எங்களின் ஆன்லைன் சேவை - http://astroav.in/
இன்னைக்கு மிஸ் பண்ணாதீங்க... நோய்களை விரட்டியடிக்கும் சூப்பர் மந்திரம்
ஒவ்வொரு மாதமும் அமாவாசை அடுத்த மூன்றாம் நாள் வரும் முதல் சந்திர தரிசனமே மூன்றாம் பிறை தரிசனம். மாலை வேளையில் மேற்கு திசையின் அடிவானத்தில் சில நிமிடங்களே நீடிக்கும் இந்த பிறையை தரிசனம் செய்து வந்தால், நம் பாவங்களைப் போக்கி ஆயுளையும், ஆரோக்கியத்தையும் நீடிக்க செய்யும்..
சந்திரனை தரிசிப்பது இந்து மதத்தினருக்கு மட்டுமில்லாமல் அனைத்து மதங்களிலும் முக்கியத்துவம் பெற்றது. இஸ்லாம், ஜைன மதங்களும் மூன்றாம் பிறையைக் கொண்டாடுகின்றன. பிறை தெரிந்தால் தானே ரமலான் நோன்பை துவக்கி, முடிக்கிறார்கள். சாபம் பெற்ற சந்திரனை சிவபெருமான் இந்த மூன்றாம் பிறை நாளில் தலையில் சூடிக்கொண்டதாலேயே சந்திரன் சாப விமோசனம் பெற்றார்.
மந்திரத்தை உச்சரிக்கும் முறை
மூன்றாம் பிறை தரிசனத்தை ஆரம்பிப்பதற்கு முன்னால், இன்றைய தினம் ஒருவருக்காவது உணவை தானம் செய்யுங்கள்.தானங்களில் சிறந்தது அன்னதானம். நோய் நொடியில்லாமல் செல்வ செழிப்புடன், நினைத்ததெல்லாம் நிறைவேற நீங்கள் அதிக சிரமம் எடுக்காமல் வீட்டிலிருந்தப்படியே சந்திர தரிசனத்தைச் செய்யலாம்.
மாலை வேளையில், விளக்கேற்றியவுடன் வாசலில் மாக்கோலம் போட்டு, கோலத்தின் நடுவில் பச்சரிசி அல்லது பச்சை நெல் பரப்பிய தாம்பூலத்தட்டில் காமாட்சி விளக்கை மேற்கு திசை நோக்கி ஏற்றி வைத்திருக்க வேண்டும். ஆமணக்கு எண்ணெய் ஊற்றி பஞ்சு திரி போட்டு விளக்கேற்றி வைப்பது கூடுதல் பலன்களைக் கொடுக்கும்.
வானத்தில் பிறை தெரிந்தவுடன் அவரவர் குலதெய்வங்களை மனத்தில் நிறுத்தி இருகை கூப்பி முதலில் வணங்க வேண்டும். பின்னர் பிறை தரிசனத்தை மூம்மூர்த்தியாக பாவித்து நம் வேண்டுதல்களை சொல்லி முடித்த உடன் காமாட்சி விளக்கை மூன்று முறை வலம் வர வேண்டும். மூன்று முறைகளாக வலம் வந்து, வடக்கு நோக்கி கீழே விழுந்து வணங்கிட வேண்டும். தண்ணீர் எடுத்து பூமியில் விட்டு காமாட்சி விளக்கை அணையாமல் வீட்டிற்குள் எடுத்து சென்று பூஜையறையில் வைக்கவேண்டும். அப்படி காமாட்சி விளக்கை வலம் வரும் பொழுது, மனதிற்குள் உங்கள் பிரார்த்தனைகளை நம்பிக்கையோடு சொல்கிறீர்கள் இல்லையா? அந்த பிரார்த்தனை தான் அதிர்ஷ்டத்தையும், ஆரோக்கியத்தையும் அழைத்து வரும் மந்திரம். நம்பிக்கையுடன் உங்கள் பிரார்த்தனைகளைச் சொல்லி, 'சந்திரனே... அகிலத்தில் அனைத்திற்கும் சாட்சியாக நிற்பவனே... என் எண்ணங்கள் ஈடேற வாழ்த்து!' என்று உங்கள் பிரார்த்தனைகளின் முடிவில் சொல்லி வாருங்கள். இதை போலவே மூன்று பிறைகளையாவது தொடர்ந்து தரிசனம் செய்து வணங்கிட நீண்ட ஆயுளும், ஆரோக்கியமும் கிடைக்கும். தொடர்ந்து பிறை தரிசன வழிபாடு செய்திட மகிழ்ச்சியும் செல்வமும் கூடும்.

மழை மேக மூட்டத்துடன் கூடிய தினங்களில் பிறை தெரியாது. அத்தகைய தினங்களில்
மாலை 6.30 மணி முதல் 7.30 மணி வரை மேற்கு திசையை நோக்கி மேற்சொன்ன
வழிமுறைகளில் வழிபாடு செய்தாலே போதுமானது. பிறை தரிசிக்கும் நாட்களில்
எத்தகைய மனநிலையில் இருக்கிறோமோ அதுவே பிரதிபலிக்கும் என்பது ஐதீகம்.
மாணவர்களுக்கு ஞாபக சக்தி பெருகி படிப்பில் மேன்மை உண்டாகும். பெரியவர்களுக்கு ஆரோக்கியமும்,ஆயுளும் கிடைக்கும். தம்பதி சமேதராக செய்யும் போது ஆதர்ஷ தம்பதியாக திகழும் வாய்ப்பு உருவாகும். குடும்பத்துடன் வழிபடும் போது ஒற்றுமையும் , மகிழ்ச்சியும் நீடிக்கும். கேட்டவருக்கு கேட்ட வரம் அருளும் பிறை தரிசனத்தை அனைவரும் கண்டு வழிபாடு செய்து ஆரோக்கியத்துடன் வாழலாம்.

No comments:
Post a Comment