Saturday, 25 March 2017

படித்ததில் பிடித்தது

                  படித்ததில் பிடித்தது

எங்களின் ஆன்லைன் சேவை - http://astroav.in/


வெற்றிபெற 14 வழிகள்!
 1. *பத்து நிமிடங்கள் முன்னதாக:*
*காலை 6 மணிக்கு எழுபவரா நீங்கள்? 5.50க்கு எழுந்து பழகுங்கள். கூடுதலாகக் கிடைக்கிற பத்து நிமிடத்தில், அமைதியான காலை நேரத்தில் உங்களின் அன்றைய வேலைக்கான ஆற்றலின் கதவுகள் அகலத் திறப்பதை உணர்வீர்கள்.*
2. *பத்து நிமிடங்கள் மௌனமாக:*
*நீங்கள் தியானப் பயிற்சி மேற்கொள்ளாதவராக இருந்தால், விரைவில் சரியான இடத்தில் தியானம் பழகுங்கள். அதுவரை ஒரு நாளின் மத்தியில், பத்து நிமிடங்களாவது மௌனத்தில் இருங்கள்.*
3. *முப்பது நிமிடங்கள்:*
*ஒரு நாளின் முப்பது நிமிடங்களை உங்கள் ஆரோக்கியத்திற்காகப் பயன்படுத்துங்கள். உடற்பயிற்சி, நடைப்பயிற்சி, யோகா என்று உங்கள் வழக்கம் எதுவாக இருந்தாலும் சரி*.
4. *உணவிலும் ஒழுங்கு:*
*வேலைச் சுமையைக் காரணம்காட்டி உணவு நேரத்தை அடிக்கடி தள்ளிப் போடுவது, உங்கள் உடலியக்கத்துக்குள் பிரச்சினையை ஏற்படுத்தும். உணவுப் பழக்கத்திலும் இதமான முறைகளைக் கையாளுங்கள், வயதுக்கேற்ப சாப்பிடுங்கள்.*
5. *மறுநாளின் டைரியை முதல் நாளே எழுதுங்கள்:* *Day Task.*
6. *அடைசல்கள் அகற்றுங்கள்:*
*அடைசல்கள், குப்பைகள், குவிந்துகிடக்கும் கோப்புகள் ஆகியவற்றில் பிரபஞ்ச சக்தி தேங்கிவிடுகிறது. அத்தகைய இடங்களில் செயலாற்றல் தூங்கிவிடுகிறது*.
7. *மனிதர்களை நெருங்குங்கள்:*
*இந்த உலகில் காரணத்துடனோ காரணம் இன்றியோ மனிதர்களை வெறுக்கும்போது, அந்த வெறுப்பு நமக்குள்ளே வேண்டாத சுரப்பிகளைத் தூண்டி பதட்டம் சுரக்க வைக்கிறது. மனிதர்களை நிறைகுறைகளுடன் ஏற்றுக்கொண்டு அவர்களை நேசிக்கத் தொடங்குங்கள். எல்லோரையும் நேசிப்பது அவர்களுக்கு நல்லதோ இல்லையோ, உங்களுக்கு ரொம்ப நல்லது.*
8, *அடுத்து என்ன? இதுவே மந்திரம்:*
*வெற்றியோ தோல்வியோ, சாதனையோ சவாலோ, எது நேர்ந்தாலும் அடுத்தது என்ன என்று கேளுங்கள். அப்போதுதான் அடுத்த கட்டம் நோக்கி நகர முடியும். குழந்தை கண்ணாடியை உடைத்துவிட்டதா? அடுத்தது என்ன? அள்ளிப்போட வேண்டியதுதான். (WHAT NEXT?) இது வெற்றியின் மந்திரங்களில் முக்கியமானது.*
9. *நம்பிக்கைத் தீர்மானம் நிறைவேற்றுங்கள்:*
*ஒவ்வொருநாள் விடியலிலும் உங்கள் மீது நீங்களே நம்பிக்கைத் தீர்மானம் நிறைவேற்றுங்கள். “இதே உற்சாகத்துடன் வேலையில் இறங்கலாம். இன்றைய வேலைகளை சரியாக முடிக்கலாம்” என்று உங்கள் மீது நீங்களே நம்பிக்கை வைத்து நாளைத் தொடங்குங்கள்.*
10. *நன்றி அறிவிப்புத் தீர்மானமும் போடுங்கள்:*
*ஒவ்வொருநாள் இரவும் உறங்கப் போவதற்கு முன்னால், நடந்து முடிந்த வேலைகளுக்காக, கடவுளுக்கும் துணை நின்றவர்களுக்கும் மனசுக்குள்ளேயே நன்றி சொல்லுங்கள்.*
11. *பணத்துக்கு வேலை கொடுங்கள்:*
*உங்கள் வருமானம் எவ்வளவாக இருந்தாலும் அந்தப் பணத்துக்கு வேலை கொடுங்கள். பணம், தன்னைத்தானே பலமடங்கு பெருக்கிக்கொள்கிற பேராற்றல் உடையது. ஈட்டிய பணத்தை புத்திசாலித்தனமாக முதலீடு செய்யுங்கள். அது தானாகவே பெருகும்*.
12. *கடிகாரத்தை மட்டுமல்ல நேரத்தையும் கையில் கட்டுங்கள்:*
*உங்கள் நேரம் உங்கள் பொறுப்பிலும் கண்காணிப்பிலும் இருக்கட்டும். அரட்டை – அவதூறு – அனாவசியமான பேச்சு என்று அடுத்தவர்கள் உங்கள் நேரத்தைக் கொள்ளையடிக்க இடம் கொடுக்காமல் விழிப்புடன் இருங்கள்*.
13. *நகைச்சுவை உணர்வை வளர்த்துக் கொள்ளுங்கள்:*
*இறுக்கமாய் இருப்பதால் நாம் எதையும் சாதிக்கப் போவதில்லை – மன இறுக்கத்தையும் மன அழுத்தத்தையும் வளர்த்துக் கொள்வதைத் தவிர!! வெற்றியாளர்களும் வரலாற்று புருஷர்களும் நகைச்சுவை உணர்வு நிறைந்தவர்களாகவே இருந்திருக்கிறார்கள். நகைச்சுவை உணர்வு, வாழ்வின் பூட்டப்பட்ட பல கதவுகளைத் திறந்துவிடும்.*
14. *மனிதத்தன்மையே கட தன்மையின் ஆரம்பம்:*
*மற்றவர்களின் சிரமங்களைப் புரிந்துகொள்வதும், மனித நேயத்துடன் உதவுவதும், மற்றவர்களை மன்னிப்பதும், மனிதர்களின் பகுதிநேர வேலை. கடவுளுக்கோ, முழுநேர வேலை. முதல் உங்களையும், பிறகு மற்றவர்களையும் முழுமனதோடு மன்னித்து, மலர்ச்சியாய்*– *மகிழ்ச்சியாய்– வாழ்க்கை என்கிற கொண்டாட்டத்தில் தீவிரமாகப் பங்கெடுங்கள்.*

No comments:

Post a Comment

ஆண் அழுவான்...

 தாய் தந்தை இறந்தால் ஆண் அழுவான்... *தனக்கு குழந்தை பிறக்கப்போகிறது என்று நற்செய்தி கேட்டு ஆண் அழுவான்... *தன் குழந்தைகளில் ஒருவர் நோய்வாய்ப...