Tuesday, 8 May 2018

ஆனந்த_ விஷ்ணுவின்_ஆயிரம் திருநாமங்கள்

ஆனந்த_
விஷ்ணுவின்_ஆயிரம் திருநாமங்கள்

 கருடாழ்வார் துதி
----------------------------
விநதை புத்ரனை விஷ்ணு மித்ரனை
விரிந்த நேத்ரனை விஷமச் சத்ருவை
விண்ணில் விரிந்திடும் சொர்ணச் சிறகனை
எண்ணி வியப்பவர் எதிலும் வெல்வரே!
#ஆனந்த_விஷ்ணுவின்_ஆயிர_நாமங்கள்
அ உ இ ன்
அ உ இ ள்
அ உ இ வ்
சொல் பொருள் உயிர் ஆத்மா (16)
அ அது அதன் அவன்
உ உது உதன் உவன்
இ இது இதன் இவன்
ஓம் பால் பாம்பு பரமன் (32)
ஸ்ரீராமஹரி நாராயண வாசுதேவ கிருஷ்ணா
ஸ்ரீஸ்ரீநிவாச பத்மநாப ஷேஷசாயி சுரேஷா
ஸ்ரீகமலபாத கமலநயன கமலநாப கமலேஷா
ஸ்ரீலக்ஷ்மிகாந்த பூமிநாத பிரம்மதாதா சர்வேஷா (49)
ஸ்ரீகதாதர கமலகர பாஞ்சசன்ய சுதர்ஷனேஷா
ஸ்ரீபிரம்மநேச சிவநேச தேவநேச பக்தேஷா
ஸ்ரீமணிமார்ப மாலைமார்ப மங்கைமார்ப மார்பேஷா
ஸ்ரீசுருள்கேச இருள்கேச தோள்புரள்கேச அடர்கேசா (82)
ஸ்ரீகனகக்ரீட மகரகுண்டல கனகாபர்ண கனகபாதுகேஷா
ஸ்ரீநாமதாரி ஸ்ரீமந்தகாச ஸ்ரீமஞ்சள்வஸ்திர கருணாகடாக்ஷா
ஸ்ரீசார்ங்கதாரி ஸ்ரீநந்தகதாரி ஸ்ரீசக்ரதாரி ஸ்ரீகௌமோதகேஷா
ஸ்ரீஸ்ரீவத்சமார்ப வனமாலைமார்ப ஸ்ரீவாசமார்ப ஸ்ரீகௌஸ்துபேஷா (98)
ஸ்ரீசூர்யநேத்ர ஸ்ரீசந்திரநேத்ர ஸ்ரீகருணாநேத்ர நேத்ரஜோதீஷா
ஸ்ரீசத்துவயீஷா ரஜோகாரணேஷா தமோகாரணேஷா குணகாரணேஷா
ஸ்ரீநரசிம்மமூர்த்தி ஸ்ரீவராகமூர்த்தி ஸ்ரீகருடமூர்த்தி ஸ்ரீஹனுமந்தேஷா
ஸ்ரீஹயக்ரீவமூர்த்தி ஐம்பூதவாசா ஜீவாத்மவாசா பரமாத்மயீஷா (114)
ஸ்ரீகடாக்ஷன் பங்கஜாக்ஷன் புன்டரீகாக்ஷன் மஹாக்ஷன்
சூர்யாக்ஷன் சந்திராக்ஷன் கருணாக்ஷன் பிரமராக்ஷன்
ராமாக்ஷன் கிருஷ்ணாக்ஷன் சுக்லாக்ஷன் சுபாக்ஷன்
ஜலாக்ஷன் கலாக்ஷன் ஞானாக்ஷன் பிரேமாக்ஷன் (130)
பத்மாக்ஷன் கமலாக்ஷன் மலராக்ஷன் அலராக்ஷன்
அரவிந்தாக்ஷன் சுந்தராக்ஷன் காந்தாக்ஷன் கடாக்ஷன்
அகல்யாக்ஷன் அற்புதாக்ஷன் அன்பாக்ஷன் அருளாக்ஷன்
அழகாக்ஷன் அகன்றாக்ஷன் சுத்தாக்ஷன் சுகாக்ஷன் (146)
ஸ்ரீமுரளீதர ஸ்ரீதாமோதர ஸ்ரீவேணுகோபால ஸ்ரீவேங்கடேஷா
ஸ்ரீசதுர்கரதேகா பாம்பணைநேசா பாற்கடல்வாசா நீலவண்ணேஷா
ஸ்ரீமேகவண்ண செந்தாமரைக்கண்ண செம்பவளவாய கருவண்ணகேசா
ஸ்ரீபொற்கழல்பாத பொன்மெட்டிப்பாத பொற்பாதுகாபாத பாதகங்கேஷா (158)
ஸ்ரீகௌசல்யாசுப்ரஜ தசரதநந்தன லக்ஷ்மணசோதர பரதசத்ருக்னேக்ஷா
ஸ்ரீவஷிஷ்டசிஷ்ய ஸ்ரீகௌஷிகசிஷ்ய கௌதமசகாய அகலிகவிமோக்ஷா
ஸ்ரீசுனயனமருக ஸ்ரீஜனகமருக ஸ்ரீசீதாராம ஸ்ரீஜானகீஷா
ஸ்ரீஜானகீராம ஸ்ரீகௌசல்யாராம ஸ்ரீசுமித்ராராம சுபகாரணேஷா (174)
ஸ்ரீவரதவாய ஸ்ரீவரதகைய ஸ்ரீவரதபாத ஸ்ரீவரதராஜேஷா
ஸ்ரீபவளவாய ஸ்ரீபவளகைய ஸ்ரீபவளபாத பவளபாதுகேஷா
ஸ்ரீவெண்ணைவாய மண்ணுண்டவாய அண்டமுண்டவாய ஏகவாக்கீஷா
ஸ்ரீஆலிலைபாலா ஆநிறைபாலா ஆயர்குலபாலா பக்தபாலேஷா (190)
ஸ்ரீஅன்னமூர்த்தி ஸ்ரீமச்சமூர்த்தி ஸ்ரீகூர்மமூர்த்தி ஸ்ரீவாமனேஷா
ஸ்ரீவேதாச்சார்ய ஸ்ரீகீதாச்சார்ய ஸ்ரீகலாச்சார்ய கலாகாரணேஷா
ஸ்ரீசதுர்வேதன் ஸ்ரீதனுர்வேதன் ஸ்ரீசாமவேதன் சாமகானேஷா
ஸ்ரீவேதஅருளன் ஸ்ரீவேதபொருளன் ஸ்ரீவேதரட்சக ஸ்ரீவேதாந்தேஷா (206)
ஸ்ரீரங்கமூர்த்தி ஸ்ரீரங்கநாதா ஸ்ரீரங்கமன்னா ஸ்ரீரங்கரங்கேஷா
ஸ்ரீரங்கக்கண்ணா ஸ்ரீரங்கராமா ஸ்ரீரங்கவாசா ஸ்ரீரங்கராஜேஷா
ஸ்ரீரங்கசயன குடதிசைத்தலைய குணதிசைபாத தென்திசைக்கடாக்ஷா
ஸ்ரீரங்கநேசா அகன்றதிருகண்ணா காவிரிக்கரைவாசா கோதைசொல்லீசா (222)
ஸ்ரீவைகுண்டவாச வைகுண்டராஜ வைகுண்டமன்ன ஸ்ரீவைகுண்டேஷா
ஸ்ரீயிதயவாச பக்தர்மனவாச நாரதநாவாச இதயகமலேஷா
ஸ்ரீவேதபொருளுறையன் அணுயுறைபொருளன் அண்டநிறைபொருளன் அந்தர்யாமீஷா
ஸ்ரீவிஸ்வரூப சகலபொருளுருவ சகலவுயிர்ஜீவ சகலசர்வேஷா (238)
ஸ்ரீசகலதர்ஷி ஸ்ரீசகலவ்யாபி ஸ்ரீசகலஞானி சகலகாரணேஷா
ஸ்ரீசகலஸ்நேக ஸ்ரீசகலநேச ஸ்ரீசகலபந்து சகலகாருண்யேஷா
ஸ்ரீகருணைமூர்த்தி கருணைமலர்ப்பாத கருணைமலர்வதன கருணாநிதீஷா
ஸ்ரீகருணைச்செல்வன் திருக்கருணைச்சொல்லன் பெருங்கருணைக்கடலன்
கருணாக்காரணேஷா (254)
ஸ்ரீசுக்ரீவமித்ர ஸ்ரீபார்த்தமித்ர ஸ்ரீவேடர்குகமித்ர ஜீவமித்ரேஷா
ஸ்ரீவிபீஷணநாத சரணாகதபாத சரணாகதயிஷ்ட சரணாகதேஷா
ஸ்ரீகுசேலப்ராண பிரகலாதப்ராண ஸ்ரீதுருவப்ராண ஜீவப்ராணேஷா
பக்தபூஜிதபாத பக்தபூஜிதயிஷ்ட ஸ்ரீஅம்பரீஷப்ராண பக்தப்ராணேஷா (270)
ஸ்ரீகணேஷமாமா ஸ்ரீமுருகமாமா ஸ்ரீஐயப்பமாதா காசிநாதேஷா
ஸ்ரீலக்ஷ்மிமணாள வாணியாச்சார்ய ஸ்ரீஉமையதமைய கள்ளழகேஷா
ஸ்ரீபூமிக்கேள்வ ஸ்ரீகேழல்மூர்த்தி பூங்கோதைமாலா ரங்கமாலேஷா
ஸ்ரீமலைவாசா அலமேலுநேசா மாமல்லசயனா மல்லாண்டவீரேஷா (286)
ஸ்ரீஆழிசுழல்விரல வன்தோளிருமல்ல வில்லம்பிருக்கைய ஸ்ரீவீரவீரேஷா
ஸ்ரீகதாயுதபாணி ஸ்ரீநந்தகவாள்பாணி ஸ்ரீசார்ங்கபாணி ஸ்ரீபாஞ்சசன்யேஷா
ஸ்ரீதர்மயுத்தன் ஸ்ரீதர்மசித்தன் ஸ்ரீதர்மசுத்தன் ஸ்ரீதர்மரக்ஷேஷா
ஸ்ரீதர்மவுபகாரி ஸ்ரீதர்மாவதாரி ஸ்ரீதர்மபரிபால ஸ்ரீதர்மகர்மேஷா (302)
உள்ளவன் உடையவன் உறைபவன் நிறைபவன்
அன்பினன் பண்பினன் அருள்பவன் தருபவன்
அறிவினன் அழகினன் மகிழ்பவன் நெகிழ்பவன்
சொல்பவன் செய்பவன் கொடுப்பவன் கொள்பவன் (318)
இதயன் இதயமலர்வாசன் இதயவிசாலன் இதயவிலாசன்
உதயன் உதயமலைசூர்யன் சூர்யப்ரகாசன் ஸ்ரீசூர்யயீசன்
உள்ளத்தவன் வெல்லத்தவன் கரும்பினன் இரும்பினன்
அருவினன் உருவினன் உறவினன் உணர்வினன் (334)
அன்பன் அழகன் அறிஞன் கவிஞன்
ரசிகன் நடிகன் கண்ணன் கலைஞன்
பண்பன் நண்பன் இடையன் இறையன்
செல்வன் வெல்வன் படையன் மறையன் (350)
பற்றினன் பற்றற்றினன் உற்றவன் மற்றற்றினன்
உயர்ந்தவன் மலர்ந்தவன் வளர்ந்தவன் அளந்தவன்
சுருங்கினன் பெருகினன் உதவினன் உறங்கினன்
நெருங்கினன் விலகினன் மறைபவன் தெரிபவன் (366)
அருளினன் பொருளினன் இருளினன் ஒளியினன்
அயர்விலன் தளர்விலன் பிறனிலன் முரணிலன்
உயிருளன் உணர்வுளன் உறவுளன் முரணுளன்
பிறப்பிலன் இறப்பிலன் மறப்பிலன் வெறுப்பிலன் (382)
படைப்பவன் துடைப்பவன் பொறுப்பவன் இருப்பவன்
விதைப்பவன் வளர்ப்பவன் துவைப்பவன் மடிப்பவன்
களைபவன் வளைபவன் முயல்பவன் முடிப்பவன்
நனைபவன் குளிர்பவன் நினைப்பவன் மறப்பவன் (398)
புகழுடையான் பெயருடையான் திருவுடையான் மருவுடையான்
வலுவுடையான் வடிவுடையான் வளமுடையான் நலமுடையான்
குணமுடையான் கொடையுடான் படையுடையான் விடையுடையான்
விண்ணுடையான் மண்ணுடையான் பொன்னுடையான் பொறையுடையான் (414)
நல்லவன் வல்லவன் கொண்டவன் கொடுத்தவன்
கொற்றவன் பெற்றவன் கற்றவன் செற்றவன்
துணிந்தவன் பணிந்தவன் முனிந்தவன் தணிந்தவன்
விருந்தினன் அருந்தினன் மருந்தினன் பருந்தினன் (430)
உத்தமன் வித்தகன் வாமனன் விக்ரமன்
சத்தியன் சத்துவன் காரணன் பூரணன்
வானவன் ஆனவன் ஆவினன் ஆண்டவன்
ஆதவன் மாதவன் சந்திரன் இந்திரன் (444)
ஆதியன் அந்தன் இடையன் இமயன்
சிங்கன் கருடன் அரசன் ஈசன்
குமரன் குபேரன் நெருப்பன் சுரப்பன்
அகரன் கடலன் அனந்தன் வசந்தன் (460)
மதன் பதன் இதன் மிதன்
பரன் சுரன் தரண் அரன்
யமன் பலன் உளன் இலன்
நலன் பலன் சுபன் சுகன் (476)
மிதப்பவன் பறப்பவன் பிறப்பவன் சிறப்பவன்
எடுப்பவன் தொடுப்பவன் தடுப்பவன் படுப்பவன்
அடைப்பவன் விடுப்பவன் அணைப்பவன் பிணைப்பவன்
பிரிப்பவன் சேர்ப்பவன் சிரிப்பவன் ஏற்பவன் (492)
அமலன் விமலன் நிமலன் கமலன்
அதிபன் அதிகன் அகிலன் முகிலன்
மதியன் விதியன் புதியன் முதியன்
விழியன் வழியன் இனியன் கனியன் (498)
சுத்தன் சித்தன் சத்தன் அத்தன்
அருவன் உருவன் ஒருவன் சிறுவன்
கரியன் அரியன் சரியன் விரியன்
களியன் எளியன் கலியன் காலன் (514)
யுவன் யுகன் பவன் பகன்
அகன் புதன் தவன் தனன்
லவன் லகன் லசன் நிசன்
வரன் வசன் கணன் குணன் (530)
மனத்தவன் மணத்தவன் சினத்தவன் குணத்தவன்
வசிப்பவன் ரசிப்பவன் பசிப்பவன் புசிப்பவன்
சுமப்பவன் சமைப்பவன் இசைப்பவன் இயல்பினன்
கடப்பவன் கிடப்பவன் கேட்பவன் காப்பவன் (546)
வள்ளுவன் வியாசன் வசிஷ்டன் சிஷ்டன்
இஷ்டன் நிஷ்டன் த்ரிஷ்டன் ப்ரதிஷ்டன்
இனிப்பன் கசப்பன் கணக்கன் இணக்கன்
தகப்பன் தகிப்பன் பகுப்பன் வகுப்பன் (562)
அண்மையன் உண்மையன் நன்மையன் பன்மையன்
கண்ணியன் புண்ணியன் எண்ணியன் பண்ணியன்
பள்ளியன் துள்ளியன் சொல்லியன் வில்லியன்
வானன் மோனன் வாகனன் மோகனன் (578)
சூரியன் சீரியன் வீரியன் வெற்றியன்
ஆதியன் ஜோதியன் அகன்றவன் பகன்றவன்
பகலவன் சகலவன் அலகிலன் அளவிலன்
பூர்வன் அபூர்வன் தேகன் விதேகன் (594)
பசுமையன் பழமையன் வண்ணன் மன்னன்
புதுமையன் பதுமையன் திண்ணன் நன்னன்
தன்மையன் தண்மையன் மாசிலான் பேசிலான்
இன்மையன் மறுமையன் இனிமையன் தனிமையன் (610)
ஐராவதன் உச்சஸ்ரவன் மேருகிரி ஏழுகிரி
நாரதன் சித்ரதன் பிருகுமுனி கபிலமுனி
வாசுகி பேரிடி கங்கைநீர் மகரமீன்
ஏகாதசி நெல்லிக்கனி வெண்ணை நீர்மோர் (626)
ஆயன் மாயன் சேயன் தூயன்
இலையன் சிலையன் களையன் மலையன்
அமிழ்ந்தவன் உமிழ்ந்தவன் விழுங்கினன் முழங்கினன்
உதைத்தவன் வதைத்தவன் கதைத்தவன் சிதைத்தவன் (644)
ஆலன் லீலன் சீலன் ஞாலன்
பாலன் வாலன் காலன் காலன்
குறும்பன் கரும்பன் இரும்பன் துரும்பன்
ஆடலன் விளையாடலன் கூடலன் குழலூதினன் (660)
துகிலவன் முகிலவன் நர்த்தனன் பரிவர்த்தனன்
துயிலவன் ஒயிலவன் யுத்தனன் மல்யுத்தனன்
பலவேலையன் மலர்மாலையன்
சிகைசுருளினன் மயில்சிறகினன் (672)
ராதையன் பூங்கோதையன்
பாதையன் நற்கீதையன்
துகிலிழுத்தவன் துகிலளித்தவன்
உடனிருப்பவன் துயரறுப்பவன் (680)
உரலுருட்டினன் உறித்திருட்டினன்
தோலிருட்டினன் பொய்புரட்டினன்
மலையெடுத்தவன் குடைப்பிடித்தவன்
தேர்ச்செழுத்தினன் தேரழுத்தினன் (688)
மண்ணையுண்டவன் வெண்ணையுண்டவன்
கீரையுண்டவன் தோலையுண்டவன்
அவலையுண்டவன் அகிலமுண்டவன்
அறிவுக்குவிருந்தினன் மனதுக்குமருந்தினன் (694)
ஏகன் அனேகன் ப்ரணவன் ப்ராணன்
ஈகன் இகபரன் அரங்கன் சுரங்கன்
மயக்கினன் கலக்கினன் விளக்கினன் விளக்கினன்
லயித்தவன் ஜெயித்தவன் நழுவினன் சிறையினன் (710)
பன்முகன் இன்முகன் நன்முகன் நாயகன்
இன்னகன் விண்ணகன் மண்ணகன் தாயகன்
இன்மனன் நன்மனன் பொன்மனன் பூமணன்
சற்குணன் பொற்குணன் நற்குணன் நாரணன் (726)
மேஷன் ரிஷபன் மிதுனன் கடகன்
சிம்மன் கன்யன் துலான் விருச்சிகன்
தனுஷன் மகரன் கும்பன் மீனன்
கிரகன் நட்சத்திரன் நாடியன் நற்சோதிடன் (742)
முதலையறுத்தவன் யானைவிடுத்தவன்
கஜேந்திரவரதன் நரேந்திரவதனன்
உரலையிழுத்தவன் மரத்தைவிடுத்தவன்
நளகூபரவரதன் நலமேதருவதனன் (750)
ஆமேய்த்தவன் ஆதேய்த்தவன்
புல்லூட்டினன் பால்கூட்டினன்
ஆவருடினன் ஆதடவினன்
ஆசுற்றினன் ஆபற்றினன் (758)
ஆவணைத்தவன் ஆவனைத்தவன்
ஆமயக்கினன் ஆயியக்கினன்
ஆவுக்கொருநண்பன் ஆவிரும்புமன்பன்
ஆமணிக்கிசைவன் ஆமணியின்னிசையன் (764)
காளிங்கநர்த்தனன் ஆலிங்கனர்த்தனன்
ராசலீலாதாரி பரமவுபகாரி
அகயோகியன் சுகபோகியன்
தவவீரியன் சுபகாரியன் (772)
ஸ்ரீபாண்டவதூதன் ஸ்ரீபார்த்தகீதன்
பான்சசன்யசத்தன் குருட்சேத்திரயுத்தன்
பரீட்சீத்தைமீட்டான் தற்பெருமைகாட்டான்
இஷ்டத்துக்குக்கல்யாணன் பிரம்மச்சர்யப்ரமாணன் (780)
வாழைபோல்செழிப்பன் ஆலைமேல்மிதப்பன்
ஊழிதோறும்பிறப்பன் வாழியெனவுரைப்பன்
அருந்தருமகற்பன் பெருஞ்சத்யகவசன்
கடமையிருகண்ணன் கண்ணியகருமன்னன் (788)
ஆனந்தசயனன் ஆனந்தநடனன்
கரும்புஜகசயனன் கரும்புஜகநடனன்
நவநீதசோரன் தங்கமணியாரன்
புன்முறுவல்காரன் கீர்த்தியபாரன் (794)
கலியமூர்த்தி எளியமூர்த்தி இனியமூர்த்தி புனிதமூர்த்தி
மறைமூர்த்தி மலைமூர்த்தி சத்யமூர்த்தி நித்யமூர்த்தி
வரதமூர்த்தி விரதமூர்த்தி தேவமூர்த்தி தெய்வமூர்த்தி
அன்புமூர்த்தி அகிலமூர்த்தி அண்டமூர்த்தி உண்டமூர்த்தி (810)
கோப்ரியன் கோபிப்ரியன் ஆப்ரியன் ஆவினப்ரியன்
கோநேசன் கோதாசன் கோவாசன் கோவீசன்
கோபாலன் கோவாளன் கோவைத்தியன் கோவைத்தனன்
பால்சோறுப்ரியன் திருவெண்ணைப்ரியன்
தயிர்சாதப்ரியன் நீர்மோர்ப்ரியன் (826)
குதிரைமுகன் கூர்மமுகன் பன்றிமுகன் சிங்கமுகன்
ராமமுகன் கிருஷ்ணமுகன் கருணைமுகன் பொறுமைமுகன்
நல்லமுகன் ஞானமுகன் வல்லமுகன் வரதமுகன்
சூர்யமுகன் சந்திரமுகன் மலர்ச்சிமுகன் குளிர்ச்சிமுகன் (842)
ஸ்ரீபதி பூபதி ஆபதி கோபதி
லக்ஷ்மிபதி பூமிபதி சீதாபதி ராதாபதி
துளசிபதி தூயபதி ஆயபதி ஆயர்பதி
அண்டபதி பிண்டபதி அகிலபதி உலகபதி (858)
சுரபதி நரபதி வரபதி மருபதி
வளபதி நலபதி குணபதி குலபதி
தேவபதி ஜீவபதி மூலபதி காலபதி
வேதபதி ஞானபதி மோனபதி கானபதி (874)
கண்ணன் பூங்கண்ணன்
கருங்கண்ணன் பெருங்கண்ணன்
மலர்க்கண்ணன் அலர்க்கண்ணன்
கதிர்க்கண்ணன் குளிர்க்கண்ணன் (882)
அழகுக்கண்ணன் அகன்றக்கண்ணன்
அற்புதக்கண்ணன் அதிசயக்கண்ணன்
அரவிந்தக்கண்ணன் அருளுடைக்கண்ணன்
அன்புக்கண்ணன் அறிவுக்கண்ணன் (890)
நீலமுகன் நீலகரன் நீலகண்டன் நீலவண்ணன்
திருநீலத்தோளன் திருநீலமார்பன் திருநீலவயிறன் திருநீலபாதன்
திருநீலக்கன்னன் திருநீலமூக்கன் திருநீலகாதன் திருநீலபாதன்
திருநீலத்தாடை திருநீலத்தொடையன் திருநீலவுடலன் திருநீலதேகன் (906)
கருமுகன் கருகரன் கருகண்டன் கருவண்ணன்
கருநீலத்தோளன் கருநீலமார்பன் கருநீலவயிறன் கருநீலபாதன்
கருநீலக்கன்னன் கருநீலமூக்கன் கருநீலகாதன் கருநீலபாதன்
கருநீலத்தாடை கருநீலத்தொடையன் கருநீலவுடலன் கருநீலதேகன் (922)
ஆண்டவன் ஆள்பவன் வெகுள்பவன் அருள்பவன்
அளிப்பவன் அழிப்பவன் அடிப்பவன் அணைப்பவன்
அளப்பவன் அகல்பவன் அகன்றவன் பகன்றவன்
அருமையன் பொறுமையன் கருமையன் பெருமையன் (938)
அன்பினன் பண்பினன் அழகினன் அறிவினன்
அருளினன் பொருளினன் ஒளியினன் இருளினன்
வெளியினன் உள்ளினன் சொல்லினன் வில்லினன்
களியினன் களையினன் விழியினன் மொழியினன் (954)
முனிபவன் தணிபவன் பணிபவன் துணிபவன்
விரைபவன் நிறைபவன் கரைபவன் மறைபவன்
தருபவன் வருபவன் பகர்பவன் நகர்பவன்
நுகர்பவன் முகர்பவன் மலர்பவன் அலர்பவன் (970)
துயில்பவன் வைகுண்டத்துயிலவன் பாம்பணைத்துயிலவன் பாற்கடல்துயிலவன்
ஸ்ரீரங்கத்துயிலவன் மாமல்லத்துயிலவன் ஆதிஷேஷத்துயிலவன் லக்ஷ்மிமடித்துயிலவன்
இதயக்கமலதுயிலவன் இதயமலர்துயிலவன் இதயபத்மதுயிலவன் ஸ்ரீயிதயத்துயிலவன்
அசத்யத்துயிலவன் அழகியத்துயிலவன் அலர்ந்தத்துயிலவன் ஆனந்ததுயிலவன்(986)
சயனன் வைகுண்டசயனன் பாம்பணைசயனன் பாற்கடல்சயனன்
ஸ்ரீரங்கசயனன் மாமல்லசயனன் ஆதிஷேஷசயனன் லக்ஷ்மிமடிசயனன்
இதயக்கமலசயனன் இதயமலர்சயனன் இதயபத்மசயனன் ஸ்ரீயிதயசயனன்
அசத்யசயனன் அழகியசயனன் அலர்ந்தசயனன் ஆனந்தசயனன் (1002)
ஸ்ரீராமானுஜநேசா ஸ்ரீராமானுஜதாசா ஸ்ரீராமானுஜவாசா ஸ்ரீராமானுஜேஷா
ஸ்ரீஹனுமந்த்நேச ஸ்ரீஹனுமந்த்தாச ஸ்ரீஹனுமந்த்வாச ஸ்ரீஹனுமந்தீசா
ஸ்ரீதுளசிநேசா ஸ்ரீதுளசிதாசா ஸ்ரீதுளசிவாசா ஸ்ரீதுளசியீஷா
ஸ்ரீகருடத்நேச ஸ்ரீகருடத்தாச ஸ்ரீகருடத்வாச ஸ்ரீகருடத்தீசா (1018)
ஸ்ரீராகவேந்திரநேச ஸ்ரீராகவேந்திரதாச ஸ்ரீராகவேந்திரவாச ஸ்ரீராகவேந்திரேஷா
ஸ்ரீஆழ்வார்நேசா ஸ்ரீஆழ்வார்தாசா ஸ்ரீஆழ்வார்வாசா ஸ்ரீஆழ்வாரீசா
ஸ்ரீபாண்டவநேசா ஸ்ரீபாண்டவதாசா ஸ்ரீபாண்டவவாசா ஸ்ரீபாண்டவேஷா
ஸ்ரீபீஷ்மநேசா ஸ்ரீபீஷ்மதாசா ஸ்ரீபீஷ்மவாசா ஸ்ரீபீஷ்மயீஷா (1034)
ஸ்ரீபொய்கையார்நேச ஸ்ரீபொய்கையார்தாச ஸ்ரீபொய்கையார்வாச ஸ்ரீபொய்கையாரீசா
ஸ்ரீபூதத்தார்நேச ஸ்ரீபூதத்தார்தாச ஸ்ரீபூதத்தார்வாச ஸ்ரீபூதத்தாரீசா
ஸ்ரீபேயார்நேச ஸ்ரீபேயார்தாச ஸ்ரீபேயார்வாச ஸ்ரீபேயாரீசா
ஸ்ரீசக்கரத்தார்நேச ஸ்ரீசக்கரத்தார்தாச ஸ்ரீசக்கரத்தாவாச ஸ்ரீசக்கரத்தாரீசா (1050)
ஸ்ரீநம்மாழ்வார்நேசா ஸ்ரீநம்மார்வார்தாசா ஸ்ரீநம்மாழ்வார்வாசா ஸ்ரீநம்மாழ்வாரீசா
ஸ்ரீமதுரகவிநேசா ஸ்ரீமதுரகவிதாசா ஸ்ரீமதுரகவிவாசா ஸ்ரீமதுரகவியீசா
ஸ்ரீகுலசேகரநேசா ஸ்ரீகுலசேகரதாசா ஸ்ரீகுலசேகரவாசா ஸ்ரீகுலசேகரயீசா
ஸ்ரீபெரியாழ்வார்நேசா ஸ்ரீபெரியாழ்வார்தாசா ஸ்ரீபெரியாழ்வார்வாசா ஸ்ரீபெரியாழ்வாரீசா(1066)
ஸ்ரீகோதைநேசா ஸ்ரீகோதைதாசா ஸ்ரீகோதைவாசா ஸ்ரீகோதையீசா
ஸ்ரீதொண்டரடிநேசா ஸ்ரீதொண்டரடிதாசா ஸ்ரீதொண்டரடிவாசா ஸ்ரீதொண்டரடியீசா
ஸ்ரீபாணாழ்வார்நேசா ஸ்ரீபாணாழ்வார்தாசா ஸ்ரீபாணாழ்வார்வாசா ஸ்ரீபாணாழ்வாரீசா
ஸ்ரீமங்கைமன்னநேசா ஸ்ரீமங்கைமன்னதாசா ஸ்ரீமங்கைமன்னவாசா ஸ்ரீமங்கைமன்னேஷா (1082)
ஸ்ரீபிரகலாதநேச ஸ்ரீபிரகலாததாச ஸ்ரீபிரகலாதவாச ஸ்ரீபிரகலாதேஷா
ஸ்ரீதுருவநேச ஸ்ரீதுருவதாச ஸ்ரீதுருவவாச ஸ்ரீதுருவேஷா
ஸ்ரீகஜேந்திரநேச ஸ்ரீகஜேந்திரதாச ஸ்ரீகஜேந்திரவாச ஸ்ரீகஜேந்திரேஷா
ஸ்ரீஅம்பரீஷநேச ஸ்ரீஅம்பரீஷதாச ஸ்ரீஅம்பரீஷவாச ஸ்ரீஅம்பரீஷயீஷா (1096)
மலர்ப்பாதன் அலர்ப்பாதன் வளர்ப்பாதன் குளிர்ப்பாதன்
வன்பாதன் மென்பாதன் நன்பாதன் ஞானப்பாதன்
அருளும்பாதன் அழகுப்பாதன் புனிதபாதன் புகழுடைப்பாதன் (1108)
ஆனந்த விஷ்ணுவின் ஆயிர நாமங்களை
ஒவ்வொரு நாளும் ஓயாது சொல்பவர்
சகல நற்பண்புகளும் தம்மில் சிறக்க
சகல ஆற்றல்களும் தம்முள் பிறக்க
சகல ஞானங்களும் தம்முள் மலர
சகல செல்வங்களும் தம்மை நாட
ஆனந்தமாக வாழ்வார்களாக!
ஆனந்த விஷ்ணு இதற்கு அருள்வாராக!
ஆனந்த விஷ்ணுவின் ஆயிர நாமங்களை
சொல்ல நேரம் இல்லாதவர்கள்
ராம்ராமராமா ராம்ராமராமா ராம்ராமராமா!
என ஒரே முறை கூறி
ஆனந்த விஷ்ணுவின் ஆயிர நாமங்களை
மும்முறை சொன்ன பலன்களை அடைவார்களாக!
இந்த யுக்தியை உலகுக்கு தந்த
சிவனார் அவர்களுக்கு அருள்வாராக!
விஷ்ணு அவர்களுக்கு அருள்வாராக!!
ஜெய்ஸ்ரீராமா ஜெய்ஜெய் ஸ்ரீராமராமா
ஜெய்ஸ்ரீ மந் நாராயணா ஜெய்ஜெய் ஸ்ரீமந்நாராயணா!
ஜெயஜெய சங்கர ஹரஹர சங்கர!! நமோ நம!!
ஜெயஜெய சங்கர ஹரஹர சங்கர!! நமோ நம!!

துன்பங்கள் தீர்க்கும் குச்சனூர் சனீஸ்வரர்

துன்பங்கள் தீர்க்கும் குச்சனூர்
சனீஸ்வரர்

தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் சுரபி நதிக்கரையில் வீற்றிருக்கிறார் குச்சனூர் சனீஸ்வர பகவான்.
இங்கு ஆடிமாதத் திருவிழாவும், இரண்டரை வருடத்திற்கு ஒரு முறை நடக்கும் சனிப் பெயர்ச்சி விழாவும் சிறப்பானதாகும்.
‘தினகரன் மான்மியம்’ என்கிற பழமையான நூல் வாயிலாகவே, குச்சனூர் சனீஸ்வர பகவான் கோவில் பற்றிய தல வரலாற்றை அறிய முடிகிறது.
அதன்படி முன்பொரு காலத்தில் தினகரன் என்ற மன்னன், திரு மணம் முடிந்து பல வருடங்களாக குழந்தை பாக்கியம் இல்லாது இருந்திருக்கிறான். கடவுளிடம் மனமுருகி வேண்டிக்கொண்ட மன்னனின் கனவில் ஒரு முறை அசரீரி ஒலித்தது.
‘உன் வீட்டுக்கு ஒரு அந்தணச் சிறுவன் வருவான். அவனை வளர்த்து வந்தால் குழந்தை பிறக்கும்’ என்றது அந்தக் குரல்.
அதன்படி ஒரு சிறுவன், மன்னரிடம் வந்து சேருகிறான். அவனுக்கு சந்திரவதனன் என்று பெயர் சூட்டி வளர்த்து வரும் வேளையில், அரசிக்கு ஆண் குழந்தை ஒன்று பிறந்தது. அவனுக்கு ‘சதாகன்’ என்று பெயர் சூட்டினர்.
காலங்கள் உருண்டோட சந்திரவதனன் ஒரு மன்னனுக்கு உரிய வீரம், திறமை, விவேகத்துடன் இருந்ததால், அவனுக்கே முடிசூட்டினான் மன்னன்.
இந்தநிலையில் தினகரனுக்கு சனி தோஷம் பிடித்தது. இதனால் பல சோதனைகளையும், துன்பங்களையும் அவன் சந்தித்தான்.
தனது வளர்ப்பு தந்தை அடையும் துன்பத்தை கண்டு மனமுடைந்த சந்திரவதனன், தந்தையின் துன்பம் நீங்க, சுரபி நதிக்கரைக்குச் சென்று சனியின் உருவத்தை நிறுவி வழிபடத் தொடங்கினான்.
அந்த வழிபாட்டில் மனமிரங்கிய சனீஸ்வர பகவான், அவன் முன்தோன்றி, ‘முற்பிறவியில் செய்த பாவ வினைகளுக்கு ஏற்பவே இப்பிறவியில் சனி தோஷம் பிடிக்கிறது.
இதன் காலம் ஏழரை நாழிகை, ஏழரை நாட்கள், ஏழரை மாதங்கள், ஏழரை ஆண்டுகள். உன் தந்தை முற்பிறவியில் செய்த பாவ வினைகளின் விளைவே இது’ என்றார்.
ஆனால் சந்திரவதனன், “என் தந்தைக்கு வரும் துன்பங்களை எனக்கு கொடுங்கள். நான் ஏற்றுக்கொள்கிறேன்’ என்று சனி பகவானிடம் கோரிக்கை வைத்தான்.
ஒப்புக்கொண்ட சனீஸ்வர பகவான், சந்திரவதனனுக்கு கடுமையான பல துன்பங்களையும், சோதனைகளையும் கொடுத்தார்.
அப்போதும் சந்திரவதனன், சனீஸ்வர வழிபாட்டை நிறுத்தவில்லை. சுரபி நதிக்கரையில் தீவிர வழிபாட்டில் இறங்கினான்.
ஒரு கட்டத்தில் மனம் இரங்கிய சனீஸ்வரபகவான் சந்திரவதனன் முன் தோன்றி, அவனது துன்பங்களை களைந்ததுடன் ‘பக்தர்கள் தங்களது குறைகளை உணர்ந்து இவ்விடத்துக்கு வந்து என்னை வணங்கினால், அவர்களுக்கு சனிதோஷத்தால் வரும் துன்பங்களைக் குறைத்து முடிவில் நன்மைகளை அளிப்பேன்’ என்று சொல்லி மறைந்தார்.
மேலும் அவ்விடத்தில் சுயம்புவாகவும் எழுந்தருளினார்.
சுயம்பு சனீஸ்வரருக்கு, குச்சுப்புல்லினால், ஒரு கூரை வேய்ந்தான் சந்திரவதனன். குச்சுப்புல் கூரை என்பதே நாளடைவில் குச்சனூர் என்றானது.
குச்சனூர் சனீஸ்வரபகவான் திருக்கோவிலில் ஆடி மாதம் கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்குகிறது.
அதனை ஆடிப்பெருந்திருவிழா என்பர். சிறப்பாக கொண்டாடப்படும் இந்த திருவிழாவில், உலகம் முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சுயம்பு சனீஸ்வரபகவானை தரிசனம் செய்வர்.
ஆடி மாதம் முழுவதும் வருகிற சனிக்கிழமைகளில் நாள் முழுவதும் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும்.
கோவிலில் ‘விடத்தை மரம்’ தல மரமாகவும், ‘கருங்குவளை மலர்’ தல மலராகவும், ‘வன்னி இலை’ தல இலையாகவும் உள்ளது.
சனீஸ்வர பகவானுக்கு காகம் வாகனமாகவும், ‘எள்’ தானியமாகவும் இருக்கிறது. இதனால் இங்கு வரும் பக்தர்கள் எள் விளக்கு போடுவதும், கருப்பு வஸ்திரம் சாத்தி, காகங்களுக்கு எள்ளு சாதம் பிரசாதமாக படைத்து சனீஸ்வரரை வழிபடுவதையும் வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
தேனியில் இருந்து 33 கிலோமீட்டர் தொலைவில் குச்சனூர் உள்ளது. இதற்கு வீரபாண்டி வழியாகவும், சின்னமனூர் வழியாகவும் செல்லலாம். சின்னமனூரில் இருந்து உப்புக்கோட்டை செல்லும் சாலையில் 5 கிலோமீட்டர் தூரம் பயணித்தால் கோவிலை அடையலாம்.


குண்டடம் கால பைரவர்

குண்டடம் கால பைரவர்

 'காசு இருந்தால் காசிக்கு செல்லுங்கள்! காசு இல்லாவிட்டால் குண்டடத்தக்கு வாருங்கள்!' என்று சொன்னவர் யார் தெரியுமா? திருமுருக கிருபானந்த வாரியார்.
அதற்கு என்ன அர்த்தம்?
காசிக்குச் சென்று கால பைரவரை தரிசிக்க ஆயிரக்கணக்கில் செலவாகும். ஆனால் காசியில் இருக்கும் அதே கால பைரவரைதான், சிவபெருமானின் ஆணையால் தமிழகத்தில் கொங்கு மண்டலத்தில் இருக்கும் குண்டடத்துக்கும் வந்து, அருள்பாலித்துக் கொண்டிருக்கிறார். அதனால் ரொம்ப செலவில்லாமல் காசி காலபைரவரை இந்தக் குண்டடத்திலேயே கொங்கு வடுகநாதராக வழிபடலாம் வாருங்கள் என்று அழைத்தார் வாரியார்.
யார் இந்த பைரவர்?
சிவனின் வீர அம்சம்தான் பைரவர். காலச் சக்கர்தை இயக்கும் பரம்பொருள் இவர். காலனாகிய எமனையே நடுங்க வைப்பவர் என்பதால் கால பைரவர் என்ற பெயர் எழுந்தது. அதாவது பைரவரை வணங்குபவருக்கு எம பயம் இல்லை. சிவாலயங்களுக்கும், ஆலயம் அமைந்துள்ள ஊருக்கும் இவர்தான் காவல்காரர். அதனால் க்ஷேத்திரபாலகர் என்ற பெயரும் இவருக்கு உண்டு. நான்கு வேதங்களே நாய் வடிவில், இவரது வாகனமாக இருக்கிறது.
அத்தனை சிறப்பு மிக்க காசி கால பைரவர் எப்படி இந்த குண்டடம் கிராமத்துக்கு வந்தார் என்பது, உங்களுக்கு தெரியுமா?
அதேபோல், இது என்ன ஊரின் பெயர் குண்டடம் என்று வித்தியாசமாக இருக்கிறதே? என்று நினைக்கிறீர்களா?
இரண்டு கேள்விகளுக்கு விடையைத் தரும் ஆலய வரலாறை இப்போது பர்க்கலாமா?
அந்தக் காலத்தில் இந்தப் பகுதி அரச மரங்களும், இலந்தை மரங்களும் நிறைந்த அடர்ந்த காடாக இருந்தது. அப்போது இதற்கு இந்து வனம் என்று பெயர். இந்த இடத்தில் ஆசிரமம் அமைத்து விடங்கி முனிவர் தவம் செய்து வந்தார். அமைதியாக இருந்த இந்தப் பகுதியில் திடீரென சீசகன் என்ற அசுரன் ஒருவன் உள்ளே நுழைந்து, ஆட்டம் காட்ட ஆரம்பித்தான். கண்ணில் பட்டவரகளையெல்லாம் அடித்து துரத்தினான். அமைதி தவழும் இடத்துக்கு இப்படி ஓர் ஆபத்து வந்ததே என்று, முனிவர் பதறிப் போனார். தவத்தைப் பாதியில் நிறுத்தினால் நல்லதில்லையே என்று தவித்தார் முனிவர். உடனே காசி விஸ்வநாதரையும், விசாலாட்சி அம்மனையும் மனமார வேண்டினார்.
விடங்கி முனிவரின் பிரார்த்தனை விஸ்வநாதர் காதில் விழுந்தது. முனிவரின் தவத்துக்கு இடையூறு ஏற்படா வண்ணமும், அரக்கர்களின் அழிச்சாட்டியத்தையும் அடக்கும் வண்ணமும் காசி விஸ்வநாதர் தன்னுடைய கால பைரவரை மூர்த்திகளில் ஒருவரான வடுக பைரவரை இந்த வனத்திற்கு அனுப்பி வைத்தார். நெகிழ்ந்து போனார் விடங்கி முனிவர். தன்னுடைய தவத்துக்கு மதிப்பு கொடத்து பைரவரையே அனுப்பியிருக்கிறாரே ஈசன் என்று மகிழ்ந்து, இனி கவலை இல்லை என்பதை உணர்ந்து, கண் மூடி தவத்தைத் தொடர்ந்தார்.
அப்புறம் என்ன? முனிவரின் தவத்துக்கு இடையூறு செய்ய வந்தான் சீசகன். சிவ பூஜையைத் தொடரவிடாமல் முனிவரை துரத்த முயன்றான். பார்த்தார் வடுக பைரவர். கோபத்தின் உச்சிக்கே போன அவர், அரக்கன் சீசகனின் முகத்தில் ஓங்கி ஒரே அறைதான்! ஒன்றரை லட்சம் டன் வேகம். கீச் கீச் என கத்தியபடி அந்த விநாடியே மாண்டான் சீசகன்.
காசி விஸ்வநாதரால் அனுப்பப்பட்ட பைரவர், மேலும் யாரும் வந்து தொந்தரவு தரக்கூடாது என்பதற்காக நிரந்தரமாக அங்கேயே தங்க விரும்பினார். ஓர் இலந்தை மரத்தின் அடியில் அப்படியே குடி கொண்டார். விடங்கி முனிவரின் தவம் நிறைவு பெற்றது. இறைவன் அருளால் சொர்க்கத்திற்குப் புறப்படுமுன், பைரவர் குடிகொண்ட இலந்தை மரத்தைச் சுற்றி சின்னதாய் ஆலயம் எழுப்பினார். விடங்கி முனிவர் பூஜித்த காசி விஸ்வநாத லிங்கம் என்பதால் விடங்கீஸ்வரர் என்ற பெயர் இறைவனுக்கு ஏற்பட்டது. காசியிலிருந்து கொங்கு நாட்டுக்கு வந்ததால் பைரவருக்கு கொங்கு வடுகநாதர் என்ற பெயர் எழுநதது. அதுமட்டுமல்ல, அட்டகாசம் செய்த அசுரன் சீசகனை பைரவர் கொன்ற இடம் என்பதால் இந்தப் பகுதியும் 'கொன்ற இடம்' என்றே வழங்கப்பட்டது. அதுவே நாளடைவில் 'குண்டடம்' என்று மருவிவிட்டது.
பஞ்ச பாண்டவர்கள், இந்தப் பகுதியில் அஞ்ஞாத வாசம் மேற்கொண்டபோது, திரெளபதி மேல் அரக்கன் ஒருவன், ஆசை கொண்டதாகவும், அதனால் கோபப்பட்ட பீமன், அரக்கனை அடித்துக் கொன்ற இடமும் இதுதான் என்பதால் 'குண்டடம்' என்ற பெயர் எழுந்ததாகவும் இன்னொரு புராணம் சொல்கிறது. எது உண்மையாக இருந்தாலும் போர் நடந்த பூமி இது என்பதற்கு ஆதாரமாக சுற்றுப்பக்கத்தில் உள்ள தோட்டங்களின் பெயர்களே போதும். அவற்றின் பெயர் என்ன தெரியுமா? ரத்தக்காடு! சாம்பல் காடு!
களரிக்காடு!
காலங்கள் கடந்தன. வனப்பகுதி என்பதால் மக்கள் யாருக்கும் தெரியாமல், விடங்கி முனிவிர் எழுப்பிய சிற்றாலயமும் மண்ணுக்குள் புதைந்து விட்டது.
பூமிக்குள் மறைந்த காலபைரவர் தனக்கு மாபெரும் ஆலயம் எழுப்ப, மிளகை பயறாக்கிய அற்புத சம்பவத்தை நான் சொல்வதற்கு முன்னால் குண்டடம் ஆலயத்தை வலம் வருவோமா?
எட்டு பிராகாரங்களுடன், எட்டுத் தெப்பக்குளங்களுடன் பிரமாண்டமாக இந்தக் குண்டடம் ஆலயம் அமைந்திருந்ததாக புராணங்கள் சொல்கின்றன. அவையெல்லாம் எங்கே போயின என்பது காலச்சக்கரத்தைச் சுழற்றும் கால பைரவருக்கே வெளிச்சம்! ஆலயத்தின் எதிரில் அழகுற அமைந்திருக்கிறது திருக்குளம். நடுவில் அழகிய மண்டபம். அங்கே ஒரு நந்தி. கொஞ்சம் நடந்தால் பழமையான விளக்குத்தூண் காட்சியளிக்கிறது. அதில் விநாயகர், திரிசூலம், லிங்கத்தின் மேல் பால் சுரக்கும் பசு போன்ற வடிவங்கள் பளி்ச்சிடுகிறது.
ராஜகோபுரத்திற்குத் தலைவணங்கி உள்ளே நுழைந்து பிராகாரத்தை வலம் வரலாம். சூரியன், சந்திரன், நர்த்தன விநாயகர், தட்சிணாமூர்த்தி, பட்டக்காரர், வரதராஜ பெருமாள், சனீஸ்வரர், நவகிரக நாயகர்கள் ஆகியோரைக் காணலாம். நந்தவனத்தில் மரங்கள் அசைந்தாடுகின்றன. இங்கே முருகப் பெருமானின் வாகனமான மயிலின் தலை, வழக்கத்துக்கு மாறாக, இடதுபக்கம் நோக்கி அமைந்திருக்கிறது. சூரசம்ஹாரத்திற்கு முன்பு, இந்திரன் மயிலாக இருந்து போருக்குச் சென்ற வடிவம்.
தனித்தனி கோயில்களில் விசாலாட்சி அம்மனும், விடங்கீஸ்வரரும் அருள்பாலிக்கிறார்கள். காசி விசாலாட்சியும், காசி விஸ்வநாதருமே இவர்கள். முனிவருக்காக பைரவரை அனுப்பியவர்கள் இவர்கள்தான் என்று நினைக்கும்போது நெஞ்சம் நெகிழ்கிறது. அடுத்ததாய், இந்த ஆலயத்தின் கதாநாயகனான கால பைரவ வடுகநாதரின் சன்னதி. காசியிலிருந்து வந்தவர் இங்கேயே தங்கி, இங்கே லீலைகளைப் புரிந்து கொண்டிருக்கிறார். தேய்பிறை அஷ்டமி தினங்களில் கால பைரவருக்கு அபிஷேக ஆராதனைகள் மிகச் சிறப்பாக நடைபெறுகினறன. இப்போது மிளகைப் பயறாக்கிய கால பைரவரின் கதை!
மிளகு :
மன்னர்கள் காலத்தில் பாலக்காட்டு கணவாய், கொங்கு தேசம் வழியாக வணிகப் பொருட்கள் வண்டியில் வரும். பின்னர் சேர, சோழ, பண்டிய நாட்டுக்கு அவை பயணிக்கும், கொங்கு நாடு வழியாகச் செல்லும் வணிகர்கள், இரவு நேரங்களில் குண்டடம் பகுதியில் இருந்த மேடான பகுதியில் பாதுகாப்பாகத் தங்கிக் கொண்டு, காலையில் புறப்பட்டுச் செல்வார்கள். அப்போது அங்கே அரசமரத்தடியில் பாம்படீஸ்வரர் என்ற பெயரில் சிவலிங்கம் மட்டும் உண்டு.
அந்த இடத்திற்கு சற்றுத் தள்ளித்தான் காலபைரவரும் விடங்கிஸ்வரரும் பூமிக்குள் புதைந்திருக்கிறார் என்பது யாருக்கும் தெரியாது. அப்படி ஒரு முறை சேர நாட்டு வணிகர் ஒருவர் ஏராளமான மிளகு மூட்டைகளை ஏற்றிக் கொண்டு பாண்டிய நாட்டுக்குச் சென்று கொண்டிருந்தார். வழியில் பாதுகாப்பாக ஒரு நாள் குண்டடம் மேட்டில் தங்கினார்.
அப்போது ஒரு கூன் விழுந்த முதியவர் இருமியபடியே வியாபாரியை நெருங்கினார். 'ஐயா, எனக்கு உடல் நலம் சரியில்லை. மிளகுக் கஷாயம் குடித்தால் இருமல் சீர் பெறும். தயவு செய்து எனக்குக் கொஞ்சம் மிளகு தாருங்கள்' என்றார்.
அந்த வியாபாரி, இதற்காக மூட்டையை அவிழ்க்க வேண்டுமே என்று சோம்பல் பட்டு, 'பெரியவரே இது மிளகு அல்ல. பாசிப் பயறு' என்று பொய் சொன்னார்.
'அப்படியே ஆகட்டும்' என்று சொல்லிவிட்டு நகர்ந்தார் பெரியவர்.
கொங்கு வடுகநாதா!
மறுநாள் வியாபாரி, மிளகு வண்டியுடன் மதுரை சென்றார். பாண்டிய மன்னனிடம் நல்ல விலை பேசி விற்றார். பணமெல்லாம் கொடுத்த பிறகு, ஏதோ ஒரு சந்தேகம் வந்து, பாண்டிய மன்னன், மிளகு மூட்டைகளை பரிசோதிக்கச் சொன்னார். வீரர்கள் அப்படியே செய்ய, எதிலுமே மிளகு இல்லை. எல்லாம் பச்சைப் பயிறுகள்!
சினம் கொப்பளித்தது மன்னனுக்கு உடனே வியாபாரியைக் கைது செய்ய உத்தரவிட்டார்.
வியாபாரி கதறினான், பதறினான். குண்டடத்தில் நடந்த சம்பவத்தை மன்னனிடம் கூறினார்.
அதையெல்லாம் நம்பும் நிலையிலா மன்னன் இருந்தான்? 'பொய் மேல் பொய் சொல்லும் இந்த வியாபாரியை நாளைக் காலை சிரச்சேதம் செய்யுங்கள்' என்றான் கோபத்துடன்.
கதறினான் வியாபாரி. 'கொங்கு வடுகநாதா! என்னை மன்னித்துவிடு' என்று புலம்பினான். அழுதான். அவனது அழுகை குரல் பைரவருக்குக் கேட்டது!
எல்லா நலனும் தருவேன்!
நள்ளிரவில் மன்னன் கனவில் வந்தார் வடுகநாதர். 'நான்தான் மிளகைப் பயிறாக்கினேன். அந்த வியாபாரி உண்மை பேசாததால் நான் அப்படி அவனை தண்டித்தேன். அவனை விட்டுவிடு!' என்றார். மன்னன் அதையும் சந்தேகப்பட்டான். சேர நாட்டு வணிகராயிற்றே. ஏதும் மந்திரம் செய்கிறாரோ என்று ஐயப்பட்டான்.
'என்னுடைய பெண், பிறந்ததில் இருந்தே வாய் பேச முடியாமலிருக்கிறாள். என் மகனும் ஊனமுற்றவன், நடக்க இயலாமல் இருக்கிறான். அவர்கள் இருவரையும் குணப்படுத்தினால் நான் எல்லாவற்றையும் நம்புகிறேன்' என்றான் மன்னன். வடுகநாதர் புன்னகைத்தார். அடுத்த வினாடியே மஞ்சத்தில் படுத்திருந்த மன்னன் மகள், தந்தையே! என்று சந்தோஷக் கூக்குரலிட்டபடியே ஓடி வந்தாள். நடக்க முடியாமல் இருந்த மன்னன் மகனும், தந்தையை நோக்கி நடந்து வந்தான்!
பரவசமடைந்தான் பாண்டிய மன்னன், 'என்னை மன்னித்து விடுங்கள் பைரவரே, நான் உங்களுக்கு என்ன கைம்மாறு செய்யப்போகிறேன்' என்று துதித்தான். வடுக பைரவர் புன்னகைத்தார். 'நானும், விடங்கீஸ்வரரும் இப்போது குண்டடத்தில் பூமிக்குள் மறைந்திருக்கிறோம். எங்களை வெளியில் கொண்டு வந்து ஆலயம் எழுப்புவாயாக. வியாபாரி கொண்டு வந்த அத்தனை பயறுகளும் இப்போது மிளகுகளாக மாறி இருக்கும். அந்த மிளகுகளிலிருந்து கொஞ்சம் எடுத்து வந்து, குண்டடத்தில் இருக்கும் எனக்கு பாலாபிஷேகம் செய்து, மிளகு சாத்தி வழிபட்டாலே போதும். அப்படிச் செய்பவர்களுக்கு நான் எல்லா நலன்களையும் நல்குவேன்' என்று சொல்லி மறைந்தார் பைரவர்.
அதுபோலவே, கிடங்குக்குச் சென்று மன்னன் பார்த்தபோது, பயறு பழையபடி, மிளகாக மாறியிருந்தது. அதை எடுத்துக் கொண்டு, குண்டடம் சென்றான். பைரவர் சொல்லியிருந்த இடத்தில் குழி தோண்ட, விடங்கி முனிவர் நிர்மாணித்த சிறிய ஆலயம் கிடைத்தது. கொங்கு பைரவரும், விடங்கீஸ்வரரும் அங்கே இருந்தார்கள். மன்னன் உடனே அங்கே எட்டுப் பிராகாரங்களுடன் எட்டுத் தெப்பக் குளங்களுடன் மிகப்பெரிய கோயிலைக் கட்டி், கொங்கு பைரவருக்கு பாலாபிஷேகம் செய்து மிளகு நைவேத்தியம் செய்து வழிபட்டான். மன்னன் மட்டுமல்ல, யார் கால பைரவரை மனமார வேண்டி மிளகு சாற்றி வழிபட்டாலும் அவர் எல்லா நன்மைகளையும் அருளுகிறார் என்பது கண்கூடு. அது மட்டுமல்ல, காசிக்குச் செல்ல முடியாதவர்கள் இங்கே வந்து வழிபட்டாலே போதும் காசிக்கு சென்ற பலன் கிடைக்கும் என்கிறது புராணம்.
சரி, உங்கள் குறைகள் எல்லாம் தீர நீங்கள் எப்போது கொங்கு நட்டுக் காசியான குண்டடம் சென்று கொங்கு கால பைரவ வடுகநாதரை தரிசனம் செய்யப் போகிறீர்கள்? ஒரு விஷயம் மறக்காமல் மிளகு எடுத்துச் செல்லுங்கள். யாராவது உங்களிடம் கொஞ்சம் மிளகு கேட்டால் கொடுத்துவிடுங்கள். ஜாக்கிரதை, ஒரு வேளை மிளகு கேட்பவர் காலபைரவராகவும் இருக்கக்கூடும்.
எங்கே இருக்கிறது: கோவை - மதுரை நெடுஞ்சாலையில் பல்லடத்துக்கும் தாராபுரத்துக்கும் நடுவில் அமைந்துள்ளது. கோவையிலிருந்து 82 கி.மீ. தொலைவு.
ஆலய நேரம்: காலை 7 மணி முதல் 1 மணி வரை; மாலை 5 மணி முதல் 8 மணி வரை.
என்ன சிறப்பு: காசி செல்ல முடியாதவர்கள் இங்கே வரலாம். பைரவர் மிகுந்த சக்தி வாய்ந்தவர்,,,,,,

🌿அர்த்தமுள்ள திருமண மந்திரங்கள்!🌿

🌿அர்த்தமுள்ள திருமண
மந்திரங்கள்!

 இந்துத் திருமணங்கள் என்பவை விரிவான சடங்குகளைக் கொண்டு செய்யப்படுபவை. அவை யாவும் அழகானவை; அர்த்தமுள்ளவை; மங்கலமானவை.
திருமணங்களில் சொல்லப்படும் மந்திரங்களின் மூலம் ரிக் வேதமே. இந்துத் திருமணச் சடங்குகளில் இடம் பெறும் மந்திரங்கள் பெரும்பாலும் இறையைப் பணிவதாகவும், மேன்மையான செய்திகளைத் தாங்கியதாகவும், தனிமனித உறுதி மொழிகளாகவும் இருக்கின்றன.
ஆனால் அந்தணர்கள் இந்த வடமொழி மந்திரங்களை எக்ஸ்பிரஸ் வேகத்தில் உச்சரிப்பதனால் நமக்குத்தான் அதன் உட்பொருள் சரிவரப் புரிவதில்லை. நான் அறிந்த வரையில் சிலவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
முதலில் செய்யப்படுவது விக்னேஸ்வர பூஜை. ‘கண’ என்றால் குழு. ‘பதி’ என்றால் தலைவன். எனவே கணபதி என்கிற மனிதக் குழுக்களுக்குத் தலைவனை வணங்கி, ‘கணானாஹந்த்வா கணபதிம்’ என்கிற மந்திரத்தில் துவங்கி கணபதி பூஜை நடககிறது. கோள்களின் சுழற்சித் தாக்கம் பூமியைப் பாதிக்கிறது என்கிற பட்சத்தில் மனிதர்களின் வாழ்வில் அவற்றின் தாக்கம் இல்லாதிருக்குமா? எனவே அடுத்ததாக நவக்கிரக பூஜை. பிறகு விரதம். மாப்பிள்ளைக்கும் பெண்ணுக்கும் கையில் காப்பு கட்டப்பட்டு அவர்கள் அக்கினியைத் தொழுகிறார்கள்.
அடுத்தது சங்கல்பம். மேன்மையான நோக்கங்களை நிறைவேற்ற உறுதி பூணுவதற்குப் பெயர் சங்கல்பம். அறவழியில் வாழும் மக்கட் செல்வத்தைப் பெறுவதே திருமணத்தின் நோக்கம். இல்லறத்தாரின் கடமை தர்மத்தைக் கடைப்பிடித்தல் மற்றும் நன்மக்கள் பெறுதல். அதற்காக சங்கல்பம் செய்யப்படுகிறது. மணப்பெண்ணின் தந்தை மாப்பிள்ளையை விஷ்ணுவாகவே பாவித்து அவன் திருவடிகளைக் கழுவுகிறார். அதற்குப் பதிலாக மாப்பிள்ளை சொல்லும் மந்திரம்: ‘‘என் காலைத் தொட்ட இந்தப் புனித நீர் என் அக எதிரிகளைத் தூளாக்கட்டும். நான் இறையொளியில் தேஜஸ்பட்டுத் திகழ்வேனாக!’’ பெண்ணின் தந்தை சொல்கிறார்: ‘‘ஓ, விஷ்ணுவின் வடிவே! இதோ உங்கள் ஆசனம்! உங்களுக்கு என் இனிய வரவேற்பு!’’
பின் கன்யாதானம்! பெண்ணின் தந்தை மாப்பிள்ளையிடம் சொல்கிறார்: ‘‘இதோ, என் மகளை உமக்கு வழங்குகிறேன். இவள் எல்லாக் குணநலன்களும் பொருந்தியவள். இனிய இயல்புடையவள். அறிவில் தெளிவுடையவள். அணிகலன்கள் பூண்டு நிற்கும் இவள் உமது அறம், செல்வம், அன்பு அனைத்துக்கும் காவலாக இருப்பாள்...’’ மாப்பிள்ளை மணப்பெண்ணை ஏற்றுக் கொண்டு மும்முறை உறுதி சொல்கிறார்: ‘‘இன்பத்திலும் துன்பத்திலும் இப்பிறப்பிலும் இதற்கப்பாலும் என்றென்றும் நான் இவளது துணைவனாக இருப்பேன்!’’ என்று. மணப்பெண் தந்தையின் மடியில் அமர, தந்தை சொல்வது: ‘‘ஓ விஷ்ணுவே! அணிகலன்கள் பூண்ட என் மகளை உமக்கு வழங்குகிறேன். இதன் மூலம் எனது முந்தைய 10 தலைமுறை மற்றும் பிந்தைய 10 தலைமுறை வினைகளிலிருந்து விடுதலை பெறட்டும். எனக்கும் முக்தி கிடைக்கட்டும். அது இவள் மூலம் பிறந்த அறவழியில் நிற்கப் போகும் குழந்தைகளின் மூலம் நிகழட்டும்! அவர்கள் திருமாலையும், திருமகளையும் தொழுது அதன் மூலம் எனக்கு பிரம்மலோகப் பதவி கிடைக்கட்டும். பூமித்தாயும் படைப்பைத் தாங்கும் சக்தியும், எல்லாத் தேவர்களும், அனைத்து உயிரினங்களும் எனது மூதாதையர்கள் முக்தியடையும் பொருட்டு நான் செய்யும் இந்தக் கன்யாதானத்திற்கு சாட்‌சியாய் நிற்கட்டும்!’’ பின் மாப்பிள்ளையிடம், ‘‘பக்தி, செல்வம், ஆசை இவற்றை நிறைவேற்றிக் கொள்வதில் இவளுக்கு இடையூறு நேரக் கூடாது’’ என்க, மாப்பிள்ளை பதிலுக்கு ‘‘நான் அவளுக்கு இடையூறு செய்ய மாட்டேன்’’ என்று மும்முறை உறுதி கூறுகிறார்.
மணமகன் அவள் கழுத்தில் மங்கல நாண் அணிவித்து ஒரு முடிச்சுப் போட, அவனது சகோதரியர் இன்னும் இரு முடிச்சுகளைப் போடுகிறார்கள். மங்கல நாணை அணிவிக்கையில் மாப்பிள்ளை, ‘‘உன்னோடு நான் நீடு வாழ இறையைத் துதிக்கிறேன். இந்த மங்கல நாணை உன் அழகிய கழுத்தில் அணிவிக்கிறேன். எல்லாப் பேறுகளும் பெற்று நீ நூறாண்டு நிறைவான வாழ்க்கை வாழ இறை அருள்வதாக!’’ அதன்பின் அக்னியை நோக்கி அவன் அவளை அழைத்து வரும்போது சொல்லும் மந்திரம்: ‘‘பூஷா தேவதை உன்னை அக்னியின் முன்னிலைக்கு பத்திரமாக அழைத்துச் செல்லட்டும். அஸ்வினி தேவதைகள் என் வீட்டுக்கு உன்னை பாதுகாப்புடன் அழைத்து வரட்டும். பல மங்கலமான செயல்களில் என்னைத் தூண்டப்போகும் பெண்ணே! என் வீட்டின் ராணியாக அடியெடுத்து வை!’’
இதற்குப் பின் பாணிக்கிரஹ ணம். மணமகளின் கரத்தைத் தன் கைக்குள் அடக்கிக் கொண்டு மணமகன், ‘‘ஓ பண்புள்ள பெண்ணே! நீ கடவுளர்களுக்குச் சொந்தமான செல்வம். அவர்கள் கருணை மேலிட்டு நான் இல்லறம் பேணுவதற்காய் உன்னை எனக்கு அளித்துள்ளார்கள். முதுமையிலும் நாம் பிரியாமல் நீடு வாழ்வோமாக! உன் திருக்கரம் பற்றியே நான் இல்லறம் எனும் நிலைவாயிலில் நுழைகிறேன். முன்னோடிகளான பகன் மற்றும் அக்னியின் ஆசிகள் எனக்குண்டு’’ பிறகு சரஸ்வதி தேவியையும், வாயுவையும் தொழுகிறார்கள். பின் இருவரும் அக்னியை வலம் வருகிறார்கள்.
மணமகளின் பாதம் தொட்டு, மெட்டி அணிவித்து ஏழு அடிகள் அவள் எடுத்து வைக்க உதவுகிறான் மணமகன். இது ‘சப்தபதி’ எனப்படுகிறது. அப்போது சொல்லும் மந்திரம்: ‘‘ஓரடி எடுத்து வைத்ததுமே என் துணைவியாகி விட்டாய். இதன் மூலம் உன் நட்பைப் பெற்றேன்.
முதலடி நிறைவான உணவுக்காக.
இரண்டாம் அடி எல்லா விதமான செல்வங்களுக்காகவும்.
மூன்றாம் அடி தன் முயற்சிகளில் வெற்றிக்காக.
நான்காம் அடி இன்பங்களுக்கும் வசதிகளுக்குமாக.
ஐந்தாம் அடி கால்நடைச் செல்வத்துக்காக.
ஆறாம் அடி எல்லாப் பருவ நிலைகளிலும் நலமோடு வாழ்வதற்காக.
ஏழாம் அடி அக்கினியை எழுப்பி வேள்விகள் செய்யும் பேற்றுக்காக.
நாராயணன் உன்னருகே இருந்து உன்னை ஆசீர்வதிப்பாராக! என்னோடு ஏழடிகள் எடுத்து வைத்தாய். என் துணை நீ. இப்போதிலிருந்து நாம் நண்பர்கள். இந்த நட்பிலிருந்து என்றும் விலகாதிருப்போம். சேர்ந்தே வாழ்வோம். எந்த முடிவையும் சேர்ந்தே எடுப்போம். எதையும் இணைந்தே செய்வோம். ஒருவர் மீதொருவர் அன்பு கொண்டு, ஒருவருக்கொருவர் ஆசையோடு உணவையும் செல்வத்தையும் ஒரேவிதமாய் பகிர்ந்து கொண்டு ஒரே மனத்துடன் வாழ்வோம். ஒரே நோக்கத்தோடே விரதங்களை கடைப்பிடிப்போம். நீ கவி‌தை-நான் கானம், நீ தொடுவானம்- நான் அதைத் தொடும் பூமி, நான் உயிர்விதை வழங்குவோன்- நீ அதைியேந்தும் பாத்திரம், நான் மனம்- நீ சொல்! என்னுடன் நட்பாக இருப்பாயாக! இன்சொல் ததும்பும் பெண்ணே, வா... செல்வமும் நன்மக்களும் பெறுவோம்!’’
அதன்பின் ஹோமம் செய்யப்படும்போது சொல்லும் மந்திரங்கள்: ‘‘இதுவரை இவளைக் காத்தருளிய தேவர்களுக்கு வந்தனம். இந்தக் கன்னி தனது வீட்டிலிருந்து கணவன் வீடு புகுகிறாள்.
இளவயதுக்குரிய பிணிகளெதுவும் இவளிடம் இல்லாது போகட்டும்! தனது தந்தை வீட்டின் பந்தத்திலிருந்து விடுபட்டு தன் கணவன் வீட்டில் எல்லாரோடும் புதிய சொந்தம் ஏற்படுத்திக் கொள்ளட்டும்! இந்திரனே! இவளக்கு எல்லாப் பேறுகளும் இனிய குழந்தைகளையும் வழங்குவாயாக! இவளுக்கு 10 குழந்தைகளை வழங்கி என்னை 11வது குழந்தையாக்கி இவள் பேணி வளர்ப்பாளாக!
சூரியனே, எங்கள் குழந்தைகள் எதுவும் அகால மரணம் அடையாதபடி காப்பாயாக. அக்கினியே, ஆபத்துகளிலிருந்து அவளைக் காப்பாயாக. அவளுக்கு நீண்ட ஆயுளைத் தருவீராக. மழலை பேசும் குழந்தைகளோடு கொஞ்சி விளையாடும் பேற்றை அவளுக்கு அருள்வீராக!
ஓ, மணமகளே! உன் வீட்டில் என்றும் துயரமில்லாமல் போகவும், நீ கணவனையும் குழந்தைகளையும் ஒரு போதும் பிரியாமலிருக்கவும் அக்கினிக்கு இந்த ஆஹுதியை வழங்குகிறோம். எல்லாத் தேவர்களும் உன்னைக் காப்பார்களாக!’’’
மணமகளை அம்மியை மிதிக்கச் செய்து, மணமகன் சொல்வது: ‘‘இந்த அம்மியின் மீது ஏறி நிற்பாயாக! உன்னை எதிர்ப்பவர்களை வலிமையுடன் எதிர்கொள்வாயாக! அதே நேரத்தில் எதிரிகளுடன் கருணையுடனும் நடந்து கொள்வாயாக! ’’ சப்த ரிஷிகளிலே வசிஷ்டரின் மனைவியான அருந்ததி அண்டவெளியில் நட்சத்திரமாய் மின்னுகிறார். அந்த அன்னையின் அருள் பெற வேண்டி பார்க்கச் சொல்லும் ஐதீகத்தின் போது சொல்லப்படுவது- மணமகன், ‘‘ஏழு முனிவர்களும் வசிட்டரின் மனைவியான அருந்ததியே சாலச் சிறந்தவள் என்று அறிவித்தார்கள். அதை மற்ற ஆறு மனைவியரும் ஏற்றுக் கொண்டார்கள். அதேபோல என் மனைவியும் கற்பில் தலைசிறந்தவள் என்று கருதப்பட்டு எட்டாவது தாரகையாய் மின்னட்டும்’’ என்று பிரார்த்திக்கிறான்.
இதன்பின் மணமக்கள் துருவ நட்சத்திரத்தைப் பார்க்கிறார்கள். ‘‘ஓ துருவனே! உறுதியான இடத்தில் வசிக்கிறாய் நீ. உறுதியாக இருக்கிறாய். நீ உறுதியின் ஊற்று! வாழ்வில் உயிரின் உறுதிக்கு நீயே பொறுப்பு. நட்சத்திர மண்டலங்களின் அச்சாணி நீ. உறுதியைத் தாக்கும் எதிரிகளிடமிருந்து எம்மைக் காப்பாற்று!’’
பெண் புதிய வீட்டுக்குள் நுழையும் கிருஹப்பிரவேச சடங்கின்போது சொல்லப்படும் மந்திரங்கள்: ‘‘கந்தர்வர்களும் அப்சரஸ்களும் இவள் மீது எல்லா நலன்களையும் பொழிவார்களாக! உனக்குப் புதிதான இந்த வீட்டில் நீ உன் கணவனோடு மகிழ்ச்சியாகவும் மக்கட் செல்வத்தோடும் வாழ்க. இந்த வீட்டில் உன் இல்லறக் கடமைகளில் கவனமாயிரு. உன் தலைவனான கணவனைத் தழுவியிரு. நீங்கள் இருவரும் ஒன்றாகவே வளர்ந்து, இந்த வீட்டின் நியதிகளுக்கேற்ப இதனை நிர்வகிப்பீராக. உன் கணவன் வீட்டின் ராணியாயிரு. உன் நன்னடத்தை மூலம் உன் மாமியார் ம்ற்றும் நாத்தனார்களின் அன்பை வென்று கொள்.’’
பின் மணமகள் சொல்வது: ‘‘வளம் செறிந்த, மங்கலகரமான, வீரர்களால் பாதுகாக்கப்பட்ட, மகிழ்ச்சிமயமான உறவினர்கள், மைத்துனர்கள், அவர்கள் குழந்தைகள் நிறைந்த இந்தப் புதிய வீட்டில் நான் எந்தவிதமான நடுக்கமுமின்றி நுழைகிறேன்!’’ கிரஹப்பிரவேச ஹோமத்தில் மணமகன் சொல்லும் மந்திரம்: ‘‘என் மனைவி வந்து விட்டாள் பரிசுகளோடும், கால்நடைச் செல்வத்தோடும். நிரந்தரமான வேள்வி நீடிக்க, நல்ல குழந்தைகளை அக்கினி தேவன் இவளுக்கு அருள்வானாக!’’
பிறகு இறுதியாக சேஷ ஹோமம் செய்யப்படும். அப்போது மணமகன் சொல்லும் மந்திரம்: ‘‘அக்கினியே! வாயுவே! ஆதித்தனே! பிரஜாபதியே! உங்களைத் தொழுதால் குறைகளும் நிறைகளாய் மாறும். உங்களைச் சரண் புகுந்தேன். தயைகூர்ந்து என்னைக் காக்க வருவீராக. என் மனைவிக்குத் துயரமான வினையெதுவுமிருந்தால் அதைத் தீர்த்தருள்க! உள்ளிருந்து தொல்லை செய்யும் என் எதிரிகளை நீங்கள் தீர்த்துக் கட்டவே இந்த ஆஹுதியை அளிக்கிறேன்.’’ இந்த மந்திரத்தைத் தொடர்ந்து பெரியவர்களிடம் ஆசி பெறுகிறார்கள்.

திருமணச் சடங்குகள் இனிதே நிறைவடைய இல்லற வாழ்வினுள் அடியெடுத்து வைக்கிறார்கள். வாழி நலம்!


Sunday, 6 May 2018

கர்மாவை சுமக்கும் வாகனங்கள் !!!

கர்மாவை சுமக்கும் வாகனங்கள் !!!

 நம் சந்ததியருக்கு எதை சேர்த்து வைக்கவேண்டும் ..? புண்ணியங்களையா ..?பாவங்களையா ..........?
நம் சந்ததிகள் நமது கர்மாவை சுமப்பவர்கள்...! நாமோ நமது முன்னோர்களின்
கர்மாவை சுமக்கிறவர்கள்...!! ஆக நாம் எல்லாரும் ஒருவகையில் கர்மாவை சுமக்கும் வாகனங்களே ..!!

நமது முன்னோர்களின் பாவ புண்ணியங்களின் விளைவுதான் நாம்..!நமது பாவ புண்ணியங்களின் விளைவுகள்தான், நமது சந்ததிகள்.. !நம் தாத்தாக்கள், கொள்ளுத் தாத்தாக்களின் ஜீன், நம்மிடம் இருக்கிறது என்பதை விஞ்ஞானம் ஒப்புக்கொள்கிறது. அதனால்தான் மருத்துவர் கேட்கிறார் "இந்த நோய், உங்கள் அப்பா அம்மா - தாத்தா பாட்டிக்கு இருந்ததா?' என்று.நோய் மட்டுமல்ல; பண்பு, அறிவு, குணம், ஞானம், நடை, உடை, பாவனை, செயல்பாடு, புத்தி சாலித்தனம் வெற்றிதோல்வி இவை எல்லாமும் வழிவழியாக சந்ததிகள் வழியே பயணிக்கிறது.
தாத்தா வழியாக வந்த நோய்க்கு நாம் மருந்து எடுத்துக்கொண்டு பரிகாரம் தேடுவதுபோல், அவர்கள் வழியாக வந்த நமது தீய அம்சங்களுக்கும் எதிர்மறைகளுக்கும் ஆன்மிகம் மூலம் நாம் தீர்வைத் தேடுகிறோம்.
நீ செய்யும் தீவினையைக் கண்டவர் யாரு மில்லைஎன்ற கற்பனையில் நீ உலாவ ..உன்னிலிருப்பவனே பதிந்திட்டுக்காத்திருப்பான் காலத் திற்காக ..தக்க தருணத்தில் வெளியிடுவான் ..அதை நீ அனுபவிக்க ...என்பதே மெய்ஞ்ஞானம்.
நம் சந்ததிகள் நமது கர்மாவை சுமக்காமல் இருக்க நாம் நமது பிந்தைய தலைமுறை பயன் படும் வகையில் நாம் புண்ணியம் செய்தல் வேண்டும்.ஆக என்ன செய்தால் எத்தனை தலை முறைக்கு புண்ணியம் என்பதைப் பார்ப்போம் ...!நாம் செய்யும் நற்காரியங்கள் எத்தனை தலை முறைக்கு சென்றடையும் என்பது குறித்து கேட்டவரையில் சில இங்கே :
பட்டினியால் வருந்தும்ஏழைகளுக்கு உணவளித்தல் ........ 3 தலைமுறைக்கு.
புண்ணிய நதிகளில் நீராடுதல் ........3 தலைமுறைக்கு.
திருக்கோயிலில் தீபம் ஏற்றுதல் ....5 தலைமுறைக்கு.
அன்னதானம் செய்தல் ....................5 தலைமுறைக்கு
.
ஏழைப்பெண்ணுக்குதிருமணம் செய்வித்தல் ................ 5 தலைமுறைக்கு.
பித்ரு கைங்கர்யங்களுக்குஉதவுவது ..........................................6 தலைமுறைக்கு.
திருக்கோயில் புனர்நிர்மாணம் ........7 தலைமுறைக்கு.
அனாதையாக இறந்தவர்களுக்குஅந்திம கிரியை செய்தல் .................9 தலைமுறைக்கு.
பசுவின் உயிரைக் காப்பாற்றுவது ..14 தலைமுறைக்கு.
முன்னோர்களுக்கு கயாஷேத்திரத்தில்பிண்டம் அளித்து திதிபூஜை செய்தல் ..21 தலைமுறைக்கு.
நாமும் முடிந்தவரை புண்ணியம் செய்வோம்...!
நமது பிந்தைய தலைமுறையாவது நன்றாக இருக்கட்டும்


இந்துமதம் எதனால் சீரழிகிறது?

இந்துமதம் எதனால் சீரழிகிறது?

  ஓஷோவின் பார்வையில்....
கிறிஸ்தவ மத போதகர்கள் முதன்முதலாக
தென்னாட்டிற்கு வந்த போது,
அவர்களில் சிலர்,திலகம் அணிய
ஆரம்பித்தார்கள்.இதன் காரணமாக
போப் ஆண்டவரின் வத்திகானில்
விவகாரம் ஏற்பட்டு, மத
போதகர்களை விளக்கம் கேட்டு
எழுதியிருந்தார்கள்.
சிலர் திலகம் அனிந்து
கொண்டார்கள்.சிலர் மரக்கட்டைச்
செருப்பும் அணிந்து
கொண்டார்கள்.சிலர்
பூணூலும்,
காவியாடையும் தரிந்து
இந்து சன்னியாசிகள் போல்
வாழ்ந்தார்கள்.
அவர்கள் தவறு செய்வதாக
தலைமை பீடம்
கருதியது.
ஆனால்,மத
போதகர்கள் அதற்கு விளக்கம்
அளித்து
எழுதினார்கள்.
அவ்வாறு
வாழ்வதால் அவர்கள் இந்துக்கள்
ஆகிவிடவில்லை என்றும்,
திலகம் அணிவதால் அவர்கள் ஒரு
ரகசியத்தை அறிந்து
கொண்டதாகவும், மரக்கட்டைச்
செருப்பு அணிவதால்,
தியானம் வெகுவிரைவில்
கைகூடுவதாகவும் தியான
சக்தி வீணாவதில்லை என்றும்
பதில் எழுதினார்கள்.மேலும்,
'இந்தியர்கள் சில ரகசியங்களை
அறிந்திருக்கிறார்கள்.
அவற்றைக் கிறிஸ்துவ மத
போதகர்கள் அறியாதிருப்பது
மடத்தனம்' என்றும்
குறிப்பிட்டிருந்தார்கள்.
இந்துக்களுக்கு நிச்சயமாக பல
விஷயங்கள்
தெரிந்திருந்திருந்தன.
இல்லாவிட்டால்,20,000
ஆண்டுகளாக சமயத்தேடுதல்
இருந்திருக்க
முடியாது.
உண்மை தேடும்
முயற்சியில்தான், அறிவுலக
மேதைகள்,20,000 ஆண்டுகளாகத்
தம் வாழ்வை அர்ப்பணித்து
வந்துள்ளனர்.அவர்களுக்கு
இருந்தது..
ஒரே ஒரு ஆசைதான்: "இந்த வாழ்வுக்குப் பின்னால்
மறைந்திருக்கும் அருவமான
உண்மையை அறிய
வேண்டும்.வடிவமற்ற அதை
நேருக்கு நேர் சந்திக்க
வேண்டும்"
20,000 ஆண்டுகளாக இந்த ஒரு
தேடலுக்காக ஒரே மனதுடன்
தம் அறிவையெல்லாம்
பயன்படுத்தி வந்த அவர்களுக்கு
எதுவும் தெரியாது என்பது
வியப்பான கருத்து அல்லவா?
அவர்களுக்கு உண்மை
தெரியும் என்பதும், அதில்
அவர்கள் ஈடுபட்டார்கள் என்பதும்
இயல்பான உண்மை.
ஆனால்,20,000
ஆண்டுகாலத்தில் இடையூறு
விளைவிக்கும் சில
நிகழ்ச்சிகள் நிகழ்ந்துள்ளன.
இந்த இந்துதேசத்தின் மீது
நூற்றுக்கணக்கான அந்நியப்
படையெடுப்புகள்
நிகழ்ந்துள்ளன.ஆனால்,எந்தப்
படையெடுப்பாளராலும்
முக்கியமான மையத்தை தாக்க
முடியவில்லை.
சிலர்
செல்வத்தைத்
தேடினார்கள்.
சிலர் நிலங்களை
ஆக்கிரமித்தார்கள்.
சிலர்,
அரண்மனைகளையும் கோட்டை
கொத்தளங்களையும்
கைப்பற்றினார்கள்.
ஆனால்,இந்து தேசத்தின்
உள்ளார்ந்த அம்சத்தைத் தாக்க
முடியவில்லை;கி.பி.1000
முதல் 1700 வரை நிகழ்ந்த
இஸ்லாமியப்படையெடுப்பால்
எதுவும் செய்ய
முடியவில்லை;
முதன்
முதலாக மேலைநாட்டு (கிறிஸ்தவ)நாகரீகத்தால்தான்
அந்தத் தாக்குதல்
ஏற்பட்டது.அவ்வகைத் தாக்குதல்
நடத்துவதற்கான எளிய வழி,
ஒரு நாட்டின் வரலாற்றை அந்த
நாட்டின் இளைய
சமுதாயத்திடமிருந்து
பிரித்து வைப்பதுதான்.
(மெக்காலே கல்வித் திட்டம்
அதைத் தான் செய்தது.இன்றும்
அதைத் தான் செய்து
வருகிறது.இந்த
கொடூரத்தினை உணரும்
அரசியல்வாதிகள் ஆளும்
கட்சியாவதில்லை.)
அது இந்து
தேசத்தின்
செழிப்பான,பரந்துவிரிந்த,
மனித மாண்பினை
விவரிக்கும்,சுயச்சார்பினை
உரத்துக்கூறும் வரலாற்றை
அழிப்பதற்காக
செய்யப்படுவது.
நாட்டின்
மக்களுக்கும் அதன்
வரலாற்றிற்கும் இடையில் ஓர்
இடைவெளி
உண்டாக்கப்பட்டது.இதனால்,
இந்துக்களாகிய நாம்
நம்முடைய வேர்களை
இழந்தோம்; சக்தியிழந்தோம்.
ஒரு இருபது ஆண்டுக்
காலத்திற்கு பெரியவர்கள் தம்
குழந்தைகளுக்கு எதுவுமே
கற்றுத்தருவதில்லை என்று
முடிவெடுத்தால் என்ன ஆகும்
என கற்பனை செய்து
பாருங்கள்.அதனால் ஏற்படும்
விளைவு, இருபதாண்டுகால
இழப்பு அல்ல;இருபதாயிரம்
ஆண்டு கால ஞானத்தின் இழப்பு
ஆகும்.அந்த இழப்பை
சரிசெய்வதற்கு
இருபதாண்டுகாலம்
போதாது.20,000 ஆண்டுக்காலம்
தேவைப்படும்.
காரணம்,
அறிவுச்சேகரிப்பின் தொடர்பு
அறுபட்டுப்போவதுதான்.
இரண்டு நூற்றாண்டுகால
கிறிஸ்தவ இங்கிலாந்து
ஆட்சியென்ற பெயரில்
சுரண்டிய,சுரண்டலும்,
அவர்களால் ஏற்படுத்தப்பட்ட இந்த
அறிவுச்சேகரிப்பு
இடைவெளி இந்த 20,000 ஆண்டு
இடைவெளிக்குச்
சமமாகும்.
முந்தைய
ஞானத்திற்கும்,நமக்குமான
தொடர்பு கிறிஸ்தவத்தால்
அறுக்கப்பட்டது.கடந்த
காலத்தோடு எந்த
தொடர்புமற்ற,முற்றிலும்
புதிதான ஒரு நாகரிகம்
நிலைநிறுத்தப்பட்டது.
நமது இந்து நாகரிகம்
மிகப்புராதனமானது என்று
இந்துக்கள்
நினைக்கிறார்கள்.
ஆனால்,
அவர்கள் நினைப்பது தவறு;இது
வெறும் 20,000 ஆண்டுகால
பழமையான சமுதாயம்
மட்டுமே என
வெள்ளைத்தோலைக் கொண்ட
இங்கிலாந்து நரிகள்
ஊளையிட்டன.
அந்த
ஊளைக்கூச்சல் நமக்கு நமது
பாரதப்பண்பாட்டின் மீதே
சந்தேகம் கொள்ள வைத்து,
மேல்நாட்டு நாகரிகத்தின் மீது
மரியாதையை கொண்டு
வந்துவிட்டது.
இதனால்,200
ஆண்டுகளுக்கு முன்பு நாம்
பெற்றிருந்த
ஞானச்செல்வங்களையெல்லாம்
இழந்து, ஒரே வீச்சில்
இந்துதேசம் இழந்துவிட்டது.
200 ஆண்டுக் காலத்திற்கு
முன்னால்,தடைபட்டு
நின்றுபோன நமது இந்துதர்ம
அறிவுடன்
தொடர்புகொள்ளத்தான்,இன்று
கல்வியறிவுஇல்லாத மக்கள்
அந்தக் காரியங்களைச் செய்து
கொண்டிருக்கிறார்கள்.
அவற்றை நாம் செய்வதன்
மூலம்,நாம் மீண்டும்
அவற்றிற்கு புத்துயிர் தந்து,
ஆழமாகப் புரிந்துகொண்டு, 20,000 ஆண்டுக்கால அறிவோடு
தொடர்புகொள்ள முடியும்.
அப்போதுதான் இதுவரை நாம்
செய்துவந்த மேல்நாட்டு
நாகரீகப் பயன்பாடு(பேண்ட்
போடுவது,ஆங்கிலத்தில்
பேசுவதை பெருமையாக
நினைப்பது,
வீட்டுக்குள்ளேயே செருப்பு
போட்டு
நடப்பது,கோயில்கள்,ஜோதிடம்,
பண்பாடு இவற்றை கேலி
செய்வது) எவ்வளவு பெரிய்ய
தற்கொலை என்பது விளங்கும்.
நன்றி: பக்கங்கள்128,129,130,131;
மறைந்திருக்கும் உண்மைகள்,
எழுதியவர் ஓஷோ...
இந்து வாழ்க்கை முறையின் மீது நம்பிக்கை அக்கறை உள்ளவர்கள் உண்மையை அறியட்டும் அனைவரும்..
நன்றி

Saturday, 5 May 2018

மொட்டை போடுவதன் காரணம்-

மொட்டை போடுவதன் காரணம்-

உலகில் எங்கிருந்தாலும் ஹிந்துக்களிடையே தலைமுடியை முழுக்க மழிக்கும் பழக்கம் காணப்படுகிறது. இதனை மொட்டை போடுதல் (மொட்டையடித்தல்) என்பார்கள்.
இந்த பழக்கத்தை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வயது வித்தியாசமின்றி, 1 வயது முதல் 100 வயது வரையில் மொட்டையடித்துக் கொள்வதை காணமுடியும்.
பெரும்பாலும் மொட்டை போடுதல் என்பது கோவில்களுக்கு வேண்டுதல் வைத்து நிறைவேற்றப்படுகிறது.
குழந்தைகளுக்கு முடி எடுப்பதென்றால் ஒற்றைப்படை ஆண்டுகளில் (அதாவது ஒரு வயது , மூன்று வயது , ஐந்து வயது) எடுக்க வேண்டும். இரட்டைபடை ஆண்டுகளில் முடி எடுப்பதால் குழந்தைக்கு தொடர்ந்து உடல்நலக்குறை ஏற்படும் என்பார்கள்.
ஆனால் பெரியவர்களுக்கு அப்படியில்லை, எப்போது வேண்டுமானாலும் முடி எடுத்துக்கொள்வார்கள். அது தவறாகும்.
ஒரு முறை மொட்டையடித்துக் கொண்டால், அடுத்து முடி இறக்க மூன்று மாதங்களாக வேண்டும். மூன்று மாதமாகாமல், மீண்டும் முடி எடுக்கக்கூடாது.
இதனை ஹிந்துக்களிலேயே கிண்டலடிப்பவர்கள் உண்டு- 'உயிர் கொடுத்த சாமிக்கு மயிர் கொடுக்கிறாயா?' என்றும் ,
'ஏன் முடிய கொடுக்கிற விரலக் கொடுக்கறேன்னு வேண்டிக்கலாமே!' என்றும் கேலி பேசுவார்கள்.
'முடின்னா வளர்ந்துடும்ன்னு வேண்டிகிட்டாயா?' என்று கிண்டலடிப்பார்கள்.
யார் என்ன சொன்னாலும் இன்றும் மொட்டை போட்டுக் கொள்பவர்களின் எண்ணிக்கை பல மடங்கு பெருகியே இருக்கிறது, இன்னும் பெருகும்.
மத பேதமின்றி, எல்லோருடைய கிண்டலுக்கும் கேலிக்கும் ஆளாகியிருக்கும்.
இந்த மொட்டை போடும் அல்லது போட்டுக் கொள்ளும் பழக்கம் எப்போது யாரால் துவங்கப்பட்டது, என்பதனை பார்ப்போம்.
மகாபாரதப் போரின் உச்சகட்ட போரின் முடிவு நாளான 18ம் நாள் இரவில், வரும் விதியின் கோரத்தை அறியாத பாண்டவர்கள் ஐவரின் குழந்தைகளும் உறக்கத்தில் ஆழ்ந்திருந்த வேளையில், அவர்களின் உறக்கத்தை மீளா உறக்கமாக மாற்ற எண்ணி, அறையின் உள்ளே புகுந்த குரு துரோணாச்சாரியாரின் மகனான அஸ்வத்தாமன், உறக்கத்திலிருந்த குழந்தைகளை பாண்டவர்கள் என்று எண்ணி வெட்டி சாய்த்தான் .
அலறக்கூட நேரமின்றி மடிந்தன அந்த குழந்தைகள். விடிந்ததும் அங்கு வந்த பாண்டவர்கள், நடந்த கொடுமையை எண்ணி மனம் கலங்கினார்கள். இந்த மாபாதக செயலை செய்தவனை சிரம் கொய்வேன், என்று சபதமிட்டான் அர்ஜுனன். அன்று மாலைக்குள் யாரென்று கண்டறியப்பட்டு, விலங்கிட்டு கொண்டு வந்து பாண்டவர்கள் முன் நிறுத்தப்பட்டான் அஸ்வத்தாமன்.
குருவின் மகனை கொல்லுதல் பாபம் என திரௌபதியும் , அண்ணன்களும் கூற, 'என் சபதம் முடிக்காமல் விடமாட்டேன்' என கர்ஜித்தான் அர்ஜுனன்.
அப்போது ஸ்ரீ கிருஷ்ணர் ஒரு உபாயம் சொல்கின்றார். 'அர்ஜுனா , உன் கோபமும் செயலும் நியாயமானதே! ஆனாலும் தர்மத்தின் பாதையில் செல்லும் நீ புரிந்து கொள், அவனை சிரம் கொய்யாதே, பதிலாக சிகையை மழித்துவிடு, அது அவன் மரணித்ததற்கு ஒப்பாகும்' என்றார்.
அதற்காக, அஸ்வத்தாமனின் முடி மழிக்கப்பட்டு துரத்தப்பட்டான். ஆக, சிகையை (முடியை) இழப்பது என்பது மரணத்திற்கு சமமானதாகும்.
ஹிந்துக்களின் ஒவ்வொரு அசைவிற்கும் காரணம் உண்டு ,
நாகரீகம் என்று எண்ணிக்கொண்டு, வெகு தூரம் வெளியே வந்து விட்ட மக்களாகிய நமக்கு, இது கிண்டலாகவும் கேலியாகவும் தெரிவது இயற்கை தானே.
ஒருவரின் ஜாதகத்தில் உயிருக்கு ஆபத்து இருந்தால், மரண திசையாக இருக்குமானாலும் அவர்கள் ஏதேனும் ஒரு கோவிலுக்கு சென்று முடி எடுத்துக் கொள்வார்களேயானால், அந்த உயிராபத்திலிருந்து நீங்கிப் பிழைப்பது சர்வ நிச்சயமாகும்.
ஹிந்து மதத்தின் ஒவ்வொரு சொல், செயல் அனைத்திற்கும் உள் அர்த்தம் உண்டு. எல்லாவற்றையும் அறிந்து செயலாற்றுவதற்கு நமக்கு வயது போதாது. ஆகவே, சொல்வதை அப்படியே கேட்டு அதன் வழி செல்வதுதான் சாலச் சிறந்தது.
வேண்டுமானால், விஷயமறிந்தவர்களிடம் விபரம் கேட்டுத் தெளியலாம்.
ஒன்று மட்டும் நிச்சயம்! ஹிந்துக்களின் எந்த சொல்லும் செயலும் சத்யமற்றதோ, அதர்மமானதோ, இறைவனுக்கு எதிரானதோ இல்லை.
யாரோ ஒருவர் ஏதோ தவறிழைத்தார் என்றால் ஹிந்துக்களோ, மதமோ,
காரணமில்லை என்பதை உணருங்கள்.
தனிமனிதனின் தவறுக்காக, ஒரு மதத்தையே இழிவாக்குவது,
இழிவாகப்பேசுவது என்பது எந்த மதமானாலும் தவறே!
வளமோடு வாழுங்கள், வாழும் நாளெல்லாம்!
ஓம் நமசிவாய!


நம் எல்லா பிரச்சனைகளுக்கும் காரணம்

நம் எல்லா பிரச்சனைகளுக்கும் காரணம்

நம் மனம் தான். ஒரு பொருளை வேண்டும் அல்லது வேண்டாம் என்று சொல்லுவது நம் மனம் தான். புலன்கள் உதவி செய்கின்றன. அவ்வளவே. அதே சமயத்தில் நாம் எதையும் பார்க்காமல், பேசாமல், நுகராமல், தொடாமல், கேட்காமல் இருந்துவிட முடியுமா?
ஆக முதலில் மனதை திசை திருப்ப வேண்டும். அங்கங்கே அலையும் மனதை நல்ல வழியில் செலுத்தி விட்டால் புலன்களும் அதன் கூடவே போகும்.
ஆனால் மனம் தறி கெட்டு ஓடிக் கொண்டிருந்தால் புலன்களை கட்டுப்படுத்த முடியாது. மனதை கட்டுப்படுத்த முடியாது. குரங்கு போல அங்கும் இங்கும் தாவிக் கொண்டே இருக்கும். கட்டுப்படுத்துவதற்கு பதில் அதை இறைவன் பால் திருப்பி விட்டு விட வேண்டும். அவ்வளவுதான்.
மனித மனத்தை நாய்க்கு
ஒப்பிடுகிறார் மாணிக்கவாசகர்...
ஏன்? நாய் நன்றியுள்ள பிராணி தானே. அதை ஏன் குறிப்பிட்டு கூறுகிறார்?
நாய்க்கு இரண்டு கெட்ட குணங்கள் உண்டு.
முதலாவது என்ன தான் அதை கழுவி குளிப்பாட்டி நடு வீட்டில் வைத்தாலும், உடையவன் இல்லாத போது அது வெளியில் ஓடி அசிங்கத்தை உண்ணும் இயல்பு உடையது.
இரண்டாவது, வீட்டைக் காக்கும் நாய்தான், வீட்டிற்கு வரும் ஒரு திருடன் அந்த நாய்க்கு ரெண்டு ரொட்டித் துண்டோ, மாமிச துண்டோ போட்டால் அவன் பின்னால் வாலை குழைத்துக் கொண்டு போய் விடும்.
மனித மனமும் அப்படித்தான்.
என்ன தான் உயர்ந்த சிந்தனைகள்..
இறை சிந்தனைகள் இருந்தாலும் அந்தப் பக்கம் ஒரு அழகான பெண் போனால் மனம் சலனம் அடையும். பூஜை செய்யும் போது பக்கத்து வீட்டில் நல்ல மணமுள்ள பதார்த்தம் ஏதாவது செய்தால் மனம் அங்கே போய் உட்கார்ந்து விடும்.
புலன்களை கட்டிக் காக்க வேண்டிய மனம், சில சமயம், புலன் இன்பத்தின் பின்னால் போய் விடும். கவனமாக இருக்க வேண்டும்.
அதெல்லாம் சரி தான்..., அதற்காக எந்நேரமும் இறைவனை நினைத்துக் கொண்டிருந்தால் மகிழ்ச்சியாக இருக்குமா? அதில் என்ன அப்படி ஒரு சந்தோஷம் வந்து விடப் போகிறது? என கேட்கிறீர்களா..?
புலன்களை நல்ல வழியில் விட்டு தான் பாருங்களேன். அது எவ்வளவு போகுமோ போகட்டும். இன்னும் சொல்லப் போனால் எவ்வளவு அதிகம் அந்த வழியில் போகிறதோ அவ்வளவும் நமக்கு தான் நல்ல வழி..
நல்ல வழி என்றால் அது என்ன வழி?
புலன்களை இறை சிந்தனைக்கு
ஆட்படுத்தி விடுங்கள்... ஒவ்வொரு புலனையும் ஈசனை நோக்கி திருப்பி விட்டு விடுங்கள். அது பாட்டுக்கு போகட்டும். எங்கு போகும்? இறைவனிடம் தானே? போகட்டும் என்று விட்டு விடுங்கள்.. பிறகு நல்லவை எது என்பதை நாமே உணர்ந்து விடுவோம்....
ஓம் நமசிவாய.. 

Tuesday, 1 May 2018

💞பிரச்சனைகளை தீர்க்கும் அற்புத ஆலயங்கள்

💞பிரச்சனைகளை தீர்க்கும் அற்புத ஆலயங்கள்

    அடுத்த முறை, நீங்கள் எப்போது கும்ப கோணம் சென்றாலும், இந்த மிக முக்கியமான , கும்பகோணம் நகரைச் சுற்றியுள்ள ஸ்தலங்களை தரிசித்து வாருங்கள். ரத்தினச் சுருக்கமாக , இந்த ஆலயங்களுக்கு சென்று வருவதால் ஏற்படும் முக்கிய பலன்களை கொடுத்துள்ளேன்.
சில ஆலயங்களைப் பற்றி அந்த வரிகளை படிக்கும்போதே , உங்கள் உள்ளுணர்வு அந்தகோவிலுக்கு போக வேண்டும் என்று சொல்லும். அந்த ஆலயத்திற்கு அவசியம் சென்று வாருங்கள். உங்கள் பூர்வ ஜென்ம ,கர்ம வினைகள் நிச்சயம் அகலும்.
எல்லா ஆலயங்களுக்கும் செல்ல முடியவில்லை என்றாலும், கலக்கம் வேண்டாம். அதே நேரத்தில் , உங்களால் மிகத் திருப்தியாக பூஜை , அபிசேகம், அலங்காரம் செய்ய முடியவில்லையே என்று கூட மனக்கலக்கம் வேண்டாம். ஐயா , ஒரு அர்ச்சனை கூட செய்ய வேண்டாம்.. ஒரே ஒரு விஷயம் மட்டும் தவறாமல் செய்யுங்கள்...
மூலவருக்கு முன்பாக, அவரைப் பார்த்தபடியோ , அல்லது உங்களால் முடிந்தவரை அருகிலோ - அல்லது மற்றவருக்கும் தொந்தரவு இல்லா வண்ணம் - ஒரு மணி நேரம் வரை வெறுமனே அமர்ந்து ,மனத்தால் இறைவனிடம் உங்கள் குறைகளை தீர்க்க வேண்டி மன்றாடுங்கள். முடிந்தால் மனதுக்குள் - ஓம் சிவ சிவ ஓம் மந்திரம்ஜெபிக்கலாம், அல்லது காயத்ரி மந்திரம் ஜெபிக்கலாம். ஸ்ரீ ருத்ரம் ஜெபிக்கலாம்.
சில சமயங்களில் ஒரு மணி நேரம் ஒதுக்க முடியாத சூழ்நிலை இருந்தால் , குறைந்தபட்சம் 12 நிமிடங்களாவது , அமர்ந்து வாருங்கள். இறைவனின் சிருஷ்டியில் எல்லா நாளும், நேரமும் புனிதமானதே. ஒரு சில மணித்துளிகள் மட்டும் , பலப்பலகாரணங்களால் - மிக சக்திவாய்ந்த தருணங்கள் ஆகி விடுகின்றன.
இதில் இன்னொரு சூட்சுமம் உள்ளது. உங்களுக்கு நடக்கும் தசை / புக்திஎன்னவென்று பாருங்கள். அதற்கேற்ப உகந்த நேரத்தில் - நீங்கள் அந்த தெய்வத்தின் முன் நிற்க, உங்களுக்கு ஏற்படும் தடைகள் அனைத்தும் , படிக்கற்கள் ஆகிவிடும்.
நல்ல விஷயங்களை , நீங்கள் அறிந்து உணந்த விஷயங்களை - உங்கள்நண்பர்களுக்கும், குடும்பத்திலும், உங்கள் குழந்தைகளுக்கும் தக்க நேரத்தில் எடுத்து சொல்லுங்கள். லட்சம் லட்சமாக சம்பாதிக்கும் வெளிநாட்டு அன்பர்களும் , இந்தியாவை ,குறிப்பாக தமிழகத்தை ரொம்பவே மிஸ் பண்ணுவதாக நினைப்பது , நம் ஊர் ஆலயங்களுக்காகத்தான். இங்கேயே இருக்கும் வாய்ப்பு கிடைத்த அனைவரும், அதை பயன்படுத்திக் கொள்வது நல்லதுதானே..!

🌼மன நோய் அகற்றும் " திருவிடை மருதூர் :

சிவ பெருமான் தன்னை தானே பூஜித்து,வழிபட்ட லிங்கமானதால் இவர் "மகாலிங்கமானார்". இவரை தரிசிப்போர் மன நோய் நீங்கப் பெறுவர். நீண்ட நாட்கள் நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள், இத் தலநாயகனை வழிபட்டு வந்தால் குணம் அடைவர். மன நோய் கொண்டுள்ளோர், இத் திருக் கோயிலின் வெளிச் சுற்றை வலம் வந்தால் குணம் பெறுவர். கும்பகோணத்தில்இருந்து மாயவரம் செல்லும் சாலையில் சுமார்10 கி.மீ. தொலைவில் உள்ளது இத் திருத் தலம்.


🌼புற்றுநோய் தீர்க்கும் " திருந்துதேவன் குடி அருமருந்தம்மை :
புற்று நோய்தீர்க்கும் தலம் திருந்துதேவன்குடி கற்கடேஸ்வரர் திருக்கோவில்.
கற்கடேஸ்வரர் வீற்றிருக்கும் " திருந்துதேவன்குடியின் " நாயகி, தீராநோய்கள் தீர்க்கும் அருமருந்தம்மை. இங்கு,அம்மனுக்கு சார்த்தப்படும் எண்ணெய்,பின்னர் வேண்டுவோர்க்கு, பிரசாதமாய் வழங்கப்படுகிறது. இது, சர்வவியாதிகளுக்குமான ஒரு நிவாரணி. அதிலும், மிக குறிப்பாக, புற்று நோய் தீர்க்கும் மருந்தாக கருதப்படுகிறது. நோய் தீர்க்கும் தலம் இது என்பதை உணர்த்தும் வண்ணம்,வைத்தியர் ஒருவரின் சிற்பம் ஒன்று கோயிலின் வெளிப்புறம், அவர் மருந்து தயாரிப்பதைப் போல் சித்தரிக்கப்பட்டுள்ளது.

🌼கடன் தொல்லைகள் தீர்க்கும் திருச்சேறைருண விமோச்சனர் :

கும்பகோணத்தில் இருந்து சுமார் 15 கி.மீ. தொலைவில் திருவாரூர் வழியில்அமைந்துள்ளது " திருச்சேறை உடையார் கோவில் ". இங்கு தனி சந்நதியில் " ருணவிமோச்சனராய் " அருள்பாளிக்கிறார்பரமேஸ்வரன். தொடர்ந்து 11திங்கட்கிழமைகள் அர்ச்சனை செய்து, 11 வது வாரம் அபிஷேக ஆராதனை செய்யஅனைத்து வித கடன் தொல்லைகளும் தீர்கிறது. இச் சந்நதியின் முன் நின்று "கூறை உவந்தளித்த கோவே யென்று அன்பர் தொழச் சேறை உவந்திருந்த சிற்பரமே " எனமனமுருக 11 முறை பாராயணம் செய்தால் மிகச் சிறந்த பலன் கிடைக்கும்.
ஒருவர் முற்பிறவிகளில் செய்த பாவங்கள் அனைத்தும் அடுத்த்தடுத்த பிறவிகளில் தொடர்கிறது. முன்வினைப் பயன்கள் அனைத்தும் பிறவிக் கடன்களாகின்றன. முற் பிறவி தீவினைகள் நீங்கவும், இப் பிறவியின் கடன்கள் தீரவும், வறுமை நீங்கி சுபிட்சமான வாழ்க்கை கிடைத்திடவும் வணங்க வேண்டிய இறைவன், திருச்சேறையில் செந்நெறியப்பர் ஆலயத்தில், தனி சந்நதி கொண்டுள்ள " ரிண விமோஷன லிங்கேஸ்வரர் ". கும்பகோணம் - திருவாரூர் சாலையில் கும்பகோணத்தில் இருந்து சுமார் 15 கி.மீ. தொலைவில் உள்ளது இத் தலம். ரிண விமோஷனரை 11 திங்கட்கிழமைகள் அபிஷேக, ஆராதனை செய்து வழிபட்டு, பின்னர் மகாலஷ்மியையும், ஜேஷ்டா தேவியையும், பைரவரையும் வணங்கினால் வழிபடுபவரது வறுமையும், கடன்களும் தீரும். இத் தலத்தில் துர்க்கை சிவ துர்க்கை, விஷ்ணு துர்க்கை, வைஷ்ணவி என மூன்று வடிவங்களாக அருளுகிறாள். மாசி மாதத்தில் 13,14,15 தேதிகளில் சூரியனது கிரணங்கள் இறைவன் மீதும், இறைவி மீதும் நேரடியாக விழுவது சிறப்பு.
🌸சங்கடங்கள் தீர்க்கும் திருபுவனம் சூலினி,பிரத்தியங்கரா சமேத சரபேஸ்வரர்:
கடன் தொல்லைகளில் இருந்து விடுபட,வழக்குகளில் வெற்றியடைய, பில்லி,சூனியம், ஏவல்களில் இருந்து விடுபட பரமேஸ்வரன், சரபேஸ்வரராய் வீற்றிருந்துஅருள்பாளிக்கும் " திருபுவனம் " சென்று வழிபடலாம். இவர் வழிபடுபவரின் அனைத்துசங்கடங்களையும் தீர்ப்பவர். சூலினி,பிரத்தியங்கரா என தன் இரு தேவியருடன் தனி சந்நதி கொண்டு வீற்றிருக்கும் சரபரை11 விளக்குகள் ஏற்றி, 11 முறை சுற்றி வந்து, 11வாரங்கள் வழிபட சங்கடங்கள் அனைத்தும்தீர்ந்து சுக வாழ்வு கிடைக்கும். சரபரை வழிபட ஞாயிற்று கிழமை ராகு கால வேளைசிறந்தது.
🌼பிரிந்திருக்கும் தம்பதியர் ஒன்று சேர ,வணங்க வேண்டிய ‘ஸ்ரீவாஞ்சியம்’ :
மன வேறுபாட்டால் பிரிந்து வாழும் தம்பதியர் ஒன்று சேர வழிபட வேண்டிய திருத் தலம், காசிக்கு இணையாக கருதப்படும், கும்பகோணத்தை அடுத்துள்ள "ஸ்ரீவாஞ்சியம்". காசி தேசத்தில் புண்ணியமும் வளரும். பாவமும் வளரும். ஆனால் இங்கு புண்ணியம் மட்டுமே வளரும். ராகுவும், கேதுவும் ஒரே திருமேனியில் காட்சி தரும் இத் தலம் பிள்ளைப் பேறு அருளும் தலம். ஏழரை, அஷ்டம மற்றும் கண்டகச் சனி திசைப் பரிகாரத் தலமாகும். இங்கு ஆயுஷ் ஹோமம், சஷ்டியப்த பூர்த்திகள் செய்ய நீண்ட ஆயுள் கிட்டும். இங்குள்ள குப்த கங்கையில் நீராடி பித்ரு காரியங்களைச் செய்தால் பித்ரு தோஷ நிவர்த்தி கிடைக்கும். ராகு கேதுவை வழிபட கால, சர்ப்ப தோஷம் நீங்கும். இத் தலத்தில் ஓர் இரவு தங்கினாலேயே செய்த பாவங்கள் அனைத்தும் தீர்ந்து முக்தி கிடைக்கும். ஸ்ரீயாகிய திருவை (மஹாலஷ்மி) பரந்தாமன் தனது வாஞ்சையில் விரும்பி சேர்த்ததால் இத் தலம் ஸ்ரீவாஞ்சியம் எனப் பெயர் பெற்றது. இங்குள்ள குப்த கங்கையில் நீராடி இறைவனையும், அம்பாளையும், மஹாலக்ஷ்மியையும் வழிபட்டால் பிரிந்துள்ள தம்பதியர் பிணக்குகள் அனைத்தும் தீர்ந்து ஒன்று சேர்வர்.
🌼அட்சரப்பிரயாசம் ( எழுத்தறிவு ) பெற இன்னம்பூர் எழுத்தறிநாதர்:
அகத்திய முனிவர் இத் தலம் வந்து எழுத்தறிநாதரை வழிபட்டு இலக்கணங்களைகற்றுக் கொண்டதால், இன்றளவும் இத் தலத்தில் சிறு பிள்ளைகளுக்கானஅட்சரப்பியாசம் நடைபெறுகிறது.குழந்தைகளை பெற்றவர் இத் தலம் அழைத்துவந்து இங்குள்ள நாதனின் முன்பாக எழுத்துபயிற்சி தருகின்றனர்.இத் தல நடராஜரின் விக்கிரகத்தில் இடப் பக்கம் கங்கா தேவியும்வலப் பக்கம் நாகமும் காட்சியளிப்பது அற்புதமான காட்சி. இத் தலம் சஷ்டியப்தபூர்த்தி, பீம ரத சாந்தி ஹோமங்கள் செய்ய மிகச் சிறந்தது.
🌼தடைபட்ட திருமணம் நடக்க கோனேரிராஜபுரம் என்றழைக்கப்படும் திருநல்லம் :
முக்கண்ணன் " உமா மகேஸ்வரராய் "மேற்கு நோக்கி வீற்றிருக்க, " அங்கவள நாயகியாய் " அம்பாள் கிழக்கு நோக்கி வீற்றிருப்பது, இருவரும் மாலை மாற்றிக் கொள்ளும் வண்ணம் அமர்ந்திருப்பதாய் ஐதீகம். பூமாதேவி, ஈஸ்வரனை பூஜிக்க வேண்டி, தேவ சிற்பி விஸ்வகர்மா ஆலயம் அமைக்க, தேவகுரு பிரகஸ்பதி மகேஸ்வரனை பிரதிஷ்டை செய்த,திருமணத் தடை அகற்றும் திருக் கோயில் இது. இத் தல நாயகனையும், அம்பாளையும் வழிபட்டால், தடைபட்ட திருமணங்கள் இனிதே நிறைவேறும். " பொல்லாத் துயரையும் பொடிப் பொடியாக்கும் இறைவன் " என இத் தல நாயகனை திருநாவுககரசர் பாடியுள்ளார். இத் தலத்தில், நோய் தீர்க்கும், " ஸ்ரீ வைத்திய நாதர் " சந்நதியும் அமைந்துள்ளது. இத் தலம்,திருவிடை மருதூரிலிருந்து சுமார் 10 கி.மீ. தொலைவில் உள்ளது. கும்பகோணம் - வடமட்டம் பேருந்து வழித் தடத்தில்,கோனேரிராஜபுரம் என்ற பஸ் நிறுத்தத்தில் இருந்து 1 கி,மீ. தொலைவில் ஆலயம் உள்ளது.
🌼தீரா நோய்கள் தீர்க்கும் "வைத்தீஸ்வரன் கோவில் வைத்திய நாதர் :
மயிலாடுதுறை - சீர்காழி வழித் தடத்தில் அமைந்துள்ள நோய் தீர்க்கும் திருத் தலம் " வைத்தீஸ்வரன் கோவில் ". செவ்வாய் தோஷம் நீக்கும் " அங்காரகனுக்குரிய " திரு கோயிலான இது ஒரு பிரார்த்தனை திருத்தலம். வேண்டுபவரது பிரார்த்தனைகள் அனைத்தும் நிறைவேற்றும் வைத்யநாதர்,தையல் நாயகி சமேதராய் அருளும்திருக்கோயில் இது. இங்குதான் முத்துசாமிதீட்சிதர் பதிகம் பாடி கண்ணொளி பெற்றார்.18 சித்தர்களில் ஒருவரான, நோய்கள் தீர்க்கும் "தன்வந்திரி" இத் தலத்திற்கு உரியவர். அப்பர் பாடிய தேவாரத்திற்கு ஏற்ப, இத் தலத்தில் தரப்படும் மருந்து உருண்டையைஉட்கொண்டு, இத் தல சித்தாமிர்த திருக்குளத்து நீரை பருகினால் தீராதவியாதிகள் அனைத்தும் தீரும் என்பது நிச்சயம். இங்குள்ள சடாயுகுண்டத்தில் உள்ளசாம்பலை பூசிக்கொள்ள நோய்கள் தீருகின்றன.
🌼செல்வம் பெற வணங்க வேண்டிய தலம் "திருவாடுதுறை":
கும்பகோணம் - மாயவரம் சாலையில் கும்பகோணத்திலிருந்து சுமர் 10 கி.மீ.தொலைவில் உள்ளது ஆடுதுறை எனப்படும் "திருவாடுதுறை". ஞானசம்பந்தரிடம் அவர்தந்தை யாகம் செய்ய தேவையான பொருள்கேட்க, சம்பந்தரும் இத் தல இறைவன்மாசிலாமணி ஈஸ்வரரை வேண்டி பதிகம் பாட,பரம் பொருளும் 1000 பொற்காசுகள் கொண்ட பொற்கிளியை பலி பீடத்தின் மீது வைத்தருளினார்.
🌼சரஸ்வதி கடாட்சம் தரும் கூத்தனூர்:
மாணவர்கள் கல்விச் செல்வம் பெறவும்,கலைமகளின் பரிபூரண அருளை பெறவும்வழிபட வேண்டிய தலம் ஞானசரஸ்வதி காட்சி தரும் "கூத்தனூர்". நமது பிறப்புகள் அனைத்திலும் நம்முடன் வருவது நாம் பெற்ற கல்விச் செல்வம் மட்டுமே. மயிலாடுதுறை - திருவாரூர் வழித் தடத்தில் பேரளத்தை அடுத்து அமைந்துள்ளது ஞான சக்தியாய் மகா சரஸ்வதி அருளும் கூத்தனூர். வெண்ணிற ஆடை உடுத்தி, வெண் தாமரையில் கிழக்கு முகமாய் வீற்றிருக்கும் சரஸ்வதி தேவி ஆய கலைகள் அனைத்தையும் அருள்பவள். இவள் வாக்கு வன்மையை தருபவள். வாழ்வில் உயர அனைவரும் வழிபட வேண்டியவள். ஞானம் அருள்பவள்.

🌼நாக,புத்திர,மாங்கல்ய தோஷங்கள் நீங்க நாச்சியார் கோவில் கல் கருடன்.
🌸காரியங்கள், திருமணம் கைகூட திருநந்திபுர விண்ணகரம் நாதன் கோவில்.
🌸கடும் வியாதிகளின் இருந்து விடுபட கும்பகோணம் பாணபுரீஸ்வரர் .
🌼கடும் ஜூரம் விலகிட காளகஸ்தீஸ்வரர் திருக்கோவில் "ஜூரகேஸ்வரர் "
🌼பிரிந்த தம்பதியர் ஒன்று சேர கும்பகோணம் ஆதி வராகப் பெருமாள் .
🌼ராகு தோஷம், எம, மரண பயம் நீங்கதிருநீலக்குடி எனும் தென்னலக்குடி.
🌼மாங்கல்ய பலம் பெற, நோய்கள் தீரதிருமங்கலக்குடி பிராணவரதேஸ்வரர் .
🌼குழந்தைகளின் நோய் தோஷங்கள் தீர சிவபுரம் எனப்படும் திருச்சிவபுரம்.
🌼விஷக் கடியில் இருந்து நிவாரணம் பெற அழகாபுத்தூர் சங்கு சக்கிர முருகன் .
🌼விரைவில் திருமணம் கைகூட காசி விஸ்வநாதர் கோயில் "நவ கன்னியர் வழிபாடு" :
நவ நதிகளும், தனி சந்நதி கொண்டு வீற்றிருக்கும் காசி விஸ்வநாதர் திருக்கோயில் நவ கன்னியர் வழிபாட்டுக்கு சிறந்த தலம். 12 வெள்ளிக் கிழமைகள் விரதமிருந்து, வாசனை மல்ர்கள், எண்ணெய், சந்தனம், மஞ்சள், குங்குமம், வெற்றிலை, பாக்கு, பால் சோறு, தேங்காய், வாழைப்பழம் போன்றவை வைத்து நவ கன்னியரை வணங்கி, முடிந்த அளவு சுமங்கலி பெண்களுக்கு தானம் செய்தால் மகப் பேறு இல்லாதோர், நன் மக்களைப் பெறுவர். திருமணமாகாத பெண்களுக்கு, விரைவில் மணம் கைகூடும். பிரிந்த தம்பதியர் ஒன்று சேர்வர். தீரா நோய் கொண்டோர், நோயிலிருந்து விடுபடுவர். பருவம் அடையாத பெண்கள் பூப்பெய்துவர். கும்பகோண நகரத்தின் மத்தியில் அமைந்துள்ள " மகாமக " குளக்கரையில் உள்ளது இத் திருத்தலம்.
🌼மாங்கல்ய பலம் அருளும் பஞ்ச மங்கள சேத்ரமாம் " திருமங்கலக்குடி ":
நவக்கிரகங்களுக்கு ஏற்பட்ட தோஷத்தை நீக்கியவர் கும்பகோணத்தை அடுத்துள்ள ஆடுதுறையில் அமைந்துள்ள "திருமங்கலக்குடி பிராணவரதேஸ்வரர்". இத் தலம் மாங்கல்ய தோஷங்கள் நீக்கும் திருத்தலம் ஆகும். முதலாம் குலோத்துங்க சோழனின் மந்திரி ஒருவர் வரிப் பணத்தைக் கொண்டு இக் கோவிலை கட்டினான்.
இதனை அறிந்து சினமுற்ற மன்னன், அம் மந்திரியை சிரச் சேதம் செய்யுமாறு உத்தரவிட்டான். அஞ்சி நடுங்கிய மந்திரியின் மனைவி இத் தல மங்களாம்பிகையிடம் வேண்டினாள். மந்திரி தனது உடலை திருமங்கலக்குடியில் அடக்கம் செய்யுமாறு கேட்க, மன்னனும் அவ்வாறே செய்யுமாறு ஆணையிட்டான்.
மந்திரியின் உயிரற்ற உடலை இத் தலம் எடுத்து வர, தனது பக்தையின் வேண்டுகோளுக்கிணங்க மந்திரியை உயிர்ப்பித்தாள் இத் தல நாயகி. இதனால் இவள் " மங்களாம்பிகை" எனவும், பிராணனை திரும்ப கொடுத்ததால் இறைவன் "பிராண வரதேஸ்வரர் " எனவும் வழிபடலாயினர். மாங்கல்ய தோஷத்தால் திருமண தடை உள்ளவர்கள் இத் தல நாயகியை வழிபட திருமணத் தடை நீங்கும். வழிபடும் பெண்களின் மாங்கல்ய பலம் பெருகும். இத் தலத்தின் பெயர் மங்களக்குடி, தல விநாயகர் மங்கள விநாயகர். அம்பாள் மங்களாம்பிகை. தீர்த்தம் மங்கள தீர்த்தம். விமானம் மங்கள விமானம். எனவே, இத் தலம் " பஞ்ச மங்கள ஷேத்திரம் " எனப்படுகிறது.
இத் திருத்தலம், கும்பகோணத்திலிருந்து சுமார் 12 கி.மீ. தொலைவில், சூரியனார் கோயிலின் அருகாமையில் அமைந்துள்ளது.
🌼மாங்கல்யப் பேறு தரும் " கருவிலி கொட்டிட்டை சர்வாங்க சுந்தரி ":
தட்ச யாகத்தின் போது, தாட்சாயினியை பிரிந்த ஈசன், இத் தலம் வந்தடைந்தான். ஈசனை மீண்டும் அடைய வேண்டி, அம்மையும் இங்கே வந்தடைந்தாள். அப்பனும், அம்மையும் இணைந்த இத் திருக்கோயில், திருமணம் கை கூடுவதற்கும், மாங்கல்ய பேறு நீடிப்பதற்க்கும் வழிபடப்படுகிறது. இது பிறப்பை அறுத்து மோட்சம் அருளும் தலமாதலால், " கருவிலி " என்றும் அழைக்கப்படுகிறது. இங்குள்ள தீர்த்தத்தில் நீராடினால், எம பயம் நீங்கும். இத் தலத்தை தரிசிப்பது, கும்பகோணத்தில் உள்ள அனைத்து கோயில்களையும் தரிசனம் செய்த பலன் அருளும் கும்பகோணம் - பூந்தோட்டம் சாலையில், நாச்சியார் கோயில் வழியில், சுமார் 19 கி.மீ தொலைவில் கூந்தலூர் என்ற கிராமத்தில் அமைந்துள்ளது இத் திருத்தலம்.
🌼திருமணம், மகப் பேறு, சுகப் பிரசவம் அருளும் " திருக்கருகாவூர் கர்ப்பரட்சாம்பிகை ":
கும்பகோணத்தில் இருந்து தஞ்சை செல்லும் சாலையில் சுமார் 20 கி.மீ. தொலைவில் பாபநாசம் அருகே உள்ளது, கருச் சிதைவை தடுத்து , கருவினை நன்முறையில் காத்து, சுகப் பிரசவம் அளித்திடும் " கர்பரட்சாம்பிகை " திருக்கோயில். இங்கு வசித்து வந்த தனது பக்தரான, முனிவர் ஒருவரின் வேண்டுதலுக்கு செவி சாய்த்து, சிதைந்த அவர் மனைவியின் கருவை காத்து, சுகப் பிரசவம் அருளியவள் இந்த அம்பிகை. திருமணத் தடை நீக்கி, மணவரமும், குழந்தை பேறும் அருள்பவள்.
நீண்ட நாட்கள் திருமணமாகாத பெண்களும், பல ஆண்டுகளாக குழந்தை செல்வமற்ற பெண்களும் இத் தலம் வந்து, அம்பாள் சந்நதியில் நெய் கொண்டு மெழுகி கோலம் இட்டால் அவர்களின் பிரார்த்தனைகள் நிறைவேறும்.இங்கு, அம்பாளின் திருவடியில் வைத்து அர்ச்சித்து தரப்படும் " பசுநெய் " பிரசாதத்தை 48 நாட்கள் தம்பதியர் உட்கொள்ள கரு உண்டாகும். அம்மனுக்கு சார்த்தி தரப்படும் " விளக்கெண்ணெய் " பிரசாதத்தை, கருவுற்ற பெண்கள் தங்கள் வயிற்றில் தேய்த்து வந்தால் சுகப்பிரசவம் பெறுவர்.புற்று மண்ணினால் ஆன, இத் தல லிங்கத்தை புனுகு சார்த்தி வழிபட, தீரா நோய் அனைத்தும் தீர்கிறது.திருமண வரம் தந்து, கரு கொடுத்து, அதை நல்ல முறையில் காத்து, சுகப் பிரசவம் அளித்திடும் இந்த அம்பிகையும், தீரா நோய் தீர்க்கும் ஈசனும் வெகு நிச்சயமாக தரிசிக்கப்பட வேண்டியவர்கள். கும்பகோணத்தில் இருந்து சுமார் 15 கி.மீ. தொலைவில் தஞ்சை செல்லும் சாலையில் உள்ளது இத் திருக்கோயில்.
🌼தடைபட்ட திருமணம் நடக்க கோனேரிராஜபுரம் என்றழைக்கப்படும் " திருநல்லம் " :
முக்கண்ணன் " உமா மகேஸ்வரராய் " மேற்கு நோக்கி வீற்றிருக்க, " அங்கவள நாயகியாய் " அம்பாள் கிழக்கு நோக்கி வீற்றிருப்பது, இருவரும் மாலை மாற்றிக் கொள்ளும் வண்ணம் அமர்ந்திருப்பதாய் ஐதீகம். பூமாதேவி, ஈஸ்வரனை பூஜிக்க வேண்டி, தேவ சிற்பி விஸ்வகர்மா ஆலயம் அமைக்க, தேவகுரு பிரகஸ்பதி மகேஸ்வரனை பிரதிஷ்டை செய்த, திருமணத் தடை அகற்றும் திருக் கோயில் இது. இத் தல நாயகனையும், அம்பாளையும் வழிபட்டால், தடைபட்ட திருமணங்கள் இனிதே நிறைவேறும். " பொல்லாத் துயரையும் பொடிப் பொடியாக்கும் இறைவன் " என இத் தல நாயகனை திருநாவுககரசர் பாடியுள்ளார். இத் தலத்தில், நோய் தீர்க்கும், " ஸ்ரீ வைத்திய நாதர் " சந்நதியும் அமைந்துள்ளது. இத் தலம், திருவிடை மருதூரிலிருந்து சுமார் 10 கி.மீ. தொலைவில் உள்ளது. கும்பகோணம் - வடமட்டம் பேருந்து வழித் தடத்தில், கோனேரிராஜபுரம் என்ற பஸ் நிறுத்தத்தில் இருந்து 1 கி,மீ. தொலைவில் ஆலயம் உள்ளது.
🌼திருமணத் தடைகள் நீக்கும் சார்ங்கபாணி கோயிலின் " கோமலவல்லி " நாச்சியார் ":
சார்ங்கபாணி திருக்கோயிலின் நாச்சியார் " கோமலவல்லி " தனிச் சிறப்பு கொண்டவர். தாயாரின் அவதாரத் தலம் இது என்பதால், இங்கு நாச்சியாருக்கே முதல் மரியாதை. தாயாரை வழிபட்ட பின்னரே மாலவனை வணங்க வேண்டும். இத் தாயாருக்கு, தங்கள் வசதிக்கேற்ப புடவை சார்த்தி, திருமஞ்சனம் செய்து வழிபடுவதால் திருமணாமாகாத பெண்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறும். மன வேறுபட்டால் பிரிந்திருக்கும் தம்பதியர், கருத்தொருமித்து ஒன்று சேர்வர். வழிபடும் சுமங்கலிப் பெண்களின் " மாங்கல்ய பலம் " பெருகும். தடை பட்ட திருமணங்கள் இனிதே நிறைவேறும். கும்பகோணம் நகரின் மத்தியில் அமைந்துள்ளது இத் திருத்தலம்.
🌸திருமணத் தடை அகற்றும் " திருப்புறம்பியம் ஸ்ரீ குகாம்பிகை":
பிரளயம் காத்த விநாயகர் வீற்றிருக்கும் திருப்புறம்பியத்தில் உள்ள " ஸ்ரீகுகாம்பிகை " சந்நதி மிகச் சிறப்பானது. குழந்தை வடிவு கொண்ட ஆறுமுகனை, தன் இடையில் தாங்கி நிற்கும் இந்த அம்பிகைக்கு சாம்பிராணி தைலம் மட்டுமே சார்த்தப்படுகிறது. தடை பட்டு கொண்டிருக்கும் திருமணங்கள் இனிதே நடைபெறவும், கருவுற்ற பெண்களது பிரசவம், சுகமாக அமைந்திடவும், வேண்டுவோர்க்கு அருள் புரிகிறாள் இந்த் அம்பிகை. கும்பகோணத்தில் இருந்து சுமார் 10 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது, சைவ சமயக் குரவர்களால் பாடப் பெற்ற இத் திருத்தலம்.
விவாகத் தடைகள் அகற்றும் " திருமங்கைச்சேரி வரதராஜ பெருமாள் ":
"புன் நாகம்" என்ற பாம்புக்கு பெருமாள் காட்சி தந்த இத் திருத்தலம், ராகு மற்றும் சர்ப தோஷங்கள் நீக்கும் பரிகார நிவர்த்தி தலமாக விளங்குகிறது. " மண்ணிற்கு தென்பால் நின்ற திருமாலே " என்று திருமங்கை ஆழ்வாரால் பாடப்பெற்ற இத் தல வரதராஜ பெருமாளை வணங்கினால், திருமண தடைகள் நீங்கும், புத்திர பாக்கியம் கிட்டும். வேறெங்குமில்லாத வண்ணம், இத் தலத்தில் பெருமாளுக்கும், தாயாருக்கும் இடையில் கிழக்குக் நோக்கி, தனது வலது காலை ஓரடி முன் வைத்து பெருமானை வணங்கும் பக்தர்களுக்கு உதவ தயாராக உள்ளது போன்று காட்சி தருகிறார் " பால ஆஞ்சநேயர் ". 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த இத் திருத்த்லம் கும்பகோணத்திலிருந்து சுமார் 25 கி.மீ தொலைவில் மணல்மேடு செல்லும் சாலையில் அமைந்துள்ளது.
பிரிந்த தம்பதியரை ஒன்று சேர்க்கும் பூமாதேவி சமேத " ஆதி வராகப் பெருமாள் "
தன் இடப் பக்க தொடையில் பூமா தேவியை கொண்டு காட்ச் தரும் " ஆதி வராகப் பெருமாள் ", பூமி சம்பந்தமான அனைத்து பிரச்சினைகளையும் தீர்ப்பவர். ஞாயிறு மற்றும் செவ்வாய் கிழமைகளில், நெய் விளக்கேற்றி வணங்கி, சகஸ்ரநாமம் செய்து, அன்ன தானம் அளித்தால் பிரிந்த தம்பதியர் ஒன்று சேர்வர். வழிபடுவோருக்கு புத்திர பாகியம் கிடைக்கும். இத் திருத்தலம், கும்பகோணத்தின் மையப் பகுதியில், சக்கரபாணி கோயிலின் அருகில் உள்ளது.
🌼மணம் போல் மணாளன் அமைந்திட:
கும்பகோணம் சுந்தரபெருமாள் கோயில் அருகிலுள்ள "நிறம் மாறும் லிங்க திருமேனி கொண்ட திருநல்லூர்"
🌼திருமணத் தடைகள் அகன்றிட :
கும்பகோணம் திருப்பனந்தாளை அடுத்து அமைந்துள்ள ஆதி குரு வீற்றிருக்கும் " திருலோகி சுந்தரேஸ்வரர் "
🌸திருமணத் தடை நீங்கி புத்திர பாக்கியம் பெற்றிட:
திருபுவனம் சரபேஸ்வரர் கோயிலில் தனி மணடபத்தில் வீற்றிருந்து அருள்பாலிக்கும் "சோமஸ்கந்தர்"
🌼தடை படும் திருமணம் இனிதே நடைபெற :
கும்பகோணத்தில் அமையப்பெற்ற "குரு பரிகார தலமான ஆலங்குடி - தட்சிணாமூர்த்தி "
🌼திருமணத் தடைகள் நீங்க :
கும்பகோணத்தில் அமைந்துள்ள " ராகு பரிகார தலமான - திரு நாகேஸ்வரம் ராகு பகவான் "

🌼இழந்த செல்வம் மீட்டு தரும் " தென்குரங்காடுதுறை " :
சம்பந்தரும், நாவுக்கரசரும் பாடிய ஆடுதுறை எனப்படும் தென்குரங்காடுதுறையில் வீற்றிருக்கும் " ஆபத்சகாயேஸ்வரர் " இழந்த செல்வங்களை மீட்டுத் தருபவர். வாலியால், துரத்தப்பட்ட சுக்ரீவன், இத் தல நாயகனை வேண்ட, ஸ்ரீராமரின் அருள் கிடைத்து, தான் இழந்தசெல்வங்கள் அனைத்தையும் பெற்றான். வானராமகிய சுக்ரீவனால் பூஜிக்கப்பட்டதால், இத் தலம் " தென்குரங்காடுதுறை " என்றானது. கும்பகோணமிருந்து மாயவரம் செல்லும் சாலையில் சுமார் 25 கி.மீ. தொலைவில் இத் திருக்கோயில் அமைந்துள்ளது.
🌼செல்வம் பெற வணங்க வேண்டிய தலம் "திருவாடுதுறை" :
கும்பகோணம் - மாயவரம் சாலையில் கும்பகோணத்திலிருந்து சுமர் 10 கி.மீ. தொலைவில் உள்ளது ஆடுதுறை எனப்படும் "திருவாடுதுறை". ஞானசம்பந்தரிடம் அவர் தந்தை யாகம் செய்ய தேவையான பொருள் கேட்க, சம்பந்தரும் இத் தல இறைவன் மாசிலாமணி ஈஸ்வரரை வேண்டி பதிகம் பாட, பரம் பொருளும் 1000 பொற்காசுகள் கொண்ட பொற்கிளியை பலி பீடத்தின் மீது வைத்தருளினார்.
🌼செல்வ வளம் பெருக சம்பந்தர் அருளிய பதிகம்
இடரினும் தளரினும் எனதுறுநோய்
தொடரினும் உனகழல் தொழுதெழுவேன்!
கடல்தனில் அமுதொடு கலந்தநஞ்சை
மிடறினில் அடக்கிய வேதியனே!
இதுவோ எமைஆளுமாறு ஈவதொன்று எமக்கில்லையேல்
அதுவோ உனதின்னருள் ஆவடுதுறை அரனே!


🌼கடன், சங்கடங்கள் போக்கும் " திருபுவனம் சரபேஸ்வரர் " :
தீராத கடன் தொல்லைகள் தீரும்,

*உங்க டூத் பேஸ்ட்ல என்ன இருக்கு ?..



*ஆயுர்வேதம் மற்றும் சித்த மருத்துவம்.*
*உங்க டூத் பேஸ்ட்ல என்ன இருக்கு ?...*
*பூச்சிமருந்து இருக்கா ?.....*
காலை எழுந்த உடன் முதல் வேலை பல் துலக்குவதுதான்.
அந்த பற்பசை பற்றி நம்மில் பலருக்கு சில விசயங்கள் தெரிவதில்லை.
நம்முடைய முன்னோர்களின் பற்கள் இன்றைக்கும் உறுதியாக இருக்க காரணம் அவர்கள் ஆலும், வேலும் பயன்படுத்தி பல்துலக்கியதுதான்.
ஆனால் இன்றைக்கு விலை உயர்ந்த பேஸ்ட், ப்ரஸ் பயன்படுத்தினாலும் நம்முடைய பற்கள் சொத்தையாகின்றன.
எளிதில் ஆட்டம் கண்டு 50 வயதிற்குள் சிலருக்கு பற்கள் விழுந்து விடுகின்றன. எனவே நாம் பயன்படுத்தும் பற்பசை எந்தமாதிரியானது.
எப்படி பல்துலக்கவேண்டும் என்று விளக்குகிறார் பிரபல பல் மருத்துவர் ஒருவர்.
பற்பசையில் என்ன இருக்கு?
பற்களை பாலிஷ் செய்யவும், சுத்தப்படுத்துவதற்குமான அப்ரசிவ்ஸ், நுரையை உருவாக்கும் டிடர்ஜெண்டுகள், நீண்டகாலம் கெடாமலிருக்க பிரிசர்வேடிவ், நிறத்தை அளிக்கும் கலர்கள் பற்பசையில் உள்ளன.
மேலும் சுவை அளிக்கும் ப்ளேவர்ஸ், நறுமணத்தை வழங்கும் ப்ராகரன்ஸ் ஆகியவை உள்ளன. இவை தவிர கால்சியம், பாஸ்பரஸ், மெக்னீசியம், வைட்டமின் டி போன்றவை பற்பசையில் காணப்படுகின்றன.
எப்படி பல் துலக்கணும்?
விளம்பரங்களில் ப்ரஸ்சை நிறைத்து பேஸ்ட் வைக்கின்றனர். அது தவறானது. ஃப்ளோரைடும், இதர இரசாயனப் பொருட்களும் கலந்த டூத் பேஸ்டை ப்ரஸ்ஸில் ஒரு பட்டாணி அளவுக்கு எடுத்தாலே போதுமானது. நாம் பல் துலக்குவது டூத் பேஸ்டின் அளவைப் பொறுத்து அல்ல, மாறாக எவ்வாறு பேஸ்டை உபயோகின்றீர்கள் என்பதாகும்.
ப்ளோரைடு நல்லதா? கெட்டதா?
ப்ளோரைடு கலந்த பற்பசைகளை பயன்படுத்துமாறு பல் மருத்துவக் கழகங்களும், பல் மருத்துவர்களும் பொதுவாக அறிவுறுத்துகிறார்கள். நாம் வசிக்கும் இடத்தைப் பொறுத்தும், நாம் அருந்தும் நீரில் கலந்துள்ள ப்ளோரைடின் அளவைப் பொறுத்தும் இந்த அறிவுரை மாறுபடுகிறது. ப்ளோரைடு இயற்கையாகவே கிடைக்கின்ற ஒன்று.
அது நமது பற்களும் எலும்புகளும் வலிமையாக இருக்க உதவுகிறது. பல சோதனைகளில், ப்ளோரைடு கலந்த பற்பசை உபயோகிப்பவர்களுக்கு பற்குழி விழுவது குறைகிறது அல்லது தவிர்க்கப்படுகிறது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.
அதே சமயத்தில் அளவுக்கு அதிகமான ப்ளோரைடு உபயோகம் பற்களுக்கு ஊறு விளைவிக்கும். அது மட்டுமல்லாமல் உயிருக்கே ஆபத்தாகவும் முடியலாம்.
குழந்தைகளுக்கு பற்பசை...
அதிக அளவு ப்ளோரைடு உபயோகம் ப்ளூரோசிஸ் என்ற பல்சிதைவு ஏற்பட காரணமாகிறது. மேலும் குழந்தைகளுக்கு பற்கள் விழுந்து முளைக்கும் சமயத்தில் அதிக அளவு ப்ளோரைடு உபயோகித்தால் பற்களில் வெள்ளைத் திட்டுக்கள் விழக் கூடும்.
ப்ளோரைடு பற்பசையினை உபயோகிக்கும் பொழுது ஒரு பட்டானி அளவிற்கு மட்டுமே எடுத்துக் கொண்டு பல்துலக்க வேண்டும் என்று பல் மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள்.
எச்சரிக்கை அவசியம்...
1997-ம் ஆண்டின் மத்தியிலிருந்து, அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாக அமைப்பு (FDA) ப்ளோரைடு கலந்த பற்பசைகளில் கீழ்க்கண்ட எச்சரிக்கையை அச்சிட வேண்டுமென்று உத்தரவிட்டுள்ளது.
ஒரு முறை பல் துலக்குவதற்கு வேண்டிய அளவை விட அதிகமான பற்பசையை உட்கொண்டாலே உடனடியாக மருத்துவ உதவியை நாடவும் அல்லது, விஷமுறிவு மையத்தை நாடவும் என்ற எச்சரிக்கை கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய ஒன்று.
விழுங்கக் கூடாது...
ப்ளோரைடு கலவையை நேரடியாக உட்கொண்டால் விஷம் தான். ஆனால் பற்களிலும், எலும்புகளிலும் ப்ளோரைடு கலந்திருக்கிறது. இது பற்களை வலுவானதாக ஆக்குகிறது.
ப்ளோரைடு பற்பசை உபயோகிக்கும் பொழுது அது தொண்டைக்குள் செல்லாமல் துப்பி விடுவது நல்லது. சிறுவர்களுக்கு பிடித்தமான சுவைகளில் பற்பசைகள் தயாரிக்கப்படுவதால் சிறுவர்கள் இதனை விழுங்காமல் பார்த்துக் கொள்வது கடினம்.
சில சிறுவர்கள் பற்பசையில் டேஸ்ட் நன்றாக இருக்கிறது என்று அதை சாப்பிடுவார்கள். அது விஷம் என்று புரியவைக்கவேண்டும்.
இரவில் அதிக நேரம்....
பல் துலக்க 2 அல்லது 3 நிமிடங்களே போதுமானது. காலையில் உபயோகிக்கும் பேஸ்டின் அளவை விட இரவில் சற்று அதிகம் உபயோகிக்கலாம்.
ஏனெனில் காலையில் பற்களை அழகாக்கவும், இரவில் அழுக்குகளைப் போக்கவும் பற்களை துலக்குகிறோம். ஒவ்வொருவரின் வயதைப் பொறுத்து பேஸ்டின் அளவு மாறுபடும்.
குழந்தைகளுக்கு பெரியவர் பயன்படுத்துவதை விட குறைந்த அளவு பயன்படுத்தினால் போதும். கூடுதல் நேரம் பற்களை துலக்குவதால் பற்கள் பளிச்சிடாது.
வெள்ளை பேஸ்ட் போதும்..
வண்ண நிறங்களை கொண்ட பேஸ்டை விட வெள்ளை நிறத்திலான பேஸ்டை வாங்குங்கள்! .ஃப்ளோரைடு குறைந்த பேஸ்டை தேர்வுச்செய்யுங்கள்.
பற்கள் சொத்தையாக காரணமாகும் இரசாயனங்கள் அடங்கியதுதான் அப்ரேஸிவ். ஆகவே இதன் அளவு குறைந்த பேஸ்டை வாங்குங்கள். சோடியம் லாரைல், சோடியம் லாரேத், பேக்கிங் சோடா, பெராக்ஸைட் ஆகியன அடங்கிய பேஸ்டுகளை தவிருங்கள்.
ஜெல் பேஸ்டுகள் பற்களின் தேய்மானத்திற்கு காரணமாகும் என்பதால் க்ரீம் பேஸ்டுகளே நல்லது. குழந்தைகளுக்காக வாங்கும் பேஸ்டில் ஃப்ளோரைடு இல்லை என்பதை உறுதிச் செய்யவும்.
பூச்சிமருந்து இருக்கா?
பூமியில் இயற்கையாக கிடைப்பது கால்சியம் ப்ளோரைடு என்ற தாது உப்பு வடிவில் உள்ளது. ஆனால் பற்பசையில் கலக்கப்படும் ப்ளோரைடு இந்த வகையில் இல்லை. சோடியம் ப்ளோரைடு அல்லது ப்ளூரோசாலிசிக் அமிலம் பற்பசையில் உபயோகிக்கப்படுகிறது. இவை அலுமினியத் தொழிற்சாலைகளில் விஷக் கழிவுகளாக வெளியேறுபவை.
இவை எலி பாஷாணத்திலும், பூச்சி மருந்திலும் உபயோகப் படுத்தப்படுகிறது. இவைகளையே ப்ளோரைடு தேவைக்காக பற்பசையில் சேர்க்கிறார்கள் என்ற குற்றச்சாட்டு உள்ளது.
*நம்முடைய முன்னோர்களின் பற்கள் இன்றைக்கும் உறுதியாக இருக்க காரணம் அவர்கள் ஆலும், வேலும் பயன்படுத்தி பல்துலக்கியதுதான்.*
*ஆரோக்ய வாழ்வுக்கு பாரம்பரிய வாழ்க்கைமுறை அவசியம் என்பதை அனைவருக்கும் தெரியப்படுத்தி ஆரோக்ய பாரதத்தை உருவாக்குவோம்.....!*


Wednesday, 25 April 2018

பெண்கள் அணியும் ஆபரணங்களின் பயன்கள்..!

பெண்கள் அணியும் ஆபரணங்களின் பயன்கள்..!

பொட்டு :
பொட்டு வைக்கும்
பெண்களை அவ்வளவு சீக்கிரம்
மெஸ்மரிசம் செய்ய முடியாது.
தோடு :
மூளையின் செயல் திறன்
அதிகரிக்கும்.கண்பார்வை திறன்
கூடும் .
நெற்றிச்சுட்டி :
நெற்றிச்சுட்டி அணியும்
போது தலைவலி ,சைனஸ் பிரச்சனை
சரி செய்கிறது.
மோதிரம் :
பாலுறுப்புகளை தூண்டும்
புள்ளிகள் மோதிர விரலில்
உள்ளது..ப்ரேசிலட்,வாட்ச்,காப்பு
அணிவதும் பாலுறுப்பின்
புள்ளிகளை தூண்டும்.
செயின் , நெக்லஸ் :
கழுத்தில் செயின் அணியும் போது
உடலுக்கும் தலைக்கும் இடையே உள்ள
சக்தி ஓட்டம் சீராகும் .
வங்கி :
கையின் பூஜை பகுதியில்
இறுக்கமான அணிகலன்கள்
அல்லது கயிறுகள் அணியும்
பொது உடலில் ரத்த ஓட்டம்
சீராகி பதற்றம்படபடப்பு ,பயம்
குறைகிறது .மார்பக புற்று நோய்
வருவது தவிர்க்க படுவதாக ஆய்விலே
உருதிபடுதப்படிருகிரதுலம்பாடி
பெண்களுக்கு மார்பக புற்று நோய்
வருவது இல்லை.
கரணம் மணிக்கட்டில்
இருந்து முழங்கைக்கு மேல்
வரை நெருக்கமாக
வளையல்களை அணிவதால்
மார்பு பகுதியின் ரேத ஓடம் சீராக
வைத்திருக்க உதவுகிறது.
வளையல் :
வளையல்கள் அந்த பகுதியின்
புள்ளிகளை அழுத்துவதன் மூலம்
வெள்ளையணு உற்பத்தி உடலில்
அதிகரிக்கிறது.முக்கியமான
ஹார்மோன்கள் சுரப்பும் ரெகுலேட்
செய்யபடுகிறது.இதன் மூலம்
தாய்க்கும் சேய்க்கும் நோய்
எதிர்ப்பாற்றல் கூடும்.
ஒட்டியாணம் :
ஒட்டியாணம் அணியும்
போது இடுப்பு பகுதியின்
சக்தி ஓட்டம் நன்றாக
தூண்டப்பட்டு ஆரோக்கியம்
கூடும்.வயிற்று பகுதிகள்
வலு வடையும்.
மூக்குத்தி :
மூக்கில் இருக்கும் சில
புள்ளிகளுக்கும் பெருங்குடல் மற்றும்
சிறுகுடலுக்கும் நெருக்கமான
தொடர்னு உண்டு.அந்த புள்ளிகள்
தூண்டப்படும் பொது அது சமந்தமான
நோய்கள்
குணமாகும் .மூக்குத்தி அணியும்
பெண்கள் சில நாட்களில் விட்டு சிக்கல்
சரியாகி வருவதை உணரலாம் .
கொலுசு :
கல்லீரல்,மண்ணீரல்,பித்தப்பை,சிறுநீரகம்,
சிறுநீர்ப்பை,வயிறு போன்ற மிக
முக்கிய உறுப்புகளின் செயல்
திறனை தூண்டிவிடும் அற்புதமான
அணிகலன் கொலுசு.கர்பப்பை இறக்க
பிரச்சனையை தடிமனான
கொலுசு அணிவதன் மூலம்
தீர்க்கலாம் .
மெட்டி :
மெட்டி அணிவது கர்ப்பப்பையை
பலப்படுத்தும் .
ஹார்மோன்கள் தூண்டும்.
பில்லாலி என்பது குழந்தை
பிறந்தவுடன் 3வது விரலில்
அணியும்போது சில புள்ளிகள்
தூண்டப்பட்டு பால்
சுரப்பை அதிகப்படுத்தும் ......

சந்தனம் மயக்கம் வருவதைத் தடுக்கும்.

Sunday, 22 April 2018

இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?

இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?

ஒரு புகழ் பெற்ற கோவிலில், பணியாள் ஒருவர் இருந்தார்.
கோவிலைப் பெருக்கிச் சுத்தம் செய்வது தான் அவரது பணி.
அதைக் குறைவின்றி சிறப்பாகச் செய்து வந்தார். கோவில்,
விட்டால் வீடு என்றுதான் வாழ்ந்து வந்தார். இதைத்
தவிரஅவருக்கு வேறொன்றும் தெரியாது. தினமும ்
ஆயிரக்கணக்கான மக்கள் வந்து இறைவனை தரிசனம்
செய்த வண்ணமிருந்தனர். ‘இறைவன்
இப்படி எல்லா நேரமும் நின்றுகொண்டே இருக்கிறானே…
அவனுக்கு சோர்வாக இருக்காதா?’ என்று எண்ணிய
அவர் ஒரு நாள், இறைவனிடம் “எல்லா நேரமும்
இப்படி நின்று கொண்டேயிருக்கிறாயே… உனக்குப் பதிலாக
நான் வேண்டுமானால்ஒரு நாள் நிற்கிறேன். நீ
சற்று ஓய்வெடுத்துக் கொள்கிறாயா?” என்று கள்ளம்
கபடமில்லாமல் கேட்டார்.இறைவன், “எனக்கு நிற்பதில்
ஒன்றும் பிரச்னையில்லை. எனக்குப் பதிலாக
நாளை ஒருநாள் நீ நில். ஆனால், ஒரு முக்கிய
நிபந்தனை, நீ என்னைப் போலவே அசையாமல் நிற்க
வேண்டும். வருபவர்களைப் பார்த்துப் புன்முறுவலுடன்
ஆசி வழங்கினால் போதுமானது. யார் என்ன சொன்னாலும்
கேட்டாலும் நீ பதில் சொல்லக் கூடாது. நீ கடவுள்
சிலை என்பதை மறந்து விடக்கூடாது. என்
மீது நம்பிக்கை வைத்து அசையாது நின்றாலே போதுமானது”
என்று கூறினார்.அதற்கு அந்தப் பணியாளும்
சம்மதித்தார். அடுத்த நாள், இறைவனைப்
போலவே அலங்காரம் செய்து கொண்டு, கோவில் கருவறையில்
நின்றார். இறைவனோ இவரைப் போல தோற்றத்தை ஏற்றுக்
கோவிலைப் கூட்டிப் பெருக்கி சுத்தம் செய்யத்


தொடங்கினார்.முதலில், ஒரு மிகப் பெரிய செல்வந்தன்
வந்தான். தன் வியாபாரம் சிறப்பாக இருக்கவேண்டும்
என்று இறைவனிடம் வேண்டி, ஒரு மிகப் பெரிய
தொகையை உண்டியலில் காணிக்கையாகச் செலுத்தினான்.
அவன் திரும்பிச் செல்லும் போது, தவறுதலாகத்
தனது பணப்பையைத் தவற விட்டுச் சென்றான். இதைக்
கருவறையில் கடவுள் வேடத்தில் நின்று கொண்டிருக்கும்
பணியாளர் பார்த்தார். ஆனால், இறைவன்
நிபந்தனை ஞாபகத்துக்கு வர பேசாமலிருந்தார்.
அப்படியே அசையாது நின்றார்.சிறிது நேரம்


கழித்து ஒரு பரம ஏழை அங்கு வந்தான். அவனிடம்
உண்டியலில் போட ஒரே ஒரு ரூபாய் மட்டுமே இருந்தது.
அவன், “என்னால் இது மட்டும் தான் உனக்கு தர
முடிந்தது. என்னை மன்னித்துவிடு இறைவா. என்றும் போல,
என்னை ஆசிர்வதிக்க வேண்டும். எனக்கும் என்
குடும்பத்தினருக்கும் அடிப்படைத் தேவைகளுக்குக் கூட
மிகக் கஷ்டமாக இருக்கிறது. என்னுடையப்


பிரச்சனைகளை எல்லாம் உன்னிடமே விட்டுவிடுகிறேன்.
நீயே எனக்கு ஒரு நல்ல வழியைச் செய்”
என்று மனமுருகக் கண்களை மூடி நம்பிக்கையுடன்
வேண்டினான்.சில வினாடிகள் கழித்துக் கண்களைத்
திறந்தவனுக்கு எதிரே, அந்த செல்வந்தன் தவற விட்ட
பணப்பை கண்ணில் பட்டது. அதனுள்ளே பணம்
மட்டுமில்லை, தங்கக் காசுகளும் வைரங்களும் கூட
இருந்தன. இறைவன் தனக்கே தன் பிரார்த்தனைக்கு
செவிமெடுத்து அதை அளித்திருக்கிறான் என்றெண்ணி

,
அப்பாவித்தனமாக அதை எடுத்துக் கொள்கிறான். இறைவன்
வேடத்தில் நின்று கொண்டிருந்த, அந்தப் பணியாளரால்
தற்போதும் எதுவும் சொல்ல முடியவில்லை.
அதே புன்சிரிப்புடன் நின்றுகொண்டிருந்தார்.சிறிது நேரம்
கழித்து, ஒரு கப்பல் வியாபாரி வந்தான். ஒரு நீண்ட
தூரப் பயணமாக கப்பலில் அன்று அவன்
செல்லவிருப்பதால், இறைவனைத் தரிசித்து ஆசி பெற
வேண்டி வந்தான். இறைவனிடம்
பிரார்த்தனை செய்தான்.அந்த நேரம் பார்த்து, பணப் பையைத்


தொலைத்த செல்வந்தன், காவலர்களுடன் திரும்பக்
கோவிலுக்கு வந்தான். அங்கு, கப்பல்
வியாபாரி பிரார்த்தனை செய்வதை பார்த்து, “இவர் தான் என்
பணப்பையை எடுத்திருக்க வேண்டும். இவரைப்
பிடித்து விசாரியுங்கள்” என்று காவலர்களிடம் கூற,
காவலர்களும் அந்தக் கப்பல் வியாபாரியைப் பிடித்துச்
செல்கிறார்கள்.“இறைவா என்
பணத்தை அபகரித்தவரை அடையாளம்


காட்டியமைக்கு நன்றி!” என்று அந்த செல்வந்தன்
இறைவனைப் பார்த்து நன்றி கூறிவிட்டு சென்றார்.சிலையாக
நின்ற பணியாளர் இறைவனை நினைத்தபடி,
“கடவுளே இது நியாயமா? அப்பாவி ஒருவன்
தண்டிக்கப்படலாமா? இனியும் என்னால் சும்மாயிருக்க
முடியாது…” என்று கூறி, “கப்பல் வியாபாரி திருடவில்லை.
தவறு அவர் மீது இல்லை!” என்றபடி நடந்த
உண்மைகளை அனைவரிடமும் சொல்கிறார்.உடனே,
செல்வந்தரும், கப்பல் வியாபாரி இருவரும் நெகிழ்ந்து போய்,
உண்மையைக் கூறியமைக்கு இறைவனிடம்


நன்றி சொல்லிவிட்டு செல்கின்றனர். இரவு வருகிறது.
கோவில் வாசல் மூடப்படுகிறது.இறைவன் வருகிறார்.
மூலஸ்தானத்தில் நின்று கொண்டிருந்த பணியாளரிடம்,
இன்றைய பொழுது எப்படியிருந்தது? என்று கேட்டார்.
“மிகவும் கடினமாக இருந்தது. உன்
வேலை எத்தனை கஷ்டம் என்பதை புரிந்துகொண்டேன்.
ஆனால் ஒரு நல்ல செயல் செய்தேன்….”
என்று காலை கோவிலில் நடந்ததைக் கூறினார்.இறைவனோ
இதைக் கேட்டவுடன் அதிருப்தியடைந்தார். இறைவன்
அதிருப்தியைப் பார்த்த பணியாளர் பதற்றமானான்.இறை
வன், “நாம் ஏற்படுத்திக்கொண்ட ஒப்பந்தப்படி நீ
ஏன் நடந்துகொள்ளவில்லை…? என்ன நடந்தாலும்
பேசக்கூடாது, அசையக்கூடாது என்ற என்
நிபந்தனைகளை நீ ஏன் மீறினாய்.? உனக்கு என்
மீது நம்பிக்கை இல்லை

.
இங்கு வருபவர்களது மனநிலையை அறியாதவனா நான்?
செல்வந்தன் அளித்த காணிக்கை, தவறான வழியில்
சம்பாதித்தது. அது அவனிடத்தில் மொத்தமாக உள்ள
செல்வத்தில் ஒரு சிறு துளி தான். ஒரு துளியை எனக்குக்
காணிக்கையாகச் செலுத்திவிட்டு, நான்
பதிலுக்கு அவனுக்கு எண்ணற்றவைகளைத்
தரவேண்டும் என்று அவன் எதிர்பார்க்கிறான். ஆனால்
அந்த ஏழை கொடுத்ததோ அவனிடம் எஞ்சியிருந்த இருந்த
ஒரே ஒரு ரூபாய் தான். இருப்பினும் என்
மீது முழு நம்பிக்கை வைத்து என்னை வணங்க
வந்தான். அன்போடு அதைக் கொடுத்தான். இந்தச்
சம்பவத்தில், கப்பல் வியாபாரியின் தவறு எதுவும்
இல்லை. இருந்தாலும், இன்றைக்கு அவன்


திட்டமிட்டபடி கப்பல் பயணம் செய்தால், விபத்தைச்
சந்திக்க நேரிடும். புயலில் தாக்குண்டு அவனும் அவன்
கப்பலும் காணாமல் போயிருப்பார்கள்.
அதிலிருந்து அவனைக் காக்கவே அவனைத்
தற்காலிகமாகத்திருட்டுப் பட்டம் சுமக்கச்
செய்து சிறைக்கு அனுப்ப நினைத்தேன். அந்த
ஏழைக்கு அந்த பணமுடிப்பு போய்
சேரவேண்டியது சரி தான். அவன் அதை நான் கொடுத்ததாக
எண்ணிப் போற்றுவான். இதன் மூலம் அந்த
செல்வந்தனின் கர்மா ஓரளவாவது குறைக்கப்படும்.
அவன் பாவப் பலன்கள் துளியாவது குறையும்.
இப்படி ஒரே நேரத்தில் அனைவரையும் நான் ஆசிர்வாதம்
செய்ய நினைத்தேன். ஆனால், நீயோ என்
எண்ணங்கள் எல்லாம் உனக்கு தெரியுமென்று நினைத்து,
உன் எண்ணங்களை செயல்படுத்தி அனைத்தையும்
பாழ்படுத்திவிட்டாய்.” என்றான்.பணியாளர், இறைவனின்
கால்களில் விழுந்து தன்


தவறுக்கு மன்னிக்கும்படி வேண்டினான்.“இப்
போது புரிந்துகொள். நான் செய்யும் அனைத்திற்கும்
ஒரு காரணம் இருக்கும். அது ஒவ்வொன்றையும்
மனிதர்களால் புரிந்து கொள்ள முடியாது. அவர்களின்
நலம் வேண்டியே நான் ஒவ்வொரு பொழுதையும் கழிக்கிறேன்.
அவரவரது கர்மாவின் படி பலன்களை அளிக்கிறேன்.
நான் கொடுப்பதிலும் கருணை இருக்கிறது. கொடுக்க
மறுப்பதிலும் கருணை இருக்கிறது” என்றான.


சிவ_தனுசு..

சிவ_தனுசு..

ஓம் சிவசிவ ஓம்*
சிவ_தனுசு...
சிவபெருமானிடம் கோடிக் கணக்கான தனுசுகள் அதாவது வில்கள் உண்டு. இவை அனைத்தையுமே சிவ தனுசு என்றே கூறுகின்றோம்.
மக்களின் சிற்றறிவுக்குத் தெரிந்த வரை சிவபெருமான் தன்னிடம் உள்ள மூன்று சிவதனுசுகளைச் சிவப் பிரசாதமாகப் பல்வேறு சந்தர்ப்பங்களில் அளித்துள்ளார்.
இதில் ஒன்று ராவணனுடைய தவத்தை மெச்சி அவனுக்கு அளிக்கப்பட்டது.
சிவபெருமாளே வழங்கிய வில் என்றால் அதன் மகிமை எப்படிப்பட்டதாக இருக்கும் என்பது சொல்லாமலே விளங்கும் அல்லவா? சிவ தனுசுவை வைத்திருக்கும் ஒருவனை எந்த உலகத்திலும் யாராலும் வெல்ல முடியாது.
ஆனால், இந்த வில்லை முறையாகப் பயன்படுத்தும் வரை தான் அது சிவப் பிரசாதமாக இருக்கும். அதைத் தவறாகப் பயன் படுத்தினால் அது தன் சக்தியை இழந்து விடும்.
இதை பூரணமாக உணர்ந்தவன் தான் இராவணன், ஆனால், தான் என்ற அகங்காரம் காரணமாக சிவ வாக்கை மறந்து எல்லா லோகங்களுக்கும் சென்று அனைத்து லோகங்களையும் வென்று தேவர்கள், கந்தர்வர்கள் என அனைவரையும் வென்றான்.
நவகிரக லோகங்களுக்கும் சென்று எல்லா நவகிரகங்களையும் தன் அடிமையாக்கி தன் சிம்மாசனப் படிகளாக்கி அவர்களை அவ மானப்படுத்தினான். இத்தகைய அதர்மமான செயல்களால் சிவ தனுசுவின் சக்தி சிறிது சிறிதாகக் குறையத் தொடங்கியது.
அனைத்து லோகங்களையும் வென்ற இராவணன் கடைசியில் பிரம்ம லோகத்திற்கும் சென்றான். பிரம்மாவையும் வென்று தன் அடிமையாக்க வேண்டும் என்பது அவன் விருப்பம்.
பிரம்ம லோகம் சென்ற ராவணனுக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. இராவணனின் தவறான செய்கைகளால் தன் சக்தியைக் கொஞ்சம் கொஞ்சமாக இழந்து வந்த சிவ தனுசு இராவணன் பிரம்ம லோகத்தை அடைந்தவுடன் முழுதுமாகத் தன் சக்தியை இழந்து விட்டது.
இதைச் சற்றும் எதிர் பாராத இராவணன் செய்வ தறியாது திகைத்தான். பிரம்ம லோகத்தை ஆளும் பிரம்மாவை எதிர்க்க முடியாமல் வெட்கம் அடைந்து தலை குனிந்தான் இராவணன். தன் செய்கையால் தனக்கு ஏற்பட்ட அவமானத்தை நினைந்து வருந்தி உடனடியாகத் தன் சொந்த அரக்க லோகத்திற்கு வெறுங்கையுடன் திரும்பி விட்டான்.
இனி சிவ தனுசால் என்ன பயன் என்று எண்ணி அதைத் தூக்கி எறிந்து விட்டான். இதைப் பார்த்தார் ஜனக மகாராஜா. சிவ பிரசாதம் என்றுமே சிவப் பிரசாதம் அல்லவா? இதை இராவணன் அறியவில்லையே என்று வருந்தி அந்த சிவ தனுசுவை தான் எடுத்து வைத்துக் கொண்டு அதற்கு தினமும் எல்லா விதாமன அபிஷேக ஆராதனைகளையும் பூஜைகளையும் பன்னெடுங் காலமாக ஆற்றி வந்தார் ஜனக மகாராஜா.
காலச் சக்கரம் சுழன்றது…
குழந்தை பாக்கியம் இல்லாததால் சீதையைப் பூமியில் கண்டெடுத்து தன் மகளாக ஜனகர் வளர்த்து வந்தார் அல்லவா? சீதை சிறுமியாக இருக்கும் போது ஒரு நாள் தன் தோழிகளுடன் பூப்பந்து விளையாடிக் கொண்டிருந்தாள். அப்போது அந்தப் பந்து உருண்டு போய் சிவ தனுசுவின் கீழ் மறைந்து விட்டது. பந்தைத் தேடி வந்த சீதை தன் இடது கையால் சிவ தனுசுவைச் சாதாணமாக தூக்கிப் பிடித்துக் கொண்டு வலது கையால் பந்தை எடுத்துக் கொண்டு ஓடி விட்டாள்.
இந்தக் காட்சியைக் கண்ட ஜனக மகராஜாவுக்கு ஒரே ஆச்சரியம். ஏனென்றால் அந்த சிவ தனுசுவை 10,000 வீர மல்லர்கள் சேர்ந்தால் தான் நகர்த்தவே முடியும். ஆனால், இந்தக் குழந்தை அலட்சியமாக இடது கையால் தூக்கி விட்டதே. அவரால் தன் கண்களையே நம்ப முடியவில்லை. அதே சமயத்தில் இன்னொரு வருத்தமும் அவருக்கு எற்பட்டது.
இந்தப் பராக்கிரமம் பொருந்திய கன்னியை எவருக்கு மணம் முடிப்பது? இவளுக்கே இவ்வளவு ஆன்மீக பலம் இருந்தால் இந்தச் சிறுமியை மணக்கும் வீரன் எத்தகைய பராக்கிரமசாலியாக இருக்க வேண்டும்? உண்மையில் அப்படி ஒருவன் ஈரேழு உலகத்திலும் இருக்கிறானா என்பதே சந்தேகம். இருந்தாலும் எப்படி, எங்கே அவனைத் தேடுவது? இப்படி பல்வேறு சிந்தனைகளிடையே உழன்றார் ஜனக மகாராஜா.
மகளுக்கு திருமண வயது வந்தவுடன் தகுந்த மணவாளணைத் தேர்ந்தெடுப்பது என்று ஆலோசித்தார். ஒவ்வொருவரும் தங்களுக்குத் தோன்றிய அற்புதமான யோசனைகளையெல்லாம் கூறினர்.
இறுதியில் சிவ தனுசுவை நாணேற்றி உடைப்பவருக்கே சீதா தேவி மனைவி ஆவாள் என்று அறிவித்தார். அதன் பிறகு நடந்தவைகள் உங்களுக்கு நன்றாக தெரியும். ஸ்ரீராமர் சிவதனுசை நாணேற்றி உடைத்து விட்டார். அதன் பிறகு அவருக்கு திருமணம் நடந்தது.
அதற்குப் பின் முறிந்த சிவ தனுசு என்னவாயிற்று? என்பதனைப் பற்றி பார்ப்போம்.
நாம் நினைப்பது போல சிவ தனுசு என்பது சண்டைக்காகப் பயன்படுத்தக் கூடிய ஒரு வில் மட்டுமன்று. சிவ தனுசு சிவபெருமானுடைய திரண்ட சக்தியின் ஒரு கூறு. சிவ தனுசில் ஆயிரக் கணக்கான தனுர் வேத தேவதைகளும் தெய்வங்களும் ரிஷிகளும் முனிவர்களும் வாசம் செய்தனர்.
தனுசு முறிந்ததால் அனைத்து தெய்வ சக்திகளும் வெளிவந்து தாங்கள் எங்குச் செல்வது என்று தெரியாமல் திகைத்தன. எல்லோரும் ஜனக மகாராஜாவை வணங்கி, சுவாமி, பன்னெடுங் காலமாக நாங்கள் இந்த சிவ தனுசிலே குடி கொண்டுள்ளோம்.
இப்போது இந்தத் தனுசு முறிந்து விட்டால் நாங்கள் எங்கே செல்வது? எங்களுக்கு சாத்வீகமாக எதிலும் ஈடுபட முடியாது. தனுர் வேதத்தில் இலயித்துள்ள எங்களுக்கு வீரம், சண்டை இவற்றில் தான் மனம் ஈடுபடும். எனவே, தாங்களுக்கு எங்கள் மார்கத்திலேயே ஒரு நல்ல வழியைக் கூற வேண்டும், என்றவுடன் ஜனகர் ஆழ்ந்த சிந்தனையில் ஆழ்ந்தார்.
பின்னர் சிவ தனுசிலிருந்து வெளி வந்த எல்லா தேவ, தெய்வ சக்திகளையும் 1008 அஸ்திரங்களில் ஆவாஹணம் செய்தார். அந்த 1008 அம்புகளையும் ராமபிரானுக்கே வெற்றிப் பரிசாக அளித்து விட்டார். அந்த தனுர் வேத சக்திகளும் ராமபிரானுடைய அம்பாரத் துணியிலேயே குடி கொண்டு ராமருக்கு உறுதுணையாக நின்றன.
இலங்கையில் ராவணனுக்கு எதிராக நடந்த யுத்தத்தில் இராவணனின் உடலைத் துளைத்து அவனைப் பரலோகத்திற்கு அனுப்பியதும் இந்த 1008 அஸ்திர சக்திகளே. இராவணன் சிவ தனுசை முறையாகப் பயன்படுத்தாது யாரை எல்லாம் அதர்மமாகத் துன்புறத்தினானோ அவர்களுடைய சாபங்களே சிவ தனுசு அஸ்திரங்களாக மாறி அவன் உயிரைக் கவர்ந்தன.
உண்மையில் இராமர் இராவணனைக் கொல்ல வில்லை. இராவணனுடைய தீவினைகளே அவன் உயிரைக் கவர்ந்தன. தன் வினை தன்னைச் சுடும் என்று முதுமொழிக்கு நிரூபணமாக நின்றதும் சிவ தனுசே.
*சிவ சிவ சிவ ... ராம ராம ராம ஹரே ராம்*..

நாம் தவிர்க்க வேண்டிய 8 மன விஷங்கள்!

 நாம் தவிர்க்க வேண்டிய 8 மன விஷங்கள்! நமது மன அமைதியையும் மகிழ்ச்சியையும் நாமே அறியாமல் அழிக்கும் 8 நச்சு எண்ணங்கள் என்னென்ன என்று தெரிந்துக...