Tuesday, 23 July 2024

அமாவாசையை பற்றிய சில தெய்வீக விளக்கங்கள்

 அமாவாசையை பற்றிய சில தெய்வீக விளக்கங்கள்

⚫தமிழகத்தின் தெற்கு பகுதியில் அமாவாசையை நல்ல நாளாக பலரும் கருதுவது கிடையாது காரணம் அன்று முன்னோர்களுக்காக தர்ப்பணம் கொடுக்கிறோம் தர்ப்பணம் கொடுக்கும் நாளில் சுபகாரியங்களை செய்யக்கூடாது என்பது அவர்களது எண்ணம்.
⚫ஆனால் வடக்கு பகுதியில் இப்படி யாரும் கருதுவது கிடையாது. நிறைந்த அமாவாசையில் கடை திறந்திருக்கிறேன், புதிய வண்டி வாங்கி இருக்கிறேன், நிலம் பத்திரம் செய்திருக்கிறேன் என்று கூறுபவர்களை நிறைய பார்க்கலாம்.
⚫ஆனால் பொதுவாக அமாவாசையை நல்ல நாள் என்று பலரும் ஏற்றுக்கொள்வதில்லை.
⚫சரி அமாவாசை நல்ல நாளா? தீய நாளா?
⚫அமாவாசை தினத்தில் சூரியனும், சந்திரனும் நேர்கோட்டில் வருகிறது அதாவது ஒன்றையொன்று சந்தித்துக்கொள்கிறது அன்று முன்னோர்கள் புண்ணியலோகத்திலிருந்து பூமிக்கு வருகிறார்கள். தங்களது தலைமுறைகளை சூட்சமமான முறையில் கண்காணிக்கிறார்கள் அவர்களது வாரிசுகளான நாம் துவங்கும் காரியங்களை கரிசனத்தோடு பார்க்கிறார்கள், ஆசிர்வதிக்கவும் செய்கிறார்கள்.
⚫எனவே பிதுர் தேவதைகள் என்ற முன்னோர்களை வழிபட்டு அவர்களுக்கு மரியாதை செய்து அமாவாசை தினத்தில் புதிய காரியங்களை துவங்கினால் நிச்சயம் நல்லதே நடக்கும் அன்று நற்காரியங்களை செய்வதனால் தீங்கு ஏற்படாது. முன்னோர்கள் பூமிக்கு வரும் தினம் என்பதனால் அது நல்லநாளே.
⚫இந்துக்களில் தை அமாவாசை, ஆடி அமாவாசை மற்றும் புரட்டாசி,மாசி அமாவாசை மிகவும் சிறப்புடையது.
⚫முன்னோர் வழிபாட்டுக்கு மிகவும் சிறந்த நாள் அமாவாசை! இது அனைத்து மதத்திற்கும் பொருந்தும்.
⚫அமாவாசையன்று உலகை இயக்கும் சூரியனும் சந்திரனும் ஒன்று சோ்வதால் ஒரு காந்த சக்தி ஏற்படுகிறது.
⚫அமாவாசையன்று மாமிச ஆகாரம் தவிர்ப்பது பெரும் ஜீவகாருண்யமாகும்.
⚫அமாவாசையன்று பிறக்கும் குழந்தைகளின் மூளை பிற்காலத்தில் அதீதமாக வேலை செய்யும் என்று விஞ்ஞான ரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
⚫அமாவாசையன்று விபத்துகள் கூடுதலாக ஏற்படுவதாக ரஷ்ய விஞ்ஞானிகள் கூறுகின்றனா்.
⚫ஜோதிட ரீதியாக அமாவாசை நிறைந்த நாள். அனேகமானவர்கள் அமாவாசையில் மோதிரம் செய்து போடுகின்றனா்.
⚫சூரிய கலையும், சந்திர கலையும் சேருவதால் சுழுமுனை என்னும் நெற்றிக்கண் பலப்படுகிறது. அதனால் அமாவாசையில் சாஸ்திரிகள் மந்திர ஜெபம் ஆரம்பிக்கின்றனா். கடலில் நீராடி தங்களுக்கு ஏற்பட்ட தோஷத்தைப் போக்குகின்றனா்.
⚫அமாவாசையன்று ஜீவ சமாதிகள் புதிய உத்வேகத்தைப் பெறுகின்றன. அனேக குரு பூஜைகள் அதிஷ்டான பூஜைகள் அமாவாசையன்று நடத்துகின்றனா்.
⚫சாதாரணமாக இறந்த ஆவிகள் சந்திரனின் ஒளிக்கற்றையில் உள்ள அமிர்தத்தைப் புசிக்கும். அதுதான் அதற்கு உணவு.
⚫அமாவாசையன்று சந்திரனின் ஒளிக்கற்றை ஆவிகளுக்குக் கிடைக்காது. அதனால் ஆவிகள் உணவுக்குத் திண்டாடும். பசி தாங்க முடியாமல் இரத்த சம்பந்தமுடைய வீடுகளுக்கு வரும்.அப்போழுது நம்மை யாராவது எண்ணுகிறார்களா ,நமக்குத் தா்ப்பணம், படையல் செய்கிறார்களா என்று பார்க்கும்.
⚫வீடு வாசல் இல்லாத ஏழைகளுக்கு அமாவாசையன்று அன்னதானம் செய்ய வேண்டும். ஒவ்வொரு அமாவாசையன்றும் தங்களால் இயன்ற அளவு உணவை அன்னதானம் செய்யலாம். பசு, காகம், நாய், பூனை மற்றும் இதர ஜீவராசிகளுக்கும் அன்று அன்னம் அளிக்கலாம்.
⚫அமாவாசை பிதுா் தா்ப்பணம் மற்றும் அன்னதானம் ஆகியவற்றைக் குல தெய்வம் இருக்கும் இடத்தில் செய்வது நல்லது. முடியாதவா்கள் தங்கள் இஷ்ட தெய்வம் இருக்கும் இடத்தில் செய்யலாம். வீட்டிலும் செய்யலாம்.
⚫அமாவாசையன்று தலையில் எண்ணெய் தடவக் கூடாது. புண்ணியத் தலங்களில் கடலில் நீராடலாம். அல்லது நதியில் நீராடலாம். அமாவாசையன்று காலை சூரிய உதயத்தின் போது கடலில் எடுக்கப்பட்ட நீரை வீட்டுக்குக் கொண்டுவந்து தீா்த்மாகத் தெளிக்கலாம். அதனால் வீட்டிலுள்ள தோஷங்கள் நீங்கும்.
⚫உற்றார், உறவினா் தொடா்பு இல்லாத ஆவிகள் மரம், செடி கொடிகளில் அமாவாசையன்று மட்டும் தங்கி, அவற்றின் சாரத்தைச் சாப்பிடும். அதனால் அமாவாசையன்று மட்டும் மரம், செடி, கொடிகளையோ காய்கறிகளையோ புல் பூண்டுகளையோ தொடக்கூடாது. பறிக்கக் கூடாது.
⚫ஒவ்வொரு மாதம் அமாவாசை அன்னதானம் செய்ய முடியாதவா்கள் தை, ஆடி, புரட்டாசி அமாவாசையில் அன்னதானம் செய்ய வேண்டும். புரட்டாசி அமாவாசையில் செய்தால் 12 ஆண்டுகளாக அன்னதானம் தா்ப்பணம் செய்யாத தோஷம் நீங்கும்.நமக்கு அன்னம் இடுபவள் அன்னபூரணி! ஆவிகளுக்கு அன்னம் இடுபவள் ஸ்வதா தேவி! நாம் ஆவிகளை நினைத்துக் கொடுக்கும் அன்னத்தை மற்றும் யாகத்தில் போடும் ஆவுதிகளை ஸ்வதா தேவிதான் சம்பந்தப்பட்ட ஆவிகளிடம் சோ்ப்பிக்கிறாள்.
⚫நகரங்களில் வசிப்பவா்கள் அமாவாசையன்று ஏழைக் குழந்தைகளுக்கு அல்லது ஆதரவற்றவா்களுக்கு முன்னோர்களை நினைத்து அன்னதானம் செய்ய வேண்டும். இதர தானங்கள் தருவது அவரவா் வசதியைப் பொறுத்தது.
⚫அன்னதானம் கஞ்சியாகவோ, சாதமாகவோ, இட்லியாகவோ இருக்கலாம். ஆனால் எள்ளு சட்னி அல்லது எள் உருண்டை கண்டிப்பாக இருக்க வேண்டும்.
⚫எதுவும் செய்ய முடியாமல் இருப்பவா்கள் ஒரு பசு மாட்டிற்கு ஒன்பது வாழைப்பழங்கள் அமாவாசை அன்று கொடுக்க வேண்டும். இதற்குச் சாதி, மதம், இனம் என்ற வேறுபாடு இல்லை.
⚫முன்னோர்கள் ஆத்மா சாந்தியடைய ஒவ்வொருவரும் இதைச் செய்ய வேண்டும்...

படுக்கை அறையில் இடைவெளி விட்டு உறங்கும் தம்பதிகளா நீங்கள்? அதனால் உண்டாகும் 6 தீய விளைவுகள்...


 படுக்கை அறையில் இடைவெளி விட்டு உறங்கும் தம்பதிகளா நீங்கள்? அதனால் உண்டாகும் 6 தீய விளைவுகள்...

திருமணமான புதிதில் கணவன் மனைவி இருவரும் ஒன்றாக கட்டியணைத்து உறங்குவார்கள் ஆனால் இரண்டு குழந்தைகளுக்கு பிறகு பல வீடுகளில் கணவன் மனைவி சேர்ந்து உறங்குவது கிடையாது ஏதே சில காரண்களுக்காக இருவரும் இடைவெளிவிட்டு அல்லது தனித்தனியே குழந்தைகளுடன் உறங்குவார்கள் இதனால் கணவன் மனைவி உறவில் என்னென்ன மாற்றங்கள் வருகிறது என்பது பற்றி இக்கட்டுரையில் காணலாம்...
1. நெருக்கம் குறைகிறது...
கணவன் மனைவி இருவருக்கும் கொஞ்ச நேரம் மனசு விட்டு பேச அல்லது காதலிக்க கிடைக்கும் நேரமே படுக்கையறை நேரம்தான். இந்த நேரத்தை உறவை மேலும் வழுப்படுத்த பயன்படுத்திக்கொள்ள வேண்டியது அவசியம் நண்பர்களே, இங்கு இருவேறு துருவங்கள் போல் ஆளுக்கொரு பக்கம் பிரிந்து இருப்பது கணவன் மனைவி உறவுக்கு அவ்வளவாக நல்லதல்ல என பாலியல் மற்றும் மனத்தத்துவ நிபுணர்கள் கூறுகிறார்கள்...
2. எளிதில் சலித்துப் போய்விடும்...
படுக்கை அறையில் இருவரும் நெருக்கமின்றி படுத்து உறங்கவில்லை என்றால் உங்களது உறவு எளிதில் சலித்துவிடும், உங்கள் மனைவியோ, அல்லது கணவனோ ஆசையாக உங்களை தொடும்போது கூட உங்களுக்கு பெரிதாக எந்தவொரு உணர்ச்சியும் ஏற்படாது,
3. உடலுறவில் நாட்டமின்மை...
நீங்கள் தனித்தனியாக படுத்து உறங்குவதை வழக்கமாகவே கொண்டிருந்தால், நாளடைவில் உங்களுக்கு உடலுறவில் கூட அவ்வளவு பெரிதாக நாட்டமில்லாமல் போய்விடும்,
4. வேறு ஒருவர் மீது காதல்/ஆசை...
உங்களின் நெருக்கம் குறைவதால், நீங்கள் எப்போதும் நெருக்கமில்லாமல் இருந்தால், நீங்கள் படிப்படியாக வேறொருவர் மீது காதல்வயப்பட அதிக வாய்ப்புள்ளது, மேலும் உங்கள் மனைவியுடன் அல்லது கணவனுடன் தனிமையில் சேர்ந்து அமர்ந்து கரம் பிடித்து பேசுவதை கூட நீங்கள் விரும்பமாட்டீர்கள்...
5. சண்டைகள் & சந்தேகங்கள்...
ஒரு குடும்பத்தில் சந்தேகம் முன் வாசல் வழியாக வந்தால் சந்தோஷம் பின் வாசல் வழியாக ஓடிவிடுமாம், எந்த சூழ்நிலையிலும் சந்தேகம் என்பது புருசன் பொண்டாட்டி வாழ்க்கையில் கூடவே கூடாது... ஒருவருக்கொருவர் விளையாடுவது, மற்றும் சிறுசிறு காதல் தீண்டல்கள் உறவில் இல்லாமல் போகும்போதுதான் அடிக்கடி சண்டைகள் / ஏச்சுப் பேச்சுகள் கணவன் மனைவிக்குள் வரும்.
6. இந்நிலை இப்படியே நீடித்தால் இறுதியாக வெறுப்புதான் கிட்டும்...
அதாவது உங்களது கவனம் வேறொரு நபர் மீது திசை திரும்பிவிட்டால், வேறொருவரை நேசிக்க நீங்கள் ஆரம்பித்துவிட்டால் உங்களது துணையை நீங்கள் கொஞ்சம் கொஞ்சமாக வெறுக்க ஆரம்பித்துவிடுவீர்கள் ஆகவே நண்பர்களே...
உங்களை நம்பி கரம் பிடித்தவரை காதலியுங்கள், துணையை அணைத்து துயரம் தவிர்த்திடுங்கள்...

Thursday, 27 June 2024

திருப்பூரில் சுக்ரீஸ்வரர் கோவில் முக்கிய சிறப்புகள்:-


 சுக்ரீஸ்வரர் கோவில் முக்கிய சிறப்புகள்:-

1. பொய் ஆகவே ஆகாது!
2. கோவில் மேல் கோவில!
திருப்பூரிலிருந்து ஊத்துக்குளி செல்லும் சாலையில் 8 கிலோமீட்டர் தொலைவில் சர்க்கார் பெரியபாளையத்தில் சுக்ரீஸ்வரர் கோவில் உள்ளது. ராமாயண காலத்தில் ஸ்ரீராமருக்கு உதவியாக இருந்த சுக்ரீவன், இங்கு ஈஸ்வரனை பிரதிஷ்டை செய்து வழிபட்டதால் மூலவருக்கு சுக்ரீஸ்வரர் என்று பெயர் வந்ததாக தல புராணம் கூறுகிறது. இதற்கு சான்றாக ஆலயத்தில் அர்த்த மண்டப சுவரில், சுக்ரீவன் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யும் புடைப்புச் சிற்பம் உள்ளது. இத்தல இறைவன் குரக்குத்தளி ஆடுடைய நாயனார் என்றும் அழைக்கப்படுகிறார்.
தற்போது இந்திய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் இக்கோவில் சமயக்குரவர்களுள் ஒருவரான சுந்தரர் பாடல் பெற்ற தலமாகும். ஆகையால் இது 8–ம் நூற்றாண்டைச் சேர்ந்த கோவிலாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஆனால் கி.பி. 1220–ம் ஆண்டை சேர்ந்த ஒரு கல்வெட்டுதான் இங்கு காணப்படுகிறது.
இந்தக் கோவிலில் மூலவர் சுக்ரீஸ்வரர், லிங்க வடிவில் எழுந்தருளியுள்ளார். வலதுபுறம் ஆவுடைநாயகியாக அம்மன் தனிச் சன்னிதியில் அருள்பாலிக்கிறார். சுற்றுப் பிரகாரங்களில் கன்னி மூல விநாயகர், தட்சிணாமூர்த்தி, சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர், பைரவர் சன்னிதிகளும், எந்த சிவன் கோவில்களிலும் இல்லாத சிறப்பாக கருவறைக்கு நேர் எதிரே பத்ரகாளியம்மன் சன்னிதியும் உள்ளது.
பஞ்சலிங்கங்க கோவில்:-
நீர், நிலம், காற்று, நெருப்பு, ஆகாயம் என பஞ்ச பூதங்களை குறிக்கும் வகையில், பஞ்சலிங்கங்கள் இந்தக் கோவிலில் அமைந்துள்ளன. மூலவராக அக்னி லிங்கம், மீதம் மூன்று லிங்கங்கள் கோவிலை சுற்றிலும் அமைந்துள்ளன. சிவனுக்கு பிடித்த வில்வமரத்தின் கீழ், ஐந்தாவதாக ஆகாச லிங்கம் அமைந்துள்ளது.
நான்கு யுகங்களை கடந்தது இக்கோவில் வரலாறு:-
2,500 ஆண்டுகளுக்கு முந்தையது என தொல்லியல் துறை கூறினாலும், 17.28 லட்சம் ஆண்டுகளை கொண்ட கிரதாயுகத்தில், காவல் தெய்வமாகவும், 12.96 லட்சம் ஆண்டுகளை கொண்ட திரேதாயுகத்தில் சுக்ரீவனாலும், 8.64 லட்சம் ஆண்டுகளை கொண்ட துவாபரயுகத்தில், இந்திரனின் வாகனமாக ஐராவதத்தாலும், வணங்கப்பட்டது எனவும், 4.32 லட்சம் ஆண்டுகளை கொண்ட, கலியுகத்தில், தேவர்களாலும், அரசர்களாலும் வணங்கப்பட்டு, நான்கு யுகங்களை கண்ட கோவில் என்ற வரலாறும், அதற்கான சான்றுகளும் கோவிலில் உள்ளன.
கோவில் மேல் கோவில்:-
1952–ம் ஆண்டு தொல்லியல் துறை இந்த கோவிலை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்து ஆய்வு செய்தது. அப்போது கோவிலை மீண்டும் புனரமைக்க முடிவு செய்து, கோவில் அஸ்திவாரத்தை பலப்படுத்த நடவடிக்கை எடுத்தது. கோவில் கற்களை பிரித்து பார்த்தபோது, தற்போதுள்ள கோவிலை போலவே பூமிக்கடியிலும், இதே கட்டுமானத்தில் ஒரு கற்கோவில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. கற்கோவிலுக்கு மேல் மற்றொரு கோவில் எழுப்பப்பட்டிருக்கும் இந்த அமைப்பு வித்தியாசமாக இருப்பதாக கூறப்படுகிறது.
சிதம்பரம், பேரூர் கோவிலுக்கு அடுத்து, சிறப்பான வேலைப்பாடுகளுடன், சக்தி வாய்ந்ததாக சுக்ரீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. கோவிலுக்கு என 450 ஏக்கர் நஞ்சராயன்குளம், கோவிலை சுற்றிலும் தண்ணீர் தேங்கும் அகழி, தெப்பக்குளம், இப்பகுதியில் அமைந்திருந்த முகுந்த பட்டணத்தில் இருந்து, மூலவருக்கு அருகே வெளியே வரும் வகையில் அமைந்துள்ள குகை, சிறப்பான வேலைப்பாடுகளுடன் கூடிய கருவறை கோபுரம் என தெரியாத விஷயங்கள் பல உள்ளன.
அதேபோல் கோவிலுக்கு மேற்கு பகுதியில் 56 வகையான நட்சத்திர, ராசி, திசை மரங்கள் நடப்பட்டு பெண்கள் நலபயணம் மேற்கொள்ள தனியாக நடைபாதையும் போடப்பட்டுள்ளது.
பொய் ஆகவே ஆகாது!
மிளகு, பயிராக மாறியது:-
ஒரு வியாபாரி, பொதிச்சுமையாக, மாடுகள் மீது மிளகு மூடைகளை ஏற்றிக்கொண்டு அவ்வழியாக சென்றுள்ளார். அப்போது மாறுவேடத்தில் வந்த சிவன் மூட்டைகளில் என்ன என கேட்க, அந்த வியாபாரி மிளகுக்கு இருந்த விலைமதிப்பு காரணமாக, பாசிப்பயிறு என கூறியுள்ளார். பின்னர் 15 நாட்களுக்கு அந்த வியாபாரி சந்தைக்குச் சென்று பார்த்தபோது, மிளகு மூடைகள் அனைத்தும் பாசிப்பயிறு மூடைகளாக மாறியிருந்தன. அதிர்ச்சி அடைந்த விவசாயி, இறைவனிடம் கதறி அழுது வேண்டினார். இதைதொடர்ந்து இறைவன் கனவில் சென்று, உன் மாடுகள் எங்கு வந்து நிற்கிறதோ, அங்கு வந்து வணங்கு. உன் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் என்று கூறியுள்ளார். இதைதொடர்ந்து வியாபாரியும் மாட்டை ஓட்டி வந்து மாடு நின்ற இடத்தில் சுக்ரீஸ்வரரை வணங்கியதால் பாசிப்பயிராக இருந்த மூடைகள் மிளகு மூடைகளாக மாறின. இப்பகுதி மக்கள் மிளகு ஈஸ்வரரே என்று அழைத்துவருவது குறிப்பிடத்தக்கது. அதனால் இங்கு வந்து மிளகு பூஜை செய்தால் தீர்வு கிடைக்கும் என்று நம்பப்படுகிறது. இத்துடன் கடந்த 14 வருடங்களாக காள பைரவர் பூஜை அஷ்டமி, தேய்பிறையில் மாதந்தோறும் விமரிசையாக நடைபெற்று வருகிறது.
இரண்டு நந்தி:-
இந்தக் கோவில் இரண்டு நந்திகள் உள்ளன. முதலில் உள்ள நந்திக்கு கொம்பு, காது இல்லை. இதற்கு ஒரு கதை கூறப்படுகிறது. கோவில் நந்தி அருகிலுள்ள விவசாய நிலத்துக்கு சென்று மேய்ந்துள்ளது. ஆத்திரமடைந்த விவசாயி இடுப்பில் இருந்த கத்தியை எடுத்து நந்தியின் காதையும், கொம்பையும் வெட்டியுள்ளார். மறுநாள் கோவிலுக்கு வந்து பார்த்தபோது, கற்சிலையான நந்தியின் காதில் இருந்து ரத்தம் வழிந்துள்ளது. அதிர்ச்சியடைந்த விவசாயி, தனது தோட்டத்துக்கு வந்தது நந்தி என அறிந்ததும், தன் தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்டு வணங்கியுள்ளார். பின்னர் தவறுக்கு பிராயச்சித்தமாக, மற்றொரு நந்தி சிலை செய்து அதனை ஆலயத்தில் பிரதிஷ்டை செய்துள்ளார். பழைய நந்தியை அகற்ற முயற்சித்து முடியாமல் போனதால், அந்தப் பணியை கைவிட்டு விட்டனர். மறுநாள் வந்து பார்த்தபோது, பழைய நந்தி முன்பும், புதிய நந்தி பின்னாலும் மாறி இருந்துள்ளது. சிவன் கனவில் வந்து, உறுப்புகள் இல்லை என்றாலும், அதுவும் உயிர்தான் எனவும், பழைய நந்தி முன்னால் இருக்க வேண்டும்; மற்றது பின்னால்தான் என கூறியுள்ளார். அதன் அடிப்படையில், இன்றும் இரண்டு நந்திகள் அமைந்துள்ளன. பிரதோஷ காலங்களில், இரண்டு சிலைக்கும் பூஜை நடத்தப்படுகிறது.
மிளகீசன்:-
சுக்ரீஸ்வரர் கோயில், ராமாயண காப்பியத்துடன் தொடர்புடையது, வானர அரசன் சுக்ரீவன் தனது அண்ணனைக் கொன்றதற்குப் பிராயச்சித்தம் செய்ய இங்குள்ள ஈசனை லிங்கம் அமைத்து வழிபட்டதால் இக்கோவில் சுக்ரீஸ்வரர் என பெயர் பெற்றது, இந்த சிற்பத்தில் சுக்ரீவன் ஈசனை பூஜை செய்வதை காணலாம். உடலில் 'மரு' உள்ளவர்கள் இப்பெருமானுக்கு மிளகைப் படைத்து, அதில் சிறிதளவு மிளகை எடுத்து வந்து 8 நாள்களுக்கு உணவில் சேர்த்துச் சாப்பிட்டால் 'மரு'க்கள் மறைந்துவிடும். இவ் ஈசனை மக்கள் 'மிளகீசன்' என்றும் அழைக்கின்றனர். கல்வெட்டில் இவ்விறைவன், 'ஆளுடைய பிள்ளை' என்று குறிக்கப்படுகிறார்.
கோயில் குறித்த சிறப்பம்சங்கள்:
1) ஆவுடைநாயகி அம்மனுக்கென தனி கோவிலும், சிவனுக்கென தனி கோயிலும் அமைந்துள்ளது. அம்மனுக்கான தனி கோவில், வலது புறம் இருப்பதால் பாண்டியர்களின் பணி என்பது தெரிகின்றது.
2) உத்தராயணமும் தட்சிணாயணமும் சந்திக்கும் - வேளையில் சூரிய ஒளி சுவாமி மீது படுகிறது.
3) கோயிலின் விமானம் சோழர்களின் பணியை காட்டுகின்றது.
4) ஒன்றின் பின் ஒன்றாக இரண்டு நந்திகள் உள்ள கோயில். இக்கோயிலில் உள்ள ஒரு நந்திக்கு இரண்டு காதுகளும் அறுபட்டுள்ளன. (இது தலவரலாறு தொடர்புடையது.)
5) ஐந்து லிங்கங்கள் உள்ள கோயில், மூன்று வெளியில், ஒன்று மூலவர், மற்றொன்று கண்ணுக்கு தெரியாதது.
6) கொங்கு பகுதியில் சிவன் கோயில்களில் இருக்கும் "தீப ஸ்தம்பம்" இந்த கோயிலில் கிடையாது.கோயில் கிழக்கே பார்த்து இருந்தாலும், உள்ளே செல்லும் படிகள் தெற்கு பார்த்து அமைந்துள்ளது.
7) கொங்கு நாட்டில் உள்ள நான்கு "சிற்ப ஸ்தலங்களில்" இந்த சுக்ரீஸ்வரர் கோயிலும் ஒன்று.
😎 வியாபாரம் செய்ய கடல் வழியாக இந்தியாவின் மேற்கு பகுதிக்கு வந்த கிரேக்கர்களும், ரோமானியர்களும், கப்பலில் இருந்து இறங்கி பின் சாலை வழியாக அன்றைய சோழ நகருக்கு செல்ல பயன்படுத்திய வழி.
9) பண்டைய கொங்கு வர்தக வழியில் அமைந்திருந்த இந்த கோயிலின் (Kongu Trade Route) சிவனை "குரக்குதை நாயனார்" என்று வழிபட்டுள்ளனர்.
10) பாண்டியர்களால் கட்டப்பட்ட கோயிலாக இருப்பினும், இங்குள்ள சில சிற்பங்கள்,கி.பி. ஐந்தாம் நூற்றாண்டிலேயே, இந்த இடத்தில் சிவ லிங்கத்தை வைத்து அன்றைய பழங்குடி மக்கள் பூஜைகள் மேற்கொண்டு வந்துள்ளது தெரிகின்றது.
இவ்வளவு கலை அம்சத்துடனும், வரலாற்று பின்னணியுடனும் இருக்கும் இந்த கோயில் குறித்த தகவலை உங்களை நண்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்.கோவை, திருப்பூர் செல்லும் போது கட்டாயம் சென்று காண வேண்டிய மிக அழகான கோயில்.
நான்கு வருடங்களுக்கு முன்பு திருப்பூர் மாவட்ட நிர்வாகமும், சுற்றாலத்துறையும் இணைத்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக இந்த கோயில் சிறப்பம்சம் அடங்கிய துண்டு பிரசுரங்களை விநியோகித்தும் எந்த பலனும் இல்லை.
சுற்றாலத்துறையின் போதுமான விளம்பர நடவடிக்கைகள் இல்லாததால், வேலைப்பாடுகள் நிறைந்த மிக அழகான கோயிலாக இருப்பினும், இந்த கலைப் பொக்கிஷம் குறித்த தகவல் உள்ளூர் பக்தர்களுக்கோ, வெளிநாட்டு கலை ஆர்வலர்களுக்கோ, இது போன்ற ஒரு கோயில் இருப்பதே சரியாக தெரியாது.
ஆகையால் நம்மால் முடிந்த அளவு விழிப்புணர்வை ஏற்படுத்துவோம்.

சங்கமேஸ்வரர் திருக்கோயில், கூடுதுறை , பவானி.


 சங்கமேஸ்வரர் திருக்கோயில், கூடுதுறை , பவானி.

காவிரி மற்றும் பவானி நதிகள் செழுமைப்படுத்தும் இடம் கூடுதுறை....
இங்கு இரண்டு ஆறுகள் மட்டும் அல்ல மூன்றாவதாக அமிர்தநதி என்னும் நதி(கண்ணுக்கு தெரியாது) இங்குள்ள அமிர்தலிங்கேஸ்வரருக்கு அடியில் தோன்றி பவாநி, காவிரி நதிகளுடன் சங்கமிப்பதால் இது முக்கூடல் அழைக்கப்படுகிறது.
பவாநிக்கு கூடல்நகர் என்ற ஒரு பெயரும் உள்ளது
வடநாட்டில் காசிக்கருகே அலகாபாத்தில் கங்கா,யமுனா,சரஸ்வதி(கண்ணுக்கு தெரியாது) ஆகிய மூன்று நதிகள் சங்கமிக்கும் இடத்தை திரிவேணி சங்கமம் (முக்கூடல்) என்பார்கள்
அதை போல் பவாநியும் தென்திரிவேணி சங்கமம் என்று அழைக்கப்படுகிறது.
அதனால்தான் இந்தியாவின் மாபெரும் தலைவர்களின் அஸ்திகளை அலகாபாத் திரிவேணி சங்கமத்தில் கரைத்துவிட்டு பவாநி முக்கூடலிலும் இன்றும் கரைக்கிறார்கள்.
அதனால் பவாநி இரண்டு நதிகள் சங்கமிக்கும் இடமல்ல
மூன்று நதிகள் சங்கமிக்கும் இடம்.
திருஞானசம்பந்தரால் தேவாரப் பதிகம் பாடப்பெற்ற இக்கோயில் ஏறக்குறைய 1400 மேல் ஆண்டுகளுக்கு பழமையானதாக இருக்க வேண்டும்.
ஏழாம் நூற்றாண்டுகளில் காவிரி மற்றும் பவானி ஆற்றின் குறுக்கே அணைகள் கட்டப்படாத நிலையில் வருடத்தின் அனைத்து நாட்களிலும் நீரால் சூழப்பட்டு இருந்த இந்த இடம் எவ்வளவு ரம்மியமாக இருந்திருக்கும் என்னும் போதே மனதில் ஒரு பரவசம் ஏற்படுகின்றது .
சங்கமேஸ்வரர் கோயில் 14 நூற்றாண்டுகள் பழமையானதாக இருந்த போதிலும் இங்குள்ள மற்ற சன்னதிகள் 16 ஆம் நூற்றாண்டின் ஆரம்ப காலம் தொடங்கி பதினெட்டாம் நூற்றாண்டின் ஆரம்பம் வரை பல திருப்பணிகள் நடைபெற்று உள்ளது என்பதை இங்குள்ள பல்வேறு கல்வெட்டுகள் மூலம் அறியலாம்.
இந்தக் கோயிலில் விஜயநகரப் பேரரசர் கிருஷ்ண தேவராயர்(1509 -1529) காலத்தில் கொங்கு மண்டலத்தின் நிர்வாகியாக இருந்த பாலதேவராசன் என்பவரது கல்வெட்டும் , தாரமங்கலத்தை மையமாகக் கொண்டு ஆட்சி செய்த குறுநில மன்னர் கெட்டி முதலியார் என்பவரது கல்வெட்டும் இங்கு நடைபெற்ற திருப்பணிகளை பற்றி கூறுகின்றது. இந்த கெட்டி முதலியார் என்பவர் தாரமங்கலத்தில் உள்ள கைலாசநாதர் கோயிலை கட்டியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கல்வெட்டுகளில் இங்குள்ள இறைவன் திருநண்ணாவுடையார்
எனக் குறிப்பிடப்பட்டுள்ளார்.
சங்கமேஸ்வரர் திருக்கோயிலின் வடக்கு நோக்கி அமைந்துள்ள ராஜகோபுரத்தின் நேராக ராஜகோபுரத்தை நோக்கியவாறு ராஜகோபுர நந்தியும் அதற்கு சற்று முன்பு இடதுபுறத்தில் விநாயகரும், மற்றும் வலது புறத்தில் வீர ஆஞ்சநேயரும் தனி சன்னதிகளில் வீற்றிருக்கின்றார்கள்.
இத்திருக்கோயிலின் இந்த வடக்கு புற கோபுரம் ஒரு பெரிய கோட்டையின் பிரதான நுழைவாயிலைப் போல மிகவும் கவனத்துடன் பாதுகாப்பான முறையிலும், மிகுந்த கலை நுணுக்கத்துடனும் கட்டப்பட்டுள்ளது.இங்குள்ள மரகதவுகளில் இரும்பினாலான கூர்மையான கருவிகள் பொருத்தப்பட்டு இருக்கின்றது.
இந்தக் கதவின் பின்புறத்தில் பக்கத்துக்கு இரண்டாக நான்கு சிறிய தளங்கள், போர்வீரர்கள் கோட்டைப் பாதுகாப்பிற்காக நின்று காவல் புரியலாம் என்று யோசிக்கும் அளவிற்கு நேர்த்தியான முறையில் உள்ளது.
நுழைவாயிலின் இடது மற்றும் வலது புறங்களில் குறுஞ்சிற்பங்கள், புடைப்புச் சிற்பங்களாக செதுக்கப்பட்டுள்ளது, மேலும் விஜயநகர பேரரசுகளில் கட்டிடக்கலை பாணியில் , வாசலுக்கு முன் புறம் எட்டு தூண்கள் பக்கத்துக்கு நான்கு தூண்களாக நுணுக்கமான சிற்பங்களுடன் நம்மை வசீகரிக்கிறது.
இந்தப் பிரதான நுழைவாயில் கொண்ட ராஜ கோபுரத்தின் வலது புறத்தில் பரமபதவாசல் ஒன்றும் உள்ளது .
இந்த ராஜகோபுரத்தின் வழியாக உள்ளே நுழைந்ததும் , இடது புறத்தில் முத்துக்குமாரசாமி என்ற பெயருடன் , அழகிய முன் மண்டபத்துடன் கூடிய முருகன் தனி சன்னதியிலும் , வலது புறத்தில் ராஜ கணபதி தனி சன்னதியிலும் அமர்ந்து நம்மை வரவேற்கின்றார்கள்.
இவர்களை வணங்கி கடந்து செல்லும் பொழுது வலது புறத்தில் ஆதிகேசவப் பெருமாள் , வேணுகோபால சுவாமி ,லஷ்மி நரசிம்ம மூர்த்தி மற்றும் சௌந்தரவல்லி தாயார் ஆகியவர்கள் தனித்தனி சன்னதிகளில் அருள் பாலிக்கின்றார்கள்.
இதற்கு அடுத்து வருவது வேதநாயகி அம்மன் கோயில். இந்தக் கோயிலின் முகப்பில் பல நுணுக்கமான பார்ப்பவர்களை கவர்ந்திழுக்கக் கூடிய அழகு மிகுந்த சிற்பங்களுடன் கூடிய மண்டபம் உள்ளது. இந்த மண்டபத்தின் வழியே மகா மண்டபத்தை அடைந்து அர்த்த மண்டபத்தின் வழியாக கருவறையில் உள்ள வேதநாயகி அம்மனை காணலாம் .
இந்த மகா மண்டபத்தில் உள்ள தூண்களில் பலவகையான அரிய சிற்பங்களும், மகாமண்டபம் சுற்றுச்சுவரின் உன் பக்கத்தில் , சுவரும் மேல் தளமும் இணையும் இடத்தில் பல்வேறு புடைப்புச் சிற்பங்கள் காணப்படுகின்றது...
இந்தப் புடைப்பு சிற்பத்தில் பிரம்மா, விஷ்ணு,மகிஷாசுரமர்தினி, முருகன்,விநாயகர் , பூதகணங்கள் முனிவர்கள் மற்றும் யானைத் தலையும், மனித உடலும் சிங்கதின் கால்களும் கொண்ட உருவம் செதுக்கப்பட்டுள்ளது.
மேலும் ராமாயணத்தில் அனுமன் சிம்மாசனத்தில் அமர்ந்துள்ள தசகண்ட ராவணனை, அவரது அமைச்சரவையில் சந்திக்கும் பொழுது , அந்த சிம்மாசனத்திற்கு சமமானதொரு ஆசனத்தை தன் வாலால் அமைத்து நேருக்கு நேராக அமர்ந்து உரையாடும் காட்சி ஒன்று தத்ரூபமாக காணப்படுகிறது.
இந்த மகா மண்டபத்திலிருந்து கர்ப்ப கிரகத்தை சுற்றி வர ஒரு உள்சுற்று பாதை உள்ளது இந்தப் பாதை, சிங்கங்களை தாங்கி நிற்கும் யானைகளை கொண்ட தூண்களால் அமைக்கப்பட்டுள்ளது. கர்ப்ப கிரகத்தை சுற்றி பல கோஷ்ட தெய்வங்கள் உள்ளனர் , மேலும் சுற்றி முடிக்கும் இடத்தில் வல்லபகணபதி பெரிய சிலையாக மேற்கு நோக்கி அமர்ந்திருக்கிறார்.
இச் சுற்று முடிந்து மீண்டும் மகா மண்டபத்திற்குள் நுழையும்போது இடது புறத்தில் எண்கோண வடிவிலான அழகிய பள்ளி அறை உள்ளது.
வேதநாயகி அம்மன் சந்தித்து வெளியில் வரும் பொழுது தூங்கா விளக்கு மண்டபம் ஒன்றும் பலிபீடம் ஒன்றும் கோயிலுக்கு நேர் எதிரே காணப்படுகின்றது.
திருநண்ணாவுடையார் :
சங்கமேஸ்வரர் கோயிலில் நுழைய வடக்கு , கிழக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் நுழைவாயில்கள் உள்ளது வடக்குப் நுழைவாயிலின் முன்பு இரண்டு புறங்களிலும் முருகன் மற்றும் விநாயகர் சிறு கோயில்கள் உள்ளன . அதே போன்று கிழக்கு புறத்திலும் விநாயகர் மற்றும் முருகன் தனி சன்னதிகள் உள்ளன. கிழக்குப்புற வாயிலுக்கு எதிராக கொடி மரம் பலி பீடம் தூங்கா விளக்கு ஏற்றும் மிகப் பெரிய கல் தூண் ஒன்று சிறிய மண்டபத்துடன் உள்ளது இந்த அமைப்பிற்கு நேரெதிரே வெளி மதில் சுவரில் ஒரு சிறிய மண்டபத்துடனும் , ஒரு சிறிய கோபுரத்துடனும் காவிரியை நோக்கி ஒரு நுழைவாயில் உள்ளது.
இந்த வாயிலின் வழியாக காவேரிப் படித்துறை அடையலாம். கிழக்குப் புற வாயில் வழியாக கோயிலுக்குள் நுழையும் பொழுது அழகிய புடைப்புச் சிற்பங்களுடன் கூடிய பெரிய கல்தூண் மண்டபம் உள்ளது, இந்த மண்டபத்தில் அழகிய நந்தி ஒன்று சதா சங்கமேஸ்வரரை வைத்த கண் வாங்காமல் காவல் காத்து அமர்ந்துள்ளது....
இவற்றைக் கடந்து மகா மண்டபத்திற்குள் நுழைவதற்கு முன்னால் இரண்டு பெரிய துவாரபாலகர்கள் சிலையும், உள் சுற்று சுவர் ஆரம்பிக்கும் இடத்தில் சுவற்றில் ஜான் உயரமுள்ள பல, வசீகரிக்கக் கூடியதும், அழகிய முகபாவங்த்துடனும் கூடிய புடைப்புச் சிற்பங்கள் நம்மை பிரமிக்க வைக்கின்றது. இவற்றை ரசித்துக்கொண்டே மகா மண்டபத்தில் நுழைந்து சற்றே தலை சாய்ந்த நிலையில் உள்ள சங்கமேஸ்வரரை காணலாம்.
நன்றாங் கிசைமொழிந்து நன்னுதலாள்
பாகமாய் ஞால மேத்த
மின்றாங்கு செஞ்சடையெம் விகிதர்க்
கிடம்போலும் விரைசூழ் வெற்பில்
குன்றோங்கி வன்றிரைகள் மோத
மயிலாலுஞ் சாரற் செவ்வி
சென்றோங்கி வானவர்க ளேத்தி
அடிபணியுந் திருந ணாவே
திருஞானசம்பந்தர்
மகாமண்டபத்தில் மைய மேல் தளத்திற்கும், பக்கத்தில் உள்ள தளத்திற்கும் இடையே உள்ள உயர வேறுபாட்டில் முழுவதுமாக சாளரங்கள், சூரிய ஒளியும் மற்றும் காற்று சுழற்சிக்கும் பயன்படும் வகையில் நுட்பமாக அமைக்கப்பட்டுள்ளது.
மகா மண்டபத்திலிருந்து தெற்குப் புறத்தில் உள்ள வழியின் மூலமாக உள் சுற்றுப் பாதையை அடையலாம், இந்த ஒரு சுற்றுப்பாதையில் இடதுபுறத்தில் 63 நாயன்மார்களின் சிலைகளும், சப்த கன்னிகள் மற்றும் வீரபத்திரர் சிலையும், வலது புறத்தில் விநாயகர் மற்றும் தக்ஷிணாமூர்த்தியின் தனி சிலைகளும் காணப்படுகின்றது. தக்ஷிணாமூர்த்திக்கு அருகில் அழகிய கல் சங்கிலியுடன் கூடிய நான்கு தூண்கள் உள்ளது.
மேற்குப் புறத்தில் இடதுபுறத்தில் விநாயகர் மற்றும் பஞ்சபூத லிங்க சிலைகள், அதற்கடுத்தாற்போல் வள்ளி, தெய்வயானை முருகன் சிலைகளும், வலது புறத்தில் லிங்கோத்பவர் மற்றும் சிறிய அளவிலான விஷ்ணு மூர்த்தி மற்றும் நான்முகனின் அழகிய புடைப்புச் சிற்பங்களும் காணப்படுகின்றது.
சுற்றுப்பாதையில் வடக்குப் புறத்தில் பிரம்மா மற்றும் விஷ்ணு துர்கா கர்ப்பகிரக சுவரிலும்,அதற்கு சற்று பக்கத்தில் கர்ப்ப கிரகத்தை நோக்கி சண்டிகேஸ்வரர் சிறு கோயில் ஒன்றும் உள்ளது.
இதற்கு அடுத்தாற்போல வெளி மதில் சுவரில் தெற்குப் பக்கமாக அமைந்துள்ள சிறிய கோபுரத்தின் வழியாக வெளியே சென்றால், சகஸ்ர லிங்கேஸ்வரர், காமாட்சி லிங்கேஸ்வரர், அமிர்தலிங்கேஸ்வரர் ஆகியோருக்கு தனித்தனி சன்னதிகள் சிறிய கோயிலாகவே உள்ளது.
இவற்றைக் கடந்து செல்லும்போது இரண்டு படித்துறைகள் கூடும் இடத்தையும் , இரண்டு அழகிய நதிகள் சங்கமிக்கும் அந்த அற்புதமான காட்சியைக் காணலாம் .🥰🥰🥰
பொன்னிநதியின் நளினத்தையும், பவானி ஆற்றின் அழகையும் ஒரே இடத்தில் கண்டு ரசிக்கலாம்.... வெகு நீண்ட வனப்பான பயணத்தை காவேரி நதி இந்த இடத்தில் பவானி ஆற்றுடன் பகிர்ந்து கொண்டு மேலே செல்கிறாள்....🙂🙂🙂
இந்த இயற்கை வனப்பையும், கூடல் சங்கமத்தையும் கண்டு மீண்டும் கோயிலின் தெற்குப் புற வாயிலாக உள்நுழைந்து, இடது புறம் சென்றால் கோயிலின் தல விருட்சமான இலந்தை மரமும், அதற்கு அடியில் விநாயகர் சிலை ஒன்றும் காணப்படுகின்றது.
மேலும் வடக்கு நோக்கி செல்லும் போது சங்கமேஸ்வரர் கோயில் மற்றும் வேதநாயகி அம்மன் கோயிலுக்கும் இடையில் தனி சன்னதியில் முருகனும், அவருக்குப் பின்னால் இடதுபுறத்தில் சனி பகவான் மற்றும் வலது புறத்தில் ஜுரஹரேஸ்வரர் தனி சன்னதியும் காணப்படுகின்றது....
பல நூற்றாண்டுகள் பழமையுடைய கோயிலாக இருந்தாலும் நானூறு ஐநூறு ஆண்டுகளுக்கு முன்னால் இந்த கோவில் புதுப்பிக்கப்பட்டு பல சிற்ப அற்புதங்களை நமக்கு காட்சியாக்குகின்றது....🙂🙂

Thursday, 30 May 2024

வீட்டில், ஆண்கள் விளக்கை ஏற்றலாமா?


 வீட்டில், ஆண்கள் விளக்கை ஏற்றலாமா? அப்படி ஆண்கள் தீபம் ஏற்றி வழிபடும் போது கடைபிடிக்க

வேண்டிய ஒரு சூட்சுமம் ரகசியம்!
பல பேர் வீட்டில் ஆண்கள்,
விளக்கு ஏற்றும் பழக்கத்தை வைத்திருப்பார்கள்.
பெண்கள் வீட்டில் இருக்கும் போது, ஆண்கள் பூஜை அறையில் தீபம் ஏற்றலாமா? என்ற ஒரு சந்தேகம் நம்மில் பலருக்கு உண்டு.
பெண்களால் விளக்கை ஏற்ற முடியாத சூழ்நிலையில், ஆண்கள் விளக்கை ஏற்றலாம்.
அதில் எந்த ஒரு தவறும் இல்லை.
ஆனால், அப்படி விளக்கு
ஏற்றும் போது சில
விதிமுறைகளை
ஆண்கள் கடைப்பிடிக்க
வேண்டியது அவசியம்.
அந்த விதிமுறைகள் என்ன என்பதைப் பற்றிய இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
வீட்டு பெண்களால் விளக்கு ஏற்ற முடியும் என்ற சூழ்நிலை இருக்கும் போது, கட்டாயம் பெண்கள் தான் தீபத்தை ஏற்ற வேண்டுமே தவிர, அந்த பொறுப்பை ஆண்கள்
கையில் கொடுக்கக்கூடாது.
சரி.!ஆண்கள் வீட்டில் விளக்கு வேண்டிய கட்டாய சூழ்நிலையில் எப்படி விளக்கேற்ற வேண்டும்.
ஆண்கள் வீட்டில் விளக்கு ஏற்றும் போது மேல்சட்டையை அணியாமல் தீபம் ஏற்ற வேண்டும்.
அதாவது பனியன் கூட போட்டுக் கொள்ளக்கூடாது.
வேட்டியோ அல்லது பேண்ட் அணிந்து கொண்டு தீபம் ஏற்றலாமே தவிர, கைலி(லுங்கி) அணிந்து கொண்டு தீபம் ஏற்றுவதை தவிர்க்கவும்.
பெண்கள் எப்படி நெற்றியில் குங்குமம் வைக்காமல் தீபம் ஏற்றக்கூடாதோ, அதேபோல் ஆண்கள் நெற்றியில் விபூதி, சந்தனம், குங்குமம் எதுவும் வைத்துக் கொள்ளாமல் வெறும் நெற்றியுடன் தீபம் ஏற்றக்கூடாது.
நெற்றியில் விபூதி,சந்தனம் ஏதாவது ஒன்றை இட்டுக் கொண்டுதான் தீபம் ஏற்ற வேண்டும்.
நெற்றியில் இட்டுக் கொண்ட விபூதியை சிறிது உங்கள்
மார்பிலும் பூசிக் கொள்ளுங்கள்.
முடிந்தால் இருகைகளிலும் பூசிக்கொண்டு தீபத்தை ஏற்றி பாருங்கள்.
அதில் கிடைக்கும் ஆத்ம
திருப்தியே வேறு.
ஒரு முறை இந்த விதிமுறையை பின்பற்றி தீபமேற்றும் ஆண்கள், கட்டாயமாக தொடர்ந்து இதை அவர்களே கடைபிடிப்பார்கள்.
அந்த அளவிற்கு மன அமைதி ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேபோல் சில ஆண்கள் குளித்த உடன் பூஜை அறைக்கு வந்து தீபத்தை ஏற்றினால்,அது மிகவும் தவறான பழக்கம்.
ஈரத்தலையோடு தீபம் ஏற்றக்கூடாது. ஈரத் துண்டோடும் தீபம் ஏற்றக்கூடாது.
ஆண்கள் கிழக்கு பார்த்தவாறுதான் தீபம் ஏற்ற வேண்டுமே தவிர, மற்ற திசைகளில் தீபம் ஏற்றுவதை தவிர்க்க வேண்டும்.
குறிப்பாக ஆண்கள் ஏற்றிய தீபத்தை பெண்கள் குளிர வைக்கக் கூடாது.
ஆண்கள் ஏற்றிய தீபத்தை ஆண்களும் குளிர வைக்கக்கூடாது.
தீபம் தானாக எண்ணெய் தீர்ந்து குளிருவதில் எந்த ஒரு தவறும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஆண்கள் தீபம் ஏற்றும்போது கவனிக்கப்படவேண்டிய ஒரு சூட்சுமம் உள்ளது.
இதை ஆண்கள் கடைபிடித்தால் அதிகப்படியான அதிர்ஷ்டம் உண்டாகும் என்று சொல்கிறது சாஸ்திரம்.
அது என்னவென்று பார்த்து விடுவோம்.
தீபத்தை ஏற்றுவதற்கு முன்பாக, தீபத்தின் முன்பு ஒரு பூவோ அல்லது ஒரு ரூபாய் நாணயமோ அல்லது சிறிதளவு அரிசி, இவை மூன்றையும் வைக்க வேண்டும் என்ற எந்த அவசியமும் இல்லை.
உங்கள் வீட்டில் பூ இருந்தால்
பூவை வைத்துக் கொள்ளலாம்.
இல்லாவிட்டால் சிறிதளவு
அரிசியை வைத்துக் கொள்ளலாம்.
அரிசி வைக்க இஷ்டம் இல்லாதவர்கள் ஒரு ரூபாய் நாணயத்தை கூட வைக்கலாம்.
ஆக மொத்தத்தில் இந்த மூன்று பொருளில் ஏதாவது ஒரு பொருளை விளக்கின் முன்பாக வைத்து, விளக்கை இரு கைகளாலும் தொட்டு கண்களில் ஒற்றிக் கொண்டு அதன் பின்பு தீபம் ஏற்ற வேண்டும்.
இந்த முறையை மட்டும் ஆண்கள் பின்பற்றி பாருங்கள் உங்களாலேயே வித்தியாசத்தை உணர முடியும்.
தீபத்தின் முன்பு வைத்த அந்த பொருளை என்ன செய்யலாம்?
அடுத்த நாள், பூவாக இருந்தால் காய்ந்த பூவை எடுத்து விட்டு நல்ல பூவை வைத்துக் கொள்ளலாம்.
அரிசி வைத்திருந்தால் அந்த அரிசியை எடுத்து சாப்பாட்டிற்கு பயன்படுத்திக்கொள்ளலாம்.
ஒரு ரூபாய் நாணயத்தை உங்கள் செலவிற்காக வைத்துக் கொள்ளலாம். எந்த ஒரு தவறும் இல்லை.
அந்த தீபத்திற்கு மதிப்பு கொடுத்து நீங்கள் செய்யும் சமர்ப்பணம் தான் அந்த மூன்று பொருள்களில் ஏதாவது ஒன்று.
இது ஒரு சூட்சும முறை. லட்சுமிகரமான தீபத்தை ஏற்றும்போது அதன் பலனை முழுமையாகப் பெறுவதற்கு நம் முன்னோர்கள் நமக்காக சொல்லி வைக்கப்பட்டுள்ள சாஸ்திரம் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
இந்த முறையை ஆண்கள் மட்டும் தான் பின்பற்ற வேண்டுமா? பெண்கள் பின்பற்ற கூடாதா என்ற கேள்வி கட்டாயம் எழும்.
பெண்களும் இந்த முறையை பின்பற்றலாம் அதில் எந்த ஒரு தவறும் இல்லை.
இது பல பேருக்கு தெரியாது. தெரிந்தவர்கள் இன்றும் இந்த பழக்கங்களை கடைப்பிடித்து தான் வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆண்கள், தங்கள் குடும்பத்தை விட்டு தனியாக தங்கி இருப்பார்கள் அல்லவா!
அந்த இடங்களில் ஆண்களுக்கு தீபமேற்றும் பழக்கம் இருந்தால்
கூட, இந்த சூட்சம முறையினைக் கடைப்பிடிப்பதில் தவறில்லை...

Tuesday, 14 May 2024

கடவுள் படையலை சாப்பிடுவாரா?


 கடவுள் படையலை சாப்பிடுவாரா?

ரொம்ப நாளா நம்மளுக்கு விடை தெரியாத ஒரு கேள்வியிது
சரியான விளக்கத்தை படித்து தெளிந்தேன் நீங்களும் படித்து அறிவீர்களாக....
சிஷ்யன் ஒருவன் தன குருவிடம் ஒரு கேள்வி✋
கேட்டான்.
‘’குருவே, நாம் படைக்கும் நைவேத்யத்தை இறைவன் அருந்துகிறார் என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள
முடியவில்லை.
இறைவன் சாப்பிட்டால் நாம் பிறருக்கு எப்படி பிரசாதமாக வழங்க முடியும்? கடவுள் படையலை சாப்பிடுவாரா’’? என்று கேட்டான்.
குரு எதுவும் சொல்லாமல். அவனை ஊடுருவி பார்த்துவிட்டு ‘’நமது வேதாந்த வகுப்புக்கு நேரமாகி விட்டது. வகுப்பறையை தயார் செய். சிறிது நேரத்தில் நானும் வருகிறேன்” என்றார்.
அனைத்தும் பூர்ணமான வஸ்துவிலிருத்தே
தோன்றியது என பொருள் கொண்ட
“பூர்ணமிதம்” எனும் ஈஷாவாசிய உபநிஷத்தில் வரும் மந்திரத்தை விளக்கினார் குரு அனைத்து மாணவர்களும் மந்திரத்தை மனதில் உரு போட துவங்கினர்.
சிறிது நேரத்திற்கு பிறகு கேள்வி கெட்ட சிஷ்யனை சைகையால் அழைத்தார் குரு.
குருவின் முன் பணிவுடன் வந்து வணங்கி
நின்றான்.
“எனதருமை சிஷ்யனே, மந்திரத்தை மனதில்
ஏற்றி கொண்டாயா? ,” என்றார்.
“முழுமையாக உள்வாங்கி கொண்டேன்
குருவே”.
“எங்கே ஒரு முறை சொல் பார்ப்போம்”
கண்கள் மூடி மனதை ஒருநிலைப்படுத்தி கணீர் குரலில் கூற துவங்கினான்..
” பூர்ண மித பூர்ண மிதம் ...” என கூறி முடித்தான்.
மெல்ல புன்சிரிப்புடன் குரு தொடர்ந்தார்.. “நீ
சரியாக மனதில் உள் நிறுத்தியதாக தெரியவில்லையே..
எங்கே உனது புத்தகத்தை காட்டு”
பதட்டம் அடைந்த சிஷ்யன், புத்தகத்தை காண்பித்து கூறினான் “ குருவே தவறு இருந்தால் மன்னியுங்கள்.
ஆனால் நான் கூறியது அனைத்தும் இதில்
இருப்பதை போலவே கூறினேன்...”
“இந்த புத்தகத்திலிருந்து படித்துதான் மனதில்
உள்வாங்கினாயா?”.
இதிலிருந்து உள்வாங்கினாய் என்றால் மந்திரம் இதில்
இருக்கிறதே?
நீ உன் மூளையில் மந்திரத்தை ஏற்றி கொண்டால் புத்தகத்தில் இருக்க கூடாதல்லவா?”
சிஷ்யன் குழப்பமாக பார்த்தான்.
குரு தொடர்ந்தார், ‘’உனது நினைவில் நின்ற
மந்திரம் சூட்சம நிலையில் இருக்கிறது.
புத்தகத்தில் இருக்கும் மந்திரம் ஸ்தூல வடிவம். இறைவன் சூட்சம நிலையில் இருப்பவன்.
இறைவனுக்கு படைக்கப்படுவது ஸ்தூல வடிவில் இருந்தாலும் அவன் சூட்சமமாகவே உட்கொள்கிறான். நீ
உள்வாங்கிய பின் புத்தகத்தில் மந்திரம் அளவில் குறைந்துவிட்டதா?
அது போலதான் இறைவன் உட்கொண்ட பிரசாதம் அளவில் குறையாமல் நாம் எல்லோரும் உண்கிறோம்.
ஸ்தூலமாக இருக்கும் நாம் ஸ்தூலமாகவும்,
சூட்சுமமாக இருக்கும் இறைவன் சூட்சுமமாகவும் நைவேத்யத்தை உட்கொள்கிறோம். ”
தனது பக்தியற்ற தர்க்கம் செய்த அறியாமையை குருவிற்கு நைவேத்யம் செய்து முழுமையடைந்தான் சிஷ்யன்.
🙏

Wednesday, 17 April 2024

தீய சக்திகளால் ஏற்படும் பாதிப்புகள் நீங்க


 தீய சக்திகளால் ஏற்படும் பாதிப்புகள் நீங்க

அடிக்கடி பயந்து அல்லது கெட்ட கனவு கண்டு திடுக்கிட்டு எழுதல், உறக்கத்தில் ஏதோ ஒன்று அமுக்குவது போல் சிலருக்கு இருக்கும் அப்படிபட்டவர்கள் கீழ்கண்ட மந்திரத்தை மனதுக்குள் ஜெபிக்க அவை உடனே நீங்கும்.
மந்திரம்
ஓம் நமோ ஹனுமதே ருத்ராவதாராய
தேவ தானவ யக்ஷ ராக்ஷஸ பூத ப்ரேத பிசாச
டாகினி சாகினி துஷ்ட க்ரஹ
பந்தனாய ராமதூதாய ஸ்வாஹா.🌹
.ஆன்மீக குறிப்புகள்!
திங்கட்கிழமையன்று பஞ்சால் செய்யப்பட்ட விளக்கு திரியை கையால் தொடக்கூடாது.
. தனது வீட்டில் கோலம் போடாமலும் விளக்கேற்றாமலும் ஆலயங்களுக்கு செல்லக்கூடாது.
எரியும் விளக்கில் எண்ணெய் அல்லது நெய்யை கையால் தொடுவதும் அதன் பிறகு அதைத் தன் தலையில் தடவிக் கொள்வதும் கூடாது.
சாமி படங்களில் உலர்ந்த பூக்களை விட்டு வைக்கக் கூடாது.
விஷ்ணுவை வணங்கி வீடு திரும்புபோது லட்சுமி தேவியும் நம்முடன் நம் வீட்டுக்கு வருகிறாள் என்பது ஐதீகம். ஆகவே விஷ்ணு கோவிலிலிருந்து வீடு திரும்புமுன் அங்கே உட்காரக் கூடாது.
ஸ்வஸ்திக், ஸ்ரீ சக்கரம், ஓம் மற்றும் திரிசூலம் சின்னங்களை வாசல் கதவிலோ அல்லது வாசலின் உள்ளே நேர் எதிரேயோ ஒட்டி வைப்பது பாதுகாப்பிற்கும், அதிர்ஷ்டத்திற்கும் உதவும். வெளியே செல்லும்போது சட்டைப் பையிலும் வைத்துக் கொள்ளலாம்.
வாசலுக்கு நேர் எதிரே வாசலைப் பார்த்து சிரிக்கும் புத்தரை வைப்பது வளமை, வெற்றி, தனலாபம் ஆகியவை அளிக்க வல்லது.
செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில் வெண்ணை உருக்கக் கூடாது. காரணம் மேற்படி கிழமைகளில் லட்சுமிக்கு உகந்தவை ஆதலாலும் வெண்ணையில் மகாலட்சுமி இருப்பதாலுமே வெண்ணை உருக்கக் கூடாது என்பார்கள்.
உறவினர்களை வெளியூர் செல்ல வழியனுப்பிய பிறகு பூஜை, முதலியவைகளை செய்யக் கூடாது.
பெரியவர்களும், சிறுவர்களும் தேவாரம், திருவாசகம், திருப்புகழ் ஆகியவற்றை வாய்விட்டுத் தினமும் படிக்க வேண்டும். வாய்விட்டு படிப்பதால் குரல் உறுப்புகள் பலம் கொள்ளும். அதனால் மார்பு ஆரோக்கியம் பெறும். சுவாசப் பைகளுக்கும் நல்லது.
பூஜை செய்யும் நேரத்திலாவது பெண்கள் ஸ்டிக்கர் போட்டு அணியாது குங்குமம் இட்டுக் கொள்ள வேண்டும்.

Tuesday, 16 April 2024

யோனிப்பொருத்தமும் திருமண வாழ்வில் வெற்றியும்

 யோனிப்பொருத்தமும் திருமண வாழ்வில் வெற்றியும்

----------------------------------------------------------------------------------------
(கட்டுரை ஆக்கம்: திரு. சண்முகவேல் வி.ஏ ) Shanmogavel VA
திருமணம் என்பது உள்ளே என்ன இருக்கிறது என்று தெரியாத பெரிய கோட்டை. வெளியே இருப்பவன் உள்ளே செல்ல ஆசைப்படுகிறான். உள்ளே இருப்பவன் வெளியேற சிந்திக்கிறான். இது ஒரு முறை கவியரசு கண்ணதாசன் வட பழனி முருகன் கோவிலில் உரயாற்றியபோது சொன்னது.
நமது சமுதாயத்தில் திருமணம் என்பது தாம்பத்திய சுகத்தை அனுபவிப்பதற்காக கொடுக்கப்பட்ட ஒரு அங்கீகாரமாகும். பெரியோர்களின் வாக்குப்படி சிற்றின்பத்தை அனுபவிக்க ஒரு அங்கீகாரம். கடவுள் தன் படைப்புகள் அனைத்தையும் உடல் இச்சையுடன்தான் படைத்துள்ளான். உயிர் உற்பத்தி சங்கிலி எந்த இடத்திலும் அறுந்து விடக்கூடாது என்பதுதான் படைத்த கடவுளின் நோக்கம். மேற்கத்திய நாடுகளில் ஒருவனுக்கு ஒருத்தி என்றோ, திருமணத்திற்குப்பின்புதான் தாம்பத்தியத்தில் ஈடுபடவேண்டும் என்ற கட்டுப்பாடோ கிடையாது, எனவே யோனிப்பொருத்தம் அவர்களுக்கு முக்கியமில்லை. ஆனால் நம் சமுதாயத்தில் திருமணத்திற்கு பின்புதான் தாம்பத்திய உறவு கொள்ளவேண்டும் என்ற நிலை தற்பொழுதும் உள்ளது.
தாம்பத்தியத்தின் மூலம் சிற்றின்பம் துய்ப்பதும் , அதன் மூலம் குழந்தைகள் பெற்று மழலை இன்பம் அனுபவிப்பதும் இந்த யோனியின் அடிப்படையில்தான். நமது ரிஷிகள் நீண்ட கால ஆராய்ச்சிக்குப்பின் ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஒரு மிருகத்தை குறியீடாக வைத்துள்ளார்கள்.
ஒரு பெண் கணவனிடமிருந்து மன மகிழ்ச்சியையும், நிறைவையும்,ஒரு ஆண் மனைவியிடமிருந்து அன்பையும் பெறுவதற்கு யோனிப்பொருத்தம் மிகவும் முக்கியமானதாகும். ஆண்,பெண் யோனிகள் பொருந்தினால் ஜோதிட பொருத்தம் உத்தமம் என்கின்றன சாஸ்திர விதிகள்.
ஆண்,பெண் உறுப்புகளின் நீளம், அகலம், ஆழம், காம சுகம் கிடைக்கும் விதம் இவற்றைக்குறி காட்டுவதுதான் யோனியாகும். மகிழ்ச்சியான தாம்பத்தியம் நன்மைகளைக்குறி காட்டும்.
ஆண் உறுப்புகள் தோராயமாக நான்கு முதல் ஆறு அங்குல நீளம் வரை இருக்கும். ஒரு சிலருக்கு எட்டு அங்குல நீளம் கூட இருக்கும். ஆண் உறுப்பின் அகலம் இரண்டு முதல் இரண்டரை அங்குலம் வரை இருக்கும். ஆண் பெண் இருவரில் ஒருவருக்கு கூடுதல் அளவிலும், இன்னொருவருக்கு குறைவான அளவிலும் யோனிப்பகுதி அமைந்தால் இன்பம் கிடைப்பது அரிதாகிவிடும். இருவருக்கும் சரியான நீளம்,அகலத்தில் யோனி அமைந்தால் மட்டுமே இன்பம் கிடைக்கும். யோனிப்பொருத்தத்தை மிருகப்பொருத்தம் என்று கூறுவர்.
குறைவான ஆழமுள்ள யோனியை உடைய பெண்ணுக்கு அதிக நீளமுள்ள ஆண் உறுப்பைக்கொண்ட கணவன் அமைந்தால் பெண்ணை பலாத்காரம் செய்வது போல் வலிதாளாமை பெண்ணுக்கு ஏற்படும். இவர்களிடையே அடிக்கடி சண்டை சச்சரவுகம், மனக்கசப்புகள் உண்டாகும். இவர்களில் ஒரு சிலர் சமாளித்துக்கொண்டு வாழ்வர். ஆழமான யோனியைக்கொண்ட பெண்ணுக்கு , நீளம் குறைவான ஆணுறுப்பைக்கொண்ட கணவன் அமைந்தால் ஆணுக்கு தாம்பத்தியத்தில் திருப்தி ஏற்படும்,ஆனால் பெண்ணுக்கு திருப்தி ஏற்படாது. இப்படி அமைந்த தம்பதிகளில் பெண்ணுக்கு தாம்பத்தியத்தில் ஆர்வம் இல்லாமல் போய்விடும். இவர்களிடையே உள் மனப்போராடமும் ,சஞ்சலமும் ஏற்பட்டு பிள்ளைகள் பிறந்த பின் ஆண் மற்றொரு பெண்ணை நாடிச்செல்வான். பெண்ணும் இதேபோல் மறைமுகமாக வெறொரு ஆணை நாடுவாள். கடைசியில் இவர்கள் இருவரும் ஒருவரை விட்டு ஒருவர் பிரிந்துவிடுவர். சிலர் பரஸ்பரம் சந்தேகத்திலேயே வாழ்க்கையை ஓட்டுவர். அல்லது தவறு செய்துவிட்டு வெளியில் தெரியாமல் இருந்துவிடுவதும் உண்டு.இவ்வகைப்பலன் கிரக நிலைகளின் அடிப்படையிலும் அமைவது உண்டு.
திருமணத்திற்கு முன் சிலர் தவறு செய்திருந்தாலும் ,திருமணத்திற்குப்பின் யோனிப்பொருத்தம் சரியாக அமையும் பட்சத்தில் தவறு செய்ய வாய்ப்பு இல்லாமல் போய்விடும். யோனிப்பொருத்தம் சரியாக அமைந்துவிட்டால் இருவரும் உணர்ச்சி தீர அனுபவித்து மன நிறைவு பெறுவார்கள். வெளியில் தேடும் நிலை ஏற்படாது. தாம்பத்தியம் மட்டும் சரியாக அமைந்துவிட்டால் எவ்வளவு கருத்து வேற்றுமை வந்தாலும் படிதாண்டுவதில்லை. வெளி வட்டார நபர்கள் இவர்கள் மனதில் இடம் பிடிக்க முடியாது.
பகை யோனி என்பது அளவு கூடுதல் குறைவாக உள்ளதுதான். ஜாதகத்தில் கிரக நிலைகள் நன்றாக இருந்தால் தவறு செய்யாமல் மன வருத்தத்தோடு சிலர் வாழ்வதுண்டு.
ஜாதகத்தில் லக்கினாதிபதி, இரண்டாம் வீட்டதிபதி, நான்காம் வீட்டதிபதி, ஏழாம் வீட்டதிபதி மற்றும் சுக்கிரன் நன்றாக இருந்தால் எத்தனை குறைபாடுகள் இருந்தாலும் தவறு செய்யாமல் ,இதைப்பற்றி வெளியில் சொல்லாமல் தியாக மனத்துடன் வாழ்வார்கள்.
பெண்ணுக்கு பெண் யோனியும்,ஆணுக்கு ஆண் யோனியும் வந்தால் உத்தமம். இருவருக்கும் ஒரே யோனியானால் சமம். மாறி வந்தால் கூடாது என்பது ஜோதிட விதி. பகை யோனி கூடவே கூடாது என்பதை வலியுறுத்துவதுதான் இந்த கட்டுரையின் நோக்கம்.
பெண்ணுக்கு ஆண் யோனி வந்தால் அந்த பெண் ஒரு ஆணைப்போல் உடலுறவு கொள்ள ஆசைப்படுவாள். ஆணுக்கு பெண் யோனியாக வந்தால் அந்த ஆண் பெண்ணைப்போல் உடலுறவுகொள்ள ஆசைப்படுவான். இதனால் ஆண் எந்த பெண்ணிடம் பழகினாலும், பெண் எந்த ஆணிடம் பழகினாலும் திருப்தியில்லாமல் ஒருவரை ஒருவர் சந்தேகப்படுவார்கள். இவர்களின் ஆசை மாறுபட்டு இருப்பதால் இந்த சந்தேக புத்தியைத்தூண்டும். அடிக்கடி இவர்களிடையே சண்டை சச்சரவுகள் வரும். ஏழாம் வீட்டில் கூட்டுக்கிரகங்கள்,சுக்கிரனுடன் கூட்டுக்கிரகங்கள் இருந்தால் அனுமானித்து பொருத்தவேண்டும்.
மிருகங்களை அதன் குண இயல்பு, அதன் உடலுறவு முறை,அவை களின் உணவு முறைகளை பிரித்துப்பார்த்து பொருத்த வேண்டும்.
அனுசம்-கேட்டை, பூரம்-மகம், ரோகிணி-மிருகசீரிடம், திருவாதிரை-மூலம் சிறப்பாக இருக்கும். பூனைகள் கூடும்போது வன்முறைகள் உண்டு. எருமை ,மான் இவை கூடும்போது வன்முறை அற்ற நிலை. பசு ஒரு முறை கர்ப்பம் அடைந்து விட்டால் அது கன்று போட்ட பின்புதான் தன் இனத்துடன் உறவுகொள்ள அனுமதிக்கும். மனிதன் நிறைமாத கர்ப்பினி என்றாலும் விடுவதில்லையே?. இதனால்தான் யோனிப்பொருத்தம் முக்கியமாக பார்க்கப்ப்டவேண்டும் என்று என் அனுபவத்தில் வலியுறுத்துகிறேன். பத்துப்பொருத்தத்தில் இது மட்டுமே அடிப்படை பொருத்தமாகும் என்பது எனது ஆணித்தரமான கருத்து. ஜோதிட அன்பர்கள் சீர்தூக்கிப்பார்த்து பொருத்தம் வைக்கவும்.
உதரணமாக எனக்கு தெரிந்த ஒரு பெண்ணுக்கு அஸ்தம் நட்சத்திரம் (யோனி-எருமை) ஆணுக்கு அஸ்வினி நட்சத்திரம்(யோனி-குதிரை) . பெண்ணுக்கு பெண் யோனி,ஆணுக்கு ஆண் யோனி. ஆனால் குதிரையின் இயல்பும், எருமையின் இயல்பும் வேறு வேறு என்பதால் திருமணமாகி 20 வருடங்களாக சண்டை சச்சரவுகளுடன் தாமத்தியம் தொடர்கிறது. மழலை செல்வம் உண்டு.
எனக்குத்தெரிந்த மற்றொரு பெண்ணுக்கு அவிட்டம் நட்சத்திரம்(யோனி-சிகம்) , ஆணுக்கு பரணி நட்சத்திரம்(யோனி-யானை). திருமணமாகி 4 வருடங்களுக்குப்பின் விவாகரத்து பெற்று பெண் மறுமணம் செய்துகொண்டார். குழந்தை பாக்கியம் ஏற்ப்பட்டுள்ளது. மேலும் யோனி பொருத்தம் பார்க்கும் அதே நேரத்தில் ஏழாம் இடத்து அதிபதி நீச்சப்பட்டுவிட்டானா? 6-8-12 ல் மறைந்துவிட்டானா? என்று ஜாதகத்தை ஆராய்ந்து பார்த்து பொருத்தலாம். இதுவே சிறந்த மனப்பொருத்தமாக அமையும். புராண கதைகளில் அகலிகை-தேவேந்திரன் கதையை ஞாபகத்தில் வைத்து யோனிப்பொருத்தம் பார்த்தல் நலம்.
மேலும் உதாரணமாக இன்னொரு பெண்ணுக்கு அவிட்டம் நட்சத்திரம்,ஆணுக்கு கேட்டை நட்சத்திரம். இரவில் பூசலும் பகலில் சிறு சிறு சண்டை சச்சரவுகளுடன் 50 ஆண்டுகளாக வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். அவிட்டம்-சிங்கம். கேட்டை-மான், இயல்புகள் மாறிய யோனி. சிங்கம் மாமிசம் சாப்பிடும் வன்புணர்ச்சி கொண்டது. மான் தாவர பட்சினி வன்முறையற்றது. என்னே இறைவனின் திருவிளையாடல்.
(பாரம்பரிய ஜோதிடத்தில் நல்ல ஞானமும் முப்பது வருடங்களுக்கு மேலான அனுபவங்களும் இருந்தும் தன்னை வெளிப்படுத்திக்கொள்ள விரும்பாதவர் ஐயா திரு சண்முகவேல் அவர்கள். சமீபத்தில் அவரை ஜோதிட கட்டுரை எழுதித்தருமாறு கேட்டுக்கொண்டேன். அவர் எழுதிய கட்டுரைகளில் ஒன்றுதான் இக்கட்டுரை)

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கோவில்கள்


 திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கோவில்கள்

--------------------------------------------------

தென்பாண்டி நாட்டில் அதுவும் குறிப்பாக தாமிரபரணி நதிக்கரையின் இரு ஓரங்களிலும் 274 சிவாலயங்கள் சிறப்புற்று விளங்கி இருந்ததாக பல புராணங்கள் கூறுகின்றன.
அத்தகைய புராணங்களில், தாமிரபரணி மகாத்மியம், நவசமுத்திர மகாத்மியம் சிவசைல மகாத்மியம் திருப்புடை மருதூர் மகாத்மியம், திருக்குற்றால தலபுராணம், தென்காசி தலபுராணம், கருவை தலபுராணம் திருச்செந்தூர் புராணம் போன்ற நூல்களில் தென்பாண்டி நாட்டில் உள்ள சிவாலயங்கள் திரி (3), பஞ்ச (5), அஷ்ட (😎, நவ (9), தச (10) போன்ற எண்ணிக்கையில் பிரித்து நம் முன்னோர்கள் வழிபட்டுள்ளனர்.
1. காந்திமதி நெல்லையப்பர் கோவில்
இறைவன் நடராசத் திருமேனி கொண்டு அருட்கூத்து இயற்றுகின்ற தலங்களில் முக்கியமானவையாக ஐந்து தலங்கள் இருக்கின்றன. சிவபெருமானுக்கான ஐம்பெரும் சபைகளில் "தாமிர சபை" என்று போற்றப்படுவது திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில்தான்
இக்கோயில் தெற்கிலிருந்து வடக்குப் பக்கமாக 756 அடி நீளமும், மேற்கிலிருந்து கிழக்காக 378 அடி அகலமும் கொண்டதாக இருக்கிறது. மேலும் இது ஆசியாவின் மிகப்பெரிய சிவன் கோயில் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
இந்தக் கோயிலில் நெல்லையப்பர், காந்திமதியம்மன் என்று இரண்டு சமமான பிரிவுகளில் சுவாமிக்கும் அம்மனுக்கும் தனித்தனிக் கோயில்கள் இருக்கிறது. இந்தக் கோயில்கள் இரண்டும் அழகிய கல் மண்டபம் ஒன்றின் மூலம் இணைக்கப்பட்டுள்ளது இதன் சிறப்பாகும்.
2. சபை சிவாலயங்கள்
இறைவன் நடராசத் திருமேனி கொண்டு அருட்கூத்து இயற்றுகின்ற தலங்களில் முக்கியமானவை என்று ஐந்து உள்ளது. இந்த ஐம்பெரும் மன்றங்களில் (சபைகள்) இரண்டு மன்றங்கள் திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
* சித்ர சபை - திருக்குற்றாலம்
* தாமிர சபை- திருநெல்வேலி
3. முப்பீட தலங்கள்
* அம்பாசமுத்திரம் - திருமூலநாதர் திருக்கோயில்
* ஊர்காடு - திருக்கோஷ்டியப்பர் திருக்கோயில்
* வல்லநாடு - திருமூலநாதர் திருக்கோயில் (தற்போது தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளது).
4. பஞ்ச ஆசன தலங்கள்
* ஏர்வாடி - திருவழுந்தீசர் திருக்கோயில்
* களக்காடு - சத்யவாகீசர் திருக்கோயில்
* நான்குநேரி - திருநாகேஷ்வரர்
திருக்கோயில்
* விஜயநாராயணம்- மனோன்மணீசர் திருக்கோயில்
* செண்பகராமநல்லூர் - இராமலிங்கர் திருக்கோயில்
* தென்பாண்டி நாட்டின் பஞ்ச பூத தலங்கள்
* சங்கரன்கோயில் - மண் தலம் (ப்ருத்திவி)
* கரிவலம்வந்தநல்லூர் - அக்னி தலம்
* தாருகாபுரம் - நீர் தலம்
* தென்மலை- காற்று தலம்
* தேவதானம் - ஆகாய தலம்
5. காசிக்கு சமமான பஞ்ச குரோச தலங்கள்
* சிவசைலம் - சிவசைலப்பர் திருக்கோயில்
* ஆழ்வார்குறிச்சி - வன்னீஸ்வரர் திருக்கோயில்
* கடையம் - வில்வவனநாதர் திருக்கோயில்
* திருப்புடைமருதூர் - நாறும்பூநாதர் திருக்கோயில்
* பாபநாசம் - பாபநாசர் திருக்கோயில்
6. இராமர் வழிபட்ட பஞ்சலிங்க தலங்கள்
* களக்காடு- சத்யவாகீசர்
* பத்தை - குலசேகரநாதம்
* பதுமனேரி - நெல்லையப்பர்
* தேவநல்லூர் - சோமநாதம்
* சிங்கிகுளம் - கைலாசநாதம்
7. நவ சமுத்திர தலங்கள்
* அம்பாசமுத்திரம்
* ரவணசமுத்திரம்
* வீராசமுத்திரம்
* அரங்கசமுத்திரம்
* தளபதிசமுத்திரம்
* வாலசமுத்திரம்
* கோபாலசமுத்திரம்
* வடமலைசமுத்திரம் (பத்மனேரி)
* ரத்னகாராசமுத்திரம் (திருச்செந்தூர்- இது தற்போது தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளது)
8. பஞ்ச பீட தலங்கள்
பஞ்ச பீட தலங்களில் முதல் நான்கு தலங்கள் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ளன.
* கூர்ம பீடம் - பிரம்மதேசம்
* சக்ர பீடம் - குற்றாலம்
* பத்ம பீடம் - தென்காசி
* காந்தி பீடம் - திருநெல்வேலி
* குமரி பீடம் - கன்னியாகுமரி.இது கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ளது.
9. சிவ கைலாயங்கள் (ஆதி கைலாசம்)
* பிரம்மதேசம் - கைலாசநாதர் திருக்கோயில்
* அரியநாயகிபுரம் - கைலாசநாதர் திருக்கோயில்
* திருநெல்வேலி (தென்கைலாயம்)- தென்கைலாசநாதர் (நெல்லையப்பர்) திருக்கோயில்
* கீழநத்தம் (மேலூர்)- கைலாசநாதர் திருக்கோயில்
* முறப்பநாடு - கைலாசநாதர் திருக்கோயில் (இது தற்போது தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளது)
* தென்திருப்பேரை - கைலாசநாதர் திருக்கோயில் (இது தற்போது தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளது)
* சேர்ந்தபூமங்கலம் - கைலாசநாதர் திருக்கோயில் (இது தற்போது தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளது)
* கங்கைகொண்டான் - கைலாசநாதர் திருக்கோயில்
* தச வீரட்டானத் தலங்கள் (மேற்கு சிவாலயங்கள்)
* சிவசைலம் - சிவசைலப்பர் திருக்கோயில் - பக்த தலம்
* வழுதூர் - அக்னீஸ்வரர் திருக்கோயில் - மகேச தலம்
* கோடகநல்லூர் - அவிமுக்தீஸ்வரர் திருக்கோயில் - பிராண லிங்கத் தலம்
* சிங்கிகுளம் - கைலாசநாதர் திருக்கோயில் - ஞானலிங்கத் தலம்
* மேலநத்தம் - அக்னீஸ்வரர் திருக்கோயில் - சரண தலம்
* ராஜவல்லிபுரம் - அக்னீஸ்வரர் திருக்கோயில் - சகாய தலம்
* தென்மலை - திருப்பாத்தீஸ்வரமுடையார் திருக்கோயில் - பிரசாதி தலம்
* அங்கமங்கலம் - நரசிங்கஈஸ்வரமுடையார் திருக்கோயில் - கிரியாலிங்க தலம்
* காயல்பட்டினம் - மெய்கண்டேஸ்வரர் திருக்கோயில் - சம்பத் தலம் (இது தற்போது தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளது)
* திற்பரப்பு - மகாதேவர் திருக்கோயில் (இது தற்போது கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ளது)
10. வாலி வழிபட்டத் தலங்கள்
* திருவாலீஸ்வரம் - திருவாலீஸ்வரர் திருக்கோயில்
* கீழப்பாவூர் - திருவாலீஸ்வரர் திருக்கோயில்
* தென்காசி வாலியன்பத்தை - திருவாலீஸ்வரர் திருக்கோயில்
* நவகைலாயங்களும் நவக்கிரகங்களின் ஆட்சியும்
* பாபநாசம் - சூரியன்
* சேரன்மகாதேவி - சந்திரன்
* கோடகநல்லூர் - செவ்வாய்
* குன்னத்தூர் - இராகு
* முறப்பநாடு - குரு(இது தற்போது தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளது)
* ஸ்ரீவைகுண்டம்- சனி(இது தற்போது தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளது)
* தென்திருப்பேரை - புதன்(இது தற்போது தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளது)
* ராஜபதி - கேது(இது தற்போது தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளது)
* சேர்ந்தபூமங்கலம் - சுக்கிரன்(இது தற்போது தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளது)
11. வேறு சில ஆலயங்கள்
* இது தவிர தென் காளஹஸ்தி என்று போற்றப்படும் கரிசூழ்ந்தமங்கலம் காளஹஸ்தீஸ்வரர் திருக்கோயிலை சுற்றி அஷ்டலிங்க தலங்கள் உள்ளதாக திருநெல்வேலி தல புராணம் கூறுகிறது. துர்வாச முனிவர் வழிபட்ட இந்த கோயில்கள் பற்றி ஆய்வுகள் நடந்து வருகின்றன.
* நெல்லையிலிருந்து சுமார் 13 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள கிருஷ்ணாபுரத்தில் திருவேங்கடநாதர் கோவில் உள்ளது.
* நெல்லையிலிருந்து சுமார் 53 கிலோமீட்டர் தொலைவிலுள்ளது தென்காசி. தென்னிந்தியாவின் காசி (வாரணாசி) என்று அழைக்கப்படும் இந்நகர் சுமார் 400 ஆண்டுகால வரலாறு கொண்டது.
* சங்கரன் கோயில் எனும் ஊரில் உள்ள சங்கரநாராயணர் கோவில் தனிச்சிறப்பு பெற்று விளங்குகிறது.

நாம் தவிர்க்க வேண்டிய 8 மன விஷங்கள்!

 நாம் தவிர்க்க வேண்டிய 8 மன விஷங்கள்! நமது மன அமைதியையும் மகிழ்ச்சியையும் நாமே அறியாமல் அழிக்கும் 8 நச்சு எண்ணங்கள் என்னென்ன என்று தெரிந்துக...