எங்களின் ஆன்லைன் சேவை - http://astroav.in/
ஒரு நாள் பெரியவா தரையில் சயனித்துக் கொண்டிருந்தார்.நானும் என் மனைவியும் அவர் பாதாரவிந்தத்தின் அடியில்
உட்கார்ந்திருந்தோம்.
''ஸ்ரீ நிவாசா உனக்கு காரைக்கால் அம்மையார் சரிதம்
தெரியும்மா?'' என்று கேட்டார்.
''நாயன்மார்களில் ஒருவர் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்''
பின்னர் அதே முற்றத்தில் ஸ்ரீபெரியவா திருவடிகளின்
சமீபத்தில் நாங்கள் இருவரும் தரையில் படுத்து உறங்கினோம்.
ஆழ்ந்த நித்திரை.
''ஏய் யாராடா அங்கே''! என்ற பெரியவா குரல் கேட்டு
விழித்து எழுந்தோம். உடனே அவள் தன்னுடன் எப்போதும்
வைத்திருக்கும் கற்பூரத்தை தாம்பாளத்தில் வைத்து
ஏற்றினாள். ஸ்ரீபெரியவா எழுந்து உட்கார்ந்தார். கற்பூர
தீப ஒளியில் அவருடைய விஸ்வரூப தரிசனம் கிடைக்கப்
பெற்றோம்!
இதே கைங்கர்யத்தை என் மனைவி நாங்கள் எத்தனை
நாட்கள் மடத்தில் தங்கினாலும்,ப்ரதி தினமும்,பெரியவாளுக்கு
கற்பூர ஹாரத்தி எடுத்து சேவிப்பது வழக்கம். இருளின் மத்தியில்
கற்பூர சேவையில் பெரியவா விஸ்வரூப தரிசனம் எங்களுக்கு
எப்போதும் கிடைத்து வந்தது. பெரியவா சயனித்ததும் அவர்
பாதகமலத்தின் அடியில் நாங்கள் தம்பதிகளாக சயனிக்கும் பாக்யமும்
தவறாமல் கிடைத்தது. அவர் அனுக்ரஹத்தினால் அந்த பாக்யமும்,
ஸ்வதந்திரமும் எங்களுக்கு ப்ராப்தமானபடியால் மடத்தில் உள்ள
எல்லாரும் எங்களை அன்புடனும், மரியாதையுடனும் நடத்தினார்கள்.
ஸ்ரீபெரியவாள் யதியாகவும், பீடாதிபதியாகவும் ,ஜகத் குருவாகவும்
ஆனபடியால், சாமான்ய க்ரஹஸ்தனான எங்களுக்கு தமபதிகளாக
நெருங்கி கைங்கர்யம் செய்யும் வாய்ப்பில்லை.
அடியேனுக்கு வேத அத்யயனம், வித்வாம்சம், பாண்டித்யம்
போன்ற எந்த யோக்யதையோ, மடத்துக்கு அளவு கடந்த திரவிய
சகாயம் செய்யக் கூடிய தனிகனாகவோ இல்லாதபோதும்,
ஸ்ரீபெரியவாள் அத்வைத சம்ப்ரதாயத்தைச் சேர்ந்தவராயிருந்தும்,
நான் விசிஷ்டாத்வைதனாயிருந்தும், அடியனை பத்னி சஹிதம்
அவர் திருவடிச் சாயையில் இருத்தி வைத்துக் கொண்டது
தெய்வ சங்கல்பம் அன்றி வேறில்லை.!
ஒரு நாள் விஸ்வரூப தரிசனத்துக்கு ஹாரத்தி காண்பிக்கும்போது
நான் ஒரு சம்ஸ்க்ருத ஸ்லோகம் சொல்லி தண்டம் சமர்ப்பித்து
நின்றேன்..
அது குதத்வம் சொல்வதாக அமைந்த அழகிய ஸ்லோகம்.
ப்ரம்மானந்தம் ப்ரம ஸுகிர்தம் கேவலம் ஞானமூர்த்திம்
த்வந்த்வாதீதம் ககன ஸத்ருஸம் தத்வமஸ்யாமி லக்ஷ்யம்
ஏகம் நித்யம் விமலமசலம் ஸர்வதீ ஸாக்ஷிபூதம்
பாவாதீதம் த்ரிகுண ரஹிதம் ஸத்குரும் தம் நமாமி ||
அப்போது வ்த்யார்த்தி நாராயண ஐயர் என்பவர் அங்கு இருந்தார்.
அன்று ஸ்வர்ணமுகி நதியில் நானும் என் மனைவியும் ஸ்னானம்
செய்யும்போது, நாராயண ஐயரும் எங்களுடன் இருந்தார்.
அவர் ஸம்ஸ்க்ருதம் தெரியாவிடில் கற்றுக் கொள்; உச்சரிப்புத் தவறாக
சொல்லாதே என்றார். நான் வெட்கம் அடைந்தேன்.
அன்று இரவு பெரியவா முற்றத்தில் மேனாவில் அமர்ந்திருந்தார்.
பத்துமணி அளவில் நாங்கள் அம்மாவுடன் வந்தனம் செய்து
நின்றிருந்தோம்.
வித்யார்த்தி நாராயண ஐயரும் உடனிருந்தார்.
அவரைப் பார்த்து பெரியவா''இவாளை உனக்குத் தெரியுமா''?
என்றார். நாராயண ஐயர்''தெரியுமே நெல்லிக்குப்பம் வைஷ்ணவ தம்பதிகள்''
என்று பதில் சொன்னார்.''காலையில் ஸ்னானம் செய்யும்போது கேட்டுத்
தெரிந்து கொண்டேன். ஸம்ஸ்க்ருதம் கற்றுக்கொள்ளும்படி
அவாளிடம் சொன்னேன்.'' என்றார்.
சிறிது நேரம் மௌனத்துக்குப் பிறகு பெரியவா ஒரு ஸ்லோகம்
சொல்லி நாராயணாய்யரிடம் அதற்கு அர்த்தம் கேட்டார்.
அவரும் அர்த்தம் சொன்னார்.
ஸ்ரீபெரியவாள் அந்தச் சொல்லுக்கு'' ப்ரம்மா என்றுகூட
அர்த்தமாகிறதே! விஷ்ணுன்னுதான் சொல்லணுமா?
ப்ரம்ம என்று வைச்சுண்டே அதற்கு முழு அர்த்தமும்
சொல்லலாமே!
''இவ்வளவு படிச்ச உனக்கே சரியான அர்த்தம் சொல்லத்
தெரியவில்லை. நீ பொய் அவனுக்கு புத்தி சொல்லப்
போயிட்டயோ?ஏதோ அவனுக்குத் தெரிந்ததை ஆசையாகச்
சொன்னான்''
அன்று முதம் வித்யார்த்தி நாராயண ஐயர் எங்களிடம் அதிகப்
ப்ரியமாகப் பழகினார்.
இதுவும் நெல்லிக்குப்பம் தம்பதினர் அனுபவமே! இவர்களுக்கு
பெரியவாளோட பரிபூர்ண கடாக்ஷம் இருக்கு என்பதில்
சந்தேகம் ஏதும் உண்டோ!
மேலும் பல முறை பல விதமான அனுபவங்கள் இவர்களுக்கு!
ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கரா
No comments:
Post a Comment