எங்களின் ஆன்லைன் சேவை - http://astroav.in/
நமது பழக்கவழக்கங்கள் தான் நம்மை இந்த சமூகத்தில் எப்படிப்பட்டவர் என நிலைப்படுத்துகிறது. உங்கள் பழக்கவழக்கங்கள் உங்கள் வாழ்வில் நீங்கள் எதிர்கொள்ளும் சூழல், சம்பவங்கள், நிகழ்வுகளில் நேரடியாகவோ, மறைமுகமாகவோ அதில் நேர்மறை பலன் அடைய உதவும். உதாரணமாக என்றோ நீங்கள் ஒருவருக்கு செய்த உதவி, நீங்கள் கஷ்டத்தில் வாடும் போது ஒரு பலனளித்து செல்லும். அப்படி, உங்கள் வாழ்வில் புகழ், வெற்றி செல்வதை அடைய உதவும் 14 பழக்கங்கள் பற்றி இங்கு காணலாம்…ஆசீர்வாதம்!
தினமும் பெற்றோர், பெரியவர்களிடத்தில் ஆசீர்வாதம் பெறுவது. பெரியவர்களை அவமரியாதை செய்யாதிருப்பது.
ஆதிசக்தி!
நமது புராணங்களும், இதிகாசங்களும் பெண் என்பவள் தான் ஆதி சக்தி என குறிப்பிட்டிருக்கிறது. எனவே, பெண்களை மதிக்க வேண்டும். முக்கியமாக தாய், தாரம்
உதவி!
உங்களால் முடிந்த வரை இயலாதோருக்கு உதவுங்கள். பணமாக தான் இருக்க வேண்டும் என்றில்லை. உணவாக இருக்கலாம், சாலை கடக்க வைப்பது போன்ற சிறு உதவியாக கூட இருக்கலாம். முடிந்த வரை உதவுங்கள்.
விலங்குகள்!
பசு, பறவை, நாய் என விலங்குகளுக்கும் உணவளித்து வாருங்கள். உங்களால் எவ்வளவு முடியுமோ.
கைகளை பாருங்கள்!
காலை எழுந்தவுடன் இரு கைகளையும் ஒன்றாக சேர்த்து, உள்ளங்கை முகத்தில் படும்வண்ணம் மூன்று முறை செய்யுங்கள்.
தேன்!
காலை எழுந்ததும் வாயை கொப்பளித்து விட்டு, தேன் சுவையுங்கள். பிறகு குளிக்க செல்லுங்கள். சூரியனை தினமும் காலை வணங்க மறக்க வேண்டாம்.
செவ்வாய்!
செவ்வாய்க்கிழமைகளில் மண் பாண்டத்தில் இரண்டு டேபிள்ஸ்பூன் தேன் ஊற்றி அதை வீட்டிற்கு வெளிய ஒதுக்குப்புறத்தில் வைத்துவிடுங்கள்.
உணவு பகிர்வு!
அமர்ந்து உணவுண்ணும் முன்பு, விலங்குகளுக்கு, பறவைகளுக்கு முடிந்த அளவு உணவு பகிர மறக்க வேண்டாம்.
அரசமரம்!
ஞாயிற்றுக்கிழமைகள் தவிர்த்து மற்ற நாட்கள் அரசமரத்திற்கு தண்ணீர் ஊற்ற மறக்க வேண்டாம்
கருப்பு கயிறு!
வலது கையில் கருப்பு கயிர் கட்டுங்கள்.
செப்பு பாத்திரத்தில் நீர்!
இரவு தூங்கும் முன்னர் செப்பு பாத்திரத்தில் நீர் ஊற்றி, ஒரு டீஸ்பூன் தேன் கலந்து, தங்கம் அல்லது வெள்ளை நாணயம் போட்டு வைக்கவும். மறுநாள் காலை எழுந்ததும் இதை குடியுங்கள்
சுத்தம்!
வீட்டை எப்போதும் சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள்.
ரூ. 21!
எங்கேனும் ஒரு இடத்தில் ரூ. 21 முடித்து வையுங்கள். நீங்கள் தொழில் அல்லது முக்கியமான வேலையாக வெளியே செல்லும் போது இத பணத்தை முடியாதவர்களுக்கு உதவியாக கொடுத்து செல்லுங்கள்.
துளசி!
ஞாயிறுகள் தவிர்த்து மற்ற நாட்கள் தினமும் காலை வீட்டை விட்டு வெளியேறும் போது துளசி இலை சாப்பிடாமல் செல்ல வேண்டாம்.
No comments:
Post a Comment