Friday, 21 October 2022
நோய் தீர்க்கும் ராகங்கள்!!!!
இசையை ரசிக்காத மனிதர்களே இல்லை, இசைக்கு இறைவனும் மயங்குவான் எனக் கூறுவதைக் கேட்டிருக்கிறோம்.
சத்தத்தில் சங்கீதம் இருக்கு - அதை கேட்கத்தான் நெஞ்சத்தில் இருக்கு.
என்ற கவிஞர் முகிலன் எழுதிய இவ்வரியில் இயற்கையின் ஒவ்வொரு படைப்பிலும் ஒரு சத்தம் ஒளி வடிவாகவும், இசை வடிவாகவும் இருக்கிறது. அதைக் கேட்காத நெஞ்சம் கிறுக்கு (மயக்கநிலை) ஆகிவிடும் எனக் கூறுகிறார்.
இயந்திர வாழ்வில் ஓய்வில்லாமல்,உறக்கமில்லாமல், நல்ல உணவுகளைக் கூட நேரத்திற்கு சாப்பிட முடியாமல் பலர் இருப்பதால் பல நோய்கள் மனிதர்களைத் தாக்கும் போது பெரும்பாலானவர்கள் மருந்தை எடுத்துக் கொள்கின்றனர்.
இச்சூழலில் நோய்களை இசையின் மூலம் குணப்படுத்துவது பலருக்கும் தெரியாத ஒன்றாகவே உள்ளது. அதெப்படி இசை மூலம்
குணமாக்க முடியும்? இசைக்கு அப்படி ஒரு திறன் உண்டா? எனப் பல கேள்விகள் எழுவது இயற்கையே. ஆனால் அந்த இசையால்
பற்பல நோய்களைக் குணப்படுத்த முடியும் என்பதே உண்மையான ஒன்றாகும்.
!!நோய் தீர்க்கும் ராகங்கள்!!
இசைத்தமிழ் நீ செய்த அருஞ்சாதனை
இசை மூலம் நம் முன்னோர்கள் சில அதிசயங்களை நிகழ்த்திக் காட்டியுள்ளனர்.
அகத்தியர் பாடியே ஒரு மலையை உருக வைத்தாராம். பேரரசர் அக்பர் அவையில் இருந்த சங்கீதச் சக்கரவர்த்தியான தான்சேன்
என்ற இசைக்கலைஞர் “தீபக்” என்ற ராகத்தைப் பாடி அணைந்த விளக்குகளை மீண்டும் எரிய வைத்தாராம்.
சுகமான, இதமான இசையைக் கேட்டதன் மூலம் நரம்பு சம்பந்தமான கோளாறுகள், நரம்பு தளர்ச்சி, சோகமான நிகழ்வில் ஏற்படும் அதிர்ச்சிகள் என இவைகளை இசை ஒரு கட்டுக்குள் கொண்டு வருகின்றன. ஒரு நபர் இசைக்கும் வயலின் இசையைக் கேட்டாலே கொடிய தலைவலியும் போய்விடும் என்கின்றனர். ஹிஸ்டீரியா என்ற நோயை நரம்புக் கருவிகளின் இசை குணமாக்கி விடுகிறதாம்.
நல்ல இசை நம் மனதையும் எண்ணங்களையும் அமைதிப் படுத்துவதோடு, ரத்த அழுத்தம், மன அழுத்தம், மன இறுக்கம்,
தூக்கமின்மை, சீரற்ற இதயத்துடிப்பு போன்ற நோய்கள் இசையைக் கேட்பதமன் மூலம் குணப்படுத்தமுடியும் என்கின்றனர்
நம் நோய் தீர்க்கும் சில ராகங்களையும், அந்த ராகத்தில் அமைந்த திரைப் பாடல்களையும், இந்த ராகத்தில் அமைந்த பாடல்களைக்
கேட்டால் தீரும் நோய்களைப் பற்றியும் இங்கே இனி காணலாம்.
அதிகாலையில் கேட்க வேண்டிய ராகம் - பூபாளம்
* பாடல் : சலங்கயிட்டால் ஒரு மாது
படம் : மைதிலி என்னைக் காதலி
* பாடல் : செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல்
படம் : முள்ளும் மலரும்
அந்தி மாலையில் கேட்கவேண்டிய ராகம் - மலையமாருதம், சக்கரவாகம்
* பாடல் : கண்மணி நீ வர காத்திருந்தேன் – மலையமருதம்
படம் : தென்றலே என்னைத் தொடு
* பாடல் : நீ பாதி நான் பாதி கண்ணே - சக்கரவாகம்
படம் : கேளடி கண்மணி
* பாடல் : பூப்பூக்கும் மாசம் தை மாசம் - மலையமாருதம்
படம் : வருசம் 16
* பாடல் : உள்ளத்தில் நல்ல உள்ளம் - சக்கரவாகம்
படம் : கர்ணன்
* பாடல் : ஓராறு முகமும் ஈராறு கரமும்
படம் : டி.எம்.எஸ். பக்திப் பாடல்கள்
* பாடல் : நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு
படம் : தியாகம்
சிறுநீரகப் பிரச்சனை தீரவும், மழை வேண்டியும்- அமிர்தவர்ஷினி
*பாடல்: தூங்காத விழிகள் ரெண்டு.
படம் : அக்னி நட்சத்திரம்
கடின மனம் இளக கல்நெஞ்சம் கரைய - அரிகாம் போதி
*பாடல்: கண்ணுக்கு மை அழகு
படம் : புதிய முகம்
*பாடல்: உன்னை ஒன்று கேட்பேன்
படம் : புதிய பறவை
*பாடல்: ஒரே பாடல் உன்னை அழைக்கும்
படம் : எங்கிருந்தோ வந்தாள்.
*பாடல்: பழமுதிர்ச்சோலை எனக்காகத்தான்
படம் : வருசம் பதினாறு.
மனதை வாட்டும் பல துன்பங்களின் தாக்கம் குறைந்து அமைதி ஏற்பட - ஆனந்த பைரவி, ஸ்ரீ ரஞ்சனி, கமாஸ், நாயகி,சகானா,
நீலாம்பரி
*பாடல்: நாதம் எழுந்ததடி – ஸ்ரீ ரஞ்சனி
படம் : கோபுர வாசலிலே
*பாடல்: வசந்த காலங்கள் இசைந்து - ஸ்ரீ ரஞ்சனி
படம் : ரயில் பயணங்களில்
*பாடல்: மெட்டுப்போடு மெட்டுப்போடு – ஆனந்த பைரவி
படம் : டூயட்
*பாடல்: கற்பகவள்ளி நின் பொற்பாதங்கள் - ஆனந்த பைரவி
படம் : டி.எம்.எஸ். பக்திப்பாடல்கள்.
*பாடல்: வரம் தந்த சாமிக்கு சுகமான லாலி - நீலாம்பரி
படம் : சிப்பிக்குள் முத்து.
*பாடல்: பூவே இளைய பூவே - நீலாம்பரி
படம் : கோழி கூவுது
*பாடல்: சித்திரம் பேசுதடி என் சிந்தை - கமாஸ்
படம் : சபாஷ் மீனா
மனம் சார்ந்த பிரச்சனை தீர - அம்சத்வனி, பீம்பிளாஸ்
*பாடல் : காலம் மாறலாம் நம் காதல் - அம்சத்வனி
படம் : வாழ்க்கை
*பாடல்: சிந்து நதிக்கரையோரம் அந்தி நேரம் - பீம்பிளாஸ்
படம் : நல்லதொரு குடும்பம்
*பாடல்: தோகை இளமயில் ஆடி வருகுது - அம்சத்வனி
படம் : பயணங்கள் முடிவதில்லை
*பாடல்: வா…வா…வா… கண்ணா வா -அம்சத்வனி
படம் : வேலைக்காரன்
*பாடல்: இசைத்தமிழ் நீ செய்த அருஞ்சாதனை - பீம்பிளாஸ்
படம் : திருவிளையாடல்
*பாடல்: பன்னிரு விழிகளிலே பணிவுடன்
படம் : சீர்காழி கோவிந்தராசன் பக்திப்பாடல்கள்
*பாடல்: அழகென்ற சொல்லுக்கு முருகா
படம் : டி.எம்.எஸ். பக்திப்பாடல்கள்
*பாடல்: வாராய் நீ வாராய்
படம் : மந்திரி குமாரி
இதய நோய் தீர கேட்க வேண்டிய ராகம் - சந்திரக கூன்ஸ்
நீரிழிவு நோய் தீர கேட்க வேண்டிய ராகம் - பகாடி, ஜகன் மோகினி
பெரும் உணர்ச்சிக்கும், உத்வேகம் வர கேட்க வேண்டிய ராகம் - அடான
*பாடல்: யார் தருவார் இந்த அரியாசனம் - அடான
படம் : சரஸ்வதி சபதம்
*பாடல்: வருகிறார் உனைத் தேடி - அடான
படம் : அம்பிகாபதி
மனதை வசீகரிக்க, மயக்க - ஆனந்த பைரவி , உசேனி, கரகரப்பிரியா
*பாடல் : தானா வந்த சந்தனமே - கரகரப்பிரியா
படம் : ஊருவிட்டு ஊரு வந்து
*பாடல் : கம்பன் எங்கே போனான் - கரகரப்பிரியா
படம் : ஜாதிமல்லி
*பாடல்: மெட்டுப்போடு மெட்டுப்போடு - ஆனந்த பைரவி
படம் : டூயட்
*பாடல்: சங்கீதஸ்வரங்கள் ஏழே கணக்கா - கரகரப்பிரியா
படம் : அழகன்
*பாடல்: மாதவிப் பொன் மயிலாள் - கரகரப்பிரியா
படம் : இருமலர்கள்
சோகத்தை சுகமாக்க - முகாரி , நாதநாமக்கிரியா
*பாடல்: கனவு கண்டேன் நான் - முகாரி
படம் : பூம்புகார்
*பாடல்: சொல்லடி அபிராமி
படம் : ஆதிபராசக்தி
பாடல்: எந்தன் பொன் வண்ணமே அன்பு
படம் : நான் வாழவைப்பேன்
பாம்புகளை அடக்குவதற்கு - அசாவேரி ராகம்
வாயுத்தொல்லை தீர -ஜெயஜெயந்தி ராகம்
வயிற்றுவலி தீர - நாஜீவதாரா
எந்த நேரத்தில் என்ன பாட்டு கேட்க வேண்டும் ?
திருவெண்காடு டி.தண்டபாணி தேசிகர் எந்த நேரத்தில் என்ன ராகத்தில் அமைந்த பாடல்களைக் கேட்கலாம் என்று ஒரு
வரையறை கூறுகிறார்.
நேரம் - ராகம்
5-6 மணி (காலை நேரம்)
பூபாளம்
6-7 மணிக்கு
பிலஹரி
7-8 மணிக்கு
தன்யாசி
8-10 மணிக்கு
ஆரபி, சாவேரி
10-11 மணிக்கு
மத்யமாவதி
11-12 மணிக்கு
மனிரங்கு
12-1 மணி (மதிய நேரம்)
ஸ்ரீராகம்
1-2 மணிக்கு
மாண்டு
2-3 மணிக்கு
பைரவி, கரகரப்பிரியா
3-4 மணிக்கு
கல்யாணி, யமுனா கல்யாணி
4-5 மணிக்கு (மாலை நேரம்)
காம்போதி, மோகனம், ஆனந்த பைரவி, நீலாம்பரி, பியாகடை, மலையமாருதம்
இப்படியான பல ராகங்கள், மனிதனுக்குள் இருக்கும் பல்வித நோய்களைக் குணப்படுத்துகிறது. . பாட்டைக் கேட்டல் நோய் தீரும்
என்பது கரும்பு தின்னக் கூலியா என்பது போல, நம் உடல் நலமும், மன நலமும் நம்மிடம் உள்ளது. நம் நோய்க்கான மருந்து இந்த
ராகங்களில் உள்ளது.
இனிமை கூட்டும் பாடல்களையும், இசைகளையும் ரசிப்போம் அமைதி பெறுவோம்.
நன்றி....
Friday, 7 October 2022
மனிதனின் ஆயுட்காலம் குறுகிக் கொண்டே போவதற்கான காரணங்கள்
மனிதனின் ஆயுட்காலம் குறுகிக் கொண்டே போவதற்கான காரணங்கள்
*1. உடல் பயிற்சி இன்மை / உடல் உழைப்பின்மை
*2. இரவில் கண் விழித்திருத்தல்
*3. காலை உணவை தவிர்த்தல்
*5. பணத்தை நோக்கிய ஓட்டம்
*6. பழைய உணவுகளை சூடாக்கி சூடாக்கி உண்ணல்
*7. கவலைகளை கட்டிக் கொண்டு இருத்தல்
வாழ்வில் உணவை முதன்மை படுத்துங்கள். உணவை தரமாக்குங்கள்
கண்டதையும் கொட்ட நம் உடல் குப்பை தொட்டி அல்ல
நேரத்துக்கு உறங்குங்கள். இரவு உறக்கத்தின் பொழுது தான் நம் உடல் தன்னை தானே சீராக்குகிறது*
தினமும் காலையில் வெறும் வயிற்றில் சூடாக நீர் அருந்துங்கள்.
தினமும் ஒரு பழத்தையேனும் வெறும் வயிற்றில் உண்ணுங்கள்.
போதியளவு நீர் அருந்துங்கள்.
இளநீர் போன்றவை மிக நல்லது
பச்சையாக உண்ணக்கூடிய தேங்காய், ஊற வைத்த நிலக்கடலை, வெள்ளரிப் பிஞ்சு, கேரட், சின்ன வெங்காயம், பழங்கள், நட்ஸ் போன்றவற்றில் முடிந்ததை தினமும் உண்ணுங்கள்.
காலை உணவை தவிர்க்காது ஆரோக்கியமானதை தேர்வு செய்து உண்ணுங்கள்.
அளவாக உண்ணுங்கள்.
எப்போதும் சுறுசுறுப்பாக இருங்கள்.
தொடர்ந்து உட்கார்ந்து கொண்டு இருப்பதை குறையுங்கள்.
யோகா தியானம் உணவை போல் அத்தியாவசியமான ஒன்று.
மூன்று வேளை உண்பதால் இரண்டு வேளை அவசியம் 20 நிமிடம் நடை பயிற்சி செய்யுங்கள்.
இறுக்கமாக இருக்காது சிரித்து பேசி மகிழ்ச்சியாக இருங்கள்.
உங்கள் வட்டத்தை இயந்திரத்தோடு குறுக்கிக் கொள்ளாதீர்கள்.
அழுது வடியும் சீரியல்களை பார்த்து உங்கள் இதயத்தை வாட்டாமல், சிரிக்க வைக்கும் காட்சிகளை கண்டு களியுங்கள்
ஆளைக் கொல்லும் கவலைகளைப் புறந்தள்ளி ஆளுமையைத் தரும் தன்னம்பிக்கையை ஆடையாக அணியுங்கள்.
மனதுக்கு பிடித்த விசயங்களை மட்டும் செய்து வரவும்.......
Saturday, 17 September 2022
ரமண மகரிஷி
ரமண மகரிஷி திருவண்ணாமலைக்கு என்று வந்தாரோ அன்றிலிருந்து இறுதி நாள் வரை திருவண்ணாமலையை விட்டுச் செல்லவில்லை. கைகளால் பணத்தை தொட்டதில்லை. வாகனத்தில் பயணித்தது இல்லை. ஒரு சிறிய ஆடையைத் தவிர வேறு எதுவும் அணிந்ததில்லை.
ரமண மகரிஷியின் முக்கியமான பக்தர்களில் குஞ்சுஸ்வாமிகள் என்பவரும் ஒருவர். இவர் பாலக்காட்டிற்கு அருகில் உள்ள செறக்கோடு என்ற ஊரில் 1897ம் ஆண்டு ஜனவரி மாதம் பிறந்தார். சிறு குழந்தையாக இவர் இருக்கும்பொழுதே சிவபெருமானுடைய பரிபூரணமான அருள் இவருக்கு கிடைத்தது. அந்த ஊரில் உள்ள குளத்தில் இவர் நீராடுவதற்குச் செல்வார். அப்பொழுது அந்த ஊரில் உள்ள சிவபக்தர்கள் தங்கள் கைகளில் அழகான பட்டுப் பையில் திருநீறு வைத்துக்கொண்டு பூசிக்கொள்வதைப் பார்த்தார். தனக்கும் அதைப் போல் ஒரு பட்டுப் பை வேண்டும் என்று ஆசை வருகின்றது.
அன்று இரவு அவருக்கு ஒரு கனவு. அந்தக் கனவில் கைலாசபதியான சிவபெருமான் தரிசனம் தந்து, அந்த ஊரில் உள்ள ஒரு மரத்தடியை கனவில் காட்டிவிட்டு மறைந்து விடுகின்றார். மறுநாள் காலை அந்தக் குழந்தை அந்த மரத்தின் அடிக்கு சென்று பார்க்கின்றார். அதன் அடியில் பன்னிரண்டு அணா காசுகள் கிடக்கின்றது. அதை எடுத்துக் கொண்டு விபூதி பை வாங்க கடைக்குச் செல்கின்றார்.
விபூதி பையின் விலையும் சரியாக பன்னிரண்டு அணா என்பதை அறிந்து அதிசயிக்கின்றார். அடுத்ததாக சிவனடியார்கள் கையில் ருத்திராட்ச மாலை வைத்துக்கொண்டு ஜபம் செய்வதைப் பார்க்கின்றார். அவருக்கும் ஒரு ருத்திராட்ச மாலை வேண்டும் என்று ஆசை வந்துவிட்டது. அன்று இரவும் சிவபெருமான் கனவில் வந்துவிட்டார். அந்த ஊரில் உள்ள ஒரு பெரிய குளத்தையும் அதில் மலர்ந்துள்ள ஒரு பெரிய தாமரையையும் காட்டிவிட்டு மறைந்துவிட்டார்.
மறுநாள் காலையில் அந்தக் குளத்தில் அப் படியே ஒரு பெரிய தாமரை இருப்பதைப் பார்த்து வியப்படைந்தார். நீரில் இறங்கி அந்த தாமரையின் அருகில் சென்று பார்க்கின்றார். அந்த தாமரை மலருக்குள் தங்கத்தில் கட்டிய அழகான ருத்திராட்ச மாலை இருந்தது.
திருநீறு பை கிடைத்தது. அழகான ருத்திராட்ச மாலையும் கிடைத்துவிட்டது."ஜபமாலையை வைத்து எந்த மந்திரத்தை ஜபம் செய்வது?" என்று தெரியாமல் விழித்தார். அன்று இரவு மீண்டும் சிவபெருமான், அவருடைய கனவில் வந்து "நமச்சிவாய" என்ற ஐந்தெழுத்தை உபதேசம் செய்தார்.
இப்படியாக வளர்ந்து வந்த குஞ்சு ஸ்வாமிகளை அவருடைய பெற்றோர்கள் அவர்களுடைய குலகுருவிடம் கொண்டுவந்து விட்டார்கள். குஞ்சுஸ்வாமிகளுக்கு அந்த குலகுருவிடம் மனது ஈடுபடவில்லை. அந்த சமயத்தில் திருவண்ணாமலையில் வாழும் ரமணமகரிஷியைப் பற்றி ஒருவர் தெரிவிக்கின்றார்.
ரமண மகரிஷியை பற்றி கேட்டவுடன் குஞ்சுஸ்வாமி களுக்கு உடலில் ஒரு இனம்புரியாத மாற்றம் ஏற்பட்டது. உடனே திருவண்ணாமலைக்குச் சென்று ரமண மகரிஷிகளை தரிசனம் செய்ய வேண்டும் என்ற தவிப்பு ஏற்பட்டது. வீட்டில் சொல்லாமல் திருவண்ணாமலைக்கு கிளம்பிவிட்டார். கையில் போதுமான பணம் கிடையாது. சரியான விவரம் தெரியாது.
திருவண்ணாமலையில் பிளேக் நோய் பரவியிருந்ததால் ஊருக்குள் செல்வதற்கு பலவிதமான தடைகள் இருந்தது. சிவபெருமானுடைய அருளால் எல்லா தடைகளும் விலக, திருவண்ணாமலை வந்து தனது குருநாதரான ரமண மகரிஷியின் திருவடியை வந்தடைந்து பரம சாந்தியை அடைந்தார். ரமண மகரிஷி யாருக்கும் வாய்முகமாக எந்த உபதேசமும் செய்வதில்லை என்று கேள்விப் பட்டார். அதனால் முதல் முதலாக ரமண மகரிஷி எதை தன்னிடம் பேசுகின்றாரோ அதையே உபதேசமாக எடுத்துக்கொள்வது என்று முடிவு செய்தார்.
அந்த சமயம் ஒரு தேங்காய் சிரட்டையில் சூடான கஞ்சியை நான்கு நாய்க்குட்டிகள் குடிப்பதற்கு ஓடி வந்தன. அந்த குட்டிகளுக்கு அந்த கஞ்சி சுடப்போகின்றது என்ற கவலையினால் ரமண மகரிஷி குஞ்சுஸ்வாமிகளைப் பார்த்து "நான்கையும் பிடி, ஒன்று ஒன்றாய் விட" என்றார். அதன்படியே நான்கு நாய்க்குட்டிகளையும் பிடித்து ஒவ்வொன்றாக விட்டார். "சரி, இதில் என்ன உபதேசம் இருக்கின்றது என்கின்றீர்களா? ஆமாம். இது உபதேசம்தான். முக்தியை விரும்புகின்ற ஒருவன் நான்கு செயல்களை நன்றாக பிடித்துக்கொள்ள வேண்டும். பிறகு அவைகளை ஒவ்வொன்றாய் விட்டுவிட வேண்டும். நல்ல நூல்களைப் படித்தல், மந்திரத்தை ஜபம் செய்தல், தியானம் செய்தல், ஆத்ம தத்துவத்தை விசாரம் செய்தல் என்ற நான்கையும் தொடர்ந்து செய்ய வேண்டும். ஜபம் நன்றாக கைகூடி வந்துவிட்டால், பாராயணத்தை விட்டுவிட வேண்டும். தியானம் நன்றாக கைகூடிவிட்டால் ஜபத்தை விட்டுவிடலாம். ஆத்ம தத்துவ விசாரம் கைகூடிவிட்டால் தியானத்தை விட்டு விடலாம்” என்பதே அது.
ரமண மகரிஷிக்கு சேவை செய்து கொண்டும், அவர் காட்டிய வழியில் வாழ்ந்தும் முக்தியடைந்தார். நூறு வருடங்கள் வாழ்ந்த இவர் திருவண்ணாமலையிலயே சித்தியடைந்தார். இன்றும் அவருடைய சமாதி ரமணாஸ்ரமத்திற்குள் இருக்கின்றது. ரமணாஸ்ரமம் செல்லும் பொழுது குஞ்சுஸ்வாமிகளின் சமாதியையும் தரிசனம் செய்து புண்ணியத்தை சம்பாதித்துக் கொள்ளலாம்.
அருணாசலேஷ்வரா.
Friday, 16 September 2022
நம் கையில் தான் உள்ளது.*
_*தாய்*_ இருந்தால் துன்பம் இல்லை.
_*தந்தை*_ இருந்தால் தவிப்பு இல்லை.
_*தங்கை*_ இருந்தால் தனிமை இல்லை.
_*பாட்டி*_ இருந்தால் பயம் இல்லை.
_*அக்கா*_ இருந்தால் அன்னையின் பிம்பம் தெரியும்.
_*அண்ணன்*_ இருந்தால் அனைத்தும் கிடைக்கும் அன்போடு.
_*தம்பி*_ இருந்தால் தாங்கி நிற்க இன்னொரு கால் கிடைக்கும்.
_*மனைவி*_ இருந்தால் மண்ணுலக வாழ்க்கை சிறக்கும்.
_*மகள்*_ இருந்தால் மழலை பருவம் தெரியும்.
_*மகன்*_ இருந்தால் மான்புமிக்க வம்சம் நிலைக்கும்.
_*மண்ணில் இறக்க போகிறோமே தவிர,*_
_*மீண்டும் மண்ணில் ஒன்றாக பிறக்க போவது இல்லை.*_
*வாழும் போது பிரியாமல் சொந்த பந்தங்களோடு இருப்பது ஒரு வரம் ..*
_*குடும்பம் என்பது இறைவன் நமக்காக பூமியில் ஏற்பாடு செய்திருக்கும் சொர்க்கம்.*_
_*அதை சொர்க்கமாக்குவதும்,*_ _*நரகமாக்குவதும்*_
_*நம் கையில் தான் உள்ளது.*_
Sunday, 28 August 2022
தெரிந்து கொள்ளவேண்டிய ஆன்மிகத் தகவல்கள்......
தெரிந்து கொள்ளவேண்டிய ஆன்மிகத் தகவல்கள்......
1.சிவசின்னங்களாக போற்றப்படுபவை.....
திருநீறு, ருத்ராட்சம், நமசிவாய மந்திரம்
2. சிவனுக்கு அன்னாபிஷேகம் நடக்கும் காலம்....
ஐப்பசி பவுர்ணமி
3. சிவன் யோகியாக இருந்து ஞானத்தை அருளும் கோலம்.....
தட்சிணாமூர்த்தி
4. ஆன்மாவைக் குறிக்கும் சிவன் எங்கிருக்கிறார்?
திருப்பெருந்துறை(ஆவுடையார்கோயில்)
5. காலனை உதைத்த காலசம்ஹார மூர்த்தியாக ஈசன் அருளும் தலம்.....
திருக்கடையூர்
6. ஞானசம்பந்தரைக் காண சிவன் நந்தியை விலகச் சொன்ன தலம்......
பட்டீஸ்வரம்
7. ஆண்டுக்கு ஒரு பாடல் வீதம் சிவன் மீது பாடியவர்.........
திருமூலர்
8. முக்திவாசல் என்று போற்றப்படும் திருத்தலம்.......
திருவெண்காடு (நவக்கிரக புதன் ஸ்தலம்,நாகப்பட்டினம் மாவட்டம்)
9. ஐப்பசியில் காவிரியில் சிவபார்வதி நீராடுவது...........
துலாஸ்நானம்
10. ஐப்பசி கடைசியன்று மயிலாடுதுறையில் நீராடுவது.........
கடைமுகஸ்நானம்
11.சிவனுக்கு மாடக்கோயில் கட்டிய மன்னன்.....
கோச்செங்கட்சோழன்.
12. கூத்தப்பன் என்று போற்றப்படும் இறைவன்....
நடராஜர்(கூத்து என்றால் நடனம்)
13. தரிசிக்க முக்தி என்ற சிறப்பைப் பெற்ற தலம்...
சிதம்பரம்
14. வாழ்வில் ஒருமுறையேனும் செல்ல வேண்டிய தலம்...
காசி
15.சிவன் நெருப்பாக வளர்ந்து நின்ற தலம்...
திருவண்ணாமலை
16. அம்பிகை மயில் வடிவில் சிவனை பூஜித்த தலம்...
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில்
17. மாதம் தோறும் வரும் விழாக்களைப் பட்டியலிடும் தேவாரம்...
மயிலாப்பூர் தேவாரம் (சம்பந்தர் பாடியது)
18. தட்சிணாமூர்த்தி கைவிரல்களை மடக்கிக் காட்டும் முத்திரையின் பெயர்...
சின்முத்திரை
19. கயிலாயத்தில் தேவலோகப்பெண்களுடன் காதல் கொண்டதால், பூலோகத்தில் பிறவி எடுத்தவர்...
சுந்தரர்
20. வேடுவச்சியாக இருந்த பார்வதியை வேடனாய் வந்து ஈசன் மணந்த தலம்...
ஸ்ரீசைலம்(ஆந்திரா)
21. சக்தி பீடங்களில் பைரவி பீடமாகத் திகழும் தலம்...
ஒரிசாமாநிலம் பூரி ஜெகந்தாதர் கோயில்
22. இறைவன் இறைவிக்கு இடபாகம் அளித்த தலம்....
திருவண்ணாமலை
23. கார்த்திகை தீபத்திருளில் அவதரித்த ஆழ்வார்....
திருமங்கையாழ்வார்
24. திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத்திருநாளன்று காலையில் ஏற்றும் தீபம்....
பரணிதீபம் (அணையா தீபம்)
25. அருணாசலம் என்பதன் பொருள்...
அருணம்+ அசலம்- சிவந்த மலை
26.ஆறாதாரங்களில் திருவண்ணாமலை...
ஆதாரமாகத் திகழ்கிறது மணிபூரகத் தலம்
27. திருவண்ணாமலையில் பவனிவரும் சோமஸ்கந்தரின் பெயர்...
பக்தானுக்ரக சோமாஸ்கந்தர்
28. ""கார்த்திகை அகல்தீபம்'' என்னும் அஞ்சல் முத்திரை வெளியான ஆண்டு...
1997, டிசம்பர் 12
29. அருணகிரிநாதர் கிளிவடிவில் முக்தி பெற்ற இடம்...
திருவண்ணாமலை (கிளி கோபுரம்)
30.. கார்த்திகை நட்சத்திரம் ....தெய்வங்களுக்கு உரியது
சிவபெருமான், முருகப்பெருமான், சூரியன்
31 குறைந்தபட்சம் விளக்கு ஏற்ற வேண்டிய காலம்.....
24 நிமிடங்கள் (ஒரு நாழிகை)
32. சிவாம்சமாகப் போற்றப்படும் ராமபக்தர்....
அனுமன்
33.நமசிவாய' என்று தொடங்கும் சிவபுராணம் எதில் இடம்பெற்றுள்ளது?
திருவாசகம்
34. தர்மதேவதை நந்தி என்னும் பெயர் தாங்கி ஈசனைத் தாங்கி வருவதை எப்படி குறிப்பிடுவர்?
அறவிடை(அறம்-தர்மம், விடை-காளை வாகனம்)
35. மனிதப்பிறவியில் அடைய வேண்டிய நான்கு உறுதிப் பொருள்கள்....
அறம், பொருள், இன்பம், வீடு(மோட்சம்)
36. சிவபெருமான் ஆடிய நாட்டியங்கள் எத்தனை?
108
37. சிவபெருமானின் நடனத்தை காணும் பேறு பெற்ற பெண் அடியவர்...
காரைக்காலம்மையார்
38."மனித்தப்பிறவியும் வேண்டுவதே இம்மாநிலத்தே' என்று நடராஜரிடம் வேண்டியவர்......
அப்பர்(திருநாவுக்கரசர்)
39. நடராஜரின் காலடியில் கிடக்கும் முயலகன் எதன் அடையாளம்..
ஆணவம்(ஆணவம் அடங் கினால் ஆனந்தம் உண்டாகும்)
முயலகன்
40. பஞ்சசபையில் சித்திரசபையாகத் திகழும் தலம்....
குற்றாலம்
41. நள்ளிரவில் சிவன் ஆடும் நடனம்...
சங்கார தாண்டவம்
42. இடக்காலில் முயலகனை ஊன்றிய கோலத்தை எங்கு காணலாம்?
வெள்ளியம்பலம்(மதுரை)
43. மாலைவேளையில் இறைவன் மகிழ்ந்தாடும் திருநடனம்...
பிரதோஷநடனம் (புஜங்கலளிதம்)
44. நடராஜருக்குரிய விரத நாட்கள்....
திருவாதிரை, கார்த்திகை சோமவாரம்
45. நடராஜருக்குரிய திருவாதிரை பிரசாதம்....
களி.
46.திருச்சிராப்பள்ளியில் வீற்றிருக்கும் இறைவன்...
தாயுமானசுவாமி
47. பஞ்சபூத தலங்களில் வாயுத்தலம்....
காளஹஸ்தி
48. வண்டுவடிவில் இறைவனை பூஜித்த முனிவர்...
பிருங்கி
49. திருமூலர் எழுதிய திருமந்திரம் ....திருமுறையாகும்
பத்தாம் திருமுறை
50. திருஞானசம்பந்தர் பொன் தாளம் பெற்ற தலம்...
திருக்கோலக்கா(தாளமுடையார் கோவில்) சீர்காழிக்கு அருகில் உள்ளது
51.விபூதி என்பதன் நேரடியான பொருள்...
மேலான செல்வம்
52.சுக்கிரதோஷ நிவர்த்திக்குரிய சிவத்தலம்...
கஞ்சனூர்
53. ஜோதிர்லிங்கத்தலங்கள் மொத்தம் எத்தனை?
12
54. மதுரையில் உள்ள சித்தரின் பெயர்....
சுந்தரானந்தர்
55.திருஞானசம்பந்தருக்கு திருமணம் நிகழ்ந்த தலம்...
ஆச்சாள்புரம்(திருப்பெருமணநல்லூர்)
56.. நாவுக்கரசரின்உடன்பிறந்த சகோதரி....
திலகவதி
57.. சுந்தரருடன் கைலாயம் சென்ற நாயனார்...
சேரமான் பெருமாள் நாயனார்
58.. "அப்பா! நான்வேண்டுவன கேட்டருள்புரியவேண்டும்' என்ற அருளாளர்...
வள்ளலார்
59. மதுரையில் சைவசமயத்தை நிலைநாட்டிய சிவபக்தை......
மங்கையர்க்கரசியார்
60.மாணிக்கவாசகர் யாருடைய அவையில் அமைச்சராக இருந்தார்?
அரிமர்த்தனபாண்டியன்
61. திருநாவுக்கரசரால் சிவபக்தனாக மாறிய பல்லவமன்னன்...
மகேந்திரபல்லவன்
62.சிவபெருமானின் ஐந்து முகங்களில் காக்கும் முகம் ...
தத்புருஷ முகம்(கிழக்கு நோக்கிய முகம்)
63. சிவன் வீரச்செயல் நிகழ்த்திய தலங்கள் எத்தனை?
எட்டு
64. மகாசிவராத்திரி எந்நாளில் கொண்டாடப்படுகிறது?
மாசி தேய்பிறை சதுர்த்தசி
65. மகாசிவராத்திரியில் கோயிலில் எத்தனை கால அபிஷேகம் நடக்கும்?
4 கால அபிஷேகம்
66. வாழ்விற்கு வேண்டிய நல்வினை பெற ஐந்தெழுத்தை ஓதும்விதம்.....
நமசிவாய
67. முக்தி பெற்று சிவபதம் பெற நமசிவாயத்தை எப்படி ஓத வேண்டும்?
சிவாயநம
68. சிவசின்னங்களாக போற்றப்படுபவை...
திருநீறு, ருத்ராட்சம், ஐந்தெழுந்து மந்திரம் (நமசிவாய அல்லது சிவாயநம)
69. சிவனுக்குரிய உருவ, அருவ. அருவுருவ வழிபாட்டில் லிங்கம் எவ்வகை?
அருவுருவம்
70. பன்னிரு ஜோதிலிங்கத் தலங்களில் தமிழகத்தில் உள்ள தலம்....
ராமேஸ்வரம்
71. சிவவடிவங்களில் ஞானம் அருளும் சாந்தரூபம்...
தட்சிணாமூர்த்தி
72.கும்பாபிஷேகத்தை எத்தனை ஆண்டுக்கு ஒருமுறை நடத்துவர்?
12
73.. குறும்பலா மரத்தை தலவிருட்சமாகக் கொண்ட கோயில்...
குற்றாலம் குற்றாலநாதர் கோயில்
74. ஸ்ரீவிருட்சம் என்று சிறப்பிக்கப்படும் மரம்...
வில்வமரம்
75.அம்பிகையின் அம்சமாக இமயமலையில் அமைந்திருக்கும் ஏரி...
மானசரோவர்
76.திருநாவுக்கரசர் எத்தனை ஆண்டுகள் வாழ்ந்தார்?
81
77.பதிகம் என்பதன் பொருள்...
பத்து அல்லது 11 பாடல்கள் சேர்ந்த தொகுப்பு
78. சைவ சித்தாந்தத்தை விளக்கும் முழுமையான சாத்திர நூல்...
சிவஞானபோதம்
79. உலகைப் படைக்கும் போது ஈசன் ஒலிக்கும் உடுக்கை....
டமருகம் அல்லது துடி
80.அனுபூதி என்பதன் பொருள்....
இறைவனுடன் இரண்டறக் கலத்தல்
81.உலகத்துக்கே அரசியாக இருந்து ஆட்சி புரியும் அம்பிகை.....
மதுரை மீனாட்சி
82. மதுரை மீனாட்சியம்மையின் பெற்றோர்.....
மலையத்துவஜ பாண்டியன், காஞ்சனமாலை
83. மீனாட்சிக்கு பெற்றோர் இட்ட பெயர்....
தடாதகைப் பிராட்டி
84. பழங்காலத்தில் மதுரை ..... என்று அழைக்கப்பட்டது.
நான்மாடக்கூடல், ஆலவாய்
85. மீனாட்சியம்மன் கோயில் தலவிருட்சம்...
கடம்ப மரம்
86. மீனாட்சி.... ஆக இருப்பதாக ஐதீகம்.
கடம்பவனக் குயில்
87. மீனாட்சி கல்யாணத்தை நடத்திவைக்கும் பெருமாள்....
திருப்பரங்குன்றம் பவளக்கனிவாய்ப்பெருமாள்
88. மீனாட்சியம்மன் மீது பிள்ளைத்தமிழ் பாடிய புலவர்...
குமரகுருபரர்
89.மீனாட்சியம்மனை சியாமளா தண்டகம் என்னும் நூலில் போற்றிப் பாடியவர்....
மகாகவி காளிதாசர்
90. சொக்கநாதரை தேவேந்திரன் வழிபடும் நாள்...
சித்ராபவுர்ணமி
91. மீனாட்சியம்மனுக்கு தங்க ஷூ காணிக்கை கொடுத்த ஆங்கிலேய கலெக்டர்...
ரோஸ் பீட்டர்
92. காய்ச்சல், ஜலதோஷம் தீர்க்கும் கடவுள் யார்?
ஜுரகேஸ்வரர்
93. "நாயேன்' என்று நாய்க்கு தன்னை சமமாக தன்னைக் கருதி பாடிய சிவபக்தர் யார்?
மாணிக்கவாசகர்
94.தருமிக்காக பாடல் எழுதிக் கொடுத்த புலவர்...
இறையனார்(சிவபெருமானே புலவராக வந்தார்)
95. திருநாவுக்கரசரை சிவன் ஆட்கொண்ட விதம்....
சூலைநோய்(வயிற்றுவலி)
96.அம்பிகைக்கு உரிய விரதம்....
சுக்கிரவார விரதம்(வெள்ளிக்கிழமை)
97. பிறவிக்கடலைக் கடக்கும் தோணியாக ஈசன் அருளும் தலம்....
தோணியப்பர்(சீர்காழி)
98.தாசமார்க்கம்' என்னும் அடிமைவழியில் சிவனை அடைந்தவர்...
திருநாவுக்கரசர்
99."தம்பிரான் தோழர்' என்று சிறப்பிக்கப்படும் சிவபக்தர்......
சுந்தரர்
100.திருத்தொண்டர் புராணம் (பெரிய புராணம்) பாடி நாயன்மார்களைச் சிறப்பித்தவர்...
சேக்கிழார்
101.. சிவபெருமானுக்கு திருப்பல்லாண்டு பாடி போற்றியவர்...
சேந்தனார்
102.திருவாலங்காட்டில் காளியுடன் சிவன் ஆடிய நடனம்..
சண்ட தாண்டவம்
103. மாணிக்கவாசகருக்கு இறைவன் குருவாக காட்சி அளித்தது எந்த மரத்தடியில்...
குருந்த மரம்(ஆவுடையார்கோவில்)
104 . அப்புத்தலம் (நீர் தலம்) என்று போற்றப்படும் சிவாலயம்...
திருவானைக்காவல்
105. தட்சிணாமூர்த்தியிடம் உபதேசம் பெறும் நால்வர்....
சனகர், சனந்தனர், சனத்குமாரர், சனாதனர்
106.சிவசிவ என்றிட தீவினை மாளும்' என்று கூறியவர்...
திருமூலர்
107. பிருத்வி(மண்) தலம் என்று சிறப்பிக்கப்படும் இரு சிவத்தலங்கள்....
காஞ்சிபுரம், திருவாரூர்
108. சிவாயநம என்பதை .... பஞ்சாட்சர மந்திரம் என்று கூறுவர்.
சூட்சும (நுட்பமான)பஞ்சாட்சரம். பஞ்சாட்சரம் என்றால் "ஐந்தெழுத்து மந்திரம்'.
109. மனதிலேயே இறைவனுக்கு கோயில் கட்டியவர்...
பூசலார் நாயனார்
110. அன்பின் சொரூபமாக அம்பிகை விளங்கும் தலம்....
திருவாடானை( அன்பாயியம்மை அல்லது சிநேகவல்லி)
111. அறுபத்துமூவர் விழாவிற்கு பெயர் பெற்ற சிவத்தலம்...
மயிலாப்பூர் கபாலீஸ்வரர்
112.பிச்சைப் பெருமான் என்று குறிப்பிடப்படுபவர்...
பிட்சாடனர் (சிவனின் ஒரு வடிவம்)
113.சதுரகிரியில் மகாலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்தவர்....
அகத்தியர்
114. ஞானவடிவாக விளங்கும் சிவபெருமானின் திருக்கோலம்....
தட்சிணாமூர்த்தி
115.சமயக்குரவர் நால்வரில் திருவிளையாடலில் இடம்பெறும் இருவர்...
திருஞானசம்பந்தர், மாணிக்கவாசகர்
116. தஞ்சாவூரில் உள்ள மூலவர்
பிரகதீஸ்வரர் அல்லது பெருவுடையார்
117.சிவபெருமான் மீது திருப்பல்லாண்டு பாடியவர்....
சேந்தனார்
118.உள்ளத்துள்ளே ஒளிக்கும் ஒருவன்' என்று இறைவனைக் குறிப்பிடுபவர்...
திருமூலர்
119.இறைவனிடம் காதலாகி கசிந்து கண்ணீர் மல்கிய அடியவர்....
திருஞானசம்பந்தர்
120. "நாமார்க்கும் குடியல்லோம்' என்று கோபம் கொண்டு எழுந்தவர்...
திருநாவுக்கரசர்
121. "ஏழிசையாய் இசைப்பயனாய் இருப்பவன் ஈசன்' என்று பாடியவர்....
சுந்தரர்
122. "இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான்' என்று போற்றியவர்...
மாணிக்கவாசகர்
123. "உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்' என்று துதித்தவர்....
திருமூலர்
124. "உழைக்கும் பொழுதும் அன்னையே' என்று ஓடி வரும் அருளாளர்....
அபிராமி பட்டர்
125.ஈன்ற தாய் மறுத்தாலும் அன்புக்காக ஏங்கும் குழந்தையாய் உருகியவர்...
குலசேகராழ்வார்
126.திருவண்ணாமலையில் ஜீவசமாதியாகியுள்ள சித்தர்....
இடைக்காட்டுச்சித்தர்
127. கோயில் என்பதன் பொருள்....
கடவுளின் வீடு, அரண்மனை
128. நால்வர் என்று குறிக்கப்படும் அடியார்கள்....
சம்பந்தர்,அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர்
129. சித்தாந்தத்தில் "சஞ்சிதம்' என்று எதைக் குறிப்பிடுவர்?
முன்வினைப்பாவம்
130.கோளறுபதிகம் யார் மீது பாடப்பட்ட நூல்?
சிவபெருமான்
131. சிவபெருமானுக்கு பிரியமான வேதம்...
சாமவேதம்
132.நமசிவாய' மந்திரத்தை இசைவடிவில் ஜெபித்தவர்...
ஆனாய நாயனார்
133.யாருக்காக சிவபெருமான் விறகு விற்ற லீலை நடத்தினார்?
பாணபத்திரர்
133.அப்பர் கயிலைக்காட்சி கண்டு அம்மையப்பரை பாடிய தலம்...
திருவையாறு
134. சிவபாதசேகரன் என்று சிறப்புப் பெயர் கொண்டவர்...
ராஜராஜசோழன்
135.சிவமூர்த்தங்களில் கருணாமூர்த்தியாக திகழ்பவர்....
சோமாஸ்கந்தர்
136.கயிலை தரிசனம் பெற அருள்புரியும் விநாயகர் துதிப்பாடல்...
விநாயகர் அகவல்.
137.மதுரை சுந்தரேஸ்வரருக்கு சந்தனம் அரைத்துக் கொடுத்து சிவபதம் பெற்ற அடியவர்....
மூர்த்திநாயனார்
138.நக்கீரர் முக்தி அடைந்த சிவத்தலம்.....
காளஹஸ்தி
139.அன்னத்தின் பெயரோடுசேர்த்து வழங்கப்படும் தலம்...
திருச்சோற்றுத்துறை ( திருவையாறு அருகில் உள்ளது)
140. பக்தருக்காக விறகினைச் சுமந்த சிவபெருமான்...
மதுரை சொக்கநாதர்
141. தாயாக வந்து பிரசவம் பார்த்த சிவன்...
திருச்சி தாயுமானவர்
142. மார்கண்டேயனைக் காக்க எமனை சிவன் உதைத்த தலம்...
திருக்கடையூர்( காலசம்ஹார மூர்த்தி)
143. பார்வதியைத் தன் இடப்பாகத்தில் ஏற்றபடி அருளும் தலம்...
திருச்செங்கோடு (நாமக்கல் மாவட்டம்)
144. பஞ்சபூதங்களில் காற்றுக்குரிய சிவன் எங்கு வீற்றிருக்கிறார்?
காளஹஸ்தி
145. அம்பிகையே உச்சிக்கால பூஜை செய்யும் தலம்...
திருவானைக்காவல்(திருச்சி) ஜம்புகேஸ்வரர் கோயில்
146. அடியும் முடியும் காணா முடியாதவராக சிவன் அருளும் கோயில்...
திருவண்ணாமலை
147. காளியோடு சேர்ந்து சிவன் திருநடனம் ஆடிய தலம்...
திருவாலங்காடு நடராஜர் கோயில் (கடலூர் மாவட்டம்)
148. கருவறையில் சடைமுடியோடு காட்சிதரும் சிவலிங்க கோயில்கள்.....
திருவையாறு ஐயாறப்பர், சிவசைலம் சிவசைலநாதர் கோயில் (திருநெல்வேலி மாவட்டம்)
149. சிவபெருமானின் வாகனம்
ரிஷபம்(காளை)
150. மதுரையில் நடராஜர் ஆடும் தாண்டவம்....
சந்தியா தாண்டவம்
151. ஆதிசங்கரர் முக்திலிங்கத்தை ஸ்தாபித்த திருத்தலம்...
கேதார்நாத்
152. சிவலிங்கத்தை எத்தனை பாகங்களாகக் குறிப்பிடுவர்?
மூன்று(பிரம்ம, விஷ்ணு, ருத்ரபாகம்)
153.மூங்கிலை தலவிருட்சமாகக் கொண்ட சிவத்தலங்கள்....
திருநெல்வேலி, திருவெண்ணெய்நல்லூர்
154. சிவ வடிவங்களில் வசீகரமானதாகப் போற்றப்படுவது....
பிட்சாடனர்
155.சிவபெருமானை ஆடு பூஜித்த தலம்....
திருவாடானை (ராமநாதபுரம் மாவட்டம்)
156. தண்ணீரில் விளக்கேற்றிய சிவனடியார்......
நமிநந்தியடிகள்( திருவாரூர்)
157.அர்ச்சகர் அம்பிகையாக சிவனை பூஜிக்கும் தலம்....
திருவானைக்காவல்
158. தேவாரத் தலங்களில் சுக்கிரதோஷம் போக்கும் சிவன்.....
கஞ்சனூர் அக்னீஸ்வரர் (தஞ்சாவூர் மாவட்டம்)
159.சிவன் "அம்மா' என்று யாரை அழைத்து மகிழ்ந்தார்?
காரைக்காலம்மையார்
160. தாச(பக்தி அடிமை) மார்க்கத்தில் சிவனைப் போற்றியவர்....
திருநாவுக்கரசர்
161.முல்லைவனமாகத் திகழ்ந்த சிவத்தலம்...
திருக்கருக்காவூர்
162.தினமும் பிரதோஷ பூஜை நடக்கும் தலம்....
திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயில்
163.சிவனின் கண்ணாகப் போற்றப்படும் பொருள்...
ருத்ராட்சம்
164.முக்கண்ணன் என்று போற்றப்படுபவர்....
சிவன்
165.சிவனால் எரிக்கப்பட்ட மன்மதனை... என்ற பெயரால் அழைப்பர்.
அனங்கன்(அங்கம் இல்லாதவன்)
166.ஸ்ரீருத்ரம் ஜெபித்து சிவனை அடைந்த அடியவர்....
ருத்ரபசுபதியார்
167.இரவும்பகலும் இடைவிடாமல் ஸ்ரீருத்ரம் ஓதியவர்...
ருத்ரபசுபதியார்
168.ஆதிசங்கரருக்கு சிவன் அளித்த லிங்கம் எங்குள்ளது?
சிருங்கேரி (சந்திரமவுலீஸ்வரர்)
169.சிவனைப் போற்றும் சைவ சாத்திரங்களின் எண்ணிக்கை.....
14
170.ஆதிசங்கரர் ஸ்தாபித்த முக்திலிங்கம் எங்குள்ளது?
கேதார்நாத்
171.நடராஜரின் பாதத்தில் பாம்பு வடிவில் சுற்றிக் கொண்டவர்.....
பதஞ்சலி முனிவர்.
172.சிவபெருமானின் நடனத்தை தரிசிக்க தவமிருந்தவர்கள்.....
வியாக்ரபாதர், பதஞ்சலி
173. உபமன்யுவுக்காக பாற்கடலை வரவழைத்தவர்.........
சிவபெருமான்
174.நடராஜரின் தூக்கிய திருவடியை .... என்பர்
குஞ்சிதபாதம்
175.தில்லை அந்தணர்களுக்கு யாகத்தீயில் கிடைத்த நடராஜர்......
ரத்தினசபாபதி
176.உமாபதி சிவாச்சாரியார் எழுதியசித்தாந்த நூல்....
சித்தாந்த அட்டகம்
177.கருவறையில் சிவ அபிஷேக தீர்த்தம் வழியும் இடம்.....
கோமுகி
178. பெரியகோயில்களில் தினமும் எத்தனை முறை பூஜை நடக்கும்?
ஆறுகாலம்
179. சிவனுக்கு "ஆசுதோஷி' என்ற பெயர் உள்ளது. அதன் பொருள்.......
விரைந்து அருள்புரிபவர்
180. சிவசந்நிதியின் பின்புறம் மேற்கு நோக்கி கோஷ்டத்தில் இருப்பவர்.....
லிங்கோத்பவர்
181. சிவனுக்குரிய மூர்த்தங்கள்(சிலை வடிவங்கள்) எத்தனை?
64
182.சிவமூர்த்தங்களில் கருணாமூர்த்தியாகத் திகழ்பவர்....
சோமாஸ்கந்தர்
Subscribe to:
Posts (Atom)
நாம் தவிர்க்க வேண்டிய 8 மன விஷங்கள்!
நாம் தவிர்க்க வேண்டிய 8 மன விஷங்கள்! நமது மன அமைதியையும் மகிழ்ச்சியையும் நாமே அறியாமல் அழிக்கும் 8 நச்சு எண்ணங்கள் என்னென்ன என்று தெரிந்துக...
-
எங்களின் ஆன்லைன் சேவை - http://astroav.in/ குழந்தைக்கு முடி எடுக்கக்கூடாத க...
-
ஸ்ரீஆனந்தாய்பேச்சியம்மன் திருக்கோவிலை உலகம் உற்று நோக்கிறது!!! ஸ்ரீ ஆனந்தாய்பேச்சியம்மன் (எங்கும் இல்லாத ஏழு கலசம்) '...


