இறைவன் தரும் வாய்ப்பு!
எத்தனை அயோக்கியனாக இருந்தாலும் அவன் திருந்த, சிந்திக்க இறைவன் ஒரு வாய்ப்பை அளிப்பான். இரணியனுக்கு அந்த வாய்ப்பு நரசிம்மபிரபுவின் மடியில் படுத்திருந்தபோது கிடைத்தது.

அவன் அதை பயன்படுத்திக்கொள்ளவில்லை. ராவணனுக்கு அந்த வாய்ப்பு "இன்றுபோய் நாளைவா" வில் கிடைத்தது.
அவனும் அதை கோட்டை விட்டான். துரியனுக்கு கண்ணன் தூதின்போது கிடைத்தது.
விஸ்வரூபமெடுத்து நாராயணனாய் துரியன் முன் நின்று தான் யார் என்பதை உணர்த்தி துரியன் சிந்திக்க ஒரு வினாடியை கொடுத்தான்
இறைவன். இதை "moment of truth" என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள்.
ஒவ்வொரு மனிதருக்கும் தன் வாழ்நாளில் ஒருமுறை இந்த "moment of truth" வரும்.....அந்த வினாடியில் எடுக்கும் முடிவு தான் அவர்கள் வாழ்க்கையை மாற்றும்.
அர்ஜூனனுக்கு போரின்போது இந்த குழப்பம் நேர்ந்தது. கீதையை உபதேசித்து "போரிடுகிறாயா,வில்லை கீழே போடுகிறாயா?" என்று கேட்டான் இறைவன்.
கிடைத்த வாய்ப்பை நழுவவிடாமல் பற்றிக்கொண்டான் அர்ஜூனன்.
கர்ணன் முன் தோன்றி அவன் திருந்த ஒரு சந்தர்ப்பம் அளித்தான் இறைவன்.
செஞ்சோற்றுகடனின் பேரில் அதை நிராகரித்தான் கர்ணன்.
கும்பகர்ணனைபோல் கருணனும் செஞ்சோற்றுகடனுக்காக இறைவன் அளித்த ஒரு வாய்ப்பை நழுவவிட்டான்....
பாகவதத்தில், புராணத்தில் இது வழக்கமாக காணப்படும் நிகழ்வுதான்.
இறைவன் யாரையும் உடனே தண்டிப்பதில்லை.
திருந்த எத்தனை தூரம் சந்தர்ப்பம் தர முடியுமோ
அத்தனை தூரம் சந்தர்ப்பம் கொடுக்கிறான்.
இரணியனை எப்போது அவன் கொன்றான்?
பிரகாலாதனை வருடக்கனக்காய் சித்திரவதை செய்தபோதும் அவன் திருந்த சந்தர்ப்பம் கொடுத்து காத்திருந்தான்....
ஒரு சிறுவனை கூட தன்னால் கொல்ல முடியவில்லை என்பதை உனர்ந்தும் இரணியன் திருந்தவில்லை.
இறுதியில் நரசிம்மமாய் வந்து இரணியனை எடுத்து தன் மடிமேல் அமர்த்தி அவன் விழிகளை உற்றுநோக்கினான் நாராயணன்.
அப்போதும் இரணியன் மனதில் துளி பக்தி வரவில்லை.துளியும் அவன் திருந்தவில்லை.இரணியனின் விழிகளில் நாராயனன் கண்டது வெறுப்பைத்தான்.
இனிமேல் இவன் திருந்தவே மாட்டான் என்பதை அறிந்தபின்னரே அவன் வயிற்றை கிழித்து அவனை மாய்த்தான் நாராயணன்.
(இவை அனைத்தும் அக்காலத்தில் மக்கள் தவறு செய்யக்கூடாது என்பதை உணர்த்தும் வகையில் எடுத்துக் கூறப்பட்டது. ஆனால் அறிவுவளர்ச்சி பெற்றுள்ள இக்காலத்தில் இறைவன் செயலுக்கேற்ற விளைவைக் கொடுக்கிறான் என்றும் அதிலிருந்து யாரும் தப்பிக்க முடியாது என்பதை நாம் அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டும். நன்றி வாழ்க வளமுடன் ...!

No comments:
Post a Comment