எங்களின் ஆன்லைன் சேவை - http://astroav.in/
''இலங்கையில் ராவணவதம் முடிந்ததும், சீதை, லட்சுமணர், சுக்ரீவர், விபீஷணர் மற்றும் வானரப்படைகளுடன் அயோத்திக்குத் திரும்பிக்கொண்டிருக்கிறார் ராமபிரான். அயோத்திக்கு செல்லும் முன்பாக, பரதவாஜ முனிவரை தரிசிக்க விரும்பினார் ராமர். ஆனால் அயோத்திக்குச் செல்ல நேரம் தாமதமாகிக் கொண்டே இருந்ததால், பரதன் தீமூட்டி அதில் தான் விழுந்துவிடுவதாய் சொன்னதையும் நினைத்துப்பார்த்தார்.ஆம், 14 ஆண்டுகள் முடிந்த உடனேயே அண்ணன் வராவிட்டால், தான் தீயில் விழுந்து மாண்டுவிடுவதாக முன்னமே பரதன் சொல்லி இருந்தான். பரதன் சொன்னதை செய்யக்கூடியவன் என ராமர் அறிவார். ஆனாலும் பரத்வாஜ முனிவரை தரிசிக்காமல் செல்ல மனமில்லை. விரைந்து அதைமுடித்துச்செல்ல திட்டமிட்டவரை, முனிவர் பரவசமாய் வரவேற்றார்.
"தென்னிலங்கை சென்று ராவணனை வெற்றிகொண்ட ஸ்ரீராமா! என் ஆஸ்ரமத்திற்கு நீ
வந்ததில் மிக்க மகிழ்ச்சி. இன்று இரவு இங்கே தங்கிவிட்டு,நாளை இங்கு
நடக்கும் ததீயாராதனைக்கு (மதிய உணவு) இருந்து, நன்றாக சாப்பிட்ட பிறகே
செல்லவேண்டும்!" என கேட்டுக் கொண்டார்.
ராமரால் முனிவரின் வேண்டுகோளை நிராகரிக்க முடியவில்லை. ஆனால் அதேநேரம் தன் வருகை தாமதமானால் தம்பி உயிர் துறப்பான் என்றும் அஞ்சினார். ஆகவே அனுமனை அழைத்தார்.
”அஞ்சனைகுமாரனே. என் அருமை பக்தனே எனக்காக நீ பரதனிடம் விரைவாகச் சென்று, நான் எல்லோருடனும் வந்துகொண்டிருப்பதை சொல்லிவிட்டு வா. வாயுபுத்திரனான நீ இதை காற்றாய் ஓடிச்சென்று முடித்து உடன் இங்கு வரவேண்டும்” என்றார்.
அண்ணல் சொன்ன சொல்லை நிறைவேற்ற இமைப் பொழுதில் அங்கிருந்து அகன்றான் அனுமன். மறுநாள்... விருந்திற்காக இலையினைப்போட்டார் முனிவர் பெருமான். அனைவரும் அமர்ந்துவிட்டனர் , அனுமன் பரதனை சந்தித்துவிட்டு வந்துவிட்டான். அனுமன் விருந்துக்கு வருவாரென முனிவர் நினைக்கவில்லை.
அனுமனுக்கு இலை எதுவும் காலி இல்லை. ராமன் அன்புடன் அனுமனை தன் இலைக்கு எதிர்ப்புறம் அமரச்சொன்னார். அனுமன் காய் பழங்களைத்தான் உண்பார் என ராமருக்குத்தெரியும். ஆகவே பரிமாறுபவர்களிடம் இலையின் மேல்பக்கத்தில்(அனுமன் அமர்ந்த திசையில் அல்லது அவருக்கு அருகிலிருந்த இடத்தில்) காய் பழங்களை பரிமாறச் சொன்னார். அரிசி சாதம் மற்ற உணவு வகைகளைத் தன் பக்கம் போடச் சொன்னார். இருவரும் ஒரே இலையில் சாப்பிட்டு முடித்தார்கள்.
சாப்பாட்டிற்காக முனிவர் கேட்டுக்கொண்டதற்காக, தன் பயணத்தின் இடையே தங்கி சாப்பாட்டினை முடித்துக்கொண்டதால் ராமர், சாப்பாட்டு ராமன் ஆகிறார். காலபோக்கில் சாப்பாட்டில் விருப்பம் உடையவர்களை இப்படிப் பெயரிட்டு அழைப்பது வழக்கமாகிவிட்டதாம்!

No comments:
Post a Comment