Thursday, 4 July 2019

#வாழ்க்கையில்_சீக்கிரமாக_பணக்காரனாக #இராவணன்_கூறும்_இந்த_எளிய_வழிகளை #பின்பற்றுங்கள்


Satheesh KumarFollow

எங்களின் ஆன்லைன் சேவை - http://astroav.in/

வாழ்க்கையில் செல்வந்தராக வேண்டும் என்று யாருக்குத்தான் ஆசை இருக்காது.
அனைவரின் குறிக்கோளுமே தன் வாழ்க்கையில் தானும் தன் குடும்பமும் பணக்கஷ்டம் இன்றி வாழ வேண்டும் என்பதுதான். அதற்காகத்தான் அவர்களின் உழைப்பும், முயற்சியும்.
எவ்வளவு முயற்சித்தாலும் பலருக்கும் அவர்களின் குறிக்கோள் நிறைவேறுவதில்லை.

அதற்கு பல காரணங்கள் இருக்கலாம். ஆனால் இந்த அனைத்து பிரச்சினைகளையும் ஒருவர் தீர்த்து வைக்கக்கூடும். அவர்தான் அசுர வேந்தன் இராவணேசுவரன்.
இராவணனின் புகழ் உலகம் அழியும்வரை என்றும் நிலைத்திருக்கும். அதற்கு காரணம் அவர் அசுரர் வேந்தன் என்பதால் மட்டுமல்ல அவர் பெற்றிருந்த உயரிய ஞானமும், அறிவாற்றலும்தான்.
ஆயக்கலைகள் அனைத்தையும் கற்றதோடு மட்டுமின்றி தன் ஜோதிட அறிவு மூலம் எதிர்காலத்தை அறியவும், நிகழ்காலத்தை மாற்றவும் கூடிய ஆற்றல் பெற்றவர் இராவணன்.
தன் ஞானத்தின் மூலம் ஒருவரின் தலையெழுத்தை மாற்றக்கூடிய வழிமுறைகளை தான் இயற்றிய நூலில் குறிப்பிட்டுள்ளார் இராவணன்.
.
.
.
#இராவண_சம்ஹிதா
இராவணன் தனது அறிவாற்றல் மூலம் ஜோதிடத்தை பற்றி எழுதிய நூல்தான் இராவண சன்ஹிதா.
இந்த நூல் பல ஆச்சரியமான வழிமுறைகளையும், அதிர்ஷ்டத்தையும், ஆரோக்கியத்தையும் வழங்கக்கூடும்.
இதன் மூலம்தான் இராவணன் தன் இலங்கையை தங்கத்தாலான சொர்க்கபுரியாக மாற்றினார்.
இந்த வழிமுறைகளை பயன்படுத்திதான் சிவபெருமானின் அருளையும் பெற்றார் இராவணன்.
.
.
.
#செல்வத்தை_பெறுவதற்கு
ஒரு நல்ல நாளில் அதிகாலையில் எழுந்து குளித்துவிட்டு ஆலமரம் இருந்தால் அதன் அருகில் அமர்ந்து தியானம் செய்யுங்கள்.
தியானத்தின் போது
🔱 " ஓம் ஹ்ரின் ஸ்ரீன் கிளின் நமஹ துவ: துவ: ஸ்வாஹா " 🔱
என்ற இந்த மந்திரத்தை கூறுங்கள்.
இதனை 21 நாட்கள் தொடர்ந்து செய்யுங்கள். தியானத்தின் பொது ருத்ராட்த்தை கையில் வைத்துக்கொள்ளுங்கள்.
.
.
.
#தடையில்லா_பணத்தை_பெற
பணம் சம்பாதிப்பதில் உங்களுக்கு ஏதேனும் பிரச்சினைகள் தொடர்ந்து இருந்தால், அவர்கள் தொடர்ந்து 40 நாட்கள் ஒரு மந்திரத்தை வீட்டில் இருந்து கூறவேண்டும்.
அந்த மந்திரம் என்னவெனில்
🔱 " ஓம் சரஸ்வதி மஹாபாக்கியே, விதயே கமல லோச்சனே ". 🔱
இந்த மந்திரம் உங்களின் முன்னேற்றத்திற்கு உள்ள அனைத்து தடைகளையும் விலக்கி தடையில்லா செல்வம் கிடைக்க வழிவகுக்கும்.
.
.
.
#ஆரோக்கியம்_பெறுவதற்கு
தீபாவளி என்பது மிகவும் புனிதமான நாளாக கருதப்படுகிறது.
அந்த நாளில் நீங்கள் கூறும் ஒரு மந்திரம் உங்களுக்கு ஆண்டு முழுவதும் ஆரோக்கியத்தையும், செல்வத்தையும் வழங்கும் என்று கூறப்படுகிறது.
அந்த மந்திரம் என்னவெனில்
🔱 "ஓம் ஹ்ரின் ஷ்ரின் கிளின் மஹாலக்ஷ்மி ".🔱
இந்த மந்திரத்தை தீபாவளி அன்று இரவு 108 முறை கூறுங்கள் உங்கள் வாழ்க்கையே மாறிவிடும். இந்த மந்திரம் கூறும்போது கையில் ருத்திராட்சம் இருக்க வேண்டியது அவசியம்.
இந்த மந்திரத்தை தீபாவளிக்கு அடுத்த நாள் அதிகாலையில் எழுந்தும் இந்த மந்திரத்தை கூறலாம்.
.
.
.
#பணத்தை_ஈர்க்கும்_மந்திரம்
இந்த மந்திரத்தை கூறுவது உங்களின் செல்வத்தின் அளவை அதிகரிக்கும்.
அந்த மந்திரம் என்னவெனில்
🔱 " ஓம் ஓம் ஓம் நமோ ஹ்ரின் ஓம் பகவதி பத்ம பத்மாவி பூர்வாய குரு குரு சுவாஹ தக்ஷிணே உரேரே ". 🔱
இந்த மந்திரத்தை கூறுவது அனைத்து திசைகளில் இருந்தும் உங்களுக்கு செல்வத்தை வழங்கும் என்று இராவணன் கூறுகிறார்.
இந்த மந்திரத்தை 21 முறை கூற வேண்டும்.
.
.
.
#பணத்தை_தக்கவைத்துக்கொள்ள
நாம் கஷ்டப்பட்டு உழைத்து சேகரிக்கும் பணம் நமக்கே தெரியாமல் கரைவது எப்பொழுதும் நடப்பதுதான்.
பணம் சம்பாதிப்பது எவ்வளவு முக்கியமானதோ அதேயளவு முக்கியமானது பணத்தை சேமிப்பது.
அவ்வாறு உங்கள் பணத்தை பாதுகாக்க இந்த மந்திரத்தை 3 மாதம் கூறுங்கள்.
அந்த மந்திரம்
🔱 " ஓம் ஓம் யாஷ்சே குபேர வார்ஸ்வானே தியானதிபதியே ". 🔱
இந்த மந்திரம் கூறுவது உங்களுக்கு குபேரனின் அருளை பெற்றுத்தரும் என்று இராவணன் கூறுகிறார்.
.
.
.
#உடனடி_செல்வம்_பெற
இந்த மந்திரம் கூறுவது உங்கள் செல்வத்தை தக்கவைப்பதோடு, உடனடி செல்வத்தையும் வழங்கும்.
இந்த மந்திரம் கூறும்போது உங்கள் பக்கத்தில் ஒரு லக்ஷ்மியின் சிலையை வைக்கவும்.
3 மாதங்கள் முடிந்த பிறகு அந்த சிலையை நீங்கள் பணத்தை சேமிக்கும் இடத்தில் வைத்துவிடுங்கள்.
இது உங்களுக்கு உடனடியாக அதிக செல்வத்தை தரும் என்று இராவண சம்ஹிதாகூறுகிறார்.
.
.
.
#பணம்_காய்க்கும்_மரம்
பணம் காய்க்கும் மரம் என்பது அனைவரும் விளையாட்டாக கூறும் ஒரு உவமை ஆகும்.
ஆனால் உண்மையில் இராவணன் உங்களுக்கு பணம் காய்க்கும் மரத்தை வழங்கக்கூடிய ஆற்றல் பெற்றவர்.
உங்கள் வீட்டில் ஒரு நாணயத்தை புதைத்து வைத்துவிட்டு இந்த மந்திரத்தை கூறினால் உங்கள் செல்வம் பன்மடங்காக உயரும்.
🔱 " ஓம் நமோ விக்வினாஷாய குரு குரு ஸ்வாஹ " 🔱
இந்த மந்திரம் உங்கள் செல்வத்தை அதிகரிப்பதுடன் உங்கள் வாழக்கையில் உள்ள தீயசக்திகளையும் விரட்டும்.
.
.
.
#மற்றவர்களை_கவர
வீட்டிலோ அல்லது அலுவலகத்திலோ நீங்கள் மற்றவர்களை கவர விரும்பினால் ஆட்டுப்பாலில் மஞ்சள் கலந்து அதனை திலகமாக உங்கள் நெற்றியில் இட்டுக்கொள்ளுங்கள்.
இது அனைவரின் கவனத்தையும் உங்களை நோக்கி திருப்புவதுடன் உங்களை அனைவரையும் விரும்பவும் செய்யும். குளிக்கும்போது ஆட்டுப்பால் கலந்து குளிப்பதும் உங்களை அனைவரையும் விரும்பச்செய்யும்.
இராவணனின் வசீகரத்திற்கு இதுதான் முக்கிய காரணம் ஆகும்.
.
.
.
#ஆளுமை_அதிகரிக்க
வெள்ளை நிற பூக்களை ஆட்டுப்பாலுடன் சேர்த்து அரைத்து உங்கள் நெற்றியில் திலகமாக இட்டுக்கொள்வது உங்களை சமூகத்தில் மேன்மையானவராக மாற்றும். உங்களின் சொல்லுக்கு அனைவரையும் கட்டுப்படவும் வைக்கும்.
இராவணின் மேன்மை வாய்ந்த ஆளுமைக்கு இதுவும் ஒரு முக்கிய காரணம்.

No comments:

Post a Comment

என் அப்பா வயதாகிவிட்டார், நடந்து செல்லும்போது சுவரின் ஆதரவைப் பெறுவார்

 என் அப்பா வயதாகிவிட்டார், நடந்து செல்லும்போது சுவரின் ஆதரவைப் பெறுவார். இதன் விளைவாக சுவர்கள் நிறமாற்றம் அடைந்தன, அவர் தொட்ட இடமெல்லாம் அவர...