Saturday, 28 September 2019

பஞ்சகவ்ய ரகசியங்கள்!

எங்களின் ஆன்லைன் சேவை - http://astroav.in/

பஞ்சகவ்யம் !


பஞ்ச என்றால் ஐந்து மற்றும் கவ்யம் என்றால் பசுவிடமிருந்து என பொருள்படும். பசுவிடம் இருந்து பெறப்படும் 5 மூலப்பொருட்கள்: 1)சாணம் 2) கோமியம் 3) பால் 4) நெய் 5) தயிர். 
இவை ஐந்தையும் சரியான விதத்தில் கலந்து தயாரிக்கப்படுவதே பஞ்சகவ்யம். 

இது இந்து சமய இறை வழிபாட்டின்போது முக்கிய பூஜைப் பொருளாகவும், ஆயுர் வேத வைத்தியம், வேளாண்மை பயிர் பாதுகாப்பிலும் பயன்படுகிறது. பயிர்களுக்கு ஊறு விளைவிக்கும் பூச்சிகளைக் கட்டுப்படுத்தும். மேலும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். கோசலமும்(கோமியம்) , கோமலமும்(பசுஞ்சாணம்) மருத்துவக் குணமுடையன. 

பஞ்ச கவ்யத்தால் அபிஷேகம் செய்கின்ற போது கிடைக்கின்ற பயன்கள் வருமாறு. 


பசும்பால் :ஆரோக்கியம், ஆயுள் விருத்தி

பசுந்தயிர்:பாரம்பரிய விருத்தி
பசும்நெய்:மோட்சம்
கோசலம் :தீட்டு நீக்கம்
கோமலம்:கிருமி ஒழிப்பு 

பொதுவாக பாவங்கள் குறைய புண்ணியங்கள் நிறையும். 

புனிதம் என்ற ஒரே காரணத்திற்காகப் பஞ்சகவ்யம் ஒரு சிறந்த அபிஷேக பொருளாக மதிக்கபடுகிறது.  பல திறம்மிக்க  அருமையான பொருள்களால் சிலைகளுக்கு அபிஷேகம் செய்த பிறகு அந்த சிலைகளின் இயற்கையான நுண்ணிய ஆற்றல் சற்று கூடுதலாகின்றது என்பது அறிவியல் அடிப்படையில் நிருபிக்கப் பட்டுள்ளது. 


பஞ்சகவ்யதால் அபிஷேகம் செய்த பிறகு அச்சிலைகளின் அற்புத அதிசய தெய்வீக ஆற்றல்அதிகமாகின்றது என்பதும் உண்மையாகும்.


அபிஷேகத்திற்கு பசும் பால் தான் ஏற்றது.எருமைப்பால் முதலியவற்றை பயன்படுத்தக்கூடாது. அபிஷேகத்திற்கான பஞ்சகவ்யம் செய்ய சில அளவு வரைமுறைகள் உள்ளன. 


பசும்பால் :1 அளவு
பசுந்தயிர் :2 அளவு
பசும்நெய் அளவு
கோசலம் :1 அளவு
கோமயம் : 1 அளவு
தர்ப்பை கலந்த நீர் 3 அளவு


பசுக்களில் பல்வேறு நிறங்களைக் கொண்ட பசுக்கள் உள்ளன . பசுக்களின் நிறத்திற்கும் அவை தரும் பாலின் தன்மைக்கும் இடையில் தொடர்வு உண்டு.பொன்னிறப் பசுவிடமிருந்து பாலும், நீலநிறப் பசுவிடமிருந்து தயிரும், கருநிறப் பசுவிடமிருந்து நெய்யும் , செந்நிற பசுவிடமிருந்து கோசலமும், தனித்தனியே எடுத்து பஞ்சக்கவியம் தயாரிக்க வேண்டும். சிவனுக்குரிய அபிஷேகப் பொருட்கலளில் பஞ்ச கவ்வியமே சிறந்தது . 



பஞ்சகவ்வியப் பெருமை :

இந்த பஞ்சகவ்யத்தில் பல்வேறு தேவர்கள் வாசம் செய்கின்றனர். 

பசும் பாலில் சந்திரனும் ,
பசுவின் தயிரில் வாயு பகவானும்,
கோமயத்தில் வருண பகவானும்,
பசும் சாணத்தில் அக்னிதேவனும்,
நெய்யில் சூரிய பகவானும் வாசம் செய்கின்றனர் .

பசுவும். பசு தரும் பஞ்சகவ்யமும் தெய்வத் தன்மை கொண்டவை, என்றென்றும் புனிதமானவை. ஆகவே இந்து சமயத்தில் இவை முக்கியமான நிலைத்த இடத்தை பெற்று விளங்குகின்றன. 

பஞ்சகவ்யம் இந்துக்களின் பல்வேறு சடங்குகள், பூஜைகளில் இதற்கெனத் தனி இடம் உண்டு. 


பசுவின் பால்,தயிர், நெய். கோமியம், சாணம் இவ்வைந்தும் சேர்ந்ததே பஞ்சகவ்யம் எனப்படும். இது இயற்கை வேளாண்மையில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நிலஊட்டப் பொருள்(உரம்) ஆகும்.

No comments:

Post a Comment

என் அப்பா வயதாகிவிட்டார், நடந்து செல்லும்போது சுவரின் ஆதரவைப் பெறுவார்

 என் அப்பா வயதாகிவிட்டார், நடந்து செல்லும்போது சுவரின் ஆதரவைப் பெறுவார். இதன் விளைவாக சுவர்கள் நிறமாற்றம் அடைந்தன, அவர் தொட்ட இடமெல்லாம் அவர...