Wednesday, 28 April 2021

எது கெடும் ?!?

                                           ஆத்திசூடி.

கடவுள் வாழ்த்து
ஆத்தி சூடி அமர்ந்த தேவனை ஏத்தி ஏத்தித் தொழுவோம் யாமே.

ஆத்தி-திருவாத்தி பூமாலையை சூடி-அணிபவராகிய சிவபெருமான்அமர்ந்த-விரும்பிய

தேவனை-விநாயகக் கடவுளை ஏத்தி ஏத்தி-வாழ்த்தி வாழ்த்திதொழுவோம்-வணங்குவோம் யாமே-நாமே.

                       எது கெடும் ?!?

#அடேயப்பா கெடுவதற்க்கு இவ்வளவு விஷயங்களா? எமது ஒளவை பிராட்டியார் எவ்வளவு அழகாக கூறி இருக்கிறார்......


(01) பாராத பயிரும் கெடும்.

(02) பாசத்தினால் பிள்ளை கெடும்.

(03) கேளாத கடனும் கெடும்.

(04) கேட்கும்போது உறவு கெடும்.

(05) தேடாத செல்வம் கெடும்.

(06) தெகிட்டினால் விருந்து கெடும்.

(07) ஓதாத கல்வி கெடும்.

(08) ஒழுக்கமில்லாத வாழ்வு கெடும்.

(09) சேராத உறவும் கெடும்.

(10) சிற்றின்பன் பெயரும் கெடும்.

(11) நாடாத நட்பும் கெடும்.

(12) நயமில்லா சொல்லும் கெடும்.

(13) கண்டிக்காத பிள்ளை கெடும்.

(14) கடன்பட்டால் வாழ்வு கெடும்.

(15) பிரிவால் இன்பம் கெடும்.

(16) பணத்தால் அமைதி கெடும்.

(17) சினமிகுந்தால் அறமும் கெடும்.

(18) சிந்திக்காத செயலும் கெடும்.

(19) சோம்பினால் வளர்ச்சி கெடும்.

(20) சுயமில்லா வேலை கெடும்.

(21) மோகித்தால் முறைமை கெடும்.

(22) முறையற்ற உறவும் கெடும்.

(23) அச்சத்தால் வீரம் கெடும்.

(24) அறியாமையால் முடிவு கெடும்.

(25) உழுவாத நிலமும் கெடும்.

(26)உழைக்காத உடலும்  கெடும்.

(27) இறைக்காத கிணறும் கெடும்.

(28) இயற்கையழிக்கும் நாடும் கெடும்.

(29) இல்லாலில்லா வம்சம் கெடும்.

(30) இரக்கமில்லா மனிதம் கெடும்.

(31) தோகையினால் துறவு கெடும்.

(32) துணையில்லா வாழ்வு கெடும்.

(33) ஓய்வில்லா முதுமை கெடும்.

(34) ஒழுக்கமில்லா பெண்டிர் கெடும்.

(35) அளவில்லா ஆசை கெடும்.

(36) அச்சப்படும் கோழை கெடும்.

(37) இலக்கில்லா பயணம் கெடும்.

(38) இச்சையினால் உள்ளம் கெடும்.

(39) உண்மையில்லா காதல் கெடும்.

(40) உணர்வில்லாத இனமும் கெடும்.

(41) செல்வம் போனால் சிறப்பு கெடும்.

(42) சொல்பிறழ்ந்தால் பெயரும் கெடும்.

(43) தூண்டாத திரியும் கெடும்.

(44) தூற்றிப்பேசும் உரையும் கெடும்.

(45) காய்க்காத மரமும் கெடும்.

(46) காடழிந்தால் மழையும் கெடும்.

(47) குறி பிறழ்ந்தால் வேட்டை கெடும்.

(48) குற்றம் பார்த்தால் சுற்றம் கெடும்.

(49) வசிக்காத வீடும் கெடும்.

(50) வறுமை வந்தால் எல்லாம் கெடும்.

(51) குளிக்காத மேனி கெடும்.

(52) குளிர்ந்து போனால் உணவு கெடும்.

(53) பொய்யான அழகும் கெடும்.

(54) பொய்யுரைத்தால் புகழும் கெடும்.

(55) துடிப்பில்லா இளமை கெடும்.

(56) துவண்டிட்டால் வெற்றி கெடும்.

(57) தூங்காத இரவு கெடும்.

(58) தூங்கினால் பகலும் கெடும்.

(59) கவனமில்லா செயலும் கெடும்.

(60) கருத்தில்லா எழுத்தும் கெடும்.


கெடாமல் பாதுகாக்க வேண்டியது அவரவர் பொறுப்பு.....

ஆத்திசூடி.
கடவுள் வாழ்த்து
ஆத்தி சூடி அமர்ந்த தேவனை ஏத்தி ஏத்தித் தொழுவோம் யாமே.

ஆத்தி-திருவாத்தி பூமாலையை சூடி-அணிபவராகிய சிவபெருமான்அமர்ந்த-விரும்பிய

தேவனை-விநாயகக் கடவுளை ஏத்தி ஏத்தி-வாழ்த்தி வாழ்த்திதொழுவோம்-வணங்குவோம் யாமே-நாமே.

1.அறம் செய விரும்ப - நீ தருமத்தை(கடமையை)ச் செய்ய ஆவல் கொள்.

2. ஆறுவது சினம்  - கோபம் தணிக்கப்பட வேண்டியதாகும்.

3. இயல்வது கரவேல் - உன்னால் கொடுக்கக்கூடிய பொருளை யாசிப்பவர்க்குஒளிக்காது கொடு.

4. ஈவது விலக்கேல் - ஒருவர் மற்றவர்க்கு கொடுப்பதை, வேண்டாமென்றுதடுக்காதே.

5.உடையது விளம்பேல்- உன்னிடத்திலுள்ள பொருளை அல்லதுஇரகசியங்களை பிறர் அறியுமாறு சொல்லாதே.

6. ஊக்கமது கைவிடேல்- எப்போதும் முயற்சியைக் கைவிடக்கூடாது.

7. எண் எழுத்து இகழேல்- கணித, இலக்கண நூல்களைத் தினமும் தவறாமல்நன்கு கற்க வேண்டும்.

8. ஏற்பது இகழ்ச்சி- இரந்து வாழ்வது இழிவானது. அதனால் யாசிக்கக் கூடாது.

9. ஐயம் இட்டு உண்- யாசிப்பவர்கட்கு பிச்சையிட்டுப் பிறகு உண்ண வேண்டும்.

10. ஒப்புரவு ஒழுகு- உலக நடையை அறிந்துகொண்டு, அத்தோடு பொருந்துமாறுநடந்துகொள்.

11. ஓதுவது ஒழியேல் -நல்ல நூல்களை எப்பொழுதும் படித்துக்கொண்டிரு.

12. ஔவியம் பேசேல் -ஒருவரிடமும் பொறாமை கொண்டு பேசாதே.

13.அஃகஞ் சுருக்கேல்- அதிக இலாபத்துக்காக, தானியங்களை குறைத்து அளந்துவிற்காதே.

14.கண்டொன்று சொல்லேல்-. கண்ணாற் கண்டதற்கு மாறாகப்(பொய் சாட்சி)சொல்லாதே.

15.ஙப் போல் வளை -. 'ங' என்னும் எழுத்தானது எப்படி தான் பயன்னுள்ளதாகஇருந்து தன் வருக்க எழுதுக்களை தழுவுகிறதோ அது போல நாமும் நம்மைச்சார்ந்தவர்களால் என்ன பயன் என்று பாராமல் அவர்களை காக்க வேண்டும்."ங"என்னும் எழுத்தை கூர்ந்து நோக்கினால், ஒருவர் வளைந்து வணக்கம் சொல்வதுபோல் உள்ளது விளங்கும். அதைப்போல பணிவாக பெரியவர் முன் வளையவேண்டும் என்று ஔவை உரைத்ததாகவும் எடுத்துக்கொள்ளலாம்.

16.சனி நீராடு -.சனிக்கிழமை தோறும் எண்ணெய் தேய்த்துக் குளிக்கவும்.

17.ஞயம்பட உரை- கேட்பவருக்கு இன்பம் உண்டாகும் படி இனிமையாக பேசு.

18.இடம்பட வீடு எடேல்-உன் தேவைக்கு மேல் வீட்டை பெரிதாக கட்டாதே.

19.இணக்கம் அறிந்து இணங்கு -ஒருவரிடம் நட்பு கொள்ளும் முன்,அவர் நல்லகுணங்களும்,நல்ல செய்கைகளும் கொண்டவரா எனத் தெரிந்த பிறகு அவருடன்நட்பு கொள்ளவும்.

20.தந்தை தாய்ப் பேண் -உன் தந்தையையும் தாயையும் அவர்களுடையமுதுமைக் காலம் வரை அன்புடன் காப்பாற்று.

21.நன்றி மறவேல் - ஒருவர் உனக்கு செய்த உதவியை ஒரு போதும் மறவாதே.

22.பருவத்தே பயிர் செய் - எச்செயலையும் அதற்குரிய காலத்திலேயே செய்யவேண்டும்.

23.மண் பறித்து உண்ணேல் -பிறர் நிலத்தை திருடி அதன் மூலம் வாழாதே(அல்லது) நீதி மன்றத்தில் இருந்து கொண்டே லஞ்சம் வாங்கிக்கொண்டு தீர்ப்புவழங்காதே (என்றும் பொருள் கொள்ளலாம்)

24.இயல்பு அலாதன செய்யேல் - நல்லொழுக்கத்துக்கு மாறான செயல்களைச்செய்யாதே.

25.அரவம் ஆட்டேல். -பாம்புகளை பிடித்து விளையாடாதே.

26.இலவம் பஞ்சில் துயில்  -இலவம் பஞ்சு' எனும் ஒரு வகை பஞ்சினால்செய்யப்பட்ட படுக்கையிலே உறங்கு.

27.வஞ்சகம் பேசேல் -படச்(உண்மைக்கு புறம்பான,கவர்ச்சிகரமான) சொற்களைபேசாதே.

28.அழகு அலாதன செய்யேல் -.இழிவான செயல்களை செய்யாதே

29.இளமையில் கல்- இளமை பருவத்தில் இருந்தே கற்கவேண்டியவைகளை(இலக்கணத்தையும், கணிதத்தையும்) தவறாமல் கற்றுக்கொள்.

30.அறனை மறவேல். தருமத்தை எப்போதும் மறவாமல் செய்.

31.அனந்தல் ஆடேல்- மிகுதியாக துங்காதே.

32.கடிவது மற-யாரையும் கோபத்தில் கடிந்து பேசிவிடாதே.

33.காப்பது விரதம்- தான் செய்யத் தொடங்கிய தருமத்தை விடாமல் செய்வதேவிரதமாகும் (அல்லது) பிற உயிர்களுக்கு துன்பம் செய்யாமல் அவற்றைக்காப்பாற்றுவதே தவம் ஆகும்.

34.கிழமை பட வாழ்-உன் உடலாலும் பொருளாலும் பிறருக்கு நன்மை செய்துவாழ.

35. கீழ்மை யகற்று-இழிவான குணஞ் செயல்களை நீக்கு.

36. குணமது கைவிடேல்- நன்மை தரக்கூடிய நல்ல குணங்களைபின்பற்றுவதை நிறுத்திவிடாதே(கைவிடேல்).

37. கூடிப் பிரியேல்- நல்லவரோடு நட்பு செய்து பின் அவரை பிரியாதே.

38. கெடுப்ப தொழி -பிறருக்கு கேடு விளைவிக்கும் செயல்களை செய்யாதே.

39. கேள்வி முயல்-கற்றவர் சொல்லும் நூற் பொருளை கேட்பதற்கு முயர்சிசெய்.

40. கைவினை கரவேல்-உங்களுக்கு தெரிந்த கைத்தொழிலைமற்றவர்களிடமிருந்து ஒளியாமற் செய்து கொண்டிருக்கவும்.

41. கொள்ளை விரும்பேல்- பிறர் பொருளை திருடுவதர்க்கு ஆசைப்படாதே.

42. கோதாட் டொழி-குற்றமான விளையாட்டை விட்டு விடு (நீக்கு).

43.கௌவை அகற்று-வாழ்வில் செயற்கையாக ஏற்படும் துன்பத்தை நீக்க.

44. சக்கர நெறி நில்- அரசன் வகுத்த நெறிப்படி வாழ வேண்டும். ( அரசன் =ஆள்பவர், தலைவர் ).

45.சான்றோ ரினத்திரு-அறிவொழுக்கங்ளில் நிறைந்த பெரியோர்களுடன்சேர்ந்து இரு.

46. சித்திரம் பேசெல்- பொய்யான வார்தைகளை மெய் போல்ப் பேசாதே.

47. சீர்மை மறவேல்- புகழுக்குக் காரணமான நல்ல குணங்களை மறந்துவிடாதே.

48. சுளிக்கச் சொல்லேல்-கேட்பவருக்குக் கோபமும் வெறுப்பும் உண்டாகும் படிபேசாதீர்.

49. சூது விரும்பேல்- ஒருபொதும் சூதாட்டத்தை விரும்பாதே.

50. செய்வன திருந்தச் செய்- செய்யும் செயல்களை தவறோ குறையோ ஏதும்இல்லாமல் செய்யவும்.

51.சேரிடமறிந்து சேர்-நீ பழகும் நபர்கள் நல்ல குணங்கள் உடயவர்களா எனநன்கு ஆராய்ந்து பின்பு அவர்களுடன் பழகு.

52. சையெனத் திரியேல்-பெரியோர் 'சீ' என வெறுக்கும் படி வீணாய்த் திரியாதே.

53. சொற்சோர்வு படேல்- பிறருடன் பேசும் பொழுது மறந்தும் குற்றமுண்டாகப்பேசாதே.

54. சோம்பித் திரியேல்-முயற்சியின்றிச் சோம்பேறியாகத் திரியாதே.

55. தக்கோ னெனத்திரி-பெரியோர்கள் உன்னைத்தக்கவன்(யோக்கியன்,நல்லவன்) என்று புகழும்படி நடந்துக்கொள்.

56. தானமது விரும்பு-யாசிப்பவர்களுக்கு தானம் செய்.

57. திருமாலுக்கு அடிமை செய்-நாராயணமூர்த்திக்கு தொண்டு செய்.

58. தீவினை யகற்று-பாவச் செயல்களைச் செய்யாமல் இரு.

59.துன்பத்திற் கிடங்கொடேல்-முயற்சி செய்யும் பொழுது வரும் உடம்பின்வருத்தத்திற்கு அஞ்சி அதனை விட்டு விடாதே.

60. தூக்கி வினைசெய்-ஒரு வேளையை முடிப்பதற்க்கான் வழிமுறைகளைநன்கு ஆராயிந்து அறிந்து பின்பு அச்செயலை செய்யத தொடங்கவும்.

61. தெய்வ மிகழேல்-கடவுளை பழிக்காதே.

62. தேசத்தோ டொத்துவாழ்- உன் நாட்டில் வசிக்கும் மக்களுடன் பகைஇல்லாமல் வாழ்.

63. தையல்சொல் கேளேல்-மனைவி சொல் கேட்டு ஆராயாமல் நடவாதே.

64. தொன்மை மறவேல்- பழமையாகிய நட்பினை மறந்துவிடாதே.

65. தோற்பன தொடரேல்-ஒரு செயலைச் செய்தால் தோல்வியில் தான்முடியும் எனத் தெரிந்தே அதை தொடங்காதே.

66. நன்மை கடைப்பிடி-நல்வினை செய்தலை எவ்வளவு இடையுறு வந்தாலும்உறுதியாகத் தொடரவும்.

67. நாடொப் பனசெய்- நாட்டில் உள்ள பலரும் ஒத்துக்கொள்ளத்தக்க நல்லகாரியங்களை செய்.

68. நிலையிற் பிரியேல்-உன்னுடைய நல்ல நிலையில் இருந்து என்றும் தாழ்ந்துவிடாதே.

69. நீர்விளை யாடேல்-வெள்ளத்தில் நீந்தி விளையாடாதே.

70. நுண்மை நுகரேல்-நோயைத் தரும் சிற்றுண்டிகளை அதிகமாக உண்ணாதே.

71. நூல்பல கல்- அறிவை வளர்க்கும் பல நூல்களைப் படி.

72.நெற்பயிர் விளை- நெற்பயிரை விளையச் செய்வதை உன் வாழ்க்கைதொழிலாகக் கொண்டு வாழ்.

73. நேர்பட வொழுக- ஒழுக்கந் தவறாமல் நேர்வழியில் நட.

74. நைவினை நணுகேல்-பிறர் வருந்தத் தகுந்த தீ வினைகளைச் செய்யாதே.

75. நொய்ய வுரையேல்-பயன் இல்லாத அற்ப வார்த்தைகளைப் பேசாதே.

76. நோய்க்கிடங் கொடேல்-மிகுந்த உணவு உறக்கம் முதலியவற்றால்நோய்க்கு வழிவகை செய்யாதே.

77. பழிப்பன பகரேல்-பெறியோர்களால் பழிக்கப்படும் இழிவான சொற்களானபொய்,கடுஞ்சொல் ஆகியவற்றை பேசாதே.

78. பாம்பொடு பழகேல்-பாம்புபோல கொடிய குணம் கொண்டவர்கள் உடன்பழகாதே.

79. பிழைபடச் சொல்லேல்-குற்றம் உண்டாகும் படி எதையும் பேசாதே.

80. பீடு பெறநில்-பெறுமையை அடையும் படியான நல்ல நிலையிலே நில்.

81. புகழ்ந்தாரைப் போற்றி வாழ்-உன்னையே நம்பியவர்களை காப்பாற்றி வாழ்.

82. பூமி திருத்தியுண்-விளைநிலத்தை உழுது அதில் பயிர்செய்து உண்.(அ)விவசாயத்தை வாழ்க்கை தொழிலாகக் கொள்.

83. பெரியாரைத் துணைக்கொள்-அறிவிலே சிறந்த பெரியோர்களை உனக்குத்துணையாகப் பேணிக்கொள்.

84. பேதைமை யகற்று-அறியாமையை போக்க.

85. பையலோ டிணங்கேல்-அறிவில்லாத சிறுவனோடு கூடித் திரியாதே.

86. பொருடனைப் போற்றிவாழ்-பொருள்களை(செல்வம் உட்பட)வீண் செலவுசெய்யாமற் பாதுகாத்து வாழ்.

87. போர்த்தொழில் புரியேல்-யாருடனும் தேவையில்லாமல் சண்டைபொடுவதை ஒரு வேலையாக செய்யாதே.

88. மனந்தடு மாறேல்-எதனாலும் மனக்கலக்கம் அடையாதே.

89. மாற்றானுக் கிடங்கொடேல்-பகைவன் உன்னை துன்புறுத்தி உன்னைவெல்வதற்க்கு இடம் கொடுக்காதே.

90. மிகைபடச் சொல்லேல்- சாதாரணமான விஷயத்தை மாயாஜால வார்தைகளால் பெரிதாகக் கூறாதே.

91. மீதூண் விரும்பேல்-மிகுதியாக உண்ணுதலை விரும்பாதே.

92. முனைமுகத்து நில்லேல்- எப்போதும் யாருடனாவது சண்டையிடுவதற்காகபோர் முனையிலே நிற்காதே.

93. மூர்க்கரோ டிணங்கேல்- மூர்க்க குணம் கொண்டவர்கள் உடன் பழகாதே.

94. மெல்லினல்லாள் தோள்சேர்-பிற மாதரை விரும்பாமல் உன்மனைவியுடன் மட்டும் சேர்ந்து வாழ்.

95. மேன்மக்கள் சொற்கேள்-நல்லொழுக்கம் உடைய பெரியோர் சொல்லைக்கேட்டு நட.

96. மைவிழியார் மனையகல்- விலைமாந்தர் உடன் உறவு கொள்ளாமல் விலகிநில்.

97. மொழிவ தறமொழி-சொல்லப் படும் பொருளை சந்தேகம் நீங்கும் படி சொல்.

98.மோகத்தை முனி-நிலையில்லாத பொருள்களின் மேலுள்ள ஆசையைவெறுத்திடு.

99. வல்லமை பேசேல்-உன்னுடைய சாமர்தியத்தை நீயே புகழ்ந்து பேசாதே.

100. வாதுமுற் கூறேல்-பெறியோர்கள் இடத்தில் முறன் பட்டு வாதிடாதே.

101. வித்தை விரும்பு- கல்வியாகிய நற்பொருளை விரும்பு.

102. வீடு பெறநில்-முக்தியை பெறுவதற்க்கான சன்மார்கத்திலே வாழ்க்கையைநடத்து.

103. உத்தமனாய் இரு-உயர்ந்த குணங்கள் கொண்டவனாக் வாழு.

104. ஊருடன் கூடிவாழ்-ஊராருடன் நன்மை தீமைகளில் கலந்து வாழ்.

105. வெட்டெனப் பேசேல்-யாருடனும் கத்தி வெட்டுப் போலக் கடினமாகபேசாதே.

106. வேண்டி வினைசெயேல்- வேண்டுமென்றே தீய செயல்களைச் செய்யாதே.

107. வைகறை துயிலெழு- நாள்தோறும் சூரியன் உதிக்கும் முன்பே தூக்கத்தில்இருந்து எழுந்திரு.

108. ஒன்னாரைத் தேறேல்-பகைவர்களை நம்பாதே.

109. ஓரஞ் சொல்லேல்-எந்த வழக்கிலும் ஒருபுடைச் சார்பாக பேசாமல்நடுநிலையுடன் பேசு.




மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்!

 


       மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்!

பெண் என்பவள் வளர்பிறையும் தேய்பிறையும் போன்றது


மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்............

 

இரண்டு மன்னர்களுக்கு  இடையே சண்டை.

 

ஜெயித்த மன்னன் தோற்றவனைப் பார்த்து எனது கேள்விக்கு சரியான பதில் சொன்னால் உனது நாட்டை உனக்கே திருப்பி தருவேன்.

 

தோற்றவன் "கேள்வியை கேளுங்கள்" என்றான்.

 

கேள்வி: ஒரு பெண் தன் ஆழ்மனதில் என்ன நினைக்கிறாள்?

 

ஜயித்த மன்னனின் காதலி மன்னனிடம் இந்த கேள்வியை கேட்டு பதில் சொன்னால்தான் அவனை திருமணம் செய்து கொள்வதாக நிபந்தனை விதித்து இருந்தாள்.

 

ஜெயித்தவனுக்கு விடை தெரியாததால் தோற்றவனிடம் கேட்டு விட்டான்

 

தோற்றவன் கேள்விக்கு விடைகாண ஓடினான் ஓடினான் ஒவ்வோரிடமாக ஓடினான். ஒருவருக்கும் பதில் தெரியவில்லை.

 

தோற்றவன் கடைசியாக ஒரு சூனியக்கார கிழவியிடம் சென்று கேட்டான்.

 

சூனியக்கார கிழவி " உனக்கு பதில் சொல்கிறேன்.அதை நீ சொன்னால் உனக்கு நாடு கிடைக்கும். ஜெயித்த மன்னனுக்கு காதலி மனைவியாவாள்.

 

அது சரி! நீ எனக்கு என்ன தருவாய்?" என்று கேட்டாள்.

 

தோற்றவன் "நீ எது கேட்டாலும் தருவேன்" என வாக்கு கொடுத்தான்

 

சூனியக்காரி விடையை சொன்னாள்:....

 

"தன் சம்பந்தப்பட்ட முடிவுகளைத் தானே எடுக்க வேண்டும் என்பதே ஒரு பெண்ணின் ஆழ்மனது எண்ணம்"

 

இந்த பதிலை தோற்றவன் ஜெயித்தவனிடம் சொன்னான்.

 

தோற்றவனுக்கு நாடு கிடைத்தது.

ஜெயித்தவனுக்கு திருமணம் நடந்தது.

 

நாடு மீண்டும் கிடைத்தவன் சூனியக்கார கிழவியிடம் வந்து" நீ வேண்டியதை கேள்" என்றான்.

 

சூனியக்கார கிழவி "நீ என்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும்" என்றாள்

 

கொடுத்த வாக்கை காப்பாற்ற அவனும் ஒப்புக் கொண்டான்.

 

உடனே சூனியக்கார கிழவி ஓர் அழகிய தேவதையாக மாறி காட்சி அளித்தாள்.

 

அப்போது அவள் சொன்னாள்.

 

நாம் வீட்டில் தனியாக இருக்கும்போது நான் கிழவியாக இருந்தால். உன்னுடன் வெளியே வரும்போது அழகிய தேவதையாக இருப்பேன்.

 

அல்லது

நான்  வீட்டில் அழகிய தேவதையாக இருந்தால் உன்னுடன் வெளியே வரும்போது கிழவியாக இருப்பேன்.

 

இந்த இரண்டில் உன் விருப்பம் என்ன? என்று கேட்டாள்.

 

அதற்கு அவன் கொஞ்சம்கூட யோசிக்காமல் சொன்னான்: " இது உன் சம்பந்தப் பட்ட விஷயம். முடிவு நீதான் எடுக்க வேண்டும்"

 

"முடிவை என்னிடம் விட்டு விட்டதால் எப்போதும் அழகிய தேவதையாக உன் மனைவியாக இருக்க முடிவு செய்து விட்டேன் என்றாள்.

 

ஆம்!

 

பெண் சம்பந்தப்பட்ட முடிவுகளை அவளே எடுக்கும்போது தேவதையாக இருக்கிறாள்.

முடிவுகள் அவள்மீது திணிக்கப்படும்போது சூனியக்கார கிழவியாகி விடுகிறாள்.

 

இப்போது எல்லாம் புரிகிறதா?

 

ஜெயித்த மன்னன் உச்சம் பெற்ற சூரியன்!

 

உச்சம் பெற்ற சூரியனேயாயினும் பக்கத்தில் மீனத்தில் உச்சம் பெற்ற காதலி சுக்கிரனை மனைவியாக அடைய அவளது கேள்விக்கு பதில் சொல்லித்தான் ஆக வேண்டும்.

 

இதற்கு பதில் சொல்ல தன்னிடம் தோற்றாலும் கூட தனது சொந்த வீடான சிம்மத்துக்கு பக்கத்தில் கன்னியில்    ஆட்சி உச்சம் பெறும் புதனிடம் கேள்வியை கைமாற்றி விட வேண்டும்.

 

முக்கூட்டுக் கோள்களில் புத்திசாலியாகிய புதன் மனமாகிய சந்திரன் எனும் சூனியக்கார கிழவியிடமிருந்தே பதிலை பெற்றாக வேண்டும்.

 

புதனின் மிதுனத்துக்கு 2ம் வீடாகவும் புதனின் கன்னிக்கு 11லாப வீடாகவும் வரும் கடகத்தில் ஆட்சி பெறும் சந்திரன்தானே பதில் சொல்லியாக வேண்டும்

 

வளர் பிறைச் சந்திரன் அழகிய தேவதை!

தேய்பிறைச் சந்திரன் சூனியக்கார கிழவி!

 

இரண்டும் மாறி மாறி அமைவதுதானே மனித வாழ்க்கை!

 

மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்!

Monday, 5 April 2021

ஜோதிட உலகத்தில் இருக்கும் அறிவியல் சார்ந்த சில உண்மைகள்.

             ஜோதிட உலகத்தில் இருக்கும் அறிவியல் சார்ந்த சில உண்மைகள்.

★ராசி நட்சத்திரம்,லக்னம் நட்சத்திரம் லக்னாதிபதி நின்ற நட்சத்திரம் இந்த மூன்று நட்சத்திரங்கள் தான் நம்முடைய ஜாதகத்தில் மிக மிக முக்கியமாக பார்க்க வேண்டியவை. ★ராசி நட்சத்திரம் உடல், லக்ன நட்சத்திரம் உயிர் ,லக்னாதிபதி நின்ற நட்சத்திரம் ஆத்மா. ★இவைதான் ஜாதகத்தில் உடல் உயிர் ஆத்மா என்று அழைக்கப்படுகிறது அதாவது விதி மதி கதி ★ராசி நட்சத்திரத்தை விட லக்னமும் லக்னாதிபதியும் விழுந்த டிகிரி அல்லது நட்சத்திரம் தான் மிக முக்கியமானது. ★9 கிரகங்கள் வேறொன்றும் கிடையாது நமது உடலில் உள்ள ஒவ்வொரு உடல் உறுப்புகளும் தான்.ஒவ்வொரு கிரகத்திற்கும் ஒவ்வொரு உடல் உறுப்பு சொந்தம் இருக்கிறது. ★அவற்றில் சிலவற்றை மட்டும் பார்க்கலாம். 1.(சூரியன்) முதுகுத்தண்டு ,இருதயம், எலும்பு மண்டலம், கண் 2.(சந்திரன்) நமது உடலில் இருக்கும் சுரப்பிகள் நம்முடைய ஆழ்மனம்,ரத்தம். நம்முடைய ரத்த நாளங்கள். ★செவ்வாய் ரத்ததிற்கு அதிபதி கிடையாது. சந்திரன்தான் ரத்தத்திற்கு அதிபதி.செவ்வாய் நம்முடைய மூட்டு ,leg joins ,தசைகள். ★செவ்வாய் தான் நம் உடலை இயக்கும் சக்தி.அதனால்தான் கால புருஷனுக்கு 10ம் பாவமான மகரத்தில் செவ்வாய் உச்சம். 3.(செவ்வாய்) ★செவ்வாய் நம்முடைய தசைகள். மூட்டு,leg joins,பற்கள் 4.(குரு) குரு நம்முடைய மூளை மற்றும் கல்லீரல். 5.(சனி) ஊனம்.நமது உடலில் இருக்கும் அங்க அவஈன அடையாளங்கள். 6.(புதன்) தோல் மற்றும் நரம்பு மண்டலம் 7.(சுக்கிரன்) சுக்கிரன் கிட்னி ,கர்ப்பப்பை விந்துபை,ஆணுறுப்பு பெண்ணுறுப்பு. 8.(ராகு, கேது) ராகு கேது நமது உடலில் உள்ள ஏழு சக்கரங்கள் ★அந்த 12 பாவங்கள் வேறொன்றும் கிடையாது நமது உடலில் இருக்கும் 12 உடல் உறுப்புகள். அவற்றில் சிலவற்றை மற்றும் பார்க்கலாம். ★தலை ,முகம் ,கழுத்து, மார்பு, மேல் வயிறு ,அடி வயிறு ,இடை, பிறப்புறுப்பு ,தொடை, முழங்கால் கணுக்கால் ,பாதம் ★இந்தப் 12 உறுப்புகள்தான் நமது ஜாதகத்தில் இருக்கும் 12 பாவங்கள். ★அந்த 27 நட்சத்திரங்கள் என்பது நமது உடலில் இருக்கும் ஒவ்வொரு செல் அமைப்புகள். ★அதாவது நமது உடலில் இருக்கும் 27 தலைமுறைகளின் கர்ம பதிவுகள் தான் அந்த 27 நட்சத்திரங்கள். ★27 நட்சத்திரம் 12 ராசி 9 கிரகங்கள்.இவற்றை கூட்டினால் 48 வரும்.இதுதான் ஒரு மண்டலம். ★ஒரு மண்டலம் என்பது 48 அதுதான் இந்தப் 12 ராசிகளும் 9 கிரகங்களும் 27 நட்சத்திரங்களும் கூட்டினால் வருவது. ★நாம் 48 நாள் விரதம் இருப்பது ,48 நாள் கடவுள்களுக்கு மாலை போடுவது 48 நாள் மண்டல பூஜைகள் செய்வது அனைத்தும் இந்த 27 நட்சத்திரங்கள் 12 ராசிகள் 9 கிரகங்கள்.இவற்றின் கால சுழற்சிதான். ★ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் 4 பாதங்கள் இருக்கின்றன.27 நட்சத்திர பாதங்கள் கூட்டினால் 108 வரும். ★இந்த உலகத்தில் இருக்கும் பெண்ணாய் பிறந்த மனிதர்களுக்கும்,விலங்குகளுக்கும் மாதவிடாய் என்பது இருக்கும் ★சந்திரனின் ஒரு சுழற்சி காலம் தான் மாதவிடாய் காலம் ஆகும். ★சந்திரன் 27 நட்சத்திரங்களையும் தொட்டு 28வது நட்சத்திரமான அபிஜித் நட்சத்திரத்தை தொடும் போது தான் பெண்களுக்கு மாதவிடாய் வரும். ★சந்திரனுடைய ஒரு மாதகால சுழற்சிதான் பெண்களின் மாதவிடாய் காலம் ஆகும். ★அந்தக் காலத்தில் வாழ்ந்த நமது முன்னோர்கள் இராஜாக்கள் முனிவர்கள் சாந்தி முகூர்த்தத்திற்கு திதியையும், நட்சத்திரத்தையும் குறித்து தருவார்கள். ★இந்தத் திதியில் தான் இந்தநட்சத்திரத்தில் தான் ஓரு ஆணும் பெண்ணும் இணைய வேண்டும் என்று சொல்வார்கள். ★ஒரு ஆணும் பெண்ணும் இணைந்து உடன் 72 மணி நேரம் கழித்து முதல் கரு உருவாகி விடும். ★அந்தக் கரு எந்த நட்சத்திரத்தில் உருவாகிறதோ சரியாக 10வது மாதத்தில் அதே நட்சத்திரத்தில் தான் அந்த குழந்தை பிறக்கும். ★உதாரணமாக திருவாதிரை நட்சத்திரத்தில் கரு உருவானால் சரியாக 10வது மாதத்தில் அதே திருவாதிரை நட்சத்திரத்தில் தான் அந்த குழந்தை பிறக்கும். ★அந்த கரு எந்த திதியில் உருவாகிறதோ அந்த திதியின் தாக்கும் அந்த வம்சத்திற்கே இருக்கும். ★கரு உருவான திதி அமாவாசை பௌர்ணமி ஆக இருந்தால் மட்டும் தான் பிறக்கும் குழந்தை ஊனமாகவோ மனவளர்ச்சிக் குறைபாடு உள்ள குழந்தையாக பிறக்கும். ★இதற்காக தான் பிறக்கும் குழந்தை நன்றாகவும் சக்தி உடையவனாகவும் பிறக்க வேண்டும் என்பதற்காகத் தான் நம் முன்னோர்கள் சாந்தி முகூர்த்தத்திற்கு திதியும் நட்சத்திரத்தையும் குறித்துக் கொடுப்பார்கள். ★நாம் பிறந்த திதி வேலை செய்யாது.நமது கரு உருவான திதி தான் வேலை செய்யும். ★நாம் எந்தத் திதியில் நம்முடைய முதல் கரு உருவானது என்பதை கண்டுபிடிக்க நாம் பிறந்த திதியில் இருந்து 9 திதிகளை கழித்தால் வரும் திதி தான் நமது தாயின் கர்ப்பப்பையில் நாம் உருவான திதியாகும்.

சண்டி ஹோமம் ஓர் அறிமுகம்

                                           சண்டி ஹோமம் ஓர் அறிமுகம்

சண்டி தேவி ஒரு கடுமையான மற்றும் சக்தி வாய்ந்த தெய்வமாக கருதப்படுகிறது. அவர்கள் உருவாக்கும் அனைத்து வாழ்வாதாரங்களையு ம் ஆதியிலிருந்து அளிக்க கூடிய ஒரு தெய்வம் சண்டி. இந்த மகா சண்டி ஹோமம் நடத்துவதின் மூலம் சாபங்கள் பழிகள் தடைகள் ஆகியவை அகழும். செல்வம் சுகாதாரம் இன்பம் ஆகியவை கிடைக்க ஆசிர்வதிக்கபடும். சண்டி தேவிக்கு பெண்கள் வழிபாடு செய்வது மிக சிறப்பாக கருதப்படுகிறது. கடவுள் சக்திகளின் அனைத்து தெய்வீக சக்தியாக சண்டி தேவியை வழிபடுகின்றனர். தேவியானவள் அண்டத்தை காப்பதில் சிறந்த தாயாக விளங்குகின்றார். தேவியானவள் அண்டத்தில் உள்ள தன்னுடைய குழந்தைகளை காக்கவும் அவர்களுக்கு ஏதேனும் தீய சக்திகளின் இடர்பாடுகள் ஏதேனும் இருந்தால் துன்பத்திலிருந்து நீக்கி நன்மை சேர்ப்பாள். அசுரர்களை அழிக்க பல்வேறு வடிவங்களை எடுத்து இருக்கும் தேவி தான் சண்டி. சாண்டி ஹோமம் என்பது ஒரு சாதாரண ஹோமம் இல்லை. இது அனுபவம் வாய்ந்த 9 வேத விற்பன்னர்களை கொண்டு செய்ய படுகின்ற ஒரு ஹோமம். இதை சரியான முறையில் பூஜைகள் நடத்தபடா விட்டாள் பயனுள்ளவையாக இருக்காது. 9 வேத விற்பன்னர்களை கொண்டு செய்ய படுகின்ற இந்த ஹோமத்தில் மந்திரங்களை தொடர்ந்து கோஷமிட்டு சொல்ல வேண்டும். இந்த மந்திரம் 13 அத்தியாயங்களை கொண்டதாக இருக்கும்.13 அத்தியாயத்தில் வழிபாடு நிறைவு செய்யபடும். சண்டி ஹோமம் என்றால் என்ன .? 1.மஹாகாளி சண்டிகை 2.மஹாலக்ஷ்மி சண்டிகை 3.சங்கரி சண்டிகை 4.ஜெயதுர்கை சண்டிகை 5.மஹா சரஸ்வதி சண்டிகை 6.பத்மாவதி சண்டிகை 7.ராஜமாதங்கி சண்டிகை 8.பவானி சண்டிகை 9.அர்தாம்பிகை சண்டிகை 10.காமேஸ்வரி சண்டிகை 11.புவனேஸ்வரி சண்டிகை 12.அக்னி துர்கை சண்டிகை 13.சிவாதாரிகை சண்டிகை இந்த 13 சக்திகளும் இணைந்த சக்தி மஹா சண்டிகா பரேமஸ்வரி. இந்த யாகங்கள் முரத்தினாலே செய்யப்படும் மார்கண்டேயரால் சொல்லப்பட்ட 700 மந்திரங்களினால் இந்த யாகம் நடைபெறும். இந்த யாகம் செய்வதனால், உலக நன்மை சத்ரு பயம் நீங்கும். லஷ்மி தேவியின் அனுக்ரஹம் கிட்டும். குழந்தைகள் படிப்பில் முன்னேற்றம். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் கைகூடும். குழந்தை பாக்கியம் கிட்டும். தொழில் முன்னேற்றம். அனைத்து காரியங்களும் வெற்றி. இந்த யாகம் நடக்கும் பொழுது மந்திரங்களை காதினால் கேட்டாலே (ஸ்ருதம் ஹரதி பாபானி ததா ஆரோக்யம் ப்ரயச்சதி) அணைத்து விதமான பாபங்களும், எந்தவிதமான நோய்களும் நிவர்த்தி ஆகிவிடும் என்று சண்டி யாகத்திலே சொல்லபடுகிறது. அதில் சில மந்திரங்கள்: கணபதி பூஜை: கணபதியின் ஆசியில் தான் இந்த பூஜை வழி நடத்தப்படும்.முதலில் கணபதியை வணங்கினாள் அனைத்து தடைகளும் நீங்கி வெற்றி கிடைக்கும்.அதனால் முதலில் கணேஷனை வணங்க வேண்டும் அனுக்கைய சங்கல்பம்: இது ஒரு புதிய சடங்கு வேள்வி செய்ய கடவுளை அனுமதிக்க வேண்டி இந்த பூஜை வழி நடத்தப்படும். இதன் மூலம் எங்கே வேள்வி நடத்தப்படவேண்டும் யாருக்காக நடத்த பட வேண்டும் என்பதை காட்டுகிறது புண்யாகவாஜனம்: இதை ஆரம்பிப்பதற்கு முன்பு மனம் இடம் உடல் ஆகியவற்றை தூய்மையாக வைத்து கொள்ள வேண்டும். வழிபடும் இடத்தை சுற்றி மா இலை கொண்டு மந்திர தண்ணீர் தெளிக்கவேண்டும் கலச ஸ்தாபனம்: கலச ஸ்தாபனம் என்பது ஒரு பானையை குறிக்கும். இதில் உலோகம் மற்றும் தண்ணீர் மூழ்க மா இலை வைக்கவேண்டும். இந்த கலசம் தேவியின் அருளை வெளிக்கொணர்வதற்காக செய்யபட்டது. ப்ரயாண சமர்ப்பணம்: இது சிவனுடைய அவதாரமாக கொண்டு இந்த பூஜை வழி நடத்தப்படும். கணபதி பூஜை: வேள்வியை தொடங்குவதற்கு முன் கணபதியை வழிபடவேண்டும். சங்கல்பம்: இடம் மற்றும் யார் என்பதை அறிந்து கொள்வதற்காக இந்த வழிபாடு. கோ பூஜை: சமஸ்கிருத வார்த்தையான கோ என்பது மாடு என்று பொருள். இந்து மதத்தில் மாடு தெய்வீக குணம் கொண்டதாக கருதப்படுகிறது. பூஜை செய்வதற்கு வைக்கப்பட்ட பொருட்கள் ஆசிர்வாதம் பெறுவதற்காக மாடுவிற்கு வைக்கபடுகிறது. சுஹாசினி பூஜை: வயதான தம்பதியிடம் ஆசிர்வாதம் பெறுவதற்காக இந்த பூஜை செய்யபடுகிறது. தம்பதி பூஜை: இதில் பூஜை செய்து வயதான தம்பதியிடம் வழங்கபடுகிறது. வயதான தம்பதியிடம் தான் கொடுக்கபடவேண்டும். பிரம்மச்சாரி பூஜை: திருமணம் ஆகாத ஒரு ஆண்மகனை கொண்டு இந்த பூஜை நடத்தபடுகிறது. பூஜையில் அவரது ஆசி இந்த பூஜை நடத்தபடுகிறது சண்டி ஹோமம்: நெருப்பு சடங்கு மந்திரங்கள் கொண்டு இந்த பூஜை நடத்தபடுகிறது. பூர்ணாகுதி: வெற்றிலை, பாக்கு, பருப்புகள், நாணயம், தேங்காய், குங்குமம், மஞ்சள், பூக்கள் இந்த பூஜையில் வைக்கபடுகிறது. மகா தீபாராதனை: சடங்குகள் அனைத்தும் முடிக்கபட்டு பூஜை தீபாராதனையுடன் முடிவடையும். ஹோமம் நடைபெறும் போது யாகத் தீயில் போடப்படும் திரவியங்கள் ஒவ்வொன்றிற்கும் ஒரு தெய்வீகப் பலன் உண்டு. சண்டி ஹோமம் நடைபெறும் போது போடப்படும் திரவியங்களின் விபரமும், அதனால் கிடைக்கும் பலன்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. 1. விளாம்பழம் – நினைத்த காரியம் ஜெயம் 2. கொப்பரைத் தேங்காய் – சகலகாரிய சித்தி 3. இலுப்பைப்பூ – சர்வ வஸ்யம் 4. பாக்குப்பழம் – ரோக நிவர்த்தி 5. மாதுளம்பழம் – வாக்குப் பலிதம் 6. நாரத்தம்பழம் – திருஷ்டிதோஷ நிவர்த்தி 7. பூசணிக்காய் – சத்ருநாசம் 8. கரும்புத் துண்டு – நேத்ர ரோக நிவர்த்தி 9. பூசணி, கரும்புத் துண்டு – சத்ருநாசம், எதிலும் வெற்றி 10. துரிஞ்சி நாரத்தை – சகல சம்பத் விருத்தி 11. எலுமிச்சம்பழம் – சோகநாசம் (கவலை தீர்த்தல்) 12. நெல் பொரி – பயம் நீக்குதல் 13. சந்தனம் – ஞானானந்தகரம் 14. மஞ்சள் – வசீகரணம் 15. பசும்பால் – ஆயுள் விருத்தி 16. பசுந்தயிர் – புத்ர விருத்தி 17. தேன் – வித்தை, சங்கீத விருத்தி 18. நெய் – தனலாபம் 19. தேங்காய் – பதவி உயர்வு 20. பட்டு வஸ்திரம் – மங்களப் பிராப்தி 21. அன்னம், பசஷணம் – சஞ்சலமின்மை, சந்தோஷம் 22. சமித்துக்கள் – அஷ்ட ஐஸ்வர்யம் 23. சௌபாக்ய திரவியங்கள், பட்டுப்புடவை, பட்டுத் துண்டு, குங்குமச்சிமிழ், சீப்பு, மஞ்சள், புஷ்பம், எலுமிச்சம்பழம், வெற்றிலை பாக்கு, நெத்துக் காய், கிராம்பு, லவங்க சாமான்கள், ஸ்ரீ அஷ்ட லசஷ்மி கடாசஷம் பெறவும், தீர்க்க சுமங்கலி பிராப்தி பெறவும் அருள் புரிகிறது. பரிகாரங்களில் மிக சிறந்து விளங்குவது ஹோமங்கள் ஆகும். தேவர்கள், சித்தர்கள், ஞானிகள், யோகிகள் தொடங்கி நாடாளும் அரசர்கள் முதல் சரித்திர காலம் தொட்டு இன்றுவரை தங்கள் இஷ்ட காரியங்களை யாகத்தின் மூலமே பூர்த்தி செய்து கொண்டனர். ஹோமத்தில் தீயில் நாம் இடும் மூலிகை பொருட்கள் தெய்வத்திற்கு உணவாகின்றன. இந்த ஹோமத்தீயில் இடும் மூலிகைக்கு சக்திகள் உள்ளன. உதாரனமாக புல்லுருவி சர்வ வசியத்தையும், தேள் கொடுக்கு இராஜ வசியத்தையும், செந்நாயுருவி ஆண் வசியத்தையும், நில ஊமத்தைப பெண் வசியத்தையும், வெள்ளெருக்கு சத்ரு வசியத்தையும், சீந்தில் தேவ வசியத்திற்கும் இன்னும் பலப்பல மூலிகைகள் பல காரயங்களுக்கும் பயன்படுகிறது. ஹோமத்தின் போது புனித நீரால் கும்பத்தை நிரப்பி, அலங்கரித்து வேண்டிய தெய்வங்களை அதில் ஆவாஹனம் செய்து (வரவழைத்து), குத்து விளக்கில் அஷ்ட லட்சுமிகளை ஆவாஹனம் செய்து, ஹோமத்தீயில் தெய்வங்களை வசியம் செய்து , பால், பழம், தேன், மூலிகை சமித்துகளை ஹோமத்தில் தெய்வத்திற்கு உணவாக கொடுத்து, உரிய மந்திரமோதி நம் குறைகளை தேவைகளை தெய்வத்திடம் கூறும் போது தெய்வங்கள் அதனை ஏற்று நமக்கு மகிழ்வுடன் பலனை தருகின்றன.
கலியுகத்தில் சண்டி தேவியும் கணேச பெருமானும் விரைவில் நன்மையை தருவார்கள் என்பது பழமொழி.
துர்க்கா தேவி தான் சண்டி என்றும் சண்டிகா என்றும் அழைக்கப்படுகிறாள். துர்க்கா தேவியின் பெருமையை கூறும் நூல்களுள் தேவி மஹாத்மியம் மிக சிறந்தது. இது மார்க்கண்டேய புராணத்தில் அடங்கியது.
எழுநூறு மந்திரங்கள் கொண்டது. ஆகவே இந்த நூலை சப்த சதி என்றும் கூறுவர். இந்த மந்திரங்களால் தான் சண்டி ஹோமம் செய்ய படுகிறது.
தினசரி அல்லது நவராத்திரி நாட்களில் இதை பாராயணம் செய்து வந்தால் சகல காரிய சித்தியும் உண்டாகும். குறிப்பாக துர்க்கா சப்த ஸ்லோகி சப்த சதியின் சக்திமிக்க மந்திரங்கள் ஆகும்.
சைய்த்ர வம்சத்தில் தோன்றிய சுரதன் எனும் அரசன் வினை வசத்தால் நாடிழந்து கொலாவித்வம்சி எனும் பகைவரால் துரத்தப்பட்டு காட்டை அடைந்தான். அங்கும் தன் நாடு, மனைவி, மக்கள் இவற்றை நினைத்து வருந்தினான். அங்கே வாடிய முகத்தோடு ஒரு வைசியனை கண்டு விசாரித்ததில் அவனும் தன்னை போலவே இருப்பதை உணர்ந்து இருவரும் ஒரு முனிவரை அணுகி அறிவுள்ளவராக இருப்பினும் எங்களுக்கு நாடு, மனைவி, மக்களிடம் அன்பு உண்டாக காரணம் யாது என்று கேட்டனர்.
அம்முனிவர் மஹா மாயையினால் நீங்கள் மயங்கிநீர்கள், அந்த மாயை தான் பந்த மோட்சத்திற்கு காரணம். மாயை ஞானிகளின் மனதையும் மயக்கும் திறமையுடையது என்றார். அரசன் மாயை பற்றி வினவினான். மாயை நித்யயானாலும் தேவர்களின் காரியத்திற்காக தோன்றும், அப்போது உற்பதியனதாக சொல்வர்.
முன்னொரு காலத்தில் விஷ்ணு யோக நித்திரையில் ஆழ்ந்திருந்த பொழுது அவருடய காது மலத்திலிருந்து மது கைடபன் என்று இரு அசுரர் தோன்றி திருமாலின் நாபிகமலத்திலுள்ள பிரம்ம தேவனை கொல்ல முற்பட்டனர்.
பயந்த பிரம்மன் விஷ்ணுவின் யோகமாயை ராத்ரி ஸுக்தம் என்ற ஸ்துதியால் துதித்தார்.
யோக மாயை விலகி விஷ்ணு சக்தி பெற்று அவ்வசுரர்களுடன் போரிட்டார்.
மயங்கிய அசுரர் வரம் அளிக்கிறோம் பெற்று கொள் என்றனர். "நீங்கள் என்னால் கொல்ல படவேண்டும் இதுவே என் வரம்" என்று விஷ்ணு கூற, வஞ்சிக்க பட்ட மது கைடபர்கள் எங்கும் ஜலமயமாக இருப்பதை கண்டு, "ஜலத்தால் நனையாத இடத்தில எங்களை கொள் என்றனர். விஷ்ணுவும் தனது மடியில் வைத்து அவர்களை கொன்று மதுசூதனன் என பெயர் பெற்றார். கைடபஜித் என்ற பெயர் மாலுக்கும், யோகமாயை விலக்கி அவருக்கு சக்தி உண்டாக்கினமையால் சக்திக்கு மதுகைடபஹந்த்ரி என்றும் பெயர் விளங்குகிறது.
மகிஷாசுரனால் துன்புறுத்தப்பட்ட தேவர்கள் பிரம்மனின் தலைமையில் மாலிடமும், சிவனிடமும் முறையிட அப்போது சகல தேவர்களின் சரீரங்களில் உள்ள சக்திகள் யாவும் வெளிப்பட்டு ஒன்று சேர்ந்த ஒரு தேவியின் உருவம் பெற்றது. தேவர்கள் யாவரும் தங்களது அனைத்து ஆயுதங்களையும், படைகளையும் தேவிக்கு தந்தனர். அன்னை போருக்கு ஆயத்தமானாள்.
மகிஷாசுரன் போர் தொடுத்தான். கோடிகணக்கான யானை, தேரில் குதிரை, காலாட்படைகளுடன் வந்து சிக்ஷுரன், சாமரன், உதக்ரன், மஹாஹநு, அசிலோமன், பாஷ்கலன், பிண்டாலன் முதலிய அசுர சேனாதிபதிகள் கத்தி, தோமரம், பிண்டிபாலம், வில், வேல் சூலம் முதலிய பல ஆயுதங்கள் கொண்டு தேவியுடன் போரிட்டு தோற்றனர்.
வாகனமாகிய சிங்கம் கோடனுக்கோடி பேரை கொன்றது. அசுரர்கள் உடலின் உறுப்புக்களை இழந்து பல திக்குக்களில் ஒட்டமெடுத்தனர். போர்களத்தில் குருதி வெள்ளம் நிரம்பி செல்ல முடியாமல் கடல் போல் சூழ்ந்தது. சேனைகள் நாசமடைந்தது கண்ட சிக்ஷுரன், சிங்கத்தை அடித்து அம்பிகையை வாளால் வெட்டினான். ஆனால், கத்தி தூள்த்தூள் ஆனது.
யானை மீது வந்த அசுரனை பூமியில் தள்ளி சிங்கமே அவனை கொன்றது. முற்கூறிய அத்தனை சேனை தலைவர்களும் மாண்டனர். சைதன்யம் அழியவே அசுர அரசன் எருமை மாட்டின் உருவம் கொண்டு கொம்பாலும், வாலாலும், முகத்தின் அசைவிநாலும், குளம்பினாலும் தேவியின் பல கணங்களை போரிட்டு வீழ்த்தினான். தேவி பாசத்தால் அவனை கட்டிய போது சிங்க ரூபமாக, யானை ரூபமாக, மனித ரூபமாக எல்லா ரூபங்களிலும் போரிட்டு முடிவில் எருமை ரூபத்தோடு போரிட்டான். தேவி வீரபானம் அருந்தி அவன் கழுத்தில் காலை ஊன்றி, சூலத்தால் அடித்து, வாளால் வெட்டி வீழ்த்தினாள்.
தேவர்கள் தேவியை துதித்து சூலேனயாகி என்று தொடங்கிய நான்கு ஸ்லோகங்களும் கவசமும் நீயே....
உலகின் படைத்தல், காத்தல், அழித்தல் இவைகளுக்குக் காரணமும் நீயே, உன்னை சேவிப்போருக்கு வறுமை, பிணி, துக்கம் உண்டாகாது.
பக்தரிடம் தயையும், பகைவரிடம் உன் வீரமும் ஒப்ப்றன. நீயே லக்ஷ்மி, நீயே கௌரி, நீயே துர்க்கை, எங்களை எவ்வகையிலேனும் எங்கள் உடலின் எல்லா இடங்களிலும் துன்பமின்றி காக்க வேண்டும் என்று மலர்களால் அர்ச்சித்தனர்.
மகிழ்ந்து பிரசன்னமான தேவியிடம் எங்களுக்கு எந்த குறையும் இல்லை, ஆனாலும் உன்னை நினைத்தபோதெல்லாம் எங்களை காப்பாயாக....
மேலும், இந்த ஸ்தோத்திரம் துதிப்போருக்கெல்லாம் சகல வித நன்மையும் அருள வேண்டும் என்று துதித்தனர். அவ்விதமே அருள் செய்து அந்த மகிஷாசுரமர்த்தினி மறைந்தாள்.
இது முதல் கடைசி வரை உத்தம சரிதம் எனப்படும். பின்னொருக்காலத்தில் சும்பநிசும்பர்களால் துன்புறுத்தப்பட்ட தேவர்கள் இமயம் சென்று முன்பு தேவி வரம் கொடுத்ததை நினைத்து துதித்தனர்.
இந்த ஸ்துதி தேவி ஸ்துதி எனப்படும்.
கங்கையில் நீராட வந்த பார்வதியின் சரீரத்திலிருந்து ஒரு தேவி தோன்றினாள். கொசத்திலிருந்து தோன்ரினமையால் கௌசீகி என பெயர் பெற்றால்.
கௌசீகி தோன்றிய பிறகு பார்வதி கருப்பாக ஆகி *காளிகா என பெயர் பெற்றால். கௌசீகியின் அழகு ரூபத்தை கண்ட ஒற்றர் இருவர், சும்ப நிசும்பர்களிடம் சென்று அவள் அழகை வர்ணித்து சிறந்த பொருட்க்களுக்கு இடமாக இருக்கும் அரசரிடத்தில் சிறந்த பெண்மணியும் இருக்க வேண்டும் என்றனர்.
சபலமடைந்த அரசன் சுக்ரீவன் என்ற தூதனை தேவியிடம் அனுப்பினான். அவன் அசுர அரசனின் பெருமைகளை கூறி தேவியை வரும்படி அழைக்கிறான். அதற்க்கு தேவி " என்னை போரில் வேல்பவனையே நான் மணப்பதாக முன்பே உறுதி கொண்டேன், ஆதலில் அசுரர் என்னை போரில் வென்று கைபற்றட்டும்" என்றாள்.
"தேவி கர்வம் கொள்ளாதே, அசுரர் பலசாலிகள் பிறகு அவமானம் அடைவாய்" என்று தூதன் மறுமுறை கூறினான்.
"அறிந்தோ, அறியாமலோ நான் சபதம் பூண்டுவிட்டேன், என் உறுதி மாற்ற முடியாதது, அவர்களை சீக்கிரம் வரச்சொல்" என்றால் தேவி.
சும்பாசுரனால் ஏவப்பட்ட தூம்ரலோசனன் தேவியை வரும்படி அழைக்கிறான். "நீ பலவான் பலவானால் அனுப்பப்பட்டவன், சேனையுடன் வந்துள்ளாய், பலாத்காரமாய் என்னை இழுத்து செல்லலாம்" என்றாள்.
அசுரன் ஆவேசத்துடன் ஓடி வரும் பொழுது ஹூங்காரத்தால் அவனை மடிய செய்தாள். சேனை யாவும் வாகனமாகிய சிங்கத்தால் அழிந்தது. அசுர மன்னன் சண்டன் முண்டன் என்ற இரு அசுரர்களை மறுபடியும் தேவியிடம் அனுப்பினான்.
வந்த சண்ட முண்டர்களை கண்டு கோபித்த கௌசீகியின் நெற்றியிலிருந்து காளி தோன்றினாள்.
கையில் கத்தி குழிந்த கண்கள் புலித்தோல் ஆடை அகன்ற வாய் நாக்கை நீட்டி அடிக்கடி தொங்கவிடுகிறாள், பயங்கரமான சப்தம், இப்படிய தோற்றத்துடன் காளி பல ஆயுதங்கள் கொண்டு அசுர படையெல்லாம் அழித்து சண்ட முண்டர்களையும் கொன்று, சண்டனுடைய தலையையும், முண்டனுடைய முண்டத்தையும் அம்பிகை முன் காணிக்கையாக்கி வணங்கினால், "கௌசீகி சண்ட முண்டர்களை கொன்றமையால் நீ சாமுண்டா என்ற பெயருடன் விளங்குவாயாக" என்று அருளினாள்....
பின் கூட்டமாக சகல அசுர அரசர்களும் ரக்தபீஜன் என்ற அசுரனை துணையாக கொண்டு வருகின்றனர். ரக்தபீஜன் உடலிலிருந்து ரத்தம் பூமியில் விழுமாயின் அவனை ஒத்த பலமுடைய அசுரர்கள் ஒரு சொட்டிற்கு ஒருவர் வீதம் உண்டாவர் என்பது அவன் பெற்ற வரம்.
தேவி சிவனை அசுரரிடம் தூது அனுப்பினால். "அசுரர் பாதாளம் செல்லட்டும், இந்திரன் த்ரிலோகத்தை ஆளட்டும், இல்லாவிட்டால் போரில் என்னை சூழ்ந்துள்ள நரிகள் உங்களை தின்று திருப்தி அடையும்" என்ற தேவியின் வாக்கை கேட்ட பிறகும் அசுரர் போரிட்டனர்.
சக்திகளால் அடிபட்ட அசுரனின் ரத்தத்திலிருந்து பல அசுரர் தோன்ற உலகம் நிறைந்து விட்டது. தேவர் பயந்தனர். அம்பிகை சாமுண்டா தேவியை அழைத்து, "நான் அவனை அடிக்கிறேன், பெருகுகின்ர ரத்தத்தை நீ கீழே விழாதபடி பருகு, அதனால் அவன் ரத்தமின்றி இறப்பான்" என்றாள்.
சாமுண்டா தேவி அப்படியே செய்யவும் அவன் இறந்தான். தேவர் மகிழ்ந்தனர். சிவனை தூதாக அனுப்பிய அம்பிகைக்கு சிவா தூதி என பெயர் உண்டாயிற்று.
தேவிக்கும் சும்ப நிசும்பர்களுக்கும் கடும் போர் நடந்தது. தேவி நிசும்பனுடைய ஹ்ருதயத்தில் குத்தின பொழுது அங்கிருந்து அசுரன் ஒருவன் தோன்றினான். அவன் தோன்றும் போதே தேவியின் கத்திக்கு இறயனான். மகேஸ்வரி, வாராகி முதலிய சக்திகளும் பல அசுரர்களை வீழ்த்தினர்.
தம்பி இறந்தது கண்ட சும்பன் பிறருடைய பலம் கொண்டு சண்டை இட்டு வீண் கர்வம் கொள்ளாதே என்று கூறினான். அதற்க்கு தேவி பதில் சொன்னாள் "உலகில் நான் ஒருவளே இவர்கள்லெல்லாம். என் விபூதியே என்னுள் இவர்களை அடக்கிகொள்கிறேன்" என்று கூறி தன்னுடலுள் யாவரையும் அடக்கி கொண்டாள். சும்பனும் தேவியும் பூமியிலும் வானத்திலும் மாறி மாறி சண்டை இட்டனர். இறுதியில் தேவி சூலத்தால் குத்தி வீழ்த்தினாள். இதுவரை இருந்த பல அபசகுனங்கள் விலகின. காற்று இனிமையாக வீசியது, கதிரவன் ஒளிவிட்டான்.
இவ்வத்தியாயம் நாராயணி ஸ்துதி எனப்படும். சரணடைந்தவர்களை காப்பவள் நீயே, உலகிற்கு ஆதாரமாய் இருப்பவளே, சுவர்க்க மோட்சங்களையும் அளிப்பவளே, பஞ்சக்ருதியும் புரிபவளே.
மகேஸ்வரி, வைஷ்ணவி, வாரகி, நாரஸிம்ஹி, ஐந்த்ரி, சிவதூதி, கௌமாரி, சாமுண்டா, பிராம்மணி முதலிய ரூபங்களுடன் அசுரரிடம் போரிட்டு உலகை காத்தவளே திருடன் முதலியவர்களிடம் இருந்தும் எங்களை காப்பவளே, உனக்கு வணக்கம் என்று துதித்தனர்.
தேவர்களின் வேண்டுகோளுக்கு இறங்கி மூவுலகிற்கும் சகல வித நன்மையும் அளிப்பதாக தேவியே கூறினாள்.
நந்தா விந்த்யசலவாசிணி, பீமா பிரைமரி துர்கா, ரக்ததந்திகா சதாக்ஷி முதலிய பல அவதாரங்கள் எடுத்து தேவ சத்ருக்களை அழிப்பேன், அனைத்துயிரையும் காப்பேன் என்கிறாள்.
தேவி மகாத்மியமாகிய இந்த என் சரிதத்தை படிப்போருக்கு எல்லா வித துன்பங்களையும் பேக்குவேன், பரம புருஷார்த்தங்களையும் அளிப்பேன்.
அறிந்தோ அறியாமலோ செய்யப்படும் பூஜை, ஹோமம், ஜபம், பாரணங்களால் மிகவும் மகிழ்வேன்.
தேவி மஹாத்மியம் படிக்குமிடத்தில் நான் எப்போதும் நடமாடுவேன்.
வம்சம் அபிவ்ருத்தி அடையும். என்னை நோக்கி எனக்காக தூப தீபமிட்டு நைவேத்யம், அபிஷேகம் பல வித தானங்கள் எல்லாம் செய்து வருட கணக்காக செய்கின்று பூஜையினால் எனக்கு ஏற்படும் மகிழ்ச்சியை, ப்ரீத்தியை தேவி மகாத்மியத்தை ஒரு தரம் மிகுந்த பக்தியுடன் படித்தால் அல்லது படிக்க கேட்டாலே யான் அதைவிட சந்தோஷித்து மகிழ்வேன்.
தேவி ஸ்துதி, பிரம ஸ்துதி, பிர்மரிஷி ஸ்துதி இவைகளை ஜபிபதால் நல்ல புத்தி உண்டாகும்.
என்னை நினைத்த மாத்திரத்தில் எல்லா விதத்திலும் எல்லா வித ஆபத்திலிருந்தும் காப்பேன் என கூறி மறைந்தாள்.
தேவர்கள் சுவர்க்க லோகம் சென்றனர். இந்த தேவி தான் உங்களுக்கு மயக்கத்தை உண்டாக்கி நாடு, மனைவி, மக்களிடம் அன்பு கொள்ள செய்தவள். அவளை வணங்கி பூஜித்து நற்கதியை அடையுங்கள் என்று முனிவர் கூறி முடித்தார்.
தேவி மஹாத்மியம் கேட்ட சுரதன் என்ற வேந்தனும், சமாதி என்ற வைசியனும் நதியின் திட்டில் மூன்ராண்டு காலம் நியமத்துடன் மண்ணால் உருவம் செய்து வைத்து தேவியை பூஜித்து வந்தனர். அம்பிகை தோன்றினாள், என்ன வரம் வேண்டும் என கேட்டாள்.
வைசியன் வைராக்யம் மேலிட்ட ஞானத்தை வேண்டினான், அரசனோ மறுபிறவியிலும் பக்தி நீங்காமலிருக்கும்படி இழந்த அரசை வேண்டினான். அம்பிகை அவ்விதமே அருளினாள்.
அவ்வரசனே மறுப்பிறப்பில் சூரியனுக்கு பிறந்த சாவர்ணி என்ற மனுவாக ஆனான். எழுபத்தி ஒரு தேவயுகம் கொண்டது ஒரு மனுவின் காலம். இதையே மன்வந்திரம் என்று கூறுவது வழக்கம்.
காமதேனுவை போன்ற எல்லாவற்றையும் சளைக்காமல் கொடுக்கவல்ல தேவியை வழிபட்டு அவள் அருளுக்கு பாத்திரராகுதல் மனித பிறவி எடுத்ததன் பயன்.
ஆதலில் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் இந்த தேவி மஹாத்மியத்தை படியுங்கள், அத்தோடு இயன்றவரை துர்க்கா சப்தச்லோகியையும் பாராயணம் செய்து வந்தால் மகாசக்தியின் பேரருளால் அனைத்து நலன்களும் அசுரவேகத்தில் சித்திக்கும்..

Show less

ராமேஸ்வரம்சென்று


 ராமேஸ்வரம்சென்று 

 செல்வதற்குமுன் குலதெய்வ கோயிலுக்கு செல்ல வேண்டும் அல்லது இஷ்ட தெய்வ வழிபாடு பிரார்த்தனைக்கு வேண்டுதல் வைக்க வேண்டும் முதலில் ராமநாதபுரத்தில் இருந்து சரியாக 17 வது கிலோ மீட்டரில் வடக்கு பகுதியில் உள்ளது தேவிபட்டணம் என்ற கோவிலுக்கு செல்ல வேண்டும் கடலுக்குள் இருக்கும் நவபாஷாண நவகிரக சிலைகள் உள்ளது மூன்று முறை அல்லது ஒன்பது முறை சுற்றி வலம் வந்து சிறப்பு பூஜைகள் செய்ய வேண்டும் அங்கிருந்து மீண்டும் ராமநாதபுரம் வந்து அங்கே இருந்து தெற்கே 17 கிலோ மீட்டர் பயணம் செய்தால் அங்கே சேதுகரை ஆஞ்சநேயர் கோயில் உள்ளது அங்கே தசரத மகாராஜா சக்கரவர்த்தி குழந்தை வரத்திற்காக யாகம் செய்த இடம் கடலில் ஸ்நானம் செய்வது நலம் அல்லது தீர்த்தம் தலையில் தெளித்து வரலாம் அங்கே உள்ள ஆஞ்சநேயரை வழிபடுவதுசிறப்புஅங்கிருந்து இரண்டு கிலோ மீட்டர் அருகில் திருப்புல்லாணி ஆதி ஜெகநாதர் கோவில் உள்ளது ஸ்ரீ ராமர் பட்டாபிஷேகம் செய்த இடம் குழந்தை இல்லாதவர்கள் குழந்தை பிறப்பில் பிரச்சனை உள்ளவர்கள் திருப்புல்லாணில்சிறப்புவழிபடு செய்வது நலம் பால் அபிஷேகம் இங்கு சில நேரங்களில் பாலபிஷேகம் தருவார்கள் இங்கே உள்ள அறநிலைத்துறை கேளுங்கள் சரியான பதில் கிடைக்கும் நான்காவதாகஇரவில்  ராமேஸ்வரத்தில் தங்கிஅம்மாவாசை அன்றுஅதிகாலையில்குறைந்தது அரை மணி நேரமாவது காலையில் சூரிய உதயத்தில்அக்னி தீர்த்தத்தில்மகிழ்ச்சியாக நீராடுவது சிறப்பிலும் சிறப்பு   அதற்கடுத்து ராமேஸ்வரம் கோயிலில் அதிகாலையில் நாலரை மணி அளவில் பாவங்கள் தீர்க்கக்கூடிய ஸ்படிகலிங்க பூஜை நடக்கும் பூஜையை முடித்துக்கொண்டு பிறகு தனுஷ்கோடி சென்றுகடல் மணலில் லிங்கம் செய்து  பூஜை செய்ய வேண்டும் மணல் லிங்கத்தை மீண்டும் கடலிலே விட்டுவிட்டு வரவேண்டும்  பிறகு ராமேஸ்வரம் வந்துயாருக்காவது திதி கொடுக்க வேண்டுமென்றால் குறைந்த செலவில் பிதுர்தர்ப்பணம் செய்து கொள்ளவும்  அன்னதானம்பசுவுக்குஅகத்திக்கீரை பழவகைகள் கொடுக்கலாம்இல்லாத ஏழைகளுக்கு உணவு வாங்கி கொடுக்கலாம் முடிந்தவரை தர்மம் செய் கருமம் விலகும்   அதற்கு அடுத்தது 22 விதமான தீர்த்தங்கள் உண்டுகடைசி தீர்த்தம் கோடி தீர்த்தமாடி முடிந்து ராமநாதசாமிஇறைவனை தரிசித்து விட்டு அம்பாள் பர்வதா பத்தினி சன்னதிக்கு சென்று அம்பாளை தரிசிக்க வேண்டும்அம்பாள் சன்னதியில்அம்பாளின் பீடத்திற்கு அடியில்ஆதிசங்கரரால் பிரதிஷ்டை செய்யப்பட்டஸ்ரீ சக்கரம் இங்குஉள்ளது இங்கு வந்து வணங்குபவர்களுக்கு எல்லாம்பிரார்த்தனை நிறைவேற மூன்றுமுறை அம்பாள் கோவிலில் சுற்றி வர வேண்டும்அம்பாள் சன்னதியில் குறைந்தது பத்து நிமிடமாவது அமர்ந்து குறைகளை சொல்லி வாருங்கள் கோவிலின் இரண்டாவது பிரகாரத்தில்நடராஜர் சன்னதிக்கு நேர் பின்புறம் பதஞ்சலி மகரிஷி உடைய ஜீவசமாதிஉள்ளதுதீபமும் போட்டோவும் இருக்கும் குறைந்தது 10 நிமிடமாவது தியானம் செய்யுங்கள்   முடிந்தவரை தர்மம் செய் கருமம் விலகும்கோவிலில் இருந்து திரும்பியவுடன் குலதெய்வ கோயிலில் சென்று வழிபடுங்கள்

Saturday, 13 March 2021

பணம் புகழ் பதவி கிடைக்ககனகதாரா ஸ்தோத்திரம் |

                                        பணம் புகழ் பதவி கிடைக்க

கனகதாரா ஸ்தோத்திரம் |

கனகதாரா ஸ்தோத்திரத்தைப் பாடுவோர் அனைவருக்கும் நல்லருள் கிடைக்கும். நாம் இந்த ஸ்தோத்திரத்தை தினமும் ஒவ்வொன்றாக 108 முறை சொல்லி, ஸ்ரீ மஹாலட்சுமி தேவியை மனமுருக வேண்டினால் நம் வாழ்வு வறுமையில்லாமல் வளமான வசதிகளுடனும். எல்லாவித ஐஸ்வர்யங்களுடனும் சுபிட்சமாக இருக்கும் என்பது உறுதி..!

1.மாலவன் மார்பில் நிற்கும் மங்கலக் கமலச் செல்வீ!
மரகத மலரில் மொய்க்கும் மாணிக்கச் சுரும்பு போன்றாய்
நீலமா மேகம் போல நிற்கின்ற திருமாலுந்தன்
நேயத்தால் மெய் சிலிர்த்து நிகரிலாச் செல்வம் கொண்டான்!
மாலவன் மீது வைத்த மாயப்பொன் விழிஇ ரண்டை
மாதுநீ என்னிடத்தில் வைத்தனை என்றால் நானும்
காலமா கடலில் உந்தன் கருணையால் செல்வம் பெற்று
கன்ணிறை வாழ்வு கொள்வேன் கண் வைப்பாய் கமலத்தாயே…!

2 .நீலமா மலரைப் பார்த்து நிலையிலா(து) அலையும் வண்டு
நிற்பதும் பறப்ப தும்போய் நின்விழி மயக்கம் கொண்டு
கோலமார் நெடுமால் வண்ணக் குளிர்முகம் தன்னைக் கண்டு
கொஞ்சிடும் பிறகு நாணும் கோதையார் குணத்தில் நின்று!
ஏலமார் குழலி அந்த இருவிழி சிறிது நேரம்
என்வசம் திரும்பு மாயின் ஏங்கிய காலம் சென்று
ஆலமா மரங்கள் போல அழிவிலாச் செல்வம் கொண்டு
அடியவன் வாழ்வு காண்பேன் அருள்செய்வாய் கமலத்தாயே…!

3. நற்குடி பிறந்த பெண்கள் நாயகன் தனைப் பார்த்தாலும்
நாணத்தால் முகம்புதைத்து நாலிலோர் பாகம் பார்ப்பார்
பற்பல நினைத்தபோதும் பாதிக்கண் திறந்து மூடி
பரம்பரைப் பெருமை காப்பார்
பாற்கடல் அமுதே! நீயும் அற்புத விழிகளாலே
அச்சுத முகுந்தன் மேனி அப்படிக் காண்பதுண்டு
ஆனந்தம் கொள்வதுண்டு
இப்பொழு(து) அந்தக் கண்ணை என்னிடம் திருப்பு தாயே
இருமையும் செழித்து வாழ இகத்தினில் அருள்வாய் நீயே…!

4. மதுஎனும் பெயரில் வாழ்ந்த மனமிலா அரக்கன் தன்னை
மாபெரும் போரில் வென்ற மாலவன் மார்பி லாடும்
அதிசய நீலமாலை அன்னநின் விழிகள் கண்டு
அண்ணலும் காலந்தோறும் ஆனந்தம் கொள்வதுண்டு !
பதுமநேர் முகத்தினாளே! பதுமத்தில் உறையும் செல்வி!
பார்கடல் மயக்கும் கண்ணை பேர்த்தெடுத்தென்மேல் வைத்தால்
பிழைப்பன்யான் அருள் செய்வாயே,
பேரருள் ஒருங்கேகொண்ட பிழையிலாக் கமலத்தாயே…!

Kanakathaara
5. கைடப அரக்கன் தன்னை கடித்தநின் கணவன் மார்பு
கார்முகில் அன்னந்தோன்றி கருணைநீர் பொழியுங் காலை
மைதவழ் மார்பில் வீசும் மயக்குறும் மின்னல் ஒன்று!
மயக்குவான் திருமால்; பின்னர் மகிழ்வநின் விழிதா னென்று!
செய்தவப் பிருகு வம்சச் சேயெனப் பிறந்து எங்கள்
திருவென வளர்ந்த நங்காய்! தினமும்யாம் வணங்கும் கண்ணாய்
கொய்தெடு விழியை என்மேல் கொண்டு வந்தருள் செய்வாயே
கொற்றவர் பணிகள் செய்யும் கோலமார் கமலத் தாயே..!

6. போரினில் அரக்கர் கூட்டம் புறங்கண்ட நெடியோன் தன்னை
போரின்றிக் குருதியின்றிப் புறங்காணத் துடித்து வந்த
மாரனை ஊக்குவித்த வாளெது கமல நங்காய்
மங்கையின் விழிகளன்றோ! மாலவன் தன்னை வென்ற
தேரிய மாரன் உன்னைத் தேரெனக் கொண்டதாலே
திருமலை வேங்கடேசன் திறத்தினை வென்றான் அன்றோ!
கூரிய விழியாய் உன்றன் குறுவிழி தன்னை என்பால்
கொண்டுவந் தால்யான் உய்வேன் கொடுத்தருள் கமலத் தாயே…!

7. மாந்தருக்(கு) அருள்வேன் என்று மலர்மகள் நினைத்தால் போதும்
இந்திர பதவி கூடும்; இகத்திலும் பரங்கொண் டாடும்;
இணையறு செல்வம் கோடி இல்லத்தின் நடுவில் சேரும்
சந்திரவதனி கண்கள் சாடையிற் பார்த்தாற் போதும்
தாய்விழிப் பட்ட கல்லும் தரணியில் தங்கமாகும்
எந்தவோர் பதவி வேட்டேன்! எளியனுக்(ககு) அருள் செய்வாயே!
இகத்தினில் செல்வம் தந்து இயக்குவாய் கமலத் தாயே…!

8. எத்தனை பேர்க்குக் கிட்டும் இறையருள் ஆன்மசாந்தி
இகமெனும் கடலில் வீழ்ந்து எவர்பிழைத் தார்கள் நீந்தி
தத்துவப் படியே யாவும் தலைமுறை வழியே கிட்டும்
தவமெனும் முயற்சியாலெ பவவினை தணிந்து போகும்
அத்தனை முயற்சி என்ன அன்ணல்மா தேவி கண்ணில்
அருள்மழை வந்தாற் போதும் அகம்புறம் முக்தி யாகும்
இத்தனை சொன்ன பின்னும் இன்னுமா தயக்கம் தாயே
இல்லத்தைச் செல்வமாக்கி இன்னருள் புரிவாய் தாயே…!

9. நீருண்ட மேகக்கண்கள் நிழலுண்ட கரிய கூந்தல்
நேர்கொண்ட மாந்தர் வீட்டில் நிலைகொண்ட செல்வப் பந்தல்!
சீர்கொண்ட அமுதச்செல்வி சில்லென்ற காற்றுப் பாய்ந்தால்
சேர்கின்ற மேகத் தண்ணீர் சிதறுண்டு பாய்வதைப் போல்
வேர்கொண்ட பாவமேனும் வினைகொண்ட பாவமேனும்
வேய்கொண்ட தோளினாய் உன் விழிகண்டால் தீர்ந்து போகும்!
தேர்கொண்டேன் புரவி இல்லை செல்வமாம் புரவியாலே
திருவருள் செய்வாய் நீயே தேப்பெரும் கமலத்தாயே..!

10. ஆக்கலும் அழித்தல் காத்தல் அருள்நிறை இறைவன் சக்தி
அன்னவன் தோளில் நீயே அனைத்துமாய் விளங்கும் சக்தி
ஆக்கலில் வாணியாவாய்; அளித்தலில் திருவாய் நிற்பாய்
அழிக்கின்ற வேளை வந்தால் அந்தமில் துர்க்கை யாவாய்
தீக்கொண்ட கரத்து நாதன் திருப்பரா சக்தி யாக
திரிபுரம் ஏழுலோகம் திருவருள் புரிந்து நிற்பாய்
வாக்குயர் கமலச் செல்வி வாடைநீ, தென்றல் நீயே
வளமென இரப்போர்க்கெல்லாம் வந்தருள் புரிகின்றாயே..!

11. வேதத்தின் விளைவே போற்றி! வினைப்பயன் விளைப்பாய் போற்றி
சீதத்தா மரையே போற்றி! செம்மைசேர் அழகே போற்றி
கோதைப்பண் புடையாய் போற்றி ! குளிர்ந்ச்தமா மழையே போற்றி
ஓர்தத்துவத்தில் நிற்கும் உமையவள் வடிவே போற்றி
பாதத்தைக் கமலம் தாங்கப் பல்லுயிர் காப்பாய் போற்றி
நாதத்து நெடியோன் கொண்ட நங்கை நீ போற்றி போற்றி
பாதத்தில் சிரசை வைத்துப் பணிகின்றேன் போற்றி போற்றி
மாதத்தில் ஒருநாள் கூட மறந்திடாய் போற்றி போற்றி…!

12. அன்றலர் கமலம் போன்ற அழகிய வதனி போற்றி
அலைகடல் அமுதமாக அவதரித் தெழுந்தாய் போற்றி
குன்றிடா அமுதத்தோடு கூடவே பிறந்தாய் போற்றி
குளிர்ந்தமா மதியினோடும் குடி வந்த உறவே போற்றி
மன்றத்து வேங்கடேசன் மனங்கவர் மலரே போற்றி
மாயவன் மார்பில் நின்று மயிலெனச் சிரிப்பாய் போற்றி
என்றைக்கும் நீங்காதாக இருக்கின்ற திருவே போற்றி
எளியவன் வணங்குகின்றேன் இன்னருள் போற்றி போற்றி…!

13. தாமரை மலரில் நிற்கும் தளிரன்ன திருவே போற்றி
தாமரை வதனங் கொண்ட தங்கமா மணியே போற்றி
தாமரை கரத்தில் ஏந்தித் தவமென நிற்பாய் போற்றி
தாமரைக் கண்ணன் காக்கும் தரணியைக் காப்பாய் போற்றி
தாமரை போலே வந்த தவமுனி தேவர்க்கெல்லாம்
தாமரைக் கைகள் காட்டி தயைசெயும் திருவே போற்றி
தாமரைக் கண்ணால் செல்வம் தந்தருள் புரிவாய் போற்றி
தாள், மறை, நானோ வார்த்தை; தர்மமே போற்றி போற்றி..!

14. பெண்ணெனப் பிறந்தாயேனும் பெரும்திறன் கொண்டாய் போற்றி
பிருகுவம் சத்தில் வந்த பீடுடை வதனம் போற்றி
தண்ணளி வேங்கடத்தான் தழுவிடும் கிளியே போற்றி
தத்துநீர்க் குளத்தில் ஆடும் தருணியே லக்ஷ்மீ போற்றி
சித்திரக் கொடியே போற்றி! செம்மணி நகையே போற்றி
ஸ்ரீதரன் திருப்பா தங்கள் சேவைசெய் குயிலே போற்றி
பத்தினிப் பெண்டிர் தம்மைப் பார்வையில் வைப்பாய் போற்றி
பக்தருக்(கு) அருள்வாய் போற்றி! பணிந்தனம் போற்றி போற்றி..!

15. கண்களைப் பறிக்கும் காட்சி கவிந்தநின் வடிவம் போற்றி
கமலப்பூ வதனம் போற்றி! கமலமா விழிகள் போற்றி
மண்ணிலும் விண்ணு ளோர்க்கும் மங்கலம் நிறைப்பாய் போற்றி
மண்டல இயக்கத் திற்கே மந்திர(ம்) ஆனாய் போற்றி
விண்ணவர் வணங்கும் தேவி விந்தையின் மூலம் போற்றி
விரிமலர் கண்ணன் தேவன் விரும்பிடும் நகையே போற்றி
எண்ணிய படியே உன்னை ஏத்தினேன் போற்றி போற்றி
இசைபட வாழ வைப்பாய் இலக்குமி போற்றி போற்றி…!

16. மைவழிக் குவளக் கண்ணாய் வரையிலாத் திருவே போற்றி
வானவர் மண்ணோர்க் கெல்லாம் வணக்கமாய் நின்றாய் போற்றி
மெய்வழி செவிவாய் நாசி விழைந்திடும் இன்பம் போற்றி
விரித்தமேற் புலனுக்கெல்லாம் விளங்காத பொருளே போற்றி
கைநிறை செல்வம்யாவும் கடைக்கணால் அருள்வாய் போற்றி
காக்கையை அரசனாக்கும் கைமலர் உடையாய் போற்றி
செய்ததீ வினையை எல்லாம் தீர்க்கின்ற நெருப்பே போற்றி
சிறுமையைப் பெருமை யாக்கும் திருப்பதம் போற்றி போற்றி…!

17. மோகனன் துணையே போற்றி ! முழுநில வடிவே போற்றி
மூவுலகங்கள் தேடும் முதற்பெரும் பொருளே போற்றி
தேகத்தே ஒளியை வைத்த செம்மணிக் குன்றே போற்றி
தீராத ஆசைக் குள்ளே திருவென நிற்பாய் போற்றி
ஓர்கணம் தொழுதாற் கூட ஓடிவந் தளிப்பாய் போற்றி
ஊர்ந்தமா மேக வண்ணன் உவப்புறச் சிரிப்பாய் போற்றி
தாள்களில் பணிந்தேனம்மா தண்ணருள் தருவாய் போற்றி
தலைமுதல் பாதம் மட்டும் தாழ்கின்றேன் போற்றி போற்றி…!

18. கண்பட்டால் மனது பாடும் கார்குழல் அலையே போற்றி
காதள வோடும் கண்ணால் காசினி அளந்தாய் போற்றி
வெண்பட்டால் அழகை மூடும் வியத்தகும் சிலையே போற்றி
வெண்மல்லி கைப்பூ மாலை விளையாடும் தோளீ போற்றி
பண்பட்டார் இல்லா தார்தம் பக்குவம் அறிவாய் போற்றி
பணிப்பவர் இதயத் துள்ளே பாசுரம் படிப்பாய் போற்றி
விண்முட்டும் ஞானம் பெற்ற வேதநா யகியே போற்றி
வேயிரு தோளின் சக்தி விரித்தருள் போற்றி! போற்றி…!

19. மண்டலத் திசைகள் தோறும் மதகரி குடங்கள் ஏந்தி
மங்கைக்கு நன்னீராட்ட கங்கை நீர் குடத்தில் மாந்தி
தண்டலக் கூந்தல் ஊற சர்வமங்கள நீ ராட்டி
தாமரைப் பூவின் மேலோர் தாமரைப் பூவைச் சூட்டி
மண்டிய தூய்மைத் தாய்க்கு மற்றுமோர் தூமை நல்கி
மறுவிலாப் பளிங்கின் மேனி மாசறத் துலங்கச் செய்யும்
அண்டமா நெடியோன் தேவீ, அலைகடல் அரசன் பெண்ணே
அரிதுயின் கொள்ளும் காலை அடியவன் வணங்குகின்றேன்…!

20. பூவினில் உறையும் பூவே! பொன்னிடை உறையும் பொன்னே
பூஜைக்கே உரியோன் பூஜை புரிகின்ற காதற் செல்வீ
ஏவுமோர் உலகத்துள்ளே இன்மையோன் ஒருவனே தான்
இவனுனை இரந்தி நிற்க இதுவொரு நியாயம் போதும்
தாவுநீர்க் கடலை போல தண்ணருள் அலைகள் பொங்கும்
சநிதிரப் பிறைப் பூங்கண்ணி சற்று நீ திரும்பிப் பார்த்தால்
மேவிய வறுமை தீர்ப்பேன்; மெல்லிடைப் பூங்கோதாய், நின்
மின்னிடும் விழிகள் காண விழைந்தனேன் போற்றி போற்றி..!

21. முப்புவி ஈன்ற தாயே, மோகனச் சிரிப்பின் செல்வி
மூவிரண்டொன்றாய் வந்த பிரமத்தின் மொத்தமாக
அற்புதம் காட்டி நிற்கும் அழகிய சிற்பச் சோதி
ஆனந்தத் தெய்வமாதா அரும்பெறல் அன்னை பேரில்
இப்பொழுதுரைத்த பாடல் எவரெங்கு பாடினாலும்
இப்புவி உளநாள் மட்டும் இன்பமும் அறிவும் செரும்
நற்பெரும் பேறும் கிட்டு! நன்னிலை வளரும் என்றும்
நாட்டுக்கே ஒருவராக நாளவர் உயர்வார் உண்மை..!

நாம் தவிர்க்க வேண்டிய 8 மன விஷங்கள்!

 நாம் தவிர்க்க வேண்டிய 8 மன விஷங்கள்! நமது மன அமைதியையும் மகிழ்ச்சியையும் நாமே அறியாமல் அழிக்கும் 8 நச்சு எண்ணங்கள் என்னென்ன என்று தெரிந்துக...