வெள்ளி மலை மன்னவா
வேதம் நீ அல்லவா
முன்னோர்க்கும் முன்னவா
தமிழ் தோற்றுவித்த
முன்னோனும் நீயல்லவா
அறிவு எனும் வேலெடுத்து
அருள் மறுக்கும்
அரக்கன் எனும் குணக்கேட்டை
வென்று காட்டி
மாயையெனும் மயிலையும்
சர்ப்பமெனும் மும்மலத்தையும் அடக்கி
அதன் மீது அமர்ந்து
பக்தர்க்கும் அருளும்
அறுமுகா குருபரனே
குகனே திருஅருள்குமரா
பெரும் ஞானம் தந்தருளி
பேரின்பம் நல்கும்
தூய நல்திருவடி கொண்ட
கிருபாகரனே
நின் பொன்னடிகள்
சரணம் சரணம் சரணம்

No comments:
Post a Comment