ஸ்ரீஆனந்தாய்பேச்சியம்மன்

Sunday, 22 April 2018

அன்னை_மகாலட்சுமி_பற்றிய100 #தகவல்கள்!

அன்னை_மகாலட்சுமி_பற்றிய     100       தகவல்கள்!

 1. மகாலட்சுமி தாமரைப் பூவில் வாசம் செய்பவள். சித்தி, புத்தி, போகம், முக்தி தருபவள்.
2. மகாலட்சுமிக்கு ஈஸ்வரி, ஹரண்யமயி, ஹரிணி, சூர்யா, பிங்களா, புஷ்கரிணி, சந்திரா என்ற பெயர்களும் உண்டு.
3. லட்சுமிக்கு பிரியமான பூ செவ்வந்தி எனப்படும் சாமந்திப்பூ.
4. நெல்லிமரத்தில் மகாலட்சுமி வாசம் செய்வதால் துவாதசியன்று நெல்லிக்கனியை உணவில் சேர்த்துக் கொண்டால் ஏகாதசி விரதத்தின் பலன் கிடைக்கும்.
5. ஆதி சங்கரருக்கு துவாதசியன்று நெல்லிக்கனி தானம் செய்த பெண்மணிக்கு அவர் கனகதாரா ஸ்தோத்திரம் பாடி லட்சுமி அருளால் பெருஞ்செல்வம் கிடைக்கச் செய்தார்.
6. மகாலட்சுமி வில்வ மரத்தில் இருப்பதால் மாதப்பிறப்பு, அமாவாசை, பவுர்ணமி, சதுர்த்தி, அஷ்டமி, நவமி, திங்கட்கிழமை ஆகிய நாட்களில் வில்வத்தை மரத்திலிருந்து பறிக்கக் கூடாது.
7.பசுவின் பின்புறத்தில் மகாலட்சுமி வாசம் செய்கிறாள். இதனால் கோவில்களில் காலையில் கோபூஜை செய்தபின் தரிசனம் ஆரம்பமாகிறது.
8. மகாவிஷ்ணுவிற்குப் பிடித்த துளசி லட்சுமியின் அம்சம் ஆகும். வீட்டில் துளசி மாடம் வைத்து தினமும் அதை சுற்றி வந்து வழிபட்டு வந்தால் எல்லாச் செல்வங்களும் கிடைக்கும்.
9. வாழை, மாவிலை, எலுமிச்சம்பழம் ஆகியவைகளிலும் மகாலட்சுமி வாசம் செய்கிறாள். அதனால்தான் சுபகாரியங்களில் இவை பயன்படுத்தப்படுகின்றன.
10. தலைமுடியின் முன் வகிட்டில் மகாலட்சுமி வாசம் செய்வதால் திருமணமான பெண்கள் முன்வகிட்டில் குங்குமம் இட்டுக் கொள்கின்றனர்.
11. தீபாவளியன்று அதிகாலை மட்டும் மகாலட்சுமி நல்லெண்ணையில் வாசம் செய்கிறாள்.
12. யானையின் முகத்திலும் குதிரையின் முகத்திலும் லட்சுமி வாசம் செய்கிறாள்.
13. ஸ்ரீவைஷ்ணவத்தை நிலை நாட்டிய வேதாந்த தேசிகர் ஸ்ரீஸ்துதி என்னும் ஸ்தோத்திரத்தில் ஸ்ரீமகாலட்சுமியை மங்களத்துக்கெல்லாம் மங்களமானவள் என்று புகழ்ந்து பாடுகிறார்.
14. ஒரு பக்தனுக்கு பகவானின் அனுக்ரகம் வேண்டும் என்றால் புருஷகார பூதையான மகாலட்சுமியை முதலில் சரணடைய வேண்டும்.
15. நம்மாழ்வார் அகலகில்லேன் இறையும் என்று அலர்மேல் மங்கை உறை மார்பா என்று கணப்பொழுதுகூட பிரியாது மகாவிஷ்ணுவுடன் கூடி இருக்கும் மகாலட்சுமியை சரணடைவதே உயர்ந்தது என்று கூறியுள்ளார்.
16. திருமழிசையாழ்வாருக்கு குழந்தைப் பருவத்தில் ஞானப்பால் ஊட்டியது மகாலட்சுமியே.
17. குபேரனிடம் செல்வம் இருந்தாலும் அத்துடன் புகழ், ஆரோக்கியம், நல்வாழ்வு போன்ற பல செல்வங்களை உரியவர்களுக்கு வாரி வழங்குபவள் ஸ்ரீ மகாலட்சுமியே.
18. மகாவிஷ்ணுவுடன் இருக்கும் பொழுது லட்சுமிக்கு இரண்டு கரங்கள். ஆனால் தனியாக சன்னதியிலோ அல்லது தனிக் கோவிவிலோ நான்கு கரங்கள் கொண்டவள். முன் இரு கரங்கள் அபய வரத ஹஸ்தங்கள். பின் இரண்டு கரங்களில் தாமரை மலர் ஏந்தி இருப்பாள்.
19. வீரம் உடையவர்கள், சோம்பல் இல்லாமல் சுறுசுறுப்பாக இருப்பவர்கள், தவம் உடையவர்கள், ஈகை குணம் கொண்டவர்கள் செல்வத்தை நன்குஅனு பவிப்பவர்கள் ஆகியவர்களை நான் அடைகிறேன் என்கிறாள் மகாலட்சுமி.
20. மகாலட்சுமி ஓரிடத்தில் நிலைக்க மாட்டாள். அதனால் சஞ்சலா, சபலா என்ற பெயர்களும் அவளுக்கு உண்டு.
21. லட்சுமி பிரம்மனுடன் பிறந்தவள். இருவர் நிறமும் செம்பொன் நிறமாகும்.
22. லட்சுமிக்கு உலூகம் எனப்படும் ஆந்தை ஒரு வாகனம். மேற்கு வங்கத்தில் லட்சுமி பூஜையின்போது ஆந்தையை வழிபடுவது வழக்கம்.
23. மகாலட்சுமியின் பரிபூரண அருளைப் பெற்றது சுக்கிர வாரம் எனப்படும் வெள்ளிக்கிழமை. சுக்கிரனின் அதிதேவதை மகாலட்சுமி. எனவே வெள்ளிக்கிழமைகளில் சூரியன் உதயமான இரண்டு மணி நேரத்திற்குள் பூஜிப்பது. தரிசனம் செய்வது ஆகியவை மகாலட்சுமியின் அருள் பெற உதவும்.
24. லட்சுமிக்கு ஏற்ற நாள் வியாழக்கிழமை மாலை குபேர காலம் எனப்படுகிறது. பவுர்ணமியில் வரும் வியாழன் சிறப்பு. வளர்பிறை பஞ்சமி, வெள்ளியன்று வரும் அஷ்டமியும் சிறந்தது.
25. லட்சுமியின் திருக்கரங்கள் ஸ்வர்ண ஹஸ்தம் எனப்படுகிறது. எல்லா லட்சுமிகளும் அபய வரத ஹஸ்தத்துடன் அருள்புரிகின்றார்கள்.
26. லட்சுமியின் பெருமையை ஸ்ரீசூக்தம், ஸ்ரீசுதுதி, கனகதாரா ஸ்தோத்திரம், மகாலட்சுமி அஷ்டகம், அஷ்டோத்திர சதநாமாவளி ஸ்தோத்திரம் போன்றவை விளக்குகின்றன.
27. வரலட்சுமி விரதம் இருக்கும் பெண்களுக்கு அஷ்டபோக பாக்கியங்களும் கிடைக்கும்.
28. லட்சுமி செல்வத்தின் அதிபதி. தீபாவளி அன்று லட்சுமி பூஜை செய்வதால் செல்வம் இரட்டிப்பாக பெருகும்.
29. புதுக்கணக்கு எழுதுபவர்கள் தீபாவளி அன்று லட்சுமி பூஜை செய்து விட்டு நோட்டுப் புத்தகங்களின் மீது சந்தனம், மஞ்சள், குங்குமம் வைத்து மலர்தூவி பூஜை செய்து பிறகு வியாபாரத்தை ஆரம்பிப்பார்கள்.
30. வருத்தத்தால் மகாவிஷ்ணுவைப் பிரிந்த மகாலட்சுமி விஷ்ணுவை திரும்பவும் சேர்ந்த இடம் ஸ்ரீவாஞ்சியம் என்ற தலம். நன்னிலத்திற்கு அருகில் உள்ளது. ஸ்ரீ என்றும், திரு என்றும் அழைக்கப்படும் மகாலட்சுமியை விஷ்ணு வாஞ்சையால் விரும்பி சேர்ந்த இடம் இத்தலம் என்பதால் இத்தலத்திற்கு ஸ்ரீவாஞ்சியம் (திருவாஞ்சியம்) என்ற பெயர் ஏற்பட்டது.
31. மகாலட்சுமியை நவராத்திரி நேரத்தில் வணங்க சகல நன்மை கிடைக்கும்.
32. அதிகாலையிலும், மாலையிலும் வீட்டில் பெண்கள் விளக்கேற்றி வைத்து லட்சுமியை வரவேற்க லட்சுமி சுலோகங்கள், அஷ்டகம் போன்றவற்றைச் சொல்லிக் கொண்டிருந்தால் லட்சுமியின் அருள் கிடைக்கும்.
33. இந்திரன் மகாலட்சுமியை 4 பாகங்களாக நிலை பெறச் செய்தான். அவை பூமி, அக்னி, நீர் மற்றும் உண்மை பேசும் மனிதர்கள். இந்த இடங்களில் மகாலட்சுமி நிலையாக இருப்பாள்.
34. கோமாதா (பசு)வை தெய்வமாக மகாலட்சுமியின் அம்சமாகக் கருதி பூஜை செய்வது நம் நாட்டில் உள்ள பழக்கம். பசுவின் பின்புறம் மகாலட்சுமி வசிக்கிறாள் என்பதால் அதிகாலையில் பசுவின் பின்புறத்தைத் தொட்டுக் கண்களில் ஒற்றிக் கொள்ள வேண்டும்.
35. லட்சுமிக்கு முன் தோன்றியவள் மூதேவி. லட்சுமிக்குப் பிறகு பிறந்தவள் வாருணி. இவள் மது போன்ற மயக்கம் தரும் வஸ்துக்களுக்கு தேவதை.
36. லட்சுமியின் திருக்குமாரர்கள் கர்தமர், சிக்லீதர்.
37.மகாலட்சுமியை நாராயணன் திருப்பாற்கடலில் சித்திரை, தை, புரட்டாசி மாதங்களில் பூஜிக்கிறார்.
38.பிரம்ம தேவன் மகாலட்சுமியை புரட்டாசி மாத சுக்லாஷ்டமியில் பூஜிக்கிறார்.
39.மனுதேவன் மகாலட்சுமியை வருஷ முடிவிலும், தை, மாசில மாத சங்கராந்தியிலும் பூஜிக்கிறார்.
40.தேவேந்திரன் மகாலட்சுமியை பூஜித்து அஷ்ட ஐஸ்வர்யங்களையும், ஐராவத்தையும், அமராவதி பட்டணத்தையும் பெற்றார்.
41. செல்வத்தை ஒருவருக்கு வாரி வழங்கும் தெய்வம் மகாலட்சுமி. அவளது அருள் இருந்தால் ஒரே நாளில் குபேரன் ஆகிவிடலாம்.
42. பூரணகும்பம், மஞ்சள், குங்குமம், திருமண் சூர்ணம், கோலம், சந்தனம், வாழை, மாவிலை தோரணம், வெற்றிலை, திருவிளக்கு, யானை, பசு, கண்ணாடி, உள்ளங்கை, தீபம் ஆகிய மங்கள பொருட்களில் மகாலட்சுமி நித்தியவாசம் புரிகிறாள்.
43. வில்வ மரம், நெல்லி மரம், துளசி, மஞ்சள் செடிகளிலும் மகாலட்சுமி வாசம் செய்கிறாள்.
44. லட்சுமியை வில்வத்தால் அர்ச்சனை செய்து பூஜிக்கலாம்.
45. மகாலட்சுமியை சாமந்திப்பூ, தாழம்பூ இலைகளாலும் அர்ச்சிக்கலாம்.
46. வில்வமரத்தை வலம் வருவது மகாலட்சுமியை வலம் வருவதற்கு சமமாகும்.
47. வாமன புராணத்தில் மகாலட்சுமியின் திருக்கரங்களில் இருந்து வில்வ விருட்சம் தோன்றியது என்று கூறப்பட்டுள்ளது.
48. வில்வ மர முட்கள் சக்தி வடிவம், கிளைகள் வேதம், வேர்கள் 14 கோடி ருத்ரர்கள் என்று கருதப்படுகிறது. இவ்வளவு சிறப்பு கொண்ட வில்வ மரமே மகாலட்சுமி சொரூபமாக விளங்குகிறது.
49. நெல்லிக்கனி இருக்கும் இல்லத்தில் மகாலட்சுமி நிரந்தரமாக வாசம் புரிகிறாள் என்பது ஐதீகம்.
50. துளசி செடியிலும் மகாலட்சுமி எழுந்தருளி வாசம் செய்கிறாள். இதேபோல் மஞ்சளிலும் இருக்கிறாள். அதனால் துளசி செடியுடன் மஞ்சள் செடியையும் சேர்த்து நம் வீட்டில் வளர்ப்பது நல்லது
51. ஸ்ரீ மகாலட்சுமிக்கு இரண்டு ரூபங்கள் உண்டு. ஒன்று ஸ்ரீதேவி என்ற லட்சுமி. மற்றொன்று பூதேவி என்ற பூமிதேவி வடிவம்.
52. லட்சுமிதேவி, வைகுண்டத்தில் ரமாதேவி, சொர்க்கத்தில் சொர்க்கலட்சுமி, பாதாள உலகில் நாகலட்சுமியாக இருக்கிறாள். அவள் ராஜாக்களிடம் ராஜ லட்சுமியாகவும் விளங்குகின்றாள். விலங்குகளிடத்தில் சோம லட்சுமியாகவும், புண்ணியவான்களிடம் ப்ரீதிலட்சுமியாகவும் வேதாந்திகளிடம் தயாலட்சுமியாகவும் இருக்கிறாள்.
53. திருமால் கோவில்களில் பகவானுடைய மார்பில் உள்ள லட்சுமிக்கு யோகலட்சுமி என்றும், இருபக்கமும் உள்ள தாயாருக்கு போகலட்சுமி என்றும், தனிச்சன்னதியில் அருள்புரிபவளுக்கு வீரலட்சுமி என்றும் பெயர்.
54. லட்சுமி மாதுளம் கனியிலிருந்து உதித்ததால் மாதுளங்கி என்றும், பத்மாசனால் வளர்க்கப்பட்டதால் பத்மா என்றும், அக்னி குண்டத்தில் வாசம் செய்ததால் அக்னிகர்ப்பை என்றும், ரத்தின வடிவம் எடுத்ததால் ரத்தினாவதி என்றும், ஜனக மகாராஜனுக்கு மகளானதால் ஜானகி என்றும், பூமிக்குள்ளே கலப்பையின் நுனியிலிருந்து வெளியேற்றப்பட்டமையால் சீதை என்றும் பாற்கடலிலிருந்து தோன்றியதால் ஸ்ரீ என்றும் போற்றப்படுகிறாள்.
55. தீபாவளித் தினத்தன்று லட்சுமியை கொண்டாடுவதால் மகாலட்சுமியின் பேரருளைப் பரிபூரணமாக பெறலாம்.
56. சாஞ்சி ஸ்தூபத்தில், ஒரு கம்பத்திலும் சாரநாத் தோரணத்திலும், யானைகள் உடைய திருமகள் உருவங்களைக் காணலாம்.
57. பல்லவர் காலத்துச் சிற்பங்களில் கஜலட்சுமியை காண முடியும். கஜலட்சுமியின் உருவங்கள் இரண்டு மாமல்லபுரத்தில் உள்ளது.
58. திருக் குறுங்குடியில் கோபுர முகப்பின் நடுவில் அபூர்வமான செதுக்கு வேலைப்பாடு அமைந்த கஜலட்சுமியைப் பார்க்கலாம்.
59. சீல கிரந்தம் எனும் புத்த நூல் மகாலட்சுமி வழிபாட்டினை விளக்குகிறது.
60. கி.பி. முதல் இரண்டாம் நூற்றாண்டுகளைச் சேர்ந்த குஷானர்களின் சிற்ப ரீதியில் அமைந்த, செந்நிறக் கல்லால் ஆன, சற்றுச் சிதைந்த லட்சுமியின் உருவம் ஒன்று டில்லி காட்சிச் சாலையில் உள்ளது.
61. ஜைனர்கள் மகாலட்சுமியை ஜீவஜகத்தின் தென்புறத்துப் பாதியைக் காக்கும் தேவதைகளில் ஒருத்தியாகப் பாவிக்கின்றனர். தீபாவளியின்போது இவளை வழிபடுகின்றனர்.
62. மகாலட்சுமி வடிவங்கள் எவ்வாறு அமைய வேண்டுமென லட்சண கிரந்தங்கள் உள்ளன. அம்சுபேதாகமத்தின் படி, திருமகள் தாமரையில் வீற்றிருப்பாள்.
63. வராக அவதாரத்தில் திருமால் பூமியை தோண்டி விட்டுத் தம் சிரமத்தை மறந்திருக்கத் திருமகளைத் தம் தொடை மீது நிறுத்தி இன்பமடைகிறார். மாமல்லபுரத்தில் இவ்வமைப்புடைய சிலை உள்ளது.
64. பில்லர்கள் எனும் தொல்குடியினரின் தெய்வம் லட்சுமியே.
65. தென்னாட்டில் மாலர் என்ற வகுப்பினர் ஆறு கலயங்களை அடுக்கி அவற்றைத் திருமகளாகப் பாவித்துக் கும்பிடுகின்றனர்.
66. குஜராத்தில் லட்சுமி பூஜை ஒரு விசேஷ நிகழ்ச்சியாகும். அவர்கள் வழிபடும் லட்சுமியின் கையில் வீணை இருக்கும்.
67. மகாராஷ் டிரத்தில் உழவர்கள் லட்சுமியை பயிர் வளத்தைக் காட்டும் தேவதையாக கருதுகிறார்கள். ஒரு மரத்தின் கீழ் ஐந்து கற்களை நிறுத்தி அதற்கு மஞ்சள் குங்குமம் இட்டுக் கோதுமை மாப்படையல் சாத்துவர். மாலைப்பொழுது இளங்கதிர்களைக் கொய்து வீட்டுக்குக் கொண்டு வருவார்கள். அத்துடன் துணியில் மறைத்த ஒரு விளக்கினையும் ஏந்தி வருவர். அதுவே அவர்களுடைய லட்சுமி.
68. ராஜஸ்தானில் லட்சுமியை அன்னபூரணியாக வழிபடுகின்றனர். தானியம் அளக்கும் காரி என்ற மரக்காலை லட்சுமி வடிவமாக அமைத்துத் தாமரைப் பூக்களால் அலங்கரித்து அவர்கள் வழிபடுவது உண்டு.
69. இந்தோசீனாவிலும் திருமகளின் வழிபாடு உள்ளது. அவள், தலையில் முத்துக்கிரீடமும், கைகளில் வளையல்களும் அணிந்திருப்பாள். மேற்புறக் கைகளில் சங்கு சக்கரம் இருக்கும். நாகக்குடை பூண்டிருப்பாள். கல்லறைகள் மீது திருமகள் உருவைப் பொறிப்பது அந்நாட்டு வழக்கம்.
70. கோஜாகர பூர்ணிமை விரதம் வங்காளிகளிடையே நிலவும் லட்சுமி பூஜையாகும்.
71. லட்சுமி பூஜை செய்யும் போது, நம் வீட்டுக்கு வரும் விருந்தினர்களை நாம் எப்படி உற்சாகமாக வரவேற்போமோ, அதே மாதிரி வாசலில் நின்று லட்சுமியை பாவனை செய்து அழைக்க வேண்டும்.
72. வரலட்சுமி விரத பூஜை நடத்தப்படும் வீடுகளில் மகாலட்சுமி வாசம் செய்வாள்.
73. லட்சுமி வழிபாட்டால் நீண்ட ஆயுள், புகழ், செல்வம், உடல் நலம் உண்டாகும்.
74. வரலட்சுமி விரத பூஜை செய்தால் உடனடியாக திருமண யோகம் கைகூடும்.
75. எட்டு விதச் செல்வங்களை தருவதுடன் தாலிப் பாக்கியத்தையும் வரலட்சுமி வழங்குகிறாள். இதனால் தான் மணமான பெண்கள் மகாலட்சுமியை போற்ற வரலட்சுமி விரதத்தை மேற்கொள்ளுகின்றனர்.
76.மகாலட்சுமிக்கு உகந்தது நெய் விளக்காகும். சகலவித செல்வத்தையும் வீட்டில் நலனையும் தருவது நெய் விளக்கு வழிபாடுதான். எனவே இதை மறக்கக்கூடாது.77. பூஜை செய்யும் போது மகாலட்சுமிக்குரிய பாராயணப் பாடல்களை பாடித் தியானிக்கலாம்.
78. வரலட்சுமி நோன்பை கடைபிடித்தவர்கள் பெரும் பயனை அடைந்தார்கள் என்று பத்ம புராணம் கூறுகிறது.
79. வீடுகளில் லட்சுமி படம் வைத்து வெள்ளிக்கிழமைகளில் தூபம் காட்டி, தீபாராதனை செய்ய வேண்டும். உப்பு பாத்திரத்தில் உப்பு குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். எட்டுவித நல்லெண்ணை கலந்து காலையும் மாலையும் தீபம் ஏற்றினால் லட்சுமிக்கு மிகவும் பிடிக்கும்.
80. நாம் செய்யும் பாவ, புண்ணியந்த்துக்கு ஏற்பவே லட்சுமி நமக்கு செல்வத்தை வழங்குவாள்.
81. மகாலட்சுமி நித்திய சுமங்கலி என்று அழைக்கப்படுகிறாள். எனவே தான் அவளை நினைத்து பெண்கள் வரலட்சுமி விரதம் மேற் கொள்கிறார்கள்.
82. வரலட்சுமி விரதம் இருக்கும் பெண்களிடம் அஷ்ட லட்சுமி களும் மகிழ்ந்து அன்புடன் இருப்பார்கள் என்பது ஐதீகம்.
83. மகாலட்சுமி கணவரின் மார்பில் பொறுமையுடன் இருப்பவள். எனவே அவளுக்கு நன்றி தெரிவிக்கும் விரதமாக வரலட்சுமி விரதம் கருதப்படுகிறது.
84. மகாலட்சுமிக்கு மஞ்சள் நிறப்பட்டு என்றால் பிரியம் அதிகம்.
85.லட்சுமி, அனைவருக்கும் நன்மை தருபவள் என்று அதர்வன வேதத்தில் கூறப்பட்டுள்ளது.
86. வரலட்சுமி விரதம் இருக்கும் பெண்களுக்கு மாங்கல்ய பலம் நீடிப்பதோடு செல்வம், தைரியம், வெற்றி, அரசு பதவி, குழந்தைப் பேறு, கல்வி உள்ளிட்ட எல்லா வளங்களும் வந்து சேரும்.
87. வரலட்சுமி தினத்தன்று அன்னம், பருப்பு, வடை, பாயசம், கொழுக்கட்டை, அப்பம், இட்லி முதலியவற்றுடன் பழவகைகளை நைவேத்தியம் செய்ய வேண்டும்.
88. வரலட்சுமி பூஜைக்கு கொழுக்கட்டை நைவேத்தியமே பிரதானமானது.
89. வரலட்சுமி பூஜையின் போது அருகம்புல்லை தூவி வழி பட்டால் கூடுதல் பலன்கள் கிடைக்கும்.
90. வரலட்சுமி பூஜைக்கு பயன்படுத்தும் கும்பத்தை பிறகு பத்திரப்படுத்தி, சுத்தமான இடத்தில் வைத்துக் கொள்ளலாம். வேறு பூஜைகள் நடத்தும் போது அதை பயன்படுத்தலாம்.
91. வரலட்சுமி பூஜைக்கு பயன் படுத்தும் கும்பம் எதிர்பாராத விதமாக நெளிந்து விட்டாலோ, சேதம் அடைந்து விட்டாலோ, வீட்டில் வைத்துக் கொள்ளக்கூடாது. தானமாக கொடுத்து விட வேண்டும்.
92. வரலட்சுமி பூஜையின் போது சந்தனத்தில் லட்சுமி செய்து வழி படலாம். ஆனால் மறுநாள் அதை நீர் நிலைகளில் கரைத்து விட வேண்டும்.
93. வரலட்சுமி தினத்தன்று புண்ணிய நதிகளில் நீராடலாம். இது ஓராண்டு லட்சுமி வழிபாட்டுக்குரிய பலன்களை நமக்குத் தரும்.
94. வரலட்சுமி பூஜை தினத்தன்று 3 தடவை அம்மனை வணங் கினால் நல்லது.
95. வரலட்சுமியை எந்த அளவுக்கு தாமரை மலர்களால் அலங்கரித்து வழிபாடு செய்கிறோமோ, அந்த அளவுக்கு புண்ணியம் சேரும்.
96. சித்ரநேமி என்ற கணதேவதை வரலட்சுமி விரதத்தை அனுஷ்டித்து தன்னுடைய குஷ்ட ரோகம் நீங்கப் பெற்றாள்.
97. பார்வதி தேவி ஸத்புத்திர லாபத்திற்காக வரலட்சுமி விரதத்தை அனுஷ்டித்து சண்முகனைப்பெற்றாள்.
98. விக்ரமாதித்தன் இந்த விரதத்தை அனுஷ்டித்து இழந்த ராஜ்ஜியத்தை திரும்பப்பெற்றான்.
99. நந்தன் இந்த விரதத்தை கடை பிடித்து அழகிய மனைவியை அடைந்தான்.
100. லட்சுமி, வழிபாட்டின் போது மறக்காமல் அஷ்டலட்சுமி ஸ்தோத்திரம் சொல்வது மிகவும் நல்லது.
at April 22, 2018 No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest

இந்த நிலை மாறும்…

இந்த நிலை மாறும்…

முடிவெடுக்கும் முன்னே ஒரு அழகான கதை…
ஒரு நாட்டின் ராஜாவுக்கு ஒருநாள் சிந்தனை ஒன்றுத் தோன்றியது , அதாவது தனது வாழ்வில் துன்பத்தினால் இறுதியை அடைந்த ஒருவனுக்கு , அவனைக் காப்பாற்றக் கூடிய ஒரு மந்திரம் எதுவாக இருக்கும் ? என்பதே அந்த சிந்தனை .
மன்னனும் எவ்வளவோ முயன்றும் அப்படி ஒரு மந்திரம் என்னவென்றுத் தெரியவில்லை , உடனே நாட்டு மக்களுக்கு பறையறிவிக்கச் சொன்னான்.
“ வாழ்வின் துன்பத்தில் சிக்கி இறுதி நாளில் இருக்கும் ஒருவனை காப்பற்றக் கூடிய மந்திரத்தினை” சொல்பவருக்கு தனது நாட்டில் ஒரு பகுதியைத் தருவதாக அறிவித்தான் .
நிறைய பேர் தினமும் வரத் துவங்கினார்கள் .
ஒவ்வொருவரும் ஒவ்வொரு மந்திரங்களைச் சொன்னார்கள் .
நமசிவாய என்றார் ஒருவர் .
ஓம் சக்தி என்றார் மற்றவர் .
உன்னையே நம்பு என்றார் இன்னொருவர்.
ஆனால் மன்னன் திருப்தியாகவில்லை .
எல்லோர் சொன்னதையும் ஏதோ ஒரு காரணம் சொல்லி மறுத்தான் , அவர்களின் பதிலில் அவன் மனம் ஏனோ சமாதானமாகவில்லை .
இந்நிலையில் ஒருநாள் மன்னனைக் காண ஒருவன் வந்தான் .
அவன் மன்னனிடம் ஒரு மோதிரம் தந்து “ மன்னா , நீங்கள் எந்த குறையுமின்றி நீடுழி வாழ வேண்டும் , ஒருக்கால் நீங்கள் சொன்னது போல ஒரு நிலை உங்களுக்கு வருமானால் அன்றைய தினம் இந்த மோதிரத்தைத் திறந்துப் பாருங்கள் , அதுவரை இதனைப் பார்க்க வேண்டாம்”, பின்னொருநாளில் நான் தங்களைச் சந்திக்கின்றேன் என்று சொல்லி மோதிரத்தை மிகவும் பவ்யமாக மன்னனிடம் தந்து விட்டுச் சென்றான்.
மன்னனுக்கு அந்த மனிதனின் சொல்லும் செயலும் ஒருவிதமான நம்பிக்கையும் , எதிர்பார்ப்பையும், மன அமைதியையும் தந்தது .
இந்தச் சம்பவத்திற்கு பின் மன்னன் இதனை மறந்தே போனான் .
சில வருடங்களுக்குப் பின்…
திடீர் என இந்த மன்னனுக்கும் வேறு நாட்டு மன்னனுக்கும் போர் மூண்டது.
போருக்கு தயார் நிலையில் இல்லாததால் இந்த மன்னன் தோற்றுப் போனான்.
நாடு, மனைவி, மக்களை இழந்த மன்னன் மிகவும் மனம் தளர்ந்து தன் வாழ்வினை முடித்துக் கொள்ள எண்ணினான் . தப்பித்து உயிர் பிழைத்த தன் நிலையை எண்ணி எண்ணி மனம் சஞ்சலமான மன்னன் , தூரத்தில் ஒரு மலையினைக் கண்டான் .
இந்த மலையில் இருந்து விழுந்து தற்கொலை செய்துக் கொள்ள தீர்மானித்த அந்த மன்னன் அந்த மலையின் மீது ஏறினான் .
தட்டுத் தடுமாறி மலையின் உச்சியை அடைந்த மன்னன் , இறைவா, என்னை ஏற்றுக் கொள் என்று வானத்தை நோக்கி இரு கைகளையும் உயர்த்தி விண்ணைப் பார்த்து உரக்கக் கூவினான் .
அப்போது அவன் கையில் இருந்த மோதிரம் சூரிய ஒளியில் மின்னியதைக் கண்டான்.
உடனே , அவன் மனதில் அந்த மோதிரத்தைக் கொடுத்த மனிதன் சொல்லிய வார்த்தைகள் ஒலித்தன.
“ மன்னா , நீங்கள் எந்த குறையுமின்றி நீடுழி வாழ வேண்டும் , ஒருக்கால் நீங்கள் சொன்னது போல ஒரு நிலை உங்களுக்கு வருமானால் அன்றைய தினம் இந்த மோதிரத்தைத் திறந்து பாருங்கள் , அதுவரை இதனைப் பார்க்க வேண்டாம்”
இப்போது அது போன்ற நிலை தானே அதில் என்ன தான் உள்ளது என்றுப் பார்ப்போம் , என்று தற்காலிகமாக கீழே விழுந்து மரணிக்கும் எண்ணத்தை கைவிட்டு விட்டு அமர்ந்து அந்த மோதிரத்தை திருப்பி உள்ளே என்ன இருக்கின்றது எனப் பார்த்தான்.
மோதிரத்தின் உள்ளே ஒரு சிறிய காகிதம் ஒன்று சுருட்டி வைக்கப்பட்டிருந்தது , அதனை மிகவும் ஜாக்கிரத்கையாக எடுத்துப் பார்த்தான் ,
ஒரே ஒரு வாசகம் ஒரே ஒரு வரியில் எழுதப்பட்டிருந்தது .
அந்த வாசகம் இது தான்…
இந்த நிலை மாறும்…
அவ்வளவு தான்…
வேறொன்றும் இல்லை , முன்னும் பின்னும் திருப்பிப் பார்த்த மன்னன் ஏதும் காணாததால் அந்த வாசகத்தினைப் பற்றி யோசித்தான் .
தான் தற்போது உள்ள நிலை மாறும் , இதற்காக தற்கொலை செய்துக் கொள்ளும் அளவிற்கு வந்து விட்டோமே என்று எண்ணி மனதினை தைரியப்படுத்திக் கொண்டு மன்னன் மலையிலிருந்து கீழே இறங்கினான்.
தனது ஆதரவாளர்களைக் தேடிக் கண்டுப்பிடித்தான் , கிராமங்களில் வாழும் மக்கள் தங்களது மன்னனைக் கண்டதும் மகிழ்ந்து கொண்டாடினார்கள் . இளைஞர்களை ஒன்று திரட்டி படைகளை உருவாக்கினான்.
அரண்மனையில் இருந்த அவனது பழைய படைவீரர்களின் ரகசிய ஒத்துழைப்போடு, எதிர்பாராமல் திடீரென்று அரண்மனையின் ரகசிய வாசல் வழியாக உள்நுழைந்து எதிரி நாட்டு மன்னனை அதிரடியாக கைது செய்து சிறையிலடைத்து மீண்டும் மன்னன் ஆனான்.
மீண்டும் மன்னன் ஆட்சியில் அமர்ந்ததும் மக்கள் மிகவும் ஆனந்த வசமானார்கள்.
இந்நாளை விமரிசையாகக் கொண்டாட எண்ணிய மன்னன் , இந்த வாய்ப்பினை ஏற்படுத்தித் தந்த மோதிரம் கொடுத்த மனிதனைப் பறையறிவித்து வரவழைத்தான் .
நாடு முழுக்க ஒரே கொண்டாட்டமாக இருந்தது , அரண்மனையில் மக்கள் கூட்டம் , அரியணையில் மன்னன் , அருகில் மகாராணி , மன்னனின் குழந்தைகள் , மந்திரி , பிரதானிகள், ஆடல் பாடல் என்று எங்கும் சந்தோஷ வெள்ளம் அலை பாய்ந்து கொண்டிருந்தது .
மோதிரம் கொடுத்த மனிதன் வந்தான் , மன்னனைத் தாழ்ந்து பணிந்தான். மன்னன் அரியணையில் இருந்து இறங்கி வந்து வரவேற்றான்.
தான் அறிவித்திருந்த படி பாதி நாட்டினை நீங்கள் எடுத்துக் கொள்ள வேண்டும் என்றான் மன்னன்.
மன்னா, நாட்டினை ஆளும் தகுதி கொண்டவர் தாங்கள் மட்டும் தான், எனக்கு எதுவும் வேண்டாம் என்று பணிவோடு சொன்னான் அந்த மனிதன் .
மன்னன் எவ்வளவோ மன்றாடியும் எதனையும் ஏற்க மறுத்தான் அந்த மனிதன் .
இறுதியாக மன்னன் சொன்னான் , அன்பரே , நீங்கள் ஏதேனும் என்னிடம் இருந்து பெற விரும்பினால் தயங்காமல் கேளுங்கள் .
அந்த மனிதன், மன்னா , “வாழ்வின் மிக அதிக சந்தோஷத்தின் உச்சாணியில் தாங்கள் தற்போது அமர்ந்துள்ளீர்கள் என்பது உண்மை தானே “
மன்னன் : “ஆமாம் அது உண்மை தான் அன்பரே ”
அப்படியானால் அந்த மோதிரத்தினை இப்போது எடுத்துப் பாருங்கள் என்றான் அந்த மனிதன் .
ஏன் என மன்னன் வினவ , எடுத்துப் பாருங்களேன் என்றான் அந்த மனிதன்.
சரி என சொல்லிய மன்னன் , தனது விரலில் இருந்த , மோதிரத்தினை எடுத்து உள்ளிருக்கும் அந்தச் சிறிய காகிதத்தைப் பிரித்துப் பார்த்தான்.
அதில் அந்த மந்திர வாசகம் தெரிந்தது .
இந்த நிலை மாறும்…
இது தான் மன்னா வாழ்க்கை , இந்த நிலை மாறும், எனவே எதிலும் கவனமாகவும் சந்தோஷமாகவும் இருங்கள் , நான் வருகின்றேன் என்று அவையோரை பணிந்து மன்னனிடமிருந்து விடை பெற்றான் அந்த மனிதன் .
நெஞ்சம் தழுதழுக்க அவன் செல்லும் திசையைப் பார்த்து வணங்கி நின்றான் மன்னன்.
தான் இழந்த வாழ்வை மீட்டுத் தந்த மந்திரம் தந்தவனல்லவா இந்த மனிதன்…
ஆனால் எந்த முடிவெடுக்கும் முன்னரும் இந்த மந்திர வாசகம் நினைவில் வரட்டும்.

அனைவரும் வளமோடு வாழுங்கள் , வாழும் நாளெல்லாம்…                                          இந்த நிலை மாறும்…


at April 22, 2018 No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest

கர்ம வினை*

கர்ம வினை*
உலகில் கோடிக்கணக்கான மக்கள் இருக்கிறார்கள். நாம் பழக்கம் வைத்துக் கொண்டிருப்பவர்கள் ஆயிரக்கணக்கு. ஆனால் எதோ ஒரு குறிப்பிட்ட நபர் நமக்கு துணைவராக அல்லது துணைவியாக அமைவது ஏன் ?
நம் வாழ்க்கையின் ஒவ்வொரு நிகழ்விலும் ஒரு கர்மாவை நாம் ஏற்படுத்துகிறோம். அதாவது அந்தக் கர்மாக்களின் மூலம் ஒன்று நாம் ஏதாவது பெற்றுக் கொள்கிறோம் அல்லது அடுத்தவருக்கு ஏதேனும் ஒரு உபகாரம் செய்கிறோம்.
சில சமயங்களில் ஏமாற்றப்படுகிறோம். பல சமயங்களில் ஏமாற்றுகிறோம். சிலருக்கு நல்லது செய்கிறோம். பலரிடமிருந்து அளவுக்கு அதிகமாக
நன்மைகளைப்பெற்றுக் கொள்கிறோம்.
இந்த கொடுக்கல்வாங்கலே ருண பந்தம் எனப்படுகிறது.
சிலருடைய உறவுகள் ஆனந்தத்தைக் கொடுக்கிறது. சிலருடைய வருகை மட்டற்ற மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. சிலர் கூடவே இருந்து தொல்லைப் படுத்துகிறார்கள்.சிலரின் வருகை துக்கத்தை ஏற்படுத்துகிறது. பல சமயங்களில் இது ஏன் நிகழ்கிறது என்று தெரியாமலேயே தன் போக்கில் நம் வாழ்வில் பல நிகழ்ச்சிகள் நடக்கின்றன.
கனவில் கூட காண முடியாத பல ஆச்சர்யங்கள் நமக்கு சிலசமயங்களில் ஏற்படுகிறது.இதற்கெல்லாம் என்ன காரணம் ? ஏன் இப்படிப்பட்ட நிகழ்ச்சிகள் ? நாமே நம் தாயை, தந்தையை, சகோதர சகோதரிகளை, நண்பர்களை, மனைவியை, கணவனை, பிள்ளைகளை, தேர்ந்தெடுப்பதில்லை.
நண்பர்களைத் தேர்ந்தெடுக்கலாம் என்று யாரேனும் கூறலாம். ஆனாலும் அதுவும் தானே நிகழ வேண்டும். நம்மால் உருவாக்க முடியாது.
முயற்சி மட்டுமே நம்முடையது. முடிவு ? ஒரு சிலர் நம் வாழ்க்கையிலிருந்து திடீரென்று காணாமல் போய்விடுவர். அது இறப்பால் மட்டும் அல்ல , பல காரணங்களினால் நிகழும். அதே நபர் மீண்டும் நம் வாழ்வில் வேறு கோணத்தில் வேறு பார்வையில் தோன்றுவர்.
ஏதோ ஒன்று நம்மை அடுத்தவர் பால் ஈர்க்கிறது அல்லது அடுத்தவரை காரணம் இல்லாமல் வெறுக்க வைக்கிறது. அது என்ன ?
சமன் செய்யாமல் மிச்சம் வைத்திருக்கும் கர்மகதிகளின் எச்சங்களே அவ்வாறு ஒரு ஈர்ப்பை அல்லது வெறுப்பை ஏற்படுத்துகிறதா ?
இதற்கெல்லாம் தெரிந்த ஒரே காரணம் நம்முடைய கர்ம வின தான். இது நாள் வரை எத்தனையோ பிறவிகளை நாம்
கொண்டிருக்கிறோம் அத்தனைப் பிறப்பிலும் பலப் பல பாவ புண்ணியங்களை சேர்த்திருக்கிறோம். அந்தக் கூட்டின் பெயரே "சஞ்சித கர்மா" எனப்படுகிறது.
அதன் ஒரு பகுதியை இந்தப் பிறவியில் அனுபவிக்க கொடுக்கப்படுகிறது. அதுவே 'பிராரப்தக் கர்மா' எனப்படுகிறது. இந்த பிராரப்தக் கர்மா நிறைவடையாமல் நம்முடைய இந்தப் பிறவி முடிவடையாது.
நாம் இவ்வுலக வாழ்க்கையிலிருந்து விடுதலைப் பெற முடியாது.
இந்த வாழ்க்கை நடைமுறையில் நாம்
ஒவ்வொருவரிடமும் ஏதேனும் ஒன்றை கற்கிறோம் அல்லது கற்றுக் கொள்கிறோம்.இதில் நாம் அனைவரும் அதிகமாக கற்பது அல்லது
கற்பிப்பது நம் துணையுடன் மட்டுமே.
இது தவிர 'ஆகாம்ய கர்மா' என்று ஒன்றுள்ளது. அது கொடுக்கப்பட்டுள்ள இந்தப் பிறவியில் நாம் செய்யும் நல்ல - கெட்ட செயல்களால் ஏற்படுவது.
யாராலும் யாருக்கும் எந்த கர்மாவையும் ஏற்படுத்தவோ உருவாக்கவோ முடியாது. அவரவர்கள் செய்வினையின் பயனாலேயே அவரவர்கள் அனுபவம் மற்றும் வாழ்க்கை அமையும் .
துக்கமும், சந்தோஷமும், சண்டையும், சமாதானமும், ஏற்றமும், இறக்கமும், வெறுப்பும், ஆதரவும், அவரவர்கள் கர்ம கதியே. இதைத் தான் "தீதும் நன்றும் பிறர் தர வாரா" என நம் மதம் போதிக்கிறது. நம்முடைய நல்ல கெட்ட காலங்களுக்கு நாம் மட்டுமே பொறுப்பு.
அப்படி என்றால் ஆகாமி கர்மா நம்முடைய கையிலேயே இருக்கிறது. இந்தப் பிறவியில் யார் எப்படி இருந்தாலும் நீ எப்படி இருக்கப் போகிறாய் என்பது உன்கையிலேயே உள்ளது. நீ செய்யும் நற்செயல்களையும், வினைச்செயல்களையும் நீ மட்டுமே எதோ ஒரு பிறவியில் அனுபவிக்கப் போகிறாய் என்பதை உணர்ந்தால்,
நீ என்ன செய்யப் போகிறாய் ?எப்படி நடந்து கொள்ளப் போகிறாய் ? எது போன்ற வாழ்க்கைத் தடத்தை
ஏற்படுத்திக்கொள்ளப் போகிறாய் என்பது
உனக்குப் புலப்படும்.
இதை போதிப்பது தான் ஹிந்து மதம் There is NO cancellation of GOOD and BAD deeds பாவ புண்ணியங்களுக்கு கூட்டல் கழித்தல் கிடையாது. இரண்டையும் நாம் அனுபவித்தே ஆகவேண்டும். பணம் மட்டுமே எல்லாப் பிரச்சனைகளையும் தீர்த்துவிடும் என்று ஒரு சித்தாந்தம் உள்ளது. ஆனால், பணமே இல்லாத ஒரு சாதாரண மனிதன் கூட தன்னுடைய வாழ்க்கையில் பல சமயங்களில் சந்தோஷமாக இருக்கிறான்.
அதேபோல பணக்காரர்களையும் துக்கங்கள்'விடுவதில்லை. சர்க்கரை ஆலை அதிபரானாலும் Diabetic ஆக இருந்தால் இனிப்புப் பண்டங்களை உண்ண முடியாது. பல கார்களுக்குச் சொந்தக்காரராக இருந்தாலும் தனது கால்களையே நடை பயிற்சிக்கு நம்ப வேண்டியதாக உள்ளது. வினை விதைத்த வழியில் விதி நடக்கும் விதி வகுத்த வழியில் நாம் நடக்க வேண்டும் நமக்கு விதிக்கப்பட்டது கடமையைச் செய்வது மட்டுமே.பலனை ஆண்டவனிடம் விட்டுவிடுவோம்.
நடப்பதை ஏற்கும் பக்குவத்தை மட்டுமே நாம் வளர்த்துக்கொள்ள வேண்டும். அதை மாற்ற முயலும் போது, மேலும் மேலும் துன்பத்தையும் சோகத்தையுமே பலனாகப் பெறுகிறோம்.
எதற்கும் நிதானமும் பொறுமையும் தேவை.நமக்கு நடக்கும் நடக்கப்போகும் நல்லதை யாராலும் கெடுக்க முடியாது அதேபோல் தீமையையும் கொடுக்க முடியாது
at April 22, 2018 No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest

*கைகண்ட_அனுபவ மருத்துவம்*

*கைகண்ட_அனுபவ மருத்துவம்*

*நாட்டு மருந்து*
கீழ்கண்ட மருத்துவக் குறிப்புகள் எல்லாம் மலைவாழ்மக்கள் பயன்படுத்தும் மருத்துவக் குறிப்புகள்.கோடி ரூபாய் கொடுத்தாலும் கிடைக்காதது.அனைவருக்கும்
*கைகண்ட [அனுபவ] மருத்துவம் !!*
*நாடோடி மக்களின் பழக்கவழக்கங்களை நன்கு அறிந்து, அதன் பயனாகப் பல மூலிகைகளின் சிறப்பை உணர்ந்து குறித்து உள்ளேன்.*
*சில எளிய மருத்துவம்: !!!*
வயிற்றுவலிக்கு: முருங்கைக் கீரையை ஒரு கைப்பிடி எடுத்துச் சுத்தமான தண்ணீரில் கழுவி, உரலில் போட்டு நன்றாக இடித்துச் சாறு பிழிந்துகொண்டு, காலை, பகல், மாலையில் கொஞ்சம் சர்க்கரையுடன் அதைக் கலந்து உணவுக்குமுன் 1/4 ஆழாக்குச் சாப்பிட்டு வந்தால் வயிற்றுவலி குணமாகும்.
இடுப்பில் வரும் வண்ணார் புண்: இது சாதாரணமாய் எங்கே வாழ்ந்தாலும் சரி, சிலருக்கு உண்டாகும். இந்தப் புண் இருப்பவர்கள் இடுப்பைச் சுத்தமாகக் கழுவிக்கொண்ட பின், வாழைப் பழத்தோலின் உள் பக்கத்தைப் புண்ணின்மேல் வைத்து கட்டிக் கொள்ள வேண்டும். அப்பொழுது தாங்க முடியாத எரிச்சல் உண்டாகும். சில நாட்களில் முற்றும் குணம் அடைந்து விடும்.
கண்நோய்: கடுமையான கண் நோய் இருப்பவரகளுக்கு நீலகிரியில் வாழும் ஆதிவாசிகள், வெங்காயத்தை வெள்ளைத் துணியில் மூட்டை கட்டிப் பிறகு நசுக்கிக் கண்ணில் பிறிவார்கள். சில மணி நேரங்களில் நோய் குணமாகிறது.
டான்சில்ஸ்: சுத்தமான குங்குமப் பூவை இரண்டு கீற்று எடுத்து வெற்றிலையில் வைத்து வியாதியுள்ளவர்களுக்கு காலை, மாலை கொடுக்க, இரண்டே நாட்களில் குணம் காணலாம்.
தேள் கொட்டினால்: கேரள நாட்டு ஆதிவாசிகள் தேள் கொட்டினால் உடலின் எந்தப் பக்கத்தில் கொட்டுகிறதோ. அதற்கு எதிர்ப்பக்கத்துக் கண்ணில் ஒரு சொட்டு சுத்தமான உப்புத் தண்ணீரை விடுகிறார்கள். உப்பு நீரால் தேள் கொட்டிய இடத்தில் கீழ்பக்கமாக உருவிக் கழுவ வேண்டும். 5 நிமிடத்தில் விஷம் இறங்கி விடுகிறது.
வயிற்றில் உள்ள நாக்குபூச்சி போக: வயிற்றில் நாக்குப் பூச்சி இருப்போர் கண்ட மருந்தும் சாப்பிடக்கூடாது. வயதுக்குத் தகுந்தாற்போல் நல்ல சிற்றாமணக்கெண்ணெய் ஒரு கிண்ணத்தில் ஊற்றி, அதே எண்ணெயின் அளவுக்கு நாட்டுச் சர்க்கரையைப் போட்டு நன்றாகக் கலக்கிய பிறகு அதிகாலையில் சுமார் ஆறு மணிக்குக் குடித்துவிட வேண்டும். வயிற்றில் இருக்கும் பூச்சிகள் இந்த வெல்லத்தைச் சாப்பிட வரும். அந்த வேகத்தில் பேதியுடன் கலந்து பூச்சிகள் வெளியில் வந்து விடும். அன்று மிளகு ரசம் மட்டுமே சாப்பிட வேண்டும். குளிக்கக்கூடாது..பப்பாளிப் பாலுடன் சுத்தமான தேன் கலந்து சாப்பிட்டாலும் வயிற்றிலுள்ள நாக்குப் பூச்சி இறந்துவிடும். பிறகு கொஞ்சம் ஆமணக்கு எண்ணெய் சாப்பிட்டால் பூச்சிகள் வெளியே வந்துவிடும். வயதுக்குத் தக்கபடி அளவுகள் வைத்துக் கொள்ள வேண்டும்.
தொண்டைக் கம்மலுக்கு: சித்தரத்தை, அதிமதுரம், அரிசித்திப்பிலி வாங்கி ஒன்றாக இடித்து, அதை இரு பாகமாக்கி ஒரு பாகத்தில் எண்ணூறு மில்லியளவுத் தண்ணீரை ஊற்றி அடுப்பில் வைக்க வேண்டும். அந்த கஷாயம் இருநூறு மில்லியளவுத் தண்ணீராகச் சுண்டியதும், அதை ஒரு நாளைக்கு மூன்று வேளையாகப் பிரித்துச் சாப்பிட வேண்டும். மீதிப் பாதி மருந்தை மறு நாளைக்கு அதைப்போலவே செய்து மூன்று வேளை சாப்பிட வேண்டும். இதைப்போல் நான்கு நாட்களுக்கு சாப்பிட்டால் தொண்டைக் கம்மல் குணமாகும்.
ஒற்றைத் தலைவலி : மருதோன்றி (மருதாணி)யை “அழவான இலை’ என்றும் சொல்வார்கள். அந்த இலையை அரைத்து எந்தப் பக்கத்தில் தலைவலி இருக்கிறதோ, அந்தப் பக்கத்துக் காலின் அடிப்பாகத்தில், பாதத்தில் புதிய பத்துக் காசு அளவு வட்டமாக வைத்து, துணியால் கட்டிக் கொண்டு இரவில் படுத்துவிட வேண்டும். ஒரு தடவை செய்தால் போதும். உடனே ஒற்றைத் தலைவலி நின்றுவிடும். மறுபடி தலைவலி வரும்போது இப்படிச் செய்யலாம்.
அஜீரணம்: அடிக்கடி அஜீரணத்தால் துன்பப்படும் நண்பர்கள் தினமும் பப்பாளிப் பழத்தை ஒரு துண்டு சாப்பிட்டு வந்தால் எப்படிப்பட்ட அஜீரணமும் போகும்.
கல்லீரல் வீக்கம்: கல்லீரல் வீக்கமும் காய்ச்சல் கட்டியும் உள்ள குழந்தைகளுக்குப் பப்பாளிப் பழத்தைச் சாப்பிடக் கொடுத்தால் சில நாட்களில் கட்டாயம் குணமாகும். பழத்தை அல்வா, ஜாம் முதலியவை செய்தும் சாப்பிடலாம்.
கக்குவான் இருமல்: அதிமதுர வேரை வாயில் அடக்கி வைத்துக் கொண்டு அதன் நீரை விழுங்கும்படி செய்யலாம். மக்காச் சோளக் கதிர்த் தண்டைக் கஷாயம் வைத்துச் சாப்பிடலாம்.இவற்றைக் கொடுத்தால் கக்குவான் இருமல் அடியோடு நீங்கி விடும் என்று நினைக்க வேண்டாம். கொஞ்சம் குறையும். குழந்தைகளுக்கு வாந்தி அதிகம் இராது. எப்படியும் மூன்று மாதம் இருந்த பின்தான் இருமல் போகும“.
குடல் வாதம்: முள்ளங்கியின் விதையைக் கஷாயமிட்டுச் சாப்பிடக் குடல் வாதம் அறவே நீங்கும்.
தாது விருத்தியாக: முள்ளங்கி விதையையும், முள்ளங்கிக் கிழங்கையும் அதிகமாக உடயோகித்து வந்தால் தாகு விருத்தியாகும்.
ஜலதோஷம்: பகலில் சாப்பாட்டின் போது ஒரு பச்சை வெங்காயத்தைத் துண்டு துண்டாக்கி உணவுடன் மூன்று வேளை சாப்பிட்டால் ஜலதோஷம் நீங்கும்.
வயிற்றில் கட்டி: வெள்ளை முள்ளங்கியின் சாற்றை எடுத்து அரை அவுன்சு வீதம் 90 நாட்கள் சாப்பிட வேண்டும். 91ம் நாள் குணம் தெரியும். காலையில் ஆகாரத்துக்கு முன் சாப்பிட வேண்டும். அரை மணிக்குப் பிறகு எதையும் சாப்பிடலாம்.
தலையில் புழு வெட்டு : 1. ஆற்றுத் தும்மட்டிக்காயை நான்காக வெட்டி அதில் ஒரு பகுதியைத் தலையில் தேய்க்க வேண்டும். இதன் கசப்புத் தன்மையைத் தாங்காத பூச்சி, உடலில் இறங்கி ரத்தத்தின் வேகத்தில் இறந்துவிடும். தும்மட்டிக்காயைச் சுமார் 90 நாட்கள் தேய்க்க வேண்டும். 2. வெங்காயத்தையும் மூக்குப் பொடியையும் ஒன்றாக இடித்துத் தலையில் எப்பகுதியில் சொட்டை இருக்கிறதோ, அப்பகுதியில் எரிச்சலைப் பாராமல் சுமார் 15 நாட்கள் தேய்க்க வேண்டும்.
பாதத்தில் பித்த வெடிப்பு: ஐந்து நாட்களுக்கு விடாமல் வேப்ப எண்ணெயைத் தடவினால் பித்த வெடிப்பு மறைந்துவிடும். ஆறு மாதத்துக்கு இந்தத் தொல்லை இராது.
வெண்குஷ்டம் : மருதாணி வேர். அதாவது அழவான இøல் செடிவேர் சிறிது எடுத்து உலர்த்தி வைத்துக் கொள்ளவும். அதில் கொஞ்சம் எடுத்துப் பசும்பால் விட்டு நன்றாக அரைத்துக் கொண்டு வெண்மையாக இருக்கும் தோலின்மேல் பூசவும். நாளடைவில் தோலின் வெண்ணிறம் மாறிவிடும்.
காலராவைத் தடுக்க: காலை, மாலை ஒரு தேக்கரண்டி தேன் குடித்தால் வாந்திபேதி வராமல் தடுத்துக் கொள்ளலாம்.
மூலம், வாய்ப்புண், வயிற்றுப்புண்: இந்த வியாதிகளுக்குத் துத்தி இலைக் கீரையைச் சமைத்துச் சாப்பிட வேண்டும். புளி ஊற்றக் கூடாது. பகல் உணவுடன் ஒரு வேளை மட்டும் சாப்பிட வேண்டும். இந்தக் கீரை சாப்பிடும்போது மற்றக் கீரைகளை உண்ணக்கூடாது.
கடுமையான சுளுக்கு: சுளுக்குப் பிடித்த இடத்தில் துத்தி இலையை மெதுவாகத் தேய்த்துவிட வேண்டும். மேலிருந்து கீழ்நோக்கிக் காலையில் தேய்த்த ஒரு மணி நேரத்துக்குப்பின், தாங்கக்கூடிய சூட்டில் வெந்நீரை ஐந்து நாட்களுக்கு விட வேண்டும். பிறகு குணமாகும்.
காதில் சீழ் வடிதல்: எட்டிக் கொட்டையை வேப்பெண்ணெயில் ஒரு வாரம் ஊற வைக்க வேண்டும். ஒரு வாரம் கழித்து “ஒரு கோணி ஊசியில் குத்திக் கொள்ள வேண்டும். எட்டிக் கொட்டையைக் கொளுத்தியதும் கொட்டையிலிருந்து எண்ணெய் சொட்டும். அதுதான் எட்டித் தைலம். மூன்று சொட்டு ஆற வைத்து, காதில் விட வேண்டும். சீழ் குணமாகும். (5 வயதுக்குள் இருக்கும் குழந்தைகளுக்கு இதைத் தரக்கூடாது)
காலில் ஆணி: ஊறுகாய்க்கு ஊற்றும் காடியைப் பஞ்சில் எடுத்துக் கொண்டு அணி இருக்கும் காலில் ஒரு நாளைக்குப் பலமுறை தடவிக் கொண்டே வரவேண்டும். 45 நாட்களில் குணம் தெரியும் ஆணி மறைந்துவிடும்.
பல்வலி : 1. கீழாநெல்லி இலையைக் காலையில் நன்றாக மென்று அப்படியே பல் துலக்க வேண்டும். மூன்று நாட்களுக்குப் பல் துலக்கினால் போதும். குணம் தெரியும். 2. தென்னை மரத்தின் வேரை நன்றாக மென்று மூன்று நாட்களுக்குப் பல் துலக்க வேண்டும். குணம் தெரியும்.
வழுக்கைத் தலையில் முடி வளர: காலையிலும், இரவிலும் சாதாரண வெங்காயத்தைத் தலை நிறையத் தேய்த்து வந்தால் இரண்டு மூன்று மாதங்களில் கருகருவென்று முடி வளர்ந்துவிடும்.
*நாட்டுப்புற மருந்துகள்*
நாட்டுப்புற மருத்துவத்தில் ஆடவர், பெண்டிர், குழந்தைகள் போன்றோர்களின் பல்வேறு வகை நோய்களுக்கான மருந்துகளும் அவற்றைப் பயன்படுத்தும் முறைகளும் குறிப்பிடப்பட்டுள்ளன. அவற்றை இனிக் காணலாம்.
*மகளிர் மருத்துவம்*
திருமணமான - திருமணமாகாத பெண்களுக்குப் பொதுவாக வரும் நோய்களும் அவற்றிற்கான மருந்துகளும் கீழ்வருமாறு:
1. வெள்ளைபடுதல் - அசோகப் பட்டையைக் காய்ச்சி வடித்த நீரை அளவுடன் பருகி வர நிற்கும்.
2. பிறப்புறுப்பில் புண் - மாசிக்காயை அரைத்துத் தடவிவர ஆறும்.
3. சீரற்ற மாதவிலக்கு - அரிநெல்லிக்காயைப் பச்சையாகச் சாப்பிட்டு வரச் சீர்பெறும்.
4. மாதவிலக்குக் கால வயிற்றுவலி - முருங்கை இலைச்சாற்றை வெறும் வயிற்றில் குடித்து வர நிற்கும்.
5. உடல் நாற்றம் - ஆவாரந் தழையுடன் கஸ்தூரி மஞ்சளைச் சேர்த்து அரைத்துக் குளித்து வர நீங்குவதுடன் மேனியும் அழகு பெறும்.
திருமணத்துக்குப் பின்பு வரும் சில நோய்கள், அவற்றிற்கான மருந்துகளை இனிக் காணலாம்.
1. கர்ப்பகால வாந்தி - அரிநெல்லிக்காயை உண்டு வர நிற்கும்.
2. பிரசவ காலத்தில் ஏற்படும் வயிற்றுப்புண் - வேப்பந்தழையுடன் சிறிது மஞ்சள் சேர்த்து உண்டு வரப் புண் ஆறி வயிற்றிலுள்ள பூச்சிகள் நீங்கிப் பிரசவித்த பெண்கள் நலம் பெறுவர்.
3. பிரசவத்திற்குப் பின் உடல் மெலிவு - சீரகம், பூண்டு, குறுமிளகு சேர்த்துச் சமைத்த வெள்ளாட்டுக் கறியை உண்டு வர உடல் வலுப்பெற்று நலம் திரும்பும்.
4. தாய்ப்பால் பற்றாக்குறை - பேய் அத்திப்பழத்தை உண்டுவரப் பெருகும்.
*ஆடவர் மருத்துவம்*
ஆண்களுக்கென்று உள்ள தனிநோய்களும் அவற்றைப் போக்குவதற்கான மருந்துகளும் பின்வருமாறு :
1. நீர் பிரிதலில் சிக்கல் - தாமரைப் பூவைப் பச்சையாகச் சிறிதளவு உண்டு வரத் தாராளமாய் நீர் பிரியும்.
2. சிறுநீர் எரிச்சல் - கரிசலாங்கண்ணி எனும் கீரையின் சாற்றை அளவுடன் குடித்து வரத் தீரும்.
3. விந்து வெளியேறல் - ஒரு குவளை பசும்பாலுடன் பேரிச்சம்பழங்கள் சிலவற்றைப் போட்டுச் சாப்பிட்டு வர குணமாகும்.
4. ஆண்மைக் குறைவு - இலுப்பைப் பூவை அரைத்துப் பசும்பாலில் கலந்து குடித்து வர ஆண்மைத் தன்மை பெருகும்.
5. வெள்ளைபடுதல் - பழம்பாசி இலைகளைப் பசும்பாலில் விட்டு அரைத்துத் தொடர்ந்து இரண்டு வேளை காலையில் அளவாகப் பருகி வர நோய் விலகும்.
*குழந்தையர் மருத்துவம்*
அனைத்து நோய்களும் குழந்தைகளைத் தாக்கவல்லன என்றாலும் அவற்றுள் சிலவும் அவற்றிற்கான மருந்துகளையும் கீழே காணலாம்.
1. வயிற்றுப்போக்கு - வசம்பை உரசிக் காலை மாலை கொடுத்து வரக் கட்டுப்படும்.
2. சளி - துளசிஇலைச் சாற்றில் மூன்று, நான்கு துளிகள் தாய்ப்பாலைக் கலந்து கொடுக்க விலகும்.
3. கக்குவான் - பனங்கற்கண்டுடன் சிறிதளவு மிளகைச் சேர்த்துக் கொடுத்து வந்தால் விலகும்.
4. சாதாரணக் காய்ச்சல் - தாய்ப்பாலை ஒரு துணியில் நனைத்துக் குழந்தையின் நெற்றியைச் சுற்றி ஒத்தடம் கொடுத்து வரத் தீரும்.
5. உடம்பு வலி - சிறிய வெங்காயத்தைத் தட்டி இதன் சாற்றைக் கைகால்களில் தேய்த்துவிட வலி குறையும்.
*பொது மருத்துவம்*
ஆண், பெண், குழந்தை எனும் பாகுபாடில்லாமல் மனிதர்களைத் தாக்கும் பொதுவான நோய்கள் இப்பிரிவில் அடங்குகின்றன. அந்நோய்கள் பலவாகும். அவற்றுள் சிலவற்றிற்கான மருந்துகள் வருமாறு :
1. காய்ச்சல் - திராட்சை ரசத்தில் வெந்நீர் கலந்து உண்ண மட்டுப்படும்.
2. பொடுகுத் தொல்லை - வெள்ளை முள்ளங்கிச் சாற்றைத் தலைக்குத் தேய்த்துக் குளித்து வர நீங்கும்.
3. பேன் - துளசிச் சாற்றைத் தலையில் தேய்த்து வரப் பேன் தங்காது.
4. வெட்டுக்காயம் - மஞ்சளைப் பொடி செய்து வெட்டுக்காயத்தில் வைத்துக் கட்டலாம்.🍀
5. முகப்பரு - பூண்டை உரித்து அதன் சதைப் பகுதியை முகத்தில் தேய்த்து வர மறையும்
*கால்நடை மருத்துவம்*
கால்நடைகளுக்கு உண்டாகும் நோய்களுள் சிலவற்றையும் அவற்றைப் போக்குவதற்கான மருந்துகளையும் கீழே காண்க.
1. புண் புழு - சந்தனத்தையும் சிறிய வெங்காயத்தையும் அரைத்து மாட்டின் புண்ணில் விடப் புழு வெளியேறிப் புண் ஆறும்.
2. ஆட்டிற்கு வயிற்றுப் போக்கு - தேங்காய் எண்ணெய் சிறிதளவைச் சங்கில் எடுத்து ஆட்டுக்குட்டிக்குப் புகட்ட வயிற்றுப் போக்கு நிற்கும்.
3. கோழிகளுக்கு வயிற்றுப்போக்கு - கோழிகளுக்கு விளக்கெண்ணெயைச் சிறிதளவு கொடுக்கச் கழிச்சல் நிற்கும்
*நாட்டுப்புற மருத்துவத்தின் சிறப்புகள்:-*
பக்க விளைவுகள் இல்லாதது. எளிய முறையில் அமைவது. அதிகப் பொருட் செலவில்லாதது. ஆங்கில மருத்துவத்தில் குணப்படுத்த முடியாத பல நோய்களுக்குக் குணம் தரக்கூடியது. அனுபவ முறையில் பெறப்படுவது. பெரும்பாலும் இயற்கையாகக் கிடைக்கும் பொருள்களை மருந்துகளாகக் கொண்டுள்ளது. சற்று மெதுவாகச் செயல்பட்டாலும் நோய் முழுமையாகக் குணமடைவது.
எளிய முறையில் மக்களுக்குப் புரிய வைப்பதால் நோயாளிகள் நோயின் ஆரம்ப கட்டத்திலேயே தடுப்பு முயற்சிகள் செய்துகொள்ள ஏதுவாகிறது. நாட்டு மருத்துவத்தை அறியக் கல்வியறிவு தேவையில்லை, பாமரரும் பின்பற்றலாம். பெரும்பாலும் பரம்பரை பரம்பரையாகப் பின்பற்றப்பட்டு வருவதால் மருத்துவர்கள் நோயைக் கண்டறிவது மிக எளிதாகின்றது.
உலக நாடுகளில் நாட்டுப்புற மருத்துவமே நவீன மருத்துவத்துக்கு அடிப்படையான உந்துதலாக அமைந்துள்ளது.
உடல் ரீதியாக மட்டும் அணுகாமல் உளரீதியாகவும் அணுகுவதால் நாட்டுப்புற மருத்துவம் சிறப்பானதாக ஆகின்றது.
at April 22, 2018 No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest

Wednesday, 11 April 2018

அமைதியான குடும்பவாழ்விற்கு மனைவி

அமைதியான குடும்பவாழ்விற்கு மனைவி

அமைதியான குடும்பவாழ்விற்கு மனைவி பழக்கப்படுத்திக்கொள்ள வேண்டிய சில பழக்கவழக்கங்கள்
1.அதிகாலை 5 மணிக்கு படுக்கையில் இருந்து எழுவதை வழக்கமாக கொள்ளல் வேண்டும்
2.தான் மட்டும் எழுந்தாள் போதாது தனது கணவரையும் எழுப்பிவிடும் பழக்கத்தை கொண்டிடல் வேண்டும்
3.முதல் நாள் இரவே மறுநாள் செய்திடவேண்டிய வேலைகளை கணவனுடன் சேர்ந்து திட்டமிடல் வேண்டும்
4.முதலில் அனைத்து வீட்டுவேலைகளுக்கும் தானே பொறுப்பு என்ற எண்ணத்தை மாற்றிக்கொள்ள வேண்டும்
5.கணவனுக்கும் பிள்ளைகளுக்கும் நல்ல தாயாக மனைவியாக இருப்பது முக்கியமல்ல முதலில் நல்ல பயிற்சியாளராக இருக்கவேண்டும் என்பதை மனதில் கொள்ளுங்கள்
6.கணவனையும் பிள்ளைகளையும் மாமனார் மாமியாரையும் பக்குவப்படுத்தி அவர்களின் தேவைகளை அவர்களை கொன்டே பூர்த்தி செய்திடவும் வகையில் பழக்கிடுங்கள்
7.பிள்ளைகளுக்கு முன்னால் கணவரை திட்டுவதை விட்டுவிடுங்கள் ..இல்லையெனில் நாளை உங்கள் பிள்ளைகளுக்கு உங்களைப்போலவே ..
8.பிள்ளைகளுக்கு முன்னாள் மாமனார் மாமியர் மற்றும் நாத்தனார் மைத்துனரை வசைபாடுவதை தவிருங்கள்
9.கணவரை அடிப்படையாக கொண்டு பிள்ளைகளை திட்டாதீர்கள் "அப்பனமாதிரியே வந்திருக்கு "
10.எப்படி நீங்கள் சதா வீட்டுவேலைகளை பார்த்து குடும்பத்தை ஆரோக்கியமாகவும் செல்வ செழிப்பாகவும் வைத்துக்கொள்ள மெனப்படுகிண்டீர்களோ ..
உங்கள் கணவரும் அப்படித்தானே என்பதை ஒருபோதும் மறவாதீர்
👨🏻‍🌾: 11.மாமனார் மாமியாரை அம்மா அப்பாஎன்று அழைக்காவிட்டாலும் அத்தை மாமா என்று அடிக்கடி அழைத்து அவர்களை உங்கள் வசப்படுத்தி கொள்ளுங்கள்
12.வீட்டிற்கு வந்த நாத்தனாரை யரோ என்று எண்ணாமல் சமையல் கட்டிற்கு அழைத்து அவருக்கும் ஒரு வேலைகொடுத்து மனமார பேசிக்கொண்டு ஒரு தோழியைப்போல நடந்துகொள்ளுங்கள்
13.வீட்டில் பாத்திரங்களை கழுவும் போது சத்தம் வரமால் பார்துகொள்ளுங்கள்
14.குறிப்பாக உங்கள் கணவரின் உறவினர் வருகையின் போது மிக மிக கவனமாக செயல்படுங்கள்
15.வீட்டை அழகாக வைப்பது வீட்டில் உள்ள அனைவரின் கடமை என்பதை உணர்த்தி அவர்களை அதற்கேற்றபடி ட்ரைன் செய்திடுங்கள்
16.வீட்டில் சத்தம் போட்டு பேசாதீர் ..அமைதியாக பொறுமையாக பேசிடுங்கள் ..காட்டு தனமாக கத்துவதால் எதும் சீராக போவதில்லை
👨🏻‍🌾: 17.எந்தஒரு சூழ்நிநிலையிலும் ஏன்டா பெண்ணைப்பிறந்தோம் என்று மட்டும் எண்ணிவிடாதீர் ..எண்ணவும் கூடாது
18.என்ன பொழப்பு இஃது நாலு செவத்துக்குள்ள எல்லாத்துக்கும் வடிச்சு கொட்டி ..இதுக்கு பதில் ஆம்பளையா பொறந்திருக்கலாமேன்னு ..இப்படிப்பட்ட எண்ணங்கள் உங்களின் கனவில் கூட வரக்கூடாது
19.பணவிஷயங்களில் உங்களுக்கு என ஒரு சிறுதொகையினை உங்களுக்கு மட்டுமே என தெரிந்தவகையில் நம்பகமான இடத்தில் சேமித்து வாருங்கள் அஃது உங்களை எப்பொதும் உங்களின் மீது நம்பிக்கைகொள்ள செய்திடும்
20.தேவையில்லாமல் பி ரொக்களில் புடவைகளை வாங்கி சேகரிக்காதீர்கள்
21.நறுக் கென்றிந்தாலும் 4 புடவைகள் நச்சுனு வைத்திருங்கள்
22.அநேகமான நேரங்களில் நயிட்டி அணிவதால் கூடுதலான நயிட்டிகளை வைத்துக்கொள்ளுங்கள்
23.வேலைக்காரியின் கஷ்டங்களை தயவு செய்து கணவரிடம் உருக்கமாக பகிர்ந்து கொள்ளவேண்டாம்
24.நைட்டி இதனை வேலைசெய்திடும்போது மட்டுமே அணியுங்கள் ..மாலைவேளைகளில் நமது பாரம்பரிய உடையான சேலைக்கு மாறி பூமுடித்து கணவனை பளிச்சென வரவேறுங்கள்
25.உடைவிஷயத்திலும் உங்களை அழகாக காட்டிக்கொள்வதிலும் எப்பொதும் உங்களை நீங்கள் விட்டுக்கொடுக்காதீர்கள்
26.வயதுக்கு வந்த பெண்குழந்தைகள் இருந்தலும் உங்களின் கணவருக்கு நீங்கள் தான் காதல் தேவதை என்பதை மறக்கவேண்டாம்
27.கணவருக்கு பிடித்தமாதிரியும் தங்களின் தன்னம்பிக்கைக்கு பாதகம் இல்லாத வகையிலும் ..உங்களுக்கு பிடித்த வகையிலும் ஆடைகளை அணிந்திடுங்கள்
28.குறிப்பாக உள்ளடைகள் மீது அதிக கவனத்துடனும் ..சுத்தத்திலும் முக்கிய கவனதுடன் செயல் பட்டிடுங்கள்
29.கொடுமையன டிசைன் கடுமையான கலர் என உடைகளை அணிவதை தவிருங்கள்
30.கணவருடன் தினம் தினம் குறைந்தது 30 நிமிடமாவது அருகில் அமர்ந்து மனம் விட்டு பேசுங்கள் அதை வழக்கமாக்க்கி கொள்ளுங்கள்
31.உங்களுக்கு பிடித்தமாதிரி ஆடை அணிகலன்களை உங்கள்கணவருக்கு நீங்களே தேர்வு செய்த்திடுங்கள்
31.உங்கள் கணவரின் அழகை பிரதிபலிக்கும் கண்ணாடி நீங்களே அதை எப்பொதும் மறக்கவேண்டாம்
32.கணவரின் தொழிலை பற்றி முழுமையாக ஆக்கபூர்வமான தகவல்களை தெரிந்து வைத்து கொள்ளுங்கள்
33.கணவரின் தொழில் அல்லது வேலைசெய்திடும் சூழல் மற்றும் அவரின் செயல்பாடுகள் குறித்து தெரிந்து வைதுகொள்ளுங்கள் ..
34.கணவரின் வேலை மற்றும் வியாபார விஷயங்களில் அடிகடி மூக்கை நுழைக்காமல் அவர் மற்றவர்களோடு பழகும் விதத்தை சந்தேக கண் கொண்டு பார்க்காதீர்கள்
35.எல்லா கணவர்களும் தங்களின் மனைவி நல்ல தோழியாக இருக்கவேண்டும் என்பதும் அதேநேரம் கட்டுக்குள் அடங்கியவளாக இருக்கவேண்டும் என்பதே விருப்பம்
36.உங்கள் கணவரை ஜெயிக்கவேண்டும் என்றால் கொஞ்சம் பயப்படுவதாக காட்டிக்கொள்ளுங்கள்
37.வேலைக்கு செல்லும் பெண்கள் முதலில் உங்கள் ATM கார்டை உங்களின் கணவரின் கைகளில் கொடுக்கவேண்டாம் ..தேவையான பணத்தை நீங்களே எடுத்து கொடுங்கள் ..கொடுத்தபின் புலம்பவேண்டாம்
👨🏻‍🌾: 38.பணிபுரியும் இடத்தில் உள்ள ஆண்கள் ..மற்றும் பக்கத்துவீட்டு பெண்கள் அவர்களின்p கணவன்மார்கள் பற்றி அதிகம் பேசவேண்டாம்
39.உங்கள் தோழிகளுக்குள் பேசிக்கொள்ளும் அந்தரங்கமான விசயங்களை கணவருடன் பகிர்ந்து கொள்ளவேண்டாம் ..
40.எவ்வளவு உயிர்தோழியாக இருந்தாலும் அவர்களை ஒரு எல்லைக்குள் வைதிருங்கள் ..வீட்டில் அனுமதிப்பதும் அளவோடு இருக்கட்டும்
41.உங்களின் தனித்திறமைகளை எப்பொதும் வளர்த்துகொண்டே இருங்கள் அதை ஒருபோதும் விட்டுக்கொடுத்து விடாதீர்
42.வாரம் ஒருமுறை ஷாப்பிங் செல்வதை வழக்கமாக்கி கொள்ளுங்கள்
43.ஷாப்பிங் என்றவுடன் நகை கடை துணிக்கடை என்றுமட்டும் எண்ணவேண்டாம் உழவர்சந்தை செல்வது கூட ஷாப்பிங் தானே ..
44.வீடுகளில் அதிக குப்பைகள் சேராமல் பார்துகொள்ளுங்கள் வாடகை வீடு எனில் தேவையான பொருட்களை மட்டும் வைத்துக்கொள்ளுங்கள்
45.உங்கள் குடும்ப விஷயங்களை குறிப்பாக உங்கள் அம்மாவிடம் பகிர்ந்து கொள்ள வேண்டாம்
46.உங்களின் வளர்ச்சிகளை முடிந்தமட்டும் உங்களின் அக்கா தங்கைகள் அண்ணன்களிடம் பகிர்ந்துகொள்ளவேண்டாம்
47.அம்மாவின் ஆலோசனைகளை கேட்ப்பது நல்லதுதான் ஆனால் அதை அளவொடு நிறுத்திக்கொள்ளவது நல்லது ..
48.தேவைஇல்லாமல் மகளுக்கு ஆலோசனை சொல்வது ..மருமகளை சரி செய்வது போன்ற செயல்களை தவிர்த்திடுங்கல்
49.அநேக பெண்களின் வாழ்க்கை கெட்டுப்போவது அம்மக்களால்தான் என்பது ஆண்கள் சமூகத்தில் அசைக்கமுடியாத நம்பிகை மறக்கவேண்டாம்
50.உங்கள் கணவரின் செல்போன் மீது ஒரு கண் இருக்கட்டும் ஆனல் அஃது சந்தேக கண்ணாக மாறவேண்டும்
51.whats ஆப் மீது கவனம் இருக்கட்டும் அஃது எட்சரிக்கை உணர்வுக்கு மட்டுமே
52.உங்களின் கணவரின் facebook id மீதும் ஒரு பார்வை வைத்துகொள்ளுங்கள் அஃது தேவைஇல்லாத எதிர்கால குழப்பங்களை தவிர்க உதவும்
53.கணவரின் வெளிநாடு பயணங்கள் ..கிளப் ஆக்டிவிடிகளில் பெரும்பாலும் கலந்து கொள்ளுங்கள்
54.குடிப்பது சந்தோஷத்துக்கு மட்டுமென உங்களின் கணவருக்கு உணர்தி அவர் குடிக்க விரும்பினால் ..அஃது உங்களின் இசைவோடு நடப்பதாக இருக்கட்டும்
55.புகைபிடிக்கும் கணவன்மார்களை கொஞ்சம் கொஞ்சமாக கட்டுக்குள் கொண்டுவாருங்கள் அதுவே நல்லது
56.கணவன்கள் நண்பர்களுடன் அடிக்கும் லூட்டிகளை ரசியுங்கள் ஆனால் அதில் உள்ள குற்றங்களை கண்டுபிடித்து ஆயுதமாக பயன்படுத்தாதீர்
57.உங்களின் கணவர் உங்களுக்கு ஒரு ஆண் ..ஆனால் வெளியுலகில் அவர் ஒரு ஹீரோ என்பதை மறக்கவேண்டாம்
👨🏻‍🌾: 58.பெண்களுக்கு வாய் நீளுமானால் ஆண்களுக்கு கைநீளம் என்பதை மறக்கவேண்டாம்
59.ஒரு நல்ல ஸ்திரி தன் வீட்டை காட்டுகிறாள் என்பது பைபிள் வார்த்தை
60.உங்களை வைத்துதான் உங்கள் கணவரின் சமுதாய மதிப்பு உள்ளது என்பதை அவருக்கு உணர்த்துங்கள்
61.உங்களின் செயல்பாடுகள் உங்கள் பெண்பிள்ளைகளின் எதிர்காலத்தில் பங்குகொள்கிறது என்பதை ஒருபோதுமே மறக்கவேண்டாம்
62.உங்களின் சந்தோஷமான வாழ்க்கை ..உங்களின் எதிர்கால மருமகளின் சந்தோஷமான வாழ்க்கைக்கு வழிவகுக்கும் அநேக ஆண்கள் தங்களின் மனைவியை ..தங்களின் தாய் பட்ட கஷ்டங்களை தனது மனைவிக்கு தரக்கூடாது என்பதில் மிகுந்த அக்கரை கொண்டுள்ளனர்
63.சாமிகளை அளவோடு கும்பிடுங்கள் ..சாமி கும்பிட்டு உங்களின் ஆசாமிகளை கோட்டை விட்டுவிடாதீர்கள்
64.சுவையாக சமைக்கும் பெண்களை விட அழகாகவும் இனிமையாகவும் பரிமாறும் பெண்களைத்தான் ஆண்களுக்கு பிடிக்கிறதாம்
65.மொத்தத்தில் நீங்கள் தாயக ..தோழியாக ..மனைவியாக ..பல பல யாக இருப்பதைவிட ..சிறந்த பயிற்சியாளராக இருந்தால் வாழக்கை சிறக்கும்
பயற்சி யாளருக்குப்பின் சிறந்த கோச்சாக மாறினால் சமுதாயம் மதிக்கும் ...life எளிமையாகும் ..இனிமையாகும்
அன்பு நிலை பெற
ஆருயிர் மனைவியை
இல்வாழ்வில் சக மனித உயிராக மதித்து நடந்தாலே போதும் அகமகிழ்ச்சி பெருகும், இல்லத்தில் நிம்மதி நிலைத்திடும்

at April 11, 2018 No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest

Wednesday, 4 April 2018

எண்ணங்கள்.

எண்ணங்கள்.

எண்ணங்கள் மிகவும் வலிமையானவை. ஒரு முறை எண்ணிய உடனேயே அந்த எண்ணம் சக்தி படைத்ததாக மாறி விடுவதில்லை. ஒரு எண்ணம் திரும்பத் திரும்ப எண்ணப்படும் போது அது சக்தி பெற ஆரம்பிக்கிறது. அந்த சக்தி அதை செயல்படுத்தத் தூண்டுகிறது.
"ஆயிரம் முறை சொன்னால் யானையும் சாகும்" என்பர் பெரியோர். அதனால் தான் ஆலயங்களில் லட்ச்சார்ச்சனை, கோடியர்ச்சனை போன்றவைகள் நிகழ்கின்றன.
எண்ணங்களின் சக்தி அதே எண்ணங்கள் கொண்டவர்களை தன் பக்கம் ஈர்க்கிறது. மேலும் வலுப்பெறுகிறது. அது அலைகளாகப் பலரையும் பாதிக்கிறது. பலரையும் செயலுக்குத் தூண்டுகிறது.
எண்ணங்களை பிரம்மாக்கள் எனலாம். காரணம் அவை எண்ணியதை உருவாக்கும் சக்தி படைத்தவை. ஒரு எண்ணம் செயலாக முடியாமல் போகிறதென்றால் அதை விட சக்தி வாய்ந்த வேறொரு எண்ணம் அதனுடனேயே இருந்து போராடி அதனைப் பலமிழக்க வைத்திருக்கிறது என்று பொருள்.
எனவே நம் மனதில் அதிகமாக மேலோங்கி நிற்கும் எண்ணங்கள் எவையோ, அவையே இன்று நம்மை இந்த நிலைக்குக் கொண்டு சேர்த்த பெருமை உடையவை.
நம்முடைய இன்றைய நிலை திருப்திகரமாக இல்லையென்றால் முதலில் நம் எண்ணங்களை மாற்றவேண்டும். எண்ணங்கள் மாறுகிற போது அதற்கேற்ப எல்லாமே மாறும். இது மாறாத உண்மை.
at April 04, 2018 No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest

Tuesday, 3 April 2018

காமாட்சி விளக்கை ஏன் அனைத்து வீடுகளிலும் பயன்படுத்துகிறார்கள்?


காமாட்சி விளக்கை ஏன் அனைத்து வீடுகளிலும் பயன்படுத்துகிறார்கள்?
✴ பொதுவாக அனைவரின் வீட்டிலும் காமாட்சி விளக்கை நாம் காண முடியும். ஏன் காமாட்சி விளக்கு மட்டும் அனைவரது வீடுகளிலும் உள்ளது என்பதைப் பற்றி இந்த பகுதியில் பார்க்கலாம்.
✴ உலக மக்களின் நன்மைக்காக காமாட்சி அம்மன் கடும் தவம் புரிந்தார். அப்போது சகல தெய்வங்களும் காமாட்சி அம்மனுள் அடங்கியது. அதனால் காமாட்சி அம்மனை ஒருவர் வழிபட்டால் அனைத்து தெய்வங்களையும் வழிபட்ட பலன் கிடைக்கும்.
✴ காமாட்சி அம்மனுக்குள் சகல தெய்வங்களும் அடக்கம் என்பதால் அவரவர் தங்களுடைய குல தெய்வங்களை நினைத்துக்கொண்டு காமாட்சி விளக்கை ஏற்றி வணங்குவார்கள். இதன் மூலம் காமாட்சி அம்மனின் அருளும், குல தெய்வத்தின் ஆசியும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
✴ குல தெய்வம் தெரியாதவர்கள் அன்னை காமாட்சியை நினைத்து என் குல தெய்வம் தெரியவில்லை, நீயே என் குல தெய்வமாய் இருந்து என் குலத்தை காப்பாற்று என வேண்டுவார்கள். இதனால் அதற்கு காமாட்சி தீபம் என பெயர் ஏற்பட்டது.
✴ அனைத்து தெய்வங்களின் அருளை ஒன்றாக பெறுவதற்காகத்தான், திருமண சமயங்களில் மணமக்கள் காமாட்சி விளக்கை கையில் ஏந்திக் கொண்டு வலம் வருகின்றனர். புகுந்த வீட்டில் முதன்முதலில் காமாட்சி விளக்கை ஏற்றுவதற்கும் இதுதான் காரணம்.
✴ அதனோடு, குல தெய்வமும் அந்த விளக்கில் இருந்து அருள்புரிவதால் முதன்முதலில் அந்த விளக்கை ஏற்றுவதன் மூலம் அந்த குலம் தழைத்து வளரும் என்பது நம்பிக்கை.
✴ மங்கலப் பொருட்களில் இந்த காமாட்சி விளக்கும் ஒன்று. காமாட்சி விளக்கு புனிதமானது. இதில் கஜலட்சுமியின் உருவமே பொறிக்கப்பட்டிருக்கும் இது எல்லா வீடுகளிலும் இருக்க வேண்டிய விளக்கு. பூஜைக்கு முன் பூவும், பொட்டும் வைத்து மங்கலத்துடன் தீபம் ஏற்றி, தினமும் வழிபடத்தக்கது.
✴ பெண்ணுக்கு சீர் வரிசைகளை தரும்போது காமாட்சி அம்மன் விளக்கும், இரண்டு குத்து விளக்குகளும் அவசியம் வழங்கப்பட வேண்டும்.
✴ சிலர் தம் முன்னோர்கள் ஏற்றிய காமாட்சியம்மன் விளக்குச் சுடர் தொடர்ந்து, நிலைத்து, எரியும்படி கவனித்துக் கொள்கின்றனர். பல குடும்பங்களில் பரம்பரை பரம்பரையாக காமாட்சியம்மன் விளக்குகளை பொன் போலப் போற்றிப் பாதுகாத்து வைத்துள்ளனர்.
✴ புதுமனை புகும் போதும், மணமக்கள் மணப்பந்தலை வலம் வரும்போதும், எல்லா இருள்களையும் நீக்கியப்படி, அருள் ஒளியை அனைவருக்கும் அருளியபடி முன்னால், பக்தியுடன் ஏந்திச் செல்லப்படும் விளக்கும் காமாட்சி அம்மன் திருவிளக்கே.


at April 03, 2018 No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest

Sunday, 25 March 2018

யோனிப்பொருத்தம்

யோனிப்பொருத்தம்

யோனி என்பது புணர்ச்சி உறுப்புகளைக்குறிக்கும். தாம்பத்திய உறவில் ஈடுபடும் ஆண்,பெண் இருவருக்குமிடையே எந்த அளவிற்கு மன ஒற்றுமை, உடல் ஒற்றுமை இருக்கும் என்பதை கண்டறிய இந்த பொருத்தம் பார்க்கப்படுகிறது.
மனித யோனிகளின் தன்மைகளை மிருக யோனிகளின் தன்மையோடு ஒப்பிட்டு கூறியிருக்கிறர்கள் ரிஷிகள். தாம்பத்திய உறவில் ஈடுபடும் மனிதனின் எண்ணம்மற்றும் செயல்பாடுகள் அவர்களுடைய ஜென்ம நட்சத்திரத்திற்குரிய மிருகத்தின் செயல்பாடுகளை ஒத்திருக்கும் என்பது ரிஷிகளின் கருத்தாகும். நட்சத்திர யோனி விவரங்கள் கீழே தரப்பட்டுள்ளன.
அசுவினி - ஆண் குதிரை
பரணி - ஆண் யானை
கார்த்திகை - பெண் ஆடு
ரோகிணி - ஆண் நாகம்
மிருகசீரிஷம் - பெண் சாரை
திருவாதிரை - ஆண் நாய்
புனர்பூசம் - பெண் பூனை
பூசம் - ஆண் ஆடு
ஆயில்யம் - ஆண் பூனை
மகம் - ஆண் எலி
பூரம் - பெண் எலி
உத்தரம் - எருது
அஸ்தம் - பெண் எருமை
சித்திரை - ஆண் புலி
சுவாதி - ஆண் எருமை
விசாகம் - பெண் புலி
அனுஷம் - பெண் மான்
கேட்டை - கலைமான்
மூலம் - பெண் நாய்
பூராடம் - ஆண் குரங்கு
உத்திராடம் - மலட்டு பசு (சில பஞ்சாங்கங்களில் கீரி எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.)
திருவோணம் - பெண் குரங்கு
அவிட்டம் - பெண் சிங்கம்
சதயம் - பெண் குதிரை
பூரட்டாதி - ஆண் சிங்கம்
உத்திரட்டாதி - பாற்பசு
ரேவதி - பெண் யானை
மிருகங்களை மூன்று வகையாக பிரிக்கலாம் அவை:
1.தாவர உண்ணிகள்
2.ஊண் உண்ணிகள்
3. அனைத்துண்ணிகள்.
தாவர உண்ணிகளை இரண்டு வகைகளாக பிரிக்கலாம் அவை:
1. கொம்புள்ளவை
2. கொம்பில்லாதவை
ஆடு, எருது,பசு,எருமை,மான், இவை கொம்புள்ள தாவர உண்ணிகளாகும்.
குதிரை,யானை இவை கொம்பில்லாத தாவர உண்ணிகளாகும்.
நாய்,பூனை, புலி,சிங்கம், நாகம்,சாரைஇவை ஊண் உண்ணிகளாகும்.
எலியும் குரங்கும் அனைத்துண்ணிகளாகும்.
கொம்புள்ள தாவர உண்ணிகள் அனைத்திற்கும் புணர்ச்சி உறுப்பு கிட்டத்தட்ட ஒரே மாதிரிதான் இருக்கும். இதுபோல் கொம்பில்லாத தாவர உண்ணிகள் அனைத்திற்கும் புணர்ச்சி உறுப்பு கிட்டத்தட்ட ஒரே மாதிரிதான் இருக்கும்.
ஊண் உண்ணிகள் அனைத்திற்கும் புணர்ச்சி உறுப்பு ஏறக்குறைய ஒரே மாதிரிதான் இருக்கும்.
எலி, கீரி போன்ற அனைத்துண்ணிகளுக்கு புணர்ச்சி உறுப்பு ஒரே மாதிரியாக இருக்கும்.
நாகம்,சாரை போன்ற ஊண் உண்ணிகளுக்கு புணர்ச்சி உறுப்பு ஒரே மாதிரிதான் இருக்கும்.
மனிதர்களின் யோனி பேதங்கள் மிருகங்களின் யோனி பேதங்களை ஒத்திருக்கும் என்பது ரிஷ்களின் கருத்தாகும். ஆண்,பெண் இருவருடைய யோனி பேதங்களை அவர்களுடைய ஜென்ம நட்சத்திரம் மூலமாக கண்டறிந்து அவை பரஸ்பரம் இணைவதற்கு ஏற்றவைதானா என்பதை கண்டறிவது யோனிப்பொருத்தம் பார்ப்பதின் நோக்கமாகும்.
மிருகங்கள் புணர்ச்சியில் ஈடுபடும்போது குண பேதங்கள் காணப்படும். உதாரணமாக ஆடுகள் அடிக்கடி புணர்ச்சியில் ஈடுபடும். ஆனால் புணர்ச்சி நேரம் மிகவும் குறைவுதான். நாய்கள் அடிக்கடி புணர்ச்ச்சியில் ஈடுபடுவதில்லை, ஆனால் புணர்ச்சி நேரம் அதிகமாகும்.
பூனை, புலி,சிங்கம் போன்ற மிருகங்கள் புணர்ச்சியின்போது மிகவும் ஆக்ரோஷமாக செயல்படும்.
யானை,நாகம் போன்றவை மறைவான இடத்தில் மட்டுமே புணர்ச்சியில் ஈடுபடுபவை.
அவரவர் ஜென்ம நட்சத்திரத்தை தெரிந்துகொண்டால் அவரின் எண்ணம் மற்றும் செயல்பாடுகள் புணர்ச்சியின்போது எப்படி இருக்கும் என்பதை தெரிந்துகொள்ளலாம்.
தாவர உண்ணிகளுக்கும் அனைத்துண்ணிகளுக்கும் ஊண் உண்ணிகள் பகையாகும்.
கொம்புள்ள தாவர உண்ணிகள் கொம்பில்லா தாவர உண்ணிகளுக்கு பகையாகும்.
ஒரே வகையை சேர்ந்த மிருகங்களின் யோனிகள் பரஸ்பர நட்பாகும்.
வெவ்வேறு வகையை சேர்ந்த மிருக யோனிகள் பரஸ்பரம் பகையாகும்.இதன் அடிப்படையில் மிருக யோனிகளின் பகை விவரம் தரப்பட்டுள்ளது.
குதிரை X எருமை
குதிரை X பசு
யான X சிகம்
ஆடு X குரங்கு
பாம்பு Xகீரி
பூனை X நாய்
பசு X புலி
எருமை X புலி
மான் X புலி
எலி X பூனை
எலி Xபாம்பு
மான் X நாய்

at March 25, 2018 No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest

Saturday, 24 March 2018

சொத்து சம்பந்தமான பிரச்சினைகள் தீர பரிகாரங்கள்

சொத்து சம்பந்தமான பிரச்சினைகள் தீர பரிகாரங்கள்

அசையா சொத்துக்களான காலி மனை, வயல் ,தோட்டம் ,வீடு ஆகியவைகளை குறிக்கும் பாவம் நான்காம் பாவமாகும். ஒரு குறிப்பிட்ட பாவத்திற்கு வரவை குறிக்கும் பாவம், அந்த பாவத்திற்கு இரண்டாம் பாவமாகும். ஒரு குறிப்பிட்ட பாவத்திற்கு செலவை அல்லது விரையத்தைக்குறிக்கும் பாவம், அந்த பாவத்திற்கு பன்னிரண்டாம் பாவமாகும். இதன் படி நான்காம் பாவத்திற்கு வரவை குறிக்கும் பாவம் நான்கிற்கு இரண்டாவதாக வரும் ஐந்தாம் பாவமாகும். நான்காம் பாவத்திற்கு விரையத்தைக் குறிக்கும் பாவம் நான்கிற்கு பன்னிரண்டாவதாக வரும் மூன்றாம் பாவமாகும்.
காலப்புருச லக்கினமான மேசத்திற்கு நான்காம் பாவம் கடகமாகும். கடகத்திற்கு இரண்டாமிடம் சிம்மமாகும். சிம்ம ராசிக்கு அதிபதி சூரியனாகும். சூரியன் சுய ஒளியில் பிரகாசிக்கும் கிரகமாகும். சூரியனுக்கு அதி தேவதை சிவனாகும். எனவே சுயம்புவாக எழுந்தருளியிருக்கும் சிவபெருமானை வழிபட்டுவந்தால் சொத்து சேர்க்கைகள் உண்டாகும். இதுபோல் காலப்புருச ராசியான கடகத்திற்கு நான்காமிடம் துலாம் ராசியாகும். துலாம் ராசிக்கு இரண்டாமிடம் விருச்சிக ராசியாகும். விருச்சிக ராசிக்கு அதிபதி செவ்வாயாகும். விருச்சிகம் ஒரு நீர் ராசியாகும். செவ்வாய் கிரகத்தின் அதிதேவதை முருகனாகும். எனவே நீர் நிலைகளுக்கு அருகில் அமைந்திருக்கும் முருகன் ஆலயத்திற்கு சென்று வழிபட்டால் சொத்துக்கள் சேரும். கடற்கரையில் அமைந்துள்ள முருகன் ஆலயம் திருசெந்தூராகும். அங்கு சென்று வழிபட்டு வந்தால் விரைவில் சொத்துக்கள் அமையும். மேலும் ஆயுதத்தை குறிக்கும் கிரகம் செவ்வாயாகும், நிலத்தைக்குறிக்கும் கிரகமும் செவ்வாய்தான். பரசு ராமன் தன் கையில் உள்ள கோடாரியை கடலில் வீச , அந்த கோடாரி உருவத்தில் கடல் நீர் விலகி நில பரப்பு தோன்றிய இடம் பரசுராம க்ஷேத்திரமாகும். தற்போதைய கேரளாவும்,கன்யாகுமரிப்பகுதியும் இணைந்த பகுதிக்கு பரசுராம க்ஷேத்திரம் என்று பெயர். திருவனந்தபுரம் நகரத்தில் திருவல்லம் என்னுமிடத்தில் பரசு ராமருக்கு தனிக்கோயில் உள்ளது. அங்கு சென்று வழிபட்டு வந்தாலும் விரைவில் சொத்துக்கள் அமையும்.
காலப்புருச லக்கினமான மேசத்திற்கு நான்காம் பாவம் கடகமாகும். கடகத்திற்கு பன்னிரண்டாமிடம் மிதுனமாகும். மிதுன ராசிக்கு அதிபதி புதனாகும். புதனுக்குரிய அதி தேவதை விஷ்ணுவாகும். விஷ்ணு அவதாரங்களில் மச்ச அவதாரத்திற்கும்,கூர்ம அவதாரதிற்கும் குறிப்பிட்டு சொல்லும் அளவிற்கு தனிக்கோயில்கள் இல்லை. ஆனால் வராக மூர்த்திக்கு தனிக்கோயில்கள் உண்டு. வராகம் என்றால் பன்றி என்று பொருள். பன்றி எப்பொழுதும் சேற்று உடலோடு(மண்) காணப்படும் ஒரு மிருகமாகும். எனவே விஷ்ணு அவதாரங்களில் வராக மூர்த்தியை வழிபட சொத்துக்கள் எளிதில் விற்பனையாகும். மிதுன ராசியின் உருவம் இரட்டையராகும் எனவே லக்ஷ்மி வராகரை வழிபடவேண்டும். இதுபோல் காலப்புருச ராசியான கடகத்திற்கு நான்காமிடம் துலாம் ராசியாகும். துலாம் ராசிக்கு பன்னிரண்டாமிடம் கன்னி ராசியாகும். கன்னி ராசியின் அதிபதியும் புதன்தான். கன்னியில் புதன் உச்சமாகும். எனவே மிகவும் பிரசித்தி பெற்ற விஷ்ணு ஸ்தலத்தில் எழுந்தருளியுள்ள வராகப்பெருமாளை வழிபட்டாலும் சொத்துக்கள் எளிதில் விற்பனயாகும். மிகவும் பிரசித்தி பெற்ற விஷ்ணு ஸ்தலம் திருப்பதியாகும். எனவே திருப்பதியில் உள்ள வரகப்பெருமாளை தசித்தால் சொத்துக்கள் எளிதில் விற்பனையாகும்.
திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைகுறிச்சிக்கு அருகில் உள்ள கீழப்பாவூர், சிதம்பரம் அருகே உள்ள ஸ்ரீமுஷ்ணம், காஞ்சிபுரம், திருக்கோவிலூர், சென்னைக்கு அருகே உள்ள திருவிடந்தை, திருப்பதி ஆகிய ஊர்களில் வராகப்பெருமாளுக்கு கோயில்கள் அமைந்துள்ளன.
நான்கிற்கு ஆறாமிடம் சொத்து சம்பந்தமான சண்டை சச்சரவு மற்றும் வழக்குகளைக்குறிக்கும். காலப்புருச லக்கினமான மேசத்திற்கு நான்காம் பாவம் கடகமாகும். கடகத்திற்கு ஆறாமிடம் தனுசு ஆகும். தனுசு ராசியின் உருவம் வில்லாகும். கையில் வில்லேந்தியவன் ராமனாகும். பட்டத்திற்குரிய ராமன் கைகேயின் சூழ்ச்சியால் நாட்டை துறந்து காட்டிற்கு சென்று பலவிதமான பிரச்சினைகளுக்குப்பின் திரும்பவும் நாட்டை அடைந்த கதை ராமாயணம் படித்தவர்கள் அனைவருக்கும் தெரியும். யாராவது உங்கள் சொத்துக்களை மோசடி செய்து அபகரிக்க நினைத்தால் ஸ்ரீராமனை வழிபட சொத்து மோசடிகளிலிருந்து தப்பிக்கலாம். இதுபோல் காலப்புருச ராசியான கடகத்திற்கு நான்காமிடம் துலாம் ராசியாகும். துலாம் ராசிக்கு ஆறாமிடம் மீனராசியாகும். மீன ராசியில் புதன் நீச்சம். நீச்ச புதன் சயன கோலத்திலிருக்கும் பெருமாளைக்குறிக்கும். எனவே ஸ்ரீ ரங்க நாதரை வழிப்பட்டாலும் சொத்து மோசடிகளிலிருந்து தப்பிக்கலாம். வழக்கில் சிக்கியுள்ள மண்ணில் மச்ச யந்திரம் புதைத்து வைத்தால் வழக்கின் தீர்ப்பு நமக்கு சாதகமாக முடியும்.
No automatic alt text available.

at March 24, 2018 No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest

தோப்புக்கரணம்

தோப்புக்கரணம்

கல்வி கற்பதில் கண்கள்,கைகள்,காதுகள், மூளை ஆகிய நான்கு உறுப்புகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இதில் கண்கள் வாசிக்கும் திறனையும், கைகள் எழுதும் திறனையும், காதுகள் கேட்கும் (செவி சாய்க்கும்) திறனையும், மூளை நினைவாற்றல் மற்றும் பகுத்தறியும் திறனை பெற்றுள்ளன. கற்பிப்பவர்கள், கைகள், வாய், மூளை ஆகிய மூவுறுப்புகளை பயன்படுத்துகின்றனர். கற்பவர்கள் கண்கள், கைகள், காதுகள், மூளை ஆகிய நான்கு உறுப்புகளைப் பயன்படுத்துகின்றனர். புத்தகங்களை கண்களின் துணையோடு வாசித்து கற்கலாம் என்றாலும் நீண்ட நேரம் வாசித்தால் கண்கள் களைப்படைந்து விடும். ஆனால் கேட்பது மிகவும் எளிது. இதன் காரணத்தினாலேயே பள்ளி,கல்லூரிகளில் படிப்பவர்களுக்கு பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டாலும். ஒரு ஆசிரியர் பாடங்களை நடத்தியதை காதில் வாங்கிக்கொண்டு பிறகு புத்தகங்களை வாசிப்பது எளிதாக அமைகிறது. ஆனால் ஆசிரியர் பாடம் நடத்தும்போது காது கொடுத்து கேட்காத மாணவர்களால் பாடங்களை எளிதில் புரிந்துகொள்ள முடியாது. பாடங்களை வாசிக்கும்போதும் சில மாணவர்களுக்கு கவனக்குறைவு ஏற்படுகிறது. இப்படி கவனக்குறைவாக உள்ள மாணவர்களை 10 முறை, 20 முறை பாடங்களை எழுதிக்கொண்டு வருமாறு ஆசிரியர்கள் கூறுவர். இதனால் என்ன ஆகிறது என்றால் ஒரு வார்த்தை கூட விடாமல் திரும்ப திரும்ப எழுதுவதால் அந்த பாடம் எளிதில் மனதில் தங்குகிறது.அதிக நேரம் பேனா பிடித்து எழுதுவதால் அது ஒரு நுண்ணழுத்த சிகிச்சையாக அமைந்து மூளையை திறம்பட செயல்பட வைக்கிறது. கவனக்குறைவுள்ள மாணவர்கள் தினமும் 10 முறை தோப்புக்கரணம் போட்டு பழகி வந்தால், கண், காது, மூளை, கைகள் நான்கும் ஒருங்கிணைந்து செயல்பட ஆரம்பிக்கும். இதன் மூலம் உரிய நரம்புகள் தூண்டப்பட்டு வாசிக்கும் திறன், கேட்கும் திறன், விரைவாக எழுதும் திறன், நினைவாற்றல் முதலியவை அதிகரிக்கும்.
Image may contain: 1 person, sitting and outdoor
at March 24, 2018 No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest

இந்தியாவில் கிரக தேவதை வழிபாடுகள்

இந்தியாவில் கிரக தேவதை வழிபாடுகள்

ஒரு ஜோதிடர் முருகன் வழிபாடு இந்தியாவில் தமிழ் நாட்டில் மட்டுமே உள்ளது. வட இந்தியாவில் முருகன் வழிபாடு இல்லை, ஆனால் அங்கு பிள்ளையார் வழிபாடு அதிகமாக உள்ளது. இதற்கு என்ன காரணம் என்று கேட்டிருந்தார். அவருக்கு பதில் கூறும் முகமாக இந்த கட்டுரையை எழுதுகிறேன். இந்த கட்டுரையில் உள்ள கருத்துக்கள் அனைத்தும் என் மனதில் தோன்றிய அனுமானங்கள் மட்டுமே. இதுதான் நிச்சயமான காரணம் என்று சொல்ல நான் விரும்பவில்லை.
உலக நாடுகளில் இந்தியாவில் மட்டுமே நவக்கிரக வழிபாடும், நவக்கிரக தேவதா வழிபாடும் உள்ளது. உலகில் வேறு எந்த நாட்டிலும் இது போன்ற வழிப்பாட்டு முறைகள் கிடையாது என்பதால் ஜோதிட அடிப்படையில் இந்த வழிபாட்டு முறைகள் இந்தியாவில் எப்படி அமைந்துள்ளது எனப்பார்ப்போம்.
ராசி மண்டலத்தை நான்கு திசைகளாக பிரித்துள்ளார்கள். அந்த விவரம் கீழே தரப்பட்டுள்ளது.
மேசம்-சிம்மம்-தனுசு- கிழக்கு
ரிசபம்-கன்னி-மகரம்-தெற்கு
மிதுனம்-துலாம்-கும்பம்-மேற்கு
கடகம்-விருச்சிகம்-மீனம்-வடக்கு
நக்கிரகங்களில் சூரியன் கிழக்கு திசையைக்குறிக்கும் மேச ராசியில் உச்சமடைகிறான். சந்திரன் தெற்கு திசையைகுறிக்கும் ரிசப ராசியில் உச்சமடைகிறான். செவ்வாய் தெற்கு திசையைக்குறிக்கும் மகரத்தில் உச்சமடைகிறான். புதன் தெற்கு திசையைக்குறிக்கும் கன்னியில் உச்சமடைகிறான். குரு வடக்கு திசையைக்குறிக்கும் கடக ராசியில் உச்சமடைகிறான். சுக்கிரன் வடக்கு திசையைக்குறிக்கும் மீன ராசியில் உச்சமடைகிறான். சனி மேற்கு திசையைக்குறிக்கும் துலாம் ராசியில் உச்சமடைகிறான். ராகு தெற்கு திசையைக்குறிக்கும் ரிசப ராசியில் உச்சமடைகிறான். கேது வடக்கு திசையைக்குறிக்கும் விருச்சிகத்தில் உச்சமடைகிறான்.
நக்கிரகங்களில் சூரியன் மேற்கு திசையைக்குறிக்கும் துலாம் ராசியில் நீச்சமடைகிறான். சந்திரன் வடக்கு திசையைக்குறிக்கும் விருச்சிகத்தில் நீச்சமடைகிறான். செவ்வாய் வடக்கு திசையைக்குறிக்கும் கடகத்தில் நீச்சமடைகிறான். புதன் வடக்கு திசையைக்குறிக்கும் மீனத்தில் நீச்சமடைகிறான். குரு தெற்கு திசையைக்குறிக்கும் மகரத்தில் நீச்சமடைகிறான். சுக்கிரன் தெற்கு திசையைக்குறிக்கும் கன்னி ராசியில் நீச்சமடைகிறான். சனி கிழக்கு திசையைக்குறிக்கும் மேச ராசியில் மேச ராசியில் நீச்சமடைகிறான். ராகு வடக்கு திசையைக்குறிக்கும் விருச்சிக ராசியில் நீச்சமடைகிறான். கேது தெற்கு திசையைக்குறிக்கும் ரிசபத்தில் நீச்சமடைகிறான்.
நவக்கிரக தேவதைகள்
சூரியன்-சிவன் வழிபாடு
சந்திரன்- பார்வதி (அம்மன்) வழிபாடு
செவ்வாய்-முருகன்
புதன்- விஷ்னு
குரு- பிரஹஸ்பதி (ஆசாரியன்)
சுக்கிரன்-லக்ஷ்மி
சனி- சனி வழிபாடு
ராகு-சித்தர் வழிபாடு,துர்கை வழிபாடு
கேது-ரிஷி வழிபாடு, பிள்ளையார் வழிபாடு
வடக்கு திசை ராசியில் செவ்வாய்,சந்திரன், ராகு, புதன் நீச்சம். குரு,சுக்கிரன்,கேது உச்சம். எனவே வட இந்தியாவில் முருகன் வழிபாடு, அம்மன்வழிபாடு, சித்தர் வழிபாடு விஷ்ணு வழிபாடுகள் குறைவு. ஆனால் அங்கே மகான் (குரு) வழிபாடு, லக்ஷ்மி வழிபாடு ,ரிஷி வழிபாடு மற்றும் பிள்ளையார் வழிபாடு அதிகம்.
தெற்கு திசை ராசியில் செவ்வாய், சந்திரன், ராகு, புதன் உச்சம். குரு, சுக்கிரன்,கேது நீச்சம். எனவே தென் இந்தியாவில் குரு வழிபாடு, ரிஷி வழிபாடு,லக்ஷ்மி வழிபாடு குறைவு. ஆனால் முருகன் வழிபாடு , அம்மன் வழிபாடு , சித்தர் வழிபாடு விஷ்ணு வழிபாடுகள் அதிகமாக உள்ளது.
கிழக்கு திசை ராசியில் சூரியன் உச்சம், சனி நீச்சம். எனவே கிழக்கு இந்தியாவில் சிவ வழிபாடு அதிகம். சனி வழிபாடு குறைவு.
மேற்கு திசை ராசியில் சனி உச்சம், சூரியன் நீச்சம். எனவே மேற்கு இந்தியாவில் சனீஸ்வரன் வழிபாடு அதிகம். சிவ வழிபாடு குறைவு.
No automatic alt text available.

at March 24, 2018 No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest

பெயர் ஜோதிடத்தில் ஆங்கில எழுத்துக்கள்

பெயர் ஜோதிடத்தில் ஆங்கில எழுத்துக்கள்

----------------------------------------------------------------
A I J – ஆண் எழுத்துக்கள் (லிங்க எழுத்துக்கள்)
B D O – வசீகர பெண் எழுத்துக்கள் (ரகசியம் காக்கும் எழுத்துக்கள்)
P Q R – வசீகர ஆண் எழுத்துக்கள். (ஓரளவுக்கு ரகசியம் காக்கும் எழுத்துக்கள்)
C E F L – ஏமாளிப்பெண் எழுத்துக்கள்
G S – குழப்பமான பெண் எழுத்துக்கள்.
H K M N W X – அர்த்த நாரி எழுத்துக்கள் (ஆண்,பெண் தன்மைகள் கலந்தது)
T - மன வளர்ச்சியற்ற ஆண் எழுத்து.
Z – மன வளர்ச்சியற்ற பெண் எழுத்து.
U V Y- பெண் எழுத்துக்கள் (யோனி எழுத்துக்கள்)
பெயரின் முதல் எழுத்தைக்கொண்டு மனிதர்களிடமிருந்து வெளிப்படும் ஆண் ,பெண் தன்மைகளை தெரிந்துகொள்ளலாம். ஆணுக்கு ஆண் எழுத்து பெயரின் முதல் எழுத்தாக அமைந்தால் அந்த ஆண் முழுமையாக ஆண் தன்மைகளை வெளிப்படுத்துவான். பெண்ணுக்கு பெண் எழுத்து பெயரின் முதல் எழுத்தாக அமைந்தால் அந்த பெண் முழுமையாக பெண் தன்மைகளை வெளிப்படுத்துவாள். ஆணுக்கு பெண் எழுத்தும், பெண்ணுக்கு ஆண் எழுத்தும் பெயரின் முதல் எழுத்தாக அமைந்தால் அவர்கள் மாறுபட்ட பாலின தன்மைகளை கொஞ்சம் வெளிப்படுத்துவர்.
இவை பொதுப்பலன் மட்டுமே. 
at March 24, 2018 No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest

ஆங்கில தேதிக்கு கிழமை கண்டுபிடிக்கும் வழி

ஆங்கில தேதிக்கு கிழமை கண்டுபிடிக்கும் வழி

ஆங்கில வருடங்களில் எந்த வருடமானாலும் ஏதாவது ஒரு குறிப்பிட்ட தேதிக்கு கிழமை கண்டுபிடிக்க ஒரு எளிய வழிமுறை இருக்கிறது . அதை இங்கு விளக்குகிறேன்.
1 வருடத்திற்கு 365 நாட்கள்
1லீப் வருடத்திற்கு 366 நாட்கள்
1 வாரத்திற்கு 7 நாட்கள்
கிழமைகள் 7 நாட்களுக்கு ஒரு முறை திரும்ப திரும்ப சுழற்சியாக வரும். ஆகவே ஒரு வருடத்தின் மொத்த நாட்களான 365 ஐ 7 ஆல் வகுக்க வேண்டும்.
365/7 = ஈவு 52 மீதி 1
ஈவை தள்ளிவிட்டு மீதத்தை மட்டும் எடுத்துக்கொள்வோம்.
(1)ஒரு வருடத்திற்கு மீதம் -1 நாள்
(2)100 வருடத்திற்கு மீதம் – 100 நாள்
(100*1=100)
(3) 100 வருடங்களில் 24 லீப் வருடங்கள் வரும். லீப் வருடங்களில் வரும் அதிக நாட்கள் -24 நாட்கள்
(2)+(3) = 100+24= 124 நாட்கள்
இந்த 124ஐ திரும்பவும் 7 ஆல் வகுக்க வேண்டும்.
124/7= ஈவு 17 மீதி 5
ஈவை தள்ளிவிட்டு மீதத்தை மட்டும் எடுத்துக்கொள்வோம்.
எனவே
(அ) 100 வருடங்களுக்கு மீதம் – 5 நாட்கள்
(ஆ) 400 வருடங்களிக்கு மீதம் (4*5=20) – 20 நாட்கள்
(இ) 400 வது வருடம் லீப் வருடமாகும் ஆகவே அதிக நாட்கள் – 1 நாள்
(100 வது, 200வது, 300வது வருடங்கள் லீப் வருடங்கள் இல்லை)
(ஆ)+(இ) = 20+1=21 நாட்கள்
இந்த 21 ஐ திரும்பவும் 7 ஆல் வகுக்க வேண்டும்.
21/7= ஈவு 3 மீதம் 0
ஞாபகத்தில் வைக்க வேண்டியது
100 வருடங்களுக்கு மீதம்- 5 நாட்கள்
400 வருடங்களுக்கு மீதம்- 0 நாட்கள்
எந்த வருடத்தில் எந்த தேதிக்கு கிழமை கண்டுபிடிக்க வேண்டுமோ அந்த வருடத்திற்கு முந்தைய வருடதிற்கான மீத நாட்களை கண்க்கிட்டுக்கொண்டால் தேவையான ஆண்டில் வரும் தேதிக்கு கிழமையை கண்டு பிடிக்கலாம்.
உதாரணமாக 28-07-1968 அன்று என்ன கிழமை என்று பார்ப்போம்.
முதலில் 1968 ஆம் ஆண்டுக்கு முந்தைய ஆண்டான 1967 க்கு மீத நாட்கள் எத்தனை என்று பார்ப்போம்.
1967 கீழ் கண்டவாறு பிரித்து எழுதிக்கொள்ள வேண்டும்
(க)1600 (4*400=1600) வருடங்களுக்கு மீதம் – 4*0 = 0 நாட்கள்
(கா) 300 (3*100 = 300) வருடங்களுக்கு மீதம் – 3*5 = 15 நாட்கள்
(கி) 67 வருடங்களுக்கு மீதம் – 67 நாட்கள்
(கீ) 1900 முதல் 1967 வரை 16 லீப் வருடங்கள் வருகின்றன ,எனவே இந்த 16 லீப் வருடங்களுக்கு அதிக நாட்கள் – 16 நாட்கள்
(க)+(கா)+(கி)+(கு) = 0+15+67+16 =98
98 ஐ 7 ஆல் வகுக்க வேண்டும்.
98/7= ஈவு 14 மீதி 0
ஈவை தள்ளிவிட்டு மீதத்தை மட்டும் எடுத்துக்கொள்ளவும்.
இப்பொழுது 28-07-1968 அன்று என்ன கிழமை என்று பார்ப்போம்.
(ச) 1967 ஆம் ஆண்டின் மீதம் – 0 நாட்கள்
(சா) 1968 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் – 31 நாட்கள்
(சி) 1968 ஆம் ஆண்டு பிப்பிரவரி மாதம் – 29 நாட்கள்
(1968 லீப் ஆண்டு)
(சீ) 1968 ஆம் ஆண்டு மார்ச் மாதம் – 31 நாட்கள்
(சு) 1968 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் – 30 நாட்கள்
(சூ) 1968 ஆம் ஆண்டு மே மாதம் – 31 நாட்கள்
(செ) 1968 ஆம் ஆண்டு ஜூன் மாதம் – 30 நாட்கள்
(சே) 1968 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 28 ஆம் தேதி வரை- 28 நாட்கள்
(ச)+(சா)+(சி)+(சீ)+(சு)+(சூ)+(செ)+(சே) = 0+31+29+31+30+31+30+28 = 210
இந்த 210 ஐ 7 ஆல் வகுக்க வேண்டும்
210/7 = ஈவு 30 மீதி 0
ஈவை தள்ளிவிட்டு மீதத்தை மட்டும் எடுத்துக்கொள்ளவும்.
மீதி 0 வந்தால் ஞாயிற்றுக்கிழமை
மீதி 1 வந்தால் திங்கள் கிழமை
மீதி 2 வந்தால் செவ்வாய்க்கிழமை
மீதி 3 வந்தால் புதன் கிழமை
மீதி 4 வந்தால் வியாழக்கிழமை
மீதி 5 வந்தால் வெள்ளிக்கிழமை
மீதி 6 வந்தால் சனிக்கிழமை
நாம் உதாரணமாக எடுத்துக்கொண்ட 28-07-1968 அன்று மீதி 0 வருவதால் அன்று ஞாயிற்றுக்கிழமையாகும். இவ்வாறு எந்த வருடத்தில் உள்ள தேதியானாலும் கிழமை கண்டு பிடித்துக்கொள்ளலாம்.
Image may contain: 1 person, sitting

at March 24, 2018 No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest

பருவ காலங்கள்

பருவ காலங்கள்
------------------------
சூரியனை பூமி சுற்றுவதால் பூமியில் பருவ மாற்றங்கள் ஏற்படுகிறது. ஆனால் பூமியிலிருந்து பார்க்கும்பொழுது சூரியன் பூமியை சுற்றி வருவதுபோல் காட்சியளிக்கிறது. இதற்கு ஒப்புமை இயக்கம் என்று பெயர். இத்தகைய ஒப்புமை இயக்கத்தின் மூலம் சூரியன் மாதத்திற்கு ஒரு ராசி வீதம் நகர்ந்து செல்கிறது. இதன்படி சித்திரையில் மேசத்திலும், வைகாசியில் ரிசபத்திலும், ஆனியில் மிதுனத்திலும், இப்படியாக 12 மாதங்களில் 12 ராசிகளில் நகர்ந்து செல்கிறது. சித்திரை மாதம் கிருத்திகை நட்சத்திரத்தில் சூரியன் நகர்ந்து செல்லும்பொழுது பூமியில் வெப்பம் மிகவும் அதிகமாக உச்சத்தில் இருக்கும். இதன் அடிப்படையிலேயே கிருத்திகை நட்சத்திரத்தின் அதி தேவதை அக்னி பகவான் என்று கூறப்பட்டுள்ளது. இதுபோல் ஐப்பசி மாதம் சூரியன் சுவாதி நட்சத்திரத்தில் நகர்ந்து செல்லும்பொழுது பூமியில் அதிகம் காற்று வீசும் , குறிப்பாக நம் பாரதத்தில் உள்ள ஒரிசா, ஆந்திரா பகுதியில் பலத்த காற்று வீசும், இதன் அடிப்படையில்தான் சுவாதி நட்சத்திரத்தின் அதிதேவதை வாயு பகவான் என்று கூறுகிறார்கள். தை மாதம் திருவோண நட்சத்திரத்தில் சூரியன் செல்லும் காலம் மண் பூதம் வளரும் காலம். இதன் அடிப்படையிலேயே திருவோணம் நட்சத்திரத்தின் அதிதேவதை விஷ்ணு (வாமன அவதாரம்) என்று கூறப்படுகிறது. வாமனன் மூன்றடியில் பூமியை (மண்ணை) அளந்தவன். தை மாதம் அறுவடைக்காலமாகும். அறுவடைக்காலத்தில் அறுவடை பணியில் உள்ள உழவர்கள் வயலை கூறு பிரித்துக்கொண்டு அறுவடை செய்வார்கள். கூறு பிரிக்கும் ஆளுக்கு கூறுவாடி என்று பெயர். இந்த கூறுவாடி தன் கால்களால் எட்டு வைத்து வயலை அளந்து கூறு வைப்பான். அதன் பின் அறுவடை செய்யும் பணியாளர்கள் வயலை அறுக்கத்தொடங்குவார்கள்.பொங்கல் பண்டிகையை பெரும்பாலும் சூரிய வழிபாடு என நினைக்கிறார்கள். உண்மையில் பொங்கல் பண்டிகை மண் வழிபாடாகும். மண்ணில் விளைந்ததை மண்ணிற்கு (முற்றம்) படைத்து கொண்டாடுவதாகும். ஆடி மாதம் பூசம் நட்சத்திரத்தில் சூரியன் செல்லும் காலம் நீர் வளம் பெருகும் காலம்.பூசம் நட்சத்திரத்தின் அதி தேவதை பிரஹஸ்பதி(குரு).ஆடி பெருக்கு கொண்டாடுவது, ஆறுகளில் நீர் பெருக்கெடுத்து ஓடுவதை கொண்டாடத்தான்.
No automatic alt text available.

at March 24, 2018 No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest

Friday, 23 March 2018

*கோவிலுக்குள் மணி அடித்துவிட்டு வணங்குவது ஏன் தெரியுமா?

*கோவிலுக்குள் மணி அடித்துவிட்டு வணங்குவது ஏன் தெரியுமா?

🕉 *ஓம் நமசிவாய!* 🔔
*கோவிலில் மணி அடிப்பதற்கு பின் ஒளிந்துள்ள ரகசியம்...!!*
கோவிலுக்கு செல்லும் அனைவரும் ஏன்? எதற்கு? என தெரியாமல் பின்பற்றும் விஷயங்களில் ஒன்று கோவில் மணி அடிப்பது. கோவிலில் மணி அடித்துவிட்டு வணங்கினால் கடவுள் காது கொடுத்து கேட்பார் என நினைத்துக் கொண்டிருக்கின்றனர். கோவிலில் அடிக்கும் மணி ஓசைக்கும், மனிதர்களின் மூளைக்கும் இடையே தொடர்பு உள்ளது என சாஸ்திரத்தில் நமது முன்னோர்கள் கூறியிருக்கின்றனர்.
*கோவிலுக்கு செல்லும் அனைவரும் மணி அடிப்பது ஏன்?*
🔔 பூஜை செய்யும் போது பயன்படுத்தப்படும் ஒரு பொருளாக உள்ள மணி ஓசையின் பின் ஒரு அறிவியல் நுண்ணறிவும் இருக்கிறது. கோவில் மணி அடித்துவிட்டு வணங்கினால், தங்களின் வேண்டுதலை கடவுள் காது கொடுத்து கேட்பார் என்று சிலர் நினைப்பார்கள். ஆனால் அது உண்மை அல்ல.
🔔 ஆகம சாஸ்திரங்களின் படி, கோவில் மணியில் இருந்து வெளிப்படும் ஓசை எதிர்மறை சக்திகளை விரட்டி, மனதிற்கும், உடலுக்கும் நேர்மறை சக்தியை அதிகரிக்க செய்கிறது.
🔔 கோவில் மணியின் ஓசை மனிதனின் மூளை செயல்திறனை மேலோங்க செய்கிறது என்று அறிவியலில் ஒரு பின்னணி இருக்கிறது.
கோவில் மணியின் ஓசை தனித்துவமாக கேட்பது ஏன்?
🔔 கோவில் மணியில் இருந்து வெளிவரும் ஒலியில் ஒரு தனித்துவம் இருக்கும். அதற்கு கோவில் மணிகளில் உள்ள கேட்மியம், துத்தநாகம், நிக்கல், குரோமியம் மற்றும் மாங்கனீசு போன்ற உலோகங்கள் தான் காரணமாகும்.
🔔 கோவில் மணியில் இருந்து வெளிவரும் ஒலியானது, மூளையின் வலது மற்றும் இடது பக்கங்களை ஒரு சமநிலைக்கு கொண்டு வர உதவுகின்றது.
🔔 *கோவில் மணியில் இருந்து வெளிப்படும் சத்தம் உடலில் நேர்மறை ஆற்றல் மற்றும் மூளையில் செயல்திறனை அதிகரிக்கச் செய்து, விழிப்புணர்வை மேம்படுத்தி, மனதிற்கு நிறைவான அமைதி மற்றும் நிம்மதியை அளிக்கிறது.*
🙏 *ஓம் நமசிவாய!*
மணியடிப்பது என்பது துர்தேவதைகளை விரட்டுவதற்காக என்று பெரியோர்களால் சொல்லப்பட்டுள்ளது. பூஜையின்போது மணியை உபயோகப்படுத்துவதற்கு முன்பாக ‘ஆகமார்த்தம் து தேவாநாம் கமனார்த்தம் து ரக்ஷஸாம், கண்டாரவம் கரோம்யாதௌ தேவதாஹ்வான லாஞ்ச்சநம்’ என்ற மந்திரத்தைச் சொல்வார்கள். தீய சக்திகள் விலகி இறைசாந்நித்யம் இந்த இடத்தில் பெருகட்டும் என்பது இதன் பொருள். 

மணியடிப்பது என்பது அதற்காக மட்டுமல்ல. பூஜையின்போது நமது மனம் அங்குமிங்கும் அலைபாய்ந்து கொண்டிருந்தாலும், முக்கியமான தருணத்திலாவது இறைவனின்பால் நமது மனம் ஒன்றவேண்டும் என்பதற்காகவே மணி ஓசையை எழுப்புகிறார்கள். தீபாராதனையின்போது மணி ஓசை எழுவதால் நாம் அநாவசிய பேச்சுகளை நிறுத்தி இறைவனின்பால் நமது சிந்தனையைச் செலுத்துகிறோம். மணிஓசை கேட்டதும் நம்மையும் அறியாமல் நமது கரங்கள் இறைவனைத் தொழுகின்றன. சிந்தனையை ஒருமுகப்படுத்துவதற்காக மணியடிக்கப்படுகிறது என்பதும் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டிய கருத்து. 

நைவேத்யம் செய்யும்போது கண்டிப்பாக மணிஓசையை எழுப்ப வேண்டும் என்கிறது சாஸ்திரம். மணி ஓசையைக் கேட்டதும் இறைவன் ஓடோடி வந்து நமது காணிக்கையை ஏற்றுக்கொள்கிறான். மணி ஓசையினால் நமது சிந்தனையும் ஒருமுகப்படுகிறது. சிரத்தையோடு இறைவனின்பால் நமது கவனமும் செல்கிறது. சிரத்தையுடன் கூடிய பக்தியைத்தான் இறைவன் நம்மிடம் இருந்து எதிர்பார்க்கிறான். நைவேத்யம், தீபாராதனை நேரங்கள் தவிர வெறுமனே மணியை அடிப்பது தவறு.
at March 23, 2018 No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest

Thursday, 22 March 2018

நாக தோஷம் போக்கும் எளிமையான பரிகாரங்கள்,


நாக தோஷம் போக்கும் எளிமையான பரிகாரங்கள்,


நாக தோஷம் போக்கும் எளிமையான பரிகாரங்கள்,


  • ராகு, கேது, ஸ்தலங்களுக்கு சென்று முறையான பரிகாரங்களை செய்து வந்தால் நாக தோஷம் விலகி நல்ல குழந்தைகள் பிறப்பார்கள்.
    ராகு, கேது, தலமான காளகஸ்திக்குச் சென்று மூன்று இரவுகள் தங்கி ஈசனை வணங்கி வந்தால் நாக தோஷம் விலகி நல்ல குழந்தைகள் பிறப்பார்கள்.
    ராமேஸ்வரம் சென்று மூன்று நாள் தங்கி கடலில் நீராடி ராமலிங்க சுவாமியை வணங்கி வந்தால் சர்ப்ப தோஷம் பரிகாரமடைந்து குழந்தைகள் பிறப்பார்கள்.
    இராமநாதபுரம் ரெயில் நிலையத்தில் இறங்கி தேவிபட்டினம் போகும் பஸ்சில் ஏறி நவபாஷணத்தில் இறங்கவும். கடலில் ஸ்ரீராமபிரானால் அமைக்கப்பட்ட நவக்கிரகங்கள் இருக்கின்றன. கடலில் நீராடி நவக்கிரக பூஜை செய்தால் நாகதோஷம் பரிகாரமடையும். இதனால் குழந்தை பாக்கியம் உண்டாகும்.
    ராமநாதபுரத்திலிருந்து தர்ப்ப சயனம் சென்று விபீடணனுக்கு அபயமளித்த சேத்திரம் வணங்கி, அங்குள்ள தல விருட்சத்தில் தாங்கள் கட்டியுள்ள உடையில் சிறிது கிழித்து ஒரு சிறு கல் வைத்து மரக்கிளையில் கட்டி வந்தால் நாகதோஷம் விலகும்.
    நாகர்கோவிலில் நாகேஸ்வரர் ஆலயம் இருக்கிறது. அங்கு சென்று மூன்று இரவு தங்கி ஈசனை வணங்கினால் நாகதோஷம் பரிகாரமாகும்.
    கும்பகோணத்திற்கு அருகில் திருநாகேசுவரம் இருக்கிறது. அந்த ஆலயத்திற்குச் சென்று ஈசனை வழிபட்டால் நாகதோஷம் நிவர்த்தியாகும்.
    பொருள் படைத்தவர் தங்கத்தால் குழந்தை உருவம் செய்து ஏழைக்கு அன்னம் அளித்து வேட்டி, துண்டு தாம்பூலம் பழத்துடன் சொர்ண விக்ரகத்தைத் தானம் செய்தால் நாகதோஷம் விலகும்.
    தங்கத்தில் செய்ய சக்தியில்லாதவர்கள் வெள்ளியில் செய்து தானம் அளிக்கலாம்.
    தங்கம் அல்லது வெள்ளி சிறு ஐந்து தலை நாகம் செய்து வீட்டில் வைத்து நாற்பது நாள்கள் பாலபிஷேகம் செய்து, பூஜித்து பிறகு ஒருவருக்கு புது வேட்டி, துண்டு தாம்பூலம் தட்சணையுடன் நாக விக்கிரகத்தையும் தானம் செய்யலாம்.
    கருங்கல்லில் நாகப் பிரதிஷ்டை செய்து ஆறு, குளம் அருகில் வைத்து நாற்பது நாள்கள் பாலபிஷேகத்துடன் பூசித்து தினமும் 108 முறை வலம் வந்தால் நாக தோஷம் நிவர்த்தியாகும்.
    இரண்டு நாகங்கள் பின்னிக்கொண்டு ஒன்றின் முகத்தை ஒன்று பார்க்குமாறு கல்லில் வடித்து அரசமரத்தின் அடியில் பிரதிஷ்டை செய்து நாற்பது நாட்கள் விளக்கேற்றி வைத்து பூஜித்தால் நாகதோஷம் விலகும்.
    கண்ணன் நடனமாடுவது போலவும், அவனுக்கு ஐந்து தலைநாகம் குடை பிடிப்பது போலவும் கல்லில் வடித்து வேம்பும் அரசும் இணைந்திருக்கும் குளக்கரையில் பிரதிஷ்டை செய்து நாற்பது நாள் விளக்கேற்றி வலம் வந்து வணங்கினால் நாகதோஷம் நிவர்த்தியாகும்.
    சிவலிங்கத்திற்கு ஐந்து தலை நாகம் குடை பிடிப்பது போல் சிலை வடித்து நதிக்கரை அல்லது குளக்கரையில் பிரதிஷ்டை செய்து நாற்பது நாள் பூஜித்து வலம் வந்தால் நாகதோஷம் பரிகாரமாகும்.
    குளம் அல்லது நதிக்கரையில் அரசு வேம்பு கன்றுகளை நட்டு, முறையாகத் திருமணம் செய்து குறைந்தது நூறு தம்பதிகளுக்கு விருந்தும் தட்சணை தாம்பூலம் அளித்தால் நாகதோஷம் நிவர்த்தியாகும். நல்ல குழந்தைகள் பிறப்பதுடன் வாழ்க்கையும் இன்பமாக அமையும்.
    வசதி உள்ளவர்கள் ஓர் ஏழைக்கு பயிர் நிலம் வாங்கி தானம் அளித்தால் நாகதோஷம் நிவர்த்தியாகும்.
    ஓர் ஏழைக்கு அன்னதானம் செய்து அளித்து புது வேட்டி துண்டு. தாம்பூலம் தட்சணையுடன் பால் பசுவும் கன்றையும் தானம் செய்தால் நாகதோஷம் விலகி சத்புத்திரர்கள் பிறப்பார்கள்.
    வீட்டில் ராகு படம் வைத்து தினமும் பூஜை செய்யலாம்.
    தினமும் இராமாயணம் படிக்கலாம்.
    மாதம் ஒரு சிவாலயம் சென்று ஈசனை வழிபட்டு வரலாம். நவக்கிரகங்களை சுற்றி வந்து வழிபாடு செய்யலாம்.
    ஒவ்வொரு மாதமும் முதல் செவ்வாய் அல்லது வெள்ளிக்கிழமைகளில் ஒரு தம்பதிக்கு உணவு அளித்து தாம்பூலம் தட்சணை கொடுத்து வலம் வந்து நமஸ்கரித்து வருவதால் எல்லா தோஷங்களும் நிவர்த்தியாகி வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.
    புத்திரதோஷம் ராகுவால் ஏற்பட்டால் செவ்வாய்க்கிழமைகளில் ராகு காலத்தின் போது ராகுவின் இஷ்ட தெய்வமான பத்ரகாளிக்கு எலுமிச்சம் பழத்தோலில் எண்ணெய் விட்டுத் திரிபோட்டு விளக்கு ஏற்றி வைக்க வேண்டும். தோஷம் நீங்கி குழந்தை பிறந்து நீண்ட ஆயுளுடன் இருப்பர்.
    சிவாலயம் சென்று நவக்கிரகப் பிரதட்சணம் செய்யும் போது முதலில் வசமாக ஒன்பது முறை வலம் வந்து பிறகு ராகு கேதுவுக்கு பிரீதியாக இரண்டு முறை இடமாக வலம் வரவேண்டும். இவ்விதம் தினமும் செய்து வந்தால் நாகதோஷம் விலகி சத்புத்திரர்கள் பிறந்து நீண்ட ஆயுகளுடன் இருப்பார்கள்.
    நவக்கிரகங்களை பிரதட்சணம் செய்யச் செல்லும் போது ஓரு பிடி உளுந்து எடுத்துச் செல்லவும். ராகுவின் பாதங்களில் உளுந்தையும் கேதுவின் பாதங்களில் கொள்ளையும் வைத்து வணங்கி வந்தால் நாக தோஷம் பரிகாரமாகும்.
    ராகுவை பிரீதி செய்ய கருப்பு வேட்டி வாங்கி தானம் செய்வதாலும் நாகதோஷம் அகலும்.


at March 22, 2018 No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest

எல்லா தொழிலுக்கும் ஏற்ற மந்திரங்கள்!

எல்லா தொழிலுக்கும் ஏற்ற மந்திரங்கள்!

சகல தொழிலுக்கும்
பிருகு முனிவர் பாடல் :

பாரப்பா அகரத்தை முந்தி நாட்டு
பகடில்லை ஆகாரம் பின்னே நாட்டே
சேரப்பா இகாரத்தை செபிப்பாய் பின்னே
செயமான ஈகாரம் உகாரம் கேளு
பாரப்பா ஊ -எ -ஏ-ஐ-ஒ -என்று
மகிமையுள்ள ஔம் தனிலே முடித்துப்போடு
காரப்பா பீசமிவை பதினொன்றாகும்
கண்மணியே இதைக்கடந்து மெய்யை நோக்கே ..

தமிழ் மொழியின் தொன்மையை உணர்ந்தவர்கள் சாகாவரம் பெற்றவர்கள் ஆவார்கள். தமிழ் மொழியில் உள்ள உயிர் எழுத்துகள் மற்றும் மெய் எழுத்துகளை தெரிந்து கொண்டு அதனுடன் "ம் " மற்றும் "ங்" போன்ற எழுத்துகளை(பீஜங்கள்) சேர்த்து கொண்டு உச்சரிக்கும்போது பலவித சித்திகளும் ,முக்தியும் கிடைக்கும் என பிருகு முனிவர் கூறுகிறார்.
முதலில் "அம்" என்று செபம் செய்து ,பிறகு "ஆம்" என்றும் ,"இம்", "ஈம்" ,"உம்", "ஊம்","எம்", "ஏம்","ஐம்", "ஓம்", "ஔம்" என்றும் பதினோரு வகையான உயிர் பீசங்களை தனித் தனியாக செபம் செய்யவேண்டும் .
மனதிற்குள் செபித்தால் தான் மந்திரத்திருக்கு பலன் அதிகம் .
இவ்வாறு ஒவ்வொரு மந்திரத்தையும் மனதிற்குள் ஒரு லட்சம் முறை கூறவேண்டும் என கூறுகிறார்.
பிறகு மெய் எழுத்துகளுடன் "ங்" பீஜத்தை சேர்த்து கொண்டு செபிக்கவேண்டும் எனவும் கூறுகிறார். முதலில் "கங்" என்றும், பிறகு தொடர்ச்சியாக எல்லா மெய் எழுத்துகளுடன் இந்த பீஜத்தை சேர்த்து லட்சம் முறை செபிக்க வேண்டும் என கூறுகிறார்.
உதாரணமாக :
முதலில் "ஓம்" பிறகு "அம்" இறுதியில் "நம:" என்று உச்சரிக்கலாம் .
"ம்" பீஜத்தை சேர்த்து மந்திரம் கூறும் முறை ..
"ஓம் அம் நம: "-என்று உச்சரித்தால் சித்தி கிடைக்கும்.
"ங்" பீஜத்தை சேர்த்து மந்திரம் கூறும் முறை ..
"ஓம் அங் நம: " என்று உச்சரித்தால் முக்தி கிடைக்கும்.
நமக்கு சித்திகள் வேண்டும் என்றால் "ம்" பீஜத்தையும் முக்தி வேண்டுமென்றால் "ங்" பீஜத்தையும் சேர்த்து உச்சரித்து பலன்களை பெறலாம் என்று கூறுகிறார்.
இவ்வாறு பீசங்களை செபிக்கும்போது மைவிழியாள் போகத்தை நிறுத்த வேண்டும் என கூறுகிறார். இவ்வாறு செய்தால் அறுபத்து நான்கு வகையான சித்திகளும் நிச்சயம் கிடைக்கும் என கூறுகிறார்.
சில முக்கிய தமிழ் மந்திரங்கள் உங்களுக்காக....
ஓம் அம் நம: -சித்து விளையாடும் தன்மை கிடைக்கும்,மரணத்தை வெல்லலாம் .
ஓம் அங் நம: -முக்தி வழியான ஞானம் கிடைக்கும்
ஓம் ஆம் நம:- நினைத்தை வரவழைக்கும் ஆகர்ஷண தொழில் சித்தியாகும்.
ஓம் இம் நம: -உடல் புஷ்டி ஆகும்.
ஓம் ஈம் நம: -சரஸ்வதியின் கடாட்சம் கிடைக்கும் .
ஓம் உம் நம: -சகல தொழிலுக்கும் பலமுண்டாகும்.
ஓம் ஊம் நம:-உச்சாடன தொழில் சித்தியாகும்.
ஓம் எம் நம: சத்வ குணம் உண்டாகும்.
ஓம் ஏம் நம:-சர்வமும் வசியமாகும்.
ஓம் ஐம் நம:- ஆண்களை வசியபடுத்தும்.
ஓம் ஓம் நம: வாக்கு பலித சித்தி உண்டாகும்.
ஓம் ஔம் நம: - வாக்கில் ஒளி உண்டாகும்
.
at March 22, 2018 No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
Newer Posts Older Posts Home
Subscribe to: Posts (Atom)

நாம் தவிர்க்க வேண்டிய 8 மன விஷங்கள்!

 நாம் தவிர்க்க வேண்டிய 8 மன விஷங்கள்! நமது மன அமைதியையும் மகிழ்ச்சியையும் நாமே அறியாமல் அழிக்கும் 8 நச்சு எண்ணங்கள் என்னென்ன என்று தெரிந்துக...

  • குழந்தைக்கு முடி எடுக்கக்கூடாத காலம்
                                    எங்களின் ஆன்லைன் சேவை -  http://astroav.in/                             குழந்தைக்கு முடி எடுக்கக்கூடாத க...
  • கருப்பர் வரலாறு :
                                                                            கருப்பர் வரலாறு :  "கருப்பண்ணசாமி' கருப்பன், கருப்பணன...
  • ஆத்துப்பொள்ளாச்சிஸ்ரீஆனந்தாய்பேச்சியம்மன் திருக்கோவிலை உலகம் உற்று நோக்கிறது!!!
    ஸ்ரீஆனந்தாய்பேச்சியம்மன் திருக்கோவிலை உலகம் உற்று நோக்கிறது!!! ஸ்ரீ   ஆனந்தாய்பேச்சியம்மன்   (எங்கும் இல்லாத ஏழு கலசம்) '...

கும்பாபிஷேகம்

  • Home

About Me

sriannathaipechiamman
View my complete profile

Report Abuse

Labels

  • https://en.wikipedia.org/wiki/User_talk:Annathaiamman/sandbox#.E0.AE.AA.E0.AE.95.E0.AF.8D.E0.AE.A4.E0.AE.95.E0.AF.8B.E0.AE.9F.E0.AE.BF.E0.AE.95.E0.AE.B3.E0.AF.87

Blog Archive

  • ▼  2026 (815)
    • ▼  August (3)
      • நாம் தவிர்க்க வேண்டிய 8 மன விஷங்கள்!
      • நாம் சும்மா சொல்லும் ஒரு வார்த்தைக்கு இவ்வளவு பெரி...
      • ஆம்! "கற்றல் நிற்கும் இடத்தில்தான் முதுமை தொடங்குக...
    • ►  July (18)
    • ►  June (3)
    • ►  May (4)
    • ►  April (77)
    • ►  March (150)
    • ►  February (134)
    • ►  January (426)
  • ►  2025 (472)
    • ►  December (284)
    • ►  November (128)
    • ►  October (25)
    • ►  September (9)
    • ►  August (3)
    • ►  July (3)
    • ►  June (1)
    • ►  May (3)
    • ►  April (1)
    • ►  March (5)
    • ►  February (1)
    • ►  January (9)
  • ►  2024 (33)
    • ►  December (5)
    • ►  November (7)
    • ►  October (2)
    • ►  September (1)
    • ►  August (5)
    • ►  July (6)
    • ►  June (2)
    • ►  May (2)
    • ►  April (3)
  • ►  2023 (31)
    • ►  December (1)
    • ►  August (4)
    • ►  July (2)
    • ►  June (8)
    • ►  May (6)
    • ►  April (2)
    • ►  March (1)
    • ►  February (1)
    • ►  January (6)
  • ►  2022 (58)
    • ►  December (1)
    • ►  November (3)
    • ►  October (2)
    • ►  September (2)
    • ►  August (4)
    • ►  May (12)
    • ►  April (21)
    • ►  March (9)
    • ►  February (2)
    • ►  January (2)
  • ►  2021 (23)
    • ►  May (15)
    • ►  April (6)
    • ►  March (1)
    • ►  January (1)
  • ►  2020 (14)
    • ►  August (1)
    • ►  May (4)
    • ►  February (3)
    • ►  January (6)
  • ►  2019 (305)
    • ►  December (8)
    • ►  November (15)
    • ►  October (32)
    • ►  September (96)
    • ►  August (19)
    • ►  July (66)
    • ►  June (5)
    • ►  May (18)
    • ►  April (3)
    • ►  March (17)
    • ►  February (13)
    • ►  January (13)
  • ►  2018 (276)
    • ►  December (21)
    • ►  November (10)
    • ►  October (45)
    • ►  September (17)
    • ►  August (26)
    • ►  July (5)
    • ►  June (40)
    • ►  May (28)
    • ►  April (10)
    • ►  March (23)
    • ►  February (19)
    • ►  January (32)
  • ►  2017 (493)
    • ►  December (6)
    • ►  November (4)
    • ►  October (20)
    • ►  September (5)
    • ►  July (41)
    • ►  June (109)
    • ►  May (140)
    • ►  April (101)
    • ►  March (54)
    • ►  February (13)
Watermark theme. Powered by Blogger.