Saturday, 4 April 2026

*சக்கரை நோயை இந்த நாட்டை விட்டு அடித்துத் துரத்தும் வேளை வந்து விட்டது*

 *சக்கரை நோயை இந்த நாட்டை விட்டு அடித்துத் துரத்தும் வேளை வந்து விட்டது*

சக்கரை நோயை வைத்து
இந்தியாவில் மட்டுமே
*700 மருந்து நிறுவனங்கள்* (கம்பெனிகள்) ஆண்டுக்குப்
*பல இலட்சம் கோடி ரூபாய்களை* அள்ளிச் செல்கின்றனர்.
இனிமேலாவது இதற்குச் செலவு செய்யும் பணத்தை உணவுக்காகச் செலவு செய்தால் உறுதியாக வேளாண்மை செழிக்கும் ;
வேளாண்மை செழித்தால் எல்லாத் தொழில்களும் வீறுநடை போடும்.
இதற்கான
*அரு மருந்து நம்மிடமே உள்ளது.*
சக்கரை நோய்க்குக் காரணம் *இன்சுலின் ஒழுங்காகச் சுரக்காதது தான்;*
ஆனால், இயற்கையாகச் சுரக்க ஒரே மருந்து எது?
*உமிழ்நீர் தான்.*
சக்கரை நோய்க்கும் வாயில் ஊறக்கூடிய உமிழ்நீருக்கும் என்ன தொடர்பு உண்டு என்பதைப் பார்ப்ப்போம்.
*உணவுடன் கலந்து செல்லும் உமிழ்நீர்தான்,*
கணையத்திலிருந்து இன்சுலினைச் சுரக்கத் தூண்டும் *இயற்கை மருந்து.*
உமிழ்நீர் எனும் இயற்கை மருந்தை நம் முன்னோர்கள், தாங்கள் உண்ணும் உணவுடன், அதிக அளவு எடுத்துக் கொண்டனர்.
வாழ்வதற்காக உண்டனர்.
அதனால்தான் பொறுமையுடனும்
அமைதியுடனும்
பொறுப்புடனும் உணவருந்தினர்.
அதனால் அவர்கள் சாப்பிடும் உணவுடன் உமிழ்நீர் அதிக அளவு கலந்து வயிற்றுக்குள் சென்றது.
கூடுதல் உமிழ்நீரைச் சுரக்கச் செய்வதற்காக *ஊறுகாயைச்* சிறிதளவு எடுத்துக் கொண்டனர்.
அதேபோல் உணவு உண்பதற்கு
30 நிமிடம் முன்னதாகவும்
உணவு உண்டபின் 30 நிமிடம் கழித்தும்
நாம் *கடலைமிட்டாய் , வெல்லம் , பனங்கற்கண்டு, பனங்கருப்பட்டி* இவற்றில் ஏதாவது ஒன்றை எடுத்துக் கொண்டால் கட்டாயம் *உமிழ்நீர் நன்கு சுரக்கும்.*
நம் முன்னோர்களுக்கு உமிழ்நீரின் அருமை தெரிந்திருந்ததால் ஊறுகாய் என்ற உணவுப் பொருளை கண்டுபிடித்துப் பயன்படுத்தினர்.
தூண்டல், துலங்கல் என்ற விதியின் படி *உமிழ்நீர் என்ற தூண்டுதலால் இன்சுலின் என்ற துலங்கல்* சுரக்கப்படுகிறது.
நமது வாழ்க்கையின் வேகம் அதிகரித்து விட்டது.
உணவு சாப்பிடும் வேகமும் அதிகரித்துவிட்டது.
வாழ்க்கைக்கான சாப்பாடு என்ற மனநிலை மாறி,
சாப்பிடுவதும் ஒரு 'வேலை'தான் என்ற மனநிலைக்கு வந்துவிட்டோம்.
உணவை ரசித்து, ருசித்து; உமிழ்நீர் கலந்து சாப்பிடாமல்,
அவசர அவசரமாக வாயில் போட்டு விழுங்குகிறோம்.
நாம் விழுங்கும் உணவில் உமிழ்நீர் இல்லாததால், அந்த உணவுக்கு இன்சுலின் சுரக்காது.
உணவிலுள்ள குளுக்கோசு, கிளைக்கோசனாக மாறாமல், அது சக்கரையாகவே இரத்தத்தில் தங்கிவிடும்.
நாளடைவில் அது *சக்கரை நோய் என்று அழைக்கப்படும் நீரிழிவு நோயாக* மாறிவிடுகிறது.
சக்கரை நோய்க்கு மிகச்சிறந்த இயற்கை மருந்து நம் வாயில் ஊறும் உமிழ்நீர்தான்.
எனவே,
நாம் சாப்பிடும் ஒவ்வோர் உணவிலும் உமிழ்நீர் கலந்து சாப்பிடப் பழகிக் கொள்ள வேண்டும்.
நாம் குடிநீர் அல்லது தேநீர் அருந்தினால் கூட உமிழ்நீர் கலந்துதான் வயிற்றிற்குள் அணுப்ப வேண்டும்.
நீரிழிவு நோய் எனும் செயற்கையான நோயை *உமிழ்நீர் எனும் இயற்கையான மருந்து* கொண்டு அழித்து ஒழிப்போ

Friday, 3 April 2026

vசூலாயுதங்களில் எலுமிச்சை குத்தப்படுவதன் ஆன்மீக ரகசியம்


 சூலாயுதங்களில் எலுமிச்சை குத்தப்படுவதன் ஆன்மீக ரகசியம் என்ன? 🍋🔱

​நமது கலாச்சாரத்திலும் வழிபாட்டு முறைகளிலும் எலுமிச்சைக்கு என்று தனித்துவமான ஒரு இடம் உண்டு. குறிப்பாக அம்மன் கோவில்களிலும், வழிபாட்டு தலங்களிலும் சூலாயுதத்தில் எலுமிச்சையை குத்தி வைத்திருப்பதை நாம் பார்த்திருப்போம். அதற்கான ஆழமான காரணங்கள் இதோ:
✅ தேவகனி: எலுமிச்சை எவ்வித குற்றமும் இல்லாத ஒரு புனிதமான தேவகனியாக கருதப்படுகிறது.
✅ குற்றமற்ற கனி: முக்கனிகளான மா, பலா, வாழை ஆகியவற்றில் கூட வண்டு, வியர்வை, புள்ளி என ஏதோ ஒரு சிறு குறை இருக்கும். ஆனால், எலுமிச்சையில் மட்டுமே அத்தகைய குறைகள் எதுவும் இருக்காது.
✅ ஈர்ப்பு சக்தி: மனிதர்களுடைய எண்ணங்களையும், நேர்மறை சக்திகளையும் ஈர்க்கும் ஆற்றல் மற்ற கனிகளை விட எலுமிச்சைக்கு மிக அதிகம்.
​இறைவனின் சக்தியை நமக்குள் கொண்டு சேர்க்கும் இந்த அற்புத கனியின் சிறப்புகளைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ளுங்கள்! 🙏✨
​ஆலயங்களில் நம் முன்னோர்கள் வழிமுறைகளில்
எல்லாமே நன்மைகள் தான்

Thursday, 2 April 2026

தருமம் தலைக் காக்கும் ! தக்க சமயத்தில் உயிர் காக்கும்!

 


தருமம் தலைக் காக்கும் ! தக்க சமயத்தில் உயிர் காக்கும்!

ஒரு ஊரில் ஒருவர் இருந்தார். மிகவும் நல்லவர். யாருக்காவது ஏதாவது கொடுத்துக் கொண்டே இருப்பார். தினமும் யாராவது ஒருவருக்கு ஏதாவது கொடுக்கவில்லை என்றால் அவருக்கு தூக்கம் வராது. அப்படி ஒரு பழக்கம். அதுமட்டுமல்ல அவர் கொடுப்பது அடுத்தவர்களுக்கு தெரியாது. அவ்வளவு ரகசியமாக கொடுப்பார்.
ஒரு நாள் இரவு அவர் ஏற்கனவே தயாராக கட்டி வைத்திருந்த பணம் முடிப்பை கையில் எடுத்துக்கொண்டார். வீட்டை விட்டு வெளியில் வந்தார். தெருவில் இறங்கி நடந்தார். இன்றைக்கு யாருக்கு தர்மம் செய்வது என்று யோசித்துக் கொண்டே இருட்டில் நடந்து கொண்டிருந்தார். அப்போது எதிரில் ஒருவர் வருவது போல் இருந்தது. உடனே அவரிடம் போனார் . தன்னிடமிருந்த பண முடிப்பை அவசரம் அவசரமாக அவர் கையில் திணித்து விட்டு திரும்பி வந்துவிட்டார்.
அப்பாடா ஒரு வழியாக தருமம் செய்தாகி விட்டது என்கின்ற மகிழ்ச்சி! மனநிறைவு அவர் முகத்தில்! நிம்மதியாக தூங்கி எழும்பினார்.
மறுநாள் காலையில் ஊர் பூராவும் ஒரே பேச்சு . நேத்து ராத்திரி ஒரு திருடன் கையில் யாரோ பணத்தை கொடுத்து விட்டு போய் விட்டார்கள் என்று பேசிக் கொண்டிருந்தார்கள்.
இதை கேள்விப்பட்டதும் பெரியவருக்கு வருத்தமாகிவிட்டது. போயும் போயும் ஒரு திருடனுக்கு உதவி செய்தோம் பிரயோஜனம் இல்லாமல் போய்விட்டதே என்று நினைத்தார்.
சரி இன்றைக்கு யாருக்காவது உதவி செய்வோம் என்று முடிவு பண்ணினார். எதிரில் ஒரு பெண்ணின் உருவம் மங்கலாகத் தெரிந்தது. உடனே அந்தப் பெண்ணிடம் பணத்தை கொடுத்துவிட்டு போனார்.
மறுநாள் காலையில் ஊர் பூராவும் நேத்து ராத்திரி விபச்சார பெண்ணின் கையில் யாரோ பணத்தை கொடுத்து விட்டு போய் இருக்கிறார்கள் என்று பேச்சு.
அடடா இன்றைக்கும் தவறு நடந்து விட்டது என்று வருத்தப்பட்டார்.
இருக்கட்டும் இன்றைக்கும் ஏதாவது தர்மம் செய்வோம் என்று நினைத்தார்.
மூன்றாம் நாள் இரவும் புறப்பட்டார். அப்போதும் எதிரில் ஒருவர் வந்தார். இவர் பணத்தை கொடுத்தார்.
மறுநாள் மக்கள் இரவு ஒரு செல்வந்தர் கையில் யாரோ பணத்தை கொடுத்துவிட்டு போய் இருக்கிறார்கள் என்று பேசிக் கொண்டிருந்தார்கள்.
தினம் தினம் இப்படி ஆகிவிட்டதே என்று நினைத்துக் கொண்டு படுத்து தூங்கினார். அன்று இரவு ஒரு கனவு. அந்த கனவில் இறைவன் வந்தார். நீ கொடுத்த தர்மம் வீணாகப் போய்விடவில்லை. உன்னிடம் பணம் வாங்கிய அந்த திருடன் திருந்தி விட்டான். அந்தப் பெண்ணும் திருந்தி விட்டாள். அந்த செல்வந்தனும் கொடையாளி ஆகிவிட்டான் என்று கடவுள் சொன்னார்.
அதாவது நல்ல மனதுடன் தர்மம் செய்தால் அது ஒருபோதும் வீணாகப் போய் விடாது.
அது மட்டுமல்லாமல் தருமம் தன்னை மட்டுமல்ல அடுத்தவர்களையும் தீமையிலிருந்து காப்பாற்றும் சக்தி வாய்ந்தது.......

செம்பு குடங்களில் வீடுகளில் தண்ணிர்


 செம்பு குடங்களில் வீடுகளில் தண்ணிர்

ஏன் தெரியுமா ?
அந்த காலங்களில் நமது வீடுகளில் தண்ணிர்
செம்பு குடங்களில் பிடித்து வைப்பார்கள்.ஏன் தெரியுமா ?
கேன் வாட்டர், மினரல் வாட்டர் என்று பணத்தைத் தண்ணீராக செலவு செய்யும் காலமிது. ஆனால்,
''வீட்டுக்கு ஒரு செம்புத் தகடு இருந்தாலே போதும், அருமையான மினரல் வாட்டர் கிடைத்துவிடும். மாசம்
நூத்துக் கணக்கான ரூபாய் மிச்சமாகும்...
''மைசூர்ல இருக்கற அஜய் நினைவு குடிநீர் நிறுவனத்தைச்
சேர்ந்தவங்க, செம்புப் பாத்திரத்துல
தண்ணியை வெச்சி ஒரு ஆராய்ச்சி நடத்தினாங்க. அதோட முடிவுல, 'செம்புப் பாத்திரத்தில் 24-மணி நேரம்
குடிநீரை வைத்திருந்து பரிசோதித்துப் பார்த்ததில், மனிதர் களுக்குப் பாதிப்பு ஏற்படுத்தும் நுண்ணுயிரிகள் எதுவும் அந்த நீரில் இல்லை' என அந்த
நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்தத் தகவல் அறிந்ததிலிருந்து செம்புக்
குடத்துல வெச்சிருந்துதான் தண்ணியைக்
குடிக்கின்றார்கள். கிணத்துல கிடைக்கறத்
தண்ணி, செம்புக் குடத்துக்குப் போனதும்
மினரல் வாட்டர் மாதிரி அருமையாக
மாறிவிடுகிறதாம்.
செம்பு குடம் இலலைனாலும் பரவாயில்லை.
ஒரு கையளவு செப்பு தகட்டை குடத்துக்குள்ள
போட்டு வெச்சா கூட உங்க வீட்டுத்
தண்ணி தரமானதா மாறிடும்.
மூணு நாளைக்கு ஒரு தரம்
செம்பு தகட்டை எடுத்துப்
பார்த்தா பாசி புடிச்ச மாதிரி இருக்கும்.
அதெல்லாம் பாக்டீரியாக்கள்தான். தகட்டைச் சுத்தமா கழுவிட்டுத் திரும்பவும் குடத்துக்குள்ள போட்டு வைக்கலாம். அந்தக் காலத்துல பல வீடுகள்ல செம்புக்குடம்தான். இன்னிக்கும் சில கிராமங்கள்ல
செம்பு குடத்துலதான் தண்ணி வைத்துக் குடிக்கிறார்கள். .

ஒரு மனிதன்.

 ஒரு மனிதன்....

எந்தக்குறையும் இல்லை அவனுக்கு... ஆனாலும் மனசில் நிம்மதி இல்லை. படுத்தால் தூக்கம் வரவில்லை. சிரமப்பட்டான்...
அவன் மனைவி பரிதாபப்பட்டு ஒரு யோசனை சொன்னாள்... "பக்கத்துலே உள்ள காட்டுலே ஒர் ஆசிரமம் இருக்கு... அங்கே ஒரு பெரியவர் இருக்கார்... போய்ப் பாருங்கள்".
ஆசிரமத்துக்குப் போனான். பெரியவரைப் பார்த்தான். "ஐயா... மனசுலே நிம்மதி இல்லே... படுத்தா தூங்க முடியலே".
அவர் நிமிர்ந்து பார்த்தார்...
"தம்பி... உன் நிலைமை எனக்குப்புரியுது. இப்படி வந்து உட்கார்".
பிறகு அவர் சொன்னார்:
"உன் மனசுக்கு சில ரகசியங்கள் தெரியக் கூடாது. தெரிந்தால் உன் நிம்மதி போயிடும்".
"அது எப்படிங்க?"
"சொல்றேன்... அது மட்டுமல்ல மனம் தேவையில்லாத சமயங்களிலே, தேவையில்லாத சுமைகளைச் சுமக்கறதும் இன்னொரு காரணம்"
"ஐயா... நீங்க சொல்றது..
எனக்கு புரியலே''
"புரியவைக்கிறேன்.... அதற்கு முன் ஆசரமத்தில் விருந்து சாப்பிடு.."
வயிறு நிறைய சாப்பிட்டான். பெரியவர் அவனுக்கு சுகமான படுக்கையைக் காட்டி, "இதில் படுத்துக்கொள்" என்றார். படுத்துக் கொண்டான்... பெரியவர் பக்கத்தில் உட்கார்ந்து கதை சொல்ல ஆரம்பித்தார்...
கதை இதுதான்:
ரயில் ஒன்று புறப்படப்போகிறது...
அவசர அவசரமாக ஒருவன் ஓடி வந்து ஏறுகிறான்.. அவன் தலையில் ஒரு மூட்டை.. ஒர் இடம் பிடித்து உட்கார்ந்தான். ரயில் புறப்பட்டது... தலையில் சுமந்த வந்த மூட்டையை மட்டும் அவன் கிழே இறக்கி வைக்கவில்லை..
எதிரே இருந்தவர் கேட்கிறார்:
"ஏம்ப்பா எதுக்கு அந்த மூட்டையைச் சுமந்துக்கிட்டு வர்ற.. இறக்கி வையேன்".
அதற்கு அவன் சொல்கிறான்... "வேணாங்க.. ரயில் என்னை மட்டும் சுமந்தா போதும் என் சுமையை நான் சுமந்துக்குவேன்.'
பெரியவர் கதையை முடித்தார். படுத்திருந்த நம்ம ஆசாமி சிரித்தான்.
"ஏன் சிரிக்கிறே?"
"பைத்தியக்காரனா இருக்கானே.. ரயிலை விட்டு இறங்கும் போது, மூட்டையை தூக்கிட்டு இறங்கினா போதாதா? அது அவனுக்கு தெரியவில்லையே.. யார் அவன்?" இயல்பாக கேட்டான் நிம்மதி தேடி வந்த ஆசாமி.
"நீதான்" என்றார் பெரியவர்..
"என்ன சொல்றீங்க?"
பெரியவர் சொன்னார்..
"வாழ்க்கை என்பதும் ஒரு
ரயில் பயணம் மாதிரிதான்... பயணம் பூராவும் சுமந்து கொண்டே போகிறவர்கள் நிம்மதியாக வாழமுடியாது. தேவைப்படுகிறதை மட்டும் மனசில் வைத்துக்கொள்".
அவனுக்கு தனது குறை மெல்லப் புரிய ஆரம்பித்தது... சுகமாக தூக்கம் வந்தது. தூங்க ஆரம்பித்து விட்டான்...
கண் விழித்த போது எதிரே பெரியவர் நின்று கொண்டிருந்தார். "எழுந்திரு" என்றார்
எழுந்தான்...
"அந்த தலையணையைத் தூக்கு" என்றார். தூக்கினான்... அடுத்த கணம் "ஆ"வென்று அலறினான்.
தலையணையின் அடியில் ஒரு நாகப் பாம்பு, சுருண்டுபடுத்திருந்தது.
"ஐயா என்ன இது?"
"உன் தலைக்கு வெகு அருகில் ஒரு பாம்பு.. அப்படி இருந்தும் நீ நிம்மதியாய் தூங்கி இருக்கிறாய்".
"அது ... அது எனக்குத் தெரியாது"...
"பாம்பு பக்கத்தில் இருந்த ரகசியம் உன் மனசுக்குத் தெரியாது... அதனால்
நிம்மதியாகத் தூங்கியிருக்கிறாய்".
அவன் புறப்பட்டான்,,
"நன்றி பெரியவரே...
நான் போய் வருகிறேன்".
"நிம்மதி எங்கே இருக்கிறது என்பதைப் புரிந்து கொண்டாயா?
"புரிந்து கொண்டேன்..
என் மனசுக்குள்ளேயே ஒளிந்து கொண்டிருக்கிறது. அறிவின் வெளிச்சத்தால் அதைக்தேடிக்கண்டு பிடித்து விட்டேன்.. 

பழமொழிகளும் அதன் உண்மையான அர்த்தமும்


 பழமொழிகளும் அதன் உண்மையான அர்த்தமும்...

⏩⏩⏩
#நல்ல மாட்டுக்கு ஒரு சூடு...
நல்ல மாட்டுக்கு ஒரு சுவடு.
சூடு வைக்கிறது இல்லங்க,சுவடு சுவடு. சந்தையில் மாட்டை வாங்கும்போது அது பதிக்கும் தடம் சுவடு. அழுத்தமான சுவட்டை பதிக்கும் மாடே அதிக பலம் வாய்ந்ததாக கருதுவார்கள். அதை விடுத்து ஒருவரை குத்தி காட்டுவதற்கு மட்டுமே இந்த பழமொழி இப்போ பயன்படுது.
🐢
#ஆமை புகுந்த வீடு விளங்காது...
கல்லாமை, இயலாமை, முயலாமை இல்லாதவங்க வீடு விளங்காதுனு பொதுவாக சொல்வாங்க, அதே நேரம் ஆம்பி(காளான்) பூத்த வீடும் உருப்படாதுனு சொல்வதுண்டு. ஆன ஆமை வந்தாலும் வராட்டியும் விளங்கறது தான் விளங்கும்.
🐍
#பாம்பைக் கண்டால் படையும் நடுங்கும்...
தனியா இருந்த நடுங்குவோம் சரி, நாலு பேர் இருந்தாலே போட்டு பொதைச்சிடுவொம், இதுல படை வேறயா. இது நாகாஸ்திரம் பற்றி சொல்லறது. மகாபாரத மற்றும் இராமாயண கதைகள் வரும் மிக சக்தி வாய்ந்த இந்த ஆயுதம் எதிரி படையை தெறிச்சு ஓட செய்யும். இராமரே ஒருமுறை இந்திரஜித்தின் நாகாஸ்திரத்தில் சிக்கி பின் கருடனால் காக்கப்படுவார்.
🐕
#கல்ல கண்டால் நாயைக் காணும், நாயைக் கண்டா கல்லை காணும்..
கல்லைக் கண்டால் நாயகனைக் காணோம், நாயகனைக் கண்டால் கல்லைக் காணோம்.
இங்க நாயகன் என்பது திருமாலை குறிக்கும், மருவி வருவதற்கும் ஒரு அளவில்லையா. நாயகன் நாயாவதா.
🐨
#சிவ பூஜையில் கரடி...
முக்கியமான வேலை செய்யும் போது யாரவது குறுக்க வந்துட்ட போதும் கரடியாக்கிடுவோம். ஆனால் மன்னர் காலத்தில் சிவபூஜை செய்யும் போது கரடி வாத்தியம் வாசிக்கச் செய்வர். அதான் சிவ பூசையில் கரடி. இசைக்காக சொன்னது, இப்போது தொந்தரவுக்காக பயன்படுகிறது.
🐕
#குரைக்கிற நாய் கடிக்காது:
குழைகிற நாய் கடிக்காது
குரைக்கிற நாய் ஏன் கடிக்காது? ஒரு தடவ நாய்க்கு அன்பா சாப்பாடு போட்டு வருடி விட்டா, அதுக்கப்புறம் குழைஞ்சி கிட்டே உங்கள சுத்தும். அன்பு காட்டறவன யாரும் அடிக்கவும் மாட்டாங்க, நாய் கடிக்கவும் செய்யாது.
🐎
#மண்குதிரையை நம்பி ஆற்றில் இறங்காதே....
மங்குதிரையை நம்பி ஆற்றில் இறங்காதே
குதிர் என்றால் ஆற்றில் இருக்கும் மண் திட்டுகள், அது இருக்குதுனு நம்பி எறங்குனா ஆபத்து.
இன்னொரு பார்வை : மங்குதிரை- வானம் மங்கியிருக்கிறது என்றால் மழை வருவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம், அதனால் ஆற்றில் வெள்ளம் வரக்கூடும் எனவே இறங்கக்கூடாது. மங்கு திரை என்றால் கானல் நீர் என்றும் அர்த்தம் வரும்.
🐘
யானைக்கு ஒரு காலம் வந்தால் பூனைக்கு ஒரு காலம் வரும்:
ஆனை = ஆ + நெய் = பசுவின்(ஆவின்) நெய். பூனை = பூ +நெய் = பூவின் நெய் (தேன்) அதாவது சிறு வயதில் பசுவின் நெய் சாப்பிடுவது நல்லது.
அதே நெய் வயதான காலத்தில் சாப்பிட உடல் ஒத்துக் கொள்ளாது.ஆனால் தேன் சாப்பிடலாம். ஆனாலும் ரொம்ப ஆடக்கூடாது, எல்லாருக்கும் ஒரு காலம் வரும் என்கிற அர்த்தமே நல்லருக்கிறது.
🐴
கழுதை கெட்டால் குட்டிச் சுவர்:
கழுதையின் தோல் கெட்டால் குட்டிச் சுவர். பொதி சுமக்கும் கழுதை தோல் அரிப்பால் அவதிப்பட்டால் தன் உடலை போய் சுவத்தில தேய்க்கும். அது தான் குட்டி சுவர், மற்றபடி இளைஞர்கள் ஓய்வு எடுக்கும் இடமல்ல.
🐴
#கழுதைக்குத் தெரியுமா கற்பூரவாசம்?
கழு தைக்க தெரியுமாம் கற்பூர வாசம். கழு என்பது ஒரு வகையான கோரைப்புல். அதுல பாய் தைக்கும் போது கற்பூர வாசனை அடிக்கும். குழந்தைகளை அந்த பாயில் படுக்கப் போட்டால் பூச்சிகள் கிட்டே வராது.
🐴
#வரவர மாமியார் கழுதை போல் ஆனாள்....
கயிதை என்பது ஊமத்தம்காயை குறிக்கும். ஊமத்தம்பூ அதன் ஆரம்ப பருவத்தில் மென்மையாய் வளர்ந்து அழகாய் பூத்து கடைசியில் காயில் கடின விஷமாய் முள்ளாய் மாறும்.

இளநீர்

 வரலாற்றில்


இளநீர்

நீரிழப்பு ஏற்பட்டவர்களுக்கு உடனடியாக ஆற்றலைக் கொடுக்க இளநீரை அக்கால மக்கள் பயன்படுத்தியுள்ளனர். சோழர்கள் ஆட்சிக் காலத்தில் உருவாக்கப்பட்ட இலவச மருத்துவச் சாலைகளில், நோயாளிகள் அனைவருக்கும் தினமும் இளநீர் வழங்கப்பட்டதற்கான கல்வெட்டு ஆதாரங்கள் உள்ளன. இளநீரின் மருத்துவச் சிறப்பைப் போற்றும் வகையில் மங்கல நிகழ்ச்சிகளின்போதும், போர், விழாக்களின் போதும் அனைத்து வீடுகளின் முன்பும் செவ்விளநீர்க் குலைகளை நம் மூதாதையர் இடம்பெறச் செய்தனர்.
இளமை தரும்
எப்போதும் இளமையாக இருக்க விரும்புபவர்கள், இளநீரை அதிகம் அருந்தலாம். இதிலுள்ள `கைனெடின்’(kinetin) தோல் சுருக்கங்களைக் குறைப்பதுடன், செல் செயல்பாடுகளைச் சிறப்பாக்கி முதுமையைத் தள்ளிப்போட உதவுகிறது. செல்களில் ஏற்படும் பாதிப்புகளைத் தடுத்து, இளமையைத் தக்கவைக்க உதவும் எதிர்-ஆக்ஸிகரண (Anti-oxidants) பொருட்களும் இளநீரில் அதிகம். புற்றுநோயின் ஆதிக்கத்தைக் குறைக்கும் திறன் இளநீருக்கு உண்டு.
எப்போது அருந்துவது?
உணவுக்கு முன்பு இளநீர் அருந்துவதால் வயிற்றில் அமிலத்தன்மை அதிகரிக்கும் என்கிறது சமீபத்திய ஆராய்ச்சி. வெறும் வயிற்றில் இளநீரைப் பருகினால், வயிற்றுப் புண் உண்டாவதுடன், பசியும் மந்தப்படும் என்கிறது பல நூற்றாண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட பதார்த்தக் குணச் சிந்தாமணி பாடல் ஒன்று. எனவே, உணவுக்குப் பின் சிறிது நேரம் இடைவெளி விட்டுப் பருகினால், நல்ல பசி உண்டாவதோடு, வாத, பித்தத்தைக் குறைக்கும் பலனும் கிடைக்குமாம். மலம் சிக்கலின்றி வெளியேறி, தேகமும் பொலிவு பெறும். அதனால் உணவுக்குப் பின் இளநீரைப் பருகுவதே நல்லது.
இளநீர் வழுக்கை:
இளநீரைத் தேக்கி வைத்து, இளநீரோடு உறவாடும் வழுக்கைக்கும் குளிர்ச்சியுண்டாக்கும், சிறுநீரை அதிகரிக்கும் குணம் உண்டு. செரிமானப் பாதையில் உள்ள புண்களைக் குணப்படுத்தவும் செய்யும்.
மருந்துகளின் ஆதாரம்:
சித்த, ஆயுர்வேத மருத்துவத்தில் கண் மருந்துகள் மற்றும் வயிற்றுப் புண்ணைக் குறைக்கும் மருந்துகளைச் செய்ய இளநீர் முக்கியப் பொருளாகப் பயன் படுத்தப்படுகிறது. சில மருந்துகளைச் சுத்தி செய்யும் (Purification process) திறனும் இளநீருக்கு உண்டு.

ஒரு ஊரில் ஒருவர் இருந்தார்.

 


ஒரு ஊரில் ஒருவர் இருந்தார். மிகவும் நல்லவர். யாருக்காவது ஏதாவது கொடுத்துக் கொண்டே இருப்பார். தினமும் யாராவது ஒருவருக்கு ஏதாவது கொடுக்கவில்லை என்றால் அவருக்கு தூக்கம் வராது. அப்படி ஒரு பழக்கம். அதுமட்டுமல்ல அவர் கொடுப்பது அடுத்தவர்களுக்கு தெரியாது. அவ்வளவு ரகசியமாக கொடுப்பார்.

ஒரு நாள் இரவு அவர் ஏற்கனவே தயாராக கட்டி வைத்திருந்த பண முடிப்பை கையில் எடுத்துக் கொண்டார். வீட்டை விட்டு வெளியில் வந்தார். தெருவில் இறங்கி நடந்தார். இன்றைக்கு யாருக்கு தர்மம் செய்வது என்று யோசித்துக் கொண்டே இருட்டில் நடந்து கொண்டிருந்தார். அப்போது எதிரில் ஒருவர் வருவது போல் இருந்தது. உடனே அவரிடம் போனார் . தன்னிடமிருந்த பண முடிப்பை அவசரம் அவசரமாக அவர் கையில் திணித்து விட்டு திரும்பி வந்துவிட்டார்.
அப்பாடா ஒரு வழியாக தருமம் செய்தாகி விட்டது என்கின்ற மகிழ்ச்சி.. மனநிறைவு அவர் முகத்தில்.. நிம்மதியாக தூங்கி எழும்பினார்.
மறுநாள் காலையில் ஊர் பூராவும் ஒரே பேச்சு . நேத்து ராத்திரி ஒரு திருடன் கையில் யாரோ பணத்தை கொடுத்து விட்டு போய் விட்டார்கள் என்று பேசிக் கொண்டிருந்தார்கள். இதை கேள்விப்பட்டதும் பெரியவருக்கு வருத்தமாகிவிட்டது. போயும் போயும் ஒரு திருடனுக்கு உதவி செய்தோம் பிரயோஜனம் இல்லாமல் போய்விட்டதே என்று நினைத்தார்.
சரி இன்றைக்கு யாருக்காவது உதவி செய்வோம் என்று முடிவு பண்ணினார். எதிரில் ஒரு பெண்ணின் உருவம் மங்கலாகத் தெரிந்தது. உடனே அந்தப் பெண்ணிடம் பணத்தை கொடுத்துவிட்டு போனார். மறுநாள் காலையில் ஊர் பூராவும் நேத்து ராத்திரி விபச்சார பெண்ணின் கையில் யாரோ பணத்தை கொடுத்து விட்டு போய் இருக்கிறார்கள் என்று பேச்சு. அடடா இன்றைக்கும் தவறு நடந்து விட்டது என்று வருத்தப்பட்டார். இருக்கட்டும் இன்றைக்கும் ஏதாவது தர்மம் செய்வோம் என்று நினைத்தார்.
மூன்றாம் நாள் இரவும் புறப்பட்டார். அப்போதும் எதிரில் ஒருவர் வந்தார். இவர் பணத்தை கொடுத்தார். மறுநாள் மக்கள் இரவு ஒரு செல்வந்தர் கையில் யாரோ பணத்தை கொடுத்துவிட்டு போய் இருக்கிறார்கள் என்று பேசிக் கொண்டிருந்தார்கள்.
தினம் தினம் இப்படி ஆகிவிட்டதே என்று நினைத்துக் கொண்டு படுத்து தூங்கினார். அன்று இரவு ஒரு கனவு. அந்த கனவில் இறைவன் வந்தார். நீ கொடுத்த தர்மம் வீணாகப் போய்விடவில்லை. உன்னிடம் பணம் வாங்கிய அந்த திருடன் தவறை உணர்ந்து திருந்தி விட்டான். அந்தப் பெண்ணும் தெளிந்து திருந்திவிட்டாள். அந்த செல்வந்தனும் கொடையாளி ஆகிவிட்டான் என்று கடவுள் சொன்னார். அதாவது நல்ல மனதுடன் தர்மம் செய்தால் அது ஒருபோதும் வீணாகப் போய் விடாது. அது மட்டுமல்லாமல் தருமம் தன்னை மட்டுமல்ல அடுத்தவர்களையும் தீமையிலிருந்து காப்பாற்று சக்தி வாய்ந்தது.

உலகத்திலேயே மிகவும் பணக்கார நாடு

 #உலகத்திலேயே மிகவும் பணக்கார நாடு இந்தத் #தமிழ்_மண்தான், இங்கு மட்டும் நாற்பாதயிரம் கோயில்கள் உள்ளன. அவ்வளவு கோயில்கள் ஏன்? அவசியம் என்ன?

சோழர் காலத்தில் தமிழ்நாடு தான் உலகத்திலேயே மிகவும் பணக்கார நாடு.
*சுமார் 40,000 கோயில்களை சோழர்கள் தங்கள் ஆட்சிக் காலத்தில் கட்டினார்கள். அன்று உலகிலேயே உயர்ந்த கட்டிடம் தஞ்சை பெரிய கோவிலும், கங்கை கொண்ட சோழபுரமும்தான்.*
அப்போது வட அமெரிக்கா தென் அமெரிக்கா கிடையாது. இலண்டன் ஒரு சிறு மீன்பிடிக்கும் கிராமமாக 1066 -இல் நிறுவப்பட்டது.
*#தஞ்சை பெரிய கோபுரம் முழுவதும் தங்கத்தால்_போர்த்ப்பட்டது. இது பற்றிக் கல்வெட்டும் உள்ளது. இந்தத் தங்கப் போர்வை 1311 - ஆம் வருடம் மாலிக்கபூரின் படைகளால் கொள்ளையடிக்கப்பட்டு, 500 யானைகள் மேல் எடுத்துச் செல்லப்பட்டது.*
இவ்வளவு கோவில்கள் கட்டுவதற்கு எங்கிருந்து பணம் வந்தது?
*எல்லாம் கடல் வாணிபம் ஏற்றுமதிதான். ஜப்பான் நாட்டில் தங்கச் சுரங்கம் கிடையாது. ஆனால் ஏற்றுமதி வியாபாரம் மூலம் அவர்களுக்குத் தங்கம் கிடைக்கிறது. அதே போல் சோழ நாட்டில் தங்கச் சுரங்கம் கிடையாது. இரும்பு சாமான்கள், துணிகள், கைவினைப் பொருட்கள், தானிய ஏற்றுமதி மூலம் தங்கம் கிடைத்தது.*
உலகிலேயே ஒரே சீராக 80 இலட்சம் ஏக்கர் விளை நிலம் காவிரிப் படுகைப் பகுதியில்தான் அமைந்துள்ளது. எங்கும் மூன்று போகச் சாகுபடிக்குக் காவிரியில் நீர் வந்து கொண்டிருந்தது.
*வியாபாரத்திலும், ஏற்றுமதியிலும், விவசாயத்திலும் கிடைத்த பணத்தை - தங்கத்தை சோழர்கள் படை பலத்தைப் பெருக்கிக் கொள்ள பயன்படுத்தினர்.*
மலேயா காடுகளிலிருந்தும், மைசூர் காடுகளிலிருந்தும் யானைகள் பிடித்து வரப்பட்டன.
பர்மாவிலிருந்து தங்கம் கொடுத்து குதிரைகள் வாங்கப்பட்டன.
*ஏன் கோவிலை கட்டினார்கள்?*
*தமிழர்கள் ஏன், கோயில் கோயில் என்று அதைச் சுற்றியே வருகிறோம் ?
தமிழகத்தை ஆண்ட பெரும்பாலான அரசர்கள் அவரவர் ஆண்ட பொழுது ஏன் மருத்துவமனை கட்டவில்லை, கல்விச்சாலை அமைக்கவில்லை ஆனால் கோயில்களை கட்டினார்கள்.
*கோயில்கள் எப்பொழுதெல்லாம் கட்டப்பட்டன ?
மக்களுக்கு பிரித்து கொடுக்காமல், அரசன், அரசின் நிலங்களை, ஏன் கோயில்களுக்கு மானியமாக எழுதி வைத்தான் ?
*உலகின் குருவாக தமிழகம் ஆனது எப்படி ?
எந்த ஒரு அரசும் பட்ஜட் போடும் பொழுது வரி வசூல் என்ன, அதில் அரசு நடத்த அதிகாரிகளுக்கு ஆகும் செலவு, மக்கள் நல திட்டங்களுக்கு ஆகும் செலவு ன்னு வரவு செலவை வைத்து தன்னிறைவு திட்டத்தை அடையத்தான் நிதிநிலை அறிக்கை போடுவார்கள்.
இதையேதான் தமிழக கோயில்கள் செய்தன.
*கோயில் இல்லா ஊரில் குடி இருக்க வேண்டாம் ன்னு அதைத்தான் சொல்லி வெச்சாங்க.*
மன்னன் கோயில் கட்ட ஆரம்பித்தவுடன், கட்டுமான பணிக்கு அந்த ஊரை சுற்றி உள்ள கட்டுமான கலைஞர்கள், சிற்ப கலைஞர்கள், கல் தச்சர்கள், கட்டுமான பொருட்களான செங்கல், சுண்ணாம்பு போன்றவற்றை உற்பத்தி செய்வோர், அதை ஓரிடத்தில் இருந்து கோயில் கட்டும் இடத்திற்கு கொண்டு செல்லும் போக்குவரத்து, வர்ணம் அடிக்க, ஓவிய கலைஞர்கள், இப்படி அனைவருக்கும் வேலை வாய்ப்பு, அதுவும் அரசரால் கொடுக்கப்படும், அரசு வேலை.
*கோவிலுக்கு மானியமாக கொடுக்கப்படும் நிலங்கள், குத்தகை மூலமாக விவசாயிகளுக்கு விடப்பட்டு அதன் மூலம் விவசாய உற்பத்தி, அதற்கு ஒரு சமூகம், பாண்ட மாற்று முறையில், தன்னிறைவு பெற்ற பொருளாதாரம்.*
கோவிலுக்கு கொடுக்கப்பட்ட பசுமாடுகள், அதை கவனித்தல், அதற்கு ஒரு சமூகம், இதனால் கோயிலுக்கும் அந்த கிராமத்தாருக்கும் பால் சார்ந்த பொருட்கள்.
*நெய்வேத்தியம் சமைக்க சமையல் கலைஞர்கள். அதற்கு ஒரு சமூகம்.*
சமையல் செய்ய பாத்திரங்கள் செய்ய மண்பானை செய்வோர் மற்றும் உலோக பாத்திரம் செய்வோர், அதற்கு ஒரு சமூகம். அவர்களுக்கு தொடர்ந்து வேலை.
*நந்தவனம் மூலம் தெய்வத்திற்கு பூ மாலை மற்றும் அலங்கார சேவை செய்ய நந்தவனம் காப்போருக்கு வேலை. அதற்கு ஒரு சமூகம். அவருக்கு தொடர்ந்து வேலை இருக்க, அதற்கேற்ப கோவில் உற்சவங்கள்.*
மங்கள இசை இசைக்கும் கலைஞர்கள் ஓர் சமூகம். கூத்து கலைஞர்கள் என,
அவர்களுக்கும் வருட மானியம் மற்றும் வேலை. மாலை வேளைகளில் ஆன்மீக கச்சேரி என்று மனதிற்கு இனிய பொழுது போக்கு நிகழ்ச்சிகள்.
*தெய்வத்தின் வஸ்திரங்கள் நெய்ய ஒரு சமூகம்.*
அந்த வஸ்திரங்களை துவைக்க ஓரு சமூகம், அவருக்கும் தொடர்ந்து கோவில் மானியம் மூலம் வேலை.
*கோயிலை சுத்தமாக வைத்துக்கொள்ள ஒரு தேவை, அதை செய்ய ஒரு சமூகம். அவருக்கும் கோயில் மூலம் மானியம், வருட வருமானம்.*
இவை அனைத்தையும் நிர்வாகம் செய்ய, கணக்கு பார்க்க, ஒரு சமூகம்.
*இவர்கள் அனைவரும் அவரவர் வேலையை பார்க்க, அதன் மூலம் வாழ்வாதாரம் பெறவும், கோயில் ஒரு மிகப்பெரிய தொழிற்சாலை. ஆன்மீகம் ஒட்டி வாழ்வாதாரம்.*
பெரு வெள்ளம் வந்து ஊரே மூழ்கி போனாலும், கோயிலின் கோபுரத்தில், கலசம் மூலம், செறிந்த விஞ்ஞான அறிவுடன், அதனுள் 12 வருடம் வரை கெடாத அந்த கிராமத்தில் மண்ணுக்கேற்ப விளையும் விளை பொருட்களின் விதை பொருட்கள்.
*12 வருடத்திற்கு ஒரு முறை அதை மாற்றி அமைத்து, மராமத்து பணிகள் மேற்கொள்ள மேற் சொன்ன அனைவருக்கும் ஒரு கூட்டு வேலை வாய்ப்பு.*
இப்படி அவர் அவருக்கு தெரிந்த பணி, அதை சார்ந்த சமூகம், ஒன்றிணைந்து தன்னையும் காப்பாற்றிக்கொண்டு, தன்னிறைவு வாழ்க்கை என வாழ்வதற்கு கட்டமைக்கப்பட்டதே, நம் கோயில்கள்.
*ஊருக்கு ஒரு கோயில், அதை சுற்றிலும் அனைத்து சமூகம்,*
அந்த அந்த ஊரை சுற்றி உள்ள இயற்கை வளங்கள் பாதுகாக்கபட்டு, மூலிகை மூலம் வைத்தியம், அதற்க்கென ஒரு சமூகம் என,
ஊரை சுற்றியே, ஓர் தன்னிறைவு வாழ்க்கை.
இப்படி அமைக்கப்பட்டது தான் நம் பொருளாதார கட்டமைப்பு.
*மாத சம்பளம் பணமாக, பணத்திற்கு பொருள், அதன் விலை ஏற்ற இறக்கம், பண வீக்கம், இவை எதுவுமே சாராமல் ஓர் தன்னிறைவு வாழ்க்கை.*
தெய்வங்களுக்கு உயிரூட்டி, அந்த தெய்வங்கள் அங்கே வாழ்வதாகவும், அந்த கோயிலின் சொத்துக்கள், அந்த தெய்வங்களின் சொத்துக்கள் என்றும்,
உயிருள்ள ஒருவர், எப்படி தினமும் குளிப்பாரோ, உடை உடுத்தி கொள்வாரோ, தினமும் உணவு உண்பாரோ, நம் வாழ்வாதாரத்திற்கு உதவும் ஒருவரை நாம் எப்படி போற்றி கவனிப்போமோ, அப்படி அவருக்கு நன்றி செலுத்தும் விதமாக, அனைவரின் சார்பாக, பூஜைகளை கவனிக்க ஒரு சமூகம்.*
இப்படி ஒரு கோயிலை வைத்து, ஆன்மீகம் மூலமாக ஒரு *தன்னிறைவு பொருளாதாரத்தை உலகிற்கு வாழ்ந்து காட்டியதாலேயே, தமிழகம் உலக குருவாக திகழ்ந்தது.
வாழிய பைந்தமிழ் நாடு...
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏**திருச்சிற்றம்பலம்**


உலர் திராட்சை யார் சாப்பிடலாம்? யார் சாப்பிடக்கூடாது..?


 உலர் திராட்சை யார் சாப்பிடலாம்? யார் சாப்பிடக்கூடாது..?

உலர் திராட்சையில் வைட்டமின்கள், மினரல்கள் மற்றும் ஆன்ட்டி ஆக்சிடென்ட் அதிகமாக இருக்கிறது. சிலர் ஸ்நாக்ஸ் நேரத்தில் உலர் திராட்சையை சாப்பிடுவார்கள். சிலர் காலை வெறும் வயிற்றில் ஊறவைத்த உலர் திராட்சையை சாப்பிடுவார்கள். இந்த இரண்டில் எப்படி எடுத்துக் கொண்டாலும் சரி அதனால் என்ன நன்மைகள் கிடைக்கும், யார் எடுத்துக் கொள்ளலாம், யார் தவிர்க்க வேண்டும் போன்ற விஷயங்களை தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம்.
நம் உடலின் செயல்பாடுகளுக்கு குடல் ஆரோக்கியம் சீராக இருக்க வேண்டியது முக்கியம். அந்த குடலை ஆரோக்கியமாக வைத்து, ஜீரண மண்டலத்தின் செயல்பாட்டை துரிதப்படுத்த இந்த உலர் திராட்சை உதவி செய்யும்
உலர் திராட்சையில் நிறைய ஆற்றல் மிகுந்த ஆன்ட்டி ஆக்சிடன்ட்களும் நார்ச்சத்தும் பிற மினரல்களும் அதிகமாக இருக்கின்றன. இவை குடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கும்.
சிலர் என்ன சாப்பிட்டாலும் உடல் தேறாமல் நோஞ்சானாகவே இருப்பார்கள். அவர்கள் எப்படியாவது உடல் எடையை அதிகரிக்க வேண்டும் என்று ஜங்க் உணவுகள் போன்றவற்றை சாப்பிட்டு உடல் ஆரோக்கியத்தை கெடுத்துக் கொள்ளாமல் ஆரோக்கியமான முறையில் உடல் எடை அதிகரிக்க வேண்டும் என்றால் அதற்கு உலர் திராட்சை உதவி செய்யும்..
தினமும் இரவில் 20 - 25 உலர் திராட்சைகளை தண்ணீரில் போட்டு ஊற வைத்துவிட்டு காலையில் அந்த தண்ணீரைக குடித்துவிட்டு, திராட்சையைச் சாப்பிட்டு விட வேண்டும்.
உங்களுடைய ஸ்மூத்தி வகைகளில் ஊரவைத்த திராட்சையை சேர்த்துக் கொள்ளலாம். இது உடல் எடை அதிகரிக்கும் இதுவே உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் உலர் திராட்சையை மிகக் குறைவாக எடுத்துக்கொள்ளுங்கள்.
உடல் பலவீனமாகவோ சோர்வாகவும் இருப்பவர்கள் உடனடியாக நன்றி கிடைத்தால் இந்த உடல் வளர்ச்சியை எடுத்துக் கொள்ளலாம்.
இளநீரை போல உலர் திராட்சையும் உடனடியாக உடலுக்கு தேவையான ஆற்றலை உற்பத்தி செய்து கொடுக்கும்.
நீரிழிவு இருப்பவர்கள் எடுக்கக் கூடாது என்ற சிலர் கூறுவார்கள் ஆனால் உலர் பழங்களில் இனிப்பும் கலோரிகளும் கொஞ்சம் அதிகம்தான் நீரிழிவு பிரச்சனை உள்ளவர்கள் மிதமான அளவில் உலர் பழங்களை எடுத்துக் கொள்ளலாம் அவற்றில் உள்ள மினரல்கள் ரத்த சர்க்கரை அளவை சீராக கட்டுக்குள் வைப்பது உதவி செய்யும். அதிகமாக எடுத்துக் கொண்டால் ரத்த சர்க்கரை அளவில் ஏற்றத்தாழ்வுகள் ஏற்படும்.
உலர் திராட்சையில் இயற்கையாகவே சர்க்கரை அதிகமாக இருக்கிறது. அதனால் லோ சுகர் பிரச்சனை உள்ளவர்கள் அவ்வப்போது இந்த உலர் திராட்சையை எடுத்துக் கொள்ளலாம்.
ஆனால் #நீரிழிவு பிரச்சனை இருப்பவர்கள் இந்த உலர் திராட்சையை மிகக் குறைவான அளவில் எடுத்துக் கொள்ள வேண்டும்
நம்முடைய உடலின் இயக்கத்திற்கும் ஜீரண மண்டலம் சீராக செயல்படவும் குடல் இயக்கம் மேம்படவும் நார்ச்சத்து மிக மிக அவசியம் அதனால் தான் நம் உணவு தட்டில் பாதியளவு நார்ச்சத்து நிறைந்த உணவுகள் இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள்.
உலர் திராட்சையில் நார்ச்சத்துக்கள் ள் மிக அதிகம். அதனால் ஜீரணம் சீராக நடக்கும். மலச்சிக்கல் உள்ளிட்ட பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்க முடியும்.
உலர் திராட்சை பழங்கள் கலோரிகள் அதிகம் கொண்ட உணவாகும். இதை தொடர்ச்சியாக எடுத்துக் கொள்ளும் போது உடல் எடை அதிகரிக்கும் வாய்ப்பு உண்டு.
ஏற்கனவே உடல் பருமன்மற்றும் அதிக உடல் எடையுடன் இருப்பவராக இருந்தால் உலர் திராட்சை எடுத்துக் கொள்ளும் அளவை குறைப்பது நல்லது.
வயிற்று கோளாறுகள் உள்ளவர்கள் சல்பைடு நிறைந்த உணவுகளை அதிகமாக எடுத்துக் கொள்ள கூடாது..
அதனாலும் உலர் திராட்சையைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் உலர் திராட்சையை பதப்படுத்த சல்பைடு அதிகமாக சேர்க்கப் படுகிறது.
அதனால் வாய்வுத் தொல்லை வயிற்றுப் பொருமல், அடிக்கடி மலம் கழிப்பது வயிற்றுப்போக்கு ஏற்படுபவர்கள், வயது முதிர்ந்தவர்கள், உடல் சார்ந்த பிரச்சனை இருப்பவர்கள் மருத்துவர் ஆலோசனை இல்லாமல் எடுக்கக் கூடாது.

விதிக்கு விளக்கம் தெரியுமா?

 விதிக்கு விளக்கம் தெரியுமா?

ஒரு செல்வந்தரின் வீட்டில் அமர்ந்து முல்லா அவருடன் உரையாடிக் கொண்டிருந்தார். செல்வந்தருக்குத் திடீரென ஒரு சந்தேகம் வந்து விட்டது.
"முல்லா அவர்களே விதி என்று மனிதர்கள் கூறுகிறார்களே அது என்ன?" என அவர் கேட்டார்.
"நாம் எதிர்பார்ப்பது நடக்காத போது அதற்கு விதி என்று பெயரிட்டு அழைக்கிறோம்." என்றார் முல்லா.
செல்வந்தருக்கு முல்லாவின் விளக்கம் சரியாகப் புரியவில்லை.
"இன்னும் சற்று தெளிவாக இதைப் பற்றிச் சொல்லுங்களேன்" எனச் செல்வந்தர் கேட்டுச் கொண்டார்.
முல்லா உடனே "என் அருமை நண்பர் அவர்களே! முதலில் நான் உங்களை எதற்காகச் சந்திக்க வந்தேனோ, அந்த விஷயத்தைக் கூறி விடுகிறேன். அப்புறம் விதியைப் பற்றித் தெளிவாக விளக்குகிறேன்" என்றார்.
"எதற்காகச் சந்திக்க வந்தீர்?" என்று செல்வந்தர் வியப்புடன் கேட்டார்.
"எனக்கு ஒரு கோடிப் பொன் கடனாக வேண்டும் உங்களைக் கேட்டுப் பெறலாம் என்றுதான் வந்தேன்" என்றார் முல்லா.
செல்வந்தருக்கு அதிர்ச்சியாக இருந்தது. “இவ்வளவு பெரிய தொகை முல்லாவிற்கு எதற்கு?” என்று விளங்காமல் திகைத்தார்.
"நான் கேட்டது என்ன ஆயிற்று?" என்று முல்லா கேட்டார்.
"இவ்வளவு பெரிய தொகையைத் திடீரென்று கேட்டால் எப்படி?" என்றார் செல்வந்தர் தயக்கத்துடன்.
முல்லா சிரித்துக் கொண்டே, "உம்மிடம் கடன் கேட்டால் நிச்சயம் கிடைக்கும் என்ற நம்பிகையுடன் உங்களை நான் சந்தித்தேன் உங்களால் பணத்தைக் கொடுக்க முடியவில்லை அல்லது கொடுக்க விரும்பவில்லை அப்போது எனக்கு ஏற்படுகிற ஏமாற்றம் இருக்கிறதே அதை விதி என்று எண்ணி மனம் சமாதானம் அடையலாம்" என்று விதிக்கு விளக்கம் தந்தார் முல்லா.
பிறகு முல்லா சொன்னார் "நான் விளையாட்டுக்காகத்தான் உமம்மிடம் கடன் கேட்டேன் நீர் குழப்பமடைய வேண்டாம்" எனக் கூறிச் சிரித்தார். .

*சக்கரை நோயை இந்த நாட்டை விட்டு அடித்துத் துரத்தும் வேளை வந்து விட்டது*

 *சக்கரை நோயை இந்த நாட்டை விட்டு அடித்துத் துரத்தும் வேளை வந்து விட்டது* சக்கரை நோயை வைத்து இந்தியாவில் மட்டுமே *700 மருந்து நிறுவனங்கள்* (க...