தோப்புக்கரணம்
கல்வி
கற்பதில் கண்கள்,கைகள்,காதுகள், மூளை ஆகிய நான்கு உறுப்புகள் முக்கிய
பங்கு வகிக்கின்றன. இதில் கண்கள் வாசிக்கும் திறனையும், கைகள் எழுதும்
திறனையும், காதுகள் கேட்கும் (செவி சாய்க்கும்) திறனையும், மூளை
நினைவாற்றல் மற்றும் பகுத்தறியும் திறனை பெற்றுள்ளன. கற்பிப்பவர்கள்,
கைகள், வாய், மூளை ஆகிய மூவுறுப்புகளை பயன்படுத்துகின்றனர். கற்பவர்கள்
கண்கள், கைகள், காதுகள், மூளை ஆகிய நான்கு உறுப்புகளைப்
பயன்படுத்துகின்றனர். புத்தகங்களை கண்களின் துணையோடு
வாசித்து கற்கலாம் என்றாலும் நீண்ட நேரம் வாசித்தால் கண்கள் களைப்படைந்து
விடும். ஆனால் கேட்பது மிகவும் எளிது. இதன் காரணத்தினாலேயே
பள்ளி,கல்லூரிகளில் படிப்பவர்களுக்கு பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டாலும்.
ஒரு ஆசிரியர் பாடங்களை நடத்தியதை காதில் வாங்கிக்கொண்டு பிறகு புத்தகங்களை
வாசிப்பது எளிதாக அமைகிறது. ஆனால் ஆசிரியர் பாடம் நடத்தும்போது காது
கொடுத்து கேட்காத மாணவர்களால் பாடங்களை எளிதில் புரிந்துகொள்ள முடியாது.
பாடங்களை வாசிக்கும்போதும் சில மாணவர்களுக்கு கவனக்குறைவு ஏற்படுகிறது.
இப்படி கவனக்குறைவாக உள்ள மாணவர்களை 10 முறை, 20 முறை பாடங்களை
எழுதிக்கொண்டு வருமாறு ஆசிரியர்கள் கூறுவர். இதனால் என்ன ஆகிறது என்றால்
ஒரு வார்த்தை கூட விடாமல் திரும்ப திரும்ப எழுதுவதால் அந்த பாடம் எளிதில்
மனதில் தங்குகிறது.அதிக நேரம் பேனா பிடித்து எழுதுவதால் அது ஒரு நுண்ணழுத்த
சிகிச்சையாக அமைந்து மூளையை திறம்பட செயல்பட வைக்கிறது. கவனக்குறைவுள்ள
மாணவர்கள் தினமும் 10 முறை தோப்புக்கரணம் போட்டு பழகி வந்தால், கண், காது,
மூளை, கைகள் நான்கும் ஒருங்கிணைந்து செயல்பட ஆரம்பிக்கும். இதன் மூலம் உரிய
நரம்புகள் தூண்டப்பட்டு வாசிக்கும் திறன், கேட்கும் திறன், விரைவாக
எழுதும் திறன், நினைவாற்றல் முதலியவை அதிகரிக்கும்.
No comments:
Post a Comment