Wednesday, 4 September 2019

கர்ணணின் கடைசி பயணம்:

எங்களின் ஆன்லைன் சேவை - http://astroav.in/

கர்ணணின் கடைசி பயணம்:
குருஷேத்ரதில் கர்ணண்...
எதிர் அணியில் நின்ற தருமனும் நகுலசகா தேவர்களும், கர்ணணின் பக்கம் பார்வையை திருப்பினர்.கர்ணணின் தேரை ஓட்டி வந்த சாரதி சல்லிய மன்னர்,"கர்ணா! இந்த யுத்தத்தை சிக்கிரம் முடிக்க வேண்டிய பொறுப்பு உன்னிடம் தான் உள்ளது. முதலில் தர்மபுத்திரரையும் நகுல சகாதேவரயும் தாக்கி கொன்றுவிட்டால், அதை கண்டு மனோ ரீதியாக அர்ஜுனன் நிலைகுலைந்து போய் விடுவான்.பின் எளிதாக அவனயும் பீமனயும் வீழ்த்திவிடலாம்..." என்று யோசனை சொன்னார். அர்ஜுனனை தவிர மத்த நான்கு சகோதரர்களை போரிட்டு கொல்ல மாட்டேன் என்று குந்தியிடம் குடுத்த வாக்குறுதி நினைவுக்கு வர "வேண்டாம் சல்லியரே... பாவம்! வீரத்தால் இவர்கள் எனக்கு சமமானவர்கள் அல்ல; பலவீனமானவர்கள்.... பலத்தில் சமம் ஆனவர்களோடும்,
மேம்பட்டவர்களோடும் போரிடுவது தான் க்ஷத்ரிய தர்மம்" என்று மறுத்தார். பின் அர்ஜுனனை நோக்கி போரிட தொடங்கினர். அம்பராதூனிலிருந்த வலுவான அஸ்த்திரங்கள் அனைத்தும் அர்ஜுனன் முன்பு பயன் இன்றி போனதும், ப்ரமாஸ்த்ரத்தை தொடுக்க நினைத்தார்... ஆனால் குரு பரசுராமர் ஏற்கனவே கொடுத்திருந்த சாபத்தின்படி, அந்த அஸ்த்திரத்தை செலுத்தும் மந்திரம் அவனுக்கு மறந்து போய் விட்டது, அப்போது நாகாஸ்திரம் அவன் முன்னால் வந்து நின்றது "சல்லியரே! கடைசியாக இந்த நாகாஸ்திரத்தை அர்ஜுனன் மீது எய்து அவன் தலை வேறு உடல் வேறாக வீழ்த்த போகிறென்" என கூறி குறி வைத்தான்" கர்ணா...! அதோ பார்த்தசாரதி, தேரிலிருந்து உன்னையும் அஸ்த்திரத்தயும் கூர்ந்து பார்த்து கொண்டிருகிறார்!... அந்த வஞ்சக #கண்ணன் ஏதாவது தந்திரம் செய்து அர்ஜுனனை காப்பாற்றி விடுவார்... அதனால் அர்ஜுனன் கழுத்துக்கு குறி வைப்பதைவிட அகன்ற மார்பு பகுதிக்கு குறி வைத்து நாகாஸ்திரத்தை செலுத்து!" என்று ஆலோசனை கூரினார் சல்லிய மன்னர்... "சாரதியே உங்கள் தேரோட்டும் வேலை மட்டும் பாருங்கள், எப்படி குறிவைப்பது என்பது எனக்கு தெரியும்" என்று கோபமாக சொல்லிவிட்டு நாக கனையை எய்தான் கர்ணண்.அந்த கனை அர்ஜுனனை நெருங்கியதும் கிருஷ்ணன் நறுகென்று தன் காற்பெருவிரலை அழுத்தி தேரை ஒரு சாண் நிலத்திற்குள் இறங்கும்படி செய்து விட்டார்.
கழுத்துக்கு நேரே வந்த அஸ்திரம், அர்ஜுனனின் தலை மகுடத்தை வீழ்த்திவிட்டு சென்றது.கண்களில் ஆத்திரம் கொப்பளிக்க சல்லியன் கர்ணணை திரும்பிப் பார்த்தார்.
கோபத்தில் உதடு துடிக்க, வார்த்தைகள் வெளிவரவில்லை.திகைத்து போன கர்ணன், சில நொடிப் பொழுதில் இயல்பு நிலைக்கு திரும்பி"சல்லியரே! உங்கள் கோபம் எனக்கு புரிகிறது... ஆனால், நீங்கள் சொன்னபடி செய்திருந்தாலும் கண்ணன் அர்ஜுனனை சாக விட்டிருப்பாரா? இன்னும் கொஞ்சம் வலுவாக அழுத்தி, தேரை ஒரு சாண் அளவு நிலத்திற்க்குள் இறக்கி இருப்பார் அவ்வளவு தான்!" என்று சொன்னார். அர்ஜுனனை பழிவாங்க முடியாமல் திரும்பி வந்த நாகஸ்திரம் மறுபடியும் தன்னை எய்யும்படி கர்ணனை கெஞ்சியது."கர்ணா இந்த தடவை அர்ஜுனனின் நடு உடலுக்கு குறி வைத்து செலுத்து..." என்றார் சாரதி, இரண்டாம் முறை அர்ஜுனன் மேல் நாகாஸ்திரத்தை செலுத்த மாட்டேன் என்று தாயிடம்(குந்தி)அளித்த வாக்குறுதி நினைவுக்கு வர " இல்லை அரசே! க்ஷத்ரிய வீரன், ஒரு அஸ்திரத்தை ஒரு தடவை தான் எய்வான் இரண்டாவாது முறை எய்வது வீரத்திற்க்கு இழுக்கு என்று சமத்காரமாக தெரிவித்தான். இதை கேட்டதும் சல்லியன் மனம் எரிச்சலால் சூடாகியது."கர்ணா! இனிமேல் உனக்கு சாரதியாயிருப்பதில் பயன் ஏதும் இல்லை..." என்று சொல்லிவிட்டு கீழே இறங்கினான் சல்லிய மன்னன்.இந்த சூழ்நிலையில் கர்ணனுக்கு ஒரு முனிவர் குடுத்த சாபம்(விதி) வந்து குறுக்கிட்டது அவனுடய தேர், சேற்றில் சிக்கி இடது சக்கரம் பதிந்து விட்டது, தேரை சரி செய்ய கர்ணன் கீழே குதித்து தேரின் இடது பக்கத்தை தோள் கொடுத்து தூக்கி கொண்டிருந்தான்.அப்பொது பார்த்தசாரதி, அர்ஜுனனிடம்,"விஜயா! கர்ணனுடன் தர்மயுத்தம் செய்து யாராலும் வெல்ல முடியாது... இப்போது நிராயுதபாணியாக இருக்கும் அவன்மேல் அம்புகளை செலுத்து..." என்று ஆனையிட்டார். வேறு வழியின்றி அர்ஜுனன் யுத்த தர்மம் மறந்து கர்ணன் மேல் அம்புகளை பொழிந்தான் விஜயனின் கனைகள் கர்ணனின் உடலெங்கும் பாய்ந்து சல்லடை கண்களை துளைத்து ரத்த வெள்ளம் வெளிப்பட்டாலும் தேர் சக்கரத்தில் வீழ்ந்த கர்ணனின் உயிர் பிரியவில்லை.திகைத்து போன கண்ணன், " அர்ஜுனா! போரை நிறுத்து... என்று சொல்லி விட்டு தேரிலிருந்து இறங்கினான். கர்ணனின் மேல் பாய்ந்து உடலை கிழித்திருக்கும் வலுவான அம்புகள் அவனது உயிரை நெருங்காதபடி தர்மம் கவசமாக பாதுகாத்து கொண்டிருக்கிறது என்பதை புரிந்து கொண்டார்
தர்ம புண்ணியத்தில் இருந்து பிரித்தால் தான் அவனது உடலயும் உயிரயும் பிரிக்க முடியும் என்பது புரிந்தது. குருதி வெள்ளத்தில் குற்றுயிராக கிடக்கும் கர்ணனிடம்
ஏழை வேதியனாக உருவெடுது வந்தான் நாரயணன்."கர்ணா நீ கேட்டவர்க்கெல்லாம் கேட்டவை கொடுக்கும் வள்ளல் என்று கேள்விப்பட்டு, மேரு மலையிலிருந்து வந்திருக்கிறேன் என்று வேதியன் சொன்னதும் அதை கேட்டு உள்ளம் மகிழ்ந்தவனாக மெல்ல சிரித்தபடி இங்கே நான் தரக்கூடிய பொருளாக சொல்லுக என்றான். வள்ளல் உன் புண்ணியம் அனைத்தயும் எனக்கு தருக என்று கையேந்தி கேட்டான் அந்தனன்.வேதியரே என்னுடய புண்ணியம் அனைத்தயும் உங்களுக்கு ஈந்தேன் தன் ரத்ததை கையில் ஏந்தி தாரை வார்த்து குடுத்தான் கர்ணன்.கர்ணனின் கொடையில் நெக்குருகி போன அந்தனன் " கர்ணா உனக்கு என்ன வரம் வேண்டும் கேள்" என்றார் "வினை பயனால் எனக்கு பிறப்பு ஏற்பட்டால் எழேழு பிறவியிலும் இல்லையென்று கேட்டு வருவோருக்கு இல்லை என்று சொல்லாத இதயம் எனக்கு அருள்வாய்" என்று வரம் கேட்டார் இதை கேட்டு நெகிழ்ந்துபோன கண்ணன் " நீ எத்தனை பிறவி எடுத்தாலும் அத்தனை பிறவியிலும் கொடை குணமும் செல்வமும் பெற்று முடிவில் முக்தியும் பெருவாயாக என்று கூரிய கண்ணன் அவன் கேட்காமலே அவனுக்கு விசுவரூப தரிசனம் அளித்தார் "கர்ணா இந்த போர்களத்தில் நான் அர்ஜுனனுனுக்கு உபதேசித்த கீதையின் தத்துவங்களை வாழ்ந்து காட்டிய உன்னத மாமனிதன்
நீ தான், அதற்கு பரிசாக தான் என் தரிசனத்தை வழங்கினேன் என்றார்."கர்ணா இந்த குருக்ஷேத்திரத்திலேயே மிகவும் வஞ்சிக்க பட்ட துர்பாக்யசாலி
நீ தான்.... மனிதர்களாலும், தெய்வங்களாலும் வஞ்சிக்கபட்ட ஜீவாத்மா நீ.. ஆகையால் தான் நானே உன்னை தேடி நேரில் வந்தேன், இல்லயேல் முன்பு இந்திரனை அனுப்பி கவசகுண்டலங்களை வாங்கியது போல இன்னொரு கடவுளை அனுப்பி உன் புண்ணியத்தை வாங்கி இருப்பேன். ஒரு மனிதனுக்கு முதல் தெய்வம் தாய், அந்த தாயே உன்னை அவமான சின்னமாக பெற்று ஆற்றில் பெட்டியில் வைத்து விட்டு விட்டாள், என்று தொடங்கினான் கண்ணன்.
ஆம் அப்படி விடாமல் பிறந்ததும் என்னை கொன்று ஆற்றில் போட்டிருந்தால் வாழ்நாள் பூராவும் சூதகுலத்தவனாக அனாதையாக உலகத்தார் பேசும்படி வாழ்ந்திருக்க மாட்டேன் என்ற கர்ணனின் நெஞ்சில் மிதந்து வெளிவந்த ஆழமான பெருமூச்சின் முழு பரிமானம் முழு அர்த்தம் லோக நாயகனுக்கே தெரியாது.
தெய்வமாக விளங்கவேண்டிய குருமார்களும் உன்னை வஞ்ஜித்து விட்டார்கள். அர்ஜுனனுக்கு சமமான திறமை இருந்தும் உன்னிடம் பொறாமை கொண்டு துரோனர் உனக்கு வில்வித்தயை கற்று கொடுக்க மறுத்து விட்டார்.
குரு பரசுராமரும் நீ பிராமணன் இல்லை என்பதை அறிந்ததும் நீ கற்று கொண்ட பிரமாஸ்த்ரத்தை மறந்துபோகட்டும் என்று சாபம் கொடுத்து விட்டார்.காட்டிலே எதிர்பாராத விதமாக முனிவரின் பசு உன்னால் அடிப்பட்டு இறந்து விட்டதற்கு அந்த முனிவன் போர்களத்தில் உன் தேர் சக்கரம் சேற்றில் சிக்கி கொள்ளட்டும் என்று சாபம் கொடுத்து விட்டான். உன் உயிரை காக்கக் கூடிய கவச குன்டலங்களை இந்திரன் வந்து யாசித்துப் பறித்து கொன்டு போய் விட்டான். கடைசியில் பெற்ற தாய் இரண்டு வரங்களை வாங்கி கொண்டு உன் கைகளை கட்டி போட்டு விட்டாள். இவற்றிற்கெல்லாம் உச்சமாக வஞ்சக கண்ணன் உன் எதிரில் பார்த்த சாரதியாக நிற்கின்றான். கர்ணா இத்தனை பலவீனங்களை கொண்டு வேரெந்த வீரனும் குருக்ஷேத்ரதிர்கு வரவில்லை.இத்தனை தடைகளயும் எதிர்கொண்டு போரிட்டு நட்புக்காகவும், செஞ்சோற்றுக் கடனுக்காகவும்,நன்றிக்காகவும் உயிர் கொடுத்து இருகிறாயே நீ தான் முதன்மையான வீரன். ஓர் உன்னதமான ஜீவாத்மாவின் கடைசி கணங்ளை பக்கத்தில் இருந்து தரிசிக்கவே யாம் இங்கு வந்தோம்" என்றார் மாய கண்ணன். எனக்கு கடைசியாக ஓர் உதவி செய்யவென்டும் என்று உயிரின் கடைசி இயக்கத்திலிருந்தபடி முனுமுனுத்தான் கர்ணன்.என் மனைவியிடம் போய் என்னை பற்றி சொல்லவேண்டும், நான் யார் என்பதை அவளுக்கு தெரிவிக்கவேன்டும் என்றான்.ஏன்? நீ இறந்ததுமே குந்தி தேவி இங்கெ ஓடி வந்து உன்னை மடியில் போட்டு என் மகனே என்று அழத்தானே போகிறாள் என்று கேட்டான் கண்ணன். இல்லை, அது என் மனைவிக்கு முக்கியமில்லை: நான் ஒரு க்ஷத்ரியன் என்று அவளுக்கு தெரிய வேண்டும், அவள் ஓடி வந்து என் உடலில் விழுந்து என் கணவர் இறந்து விட்டார் என அழ வேண்டும், அப்போது தான் என் ஆத்மா சாந்தி அடையும்.இத்தனை நாளும் என்னை கணவனாக முழுமயாக அவள் அங்கீகரிக்கவில்லை. தேரோட்டி மகனாக தான் மதித்திருந்தாள். என்று உடைந்த சொற்களால் வெளிப்பட்ட அவனுடய ஆழமான ஆதங்கத்தை புரிந்து கொண்டான் கண்ணன். நானே போய் அவளிடம் சொல்கிறேன் குந்தி இழந்தது ஒரு மகனை தான், ஆனால் காஞ்சனா இழந்தது ஓர் உன்னதமான க்ஷத்ரியனை என்று உணர்வு பொங்கும் குரலில் சொன்ன பார்த்தசாரதி அர்ஜுனனிடம் திரும்பி கடைசி அம்பை எய்ய சொன்னார்.கனத்த இதயத்துடன் அர்ஜுனன் அஞ்ஜலிகா என்ற அஸ்திரத்தை கர்ணன் மேல் எய்தான்.அதன் தாக்குதலில் கர்ணனின் உயிர் உடலில் இருந்து மெல்ல விடுபட்டு விண்ணை நோக்கி நகர்ந்தது.

No comments:

Post a Comment

ஆண் அழுவான்...

 தாய் தந்தை இறந்தால் ஆண் அழுவான்... *தனக்கு குழந்தை பிறக்கப்போகிறது என்று நற்செய்தி கேட்டு ஆண் அழுவான்... *தன் குழந்தைகளில் ஒருவர் நோய்வாய்ப...