எளிய ஸ்ரீ சக்ர வழிபாடு - தமிழில் :
ஸ்ரீ சக்ர பூஜை தினசரி வழிபாடாகவும் அல்லது வெள்ளிக்கிழமை, பௌர்ணமி மற்றம் விசேஷ தினங்களில் செய்யப்படும் சிறப்பு வழிபாடாகவும் செய்யப்படலாம்.
ஸ்ரீ சக்ர உபாசனையில் விருப்பமும், ஈடுபாடும் உடையவர்கள் முறையான குரு தீட்சை பெற்று பிறகு நாற்பத்தியெட்டு நாட்கள் விரதத்துடன் வழிபட்டு ஆலயதரிசனம், வேள்வி தானம், அன்னதானம் போன்றவற்றுடன் நிறைவு செய்ய நற்பலன் கிடைக்கும்.
உள்ளத்தூய்மை, உடல் தூய்மையுடன் பின்வரும் எளிய வழிபாட்டை அனைவரும் செய்யலாம்.
ஸ்ரீ சக்ர பூஜை செய்பவர்கள் முதலில் கிழக்கு முகமாக நின்று சூரிய நமஸ்காரம் செய்து கொண்டு பதினொரு முறை ஓம்காரத்தை உச்சரிக்க வேண்டும்.
காயத்ரி மந்திர உபதேசம் உள்ளவர்கள் அங்கநியாசம், கரநியாசம், ஆசமனம் மற்றம் பிராணாயாமத்துடன் காயத்ரி மந்திரத்தை பத்து முதல் நூற்றியெட்டு முறை ஜபம் செய்து கொள்ளலாம்.
வடமொழியில் உள்ள மந்திரங்களை தகுந்த உச்சரிப்புடன் சொல்லும்போது அளப்பரிய ஆற்றல் உண்டாகும்.
ஆனால் அதற்கான பயிற்சியின்றி உச்சரிப்பு பிழையேற்படுமேயானால் பலனில்லை.
இவை வடமொழியில் உள்ள மந்திரங்களின் நேரடி மொழி பெயர்ப்புகள் ஆகும்.
எனவே எளிதில் சொல்லவும் வழிவகை உண்டு.
எண்ணம், சொல், செயல் மூன்றும் ஒன்றிணைந்து இவற்றை உச்சரித்தால் அம்பிகையின் அருள் நிச்சயம் கிட்டும்.
விநாயகர் வழிபாடு :
ஐந்து கரத்தனை யானை முகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்திமகன்றனை ஞானக் கொழுந்தினைப்
புந்தியில் வைத்து அடி போற்றுகின்றேனே.
குருவழிபாடு :
தெளிவு குருவின் திருமேனி காண்டல்
தெளிவு குருவின் திருநாமம் செப்பல்
தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்
தெளிவு குருவுரு சிந்தித்தல் தானே.
ஸ்ரீ சக்ரத்தில் ஸ்ரீ லலிதாம்பிகை ஆவாஹனம் :
குறிப்பிட்ட மலர்களை இருகரங்களில் ஏந்தி, பின்வரும் அந்தாதியைப் பாடி சிரசிற்கு மேலே கரங்களைக் குவித்து அம்பிகையை சிவசக்தி ஐக்கிய ரூபிணியாக தியானித்து மலர்களை ஸ்ரீ சக்ரத்தில் சேர்த்தல் வேண்டும்.
வெளிநின்ற திருமேனியை
பார்த்தென்விழியும் நெஞ்சம்
களிநின்ற வெள்ளம் கரைகண்ட
தில்லை கருத்திள்ளே
தெளி நின்ற ஞானம் திகழ்கின்ற
தென்ன திருவுளமோ
ஒளிநின்ற கோணங்கள் ஒன்பதும்
மேவி உறைபவளே
மலர் அர்ச்சனை :
குங்குமத்தாலோ, குறிப்பிட்ட மலர்களாலோ இனிவரும் அர்ச்சனைகளைச் செய்யலாம்.
முதலாவது ஆவரணம் | நான்கு சதுர ரேகைகளும் மூன்று வட்டங்களும் | த்ரைலோக்ய மோகனச் சக்ரம் :
ஓம் அணிமா சித்தியேபோற்றி
ஓம் லகிமா சித்தியேபோற்றி
ஓம் மஹிமா சித்தியே போற்றி
ஓம் ஈசித்வ சித்தியே போற்றி
ஓம் வசித்வ சித்தியே போற்றி
ஓம் ப்ரகாம்ய சித்தியேபோற்றி
ஓம் புத்தி சித்தியே போற்றி
ஓம் இச்சா சித்தியே போற்றி
ஓம் ப்ராப்தி சித்தியே போற்றி
ஓம் சர்வகாம சித்தியே போற்றி
ஓம் ப்ராஹ்மியே போற்றி
ஓம் மாஹேஸ்வரியே போற்றி
ஓம் கௌமாரியே போற்றி
ஓம் வைஷ்ணவியே போற்றி
ஓம் வாராஹியே போற்றி
ஓம் மாஹேந்திரியே போற்றி
ஓம் சாமுண்டா போற்றி
ஓம் மகாலட்சுமியே போற்றி
ஓம் சர்வசம்ஷோபிணி முத்ரா சக்தியே போற்றி
ஓம் சர்வவித்ராவிணி முத்ரா சக்தியே போற்றி
ஓம் சர்வகர்ஷிணி முத்ரா சக்தியே போற்றி
ஓம் சர்வ வசங்கரீ முத்ரா சக்தியே போற்றி
ஓம் சர்வோன்மாதினி முத்ரா சக்தியே போற்றி
ஓம் சர்வ மகாங்குசாமுத்ரா சக்தியே போற்றி
ஓம் சர்வ கேசரீ முத்ரா சக்தியே போற்றி
ஓம் சர்வ யோநி முத்ரா சக்தியே போற்றி
ஓம் சர்வ திரிகண்டா முத்ரா சக்தியே போற்றி
மூன்று லோகங்களையும் மயக்கும் சக்தி வாய்ந்த த்ரைலோக்ய மோகனச் சக்ரத்தின் அதிதேவதையாகிய திரிபுரா தேவிக்கும், ப்ரகடயோகினி சக்திகளுக்கும் பரிவார தேவதைகளுக்கும் இந்த மலர் அர்ச்சனையை மகிழ்வோடு சமர்ப்பிக்கிறேன்.
இரண்டாவது ஆவரணம் | சர்வாசா பரிபூரகச் சக்ரம் 16 இதழ் தாமரை :
ஓம் காமாகர்ஷிணி நித்யகலா தேவியே போற்றி
ஓம் புத்யாகர்ஷிணி நித்யகலா தேவியே போற்றி
ஓம் அகங்காரகர்ஷிணி நித்யகலா தேவியே போற்றி
ஓம் சப்தாகர்ஷிணி நித்யகலா தேவியே போற்றி
ஓம் ஸ்பரிசாகர்ஷிணி நித்யகலா தேவியே போற்றி
ஓம் ரூபாகர்ஷிணி நித்யகலா தேவியே போற்றி
ஓம் ரசாகர்ஷிணி நித்யகலா தேவியே போற்றி
ஓம் கந்தாகர்ஷிணி நித்யகலா தேவியே போற்றி
ஒம் சித்தாகர்ஷிணி நித்யகலா தேவியே போற்றி
ஓம் தைர்யாகர்ஷிணி நித்யகலா தேவியே போற்றி
ஓம் ஸம்ருத்யா கர்ஷிணி நித்யகலா தேவியே போற்றி
ஓம் நாமா கர்ஷிணி நித்யகலா தேவியே போற்றி
ஓம் பீஜாகர்ஷிணி நித்யகலா தேவியே போற்றி
ஓம் ஆத்மாகர்ஷிணி நித்யகலா தேவியே போற்றி
ஓம் அம்ருதாகர்ஷிணி நித்யகலா தேவியே போற்றி
ஓம் சரீராகர்ஷிணி நித்யகலா தேவியே போற்றி
எல்லா விருப்பங்களையும் நிறைவேற்றி வைக்கும் சக்தி வாய்ந்த சர்வாசா பரிபூரகச் சக்ரத்தின் அதிதேவதையாகிய திரிபுரேசிக்கும், குப்த யோகினிகளுக்கும், பரிகார தேவதைகளுக்கும் இந்த மலர் அர்ச்சனையை மகிழ்வோடு சமர்பிக்கிறேன்.
மூன்றாவது ஆவரணம் | சர்வசம்ஷோபண சக்ரம் எட்டு இதழ் தாமரை :
ஓம் அனங்க குஸுமா தேவியே போற்றி
ஓம் அனங்க மேகலா தேவியே போற்றி
ஓம் அனங்க மதனா தேவியே போற்றி
ஓம் அனங்க மதனாதுரா தேவியே போற்றி
ஓம் அனங்க ரேகா தேவியே போற்றி
ஓம் அனங்க வேகினிதேவியே போற்றி
ஓம் அனங்க அங்குசா தேவியே போற்றி
ஓம் அனங்க மாலினி தேவியே போற்றி
அனைத்தையும் ஓய்வின்றி இயங்க வைக்கும் சர்வசம்ஷோபண சக்ரத்தின் அதிதேவதையாகிய திரிபுர சுந்தரி தேவிக்கும், குப்ததர யோகினி சக்திகளுக்கும், சகல பரிவார தேவதைகளுக்கும் மகிழ்வோடு இந்த மலர் அர்ச்சனையை சமர்பிக்கிறேன்.
நான்காவது ஆவரணம் | சர்வ சௌபாக்யதாயகச் சக்ரம் :14 கோணங்கள் :
ஓம் சர்வ சம்க்ஷோபிணி சக்தியே போற்றி
ஓம் சர்வ வித்ராவிணி சக்தியே போற்றி
ஓம் சர்வாகர்ஷிணி சக்தியே போற்றி
ஓம் சர்வாஹ்லாதினி சக்தியே போற்றி
ஓம் சர்வ சம்மோஹினி சக்தியே போற்றி
ஓம் சர்வ ஸ்தம்பினி சக்தியே போற்றி
ஓம் சர்வ ஜ்ரும்பிணி சக்தியே போற்றி
ஓம் சர்வ வசங்கரி சக்தியே போற்றி
ஓம் சர்வ ரஞ்சனி சக்தியே போற்றி
ஓம் சர்வ வோன்மாதினி சக்தியே போற்றி
ஓம் சர்வார்த்த சாதினி சக்தியே போற்றி
ஓம் சர்வ சம்பத்பூரணி சக்தியே போற்றி
ஓம் சர்வ மந்திரமயி சக்தியே போற்றி
ஓம் சர்வ த்வந்த்வ சக்தியே போற்றி
எல்லாவிதமான சௌபாக்யங்களையும் நல்கும் சர்வ சௌபாக்யதாயகச் சக்ரத்தின் அதிதேவதையான திரிபுராவாசினிக்கும், சம்ப்ரதாய யோகினி சக்திகளுக்கும், பரிவார தேவதைகளுக்கும் இந்த மலர் அர்ச்சனையை மகிழ்வோடு சமர்ப்பிக்கிறேன்.
ஐந்தாவது ஆவரணம் | சர்வார்த்த சாதகச் சக்ரம் : வெளிப்பத்து கோணங்கள் :
ஓம் சர்வ சித்திப்ரதா தேவியே போற்றி
ஓம் சர்வ சம்பத்ப்ரதா தேவியே போற்றி
ஓம் சர்வ ப்ரியங்கரி தேவியே போற்றி
ஓம் சர்வ மங்களகாரிணி தேவியே போற்றி
ஓம் சர்வ காமப்ரதா தேவியே போற்றி
ஓம் சர்வ துக்கவிமோசினி தேவியே போற்றி
ஓம் சர்வ மிருத்யு ப்ரசமனி தேவியே போற்றி
ஓம் சர்வ விக்னநிவாரிணி தேவியே போற்றி
ஓம் சர்வ சௌபாக்யதாயினி தேவியே போற்றி
அனைத்து காரியங்களையும் சாதகமாக நிறைவேற்றியருளும் சர்வார்த்த சாதகச் சக்ரத்தின் அதிதேவதையாகிய திரிபுரா தேவிக்கும், குலோதீர்ண யோகினி சக்திகளுக்கும், பரிவார தேவதைகளுக்கும் இந்த மலர் அர்ச்சனையை மகிழ்வோடு சமர்பிக்கிறேன்.
ஆறாவது ஆவரணம் | சர்வ ரக்ஷாகர சக்ரம் : உள்பத்து கோணங்கள் :
ஓம் சர்வக்ஞா தேவியே போற்றி
ஓம் சர்வசக்தி தேவியே போற்றி
ஓம் சர்வ ஐஸ்வர்யப்ரதா தேவியே போற்றி
ஓம் சர்வ ஞானமயி தேவியே போற்றி
ஓம் சர்வ வ்யாதி நிவாரிணி தேவியே போற்றி
ஓம் சர்வாதார ஸ்வரூபா தேவியே போற்றி
ஓம் சர்வ பாபஹர தேவியே போற்றி
ஓம் சர்வானந்த மயீ தேவியே போற்றி
ஓம் சர்வரக்ஷா ஸ்வரூபிணி தேவியே போற்றி
ஓம் சர்வேப்சித பலப்ரதா தேவியே போற்றி
அனைத்து ஆபத்துக்களிலிருந்தும் காப்பாற்றும் சர்வ ரக்ஷாகரச் சக்ரத்தின் அதிதேவதையான திரிபுரா மாலினீ தேவிக்கும், நிகர்ப்ப யோகினி சக்திகளுக்கும், பரிவார தேவதைகளுக்கும் இந்த மலர் அர்ச்சனையை சமர்ப்பிக்கிறேன்.
ஏழாவது ஆவரணம் | சர்வ ரோகஹரச் சக்ரம் : எட்டுக்கோணங்கள் :
ஓம் வசினீவாக் தேவியே போற்றி
ஓம் காமேஸ்வரி தேவியே போற்றி
ஓம் மோதினீ தேவியே போற்றி
ஓம் விமலா தேவியே போற்றி
ஓம் அருணா தேவியே போற்றி
ஓம் ஜயினீ தேவியே போற்றி
ஓம் சர்வேஸ்வரி தேவியே போற்றி
ஓம் கௌலினீ தேவியே போற்றி
எல்லாநோய் நொடிகளையும் நீக்கியருளும், சர்வ ரோகஹரச் சக்ரத்தின் அதிதேவதையாகிய திரிபுர சித்தா தேவிக்கும், ரகஸ்ய யோகினி சக்திகளுக்கும், பரிவார தேவதைகளுக்கும் இந்த மலர் அர்ச்சனையை சமர்ப்பிக்கிறேன்.
எட்டாவது ஆவரணம் | சர்வ சித்திப்ரத சக்ரம் : முக்கோணம் :
ஓம் பாண சக்தி தேவியே போற்றி
ஓம் தனுர் சக்தி தேவியே போற்றி
ஓம் பாச சக்தி தேவியே போற்றி
ஓம் அங்குச சக்தி தேவியே போற்றி
எல்லா சக்திகளும் கைவரப் பெறச் செய்யும் சர்வ சித்திப்ரத சக்ரத்தின் அதிதேவதையாகிய திரிபுராம்பா தேவிக்கும், அதிரகஸ்ய யோகினி சக்திகளுக்கும், பரிவார தேவதைகளுக்கும் இந்த மலர் அர்ச்சனையை மகிழ்வோடு சமர்ப்பிக்கிறேன்.
ஒன்பதாவது ஆவரணம் | சர்வானந்தமயச் சக்ரம் : பிந்து மையம் :
ஓம் திரிபுரா தேவியே போற்றி
ஓம் திரிபுரேசி தேவியே போற்றி
ஓம் திரிபுர சுந்தரி தேவியே போற்றி
ஓம் திரிபுராவாசினி தேவியே போற்றி
ஓம் திரிபுரா ஸ்ரீ தேவியே போற்றி
ஓம் திரிபுரா மாலினி தேவியே போற்றி
ஓம் திரிபுரா சித்தா தேவியே போற்றி
ஓம் திரிபுராம்பிகா தேவியே போற்றி
ஓம் மகாதிரிபுர சுந்தரி தேவியே போற்றி
ஓம் ஸ்ரீ லலிதாம்பிகையே போற்றி
உலகவாழ்வின் துன்பங்களையெல்லாம் நீக்கி பேரன்பு, பேரறிவு, பேராற்றல் யாவும் தந்து ஞான ஒளியில் என் ஆன்மாவைப் பிரகாசிக்கச் செய்யும் ஸ்ரீ மஹா திரிபுரசுந்தரி தேவியாகிய, சிவசக்தி இணைந்த வடிவாகிய லலிதாம்பிகை அன்னையின் திருவடிகளுக்கும், பராபராதி ரகஸ்ய யோகினி சக்திகளுக்கும், பரிவார தேவதைகளுக்கும் மகிழ்வுடன் இந்த அர்ச்சனையை சமர்ப்பிக்கிறேன்.
தூபம், தீபம் காட்டி நைவேத்யம் படைத்து கற்பூர ஆரத்தியுடன் பூஜையை நிறைவு செய்யலாம்.
ஸ்ரீ சக்ர பூஜை செய்யும் சுமங்கலிகள் மற்ற பெண்களுக்கு மஞ்சள், குங்குமம், வெற்றிலை, பாக்கு, பழம், பூச்சரம், மஞ்சள் கயிறு, வளையல், இரவிக்கை துணி ஆகிய மங்கலப் பொருட்களை வழங்கி அவர்களின் நல்வாழ்த்துக்களைப் பெற்றுக் கொள்வது அவசியம்.
கணவன், மனைவி, குழந்தைகளுடன் இவ்வழிபாட்டினைச் செய்வது மிகவும் நல்லது.
ஸ்ரீ சக்ரம் உலக சமாதானம் மற்றும் ஒற்றுமையின் சின்னம் ஆகும்.
எனவே அகில உலகமும் அமைதியுடனும், ஒற்றுமையுடனும், எல்லா நலன்களுடனும் வாழ வேண்டும் என்ற பொதுப் பிரார்த்தனையையும் செய்வது சிறப்பு.
'ஸ்ரீ சக்ர' வழிபாட்டின் முக்கியத்துவத்தையும், அதன் முறைகளையும் விளக்குகிறது.
அதன் சாராம்சத்தை கீழே காணலாம்:
ஸ்ரீ சக்ரத்தின் முக்கியத்துவம்:
ஸ்ரீ சக்ரம் என்பது தேவியின் ஜோதிமயமான வடிவம் மற்றும் 'யந்திரங்களின் அரசன்' என்று அழைக்கப்படுகிறது.
இது பிரபஞ்சத்தின் ஏகபிரம்மத் தன்மையை (ஒரே இறைத்தன்மை) விளக்கும் ஒன்பது படிநிலைகளைக் கொண்டது, இவை 'ஆவரணங்கள்' என்று அழைக்கப்படுகின்றன.
மகா விஷ்ணு, சிவன், பிரம்மா போன்ற தேவர்கள் அனைவரும் இந்த யந்திரத்தை வழிபட்டே தங்கள் சக்திகளைப் பெற்றனர்.
வழிபாட்டு முறைகள்:
இந்த வழிபாடு சமய பேதங்களுக்கு அப்பாற்பட்டது, எனவே அனைத்து ஆலயங்களிலும், இல்லங்களிலும் இதை வைக்கலாம்.
இல்லங்களில் பெண்கள் இந்த வழிபாட்டைச் செய்ய முழுppp தகுதியுடையவர்கள்.
வடமொழி மந்திரங்களை உச்சரிக்கத் தெரியாதவர்களும், கொடுக்கப்பட்டுள்ள தமிழ் மொழிபெயர்ப்புகளைப் பயன்படுத்தி எளிதாக வழிபடலாம்.
வழிபாட்டின் போது உடல் தூய்மை, மனத் தூய்மை மற்றும் வாசனை மிகுந்த மலர்களைக் கொண்டு அர்ச்சனை செய்வது அவசியம்.
ஒன்பது ஆவரணங்கள் (நிலைகள்):
ஸ்ரீ சக்ரத்தின் ஒன்பது ஆவரணங்கள் மற்றும் அவற்றின் சிறப்புகள்:
முதல் ஆவரணம்: த்ரைலோக்ய மோகனச் சக்ரம் - மூன்று உலகங்களையும் வசப்படுத்தும்.
இரண்டாவது ஆவரணம்: சர்வா ஸாபரிபூரகச் சக்ரம் - விருப்பங்களை நிறைவேற்றும்.
மூன்றாவது ஆவரணம்: சர்வ சம்ஷோபண சக்ரம் - அனைத்தையும் இயங்க வைக்கும்.
நான்காவது ஆவரணம்:
சர்வ சௌபாக்யதாயகச் சக்ரம் - எல்லா சௌபாக்கியங்களையும் நல்கும்.
ஐந்தாவது ஆவரணம்: சர்வார்த்த சாதகச் சக்ரம் - காரியங்களை வெற்றிபெறச் செய்யும்.
ஆறாவது ஆவரணம்:
சர்வ ரக்ஷாகரச் சக்ரம் - ஆபத்துக்களில் இருந்து பாதுகாக்கும்.
ஏழாவது ஆவரணம்:
சர்வ ரோகஹரச் சக்ரம் - நோய்களைப் போக்கும்.
எட்டாவது ஆவரணம்: சர்வ சித்திப்ரத சக்ரம் - சித்திகளை அளிக்கும்.
ஒன்பதாவது ஆவரணம்: சர்வானந்தமயச் சக்ரம் (பிந்து) - இதுவே பேரானந்தத்தையும் ஞானத்தையும் அளிக்கும் மையம்.
வழிபாட்டுப் பலன்கள்:
முறைப்படி வழிபாடு செய்பவர்களுக்குக் கல்வி, செல்வம், ஆரோக்கியம், எதிர்ப்புகள் நீங்குதல், மற்றும் ஆபத்துக்களில் இருந்து பாதுகாப்பு கிடைக்கும்.

No comments:
Post a Comment