Tuesday, 24 September 2019

தீராத_நோய்களையும் #தீர்த்து #வைக்கும்_திருவாசி —

தீராத_நோய்களையும் #தீர்த்து #வைக்கும்_திருவாசி — "துணிவளர் திங்கள் துலங்கி விளங்க" எனத் தொடங்கும் திருப்பதிகம்


"இரத்த அழுத்தம், சர்க்கரை நோய், மூர்ச்சைநோய் (நரம்புத் தளர்ச்சி), போதைப்பொருள் அடிமை முதலிய கொடிய நோய்களிலிருந்து மீள ஓதவேண்டிய திருப்பதிகம்."
-
"தீராத நோய்களையும் தீர்த்து வைக்கும் #திருவாசி." - சிவனடியார்களுக்கு மிகவும் பரிச்சயமானது, "#துணிவளர் #திங்கள் #துலங்கி_விளங்க" என்ற பதிகம். அந்தப் பதிகத்தைத் திருஞானசம்பந்தர் பாடிய திருத்தலம் தான். அந்தக் காலத்தில் திருப்பாச்சிலாச்சிராமம் என்றழைக்கப்பட்ட திருவாசி. திருச்சிக்கு அருகே அமைந்திருக்கும் இத்தலம், தீராத நோய்களை. குறிப்பாக வலிப்பு நோயையும் குழந்தைகளுக்கு வரும் நோய்களையும் தீர்த்து வைக்கும் தலமாக விளங்குகிறது.

#இறைவர்_திருப்பெயர் : ஸ்ரீ மாற்றுரைவரதீஸ்வரர்

#இறைவியார்_திருப்பெயர் : ஸ்ரீ பாலாம்பிகை

#திருமுறை : முதலாம் திருமுறை 044 வது திருப்பதிகம்

#அருளிச்செய்தவர் : திருஞானசம்பந்த சுவாமிகள்

"#அகமலி_அன்பொடு தொண்டர் வணங்க
ஆச்சிராமத்து உறைகின்ற
புகைமலி மாலை புனைந்து அழகாய
புனிதர் கொலாம் இவரென்ன
நகைமலி தண்பொழில் சூழ்தரு காழி
நற்றமிழ் ஞானசம்பந்தன்
தகைமலி தண்தமிழ் கொண்டு இவையேத்தச்
சாரகிலா #வினை_தானே." .....(11)

#பதிகப்_பலன் : உள்ளம் நிறைந்த அன்போடு தொண்டர்கள் வழிபட ஆச்சிராமம் என்னும் ஊரில் உறைகின்றவரும், அன்பர் காட்டும் நறுமணப்புகை நிறைந்த மாலைகளைச் சூடியவரும், அழகும் தூய்மையும் உடையவருமான சிவபெருமானை, மலர்ந்த தண் பொழில்கள் சூழ்ந்த சீகாழிப்பதியில் தோன்றிய நற்றமிழ்வல்ல ஞானசம்பந்தன் போற்றிப்பாடிய, நோய் தீர்க்கும் மேன்மை மிக்கதும், உள்ளத்தைக் குளிர்விப்பதுமான இத்தமிழ் மாலையால், ஏத்திப் பரவி வழிபடுவோரை வினைகள் சாரா.

தேவாரப் பாடல்பெற்ற தலங்களுள் 62-வது தலம் இது. இங்கே அமைந்திருக்கும் அருள்மிகு #பாலாம்பிகை சமேத #மாற்றுரைவரதீஸ்வரர் கோயில் சுமார் 1500 ஆண்டுகள் பழைமையானது. திங்கட்கிழமையில் இவருக்கு இலுப்பை எண்ணெயால் தீபம் ஏற்றி வழிபட்டால் நிரந்தர வேலை, வேலையில் இருப்பவர்களுக்கு உயர் பதவி, பூர்வீகச் சொத்து பிரச்னை நீங்குதல் உள்ளிட்ட பல நன்மைகள் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

சர்ப்பத்தைக் காலடியில் போட்டு அதன்மேல் நின்று ஆனந்தக் கூத்தாடும் நடராஜர் உற்சவர் சிலை இங்கே மட்டும் தான் இருக்கிறது. வலிப்பு நோய் மற்றும் நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்னைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த நடராஜர் கண்கண்ட தெய்வமாக அருள்பாலித்து நோயைத் தீர்க்கிறார் என்பது ஐதீகம்.

முன்னொரு காலத்தில் இப்பகுதியை ஆண்டு வந்த கொல்லிமழவன் என்ற மன்னனின் மகளுக்கு முயலக நோய் (வலிப்பு நோய்) பீடித்திருந்தது. மன்னன் எவ்வளவோ மருத்துவம் பார்த்தும் எத்தனையோ வைத்தியர்களைப் பார்த்தும் அவளின் நோயைக் குணப்படுத்த முடியவில்லை. மனம் நொந்துபோன மன்னன் கோயிலுக்கு வந்து, சிவபெருமானின் சந்நிதியில் மகளைக் கிடத்தி, ''இறைவா, என் மகளின் பிணியைத் தீர்க்க வேண்டியது இனி உன் பொறுப்பு'' என்று வணங்கி, குணப்படுத்தும் பொறுப்பைப் பெருமானிடமே விட்டுவிட்டுச் சென்றார்.

இந்த நிலையில், திருஞானசம்பந்தர், மழவ நாட்டைச் சார்ந்த திருப்பாச்சிலாச்சிராமம் என்ற இந்தத் தலத்துக்கு எழுந்தருளினார். மன்னன் அன்புடன் சம்பந்தரை வரவேற்று, தன் மகளின் நோயை நீக்கியருள வேண்டினார். அருள் உள்ளம் கொண்ட சம்பந்தர், சிவனை வேண்டி "துணிவளர் திங்கள் துளங்கி விளங்க" எனும் பதிகத்தைப் பாடி வணங்க, மன்னன் மகள் குணமடைந்து எழுந்தாள். சிவபெருமான் அவளது முயலக நோயை ஒரு பாம்பாக மாற்றி, அதன்மீது நின்று ஆடினார். இதன் அடிப்படையில், இங்குள்ள நடராஜரின் காலுக்குக் கீழே மற்ற கோயில்களில் இருப்பதுபோல் முயலகன் உருவம் இருக்காது; இறைவன் திருவடியின்கீழ் சர்ப்பம் திகழ, அதன் மீது நடனமாடும் திருக்கோலத்தில் திகழ்கிறார்.

நரம்புத் தளர்ச்சி, வாதநோய், வலிப்புநோய், வயிற்றுவலி, சர்ப்ப தோஷம், மாதவிடாய் பிரச்னைகள் முதலியன இத்தலத்து நடராஜரை வழிபட குணமாகும். இவ்வாலயத்திலுள்ள ஆவுடையாப்பிள்ளை மண்டபத்தில் கொல்லி மழவன் மகளுக்குச் சம்பந்தர் நோய் நீக்கிய வரலாற்றை விளக்கும் சிற்பங்கள் உள்ளன.

மன்னன் மகளுக்கு நோய் தீர்த்த சர்ப்ப நடராஜருக்கு அர்ச்சனை செய்து, அந்த விபூதியை 48 நாள்கள் தொடர்ந்து பூசிவர வேண்டும். இதனால் நரம்பு சம்பந்தமான பிரச்னைகள் நீங்கும் என்பது ஐதீகம்.

#ஆலய_முகவரி : அருள்மிகு மாற்றுரைவரதீஸ்வரர் திருக்கோயில், திருவாசி, வழி பிச்சாண்டார் கோவில், திருச்சி மாவட்டம், PIN - 621216. இவ்வாலயம் தினந்தோறும் காலை 7 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.

#எப்படிப்_போவது : திருச்சியில் இருந்து முசிறி செல்லும் சாலையில் சுமார் 14 கி.மி. தொலைவில் திருவாசி என்கிற பேருந்து நிறுத்தம் வரும். அங்கிருந்து ஊருக்குள் செல்லும் ஒரு கிளைச் சாலையில் சுமார் 1/2 கி.மி. செல்ல இந்த சிவஸ்தலம் ஆலயத்தை அடையலாம். திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து திருவாசி செல்ல நகரப் பேருந்து வசதி உள்ளது.

இப்பதிகத்திற்கான #சொற்பிரிவு எங்களது #முயற்சியில் உருவாக்கப்பட்டுள்ளது. #பிழை இருப்பின் எங்களுக்கு தெரியப்படுத்தலாம்.

#குறிப்பு : மேலும் இதுபோன்ற #தேவார #திருப்பதிகங்ளின் #பாடல்_வரிகள் மற்றும் #ஒலி இசையோடு கேட்டு மகிழ கீழே கொடுப்பட்டுள்ள எங்களது #YouTube Channel - ஐ Subscribe செய்து கொள்ளவும்.

No comments:

Post a Comment

ஆண் அழுவான்...

 தாய் தந்தை இறந்தால் ஆண் அழுவான்... *தனக்கு குழந்தை பிறக்கப்போகிறது என்று நற்செய்தி கேட்டு ஆண் அழுவான்... *தன் குழந்தைகளில் ஒருவர் நோய்வாய்ப...