சிவபக்தர்கள் ஐந்து வித காரியங்களைச் செய்து கொண்டிருக்க வேண்டும்.
அவைகளாவன:
1) விபூதி அல்லது திருநீறு தரித்தல்,
அணியும் காரணம் -- மற்றொரு விளக்கம்
மனித உடலில் நெற்றி என்பது மிக முக்கிய பாகம், அதன் வழியாக மிக அதிக மாக சக்தி வெளிப்படும், உள்ளிழுக்கவும் செய்யும். இது ஒரு வர்ம ஸாதனம் கூட. சூரிய கதிர்களின் சக்திகளை இழுத்து நெற்றி வழியாக கடத்தும் வேலையை திருநீர் செவ்வனே செய்யும், அதனால்தான் நெற்றியில் திருநீறு பூசுகிறார்கள். மற்றவர்களின் பார்வையினால் வெளிப்படும் சக்திகளும் அவர்களுக்கு தெரியாமலேயே நெற்றி வழியாக அதிகம் கவரப்படும், அவர்களை தன்னிலை இழக்கச்செய்வதும் வசப்படுத்துவதும் இதன் மூலமாக எளிதாக செய்துவிடலாம். மனோ தத்துவம், ஹிப்னாட்டிஸம், மெஸ்மரிஸம் போன்றவற்றிலும் இங்கே பார்வையும் மன எண்ணங்களும் முக்கிய இடம் வகிக்கிறது. கண்ணேறு என்று சொல்லப்படும் தேவையில்லாத எண்ணங்கள் ஊடுறுவதை தடுக்கவும் திருநீறு இடப்படும். ஆக்ஞா தியானம் செய்பவர்களுக்கு உடல் மிக வெப்பம் அதிகரிக்கும். அந்நேரம் சூடு தணிய இங்கே சந்தனம் பூசுவார்கள். மருத்துவ ரீதியாக உடலுக்கு மிக முக்கியமான ஹார்மோன் சுரக்கும் பிட்யூட்டிரி சுரப்பியை தூண்டச்செய்யும் இடம் இந்த நெற்றி ஆகும், ஆக்ஞா தியானம் என்பதே இந்த சுரப்பியை தூண்டத்தான்.
திருநீறு அணியும் இடங்கள்
-------------------------- ----------
உடலில் திருநீறு அணியக்கூடிய இடங்களாகப் பதினெட்டு இடங்கள் குறிப்பிடப்படுகின்றன. அவை
1. தலை நடுவில் (உச்சி)
2. நெற்றி
3. மார்பு
4. தொப்புளுக்கு(கொப்பூழ்) சற்று மேல்.
5. இடது தோள்
6. வலது தோள்
7. இடது கையின் நடுவில்
8. வலது கையின் நடுவில்
9. இடது மணிக்கட்டு
10. வலது மணிக்கட்டு
11. இடது இடுப்பு
12. வலது இடுப்பு
13. இடது கால் நடுவில்
14. வலது கால் நடுவில்
15. முதுகுக்குக் கீழ்
16. கழுத்து முழுவதும்
17. வலது காதில் ஒரு பொட்டு
18. இடது காதில் ஒரு பொட்டு
பலன்கள்
-----------
திருநீறு அணிவதால் தடையற்ற இறைச் சிந்தனை, உயர்ந்த நற்குணங்கள், குறைவற்ற செல்வம், நல்வாக்கு, நல்லோர் நட்பு, போன்ற எல்லா நலமும் பெற்று சிறப்புடன் வாழலாம். உடல் நலனும் இரத்த ஓட்டமும் சீர்படும். பாவங்கள் என வரையறுக்கப் பட்டவைகளை ஒதுக்கும் மனப் பாங்கும், தொல்லைகள் அனைத்தையும் அழித்தும் அனைத்துப் பேறுகளையும் அளித்துப் பிறவிப் பிணி அறுத்து மோக்கம்(மோட்சம்) செல்ல வழிகாட்டும். இதைத்தான் திருமூலர் பின்வரும் பாடலில் தெரிவிக்கிறார்.
கங்காளன் பூசும் கவசத் திருநீற்றை
மங்காமல் பூசி மகிழ்வரே யாமாகில்
தங்கா வினைகளும் சாரும் சிவகதி
சிங்கார மான திருவடி சேர்வரே!
2. ருத்ராக்ஷம் அணிதல்,
ருத்ராக்ஷத்தின் பெருமை மிக அதிகம். ருத்ராக்ஷத்தைச் சிவபெருமானுடைய அடையாளமாகப் பெரியவர்கள் சொல்லுகிறார்கள். ருத்ரனுடைய நேத்திரம் அது. அதைத் தமிழில் ‘திருக்கண்மணி’ என்று சொல்லுவார்கள். மற்ற விருக்ஷங்களுடைய விதைகளுக்கு இல்லாத ஒரு சிறப்பு இந்த ருத்ராக்ஷத்திற்கு உண்டு. இயற்கையில் துளையோடு உண்டாவது ருத்ராக்ஷம் ஒன்றுதான். இந்த ருத்ராக்ஷம் பாரத தேசத்தில் நேபாளத்தில் இருக்கிறது
3. பஞ்சாக்ஷர மந்திரம்,
நான்கு வேதங்களுள் மூன்று வேதங்கள் பிரதானமானவை. மூன்று வேதங்களுள் யஜுர்வேதம் பிரதானமானது. யஜுர் வேதத்திலும் மத்திய காண்டம் பிரதானமானது. மத்திய காண்டத்திலும் ஸ்ரீருத்ரம் பிரதானமானது. ஸ்ரீருத்ரத்திலும் பஞ்சாக்ஷரமாகிய “சிவாய நம” பிரதானமானது. பஞ்சாக்ஷரத்திலும் ‘சிவ’ என்ற இரண்டு எழுத்துக்கள் பிரதானமானவை, வேதத்துக்கு ஜீவாம்சமாக இருப்பவை ‘சிவ’ என்னும் இரண்டு அக்ஷரங்கள். பஞ்சாக்ஷர உபதேசம் நாவுக்கு ஆபரணமாக இருப்பது
(குறிப்பு: பஞ்சாக்ஷர மந்திரத்தை உபதேச பெற்று ஜபம் செய்தல் சிறப்பு. எனினும் உபதேசம் பெறாதவரும் இம்மந்திரத்தைத் தாராளம் சொல்லலாம். கொல்வாரேனும் குணம் பல நன்மைகள் இல்லாரேனும் இயம்புவராயிடின் எல்லாத் தீங்கையும் நீங்குவர் என்பரால் நல்லார் நாமம் நமச்சிவாயவே - சம்பந்தர்
4. வில்வ தளத்தால் பரமேச்வரனைப் பூசித்தல்.
5. இருதயத்தில் சதா சிவத்யானம் செய்தல் இவைகள் ஒவ்வொன்றும் ஈச்வரனுக்கு விசேஷப்ரீதியைக் கொடுக்கக் கூடியது.
சிவத்யானப் பூஜையின் சுருக்கம்
சிவபெருமானைப் பத்மாசனத்திலெழுந்தருளச் செய்து அபிஷேகஞ் செய்து, ஆசனத்தையும், மூர்த்தியையும், வித்தியாதேகத்தையும் பூசிக்கவேண்டும். பின்னர்ப் பரமசிவனை ஆவாகனஞ் செய்து ஸ்தாபனம் சன்னிதானம் முதலியவற்றால் பூசித்து மனத்தால் அபிஷேகஞ்செய்வித்து வஸ்திரம் உபவீதங்களைத் தரிக்க வேண்டும். பின்னர்ச்சந்தனம், புஷ்பம், ஆபரணங்களால் அலங்கரித்துத் தூபதீபம் சமர்ப்பித்து அதன் பின்னர் ஆவரணபூசை செய்து நைவேத்தியம், முகவாசம், தாம்பூலம் என்னுமிவற்றைச் சமர்ப்பித்துத் தூபம் ஆராத்திரிகஞ்செய்து, பவித்திரஞ்சமர்ப்பிக்கவேண்டும். பின்னர் வெண்மையான விபூதியைத் தரித்துக் கண்ணாடி முதலியவற்றால் உபசாரஞ்செய்து, அதன் பின்னர் பலிகொடுத்து பாத்திய முதலியவற்றாலும் சந்தனம் புஷ்பங்களாலும் உபசாரஞ் செய்யவேண்டும். பின்னர் செபம், தோத்திரம் நமஸ்காரம், பிரதக்ஷிணங்களைச்செய்து அட்டபுட்பங்களாலருச்சித்து விசேஷ அர்க்கியத்தால் பூஜைசெய்ய வேண்டும். பின்னர் ஆவரண தேவதைகளுடன் சிவபெருமானைப் பராங்முகார்க்கியத்தால் எழுந்தருளச்செய்து உரிய காலத்தில் மனத்தின்கண் சிவபெருமானை இருத்தி நிவேதனஞ் செய்த அன்னத்தை உட்கொள்ளல் வேண்டும். இவ்வாறு சிவபூஜா முறையில் சுருக்கம் அறிந்து கொள்க.

No comments:
Post a Comment