32. அகங்காரம் கொண்டால் சிற்றின்பம்.
அகங்காரம் துறந்தால் பேரின்பம்.
33. தசையில் சுகம் பெறுவது சிற்றின்பம்.
அன்பில் தன்னை இழப்பது பேரின்பம்.
34. ஆண் பெண்ணில் இன்புறுவது சிற்றின்பம்.
ஆண் பெண்ணை வணங்குவது பேரின்பம்.
35. துய்க்கும் நேரத்தில் மட்டும் இருப்பது சிற்றின்பம்.
துய்த்து விட்டால் நீங்காதது பேரின்பம்.
36. ஜீவராசிகளால் தர முடிந்தது சிற்றின்பம்.
இறைவனால் தரப் படுவது பேரின்பம்.
37. உலகைப் பற்றினால் சிற்றின்பம்.
இறைவனைப் பற்றினால் பேரின்பம்.
38. பிறர் நலனைக் காணாதது சிற்றின்பம்.
தன் நலம் கொள்ளாதது பேரின்பம்.
39. இன்பம் இல்லாத இன்பம் சிற்றின்பம்.
இன்பமான இன்பமே பேரின்பம்.
40. அஞ்ஞானம் விரும்புவது சிற்றின்பம்.
ஞானம் விரும்புவது பேரின்பம்.
41. பெற்று மகிழ்வது சிற்றின்பம்.
கொடுத்து மகிழ்வது பேரின்பம்.
42. சக்தியை இழப்பது சிற்றின்பம்.
சக்தியாய் மாறுவது பேரின்பம்.
43. பற்றுக் கொள்வது சிற்றின்பம்.
பற்றற்று இருப்பது பேரின்பம்.
44. மாறுவது, தாவுவது சிற்றின்பம்.
மாறாதது நிலைத்தது பேரின்பம்.
45. நிலையற்றது சிற்றின்பம்.
நிரந்தரமானது பேரின்பம்.
46. உலக வாழ்க்கை வாழ்வது நிலையற்ற சிற்றின்பம்
இறைவன் திருவடியை அடைவது நிலையான பேரின்பம்
47. இல்லற வாழ்க்கை வாழ்வது சிற்றின்பம்
இல்லறத்தில் இருந்து கொண்டு பரம் பொருளை நினைத்து வாழ்வது பேரின்பம்
பரமன் ஆனந்தமயமானவன். அவனை தெரிந்து கொண்டால் துன்ப கலப்புடன் அவ்வப்பொழுது நாம் அனுபவிக்கும் சிற்றின்பங்களை வாழ்வு முழுதும் நீடிக்கும் பேரின்பமாக மாற்றிக்கொள்ள முடியும்.

ஒன்று முதல் பத்து எண்கள் வரைக்கும் ஸ்ரீராமருக்கும் உள்ள தொடர்பு.


 ஒன்று முதல் பத்து எண்கள் வரைக்கும் ஸ்ரீராமருக்கும் உள்ள தொடர்பு.

1. ஏக (1) பத்தினி விரதன்.
2 இரண்டு மகன்களுக்கு (லவ, குசன்) தந்தையானவன்.
3 மூன்று அன்னையர்களான கௌசல்யா, சுமித்திரை, கைகேயியின் மடிகளில் வளர்ந்தவன்.
4 தசரதனின் நான்கு புதல்வர்களில் ஒருவன்.
5 ஐம்புலன் அடக்கமுள்ள சீதாதேவியின் துணைவன் மற்றும் குஹனை தன் ஐந்தாவது சஹோதரானாக ஏற்றவன்.
6.ஆறெழுத்து ராமாயணமும் ஸ்ரீராமஜெயமும் ஆருயிர்களின் வாழ்க்கைக்கு ஊட்ட மருந்தாக இருக்கின்றது.
7 ஏழு காண்டங்களான பால, அயோத்யா, ஆரண்ய, கிஷ்கிந்தா, சுந்தர, யுத்த, உத்திர காண்டங்கள் அவரோடு தொடர்புடையவை.
8.எட்டெழுத்து எழிலான சுந்தர காண்டத்தின் நாயகன் ஆஞ்சநேயரின் தோழன்.
9. நவமி (9) திதியில் சூர்ய குலத்தில் மனிதனாக அவதரித்தவன்.
10. பத்து தலை அரக்கனான ராவணனை அழித்தவன்.

கேது எனும் பாம்பு... மனிதர்களுக்கு கூற வரும் கருத்து...


 கேது எனும் பாம்பு... மனிதர்களுக்கு கூற வரும் கருத்து...

ஆத்மாவை உடல் எனும் போர்வையைக் கொண்டு மறைத்துள்ள மனித உடலினால் ஆன மனித பொம்மைகளின் மீது ...பற்று வைக்காதே.
மனித வாழ்க்கை எனும் பொம்மலாட்டத்தின் மீது ஆசை கொள்ளாதே.
மாயை எனும் நுட்பத்தினால் உண்டாக்கப்பட்ட மனித உடலின் தன்மையின் உண்மையை அறிய முயற்சி செய்.
அதாவது நான் என்பது என்ன.?நான் யார்.?
நான் என்பது உடலா மனமா
என்னிடம் இருக்கக்கூடிய அறிவா செல்வமா இது போன்ற கேள்விகளுடன் நான் யார்.? என்பதிலிருந்து தொடங்கு.
மனித வாழ்க்கையின் தன்மையையும் அதற்குள் ஒளிந்திருக்கும் உண்மையை அறி.
அதாவது
நான் எங்கிருந்து வந்தேன்
ஏன் இவர்களுடன் இருக்கிறேன்
தனியாக எங்கே செல்ல போகிறேன்
என்னுடைய இந்த வாழ்க்கையின் நோக்கம் தான் என்ன.
சுடாமல் தீயை உணர முடியாது .
படாமல் காயம் ஏற்படாது.
காயம் உண்டாகாமல் காயத்திற்கு மருந்து தேட முடியாது.
கேள்வி கேட்காமல் பதில் கிடைக்காது.
மனித உடலினாலும் மனித வாழ்க்கையினாலும் உண்டாக்கப்பட்ட மாயையின் தன்மையை அறி.
முதலில் நம்பு.
நம்பி கெடு.
நம்பாமல் கெடாதே.
நம்பி கெட்டால் தான்
மனித பொம்மைகளின் உண்மை நிலவரம் தெரியும்.
உண்மை தெரிந்தால் தான்
ஞானம் பெற முடியும்.
ஞானம் பிறந்தால் தான்
பித்து பிடித்தவனை போல அலைந்து சித்தம் தெளிந்து
இனியொரு பிறவி வேண்டாம்
மோட்சம் தான் வேண்டும்
என்கிற தீவிரமான சிந்தனையாலும் பயிற்சியாலும் முயற்சியாலும்.
ஆத்மாவை எல்லை இல்லாத முடிவற்ற பிரபஞ்சத்துடன் இணைத்துக் கொள்ள முடியும்.
மனிதனின் உடலுக்குள் ஒளிந்திருக்கும் ஆத்மாவை உன்னைத் தவிர யாராலும் உணர்ந்து கொள்ள முடியாது.
ஏனெனில்..
பட்டால் தான் பாடம். கெட்டால் தான் ஞானம். அதை...உணர்ந்தால்தான் மோட்சம்.
பந்தயத்தில் வெற்றி பெறுபவருக்கே பரிசு என்பது போல..
ஞானத்தை முகர்ந்து உணர்ந்து பித்து பிடித்து பைத்தியம் தெளிந்து பக்குவம் அடைந்தவர்களுக்கே மோட்சம்.
என்னுடைய முந்தைய பதிவில்
ராகு மனிதர்களைப் பற்றி கூறும் கருத்து என்கிற தலைப்பில் எழுதி உளளேன்.
அதையும் படித்தீர்களேயானால்
ராகுவின் பாவத்துவமும்
கேதுவின் சுபத்துவமும்
புரியவரும்.
உங்கள் ஜாதக
நிலைப்பாட்டை அறிய
ஜோதிடர் 

பங்குனி_உத்திரம்_விரதம்

 

#

பங்குனி_உத்திரம்_விரதம் – முருகன் அருளைப் பெற கடைபிடிக்க வேண்டிய முழுமையான விதிமுறைகள்
தமிழ் மாதங்களில் தெய்வீக சக்தி நிரம்பிய மாதமாக விளங்குவது பங்குனி மாதம். இந்த மாதத்தில் வரும் மிக முக்கியமான திருநாள் — பங்குனி உத்திரம்.
இந்நாளில் பகவான் முருகப் பெருமான் அருளைப் பெற ஏராளமான பக்தர்கள் விரதம் இருந்து வழிபடுவது பாரம்பரியமாக உள்ளது.
இந்த நாள் சாதாரண திருநாள் அல்ல —
இது தெய்வ திருமணங்களின் திருநாள்!
💍 பங்குனி உத்திரத்தின் தெய்வீக சிறப்பு
இந்த புண்ணிய நாளில் பல தெய்வ திருமணங்கள் நடைபெற்றதாக புராணங்கள் கூறுகின்றன:
மீனாட்சி அம்மன் – சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்
முருகன் – தெய்வானை திருமணம்
ஸ்ரீ ராமர் – சீதா கல்யாணம்
ரங்கநாதர் – ஆண்டாள் திருமணம்
இதனால் இந்த விரதம்:
“கல்யாண விரதம்”, “திருமண விரதம்”, “கல்யாண சுந்தர விரதம்” என அழைக்கப்படுகிறது.
🌸 விரதத்தின் பலன்கள்
பங்குனி உத்திர விரதத்தை பக்தியுடன் கடைபிடித்தால்:
திருமணத் தடைகள் நீங்கும்
நல்ல வாழ்க்கை துணை கிடைக்கும்
பாவங்கள் குறையும்
துன்பங்கள் விலகும்
செழிப்பு, அமைதி அதிகரிக்கும்
🪔 பங்குனி உத்திரம் விரத விதிமுறைகள் (விரிவாக)
🧘 1. உண்மையான விரதம் – மனக்கட்டுப்பாடு
பலர் “உணவு தவிர்ப்பதே விரதம்” என்று நினைக்கிறார்கள்.
ஆனால் அது முழுமையான உண்மை அல்ல.
உண்மையான விரதம் என்பது:
மனதை இறைவனிடம் நிலைநிறுத்துவது
சிந்தனையை தூய்மைப்படுத்துவது
முருகனின் நாமத்தை நினைப்பது
🍃 2. உணவு முறைகள்
விரதம் இருப்பவர்கள்:
முடிந்தால் 3 வேளையும் உணவை தவிர்க்கலாம்
இல்லையெனில் ஒரு வேளை மட்டும் உணவு தவிர்க்கலாம்
அதுவும் முடியாவிட்டால்:
பழம்
காய்கறி
சமைக்காத உணவுகள்
இவற்றை உட்கொண்டு விரதம் இருக்கலாம்.
🍛 3. அன்னதானத்தின் முக்கியம்
நாம் சாப்பிட வேண்டிய உணவை:
மற்றவர்களுக்கு தானமாக வழங்குவது மிகப் பெரிய புண்ணியம்
🛕 4. கோயிலும் வீட்டும் – இரண்டிலும் வழிபாடு
சிலர் கோயிலில் மட்டும் வழிபடுவார்கள்
சிலர் வீட்டில் மட்டும் வழிபடுவார்கள்
ஆனால் சிறந்தது:
இரண்டிலும் வழிபடுதல்
📿 5. நாமஜபம் மற்றும் பூஜை
முருகனின் திருநாமங்களை தொடர்ந்து சொல்ல வேண்டும்
பூஜை செய்து மனதை ஒன்றாக வைத்துக் கொள்ள வேண்டும்
🌺 6. அலங்காரம் மற்றும் நைவேத்தியம்
முருகனுக்கு:
செவ்வரளி மலர் அலங்காரம்
பால், பழம், தேன்
தினைமாவு அல்லது இனிப்பு
முடியாவிட்டால்:
வெற்றிலை, பாக்கு
வாழைப்பழம்
📖 7. கந்தசஷ்டி கவசம் பாராயணம்
இந்த நாளில்
“கந்தசஷ்டி கவசம்” பாராயணம் செய்தல் மிக முக்கியம்.
🤝 8. கோபம் தவிர்த்து அன்புடன் நடந்து கொள்வது
கோபம் கொள்ளக்கூடாது
கடுமையான வார்த்தைகள் பேசக்கூடாது
அனைவரையும் முருகனாக நினைத்து நடந்து கொள்ள வேண்டும்
🕉️ 9. மற்ற தெய்வங்களும் வழிபாடு
இந்த நாளில்:
சிவன் – பார்வதி
ராமர் – சீதை
ஆண்டாள் – ரங்கநாதர்
இவர்களையும் வழிபடலாம்.
🛕 10. அறுபடை வீடு தரிசனம்
முடிந்தால், முருகனின்
அறுபடை வீடுகள் தரிசனம் செய்வது மிகச் சிறப்பு.
📅 இந்த ஆண்டின் பங்குனி உத்திரம்
இந்த ஆண்டு
ஏப்ரல் 1, புதன்கிழமை
பங்குனி உத்திரம் கொண்டாடப்படுகிறது.
இந்த நாளில் பல கோயில்களில்:
திருக்கல்யாண உற்சவங்கள்
சிறப்பு பூஜைகள்
நடைபெறும்.
🌟 இந்த விரதத்தின் ஆழ்ந்த அர்த்தம்
பங்குனி உத்திரம் —
ஒரு விரதம் மட்டும் அல்ல…
ஒரு ஆன்மிக பயணம்!
மனம் சுத்தமாவதற்கான நாள்
அன்பு வளர்க்கும் நாள்
இறைவனுடன் இணையும் நாள்

மூலாதாரம் எங்கே இருக்கின்றது? குண்டலினி என்றால் என்ன?

 மூலாதாரம் எங்கே இருக்கின்றது? குண்டலினி என்றால் என்ன?

1. தீமை வரும்போது கண்ணின் நினைவை எங்கே கொண்டு போகவேண்டும்?
சில சமயங்களில்.., நாம் எவ்வளவு தெளிவாக இருந்தாலும் நம்முடைய பையன் நான்கு தடவை அடம்பிடித்தால் போதும். இந்தப் பற்று இங்கே வந்துவிடுகின்றது.
அது, நம் எண்ணத்தை ஆன்மாவிலே மறைத்து விடுகின்றது. உயர்ந்த எண்ணத்தைப் பெறும் தகுதியை இழக்கச் செய்கின்றது.
இந்த நஞ்சான உணர்வு வந்து ஊடுருவப்படும் பொழுது, இது தன் இரையை எடுத்துக் கொள்கின்றது.
இந்த உடல் பற்றின் உணர்வுகள், அந்த அணுவின் வளர்ச்சியும் நமக்குள் தொடர்ந்து விடுகின்றது. இதைத் துடைப்பதற்கு அவ்வப்பொழுது ஆத்ம சுத்தி செய்து எண்ண வலுவைக் கொண்டு வரவேண்டும்.
அதற்குத்தான், நாம் ஒவ்வொரு நிமிடமும் “ஈஸ்வரா” என்று நம் உயிரிடம் எண்ணத்தைச் செலுத்திப் பழகவேண்டும்.
நம் கண்ணின் நினைவை அங்கே புருவ மத்திக்குக் கொண்டு போகவேண்டும்.
கூட்டுத் தியானத்தில் பெறும் அந்த மகரிஷிகளின் உணர்வைக் கண்ணின் நினைவிற்குக் கொண்டு வந்து உயிருடன் இணைக்க வேண்டும்.
மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற்று அது எங்கள் உடல் முழுவதும் படரவேண்டும் என்று உடலிலுள்ள அணுக்களில் இணைக்க வேண்டும்.
2. மூலாதாரம் "எங்கே இருக்கின்றது?"
1. மூலம் "உயிர்",
2. "எடுக்கும் உணர்வுகள்" ஆதாரம்.
இவ்வாறு காட்டியதைத்தான், இந்தக் குண்டலினி யோகக்காரர்கள் “ஆக்ஞை” இடப்பட்டு என்று சொல்வார்கள்.
நாம் எந்த உணர்வைச் செலுத்துகின்றோமோ, அது நமக்குள் அணுக்களில் “மூலாதாரத்தில்” உடலின் அணுக்களில் இயக்குகின்றது.
உடலின் உறுப்புக்களுக்கு மூலம் அணுக்களின் தன்மை. மூலாதாரம் இங்கே “உயிர்”
இதைத்தான், “மூலாதாரத்தில் மூண்டெழும் கனலைக் காலமறிந்து” என்கிற பொழுது என்ன அர்த்தம்?
நம்மிடத்தில் தீய அணுக்கள் உண்டு. "அதற்கு வளர்ச்சி இல்லாதபடி" “மூண்டெழும் கனலைக் காலமறிந்து.., கருத்துடன் செயல்பட வேண்டும்.., என்றுதான் அந்த இடத்தில் காட்டப்பட்டது.
இவர்கள் என்ன செய்கின்றார்கள் என்றால், அங்கே கட்டளை இடப்படும் பொழுதுதான், ஆக்ஞை என்ற நிலையைக் கொண்டு வருகின்றார்கள்.
அப்பொழுது ஆக்ஞை இட்டுப் பரவுலகத்தை "மேலே உச்சிக்குக் கொண்டு போய்.., இதன் வழிகொண்டு மோட்ச லோகத்திற்குக் கொண்டு போ..," என்று சொல்கின்றார்கள்.
மூலாதாரம்.., இந்த உடல் முழுவதற்கும் இங்கே கீழே இழுக்கப்பட்டு.., இந்த உணர்வுகள் சமைக்கப்பட்டு இந்த உணர்வின் தன்மை இரத்த நாளங்களில் இருந்து பிரிக்கப்படுகின்றது என்று இவர்களின் அனுமானம்.
“மூலாதாரம் கீழே இருக்கின்றது” என்று கொண்டு போகின்றார்கள்.
ஆனால், நமக்கு மூலம் உயிர்.
நாம் எடுக்கும் உணர்வுகள் நமக்கு ஆதாரம்.
இந்த ஆதாரத்தை நமக்குள் மறைந்திருக்கும் ஒவ்வொரு அணுக்களுக்கும் சேர்ப்பிக்க வேண்டும்.
கண்ணின் நினைவு கொண்டு உயிருடன் ஒன்றி, துருவ நட்சத்திரத்தின் உணர்வினை நம் உடலை உருவாக்கிய எல்லா அணுக்களுக்கும் சேர்க்கவேண்டும். "இதுதான் குண்டலினி".
அந்த உணர்வின் தன்மை வலுப்பெறும் பொழுது,
"தீமைகளைப் பிளக்கின்றது". உயிருடன் ஒன்றிய ஒளியின் சரீரம் பெறுகின்றோம்.

அருள் ஞானச் சக்கரத்தை உற்றுப் பார்த்து நாம் அன்றாடம் சொல்ல வேண்டியது


 அருள் ஞானச் சக்கரத்தை உற்றுப் பார்த்து நாம் அன்றாடம் சொல்ல வேண்டியது

1. குருவின் அருளால் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் "எங்கள் வீடு முழுவதும் படர்ந்திட" அருள்வாய் ஈஸ்வரா குருதேவா
2. குருவின் அருளால் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் "எங்கள் தெரு முழுவதும் படர்ந்திட" அருள்வாய் ஈஸ்வரா குருதேவா
3. குருவின் அருளால் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் "எங்கள் ஊர் முழுவதும் படர்ந்திட" அருள்வாய் ஈஸ்வரா குருதேவா
4. குருவின் அருளால் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் "எங்கள் நாடு முழுவதும் படர்ந்திட" அருள்வாய் ஈஸ்வரா குருதேவா
5. குருவின் அருளால் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் "இந்த உலகம் முழுவதும் படர்ந்திட" அருள்வாய் ஈஸ்வரா குருதேவா
6. குருவின் அருளால் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் இந்த உலகம் முழுவதும் படர்ந்து உலக மக்கள் அனைவரும் அந்த அருள் சக்தி பெற்று "உலக மக்கள் அனைவரும் ஒன்றுபட்டு வாழ்ந்திட" அருள்வாய் ஈஸ்வரா குருதேவா
7. குருவின் அருளால் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் "இந்தக் காற்று மண்டலம் முழுவதும் படர்ந்து" உலக மக்கள் அனைவரும் மகிழ்ந்து வாழ்ந்திட... மகரிஷிகளின் அருள் வட்டத்தில் இணைந்து வாழ்ந்திட அருள்வாய் ஈஸ்வரா குருதேவா.

சரஸ்வதி வழிபட்ட திருத்தலங்கள்‌ | #சரஸ்வதி


 சரஸ்வதி வழிபட்ட திருத்தலங்கள்‌ | #சரஸ்வதி

வழிப்பட்ட தலங்களில்‌ முதன்மை யானது காளத்தியாகும்‌ | ஒரு முனிவரின்‌ சாபத்தால்‌ ஊமையாகிப்போன சரஸ்வதி இங்கு வந்து
வழிபட்‌ டாள்‌ | அவள்‌ இங்கு சரஸ்வதி தீர்த்தம்‌ என்ற பெயரில்‌ காளத்தீசுவரர்‌ ஆலயத்திற்குள்ளேயே ஒரு தீர்த்‌தத்தை உண்டாக்கி அதில்‌ நீராடி சிவவழிபாடு செய்து வந்தாள்‌ | அதனால்‌ அவளுடைய ஊழைைத்துவம்‌ நீங்கி விட்டது | மேலும்‌ பலர்‌ இங்குவந்து இதில்‌ மூழ்கி இதனை அருந்தியதால்‌ தனது ஊமைத்தன்மை நீங்கி அறிவு பெற்றுள்ளனர்‌ |
இங்குள்ள தீர்த்தத்தை அருந்தினால்‌ நல்ல
கல்வியறிவு உண்டாகும்‌ என்று நம்புகின்றனர்‌ |
வாக்தேவி ஓசையாக வெளிப்படும்போது #வாணி என்றும்‌, அறிவாக வெளிப்படும்போது சரஸ்‌வதி என்றும்‌ அழைக்கப்படுகின்றாள்‌ | #பிரம்மதேவனின்‌ வலப்புறம்‌
அவள்‌ வாணியாகவும்‌ இடது புறத்‌தில்‌ சரஸ்வதியாகவும்‌ வீற்றிருக்கின்றாள்‌ | இந்த இரண்டு உருவத்துடனும்‌
அவள்‌ #சிவபெருமானை பெருவேளூரில்‌ வழிபட்டாள்‌ |
அதனால்‌ அந்த சிவ லிங்கம்‌ வாணிசரஸ்வதீசுவரர்‌ அழைக்கப்படுகிறது | #பெருவேளூர்‌
#தஞ்சை மாவட்டம்‌ திருப்பூந்துருத்தி புஷ்வனேசுவரர்‌ ஆலயத்தில்‌ கருவறைக்‌ கோட்ட தேவதையாக சரஸ்வதி அமைந்துள்ளதைக்‌ காண்கிறோம்‌ | இவள்‌ மேலிரண்டு கரங்களில்‌ அட்சமாலையுடன்‌ சுவடி யையும்‌
முன்னிரு கரங்களில்‌ அபய ஊரு முத்திரை
களையும்‌ கொண்டுள்ளாள்‌ | #திருப்பூந்துருத்தி |
#இராமேசுவரத்தில்‌ சரஸ்வதி மூன்று வடிவங்‌ களில்‌ இருந்து வழிபட்டு அமைத்த தீர்த்தங்கள்‌ முறையே காயத்திரி, சாவித்திரி, சரஸ்வதி #தீர்த்தங்கள்‌ என்ற பெயரில்‌ வரிசையாக உள்ளன | #ஸ்ரீஜாதகசமுத்ரா |
வாக்தேவி, மூன்று காலங்களில்‌ (சந்தியா தேவதையாக விளங்குகையில்‌) காயத்திரி, சாவித்திரி சரஸ்வதி என்ற மூன்று வடிவங்களைக்‌ கொள்கின்‌றாள்‌ | இந்த மூன்று வடிவுடன்‌ அவள்‌ வழிபட்ட தலம்‌ #திருவீழிமிழலையாகும்‌ |
இங்குள்ள மூன்று லிங்கங்‌ கள்‌ காயத்ரீஸ்வரர்‌,
சாவித்திரீஸ்வரர்‌, சரஸ்வதீசுவரர்‌ என்று அழைக்கப்படுகின்றன |
திருநெய்த்தானம்‌ சரஸ்வதி பூசித்துப்‌ பேறு பெற்றதலமாகும்‌ | இது #திருஐயாறு சப்தத்தானத்‌ தலங்‌ களில்‌ ஒன்றாகும்‌. இங்கு சரஸ்வதி அமைத்த தீர்த்தம்‌ உள்ளது |
குருகாவூரில்‌ -பிரமதேவன்‌ வழிபட்டபோது அவனுடன்‌ சரஸ்வதியும்‌ சிவலிங்க பூசைசெய்தாள்‌ | அங்கு அவள்‌ உண்டாக்கிய தீர்த்தம்‌ சரஸ்வதி தீர்த்தம்‌ இந்நாளில்‌ (வடக்குக்குளம்‌) என்று அழைக்‌கப்படுகின்றது |
கல்வி கரையிலா கச்சி என்று புகழப்‌ பெறும்‌ காஞ்சியில்‌ அமைந்திருப்பது கச்சபேசுவரர்‌ ஆலயமாகும்‌ |
இது சரஸ்வதி சிவபூசைச்‌ செய்து பேறுபெற்றத்‌ தலங்களில்‌ ஒன்றாகும்‌ |
இங்குச்‌ சரஸ்வதி தேவிக்கான தனிச்‌ சந்நிதி உள்ளது |
மேலே சொல்லப்பட்ட விஷயங்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் மேலும் ஒருவருக்கு பயனுள்ளதாக்குங்கள் | ஷேர் செய்யுங்கள் | நன்றி! |

*சக்கரை நோயை இந்த நாட்டை விட்டு அடித்துத் துரத்தும் வேளை வந்து விட்டது*

 *சக்கரை நோயை இந்த நாட்டை விட்டு அடித்துத் துரத்தும் வேளை வந்து விட்டது* சக்கரை நோயை வைத்து இந்தியாவில் மட்டுமே *700 மருந்து நிறுவனங்கள்* (க...