Saturday, 25 March 2017

படித்ததில் பிடித்தது

                   படித்ததில் பிடித்தது

எங்களின் ஆன்லைன் சேவை - http://astroav.in/


ஒரு கிராமத்திற்கு வந்த ஒருவன் தான் 25,000 ரூபாய் விலையில் கழுதை வாங்குவதாக ஊர்காரர்களிடம் தெரிவித்தான் .
பக்கத்துக்கு காட்டில் நிறைய கழுதைகள் இருப்பதை அறிந்த கிராம மக்கள் அவற்றை பிடிக்க தொடங்கினர் 25,000 ரூபாய் விலையில் ஆயிரக்கணக்கான கழுதைகளை அவன் வாங்கினான். அந்த மக்கள் தங்கள் முயற்சிகளை கைவிட்டதால் கழுதை சப்ளை குறைந்து விட்டது . எனவே அவன் கழுதைக்கு 50,000 ரூபாய் விலை அறிவித்தான் . இதனால் ஊர்க்காரர்கள் மீண்டும் கழுதை பிடிப்பதில் இறங்கினர் .
சீக்கிரமே சப்ளை குறைந்தது , மக்கள் தங்களுடைய வேலைக்கு திரும்பி சென்றனர் . அதனால் கழுதைக்கு கொடுக்கப்படும் விலை 1 லட்சம் ரூபாயாக அதிகரித்தது . கழுதைகள் குறைந்திருக்க வேண்டும் ஒரு கழுதை கூட கண்ணில் தென்படவில்லை .
தற்போது கழுதையை 2 லட்சம் ரூபாய்க்கு வாங்குவதாக அறிவித்தான் .இருந்தாலும் வேறு வேலையாக அவன் நகரத்திற்கு சென்று விடவும் , அவனுடைய சார்பில் அவனுடைய உதவியாளன் தற்போது வாங்கினான் .
அந்த உதவியாளன் ஊர்காரர்களை அழைத்து தனது முதலாளி முன்பே வாங்கி கூண்டில் வைத்திருக்கும் கழுதைகளை காட்டினான் . நான் இவற்றை 1 1/2 லட்சத்திற்கு உங்களுக்கு விற்கிறேன் . நகரத்திற்கு சென்றவர் திரும்பி வரும்போது அவரிடம் 2 லட்சம் ரூபாய்க்கு அவற்றை விற்று விடுங்கள் என்றான் .
ஊர்க்காரர்கள் ரெம்பவும் முயன்று ,தங்களுடைய அத்தனை சேமிப்புகளையும் வைத்து கழுதைகளை வாங்கி கொண்டனர் .ஆனால் அதன் பிறகு அந்த வியாபாரியையோ அவனுடைய உதவியாளனையோ அவர்கள் ஒருபோதும் பார்க்கவே இல்லை. எங்கு பார்த்தாலும் கழுதைகள் மட்டுமே இருந்தன ."
இதை தான் பன்னாட்டு முதலாளிகள் செய்கிறார்கள் ... தேவை இல்லாத பொருளுக்கு விலை ஏற்றிவிட்டு அவனுங்க ஓடிப்போயிடுறானுங்க நம்மாளுங்க மாத்தி மாத்தி வாங்கிகிட்டு நட்டப்பட்டு நிப்பானுங்க .
தனியார்மய தாராளமய கொள்கையை முழுமையாக ஏற்றுக்கொண்டால் நமது நிலைமையும் இது தான் .

No comments:

Post a Comment

ஆண் அழுவான்...

 தாய் தந்தை இறந்தால் ஆண் அழுவான்... *தனக்கு குழந்தை பிறக்கப்போகிறது என்று நற்செய்தி கேட்டு ஆண் அழுவான்... *தன் குழந்தைகளில் ஒருவர் நோய்வாய்ப...