Saturday, 24 March 2018

பருவ காலங்கள்

பருவ காலங்கள்
------------------------
சூரியனை பூமி சுற்றுவதால் பூமியில் பருவ மாற்றங்கள் ஏற்படுகிறது. ஆனால் பூமியிலிருந்து பார்க்கும்பொழுது சூரியன் பூமியை சுற்றி வருவதுபோல் காட்சியளிக்கிறது. இதற்கு ஒப்புமை இயக்கம் என்று பெயர். இத்தகைய ஒப்புமை இயக்கத்தின் மூலம் சூரியன் மாதத்திற்கு ஒரு ராசி வீதம் நகர்ந்து செல்கிறது. இதன்படி சித்திரையில் மேசத்திலும், வைகாசியில் ரிசபத்திலும், ஆனியில் மிதுனத்திலும், இப்படியாக 12 மாதங்களில் 12 ராசிகளில் நகர்ந்து செல்கிறது. சித்திரை மாதம் கிருத்திகை நட்சத்திரத்தில் சூரியன் நகர்ந்து செல்லும்பொழுது பூமியில் வெப்பம் மிகவும் அதிகமாக உச்சத்தில் இருக்கும். இதன் அடிப்படையிலேயே கிருத்திகை நட்சத்திரத்தின் அதி தேவதை அக்னி பகவான் என்று கூறப்பட்டுள்ளது. இதுபோல் ஐப்பசி மாதம் சூரியன் சுவாதி நட்சத்திரத்தில் நகர்ந்து செல்லும்பொழுது பூமியில் அதிகம் காற்று வீசும் , குறிப்பாக நம் பாரதத்தில் உள்ள ஒரிசா, ஆந்திரா பகுதியில் பலத்த காற்று வீசும், இதன் அடிப்படையில்தான் சுவாதி நட்சத்திரத்தின் அதிதேவதை வாயு பகவான் என்று கூறுகிறார்கள். தை மாதம் திருவோண நட்சத்திரத்தில் சூரியன் செல்லும் காலம் மண் பூதம் வளரும் காலம். இதன் அடிப்படையிலேயே திருவோணம் நட்சத்திரத்தின் அதிதேவதை விஷ்ணு (வாமன அவதாரம்) என்று கூறப்படுகிறது. வாமனன் மூன்றடியில் பூமியை (மண்ணை) அளந்தவன். தை மாதம் அறுவடைக்காலமாகும். அறுவடைக்காலத்தில் அறுவடை பணியில் உள்ள உழவர்கள் வயலை கூறு பிரித்துக்கொண்டு அறுவடை செய்வார்கள். கூறு பிரிக்கும் ஆளுக்கு கூறுவாடி என்று பெயர். இந்த கூறுவாடி தன் கால்களால் எட்டு வைத்து வயலை அளந்து கூறு வைப்பான். அதன் பின் அறுவடை செய்யும் பணியாளர்கள் வயலை அறுக்கத்தொடங்குவார்கள்.பொங்கல் பண்டிகையை பெரும்பாலும் சூரிய வழிபாடு என நினைக்கிறார்கள். உண்மையில் பொங்கல் பண்டிகை மண் வழிபாடாகும். மண்ணில் விளைந்ததை மண்ணிற்கு (முற்றம்) படைத்து கொண்டாடுவதாகும். ஆடி மாதம் பூசம் நட்சத்திரத்தில் சூரியன் செல்லும் காலம் நீர் வளம் பெருகும் காலம்.பூசம் நட்சத்திரத்தின் அதி தேவதை பிரஹஸ்பதி(குரு).ஆடி பெருக்கு கொண்டாடுவது, ஆறுகளில் நீர் பெருக்கெடுத்து ஓடுவதை கொண்டாடத்தான்.

No comments:

Post a Comment

ஆண் அழுவான்...

 தாய் தந்தை இறந்தால் ஆண் அழுவான்... *தனக்கு குழந்தை பிறக்கப்போகிறது என்று நற்செய்தி கேட்டு ஆண் அழுவான்... *தன் குழந்தைகளில் ஒருவர் நோய்வாய்ப...