Sunday, 7 July 2019

பித்ருக்களின் மகிமை ​

                                                     பித்ருக்களின் மகிமை
ஒரு சிலர் இப்படி பேசுவதை பார்த்திருப்போம் ....
அப்பா அம்மா உயிரோட இருக்கும்போது அவாளுக்கு சரியா சோறு போட்டு கவனிச்சுக்க வக்கில்லையாம் ... இப்ப செத்தபிறகு லட்ச லட்சமா செலவு பண்ணி கர்மா பண்றானாம் ! அதெல்லாம் அவா ஆத்மா இவன மன்னிக்காது இப்படி பேசுவதை பார்த்திருப்போம்.
ஒருவர் தன் தாய் தந்தையை உயிரோடு இருக்கும் போது கண்டிப்பாக அவர்களை நன்கு கவனித்து பூஜிக்க வேண்டும் அதில் எந்த மாற்று கருத்தும் இல்லை, ஆனால் பிதுர்க்கள் ஆன பிறகு அவர்கள் மனிதர்களைப்போல் சாபம் விடுபவர்கள் அல்ல, தன் குழந்தைகளை ஆசீர்வதிக வேண்டும் தன் வம்சம் வளர வேண்டும் என்பதே அவர்களின் முதல் நோக்கமாக மாறிவிடுகிறது !
நமது பித்ருக்கள் இருந்தார்கள். செத்து விட்டார்கள். இப்பொழுது இல்லை என்று முடித்து விடாமல் அவர்கள் இப்போதும் இருக்கின்றனர். அவர்களுடன் தொடர்பு கொள்ள முடியும் என்ற நம்பிக்கை நமக்கு வர வேண்டும்.
அவர்கள் தெய்வாம்சம் உடையவர்களாக இருப்பதால், நம்மைப் பற்றி அவர்களுக்குத் தெரியும். தேவர்களைப் போலவே அவர்கள் நமக்கு அனுக்ரஹம் செய்வார்கள்.
அவர்கள் எப்போதும் இனிமையானவர்கள். க்ரூரமானவர்கள் அல்ல. தனது கோத்ரத்தில் வந்தவர்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என நினைப்பவர்கள். பித்ருக்கள் திருப்தி அடைவதன் பயனாக ஸ்ரார்த்தம் செய்பவருக்கு நோயற்ற சந்ததி, செல்வம், வம்சவ்ருத்தி, ஆரோக்யம், ஞானம், இம்மை மறுமையில் மேன்மை கிடைக்கிறது

No comments:

Post a Comment

என் அப்பா வயதாகிவிட்டார், நடந்து செல்லும்போது சுவரின் ஆதரவைப் பெறுவார்

 என் அப்பா வயதாகிவிட்டார், நடந்து செல்லும்போது சுவரின் ஆதரவைப் பெறுவார். இதன் விளைவாக சுவர்கள் நிறமாற்றம் அடைந்தன, அவர் தொட்ட இடமெல்லாம் அவர...