எங்களின் ஆன்லைன் சேவை - http://astroav.in/
காளி தேவி என்றாலே மிக உக்கிரமான தெய்வம் என்று பலரும் நினைப்பது உண்டு.
அது அப்படி அல்ல. ஆதி பாரா சக்தியான பார்வதி தேவி துட்ட நிக்கிரகம் இஷ்ட
பரிபாலனம் எனும் கொள்கையினராய் அவதாரம் பல எடுத்து உள்ளார். அதில் ஒரு
அவதாரம் காளி அவதாரம் ஆகும். மகா காளி ரூபம், ஆதி பராசக்தியின் தாமஸ குண பிரதிபலிப்பு ஆகும் என்று புராணங்கள் உரைக்கின்றன.
மகா தேவர் ஆகிய சிவ பெருமானின் இடப் பாதி ஆகிய பாரா சக்தியின் காளி
அவதாரம் குறி்த்து, மத்சய புராணம், தேவி பாகவதம், கந்த புராணம்
ஆகியவற்றில் குறிப்புக்கள் உள்ளன.
முன்பு ஒரு கால கட்டத்தில் தாருக் என்னும் அரக்கன் வாழ்ந்து வந்தான். கடும் தவம் காரணமாக பல வரங்களை பெற்று இருந்தான். பெற்ற வாரங்களின் வலிமை காரணமாக அகந்தை கொண்டு ஆட்டம் போட்டான். தேவர்கள் மற்றும் முனிவர்களை துன்ப படுத்தினான். அவனிடம் இருந்து தேவர் மற்றும் முனிவர்களை பாது காப்பதற்காக தேவி தரித்த அவதார ரூபம் மகா காளி ரூபம்.
அந்த ரூபமானது பார்த்த மாத்திரத்தில் பகைவர்களை நாடு நடுங்க வைக்கும் ரூபமாக இருந்ததது. ஆதி பாரா சக்தி ஆகிய பார்வதி தேவி, சிவ பெருமானின் உடலில் புகுந்து, ஆலகால விஷத்தால் கழுத்தில் ஏற்பட்ட கருமை நிறத்தை எடுத்து விட்டு உக்கிர தோற்றம் பெற்று வெளிவந்தார்.
பார்த்தவர் அனைவரும் நாடு நடுங்கினர். பூத பைசாச படைகளுடன் அசுரனை எதிர்த்து உக்கிரமாக போர் செய்து அரக்கனை அழித்தார். தாருக் மடிந்த பின்னரும் காளி தேவியின் உக்கிரம் தணியவில்லை.
அவரது தீக்கனல் பறக்கும் கோப பார்வையால் உலகு அனைத்தும் தீ பற்றி எரிய ஆரம்பித்தது. அவரது கோபத்தை தணிப்பதற்கு இறைவன் ஒரு உத்தியை கையாண்டார். குழந்தை போல் படுத்து அழ தொடங்கினார். குழந்தை அழும் சப்தம் கேட்டு தேவி சாந்தம் அடைந்தார். கோபம் தணிந்த நிலயில் அவர் மூர்சை ஆனார். சிவன் தாண்டவம் ஆடினார். மயக்க நிலையில் இருந்து விழித்து எழுந்த தேவியும் நடனம் ஆடினார். பூத பைசாச படைகளும் ஆடின. அதனால் தேவி யோகினி என்ற பெயரும் பெற்று விளங்கினார் என்று லிங்க புராணம் தெரிவிக்கிறது. ஓம் சக்தி, பாரா சக்தி.
இந்த தெய்வம் போருக்கு உரிய தெய்வம் என்பதால், போர் தொழிலை தொழில் தர்மமாக கொண்ட சத்திரிய மக்கள் இந்த தேவியை பெரிதும் வணங்கி வந்தனர்.

No comments:
Post a Comment