Sunday, 7 July 2019

ஆன்மிகத்தில் பெண்மை

                                                            ஆன்மிகத்தில் பெண்மை
முனிவர்களின் மனைவிமார்கள் அத்தனைபேரும் ஆன்மிகத்தில் சிறந்தவர்கள். தம்பதி பூஜையும், சுவாசினி பூஜையும், நவராத்ரி 9 நாட்களில் ஒவ்வொரு நாளும் நடைபெறும். கன்யகா பூஜையும், ஸுமங்கல்ய பிரார்த்தனை யும் ஆன்மிகத்தில் பெண்களின் பங்கை எடுத்துக்காட்டும்.


பூணூல் கல்யாணத்தில் தாயை வணங்கி பி¬க்ஷ பெறும் சிறுவன், கணவனுக்கு ஒளபாசனத்தில் ஹவிஸ்யை அளிக்கும் மனைவி, பச்சைப்பிடி சுற்றும் ஆரணங்குகள், ஹாரத்தி எடுத்து வரவேற்கும் ஸுமங்கலிகள், பாலிகை தெளிக்கும் பெண்மணிகள், ஆல் மொட்டுகளை அரைக்கும் சிறுமிகள்... அத்தனையிலும் பெண்மைக்கு முதலிடம் உண்டு.


வேள்விக்கு அவளே அக்னி அளிக்க வேண்டும். ஸாவித்ரீ விரதம், பிருந்தாவன த்வாதசி போன்ற விரதங்கள் பெண்மைக்கு பெருமை சேர்க்கின்றன.குழந்தைகளை ஈன்றவள் அவள் என்பதால் பெண்மைக்கு முதலிடம் உண்டு.


அரக்கர் குலத்தை அழிக்க பெண் வடிவெடுத்து வந்தவள் மஹிஷாசுரமர்த்தினி. 'எப்போதெல்லாம் அரக்கர்கள் தொல்லை தலை தூக்குமோ அப்போதெல்லாம் நான் தோன்றி உங்களையும் உலகையும் பாதுகாப்பேன்’ என்று சொன்னது பெண்மை 
.

தேவி மஹாத்மியம், தேவி பாகவதம் போன்ற நூல்கள் பெண்மையின் பெருமையைப் போற்றிப் புகழ்கின்றன. ஆண்களைவிட எதிலும் குறையாத பெருமை பெற்றவர்கள் பெண்கள் என்பதை வேதம், புராணம், இதிஹாசம் அத்தனையும் வலியுறுத்தும்.


ஆகவே, சுணக்கமுற்று செயல்படாமல் ஒதுங்கியிருப்பது தவறு. உரிமை இருந்தும் உபயோகப்படுத்தாமல் இருந்துகொண்டு, தனது தவற்றை மறைக்க வேறு காரணம் தேடுவது சரியாகாது. தற்போது முழு சுதந்திரத்தில் வளைய வரும் பெண்மை, தன்னை உயர்த்திக் கொள்ள வழி இருந்தும் ஆண்மைக்கு அடிபணிந்து அடிமையாக ஆக்கிக்கொள்வது தவறு. உணர்ந்து செயல்படுங்கள். 

No comments:

Post a Comment

என் அப்பா வயதாகிவிட்டார், நடந்து செல்லும்போது சுவரின் ஆதரவைப் பெறுவார்

 என் அப்பா வயதாகிவிட்டார், நடந்து செல்லும்போது சுவரின் ஆதரவைப் பெறுவார். இதன் விளைவாக சுவர்கள் நிறமாற்றம் அடைந்தன, அவர் தொட்ட இடமெல்லாம் அவர...