Friday, 21 April 2017

ஃபேஸ்புக் எனும் அமெரிக்க உளவாளியால் நாம் இழந்தவை என்னென்ன என்று தெரியுமா?

ஃபேஸ்புக் எனும் அமெரிக்க உளவாளியால் நாம் இழந்தவை என்னென்ன என்று தெரியுமா?

நமது வாழ்க்கையை, அதில் மறைத்து வைக்க வேண்டிய அந்தரங்க பக்கங்களை எல்லாம் ஃபேஸ்புக் எனும் மாற்றானிடம் தாரைவார்த்துக் கொண்டிருக்கிறோம். இதை ஒருவருக்கு ஒருவர் போட்டிப் போட்டு அதிகமாக பகிர்ந்து வருகிறோம். பொதுவாகவே மனிதர்களின் அடிப்படையில் நாம் மற்றவரது வாழ்க்கையை படிக்கவே அதிகம் முயற்சிப்போம். இதில் ஆண், பெண் என்ற பேதம் எல்லாம் இல்லை.
நடுத்தெருவில் கூறுபோட்டு விற்பதும், ஃபேஸ்புக்கில் பதிவேற்றம் செய்வதற்கும் எந்த வித்தியாசமும் இல்லை. இதில், நமது வாழ்க்கை பக்கங்களுக்கு வேறொருவர் பதிப்பெண் இட வேண்டும் என்று வேண்டுகிறோம். நமது வாழ்க்கை நமக்கு நாமே எழுதிக் கொள்ளும் பரீட்சை. அதை பொத்தாம் பொதுவாக அனைவரின் பார்வைக்கும் வைக்க ம்யூசியம் இல்லை….
உண்மையான மகிழ்ச்சி
ஃபேஸ்புக் எனும் அமெரிக்க உளவாளியால் நாம் இழந்த முதல் விஷயம் உண்மையான மகிழ்ச்சி, உறவு மற்றும் கருத்துள்ள வாழ்க்கை. இதன் வரவால் நாம் வாழ்க்கையின் மதிப்பை குறைத்து வருகிறோம் என்பது தான் உண்மை. மற்றவரது வாழ்க்கையை பார்க்க நமது வாழ்க்கையை இரையாக்கி வருகிறோம்.
உற்பத்தி திறன் குறைவு
குறைந்தபட்சம் அரைமணி நேரத்திற்கு ஒருமுறையாவது நாம் ஃபுக்கை நோண்டாமல் இருப்பது இல்லை. இது தான் நமது உற்பத்தி திறனை பெருமளவில் குறைக்கிறது.
கடமையை நிறைவேற்ற முடியும்
உங்கள் வாழ்க்கையின் கடமையை கொஞ்சம், கொஞ்சமாக கரையான் போல அரித்து வருகிறது ஃபேஸ்புக். மாயை உலகான ஃபேஸ்புக் நமது நிஜ உலகை திரையிட்டு மறைத்து வருகிறது. லைக்ஸ் மற்றும் கமண்ட்ஸ் என்ற இரட்டை வார்த்தைகளில் நாம் நமது பொன்னான நேரத்தை விரயம் செய்து வருகிறோம்.
உறவுகள் மேம்படும்
முன்பெல்லாம் ஓர் நட்பு வட்டாரம் என்றிருந்தால் கலகலப்பாக இருக்கும். நண்பரின் வீட்டுக்குள் சென்றால் ரகளையாக இருக்கும். இப்போதெல்லாம் நண்பனின் வீட்டுக்குள் செல்லும் போதே, வை-பை பாஸ்வேர்டு என்னடா.. என்று சொல்லியபடி தான் செல்கிறார்கள். உடனே ஃபேஸ்புக், ஒருவர் மற்றொருவது ப்ரொபைலை பார்ப்பது, லைக் கேட்டு கெஞ்சுவது என்ற போக்கிலேயே நேரம் கழிந்துவிடுகிறது.
உண்மையான அழகு
நமது உலகில் இருக்கும் உண்மையான அழகை நாம் காண மறந்து வருகிறோம். ப்ரொபைல் படத்திற்கு போட்டோஷாப் செய்வது போல தான், நமது ஊர்களையும் எடிட் செய்து அழகாக காண்பித்து வருகிறோம். அதை ஏன் நாம் நேரடியாக செய்ய முன்வரக் கூடாது?
சிறப்பான மாற்றம்
சமூக வலைத்தளமே வேண்டாம் என்று யாரும் கூறவில்லை. அதில் தேவையின்றி கழிக்கும் மிகுதியான நேரத்தை நல்ல வழியில் செலவழிக்கலாம். இதன் மூலம் உங்கள் வாழ்வில் நீங்கள் சிறந்த முன்னேற்றத்தை, நல்ல மாற்றத்தை காண இயலும்.
எதிர்காலம் சிறக்கும்
இவ்வாறு நீங்கள் செய்வதால், நாளை இரண்டடி உயரம் செல்வதற்கு மாறாக, பல அடிகள் உங்கள் வாழ்வில் உயரம் காணலாம். தொழில், கல்வி, உறவு என அனைத்திலும் இது சாத்தியமாகும்.

பித்ரு தோஷத்தின் உண்மை பற்றிய புரிதல்!

பித்ரு தோஷத்தின் உண்மை பற்றிய புரிதல்!

பல ஜோதிடர்கள் பல நேரம், தங்கள் வாடிக்கையாளர்களின் ஜாதகத்தில் பித்ரு தோஷம் உள்ளது என கூறி அவர்களைப் பதற வைப்பார்கள். உண்மை என்னவென்றால், நம் முன்னோர்களின் செயல்களால் நாம் சில நன்மைகளை அடைவோம் அல்லது சில அவதிகளுக்கு ஆளாவோம்.
பித்ரு தோஷம் என்பது நம் முன்னோர்களின் ஆத்மா சாந்தி அடையாததால் வரும் தோஷம். பித்ரு தோஷத்தால் பாதிக்கப்பட்ட தனிப்பட்ட நபர்களின் வாழ்க்கையில் ஏற்படக்கூடிய நடைமுறை நிகழ்வுகளில் உள்ளன. 13 வருட ஜோதிட அனுபவத்தைப் பெற்ற ஒரு ஜோதிட வல்லுநர் இதனை கூறியுள்ளார். ஜோதிடம் பற்றி தெரியாதவரை கூட இதில் சம்பந்தப்படுத்தலாம். 4 அல்லது 5 புள்ளிகளை கொண்டிருந்தாலே ஒருவர் பித்ரு தோஷத்தால் அவதிப்படுவார்.
பித்ரு தோஷ அறிகுறிகள்
* திருமணம் தாமதமாகும் அல்லது நடக்காது.
* வீட்டின் சுவர்களில் விரிசல் ஏற்படுதல்
* பாலை கொதிக்க வைக்கும் போது அடிக்கடி பொங்கி வழிதல்.
* கையில் இருந்து உணவு பொருட்கள் அடிக்கடி கீழே விழுதல்.
பித்ரு தோஷ அறிகுறிகள்
* தொடர்ச்சியாக பழுது பார்த்த பின்னரும் கூட சுவர்களில் இருந்து தண்ணீர் கசிதல். ஒழுகும் சுவற்றில் தான் இறந்த ஆன்மாக்கள் வாழும்.
* வீட்டில் அடிக்கடி சாக்கடை அல்லது தண்ணீர் பிரச்சனை ஏற்படுதல். குழாய்களை பிளம்பரை கொண்டு பல முறை பழுது பார்த்திருந்தாலும் கூட தண்ணீர் ஒழுகக்கூடும்.
* தாம்பத்திய வாழ்க்கை பாதிக்கும்.
பித்ரு தோஷ அறிகுறிகள்
* வணிகத்தில் இருப்பவர்கள் எப்போதும் கடனை கொண்டிருப்பார்கள். நெருப்பு அல்லது திருட்டினால் அடிக்கடி ஏற்படக்கூடிய நஷ்டம். திடீரென ஸ்தாபனம் மூடப்படும் நிலைக்கு வருதல்.
* அடிக்கடி வேலை மாற்றம் அல்லது வேலையே இல்லாமல் இருத்தல்.
பித்ரு தோஷ அறிகுறிகள்
* வீட்டில் உள்ள பெரியவர்களையும், குடும்ப மரபுகளையும் சிறியவர்கள் மதிக்காமல் நடந்து கொள்வது.
* குழந்தைகளிடம் பிறப்பு குறைப்பாடு இருத்தல் அல்லது குறைகளே இல்லாமல் இருத்தல். இவைகளுக்கு சில எளிய பரிகாரங்கள் உள்ளன. அவைகளை நம்பிக்கையுடன் செய்தால் அற்புதமான பயன் கிடைக்கும்.
பித்ரு தோஷ பரிகாரங்கள்
* குடும்ப மதிப்புகளுக்கு புத்துயிர் அளித்து, வீட்டில் உள்ள பெரியவர்களை மதித்து நடப்பது.
* நம்பிக்கையுடன் ஷரத்தை செய்தல். கயா அல்லது ஹரித்வாரில் தர்ப்பணம் செய்தல்.
* நம் முன்னோர்கள் செய்த தவறான செயல்களுக்கு மனதளவில் நாம் மன்னிப்பு கேட்டல்.
* முடிந்தவரை தேவையென வருபவர்களுக்கு உதவி செய்தல்.
பித்ரு தோஷ பரிகாரங்கள்
* நம் வருமானத்தில் இருந்து 5%-ஐ தொண்டு காரியங்களுக்கு பயன்படுத்துதல்.
* குடும்பத்தார் மற்றும் நண்பர்களிடம் நல்லுறவை பேணுதல். நம் கர்மாக்களை சமநிலைப்படுத்த, நம்மை காயப்படுத்துபவர்களை மன்னித்தல்.
* வேண்டுமென்றே நாம் காயப்படுத்தியவர்களிடம் மன்னிப்பு கோருதல்.

Thursday, 20 April 2017

மனித உடம்பில் இவ்வளவு விஷயங்களா? ஆச்சர்யம்!

மனித உடம்பில் இவ்வளவு விஷயங்களா? ஆச்சர்யம்!


1. நன்கு வளர்ந்த ஒரு மனிதனின் உடலில் மொத்தம் 206 எலும்புகள் உள்ளன. ஆனால் அவன் குழந்தையாக இருக்கும் போது அவனுடைய உடலில் 300 எலும்புகள் இருக்கும் அவன் வளர வளர அவற்றில் 94 எலும்புகள் மற்ற எலும்புகளுடன் இணைந்து விடுகிறது.2. நாம் 6 விநாடிக்கு ஒரு முறை கண்களை இமைக்கிறோம். சாதார ணமாக வாழ்நாளில் சுமார் 25 கோடி முறைகள் கண்களை இமைக்கிறோம்.
3. நமக்கு இரண்டு கால்கள், இரண்டு கண்கள், இரண்டு காதுகள், இரண்டு கைகள் இவைகள் ஒரே அளவாக இருப்பதில்லை காரணம்கருவில் சிசு வளரும் போது அதன் உறுப்புகள் ஒரே சீராக வளர்வதில்லை. இந்த மிகச் சிறிய வத்தியாசம் தான் நம்மை அழகுபடுத்திக் காட்டுகிறது. நம் இடது கால் செருப்பை விட வலதுகாலின் செருப்பு வேகமாக தேய்வது கூட இந்த சிறு வித்தியாசத்தால்தான்.4. மனிதன் இறந்தபின் அவனது ஜீரண உறுப்புகள் தொடர்ந்து 24 மணி நேரம் வரை செயல்படுகிறது. அவனதுஎலும்பு தொடர்ந்து 4 நாட்களை வரை செயல் படுகிறது. தோல் தொடர்ந்து 5 நாட்கள் வரை பணி செய்கிறது. கண் மற்றும் காது தொடர்ந்து 6 மணி நேரம் பணி செய்கிறது தசைகள் ஒரு மணி நேரம் செயல்படுகிறது. அவனது சிறுநீரகம் தொடர்ந்து 6 மணி நேரம் செயல்படுகிறது. ஆக அவனது உயிர் பிரிந் தாலும் அவனது உடல் உறுப்புகளின் செயல்பாடுகள் நிறுத்தப்படவில்லை.
5. 50 நாட்களுக்கு ஒரு முறை மாதவிடாய் ஆகும் பெண்களுக்கு 300 நாட்களில் குழந்தை பிறக்கிறது. 28 நாட்களுக்கு ஒரு முறை மாதவிடாய் ஆகும் பெண்களுக்கு 280 நாட்களில் குழந்தை பிறக்கிறது. இது தவிர மாதவிடாய் பிரச்சனைகள் உள்ள பெண்களுக்கு குழந்தை பிறப்பும் சற்று முன்னாடியே (குறை பிரச வம்) அமைந்து விடுகிறது. பெண்கள் இது விஷயத்தில் கவனம் கொள்ள வேண்டும்.6. பகலில் 8 மில்லிமீட்டர் சுருங்கி இரவில் 8 மில்லி மீட்டர் உயர்ந்து விடுகிறோம். காரணம் பகலில் நமது வேலைகள் செய்யும்போது தண்டு வடத்திலுள்ள குறுத்தெலும்பு வட்டுகள் ஈர்ப்பு விசைகாரணமாக அழுத்துகின்றன. இதனால் உயரம் குறைகிறது. இரவில் எவ்வித விறைப்புத் தன்மையும் இல்லாமல் படுத்து உறங்குவதால் நமது உடம்பின் உயரம் கூடுகிறது.7. நம் இரத்தத்தில் சிவப்பணுக்களின்ஆயுட்காலம் 127 நாட்கள் தான் அதன் பிறகு அது மடிந்து விடும். புது சிவப்பணுக்கள் உருவாகும். இரத்தத்தில் வெள்ளை அணுக்களின் ஆயுட்காலம் 120 நாட்கள்.
8. நம் உடலில் சுமார் 20 லட்சம் வியர்வை சுரப்பிகள் இருக்கின்றன. அவை ஒரு நாளில் சராசரியாக 5 லிட்டர் முதல் 6 லிட்டர் வியர்வையை வெளிப்படுத்துகின்றன.9. நமது கைகளில் நடுவிரலில் நகம் வேகமாகவும், கட்டை விர லில் நக ம் மெதுவாகவும் வளர்கின்றன. நம்முடைய உடல் பாரத்தால் கை விரல் நகத்தைவிட கால்விரல் நகம் மெதுவாக வளர்கிறது.10. நாம் இரவில் தூங்கும் போது அசையாமல் தூங்குவதில்லை, சுமார் 40 முறை அந்தப் பக்கம், இந்தப்பக்கமாகப் புரண்டு படுக்கிறோம்.11. நம்முடைய உடல்தோலின் பருமன் மிகக் குறைந்தபட்சம் ½ மில்லி மீட்டர் கண்ணிமைகளிலும்,அதிகபட்சமாகப் பருமன் 4 முதல் 6 மில்லி மீட்டராக உள்ளங்கைகளிலும், அடிப் பாதங்களிலும் அமைந்திருக்கிறது.12.மூளை அதிகமாக வேலை வாங்கும் மனித உறுப்பு கட் டை விரல்கள்.13. மனித உடலில் மிகவும் கடினமான பாகம் தாடை எலும்பு.14. மனித மூளை 80 முதல் 85 சதவீதம் தண்ணீரைக் கொண்டதாகும்.15. கல்லீரல் 500 விதமான இயக்கங்களை நிகழ்த்துகிறது.16. நம் ஒடல் தசைகளின் எண்ணிக்கை 630.17. நம் உடலின் மொத்த எடையில் 12 சதவீதம் பங்கு ரத்தம் உள்ளது.18. நம் தலைமுடி 1 லட்சத்திலிருந்து இரண்டு லட்சம் வரை உள் ளன. அவை 1 மாதத்திற்குள் 1-1/4 செ.மீ. வளர்கின்றன.19. மண்டை ஓடு மனிதனின் 80 ஆம் வயது வரை வளர்கிறது.20. மனித முகங்களை மொத்தம் 520 வகைகளுக்குள் அடக்கி விடலாம்.21. மனித நாக்கின் நீளம் 10 செ.மீ.22. நாம் படுத்திருக்கும்போது 1 நிமிடத்திற்கு 9 லிட்டர் மூச்சுக் காற்றும் உட்கார்ந்திருக்கும் போது 18 லிட்டர் மூச்சுக்காற்றும், நடக்கும் போது 1 நிமிடத்திற்கு 27லிட்டர் மூச்சுக்காற்றும் தேவைப்படுகிறது.23. நமது சிறு நீரகத்தில் பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட வடிகட்டிகள் இருக்கின்றன. இவைகள் ஊறுகாய், உப்புக்கருவாடு,ஆல்கஹால் போன்றவற்றால் பாதிப்படைகிறது.24.பெண்களைவிட ஆண்களுக்கு மூளை மிகப்பெரியது. பெண்களை விட சுமார் 4000 உயிரணுக்கள் ஆண்கள் மூளையில் இருக்கிறது.25. மனித உடலில் மிகப்பெரிய உறுப்பு தோல்.26. நமது தலையின் எடை 3.175 கிலோ கிராம்.
27. மூளையின் 100கோடி நியூரான்கள் நமக்கு 4 வயதுக்குள் கிடைத்து விடும்.28. நாம் ஒரு பொருளை இறுக்கிப்பிடிக்க நம்கட்டை விரலிலுள்ள 3 தசைகள் தான் பெரும் பங்கு அளிக்கிறது. மனிதனை ஒத்த உருவம் கொண்ட சிம்பன்ஸி குரங்கிற்கு இந்த 3 தசைகள் கிடை யாது.29. மூளையின் மடிப்புகளே அறிவு கூர்மையை தீர்மானிக்கிறது.30. மனித உடலில் இருக்கும் இரத்தம் 30 அடி தூரம் வரை பீய்ச்சியடிக்கும்.31. பிறந்த குழந்தைக்கு வெள்ளை / கறுப்பு நிறங்களை தவிர வேறு நிற வேறுபாடே தெரியாது.32. மனித உடலின் தோலின் எடை 27 கிலோ கிராம்.33. மனித உடலில் 33 முள்ளெலும்புகள்உள்ளன.34. இதயத்தை, சிறுநீரகத்தை, கல்லீரலை, முழங்காலை மாற்றலாம். ஆனால் மூளையை மட்டும் மாற்றவே முடியாது. காரணம் ஞாபங்கள், நினைவுகள், எதிர்காலத்தில் மாற்ற முடிந்தாலும், மாற்றப்பட்டவன் வேற்று மனிதன் தான் அவன் அந்நியன் தான்.35. கண்கள் உலர்ந்து போகாமலிருக்க இரண்டு வகையான ஈரம் தேவைப்படுகிறது.கண் இமைகள் தான் நம் வைப்பர்கள். அவற்றின் விளிம்பில் 30 சுரப்பிகள் உள்ளன. கண்சிமிட்டும் போதெல்லாம் கண்விழி இவற்றின் மூலம் அலம்புகின்றன. அழுது கண்ணீர் விடும் போது கண் விழிமேல் இருக்கும் சுரப்பிகளிலிருந்து கண்ணீர் வினியோகம் ஆகிறது.36. நமது உடலிலுள்ள செல்கள் பிரிந்து இரண்டாகும் தன்மையு டையது. ஒரு நாளைக்கு நம் உடலில் 60 கோடி செல்கள் இறந்து புது செல்கள் பிறக்கின்றன.
37. தலைமுடி 2 வருஷத்திலி ருந்து 4 வருஷம் வரை வளர்கி றது. அதன்பின் 3 மாதம் வளராமல் இருந்து உதிர்கிறது. பிறகு புது கேசம் வளர்கிறது.38. ஓர் அடி எடுத்து வைக்க உடலெங்கும் 54 தசைகள் பணிபுரிய வேண்டியுள்ளது.39. 70 வயது வரை வாழும் ஒரு மனிதனின் இதயம் 250 கோடி தடவை துடிக்கிறது. ஒரு பம்பின் செயல்பாட்டிற்குஒப்பிட்டால் இதயம் ஒரு நாளைக்கு 18 ஆயிரம் லிட்டர் ரத்தத்தை பம்ப் செய்கிறது.இதயம் சீராக துடிக்க பொறாமை, கெட்ட சிந்தனை இவைகளை விட்டொழித்தால் போது ம், உயிர் வாழும் ஆண்டுகள் அதிகரிக்கும்.40. நமது நரம்பு மண்டலம் தான் மூளைக்குத் தகவல்களை அனுப்புகிறது. அது ஒரு நிமிடத் திற்கு 6 லட்சம் தகவல்களை அனுப்புகிறது.41. நமது உடலின் நீளமான எலும்பு தொடை எலும்பு தான்.42. மனிதன் சிந்திக்கும் வேகம் நிமிடத்திற்கு 500 சொற்கள் என்றும் பேசும் வேகம் நிமிடத்திற்கு 100 சொற்கள் என்றும் கணக்கிடப்பட்டுள்ளது.43. மூளையில் ஏற்படும் வலியை நம்மால் உணரமுடியாது. ஆனால் மற்ற உறுப்புகளின் வலியை உணர்த்துவதுமூளையே.44. பெண்களைவிட ஆண்களுக்கு 40 சதவீ தம் கூடுதலாக வியர்க்கிறது.45. உயிர்வாழ உடலுக்குத் தேவை 13 வைட்டமின்கள்.46. உடலில் ரத்தம் பாயாத பகுதி கருவிழி மட்டுமே.47. நம் வாழ்நாளில் 50 டன் உணவுப் பொருளையும் 11 ஆயிரம் காலன் திரவத்தையும் உட்கொள்கிறோம்.48. நம் உள்ளங்கைகளில் ஒவ்வொரு சதுர அங்குலத்திலும் 3000 வியர்வை சுரப் பிகள் இருக்கின்றன.49. நம்முடைய தலை ஒரே எலும்பால் உருவானது அல்ல, 22 எலும்புகளில் உருவானதாகும்.50. மனித உடலில் 50 லட்சம் முடிக்கால்கள் உள்ளதாகவும், பெண்களின் முடியை விட ஆண்களின் முடி வளர்ச்சி விரைவானது என் றும் அறியப்படுகிறது.51. ஆரோக்கியமான மனிதன் 7 நிமிடங்களில் தூங்கி விடுகின்றான்.52. மூளையின் கனபரிமாணம் 1500 கன சென்டி மீட்டர்.53. மனிதன் பயன்படுத்தும் சொல் தொகுதி 5000 முதல் 6000 வார்த்தைகள் தான். சாதாரண மனிதன் முதல் விஞ்ஞானிகள் வரை சராசரியாக இவ்வளவு வார்த்தைகளைத்தான் பயன்படுத்துகிறார்கள்.54. மனித உடலில் 97,000 இரத்த நாளங்கள் உள்ளன.
55. நம் நகம் தினமும் 0.1 மில்லி மீட்டர் வீதம் வளர்கிறது.56. நாள் ஒன்றுக்கு நாம் 23,040 தடவை சுவாசிக்கின்றோம்.57. மனிதனின் உடலிலுள்ள குரோமோசோம்களின்எண்ணிக்கை 46 (23 ஜோடி)58. நாம் பேசக்கூடிய வார்த்தை க்கு 72 தசைகள் வேலை செய்ய வேண்டும். பேச்சை குறைத்தால் சாதனைகளை நிகழ்த்தலாம்.59. நமது நுரையீரல் 3 லட்சம் துவாரங்களையும் இரத்த குழாய்களையும் கொண்டதாக இருக்கிறது. இவைகளின் நீளம் 2400 கி.மீ. உள்ளது.60. கண்களில் உள்ள லென்ஸ் ஆயுள் முழுவதும் வளரும்.61. ஒரு சொட்டு இரத்தத்தில் 55 லட்சம் இரத்த சிவப்பணுக்கள் உள்ளன.62. முளையின் நிறம் பழுப்பான நீலநிறம்.63. உடலில் பொட்டாசியம் அளவு 70 சதவீதமாக குறைந்துவிட் டால் அசதி, சோர்வு, வாந்தி, வயிற்றுப் போக்கு ஏற்படும்.64. ஒரு மனிதன் தினமும் 2 லிட்டர் எச்சிலை ஊறச் செய்கிறான். 1.14லிட்டர் வியர்வை வெளியிடுகிறான்.65. சிந்தனையின் வேகம் அல்லது ஒரு யோசனையின் தூரம் என்று சொல்லுகிறோம் இந்த தூரம் 150 மைல்களாகும்.66. ஓர் ஆணின் இதயத்தைவிட பெண்ணின் இதயம் அதிகமாக துடிக்கிறது.67. மணிக்கட்டிலிருந்து நடுவிரல் நுனிவரை உள்ள நீளமும், மேவாய் கட்டையிலிருந்துநெற்றி உச்சி வரை உள்ள நீளமும் எல்லாருக்கும் சமமாக இருக்கும்.
68. ஒரு முறை வெளியாகும். ஆணின் விந்தில் 30 கோடி உயி ரணுக்கள் வரை இருக்கும்.69. உடலில் உண்டாகும் உஷ்ணம் வெளியேறிவிடாமல்தடுக்கவே ரோமம் உள்ளது.70. இதயத்திலிருந்துபுறப்பட்ட இரத்தம் உடல் முழுவதும் ஒரு சுற்று சுற்றி விட்டு மீண்டும் இதயத்திற்குத் திரும்ப எடுத்துக் கொள்ளும் நேரம் 30 செகண்டு ஆகும்.71. மண்ணீரலில் சுரக்கும் ஒரு வகை நீர் ரத்தத்தில் கலந்து மூளைக்குச் சென்று சிறிய அறைகளைப் பாதிக்கிறது. இதனால் தான் மனிதனுக்கு கோபம் வருகிறது.72. மனித மூளையில் தாமிரத்தின் அளவு 6 கிராம் ஆகும்.73. ஆட்ரினல் சுரப்பி அளவுக்கு அதிகமாக நீரை சுரக்கத் தொடங்கிவிட் டால் ஆணுக்கு பெண்குணமும், பெண்ணுக்கு ஆண்குணமும் ஏற்படும்.

நாம் தவிர்க்க வேண்டிய 8 மன விஷங்கள்!

 நாம் தவிர்க்க வேண்டிய 8 மன விஷங்கள்! நமது மன அமைதியையும் மகிழ்ச்சியையும் நாமே அறியாமல் அழிக்கும் 8 நச்சு எண்ணங்கள் என்னென்ன என்று தெரிந்துக...