படித்ததில் பிடித்தது
எங்களின் ஆன்லைன் சேவை - http://astroav.in/
வீடுகளில் வளர்க்கக் கூடாத மரங்கள்
*பருத்தி, அரசமரம், புளிய மரம், நாவல், நெல்லி, எருக்கு, அகத்தி, பனை மரம், ஆலமரம்*.*வீடுகட்ட உபயோகிக்கக் கூடிய மரங்கள்?*
*தேக்கு, வேங்கை, இலுப்பை, வேம்பு*
*வீட்டில் வளர்க்கக் கூடிய மரங்கள்?*
*வேம்பு, மாமரம், தென்னை, பவளமல்லி, பன்னீர் மரம், சப்போட்டா, வாழை, தேக்கு*.
*மரங்களின் இனம் :*
*ஆண்மரம் கீழ்பாகம் மற்றும் மேல்பாகம் வரை ஒரே சீராக இருக்கும். பெண் மரம் கீழ்பாகம் பெரியதாகவும், நுனிபாகம் சிறிதாகவும் காணப்படும். அலிமரம் அடிப்பகுதி பெருத்தும் நடுப்பகுதி குறுகியும் மேல்பகுதி பெருத்தும் காணப்படும். ஆண் மரங்களை தூண்கள், கால்கள் அமைக்க உபயோகப்படுத்தலாம். பெண் மரங்களை உத்திரம், குறுக்குச் சட்டம், பூஜை அறையில் இவ்வித மரச்சட்டங்களை உபயோகிக்கலாம். அலிமரங்கள் சாதாரண சட்டங்கள் அமைக்கவும் கிணறுகளுக்கு மேலாகவும் உபயோகப்படுத்தலாம்*.
*மரங்களின் சிறப்பு :*
*வேப்பமரத்தை உபயோகப்படுத்துவது அரசியல் மற்றும் சமூகத்தில் ஈடுபாடு உடையவர்களுக்கும் தொழில் போட்டி உள்ளவர்களுக்கு நன்மை தரும்*.
*இலுப்பை மரத்தை உபயோகப்படுத்துவது இரசாயனம் மற்றும் மருத்துவத் தொழில்புரிபவர்களுக்கு நன்மை உண்டு செய்யும்*.
*மாமரத்தை உபயோகப்படுத்தி வீடு கட்டுவது, வேதம் ஓதுபவர்களுக்கும், தர்மஸ்தாபணம் நடத்துபவர்களுக்கும் நன்மை தரும்*.
*வேங்கை மரம், காவல் மற்றும் இராணுவப் பணிபுரிபவர்களுக்கு ஏற்றது. தேக்கு மரத்தைப் பயன்படுத்தி வீடு அமைப்பது எல்லா இனத்தவருக்கும் பொருந்தும்*.
*விருட்சங்களில் வீட்டில் பன்னீர் மரம் இருப்பதும் பெண்களுக்கு ஏற்படும் வியாதிகளைப் போக்கக் கூடியதாகும்*.
*மரங்களின் நன்மை :*
*வீடுகளைச் சுற்றி இடம் இருந்தால் மரங்கள் அமைவதும் கோடைகளுக்கு ஏற்ற அமைப்பை வீட்டிற்கு ஏற்படுத்தும். பொதுவாக வீடுகளில் தென்னை, வாழை, பலா, மாமரம், மாதுளை, எலுமிச்சை, வேம்பு, போன்ற மரங்கள் அமைவது நன்மை*.
*வடகிழக்கில் உயரமான மற்றும் பருத்த மரங்கள் அமையக் கூடாது. மரங்கள் வைக்க முடியாத அடுக்குமாடி வீடுகளில் பால்கனி, மாடி வீட்டின் காலிமனைப் பகுதி போன்ற இடத்தில் செடிகளை தொட்டிகளில் வைப்பது நன்மை தரும்*.
No comments:
Post a Comment