Friday, 6 September 2019

சட்டம் ஏழைக்கு சவக்குழி பணக்காரனுக்கு நந்தவனம்

எங்களின் ஆன்லைன் சேவை - http://astroav.in/

சட்டம் ஏழைக்கு சவக்குழி
பணக்காரனுக்கு நந்தவனம்
சட்டம் வறியவனுக்கு
தீக்குளிப்பு
வசதியானவனுக்கு
பல்லக்கு
சட்டம் கோழைக்கு
போர்க்களம்
கோடிஸ்வரனுக்கு
மாளிகைவாசம்
சட்டம் ஒருமைப்பாட்டுக்கு
உருவாக்கப்பட்டத
பஞ்சத்தால் பழிவாங்கப்பட்டவர்களுக்கு
எதிராக வீசப்படும் போர்வாளா?
விபச்சாரம் புரிந்தவள்மீது
கற்கள் வீசப்பட்ட போது
''பாவம் செய்யாதவர் எவராவது இருந்தல்
இவள் மீது கற்களை வீசுங்கள்
என்றார் இயேசு''
அங்கேதான் சட்டம்
வாயடைத்து நிற்கிறது
காக்கிச்சட்டைக்கும்
காசுள்ளவனுக்கும்
சட்டம்தான் கவசம்
இத்தச்சட்டம்
இந்த தேசத்தில்
ஒழுக்கத்தையோ
நீதியையோ காப்பற்றவில்லை
ரத்தத்தில் தோய்ந்த
ஆடைகளை அதிகம்
இதுதான் நெய்து கொடுத்தது நமக்கு
சட்டமென்னும் கழுகுவாயில்
அதிகம் கொத்தி உண்ணப்படுவது
ஏழைமனிதர்கள்தான்
குற்றங்கள் விளைவதற்கு
நிலங்களை உருவாக்கிவிட்டு
சட்டமென்னும் அரிவாளால்
அறுவடைசெய்வதை நிறுத்துங்கள்
வாழத்தெரியாமல்
செத்துக்கொண்டிருக்கும் ஏழைகளுக்கு
சட்டத்தால்
சவக்குழி தோண்டாதீர்கள்
ஒடுக்கப்பட்டவர்களின்
மூச்சிலே எரிந்து ஒளிந்துபோகும்
உங்கள் சட்டம்
கற்பிழந்த சட்டத்தை
முதலில்தூக்கி குப்பையில் போடுங்கள்

No comments:

Post a Comment

என் அப்பா வயதாகிவிட்டார், நடந்து செல்லும்போது சுவரின் ஆதரவைப் பெறுவார்

 என் அப்பா வயதாகிவிட்டார், நடந்து செல்லும்போது சுவரின் ஆதரவைப் பெறுவார். இதன் விளைவாக சுவர்கள் நிறமாற்றம் அடைந்தன, அவர் தொட்ட இடமெல்லாம் அவர...