Friday, 28 September 2018

கிரிவலம் செல்பவரா நீங்கள்?

                                                         கிரிவலம் செல்பவரா நீங்கள்?

 கிரிவலம் செல்பவரா நீங்கள்? இதை படியுங்கள் !!
கிரிவலம் செல்பவரா நீங்கள்?
ஒவ்வொரு மாதமும் வரும் பௌர்ணமி நாளன்று கிரிவலம் செல்வது வழக்கம். கிரிவலம் என்பது மலையை வலம் வருதல் என்பதாகும். கிரிவலம் செல்லும்போது நாம் எவ்வாறு செல்ல வேண்டும் என்பதை தெரிந்து கொள்வோம்.
🌟 புரட்டாசி மாத பௌர்ணமி அன்று விரதமிருந்து வணங்கினால் லட்சுமி கடாட்சம் பெருகும்..
கிரிவலம் செல்லும்போது கடைபிடிக்க வேண்டியவை :
🌟 மலையைச் சுற்றும்போது உள்ளமெல்லாம் இறை சிந்தனை மட்டுமே நிறைந்திருக்க வேண்டும்.
🌟 ஓம் நமசிவாய எனும் மந்திரத்தை உச்சரித்தப்படியே செல்ல வேண்டும்.
🌟 வெயில் அல்லது மழைக்காக குடை பிடித்து செல்லக்கூடாது.
🌟 மலையைச் சுற்றும் பாதையில் அருள்பாலிக்கும் அஷ்ட லிங்கங்களையும் தவறாமல் தரிசிக்க வேண்டும்.
🌟 மலையை இடமிருந்து வலமாக மட்டுமே சுற்ற வேண்டும். ராஜகோபுரத்தில் இருந்து மலையை வலம் வர தொடங்குவது சிறப்பு.
🌟 கோபம் போன்ற உணர்ச்சிகள் இல்லாமல் உள்ளம் சமநிலையில் இருக்கும்படியாக ஒருமித்த சிந்தனையோடு கிரிவலம் செல்ல வேண்டும்.
🌟 தங்களின் ராசிக்கேற்ற லிங்கங்களுக்கு சிறப்பு பூஜை செய்வது நல்ல பலன் தரும்.
🌟 மலையை ஒட்டி வலப்புறமாக கிரிவலம் செல்வது சிறப்பு.
🌟 தொடங்கிய இடத்தில் கிரிவலத்தை நிறைவு செய்வது சிறப்பு.
🌟 கிரிவலம் தொடங்கும் போதும், நிறைவு செய்யும்போதும் தீபம் ஏற்றி மலையை வணங்குவது சிறப்பு.
🌟 கிரிவலம் முடிந்ததும் குளிப்பதை தவிர்த்தால் கிரிவலப் பயனை அடையலாம்.
🙏🙏🙏🙏
அஷ்டலிங்க வழிபாடு!
நினைத்தாலே முக்தி கிடைக்கும் திருவண்ணாமலையில் உள்ள அஷ்ட லிங்கங்களை வழிபட்டால், அனைத்து பலன்களும் கிடைக்கும். கிரிவலம் செல்வோர் இந்த லிங்கங்களை வழிபடுவது மிகவும் அவசியம். மகான்களும், சித்தர்களும், முனிவர்களும், ரிஷிகளும் வாழ்ந்த இந்தப் புண்ணியத் தலத்தில் சில நிமிடங்களாவது இருக்க வேண்டுமே என்று நினைப்போரும் உண்டு. இதனால் தான் நாள்தோறும் ஏராளமானோர் இங்கு வருகை தந்து, அண்ணாமலையாரை வழிபட்டு செல்கின்றனர்.
திருவண்ணாமலையில் பௌர்ணமி நாளில் அண்ணாமலையாரை வழிபட்டு, 14 கி.மீ. தொலைவு கிரிவலம் வந்து கிரிவலப் பாதையில் உள்ள அஷ்ட லிங்கங்களை வழிபட்டால் நன்மைகள் சேரும்; தீமைகள் விலகும். கிரிவலப் பாதையில் எண்ணற்ற கோயில்கள், மடங்கள், ஆசிரமங்கள் நிரம்பியுள்ளன. இங்கேயே அஷ்ட லிங்கங்களும் உள்ளன.
இந்திர லிங்கம், அக்னி லிங்கம், எம லிங்கம், நிருதி லிங்கம், வருண லிங்கம், வாயு லிங்கம், குபேர லிங்கம், ஈசானிய லிங்கம் என்று 8 லிங்கங்கள் ஒவ்வொன்றும் ஓவ்வொரு திசையை நோக்கி அமைக்கப்பட்டுள்ளன. தெரிந்தோ, தெரியாமலோ செய்யும் பாவங்கள், புண்ணியங்கள் உள்ளிட்டவற்றை எமனிடம் அளிப்பது இந்த அஷ்ட திக் பாலகர்கள் தான். இவர்களே அண்ணாமலையில் அஷ்ட லிங்கங்களாக அமைந்திருந்து பூமியைக் கண்காணித்துக் கொண்டிருக்கின்றனர். இந்த லிங்கங்கள் மனிதனுடைய ஒவ்வொரு காலகட்டத்தைக் குறிக்கின்றன. இவற்றை வேண்டி வணங்கும் பக்தர்களுக்கு நன்மைகள் பயக்கும்.
இந்திர லிங்கம்:
கிரிவலம் வரும் வழியில், கோயிலின் கிழக்கு கோபுரத்துக்கு அருகே கிழக்கு திசையில் இந்திர லிங்கம் உள்ளது. தேவர்களின் தலைவரான இந்திரன் தனது பதவியை நிலை நிறுத்திக் கொள்ள திருவண்ணாமலையில் அங்கப் பிரதட்சிணம் செய்துள்ளார். அப்போது கிழக்குத் திசையில் ஒரு இடத்தில் வந்தபோது மின்னத் தொடங்கியுள்ளது. அப்போது அண்ணாமலையாரின் திருஅருள் என்பதை அறிந்த இந்திரன் தனது பதவி நிலைக்க சிவனிடம் வேண்டினார். அப்போது இந்திரனுக்கு சுயம்பு லிங்கமாக சிவன் காட்சியளித்தார். இதுவே இந்திர லிங்கமாகும். இந்திர லிங்கத்தை வழிபட்டால் திருமகளின் அருள் கிடைக்கும். செல்வம் பெருகும். பதவி உயர்வு, பணிமாற்றம், பணிப் பாதுகாப்பு உள்ளிட்டவையும் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
அக்னி லிங்கம்:
கிரிவலப் பாதையில் இரண்டாவதாகவும், வலது புறத்தில் உள்ளது அக்னி லிங்கம். தென்கிழக்குத் திசை பஞ்ச பூதங்களில் அக்னி தலமே திருவண்ணாமலை என்பதால், இந்த லிங்கத்துக்கு தனி இடம். வாழ்க்கையில் வரும் இடைஞ்சல்களை அகற்றும் சக்தியுள்ளது. அக்னி லிங்கத்தின் கீழ் திசையில் அக்னி தீர்த்தம் உள்ளது. எதிரில் இருப்பது அக்னி மண்டபம். அக்னி லிங்கத்தின் அருகேயே ரமண மகரிஷி, சேஷாத்ரி சுவாமிகளின் ஆஸ்ரமம் உள்ளது. கிரிவலப் பாதையில் 3 ருத்ர மூர்த்திகள் அங்கப் பிரதட்சிணம் செய்தனர். அவர்களின் திருமேனிகள் ஜோதியாக மாறியது. ஒரு செவ்வாய்க்கிழமை அவர்கள் கிரிவலம் வந்தபோது, குறிப்பிட்ட இடத்தைக் கடக்கும்போது பனிமலை போன்ற குளிர்ச்சியை உணர்ந்தனர். அந்த இடமே சுயம்பு லிங்கமான அக்னி லிங்கம் என்கிறது ஆலய வரலாறு. அக்னி லிங்கத்தை வழிபட நோய்கள், பயம் நீங்கும். எதிரிகள் தொல்லை எரிந்து சாம்பலாகும்.
[
எம லிங்கம்: கிரிவலப் பாதையில் மூன்றாவதாக உள்ளது எம லிங்கம் ஆகும். தெற்கு திசைக்குரியது. தென் திசையில் எம தீர்த்தம் உள்ளது. எமன் திருவண்ணாமலையில் அங்கப் பிரதட்சிணம் செய்தபோது, அவரது பாதம் பட்ட அடிச்சுவடுகள் எல்லாம் தாமரைப் பூக்களாக மாறின. அந்த இடத்தில் செம்பொன் பிரகாசமாக ஒரு லிங்கம் தோன்றியது. அதுவே எம லிங்கம். பூமியில் உள்ள மனிதர்களின் ஆயுள் முடியும்போது அவர்களின் உயிரை எடுக்கச் செல்லும் எம தூதர்கள் வானுலகில் இருந்து பூமிக்கு வந்து, இங்கு வழிபட்ட பின்னரே உரிய பகுதிக்குப் பயணிப்பதாக பக்தர்களின் நம்பிக்கை. எமலிங்கத்தை வழிபட்டால் எம பயம் நீங்கும். நீதி நெறி நிலைக்கும். பொருள் வளம் பெருகும்.
நிருதி லிங்கம்: கிரிவலப் பாதையில் நான்காவதாக நிருதி லிங்கம் உள்ளது. இதன் திசை தென்கிழக்கு. சனி தீர்த்தம் என அழைக்கப்படும் தெப்பகுளம் இதனருகில் உள்ளது. மண் என்ற வார்த்தையின் தூய தமிழ்ப் பெயர் நிருதி ஆகும். அஷ்ட திக் பாலகர்களில் ஒருவரான நிருதீஸ்வரர் கிரிவலம் வந்தபோது. குறிப்பிட்ட இடத்தில் குழந்தையின் ஒலியும், பெண்ணின் சலங்கை ஒலியும் கேட்டது. அப்போது நிருதீஸ்வரர் அங்கு நின்று, அண்ணாமலையாரை வணங்கினார். அண்ணாமலையார் தோன்றிய இடமே நிருதி லிங்கம். இந்த இடம், சிவன் பார்வதிக்கு காட்சியளித்த இடம். இங்கிருந்து பார்த்தால் அண்ணாமலையின் வடிவம் சுயம்புவான ரிஷபமாகத் தெரியும்! நிருதி லிங்கத்தை வழிபட்டால் தோஷங்கள் நீங்கும். மகப்பேறு கிடைக்கும். ஜன்ப சாபம் நீங்கும். புகழ் வந்து நிலைக்கும்.
5. வருண லிங்கம்: கிரிவலப் பாதையில் ஐந்தாவதாக உள்ளது வருண லிங்கம். இதற்குரிய திசை மேற்கு. இதன் அருகே வருண தீர்த்தம் உள்ளது. இந்த லிங்கத்தை சனி பகவான் ஆட்சி செய்கிறார். அஷ்ட திக் பாலகர்களில் ஒருவர், மழைக்கு அதிதேவதையாகிய வருண பகவான். இவர் முட்டிக் கால் போட்டும், ஒற்றைக் காலால் நொண்டியும் கிரிவலம் வந்தார். அப்போது ஓரிடத்தில் வானத்தைத் தொடும் அளவுக்கு நீருற்று எழுந்தது. அந்நீரைத் தெளித்து அண்ணாமலையாரை வணங்கிட, அங்கு வருண லிங்கம் தோன்றியது!. வருண லிங்கத்தை வழிபட்டால் சிறுநீரக நோய்கள், சர்க்கரை நோய், நீர் சார்ந்த சகல நோய்கள், கொடிய நோய்கள் நீங்கும். உடல் நலம் செழிக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும்.
6.வாயு லிங்கம்: கிரிவலப் பாதையில் ஆறாவதாக வாயு லிங்கமும் இதன் அருகே வாயு தீர்த்தமும் உள்ளது. வடமேற்கு திசைக்குரியது. வாயு பகவான் சுழிமுனையில் சுவாசத்தை நிலைகொள்ளச் செய்தவாறு கிரிவலம் வந்தார். அப்போது அடி அண்ணாமலையைத் தாண்டியதும், ஓரிடத்தில் நறுமணம் வீசியது. அங்கே பஞ்சகிருத்திகா செடியின் பூக்கள் மலர்ந்த நேரத்தில் சுயம்புவாக வாயு லிங்கம் உருவானதாக வரலாறு. வாயு லிங்கத்தை வழிபட்டால் சுவாசம் சார்ந்த நோய்கள், இதய நோய்கள் குணமாகும். பெண்களுக்கு நலமும், மன நிம்மதியும் உண்டாகும். கண்திருஷ்டி நீங்கும்.
7. குபேர லிங்கம்: கிரிவலப் பாதையில் உள்ள ஏழாவது லிங்கமாக இருப்பது குபேர லிங்கம். வடதிசைக்குரிய இந்த லிங்கத்தின் அருகே குபேர தீர்த்தம் உள்ளது. குபேரன் கண் மூடி தியானித்து, தலை மீது கரம் குவித்தவாறு குதிகாலால் கிரிவலம் வந்தார். அப்படி பல யுகங்கள் கழிந்த பிறகு ஒரு நாள் திருமாலும், மகாலட்சுமியும் அண்ணாமலையை சக்கரபாணி கோலத்தில் தரிசனம் செய்வதைக் கண்டார். அந்த இடத்தில் உண்டான லிங்கமே குபேரலிங்கம் என்கின்றனர். முறையற்ற வழியில் பணம் சேர்த்தவருக்கு பிராயசித்த ஸ்தலம் குபேர லிங்கம். குபேர சம்பத்து தரும் இடம் இது. இங்கு வழிபட்டால் செல்வம் சேரும்.
8.ஈசானிய லிங்கம்: கிரிவலத்தில் எட்டாவது லிங்கமாக இருப்பது ஈசானிய லிங்கம். இது வட கிழக்கு திசைக்குரியது. அதிகார நந்தி எனப்படும் நந்தி பகவான் கிரிவலம் வந்தபோது, அண்ணாமலையின் தரிசனம் இந்த இடத்தில் கிட்டியதாக தெரியவருகிறது. இங்கு வழிபட்டால் சனித் தொல்லையிலிருந்து விடுபடலாம். இங்கு தியானித்தால் நன்மைகள் சேரும். தவம் பலிக்கும். சிவனின் அருள் கிடைக்கும். அனைத்து காரியங்களிலும் வெற்றி பெறலாம்

Sunday, 23 September 2018

1.கன்னிகாதானம்" என்றால் என்ன?

                                              1.கன்னிகாதானம்" என்றால் என்ன?

1.கன்னிகாதானம்" என்றால் என்ன?
2.திருமணம் முடிந்த பின் ஏன் பாலும், பழமும் கொடுக்கறாங்க தெரியுமா..? பிரம்மிப்பூட்டும் இரகசியம்..!!*
வயிற்றுப்பசியைப் போக்குகிற அன்னதானமே சிறந்தது என்று சொல்வார்கள்.
நிதானமே சிறந்தது என்பவர்களும் உண்டு.
ஆனால், தானங்களிலேயே மிகப் பெரியதாக, மகா தானமாக சாஸ்திரம் குறிப்பிடுவது கன்னிகாதானத்தைதான்!
திருமணம் செய்துவைக்கும்போது, தந்தையானவர் தான் பெற்ற பெண்ணை மற்றொரு குடும்பத்தில் பிறந்த ஆண்மகனுக்கு தானமாக அளித்து அவனிடம் ஒப்படைக்கும் இந்த நிகழ்வையே கன்யாதானம் அல்லது கன்னிகாதானம் என்கிறார்கள்!
இந்த உலகில் பலவித தானங்கள் செய்யப்பட்டாலும் அவை எல்லாவற்றிலும் உயர்ந்தது இந்த கன்னிகாதானமே என்பதற்கு இந்த நிகழ்வின்போது சொல்லப்படுகிற சங்கல்பமும், மந்திரமுமே சாட்சி.
'தசானாம்பூர்வேஷாம், தசானாம்பரேஷாம்,
மம ஆத்மனஸ்ச ஏகவிம்சதிகுல உத்தாரண..' என்று அந்த மந்திரம் நீள்கிறது.
அதாவது, கன்யாதானம் செய்பவனுக்கு முன்னால் உள்ள பத்து தலைமுறையும், பின்னால் வருகிற பத்து தலைமுறையும், கன்யாதானம் செய்பவனது தலைமுறையையும் சேர்த்து ஆகமொத்தம் இருபத்தியோரு தலைமுறைகளையும் கரைசேர்க்கும் விதமாக இந்த கன்னிகாதானம் என்று அழைக்கப்படுகிற மகாதானத்தைச் செய்கிறேன் என்பது இந்த மந்திரத்தின் பொருள்.
உன் வம்சவிருத்திக்காக எம் குலவிளக்கை உனக்கு தானமாக அளிக்கிறேன் என்று ஒரு தந்தை செய்யக்கூடிய கன்னிகாதானமே உலகில் அளிக்கப்படுகின்ற தானங்களில் மிகப்பெரியது என்று சாஸ்திரம் போற்றுகிறது.
ஆண்பிள்ளையைப் பெற்றால் அந்தப் பிள்ளை செய்கிற கர்மாவின் மூலம் அந்த ஒரு தலைமுறை மட்டுமே கரையேறும்.
ஆனால், பெண்பிள்ளையைப் பெற்று, அவளைக் கண்ணுக்குக் கண்ணாக வளர்த்து, மற்றொருவனின் வம்சவிருத்திக்காக அவளை தானம் செய்து கொடுப்பதால், அவனது வம்சத்தில் 21 தலைமுறைகளும் கரையேறுகிறது என்றால் பெண்பிள்ளையைப் பெற்றவன் எப்பேர்ப்பட்ட புண்ணியம் செய்தவன் என சிலாகிக்கிறார்கள் சான்றோர்கள்!
ஆக, பெண்பிள்ளையைப் பெற்றவன், இருபத்தியோரு தலைமுறையைக் கரையேற்றும் வாய்ப்பைப் பெற்றவன் என சாஸ்திரம்சொல்கிறது...
*மகளை பெற்ற என் நண்பர்களுக்கு சமர்ப்பணம்*
🙏�🙏�🙏�🙏
*திருமணம் முடிந்த பின் ஏன் பாலும், பழமும் கொடுக்கறாங்க தெரியுமா..? பிரம்மிப்பூட்டும் இரகசியம்..!!*
பெண்ணானவள் தான் பிறந்து வளர்ந்த குடும்பத்தை விட்டு புதிய சூழலில் வாழ வருவதால் எல்லாமே புதிதாக இருக்கும்.
கணவர் வீட்டார் கூறும் வார்த்தைகளில் தவறாக புரிதல் வரும் அதிலும் கேலி கிண்டல் ஏன் சில நேரம் அதட்டல் என ஏற்படலாம்.
அந்த நேரங்களில் பெண்ணே *ஒருபசு மாடு எப்படி விஷத்தையே உண்டாலும் அது தரும் பாலில் துளிகூட விஷம் இராதோ,* அது போல கணவன் வீட்டார் உனக்கு தீமையே செய்தாலும் விஷம் போன்ற வார்த்தைகளை கொட்டி விடாதே என குறிக்க பாலும்.
வாழைபழம் எப்படி விதையே இல்லாவிட்டாலும் மூலமரத்தை சார்ந்து கன்றை தருகிறதோ அது போல் கணவனை சார்ந்து *வம்சவிருத்தியை நீ தரவேணும்* என குறிக்க பழமும் தருவர்.
மணமகனுக்கு ஏன் தருகிறார்கள் என்றால்,
ஏ ! மணமகனே *பாலில் எப்படி தயிரும் நெய்யும் உள்ளதோ* அதுபோல் இந்த பெண்ணிடமும் *அறிவும் ஆற்றலும்* உள்ளது பக்குவமாக உறையிட்டு பக்குவமாக கடைந்து வெண்ணையை நெய்யை எடுப்பாயாக பாலை கெட வைத்துவிடாதே என குறிக்க பாலும்.🥛
வாழைமரத்தை எப்படி அதன் தாய் மரத்தில் இருந்து பக்குவமாக பிரித்து நடுவரோ அது போல் *இந்த பெண்ணை உங்கள் குடும்ப தோட்டத்தில் நட்டுள்ளோம்* அதை பட்டுபோக விடாமல் அதை பக்குவமாக கவனித்து அதிலிருந்து உங்கள் *சந்ததிகளை வாழையடி வாழையாக விருத்தி செய்து கொள்ளுங்கள் என உணர்த்தவே பழமும் கொடுக்கிறார்கள்.*🍌
திருமணத்தில் பால் பழம் கொடுப்பது சும்மா ஒரு வேடிக்கையான செயல் அல்ல.

Saturday, 22 September 2018

#ஸ்ரீஹனுமத்_பஞ்சரத்னம்:

                                                                #ஸ்ரீஹனுமத்_பஞ்சரத்னம்:

 இலங்கையின் மன்னனாக விபீஷணனுக்குப் பட்டாபிஷேகம் செய்த பிறகு, அவனுக்கு சிரஞ்ஜீவி வரம் தந்தார் ராமபிரான். அதன் பிறகே ஒரு விஷயம் அவர் நினைவுக்கு வந்தது. 'ஏற்கெனவே அனுமனுக்கு சிரஞ்ஜீவி வரம் அளித்திருந்தோம். தனக்கு மட்டுமே அந்த வரம் கிடைத்திருக்கிறது என்று பெருமிதப்பட்டுக் கொண்டிருக்கும் அனுமன், இப்போது விபீஷணனுக்கும் அந்த வரம் கிடைத்தில் வருத்தம் கொள்வானோ?’ என்று யோசித்தார் ஸ்ரீராமன்.
ஆனால், அனுமன் வருந்தவில்லை; மகிழவே செய்தார்.

காரணம் கேட்டபோது, ''நான் மட்டுமே சிரஞ்ஜீவி என்றால், உலகம் அழிந்தபின்பு நான் மட்டும் தனித்திருப்பேன். அப்போது, ஸ்ரீராம நாம ஜபத்தை செவிகுளிரக் கேட்கும் வாய்ப்பு இல்லாமல் போயிருக்கும். இப்போது அப்படி இல்லை. என்னுடன் விபீஷணனும் இருப்பார். அவர் ராம நாமம் ஜபிக்க, அனவரதமும் அதைக்கேட்டு அகமகிழ்ந்திருப்பேன்'' என்றாராம்.
ராமநாமம் அனுமனுக்கு அந்த அளவுக்கு உவப்பானது!
ராமாயணத்தில் முக்கியமாக மூவரின் உயிரைக் காத்த ஆஞ்சநேயக் கடவுள் நம்மையும் காத்தருள்வார்.
ஆமாம்... ராமனைப் பிரிந்ததால் துக்கம் அடைந்த சீதாதேவி அசோகவனத்தில் தன்னுயிரை மாய்த்துக்கொள்ள முயன்றபோது, ராம நாமத்தை உச்சரித்தபடி சீதா தேவியின் முன் தோன்றி, அவரைக் காத்தார் அனுமன். அடுத்து, போர் தருணத்தில் சஞ்ஜீவினி மலையைச் சுமந்து வந்து லட்சுமணன் முதலானோரைக் காத்தார். மூன்றாவதாக, ராமன் திரும்ப வரமாட்டான் எனும் அவநம்பிக்கையில், பரதன் அக்னி வளர்த்து, அதில் பாய்ந்து உயிர்விடத் துணிந்த நிலையில், விரைந்து சென்று ஸ்ரீராமனின் வரவைச் சொல்லி, அவனைக் காப்பாற்றினார். அத்தகைய அனுமன் நம்மையும் காத்தருள்வார். நம் வெற்றிக்கும் உறுதுணையாக இருப்பார்.
'பிள்ளையார் பிடிக்கக் குரங்காய் முடிந்தது’ என்றொரு வேடிக்கையான சொல் வழக்கு உண்டு. அதாவது, எந்த நற்காரியம் என்றாலும், அதைத் துவங்கும்போது பிள்ளையாரையும், அது வெற்றிகரமாக நிறைவடைய அனுமனையும் வழிபடவேண்டும் என்பதே இதன் உட்பொருள். நாமும் அனுமனைப் பிரார்த்தித்து, அவர் அருள் பெற்று உய்வடைவோம். அதற்கு, ஜகத்குரு ஸ்ரீஆதிசங்கரர் அருளிய, 'ஸ்ரீஹனுமத் பஞ்சரத்னம்’ எனும் அற்புத ஸ்தோத்திரப் பாடல்கள் நமக்குப் பேருதவி செய்யும்.
முதலில், அனுமனைத் தியானிக்கும் ஸ்தோத்திரம். 2வது பாடல், அவரைத் தரிசிக்கும் விருப்பத்தைச் சங்கல்பிக்கிறது. 3வது பாடல், அவரைச் சரணடைகிறது. 4வது பாடல், அவர் தரிசனம் கிடைக்க வேண்டும் எனப் பிரார்த்திக்கிறது. 5வது பாடல், அனுமனின் தரிசனம் கிடைத்து மகிழ்வதாகச் சிலாகிக்கிறது. 6வது பாடல், இதைப் படிப்பதனால் கிடைக்கும் பலன்களை விவரிக்கிறது.
அனுமனின் அனுக்கிரகத்தைப் பெற்றுத் தருவதில் தூய ரத்தினங்களாக ஜொலிக்கும் 'ஸ்ரீஹனுமத் பஞ்சரத்னம் ஸ்தோத்திரம்’ இங்கே உங்களுக்காக!
#ஸ்ரீஹனுமத்_பஞ்சரத்னம்:
வீதாகிலவிஷயேச்சம் ஜாதானந்தாஸ்ருபுலகமத்யச்சம்
ஸீதாபதி தூதாத்யம் வாதாத்மஜமத்ய பாவயே ஹ்ருத்யம்
கருத்து: எல்லாவிதமான விஷய அனுபவங்களைக் கொண்டவரும், ஆனந்தக் கண்ணீர், மயிர்க்கூச்சல் ஆகிய வற்றை அடைந்தவரும், சுத்தமான மனம் கொண்டவரும், ஸ்ரீராம தூதர்களில் முதன்மையானவரும், தியானம் செய்யத் தக்கவரும், வாயு குமாரனுமான ஹனுமனை தியானிக்கிறேன்.
தருணாருணமுககமலம் கருணாரஸபூரபூரிதாபாங்கம்
ஸஞ்சீவனமாஸாஸே மஞ்சுல மஹிமானமஞ்ஜனாபாக்யம்
கருத்து: பால சூரியனுக்கு ஒப்பான முகக் கமலத்தைக் கொண்டவரும், கருணையாகிய நீர்ப் பிரவாகத்தால் நிறைந்த கண்களைக் கொண்டவரும், ஔஷதி பர்வதத்தைக் கொண்டு வந்து யுத்தத்தில் இறந்த வானரர்களைப் பிழைக்கும்படி செய்தவரும், புகழத்தக்க மகிமை உள்ளவரும், அஞ்சனாதேவியின் புண்ணிய பலனுமானவருமான ஹனுமனைத் தரிசிக்க விரும்புகிறேன்.
ஸும்பரவைரிஸராதிகமம்புஜதளவிபுலலோசனோதாரம்
கம்புகளமநிலதிஷ்டம் பிம்பஜ்வலிதோஷ்ட மேகமவலம்பே
கருத்து: மன்மத பாணத்தைக் கடந்தவரும், தாமரை தளம் போல் அகன்ற கண்களால் அழகு பொருந்தியவரும், சங்கு போன்ற கழுத்தைக் கொண்டவரும், வாயுதேவரின் பாக்கிய பூதருமான ஹனுமனைச் சரணம் அடைகிறேன்.
தூரீக்ருதஸீதார்த்தி: ப்ரகடீக்ருதராமவைபவஸ்பூர்த்தி:
தாரிததஸமுககீர்த்தி: புரதோ மம பாது ஹனுமதோ மூர்த்தி
கருத்து: சீதையின் கஷ்டங்களை வெகு தூரத்தில் விலக்கியதும், ஸ்ரீராம மகிமையின் நினைவை வெளியிடுவதும், ராவணனுடைய கீர்த்தியைப் பிளந்ததுமான ஸ்ரீஹனுமனின் சரீரம் எனக்கு முன்னால் தோன்றட்டும்.
வானரநிகராத்யக்ஷம் தானவகுல குமுதரவிகரஸத்ருஸம்
தீனஜனவனதீக்ஷம் பவனதப: பாகபுஞ்ஜமத்ராக்ஷம்
கருத்து: வானரர்களின் கூட்டத்துக்குத் தலைவரும், ராட்சதர்களின் வம்சமாகிய ஆம்பல் புஷ்பத்துக்கு சூரிய கிரணம் போல் இருப்பவரும், ராட்சத குலத்தை அழித்தவரும், துக்கம் அடைந்தவர்களை ரட்சிப்பதில் உறுதிகொண்டவரும், வாயு தேவனின் தவப்பயனாக இருப்பவருமான ஸ்ரீஹனுமனை நேரில் தரிசித்தேன்.
ஏதத்பவனஸுதஸ்ய ஸ்தோத்ரம் ய: படதி பஞ்சரத்னாக்யம்
சிரமிஹ நிகிலான் போகான் புக்த்வா ஸ்ரீராமபக்திபாக்பவதி
கருத்து: பஞ்ச ரத்னம் என்று பெயருள்ள - ஸ்ரீஹனுமனின் இந்த ஸ்தோத்திரத்தை எவர் படிக்கிறாரோ, அவர் இவ்வுலகில் எல்லாவிதமான போகங்களையும் வெகு காலம் அனுபவித்து, ஸ்ரீராம பக்தனாகவும் சிறந்து விளங்குவார்.

Friday, 21 September 2018

பலரும் அறியாத இந்து கடவுள்களின் அற்புதங்கள்

பலரும் அறியாத இந்து கடவுள்களின் அற்புதங்கள்

 1 ஸ்ரீரங்கம் கோவிலில் ஸ்ரீராமானுஜரின் உடல் 1000 வருடங்களாக கெடாமல் அப்படியே உள்ளது.
2 திருநெல்வேலி பாளையங்கோட்டைஅருகே திருச்செந்தூா் சாலையில் உள்ள சிரட்டை பிள்ளையாா் கோவிலில் விநாயகருக்கு விடலை போடும்போது சிரட்டையும், தேங்காயும் பிரிந்து சிதறுகிறது.
3 தஞ்சைபிரகதீஸ்வரர் கோவிலில் 72 டன் கல் கோபுர உச்சியில் வைக்கப்பட்டுள்ளது. கருவறை குளிர்காலத்தில் வெப்பமாகவும் வெயில் காலத்தில் குளிராகவும் இருக்கிறது.
4 தாராபுரம் ஐராவதீஸ்வரர் கோவிலில் உள்ள இசைப்படிகளில் தட்டினால் சரிகமபதநிச என்ற இசை வருகிறது.
5 கடலுக்கு 3500 அடி உயரத்தில் வெள்ளியங்கிரி மலையில் சிவனின் பஞ்சவாத்ய ஒலி கேட்கிறது.
6 கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே கோட்டையூரில் நூற்றி ஒன்று சாமிமலை குகையில் ஓரடி உயரம் கொண்ட கல்லால் ஆன அகல் விளக்கில் இளநீர் விட்டு தீபமேற்றினால் பிரகாசமாக எரியும் அதிசயம் நடக்கிறது.
7 சென்னை வியாசர்பாடி ரவீஸ்வரர் கோயிலில் தினமும் சூரிய ஒளி மூலவா் மீது விழுகிறது. (காலை மதியம் மாலை என மும்முறை )
8 சுசிந்திரம் சிவன் கோவிலில் ஒரு சிற்பத்தின் காதில் குச்சியை நுழைத்தால் மறு காதுவழியாக வருகிறது.
9 திருப்பூரில் உள்ள குண்டடம் வடுக நாத பைரவர் கோவிலில் குழந்தை தாயின் வயிற்றில் இருக்கும் பொழுது, குழந்தை இந்த மாதத்தில் இந்தந்த வடிவத்தில் இந்த விதமான Positions-ல் இருக்கும் என்பதை பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கல்லில் சிற்பங்களாக வடித்து வைத்துள்ளார்கள் நம் முன்னோர்கள்.
10 செங்கம் ஊரில் உள்ள, ஸ்ரீ அனுபாம்பிகை உடனுறை ரிஷபேஸ்வரர் கோயிலில் ஆண்டுக்கு ஒருமுறை, பங்குனி மாதம் மூன்றாம் நாள், மாலை சூரிய அஸ்தமனத்தின் பொழுது, நந்தியம் பெருமான் மீது சூரிய ஒளி விழும் பொழுது, அவர் தங்க நிறத்தில் ஜொலிப்பார்.
11 வட சென்னையில் ஐயாயிரம் ஆண்டுகள்.பழமையான வியாசர்பாடி ரவீஸ்வரர் சிவன் கோவிலில் 3 வேளையும் சூரிய ஒளி சிவலிங்கத்தின் மீது மாலை போல் வந்து விழுகிறது.
12 ஜெயங்கொண்டத்தில் உள்ள கங்கை கொண்ட சோழபுரம் கோவிலில் உள்ள கிணற்றிற்கு அருகில் ஒரு சிங்கத்தின் சிற்பம் இருக்கும். சிங்கத்தின் வாயில் ஒரு கதவு தென்படும். அதன் மூலம் கீழே இறங்கினால் கிணற்றில் குளிக்கலாம். ஆனால் மேலேயிருந்து பார்த்தால் நாம் குளிப்பது தெரியாது.
13 ஈரோடு காங்கேயத்துக்கு அருகில், மடவிளாகம் சிவன்கோவில் குளத்தில், பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒரு மண் பானை நிறைய விபூதி தோன்றுகிறது.
14 மதுரை மீனாட்சி அம்மன்கோவில் தெப்பகுளத்தில் மீன்கள் வளராது.
16 சேலம் தாரமங்கலம் பெருமாள் கோவிலில் ஸ்ரீராமா் சிற்பம் இருக்கும் இடத்திலிருந்து வாலி சிற்பம் இருப்பதை பாா்க்க முடியும். ஆனால் வாலி சிற்பம் இருக்கும் இடத்திலிருந்து ஸ்ரீராமரைப் பாா்க்க முடியாத வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது.
17 சென்னை முகப்போில் காிவரதராஜப்பெருமாள் கோவிலில் விளக்குகளை அணைத்துவிட்டால் பெருமாள் நம்மை நோில் பாா்ப்பது போல் இருக்கிறது.
18 தென்காசி அருகில் புளியங்குடியில் சுயம்பு நீரூற்று வற்றி தண்ணீா் இல்லாமல் இருக்கும்போது பிராா்த்தனை செய்து பால் அல்லது இளநீா் விட்டால் மறுநாள் ஊற்றில் நீர் வந்துவிடுகிறது.
19 தூத்துக்குடி மாவட்டம் செட்டியாபத்து கிராமத்தில் பொியசாமி கோவிலில் கோவிலுக்கு நோ்ந்துவிடப்படும் பன்றி கொடை விழாவின்போது அங்குள்ள நீருள்ள தொட்டிக் குள் தலையை தானாகவே மூழ்கி இறந்துவிடுகிறது.
20 குளித்தலை அருகில் ரத்தினகிாி மலை மேல் காகங்கள் பறப்பதில்லை.
21 தேனி அருகில் உள்ள சிவன்கோவிலில் அவரவா் உயரத்தில் சிவலிங்கம் காட்சி தருகிறது.
22 தூத்துக்குடி மாவட்டம் வீரபாண்டியபுரத்தில் அம்மன்கோவில் கொடை விழாவின்போது மண்பாணையில் வைக்கப்படும் கத்தி சாமி கோவிலை வலம் வந்து சேரும் வரை செங்குத்தாக நிற்கிறது.
23 விருதுநகாில் மகான் திருப்புகழ்சாமி கோவில் திருவிழாவின்போது சுவாமிக்கு படைக்கப்பட்ட சாதத்தில் வேல் வைத்து பூஜை செய்கின்றனா். அதன் பின் எவ்வளவு பக்தா்கள் வந்தாலும் உணவு குறையாமல் வந்துகொண்டே இருக்கிறது. (வேலை எடுத்தவுடன் குறைந்து காலியாகிவிடும்) இதுபோல் உணவு தட்டாமல் வருவது அத்திாி மலையிலும் நடைபெறுகிறது.
24 திருமந்திரநகா் (தூத்துக்குடி) சிவன்கோவிலில் சித்திரைத் தோ்த்திருவிழாவின்போது தோ் ஓடும் ரதவீதி மட்டும் சுடுவதில்லை.
25 சென்னி மலை முருகனுக்கு அபிஷேகம் செய்யப்படும் தயிா் புளிப்பதில்லை.
26 திருப்புவனம் (சிவகங்கை மாவட்டம்) அருகில் கல்லுமடை திருநாகேஸ்வரமுடையாா் கோவிலில் மீனாட்சி அம்மன் 2 மாதங்களுக்கு ஒரு முறை நிறம் மாறுகிறது.
27 திருநெல்வேலி கடையநல்லூர் அருகில் சுந்தரேஸ்வரபுரம் சுந்தரேஸ்வரர் கோவிலில் பிரகாரத்தில் உள்ள விளக்குகளை அணைத்துவிட்டால் வெளியே உள்ள ஒளி மூலவர் மீது விழுவதைக் காணலாம்.
28 ஸ்ரீவில்லிபுத்தூரில் சிவராத்திரியன்று கொதிக்கும் எண்ணெயில் கையைவிட்டு வடை சுடுகிறார் ஒரு பாட்டி.
29 திருநல்லூர் கல்யாணசுந்தரேஸ்வரர் (பஞ்சவர்ணேஸ்வரர்) திருக்கோவிலில் சிவலிங்கம் 6 நாழிகைக்கு ஒரு வர்ணத்திற்கு மாறுகிறது.
30 காசியில் கருடன் பறப்பதில்லை. மாடு முட்டுவதில்லை. பிணம் எரிந்தால் நாற்றம் எடுப்பதில்லை. பூக்கள் மணம் வீசுவதில்லை.
31 சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகில் கல்லுமடை திருநாகேஸ்வரமுடையார் கோவிலில் மீனாட்சிஅம்மன் 2 மாதங்களுக்கு ஒருமுறை நிறம் மாறுகிறது.
32 திண்டுக்கல் அருகே திருமலைக்கேணி முருகன் கோவிலில் அருகருகே உள்ள தெய்வானை சுனையின் நீர் எப்போதும் குளிர்ந்த நீராகவும், வள்ளிசுனையின் நீர் இரவுபகல் எந்நேரமும் வெந்நீராகவும் இருக்கிறது.
33 திருக்கழுக்குன்றத்தில் தெப்பக்குளத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை சங்கு தோன்றுகிறது. சிவனுக்கு படைக்கப்பட்ட பிரசாதத்தை கழுகு உண்ணும் அதிசயம் நடைபெற்றது.
34 திருநாகேஸ்வரம் சிவன் கோவிலில் ராகுகாலத்தில் மட்டும் சிவபெருமானுக்கு செய்யப்படும் அபிஷேக பால் நீலநிறமாகிறது.
35 சிக்கல் சிங்காரவேலர் கோவிலில் சூரசம்ஹாரத்திற்காக முருகன் அம்பிகையிடம் வேல்வாங்கும்போது முருகனின் திருமேனி முழுவதும் வியர்வை பெருகுகிறது. அா்ச்சகா் பட்டுத்துணியால் ஒற்றி எடுக்க துணி தொப்பலாக நனைந்துவிடுகிறது.
36 நாகர்கோவில் கேரளபுரம் சிவன் கோவிலில் உள்ள ஒரு விநாயகர் ஆறுமாதகாலம் கருப்பாகவும், ஆறுமாதம் வெண்மைநிறமாகவும் காட்சி தருகிறார். அது சமயம் நாகா்கோவில் நாகராஜா கோவிலில் கொடுக்கப்படும் மண் கருப்பாகவோ வெள்ளையாகவோ இருக்கிறது.

#குளிகை_என்றால்_என்ன..?

                                                          #குளிகை_என்றால்_என்ன..?

#இராகு_குளிகை_எமகண்டம் முதலிய காலங்கள் என நாட்குறிப்பேடு காட்டுவது அனைவரும் அறிந்ததே..*
*குளிகை என்றால் என்ன..?*
*தொட்டதைத் துலங்கச் செய்யுமா குளிகை நேரம்..?*
*இராவணனின் மனைவி மண்டோதரி, கருவுற்று நிறைமாத கர்ப்பிணியாக இருந்தாள். எப்போது வேண்டுமானாலும் குழந்தை பிறக்கலாம் என்ற நிலையில் இராவணன் தனது குல குருவான சுக்கிராச்சார்யாரைச் சந்தித்தான்...*
*யாராலும் வெல்ல முடியாத வீரமும், மிகுந்த அழகும், நிறைந்த அறிவும் கொண்ட மகனே தனக்குப் பிறக்க வேண்டும் என்று குலகுருவிடம்* *கேட்டுக் கொண்ட இராவணன் அதற்கு வழிமுறைகள் என்ன என்றும் அவரிடம் கேட்டான்...*
*அதற்குப் பதில் அளித்த சுக்கிராச்சாரியார், “கிரகங்கள் அனைத்தும் ஒரே கட்டத்தில் இருக்கும் நேரத்தில் உனக்குப் பிள்ளை பிறந்தால், அந்தக் குழந்தை நீ விரும்பிய எல்லாச் சிறப்புகளும் கொண்டதாக இருக்கும்..”என்று யோசனை கூறினார்...*
*உடனடியாக, நவக்கிரகங்கள் அனைத்தையும் சிறைப் பிடித்து, ஒரே அறைக்குள் அடைத்துவிட்டான் இராவணன்...*
*ஒரே அறையில் இருந்த நவக்கிரகங்கள் யாவும் தவித்துப் போயினர்...*
*இந்த யோசனையைச் சொன்ன சுக்கிராச்சாரியாரைக் கடிந்தும் கொண்டனர்...*
*தாங்கள் அனைவரும் ஒரே இடத்தில் இருப்பதால் நடக்கப்போகும் தீமைகளை எண்ணிக் கவலை கொண்டனர்...*
*அதே நேரத்தில் குழந்தை பிறக்க முடியாமல் மண்டோதரி பெருமளவு தவித்தாள்...*
*வலி அதிகம் இருந்த போதிலும் குழந்தை பிறக்கவே இல்லை...*
*இந்தச் செய்தி நவக்கிரகங்களை எட்டியதும், அதற்கும் தாங்கள்தான் காரணம் என்று இராவணன் தண்டிப்பானோ என்று அச்சம் கொண்டனர்...*
*இது குறித்து சுக்கிராச்சாரியாரிடம் ஆலோசனை கேட்டனர். “இந்தச் சிக்கலில் இருந்து விடுபட வேண்டுமானால், உங்கள் ஒன்பது பேரைத் தவிர, நல்ல செயல் புரியவென்றே இன்னொரு புதியவன் ஒருவனை சிருஷ்டித்து, ஒவ்வொரு நாளிலும் ஒரு குறிப்பிட்ட நேரத்தை அவனுடைய ஆளுகைக்கு உட்பட்ட நேரமாக மாற்றிக் கொடுத்தால், உங்களுக்கு நன்மை உண்டாகும்...*
*அவனை சிருஷ்டிக்கும் அதே வேளையிலேயே மண்டோதரிக்கு சுகப்பிரசவம் உண்டாகும்.*
*நீங்களும் இராவணின் சிறையிலிருந்து விடுதலை பெறலாம்’’ என்றார்..*
*சுக்கிராச்சாரியாரின் வாக்கின்படி சனீஸ்வர பகவான் சிறையில் இருந்தபடியே தனது சக்தியால், தனது மனைவி ஜேஷ்டாதேவிக்கு ஒரு மகன் பிறக்கும் படி செய்தார்..*
*சனீஸ்வரன்-ஜேஷ்டாதேவி தம்பதியின் புதல்வனுக்கு குளிகன் என்று பெயரிடப்பட்டது...*
*குளிகன் பிறந்த அதே நேரம் மண்டோதரிக்கும் அழகான ஒரு மகன் பிறந்தது...*
*குழந்தை பிறந்து முதன்முதலில் அழுதவுடன் ஒரு மாபெரும் வீரன் பிறந்துள்ளான்* *என்பதைக் குறிக்கும் வகையில் இடி, மின்னலுடன் அடர்மழை பெய்தது...*
*அதனால் மேகநாதன் என்று பெயரிடப்பட்டான்...*
*அவனே இராவணனின் தவப்புதல்வனான மேகநாதன். பின்னாளில் கடும் தவம் செய்து பிரம்மாவிடமிருந்து பல அபூர்வமான அஸ்திரங்களைப் பெற்று, இந்திரனையே வென்று இந்திரஜித் என்று அழைக்கப்ட்டான்...*
*இந்திரஜித் என்ற மேகநாதன் பிறந்த நேரம் தான் குளிகை நேரம்* *எனப்படுகிறது. தான் பிறக்கும்போதே நல்லதை நடத்தி வைத்ததால், குளிகன் நவக்கிரகங்களால் பாராட்டப்பட்டார்...*
*குளிகை நேரம் என்றே தினமும் பகலிலும் இரவிலும் ஒரு நாழிகை நேரம் குளிகனுக்காக வழங்கப்பட்டது...*
*குளிகை நேரத்தை, “காரிய விருத்தி நேரம்” என்று ஆசீர்வதித்தார் சுக்கிராச்சாரியார்...*
*அதனாலேயே குளிகை நேரத்தில் செய்யப்படும் எந்தக் காரியமும் தொடர்ந்து* *நடைபெற்று அந்தக் குடும்பமே செழிக்கும் என்றும் கூறப்பட்டது...*
*குளிர்விக்கும் தன்மையைக் கொண்ட குளிகன் ஒவ்வொரு நாளிலும் நல்ல காரியங்களைத் தொடங்கவே உருவாக்கப் பட்டான்.*..
*குளிகனை சனிக்கிழமைகளில் மாலை வேளைகளில் வணங்கலாம்...*
*சனீஸ்வரனை வணங்கும்போது மனதினில் குளிகனை எண்ணி வணங்கலாம்....*
*இராகுகாலம், எமகண்டத்தில் எப்படி ஒரு நல்ல செயலை செய்ய மாட்டார்களோ, அதேபோல குளிகை நேரத்தில் செய்யப்படும் எந்தக் காரியமும் திரும்பத் திரும்ப நடக்கும் என்ற நம்பிக்கை வெகு காலமாக இருந்து வருகிறது.*
*இதனால் நல்ல காரியங்களுக்கு குளிகை நேரம் உகந்ததாகவும், ஈமச்சடங்கு போன்ற கெட்ட காரியங்களுக்கு இது பொருத்தமில்லாததாகவும் கருதப்படுகிறது.குளிகை நேரத்தில் ஒரு காரியத்தைத்* *தொடங்கினால், அது வளர்ந்து கொண்டே இருக்கும் என்பது நம்பிக்கை...*
*குளிகை என்ற நல்ல வேளையில் சொத்து வாங்குவது, சுப நிகழ்வுகள், கடனைத் திருப்பிக் கொடுப்பது, பிறந்தநாள் கொண்டாடுவது போன்றவற்றைச் செய்வதால், அவை எந்தத் தடையும் இல்லாமல் நடப்பது மட்டுமின்றி, இது போன்ற நல்ல நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடந்துகொண்டும் இருக்கும்...*
*ஆனால் அடகு வைப்பது, கடன் வாங்குவது, வீட்டைக் காலிசெய்வது, இறந்தவர் உடலைக் கொண்டு செல்வது போன்றவற்றை குளிகை நேரத்தில் செய்யக் கூடாது..*
*ஆக..தொட்டதைத் துலங்கச் செய்யுமாம் குளிகன் என்ற மாந்தனின் நேரம்...*
*‎ஓம் நமசிவாய

Monday, 17 September 2018

#இந்துக்கள்_எதை_செய்யக்கூடாது - #இந்து_தர்ம_சாஸ்திரம்...

                                      இந்துக்கள்_எதை_செய்யக்கூடாது -
                                                    இந்து_தர்ம_சாஸ்திரம்
 இடது கையால் ஆசனம் போட்டால் ஆயுள் குறைவு;
இடது கையால் எண்ணெய் தேய்த்துக் கொண்டால் புத்திர நாசம்;
இடது கையால் சாப்பாடு போட்டுக் கொண்டால் செல்வம் அழியும்;
இடது கையால் படுக்கையை போட்டால் இருப்பிடம் சேதமாகும்.
ஜோதிடர், குரு, நோயாளி, கர்ப்பிணி, மருத்துவர், சந்நியாசி முதலியவர்களுக்கு, அவர்களுடைய ஆபத்துக் காலத்தில் கண்டிப்பாக உதவ வேண்டும். இது மிகவும் புண்ணியம்.
சகோதரன் அல்லது சகோதரி தாழ்ந்த நிலையிலிருந்தால், அவர்களுக்கு உதவ வேண்டும்.
பசு, தேர், நெய்குடம், அரச மரம், வில்வம், அரசுடன் சேர்ந்த வேம்பு இவைகள் எதிரில் குறுக்கிட்டால், வலது புறம் சுற்றி செல்ல வேண்டும்.
குடும்பஸ்தன் ஒரு ஆடை மட்டும் அணிந்து உணவு உட்கொள்ள கூடாது.
ஒரு கையை தரையில் ஊன்றி சாப்பிடக் கூடாது.
துணியில்லாமல் குளிக்கக் கூடாது.
சூரியனுக்கு எதிரில் மலஜலம் கழிக்கக் கூடாது.
கன்றுக் குட்டியின் கயிறை தாண்டக் கூடாது. மழை பெய்யும் போது ஓடக் கூடாது.
#தண்ணீரில் தன் உருவத்தை பார்க்கக் கூடாது.
நெருப்பை வாயால் ஊதக் கூடாது.
கிழக்கு, மேற்கு முகமாக உட்கார்ந்து மலஜலம் கழிக்கக் கூடாது.
எதிர்பாராத விதத்திலோ, தவறு என்று தெரியாமலோ, பெண்கள் கற்பை இழந்து விட்டால், புண்ணிய நதியில், 18 முறை மூழ்கிக் குளித்தால் தோஷம் நீங்கும்.
திருமணம் ஆகாமலே ஒரு பெண்ணுடன் வாழ்பவனை சுபகாரியங்களில் முன்னிறுத்தக் கூடாது.
சாப்பிடும் போது, முதலில் இனிப்பு, உவர்ப்பு, புளிப்பு, கசப்பு பதார்த்தங்களை வரிசையாக சாப்பிட்டு, பின் நீர் அருந்த வேண்டும்.
சாப்பிடும் போது தவிர, மற்ற நேரத்தில் இடது கையால் தண்ணீர் அருந்தக் கூடாது.
கோவணமின்றி, வீட்டின் நிலைப்படியை தாண்டக் கூடாது.
இருட்டில் சாப்பிடக் கூடாது. சாப்பிடும் போது விளக்கு அணைந்து விட்டால், சூரியனை தியானம் செய்து, மீண்டும் விளக்கேற்றி விட்டு சாப்பிட வேண்டும்.
சாப்பிட்டவுடன் குடும்பஸ்தன் வெற்றிலை போட வேண்டும். வெற்றிலை நுனியில் பாவமும், முனையில் நோயும், நரம்பில் புத்திக் குறைவும் உள்ளதால் இவற்றை கிள்ளி எறிந்து விட வேண்டும்.
சுண்ணாம்பு தடவாமல் வெற்றிலையை வெறுமனேயோ, வெறும் பாக்கை மட்டுமோ போடக் கூடாது. வெற்றிலையின் பின்பக்கம் தான் சுண்ணாம்பு தடவ வேண்டும்.
(அறிவுரை) மனைவி, கணவனுக்கு வெற்றிலை மடித்துக் கொடுக்கலாமே தவிர, கணவன், மனைவிக்கும், மகன், தாய்க்கும், பெண், தந்தைக்கும் மடித்துத் தரக் கூடாது.
குரு, ஜோதிடர், வைத்தியர், சகோதரி, ஆலயம் இங்கேயெல்லாம் செல்லும் போது வெறுங்கையுடன் செல்லக் கூடாது.
தலையையோ, உடம்பையோ வலக்கையினால் மட்டும் சொறிய வேண்டும். இரண்டு கைகளாலும் சொறியக் கூடாது.
இரு கைகளாலும் தலைக்கு எண்ணெய் தேய்க்க கூடாது. வலது உள்ளங்கையில் எண்ணெய் ஊற்றி தலையில் தேய்க்க வேண்டும்.
தலைவாசலுக்கு நேரே கட்டில் போட்டோ, தரையிலோ படுக்கக் கூடாது.
வானவில்லை பிறருக்கு காட்டக் கூடாது.
மயிர், சாம்பல், எலும்பு, மண்டையோடு, பஞ்சு, உமி, ஒட்டாஞ்சில்லி இவற்றின் மீது நிற்கக் கூடாது
பேசும் போது துரும்பைக் கிள்ளிப் போடக் கூடாது.
ஈரக்காலுடன் படுக்கக் கூடாது.
வடக்கிலும், கோணத் திசைகளிலும் தலை வைத்து படுக்கக் கூடாது. நடக்கும் போது முடியை உலர்த்த கூடாது.
ஒரு காலால், இன்னொரு காலை தேய்த்துக் கழுவக் கூடாது.
(அறிவுரை) தீயுள்ள பொருட்களை தரை மேல் போட்டு காலால் தேய்க்கக் கூடாது. பூமாதேவியின் சாபம் ஏற்பட்டு, பூமி, மனை கிடைக்காமல் போய் விடும்.
பகைவன், அவனது நண்பர்கள், கள்வன், கெட்டவன், பிறர் மனைவி இவர்களுடன் உறவு கொள்ளக் கூடாது
#பெற்ற_தாய்_சாபம், செய்நன்றி கொல்லுதல், பிறன் மனைவி கூடுதல் இவை மூன்றுமே பிராயச்சித்தமேயில்லாமல் அனுபவித்தே தீர வேண்டிய பாவங்கள்.
(அறிவுரை) அங்கஹீனர்கள், ஆறு விரல் உடையவர்கள், கல்வியில்லாதவர்கள், முதியோர், வறுமையிலுள்ளவர்கள் இவர்களது குறையை குத்திக் காட்டிப் பேசக் கூடாது
ரிஷி, குரு, ஜோதிடர், புரோகிதர், குடும்ப வைத்தியர், மகான்கள், கெட்ட ஸ்திரியின் நடத்தை இவர்களைப் பற்றி வீண் ஆராய்ச்சியில் ஈடுபடவோ, அவர்களிடம் உள்ள தவறுகளை விளம்பரப்படுத்துவதோ கூடாது.
பிறர் தரித்த உடைகள், செருப்பு, மாலை, படுக்கை இவற்றை நாம் உபயோகிக்கக் கூடாது.
பிணப்புகை, இளவெயில், தீபநிழல் இவை நம் மீது படக் கூடாது.
(அறிவுரை) பசுமாட்டை காலால் உதைப்பது, அடிப்பது, தீனி போடாமலிருப்பது பாவம்
பசு மாட்டை, "கோமாதா வாக எண்ணி, சகல தேவர்களையும் திருப்திப்பட வைப்பதற்கு, அம்மாட்டுக்கு, புல், தவிடு, தண்ணீர், புண்ணாக்கு, அகத்திக்கீரை கொடுப்பது புண்ணியம்.
தூங்குபவரை திடீரென்று எழுப்பக் கூடாது; தூங்குபவரை உற்றுப் பார்க்கக் கூடாது.
பகலில் உறங்குவது, உடலுறவு கொள்வது கூடாது.
தலை, முகம் இவற்றின் முடியை காரணம் இல்லாமல் வளர்க்கக் கூடாது.
அண்ணன் - தம்பி; அக்காள் - தங்கை; ஆசிரியர் - மாணவர்; கணவர் - மனைவி; குழந்தை- தாய்; பசு - கன்று இவர்களுக்கு இடையில் செல்லக் கூடாது.
வீட்டுக்குள் நுழையும் போது, தலைவாசல் வழியாகத் தான் நுழைய வேண்டும்.
நம்மை ஒருவர் கேட்காதவரையில், நாம் அவருக்கு ஆலோசனை கூறக் கூடாது...
என்ன இது?
இதெல்லம் சரியா?
ஏன் இப்படியெல்லாம் இந்து தர்மம் சொல்கிறது?

இவற்றிலெல்லாம் அறிவியல் உண்மைகள் நிறைந்து கிடக்கின்றன
தேடிப்பாருங்கள்

Sunday, 16 September 2018

🙏உமீழ் நீர்:உயிர் நீர்


              🙏உமீழ் நீர்:உயிர் நீர்
_சர்க்கரை நோய்க்கான எளிய; முற்றிலும் இலவசமான, இயற்கை மருந்து!!_
_```சர்க்கரை நோய்க்கும் வாயில் ஊறக்கூடிய உமிழ்நீருக்கும் என்ன சம்மந்தம்?```_
_```உணவுடன் கலந்து செல்லும் உமிழ்நீர்தான், கணையத்திலிருந்து இன்சுலினைச் சுரக்கத் தூண்டும் இயற்கை மருந்து!!```_
_```உமிழ்நீர் எனும் இயற்கை மருந்தை நம் முன்னோர்கள், தாங்கள் உண்ணும் உணவுடன் , அதிக அளவு எடுத்துக் கொண்டனர்!!```_
_```வாழ்வதற்காக உண்டனர்! உண்பதற்காக வாழ்ந்தனர்!```_
_```அதனால்தான் பொறுமையுடனும், அமைதியுடனும், பொறுப்புடனும் உணவு சாப்பிட்டனர்!!```_
_```அதனால் அவர்கள் சாப்பிடும் உணவுடன் உமிழ்நீர் அதிக அளவு கலந்து வயிற்றுக்குள் சென்றது. கூடுதல் உமிழ்நீரை சுரக்கச் செய்வதற்காக ஊறுகாயைச் சிறிதளவு எடுத்துக் கொண்டனர். நம் முன்னோர்களுக்கு உமிழ்நீரின் அருமை தெரிந்திருந்ததால் ஊறுகாய் என்ற உணவுப் பொருளை கண்டுபிடித்துப் பயன்படுத்தினர்!!```_
_```உமிழ்நீரை அதிக அளவு எடுத்துக் கொண்டதால், கணையத்திலிருந்து இன்சுலின் சுரப்பதற்கு எந்தத் தடையும் ஏற்படவில்லை!!```_
_```"தூண்டல், துலங்கல்" என்ற விதியின் படி உமிழ்நீர் என்ற தூண்டுதலால் இன்சுலின் என்ற துலங்கல் சுரக்கப்படுகிறது!```_
_```நம் முன்னோர்கள் நாட்களைக் கணக்கிட்டு, மாதங்களைக் கணக்கிட்டு வேலை பார்த்தனர்!!```_
_```தற்காலத்தில் நாம் மணியைக் கணக்கிட்டு, நிமிடத்தைக் கணக்கிட்டு, நொடியைக் கணக்கிட்டு வேலை பார்க்கிறோம்!!```_
_```அந்த அளவிற்கு நமது வாழ்க்கையின் வேகம் அதிகரித்து விட்டது. உணவு சாப்பிடும் வேகமும் அதிகரித்துவிட்டது!```_
_```வாழ்க்கைக்கான சாப்பாடு என்ற மனநிலை மாறி, சாப்பிடுவதும் ஒரு 'வேலை'தான் என்ற மனநிலைக்கு வந்துவிட்டோம்!```_
_```உணவை ரசித்து, ருசித்து; உமிழ்நீர் கலந்து சாப்பிடாமல், அவசர அவசரமாக வாயில் போட்டு விழுங்குகிறோம்!!```_
_```நாம் விழுங்கும் உணவில் உமிழ்நீர் இல்லாததால், அந்த உணவுக்கு இன்சுலின் சுரக்காது!```_
_```உணவிலுள்ள குளுக்கோசு, கிளைக்கோசனாக மாறாமல், அது சர்க்கரையாகவே இரத்தத்தில் தங்கிவிடும்!```_
_```நாளடைவில் அது சர்க்கரை நோய் என்று அழைக்கப்படும் நீரிழிவு நோயாக மாறிவிடுகிறது!!```_
_```சர்க்கரை நோய்க்கு மிகச்சிறந்த இயற்கை மருந்து நம் வாயில் ஊறும் உமிழ்நீர்தான்!!```_
_```எனவே; நாம் சாப்பிடும் ஒவ்வொரு உணவிலும் உமிழ்நீர் கலந்து சாப்பிட பழகிக் கொள்ள வேண்டும்!```_
_```நாம் குடிநீர் அல்லது தேநீர் அருந்தினால் கூட உமிழ்நீர் கலந்துதான் வயிற்றிற்குள் அனுப்ப வேண்டும்!!```_
_```நீரிழிவு நோய் எனும் செயற்கையான நோயை உமிழ்நீர் எனும் இயற்கையான மருந்து கொண்டு அழித்து ஒழிப்போம்!!```_
_```இந்த உண்மையை உலகிற்கு சொல்வதால், சர்க்கரை நோயை வைத்துப் பிழைப்பு நடத்தும் பணப்பேய்கள் விடமாட்டார்கள். அந்தப் பணப் பேய்களிடமிருந்து நம் மக்களை மீட்க வேண்டும். எனவே இதை அதிக நபர்களுக்குப் பகிருங்கள்!
👌நொறுங்கத் தின்னா நூறு வயசு..
🙏உமீழ் நீர் : உயிர் நீர்

Saturday, 15 September 2018

நாகதோஷ பரிகாரம் பற்றிய 50 சிறப்பு தகவல்கள்...

நாகதோஷ பரிகாரம் பற்றிய 50 சிறப்பு தகவல்கள்...

நாகதோஷ பரிகாரம் பற்றிய 50 சிறப்பு தகவல்கள்...
கஷ்டங்களை அனுபவிப்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள நாக தோஷ பரிகாரம் பற்றிய 50 சிறப்பு தகவல்களை படித்து பலன் பெறலாம்.
1. "கால சர்ப்பயோகம் கொண்ட ஜாதகர்கள், ராகு காயத்திரியையும் கேது காயத்திரியையும் ஆயுள் முடியுமட்டும் தினமும் தங்களால் முடிந்த அளவு ஜபித்துக் கொண்டே வருவது மிகச் சிறந்த பரிகாரம்.
2. ஜோதிட சாஸ்திரத்தில் நிழற்கிரகங்கள் என்று ராகு கேதுவை வர்ணக்கப்பட்டாலும் இவர்கள் இரண்டு பேரும் சனி பகவானின் பிரதிநிதிகளாகத் திகழ்கிறார்கள்.
3. கிரந்தங்களிலும் பல்வேறு ஓலை சுவடிகளிலும் ராகு-கேதுவின் பெருமைகளைப் பற்றியும் அவர்கள் ஒவ்வொரு ராசிகளில் சஞ்சரிக்கும்போது என்ன என்ன செய்வார்கள் என்பதைப் பற்றி நிறைய செய்திகள் உள்ளன.
4. ஜாதகத்தில் லக்னத்தில் இருந்து 1, 5, 9 இந்த ஸ்தானங்களில் சனி, ராகு, கேது, போன்ற கிரகங்கள் இருக்கும் பொழுது அது நாகதோஷம் உடைய ஜாதகமாகிறது.
5. நாக தோஷம் உடையவர்களுக்கு உடலில் ஏதோ ஒரு இடத்தில் நாகம் போன்ற உருவம் கொண்ட மச்சமோ, அல்லது தழும்போ இருக்கும் என்று சொல்வதில் உண்மை இல்லை.
6. ஜாதகத்திலே நாக தோஷம் இருப்பவர்களுக்கு நான்கு, பதி மூன்று, இருபத்தி இரண்டு, முப்பத்தி ஒன்று, இந்த தேதியில் பிறந்தவர்களுக்கும், அல்லது பெயரின் கூட்டு எண் நான்கு வந்தாலும், இவர்களுடைய கண்களுக்கு பாம்புகள் அடிக்கடி தென்படும்.
7. நாக தோஷங்கள் எதனால் ஏற்படுகிறது என்று பார்த்தால் முன் ஜென்மத்தில் ஆண் நாகமும், பெண் நாகமும் ஒன்றாக இணைந்து இருக்கும் பொழுது அதை துன்புறுத்தினால், இந்த ஜென்மத்தில் அவருடைய ஜாதகத்தில் லக்னத்துக்கு ஏழாம் இடத்தில் ராகு என்ற கருநாகம் நின்று கணவனுக்கு தோஷத்தை எற்படுத்தும்.
8. பாம்பு தன்னுடைய பசிக்காக இரையை தேடி செல்லும் பொழுது அதை துன்புறுத்தினால் இந்த ஜென்மத்தில் அவருடைய ஜாதகத்தில் தொழில் ஸ்தானமான லக்னத்துக்கு பத்தாம் இடத்தில் ராகுவோ, கேதுவோ நின்று, தொழில் ஸ்தானத்துக்கு தோஷத்தை உருவாக்கும்.
9. பாம்பு முட்டையிட்டு குஞ்சு பொரிக்கும் காலத்திலும், அல்லது தனது குட்டிகளுடன் ஒன்றாக இருக்கும் பொழுது அதை துன்புறுத்தினால் இந்த ஜென்மத்தில் அவருடைய ஜாதகத்தில் லக்னத்துக்கு ஐந்தாம் இடமான புத்திர ஸ்தானத்தில், ராகுவோ, கேதுவோ நின்று நாக தோஷத்தை ஏற்படுத்தும்.
10. புராண காலங்களில் நாகதோஷம் எதற்காக பார்க்கப்பட்டது என்றால், ஒருவர் சன்னியாசம் பெற்று காடுகளிலும், மலைகளிலும், கடுமையான தவங்கள் செய்வதற்கு கடுமையான விஷ ஐந்துகளினால் இவருக்கு ஆபத்து ஏற்படுமா என்பதை அறிந்த பின்னரே அவருக்கு சன்னியாசம் கொடுக்கப்பட்டது. நாக தோஷம் இதற்காகத்தான் பார்க்கப்பட்டது. நாளடைவில் அது ஒரு பயப்படக் கூடிய தோஷமாக பார்க்கப்பட்டது.
11. கும்ப கோணத்தில் இருக்கும் திருநாகேஸ்வரம், ஆந்திர மாநிலத்தில் திருப்பதிக்கு அருகில் உள்ள திருகாளகஸ்தி, சென்னை அருகில் உள்ள கருமாரியம்மன் திருக்கோயிலுக்கு, சென்று வணங்கி வருவது நாக தோஷங்களை நீக்கும் பரிகாரமாகும்.
12. ஒவ்வொரு மாதமும் திரியோதசி திதியன்று, சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு நடைபெறுகிறது. பிரதோஷ வேளையில் மாலை 4.30 மணியில் இருந்து 6 மணிக்குள் இவ்வழிபாடு நடைபெறும். ராகு கேதுவால் ஏற்படும் நாக தோஷத்தை போக்க இது சிறந்த வழிபாடாகும்.
13. சர்ப்ப பரிகாரங்கள் செய்யும்போது மிகுந்த ஆசாரத்துடன் செய்ய வேண்டும். சைவ உணவு விரதம் மேற்கொள்ள வேண்டும். தான தர்மங்களை மனம் கோணாமல், மனமுவந்து நம்மால் முடிந்த அளவு செய்ய வேண்டும்.
14. நாகப் பிரதிஷ்டம் என்பது ஆண் பாம்பும் பெண் பாம்பும், நாகப்பாம்பும், சாரைப் பாம்பும் இணைவது போன்று கல்லில் வடித்து அரசும், வேம்பும் சேர்ந்திருக்கும் இடத்தில் பிரதிஷ்டை செய்தால் விசேஷம் என்று மனுநீதி என்ற நூலில் கூறப்பட்டிருக்கிறது.
15. திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவிலில் கோமதி அம்மன் ஆலயம் உள்ளது. நாக தோஷம் உள்ளவர்கள் இந்தக் கோவிலுக்கு வெள்ளிக்கிழமை அன்று வந்து பாம்பு புற்றுக்கு பால், பழம் வைத்து வழிபடுகின்றனர். இவ்வாறு 11 வாரம் தொடர்ந்து புற்றுக்கு பால், பழம் வைத்து வழிபட்டு வந்தால் நாக தோஷத்தால் தடைப்பட்டு வரும் திருமணம் விரையில் நடைபெறும்.
ராமேஸ்வரம் சென்று மூன்று நாள் தங்கி கடலில் நீராடி ராமலிங்க சுவாமியை வணங்கி வந்தால் கர்ப்ப தோஷம் பரிகாரமடைந்து புத்திரர் பிறப்பார்கள்.
17. தங்கம் அல்லது வெள்ளி சிறு ஐந்து தலை நாகம் செய்து வீட்டில் வைத்து நாற்பது நாள்கள் பாலபிஷேகம் செய்து, பூசித்து பிறகு ஒருவருக்கு புது வேட்டி துண்டு தாம்பூலம் தட்சணையுடன் நாக விக்கிரகத்தையும் தானம் செய்யலாம்.
18. கருங்கல்லில் நாகப் பிரதிஷ்டை செய்து ஆறு, குணம் அருகில் வைத்து நாற்பது நாள்கள் பாலபிஷேகத்துடன் பூசித்து தினமும் 108 முறை வலம் வந்தால் நாக தோஷம் நிவர்த்தியாகும்.
19. இரண்டு நாகங்கள் பின்னிக் கொண்டு ஒன்றின் முகத்தை ஒன்று பார்க்குமாறு கல்லில் வடித்து அரசமரத்தின் அடியில் பிரதிஷ்டை செய்து நாற்பது நாள்கள் விளக்கேற்றி வைத்து பூசித்தால் நாகதோஷம் விலகும்.
20. கண்ணன் நடனமாடுவது போலவும், அவனுக்கு ஐந்து தலை நாகம் குடை பிடிப்பது போலவும் கல்லில் வடித்து வேம்பும் அரசும் இணைந்திருக்கும் குளக்கரையில் பிரதிஷ்டை செய்து நாற்பது நாள் விளக்கேற்றி வலம் வந்து வணங்கினால் நாகதோஷம் நிவர்த்தியாகும்.
21. சிவலிங்கத்திற்கு ஐந்து தலை நாகம் குடை பிடிப்பது போல் சிலை வடித்து நதிக்கரை அல்லது, குளக்கரையில் பிரதிஷ்டை செய்து, நாற்பது நாள் பூசித்து வலம் வந்தால் நாகதோஷம் பரிகாரமாகும்.
22. குளம் அல்லது நதிக்கரையில் அரசு, வேம்பு கன்றுகளை நட்டு, முறையாகத் திருமணம் செய்து குறைந்தது நூறு தம்பதிகளுக்கு விருந்தும் தட்சணை தாம்பூலம் அளித்தால் நாகதோஷம் நிவர்த்தியாகி புத்திரர்கள் பிறப்பதுடன் வாழ்க்கையும் இன்பமாக அமையும்.
23. வசதி உள்ளவர்கள் ஓர் ஏழைக்கு பயிர் நிலம் வாங்கி தானம் அளித்தால் நாகதோஷம் நிவர்த்தியாகும்.
24. ராகு காலத்தில் பாம்புப் புற்றுக்கு முட்டை, பால் வைத்து வழிபாடு செய்வது நற்பலன்களை உண்டாக்கும்.
25. கோமேதகக் கல் வைத்த மோதிரம் அணியலாம். இதனால் ராகுவினால் உண்டாகும் அசுப பலன்கள் குறையும்.
26. ராகு பகவானுக்கு உளுந்து வடை விசேஷமாகும். அதை நெய்வேத்தியம் செய்து தானம் செய்யலாம். கருப்பாக உள்ளவரிடம் நான்கு வடைகள் கொடுத்து சாப்பிடச் சொல்வது நல்லது.
27. ராகு, கேதுகளினால் தோஷம் ஏற்பட்டு பருவமடைந் தும் நீண்ட காலம் திருமணம் ஆகாமல் இருக்கும் பெண்கள் அரச மரமும், வேப்ப மரமும் சேர்ந்துள்ள இடத்தின் கீழுள்ள நாக சிலைக்கு பால் விட்டு, அபிஷேகம் செய்து வர வேண்டும். செவ்வாய்க் கிழமையில் செய்வதே நல்லது. இவ்வாறு 48 நாட்கள் செய்ய வேண்டும்.
28. பாம்பு புற்றுக்கு பால் வார்த்தும் முட்டை வைத்தும் ஒரு மண்டலம் வழிபாடு செய்யலாம். இதனால் திருமணம் விரைவில் நடக்கக்கூடும். புத்திர பாக்கியம் இல்லாதவர்களுக்கும், நாகதோஷம் நீக்கி புத்திர பாக்கியம் விரைவில் கிடைக்கும். திருமணம் விரைவில் நடக்கவும் இதுபோல் வழிபாடு செய்து வர வேண்டும்.
29. ராகு பகவானுக்கு உளுந்து பிரீதியான தானியம் ஆகும். இதை நவக்கிரக சன்னதியில் தெற்கு நோக்கி அமர்ந்திருக்கும் ராகுவுக்கு வைத்து வலம் வந்து பூஜித்தால் தோஷம் நீங்கும். இதனால் சகல கஷ்டங்களும் நீங்கும்.
துர்க்கா சூக்த மந்திரங்களை ஜபித்து ஹோமங்களில் அருகு, மந்தாரை போன்ற மலர்களையும், உளுந்து போன்ற கருநிற தானியங்களையும், புளிப்பு பண்டங்களையும் ஆஹ¨தி செய்தால் வாழ்க்கையில் பகைவர்களை நிர்மூலமாக்குகிற பராக்கிரமம் ஜாதகருக்கு ஏற்படுகிறது.
32. ராகு, கார்கோடன் என்ற பெயர்கொண்டு மந்தாரை மலர் சூடி கருப்பு சித்திர ஆடை அணிந்து, உளுந்து தானியம் ஏற்றி, வேம்பு எண்ணெய் தீப ஒளியில் ஸ்ரீஅனந்த பத்மேஸ்வரர் ஆலயம் (லிங்கப்பன் தெரு, ஏகாம்பரநாதர் கோவில் அருகில்) பெரிய காஞ்சீபுரத்தில் யோகங்களை வாரி வழங்குகிறார். தோஷங்களை போக்குகிறார்.
33. ராகு ஜாதகத்தில் உள்ள சூழ்நிலைக்கு ஏற்ப தனித்தனி பரிகாரங்கள் இருந்தாலும் ராகு தோஷத்தால் தவிப்பவர்கள் செய்ய வேண்டிய பொதுவான பரிகார வழிபாடு வருமாறு:-
34. தினசரி துர்க்கை அம்மனுக்குரிய ஸ்தோத்திரங்களை படித்து வர வேண்டும்.
35. தினசரி அரசு, வேம்பு மரத்தடியில் உள்ள விநாயகர், நாகர் சிலைகளை 9 தடவை வலம் வர வேண்டும்.
36. துர்க்கைக்கு அவர்கள் இருக்கும் கிரக வீட்டின் அதிபர்கள் கிழமைகளில் அர்ச்சனை செய்ய வேண்டும்.
37. நவக்கிரக பீடத்தில் உள்ள ராகு பகவானை தினசரி வலம் வர வேண்டும். பிரச்சனையின் தீவிரத்திற்கு ஏற்ப 9, 27, 108 என சுற்றுகளை அமைத்துக் கொள்ள வேண்டும். தொடர்ந்து இவ்வாறு 48 நாட்கள் வலம் வர தோஷங்கள் யாவும் நீங்கும்.
38. ராகு பகவானுக்குரிய தியான மற்றும் காயத்ரி அஷ்டோத்திர மந்திரங்களை தினமும் ஒரு முறையாவது சொல்லி வர வேண்டும்.
39. கேது பகவானுக்கு பரிகாரமாக ராமேஸ்வரம் சென்று சாந்தி செய்வது உத்தமம். காஞ்சியில் உள்ள சித்ரகுப்தன் கோவில் சென்று வழிபாடு செய்வது உத்தமம்.
40. வெள்ளியில் ஐந்து சிரசு நாகர் வைத்து பூஜை வழிபாடு செய்வது உத்தம பலன்கள் உண்டாகும்.
41. கேது பகவானுக்கு அதிதேவதை விநாயகர், முதற்கடவுளான விநாயக பெருமானை ஞாயிறு அன்று தவறாமல் வழிபாடு செய்ய வேண்டும்.
42. குமரி மாவட்டத்தில் இருக்கிறது நாகர்கோவில். இங்குள்ள நாகர் ஸ்தலத்தில் நாக வழிபாடு செய்வது என்பது மிகவும் சிறப்பு. பலரும் சென்று வழிபட்டு பலன் அடைகிறார்கள்.
43. அரச மரத்தடியில் நாகர் சிலையை வழிபட்டு, நாகருக்கு பால் ஊற்றி
மரத்தை சுற்றிவரும் பெண்கள் தங்கள் மணாளனுடன் ஒருமித்து வாழவும், மகப்பேறு பெற்று சக்தியின் கருணையையும், அருளையும் பெறுகிறார்கள் என்பது பலரும் அறிந்த உண்மை.
44. கேது பகவான் பரிகாரமாக ஷோடச கணபதி ஹோமம் செய்வது விசேஷம். மேலும் சண்டி ஹோமம் செய்வதால் கேது பகவானை திருப்திப்படுத்த முடியும்.
45. கேதுவுக்கு உரிய அதி தேவதையான விநாயகருக்குரிய ஸ்தோத்திரங்கள், கேது ஸ்தோத்திரங்கள் படித்துவர வேண்டும். தினமும் அரசு, வேம்பு, விநாயகர், நாகர் ஆகியோரை 9 தடவை அல்லது விநாயகர் ஆலயத்தை 9 தடவை வலம் வரலாம்.
46. கேது இருக்கும் கிராகாதிபர் கிழமைகளில் கேதுவுக்காவது, விநாயகருக்காவது அர்ச்சனை செய்ய வேண்டும். செவ்வாய் பகவானுக்கு செய்கின்ற பரிகாரம் கேதுவுக்கும் பொருந்தும் என்ற கருத்துண்டு.
47. மாத சங்கடஹர சதுர்த்தி அன்று விநாயகருக்கு அருகம்புல்லினால் அர்ச்சனை செய்து வரவும். ஞாயிறு தோறும் ஆஞ்சநேயப் பெருமானை துளசியினால் அர்ச்சித்து வரலாம்.
48. கேதுவுக்கு உரிய தியானம் காயத்ரி, அஷ்டோத்திர மந்திரங்களை தினமும் ஒருமுறை கூறி வரலாம்.
49. கேது பகவானுக்கு ராகு காலம் மற்றும் எமகண்டத்தில் விசேஷ அபிஷேகம் மற்றும் பூஜை நடத்தலாம். அப்போது 16 வகையான அபிஷேகம் மற்றும் ஹோமம் செய்தும், கொள்ளுப்பொடி, உப்பு, மிளகு கலந்த சாதத்தை நைவேத்யாமாக படைத்தும், பலவண்ண வஸ்திரம் சாத்தியும், நல்லெண்ணெய் விளக்கு ஏற்றியும் வழிபட வேண்டும். கொள்ளு சாத பிரசாதத்தை கோவிலிலேயே வினியோகித்து விட வேண்டும். வீட்டிற்கு எடுத்துச் செல்லக்கூடாது.
50. சனி, திங்கள் மற்றும் ஜென்ம நட்சத்திரத்தில் கேதுவை வழிபடுவது விசேஷம். தொழில், வியாபாரம் சிறக்கவும், வழக்கு, தம்பதியர் பிரச்சனை, மரணபயம், நரம்பு, வாயு தொடர்பான பிரச்சனைகள் நீங்கவும் கேதுவிடம் வேண்டிக் கொள்ளலாம்.நன்றி🙏                                                                                         -                                                    நாகதோஷம்

எல்லாரும் கேட்டவுடன் சற்று பயப்படுகிற தோஷங்களில் ஒன்று நாக சர்ப தோஷம். இது குறித்த பல்வேறு வதந்திகள் உலா வருகின்றன. கால சர்ப்ப தோஷம் இருந்தால் திருமணத்தடை ஏற்படும் என்று ஜோதிடர்கள் கூறுவார்கள். ஸ்ரீகாலஹஸ்தி, திருநாகேஸ்வரம், திருப்பாம்புரம் உள்ளிட்ட பல கோவில்களுக்கு சென்று பரிகாரம் செய்ய சொல்வார்கள். நாக சர்ப தோஷம் என்றால் என்ன? அது கால சர்ப்ப யோகமாக எப்போது மாறும் என்பதைப் பற்றியும் தெரிந்து கொள்வோம். முன் ஜென்மத்தில் வாழ்ந்த போது பாம்பிற்கோ அல்லது பிற விலங்கினங்களுக்கோ நீங்கள் கேடு விளைவித்திருந்தால் உங்களுக்கோஅல்லது உங்களது சந்ததியினருக்கோ நாக சர்ப்ப தோஷம் ஏற்படும்.
நவ கிரகங்களில் நிழல் கிரகங்களான ராகுவுக்கும், கேதுவுக்கும் இடையில் சூரியன், சந்திரன், செவ்வாய், புதன்,வியாழன், வெள்ளி, சனி ஆகிய கிரகங்கள் இருந்தால் அவை கால சர்ப்ப யோகம் எனப்படும். ராகு, கேது இரண்டுக்கும் இடையில் மற்ற ஏழு கிரகங்களும் அடங்கியிருக்கும். ராகு கேதுவுக்கு இடையே கிரகங்கள் சிக்கியுள்ள போது பிறக்கும் குழந்தைகளுக்கு கால சர்ப்ப தோஷம் ஏற்படும். கிரகங்கள் அமையும் தன்மை பொருத்து கால சர்ப தோஷம் பல வகைகளாக பிரிக்கலாம்.
லக்னம் எனப்படும் முதல் வீட்டில் ராகு இருக்க கேது ஏழாம் வீட்டிலும் இருப்பர். மற்ற கிரகங்கள் இவர்களுக்கு இடையில் அமைந்திருக்கும். இந்த தோஷம் இருப்பவர்களுக்கு இளமை காலம் மிகவும் சிரமமானதாகவும், கடினமானதாகவும் இருக்கும். சிலருக்கு திருமணத்தடை இருக்கும். திருமணத்திற்கு பிறகான வாழ்க்கை அமைதியாக மாறிவிடும்.
 இரண்டாம் வீடான தன ஸ்தானத்தில் ராகு மற்றும் கேது எட்டாம் வீட்டில் இருந்தால் அதற்கு குளிகை கால சர்ப்ப தோஷம் பொருளாதரப் பின்னடைவு ஏற்படும். 32வயதுக்கு மேல் நன்மைகள் உண்டு.

ராகு மூன்றாம் வீட்டிலும் கேது ஒன்பதாம் வீட்டிலும் இருப்பதை வாசுகி கால சர்ப்பதோஷம் என்கிறார்கள். இவர்கள் எந்த வேலையையும் துணிந்து செய்ய முன் வர மாட்டார்கள். இவர்கள் பார்க்கிற வேலை மற்றும் தொழிலில் ஏதாவது பிரச்சனை வந்து கொண்டேயிருக்கும்.
 நான்காம் வீட்டில் ராகுவும் பத்தாம் வீட்டில் கேது இருந்தால் சங்கல்ப கால சர்ப்ப தோஷம் ஏற்படும். இவர்களுக்கு வாசுகி கால சர்ப்ப தோஷ தாக்கத்துடன் கூடுதலாக மன அழுத்தம் ஏற்படக்கூடும்.
 ஐந்தாம் வீட்டில் ராகு மற்றும் பதினோராம் வீட்டில் கேது இருப்பவர்களுக்கு பத்ம கால சர்ப்ப தோஷம் இருக்கும். இது தான் சற்று மோசமான தோஷமாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால் இது புத்திர தோஷத்தை கொடுக்கக்கூடியது. குழந்தை கிடைப்பதில் சிக்கல்கள் ஏற்படுக்கூடும் இதனால் கணவன் மனைவிக்கு இடையே உறவில் விரிசல் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
ஆறாம் வீட்டில் ராகுவும் பன்னிரெண்டாம் வீட்டில் கேதுவும் இருந்தால் அது மஹா பத்ம கால சர்ப்ப தோஷம். அதிகாரம், பதவி அளித்து புகழின் உச்சிக்கு ஏற்றி விடுவது போல ஏற்றி விட்டு கீழே தள்ளி விடும்.

ஏழாம் வீட்டில் ராகுவின் லக்னத்தில் கேது இருந்தால் அது கால மிருத்யு சர்ப்ப தோஷம்.இவர்களுக்கு 27வயதுக்கு பிறகு தான் திருமணம் செய்ய வேண்டும். அதற்கு முன்னால் செய்து கொண்டால் அது நிலைக்காது.
எட்டாம் வீட்டில் ராகுவும் இரண்டாம் வீட்டில் கேதுவும் இருந்தால் அது கார்க்கேடக கால சர்ப்ப தோஷம். பூர்வீக சொத்துக்களால் இவருக்கு ஆபத்துக்கள் உண்டு. தந்தை வழி சொத்தினை அடைய ஆசைப்பட்டால் தவறாகி விடும்
ஒன்பதாம் வீட்டில் ராகுவும் மூன்றாம் வீட்டில் கேதுவும் இருந்தால் சங்ககுட கால சர்ப்பதோஷம் ஏற்படும். இவர்களுக்கு சீரான ஒரு வாழ்க்கை அமையாது. மேடு பள்ளங்கள் நிறைந்ததாகவே இருக்கும். தொடர்ந்து தனது இருப்பை தக்கவைத்துக் கொள்ள பெரும் போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்க வேண்டிய அவசியம் இவர்களுக்கு உண்டு.
10ஆம் வீட்டில் ராகு மற்றும் நான்காம் வீட்டில் கேது இருந்தால் அதன் பெயர் கடக கால சர்ப்ப தோஷம் ஏற்படும். தொழில் ஸ்தானத்தில் ராகு இருந்தால் வேலை செய்யும் இடத்தில் பிரச்சனைகள் ஏற்படும். அரசாங்க தண்டனையும் கிடைக்கும்.

பதினோராம் இடத்தில் ராகு மற்றும் ஐந்தாம் இடத்தில் கேது இருந்தால் அதன் பெயர் விஷ்தார கால சர்ப்ப தோஷம். அடிக்கடி பயணம் மேற்கொள்கிற வேலை அமையும். இதனால் உடல்நலனில் ஏதாவது சிக்கல்கள் வந்து கொண்டேயிருக்கும்.
பன்னிரெண்டாம் இடத்தில் ராகு மற்றும் ஆறாம் இடத்தில் கேது இருக்க இதனை ஷேஷ கால சர்ப்ப தோஷம் என்பார்கள். இவர்களுக்கு கல்வி யோகம் நிறைய இருக்கிறது. கல்வியில் சிறந்து விளங்குவார்கள். இவர்களுக்கு எதிரிகளும் அதிகமிருப்பார்கள்.
கால சர்ப்ப தோஷம் இருப்பவர்கள் தன்வந்த்ரி பீடத்தில் அஷ்ட கால பைரவரை வணங்குவதுடன் குலதெய்வ வழிபாட்டை மறக்காமல் செய்ய வேண்டும். தோஷத்தின் வீரியம் குறைய தன்வந்த்ரி பீடத்தில் உள்ள அஷ்ட கருடாழ்வாருக்கு தேன் அபிஷேகம் செய்து கருட ஹோமமும் அர்ச்சனையும் செய்வது நல்லது. ராகு கேதுக்கள் நிற்கும் நட்சத்திரத்தின் அதிதேவதைக்கு அர்ச்சனை செய்வது வேண்டும். ஸ்வாதி, சதயம், திருவாதிரை நட்சத்திரம் வரும் நாட்களில் உள்ள பிரதோஷ காலத்தில் சிவனுக்கு வில்வ அர்ச்சனை செய்தால் ராகு கேதுவின் விஷத்தன்மை நீங்கி தோஷத்தின் வீரியம் குறைந்திடும்.

Friday, 14 September 2018

சாபம்.

சாபம்.

 தபஸ்விகள், மகான்கள் ஏதாவது சாபம் கொடுத்தாலும், அது நன்மையிலேயே முடியும். சிலரை பார்த்து, “நீ நாசமற்றுப் போக…’ என்பர் பெரியோர். “நீ நாசமாப் போக…’ என்று சொல்வதில்லை. நாசமற்றுப் போக என்றால், “உனக்கு நாசம் வராமல் போகட்டும்…’ என்று பொருள்.
தேவாசுர யுத்தத்தின் போது, தசரதர் ரதத்தில் இருந்த கடையாணி முறிந்து விட்டது. கைகேயிதான் ரதத்தை ஓட்டி வந்தவள். அவள் உடனே, கடையாணிக்கு பதிலாக, தன் ஆள்காட்டி விரலையே, கடையாணியாக உபயோகித்து, ரதத்தை ஓட்டினாளாம். சந்தோஷமடைந்து கைகேயிக்கு இரண்டு வரங்கள் தருவதாகச் சொன்னார் தசரதர்.
அந்த இரண்டு வரங்களையும் உடனே வாங்கிக் கொள்ளாமல், பிறகு தேவையான போது வாங்கிக் கொள்வதாக சொல்லி, அதை, “ரிசர்வில்’ வைத்து, ராம பட்டாபிஷேகத்தின் போது பெற்றுக் கொண்டாள் கைகேயி; இது, ராமாயணக் கதை.
ரதத்தின் கடையாணிக்கு பதிலாக, ஆள்காட்டி விரலை கடையாணியாக பயன்படுத்த முடியுமா? என்றால், முடியும்!. ஏனெனில், அந்த விரல் மட்டும் இரும்பு விரலாக இருந்தது.
ஒரு சமயம், தசரதரின் அரண்மனையில் துர்வாசர் தங்கியிருந்த போது, அவருக்கு பணி விடை செய்தாள் கைகேயி. துர்வாசருக்கு அடிக்கடி கோபம் வரும்; சாபம் கொடுத்து விடுவார். துர்வாசர் இப்படி கோபம் கொண்டு சாபம் கொடுப்பது வழக்கம். அவருக்கு ஒரு வரம் இருந்தது. அவர் சாபமிட்டால் அவரது தவம் கூடுதலாகுமாம். அதனால், அவர் எப்போதுமே யாரையாவது சாபமிடுவது வழக்கம்.
தசரதருடைய அரண்மனையில் துர்வாசர் தங்கிவிட்டுப் போகும் போது, பக்கத்திலுள்ள தோழிகளிடம், “அதோ போகிறாரே, அவர்தான் துர்வாசர்…’ என்று, தன் ஆள்காட்டி விரலால் காண்பித்தாள் கைகேயி. இதை பார்த்த துர்வாசர், “அந்த ஆள் காட்டி விரல் இரும்பாகப் போகட்டும்…’ என்று சாபம் கொடுத்தார். கைகேயின் ஆள்காட்டி விரல் மட்டும் இரும்பாக மாறியது. ஆனால், அதுவே நன்மையாக முடிந்தது.
தசரதரின் ரதத்திலிருந்த கடையாணி ஒடிந்த போது, தன் ஆள்காட்டி விரலையே கடையாணியாக பயன்படுத்தி ரதத்தை ஓட்டினாள் கைகேயி. சந்தோஷப்பட்டு, இரண்டு வரங்களை தருவதாக சொன்னார் தசரதன். அதை உடனே பெற்றுக் கொள்ளாமல், ராம பட்டாபிஷேக ஏற்பாடுகள் நடந்த போது, அந்த வரங்களை கேட்டு, “ராமன், 14 வருஷம் காட்டுக்குப் போக வேண்டும், பரதன், பட்டாபிஷேகம் செய்து நாட்டை ஆள வேண்டும்…’ என்று கேட்டாள் கைகேயி.
துர்வாசர் கொடுத்த சாபம், கைகேயின் விரல் இரும்பாகட்டும் என்பது. அந்த சாபம், தசரதர் வந்த ரதத்தின் கடையாணிக்கு பதிலாக, கைகேயினுடைய இரும்பு விரல் பயன்பட்டது.

புத்திர தோஷம் பற்றியும், அதற்கான பரிகாரம் !!

புத்திர தோஷம் பற்றியும், அதற்கான பரிகாரம் !!

 நாகதோஷத்தை நீக்கும்
ஒருவருக்கு நாகதோஷம் இருந்தால் திருமணத்தடை ஏற்படும், குழந்தை பாக்கியம் இருக்காது. மேலும் சகல செல்வங்களும் படிப்படியாக குறையும் என்கிறார்கள். ஒருவர், நாக சதுர்த்தி தினத்தன்று வயலில் ஏர் இறங்கி உழுதார். அப்போது சில பாம்பு குட்டிகள் ஏரில் சிக்கி இறந்துவிட்டன. கோபம் கொண்ட தாய் நாகம், அந்த குடும்பத்தையே கொன்றது.
ஆனால் அவரது ஒரு மகள் மட்டும் தப்பினாள். பக்கத்து கிராமத்தில் வசித்த அவள், தனது வீட்டு சுவரில் நாகத்தின் படம் ஒன்றை வரைந்து அதை பயபக்தியுடன் வணங்கி வந்தாள். இதை கண்ட தாய் நாகம், அவளை தீண்டாமல் மனம் மாறி திரும்பியது. திரும்பும்போது, அந்த பெண்ணிடம், `என்ன வரம் வேண்டும்' என்று கேட்டது.
`நீ தீண்டியதால் இறந்த என் குடும்பத்தினர் மீண்டும் உயிர் பெற்று எழ வேண்டும் என்று கேட்டாள் அந்த பெண். தாய் நாகம் மனம் இரங்கி, அந்த குடும்பத்தினரை உயிர்பிழைக்கச்செய்தது. மேலும், நாக சதுர்த்தி தினத்தில் உன்னை யாரெல்லாம் பூஜிக்கிறார்களோ அவர்கள் எல்லா வளமும் பெற்று வாழ்வார்கள் என்றும் நல்வழி காட்டியது.
நாகதோஷம் உள்ளவர்கள் நாக சதுர்த்தி நாளில், ஏதாவது ஒரு கோவிலில் நாகம் வெள்ளி அல்லது கல்லால் ஆன நாகத்தை பிரதிஷ்டை செய்வது நல்லது. அவ்வாறு செய்து வழிபட்டால் நாகதோஷம் நீங்கும். தடைப்பட்ட திருமணம் நடைபெறும். இது வரை இல்லாமல் இருந்த குழந்தை பாக்கியமும் கிட்டும். வாழ்க்கையில் அனைத்துவித ஐஸ்வரியங்களும் வந்து சேரும்
புத்திர தோஷம் பற்றியும், அதற்கான பரிகாரம்
பலன்களையும் பார்ப்போம். ஒருவருக்கு ஜாதகம் கணித்து பலன்களைச் சொல்லும் பொழுது, ஜோதிடர்கள் பதவி பூர்வ புண்ணியனாம் என்று சொல்வதைக் கேள்விப்பட்டிருப்பீர்கள்.
நம்முடைய பூர்வ ஜென்ம புண்ணியத்தால் அல்லது கர்ம வினைப்படியே, இந்த ஜென்மத்திற்கான பாக்கியம், யோகம் முதலியன கிட்டும். மனிதனாகப் பிறந்தவன், பிறப்பின் அர்த்தமான சந்ததியைப் பெருக்க வேண்டும். அதனால் தான், திருமணத்தின்போது மணமக்களை வாழ்த்த, `பதினாறும் பெற்று பெரு வாழ்வு வாழ்க'' என்று பெரியோர்கள் சொல்வார்கள்.
பதினாறு பேறுகள் என்பது, பதினாறு வகையான பாக்கியத்தைக் குறிக்கும். இந்த பேறுகள் வாழ்க்கையில், எல்லோருக்கும் கிட்டி விடுவதில்லை. சில கிடைக்கும், சில கிடைக்காது, பதினாறு பேறுகளில் தலையாய பேறாகச் சொல்லப்படுவது புத்திரப்பேறு.
மற்ற பேறுகள் கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை, புத்திரப்பேறு கண்டிப்பாக அவசியமானது என்று கருதப்படுகிறது. காரணம், அதுவே மனித வாழ்வின் அர்த்தமாகச் சொல்லப்படுகிறது. அதனால் தான் அபிராமி பட்டர் கூட `தவறாத சந்தானம் வேண்டும்'' என்று அபிராமியிடம் வேண்டுகிறார்.
திருமணமான 10 மாதத்தில் சில தம்பதிகளுக்கு குழந்தை பிறந்து விடுகிறது. சிலருக்கு 2,3 வருடங்கள் கழித்து குழந்தை பிறக்கிறது. இன்னும் சிலருக்கு 8,10, 12 ஆண்டுகள் கழித்துத்தான் குழந்தை பாக்கியம் கிடைக்கிறது. சிலருக்கு கர்ப்பம் தரித்தாலும் குழந்தை நிலைப்பதில்லை. இடையிலேயே கருச்சிதைவு ஏற்படுகிறது.
சிலருக்கு குழந்தைப் பேறே கிடைப்பதில்லை. இதற்கு என்ன காரணம் என்று அலசி, ஆராயும் போது, ஜோதிட சாஸ்திரம் கர்ம வினையைச் சுட்டிக் காட்டுகிறது. அந்த வினைப்படி தான் புத்திர பாக்கியம் கிட்டுகிறது. புத்திர பாக்கியம் கிட்டாதவர். புத்திரதோஷம் உடையவராகக் கருதப்படுகிறார்.
சென்ற பிறவியில் பெற்றோரைக் கொடுமைப்படுத்தியதால் பித்ரு சாபம் ஏற்படுகிறது. இதனால் இப்பிறவியில் பெற்றோரோடும், பிள்ளைகளோடும், அமைதியான வாழ்க்கை வாழ முடியாமல், தனித்து, தவித்து வாழவேண்டிய நிர்ப்பந்தம் உருவாகிறது.
இல்லையென்றால் உறவுகளோடு வாழ்ந்தாலும், உதாசீனமும், அவமானமும் அனுதினமும் நடக்கும். உடன் பிறந்தவர்களுக்கு சேர வேண்டிய சொத்து, சுகங்களைத் தராமல், தானே அபகரித்த வாழ்ந்தாலும், அதனால் புத்திர தோஷம் ஏற்படும்.
பூர்வீக சொத்துப் பிரச்சனையில், அதற்கு உரிய உறவுகளுக்கு உரிய பங்கைத் தராமல் போனாலும், உறவுப்பகை, புத்திரர்களால் பகை, அவமரியாதை உருவாகும். இதன் விளைவாக, இப்பிறவியில் தான் பெற்ற பெண், கண்முன்னே வாழாவெட்டியாக வந்த நிற்பதையும், விவாகரத்து பெற்று வாழ்க்கையில் இருந்து விலகி நிற்பதையும் வேதனையுடன் பார்க்க வேண்டிவரும்.
முற்பிறவியில் ஆன்மீக அடியவர்களை, மகான்களை அவமானப்படுத்தியிருந்தால், புத்திர தோஷம் ஏற்பட்டு, பிறக்கும் குழந்தை வளர்ச்சியற்ற குழந்தையாக, ஊனமுற்ற குழந்தையாகப் பிறக்கும். கூன், குருடு, செவிடு போன்ற குறைபாடுகள் உள்ள குழந்தைகள் பிறக்கும் என ஜோதிட சாஸ்திரங்கள் கூறுகின்றன.
மந்திர சாபம், பிரேத சாபத்தால் ஏற்படும் புத்திரதோஷமும் உண்டு. இந்த தோஷத்திற்கு ஆட்பட்டவர்கள். வாழ்வில் எதிர்மறையான காரியங்களையே செய்வார்கள். வேண்டாதவர்களைப் பழி தீர்க்க பில்லி, சூனியம் வைப்பார்கள். மறந்தும் குலதெய்வத்தை வணங்கி விட மாட்டார்கள்.
இதன் பலனாக அமானுஷய நோய்கள் அதாவது புகழ் பெற்ற மருத்துவர்களுக்கும் புலப்படாத நோய்கள் ஏற்படும். பிள்ளைகள் மூலமாக தொடர்ந்து பிரச்சனைகள் ஏற்பட்டுக் கொண்டேயிருக்கும். செய்தொழில் சிறக்காது. செர்ந்த பணம் நிலைக்காது.
அமைதி என்பது மருந்துக்கும் இருக்காது. எனவே புத்திரதோஷம் உள்ளவர்கள், சென்ற பிறவியிலோ, இந்தப் பிறவியிலோ அறிந்தும், அறியாமலும் செய்த தவறுகளுக்கு வருந்தி, திருந்தி உரிய பரிகாரம் செய்தால், கெடு பலன்களின் கடுமையைக் குறைத்துக் கொள்ளலாம்.
இனி ஜோதிட ரீதியாக புத்திர தோஷத்தை ஆராயலாம். ஜெனன கால ஜாதகத்தின்படி பூர்வ புண்ணிய ஸ்தானம் என்பது 5-ஆம் இடமாகும். இந்த இடத்தில் பாவ கிரகங்கள் (ராகு, செவ்வாய், சனி) அல்லது சூரியன் அமர்ந்தால், ஒரு சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்காது.
5-ஆம் இடத்தில் உள்ள பாவக்கிரகங்களை, சுபகிரகங்கள் பார்த்தால் (ஒவ்வொரு லக்னத்திற்கும் சுபக் கிரகங்கள் வேறுபடும்) குழந்தை பாக்கியம் கிடைக்கும். 5-ஆம் இடத்திற்கு உரிய கிரகம், பாவக் கிரகங் களுடன் சேர்ந்தாலும் புத்திர தோஷம் ஏற்படும். 5-க்கு உரியகிரகம், 8-இல் மறைந்திருந்தாலும் தோஷம் ஏற்படும்.
லக்கினத்திற்கு 5-க்கு உரிய கிரகம், லக்னத்திற்கு 3-இல் இருந்தால் சந்தான தோ`ம் உண்டாகும். 5-க்கு உரிய கிரகம் 6,7,8-இல் 4 இருந்தாலும் புத்திர தோஷம் உண்டு. 12-இல் இருந்தால் மனைவிக்கு கருச்சிதைவு ஏற்படும். சுருக்கமாகச் சொன்னால், 5-க்கு உரியவன் 3,6,7,8,12- இல் இருந்தால், புத்திரதோஷம் ஏற்படும்.
லக்கினத்திற்கு 10-க்கு உடையவன். 8-இல் இருந்தாலும் சந்தான தோஷம் உருவாகும். லக்னாதிபதி புதனாக இருந்து சந்திரன் 10-இல் இருந்து, சுக்கிரன் 7-லிலும், 4-ஆம் இடத்தில் ஏதாவது ஒரு பாவக்கிரகம் இருந்தால், வம்சம் விருத்தியாகாது.
பிரம்மஹத்தி தோஷத்தால் ஏற்படும் பாதிப்புகள்
பாவ, புண்ணியங்கள் தான், ஜாதகத்தில் தோஷங்களாகவும், தீயபலன்களாகவும், நற்பலன்களாகவும் பதிவாகும். ஆக பூர்வ ஜென்ம பாவ, புண்ணிய அடிப்படையில் தான் நமக்குப் பிரச்சனைகளும், பாதிப்புகளும் ஏற்படுகிறது. நமக்கு ஜாதக ரீதியாக உள்ள பிரச்சனைகள், பாதிப்புகளைத்தான் தோஷம் என்று சொல்கிறோம்.
பிரம்மஹத்தி தோஷம் பற்றியும், அதற்கான பரிகார பலன்களையும் பார்ப்போம். ஐந்து மகாபாதகங்களைச் செய்பவர்கள் கொடூர நரகத்தில் சிக்கி அல்லல்படுவர். அவர்களோ இப்பூமியில் திரும்ப திரும்ப பிறப்பெடுப்பர் என்று சொல்லப்படுகிறது.
ஐந்து மகாபாதகங்களில், மிகப்பெரிய பாதகமாகச் சொல்லப்படுவது ஒரு தர்ம ஆத்மாவைக் (உயர்நிலை ஆத்மா) கொல்வது. சாதாரணமாக பிரம்மஹத்தி என்ற சொல்லிற்கு பிரம்ம என்றால் பிரம்மன், பிராமணன் என்றும் ஹத்தி என்றால் கொல்லுதல் என்றும் பொருள். பிரம்மனை நோக்கி, தேடிச் செல்பவனை பிராமணன் என்றும் சொல்கிறார்கள்.
பிராமணன் என்றழைக்கப்படுபவன் - பிறப்பினால் அல்ல, தன்னுடைய ஆன்மீக அர்ப்பணிப்பால் உயர்ந்தவன் என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். ஆன்மீக ஒளிபொருந்திய தெய்வீக உடலைச் சிதைத்தால் பிரம்மஹத்தி தோஷம் ஏற்படுகிறது. பிராமணனை (ஆன்மீகவாதியை, தர்ம ஆத்மாவை) கொல்வது பிரம்மஹத்தி தோஷம் என்று சுருக்கமாகப் புரிந்து கொள்ளுங்கள்.
பிராமணனைக் கொன்றால் மட்டுமல்ல, குருவைக் கொன்றவன், குரு பத்தினியை அடைந்தவன். பெற்ற தாயைக் கொன்றவன், பெண்களைக் கொடூரமாகச் சிதைப்பவன், தங்கம் திருடியவன் ஆகியோருக்கெல்லாம் பிரம்மஹத்தி தோஷம் ஏற்படும் என்று சாஸ்திரங்கள் சொல்கின்றன.
இந்த தோஷம் ஏற்பட்டால், வாழ்க்கை என்பது நரகமாக, சித்ரவதைக் கூடமாகவே அமையும், துன்பம் என்றால் அப்படியொரு துன்பத்தை அனுபவிப்பார்கள். அதுவும் தனது கடைசிகால வாழ்க்கையில் அவர்கள் படும் அவலத்தைக் காண சகிக்க முடியாது.
பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டவர்களின் ஜாதகம் எப்படி இருக்கும். லக்னத்திற்கு 4-ஆம் இடத்தில் பாவிகள் இருந்து, 6,8. 12- இல் சுபக்கிரகங்கள் இருந்தாலும். பிரம்மஹத்தி தோஷம் உண்டு. அதாவது ஜாதகர் முன்ஜென்மத்தில் மிகப்பெரிய பாதகத்தைச் செய்திருப்பார் என்று சாஸ்திரம் சொல்கிறது.
ஒருவரின் ஜனன கால ஜாதகப்படி, லக்னத்திற்கு 5,8,9-ஆம் வீடுகளுக்கு அதிபதி பாவியாக இருந்தாலோ அல்லது பாவியர்களுடன் இருந்தாலோ பிரம்மஹத்தி தோஷம் ஏற்படும். தோஷத்தின் வெளிப்பாடாக ஜாதகருக்கு ஏதாவது ஒரு கொடிய நோய் வரலாம்.
சந்ததி இருக்காது. மணவாழ்க்கை இனிக்காது. ராகு தங்கிய வீட்டிலிருந்து 5,9-ஆம் இடங்களில் சனியும், வியாழனும் சேர்ந்து இருந்தாலும் சண்டாளன் ஆவான். சனியும், வியாழனும் சேர்ந்திருப்பது நல்லதல்ல. சனி, வியாழன் சேர்க்கையும் ஒரு பாதத்தில் அல்லது 10 டிகிரிக்குள் இருக்க வேண்டும்.
பிரம்மஹத்தி தோஷ சம்பவங்கள்
சிவன்:- பிரம்ம தேவனின், ஐந்து தலைகளில் ஒன்றை, சிவபெருமான் கிள்ளி எறிந்தார். கொய்த தலையை, கையில் எடுத்துக் கொண்டு அலைந்தார். இறுதியில் கண்டிïர் திவ்விய தேசத்தை வந்தடைந்தார். ஸ்ரீமன் நாராயணனை வணங்கி, புஷ்கரணையில் மூழ்கி எழுந்தார்.
கையில் ஓட்டியிருந்த கபாலம் நீங்கியது. சிவபெருமானப் பீடித்த பிரம்மஹத்தி தோஷமும் நீங்கியதாகப் புராணங்கள் கூறுகின்றன. அந்த இடம் சாப விமோசன பூமியாகக் கருதப்படுகிறது. அங்குள்ள புஷ்கரணியும், கபால தீர்த்தமாகப் போற்றப்படுகிறது.
இந்திரன் : ஒரு முறை, இந்திரன் விருத்ரசூரனை அழித்து விட்டான். இந்திரனை பிரம்மஹத்தி தோஷம் பிடித்துக்கொண்டது. விருத்ரன், ஒரு பிராமணன் என்பதினால் தான். இந்திரனையும் பிரம்மஹத்தி தோஷம் சுற்றி வளைத்தது. தோஷத்தைப் போக்க இந்திரன் திருப்புளியங்குடி திவ்ய தேச தீர்த்தத்தில் நீராடினான். பூமிபாலரையும் வழிபட்டான். பிரம்மஹத்தி தோஷம் நீங்கியது.
ராமாயணம் : -ராமாயண காவியத்தில், தசரதருக்கு பிரம்ம ஹத்தி தோஷம் எப்படி ஏற்பட்டது என்பது விளக்கப்பட்டுள்ளது. தசரதர், தனது இளம் வயதில் காட்டில் வேட்டையாடும்போது, கண் தெரியாத பெற்றோரைக் காப்பாற்றி வந்த ஓர் அந்தணனை அவன், தனது குடத்தில் தண்ணீர் எடுக்கும் ஓசையை வைத்து, யானை என நினைத்து, அம்பெய்திக் கொன்றுவிட்டார்.
அவருக்கு இடையில் ஏற்பட்ட இன்னல்களை வைத்து, அந்தணனைக் கொன்றதால் பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டதாகச் சொல்லப்பட்டது. ராமரும், வேதம் அறிந்த, கலைகள் கற்ற இராவணனைக் கொன்றதற்காக, சேதுசமுத்திரக்கரையில், தனக்கு ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷம் நீங்க `மணல் லிங்கம்'' வைத்து பரிகாரம் செய்ததாக இராமாயணத்தில் சொல்லப்பட்டுள்ளது.
பிரம்மஹத்தி தோஷ நிவர்த்தி பரிகாரத்தலங்கள்
பிரம்மஹத்தி தோஷ ஜாதகர்கள், தங்களது பாவத்தைக் கழுவ, சிவன், பிரம்மா, விஷ்ணு ஆகிய மூம்மூர்த்தி தலங்களுக்குச் சென்று வழிபடலாம். மூம்மூர்த்திகளும் சேர்ந்து காட்சிதந்து அருள்புரியும் திருச்சிக்கு அருகே உள்ள உத்தமர் கோயில். கொடுமுடி, திருவிடைமருதூர், ஸ்ரீவாஞ்சியம் ஆகிய ஆலயங்களிலும் வழிபட்டு நிவாரணம் பெறலாம்.
ஸ்ரீரங்கம், ரெங்கநாதர் ஆலயத்தில், ஸ்ரீ சக்ரத்தாழ்வார் சன்னிதிக்குச் சென்று சக்கரத் தாழ்வாரை வழிபட்டால் பாவங்கள், பாதகங்கள் நீங்கும். திருநள்ளாறு சென்று நீராடி, சனீஸ்வர பகவானை வழிபட்டும் தோஷத்தை நீக்கிக் கொள்ளலாம்.
திருப்புல்லாணி அருகே தேவிபட்டணத்தில் நவபாஷாணம் என்றழைக்கப்படும் சமூத்திரக் கரையில் ராமபிரானால் பிரதிஷ்டை செய்யப்பட்ட நவக்கிரகத்தை வழிபட்டு, பாவ நீக்கம் செய்து கொள்ளலாம். கலியுகத்தில், பிரம்மஹத்தி தோஷத்தில் இருந்து விடுபட ராமேஸ்வரம், மிக முக்கிய தலமாகச் சொல்லப்பட்டிருக்கிறது.
ராமேஸ்வரம் சென்று, அக்னி தீர்த்தம் உட்பட, அனைத்து தீர்த்தங்களிலும் நீராடி, சங்கல்ப பூஜை செய்ய வேண்டும். ராமேஸ்வரத்திற்கு வீட்டிலிருந்து, நடைபயணம் செய்தால் மிக நல்லது.
பரிகார நடைமுறைகள் : - பரிகாரத்தை குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் கூடி, சேர்ந்து செய்ய வேண்டும். குழந்தைகளையும் சேர்த்துத்தான் பரிகாரம் செய்ய வேண்டும். பரிகாரம் செய்யும் போது திருநீறு, திருமண், சந்தனம் அணிய வேண்டும். முழு நம்பிக்கையோடு ஈடுபாட்டோடு, ஒற்றுமையோடு பரிகாரம் செய்ய வேண்டும்.
வேதம் கற்றறிந்தவர்களுக்கு, ஆன்மீக அன்பர்களுக்கு தானம் செய்ய வேண்டும். சூரியன், உச்சிப் பொழுதிற்கு வருவதற்கு முன்பாகவே, பரிகாரங்களைச் செய்ய வேண்டும். மாலை, இரவு நேரங்களில் தெய்வ வழிபாடு செய்யலாமே தவிர, பரிகாரங்களைச் செய்யக் கூடாது.
விதிவிலக்காக அந்திக்குப் பிறகு செய்யக் கூடிய சில வழிபாடுகள், படையல்கள், பரிகாரங்களைப் பற்றியும் ஜோதிட சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது. பரிகார பூஜையின் போது குடம், சொம்பில் தீர்த்தம் வைப்பர், பூஜை முடிந்த பின் அந்தத் தீர்த்தத்தைக் குடிப்பர்.
மீதமுள்ள தீர்த்தத்தை வீட்டில் உள்ள கிணற்றில் கொட்டலாம். வீட்டில் கிணறு இல்லாவிட்டால், அடுத்தநாள் காலையில் பாதுகாப்பாக வைத்திருந்து, தலையில் ஊற்றிக் குளிக்கலாம், எக்காரணத்தை முன்னிட்டும் வீட்டின் குளியல் அறையிலோ, சாக்கடையிலோ கொட்டி விடக் கூடாது. சுக்கில பட்சம் மற்றும் வளர்பிறை நாட்களில் செய்யும் பரிகாரம் சிறப்பானது.
கிரகத்தின் ஜனன மாதம், கிரகத்தின் கிழமை, கிரகத்தின் நட்சத்திரம் ஆகியன ஒன்று சேர்ந்த நாளாக இருந்தால், அது மிக மிக பரிகாரம் செய்ய உகந்த நாளாகும். புதனுக்குப் பரிகாரம் செய்ய வேண்டுமென்றால், புதன், சிம்மத்தில் இருந்தால், சூரியனுக்குரிய ஞாயிறு அன்று செய்வது நல்லது.
ஜென்ம நட்சத்திரம் வரும் காலத்தில், சுக்லபட்சம், கிருஷ்ணபட்சம் பார்க்க வேண்டியதில்லை. ஏனெனில் ஜென்ம நட்சத்திரமே சிறப்பானது. சுபமான காரியங்களுக்கு வளர்பிறையும் அதிகத் துன்பம் கொடுக்கும் விஷயங்களுக்கு கிருஷ்ணபட்சத்திலும் பரிகாரம் செய்யலாம்.
பரிகாரம் செய்வதற்கு உகந்த இடங்களாக - குளக்கரை, ஆற்றங்கரை, கடற்கரை, சிவன், விஷ்ணு ஆலயங்கள் சாஸ்திரத்தில் சொல்லப்பட்டிருக்கின்றன.
இருக்கும் வீட்டில் செய்யக் கூடியவைகள்- கணபதி ஹோமம், சுதர்சனஹோமம், நவக்கிர ஹோமம் மற்றும் லட்சுமி நாராயணபூஜை ஆகியனவாகும். பிரம்மஹத்தி தோஷம் உள்ளவர்கள், உரிய பரிகார பூஜை செய்து, தோஷம் நீங்கி, அனைத்து வளங்களும் பெற தேவி ஸ்ரீ கருமாரியம்மன் அருள் புரிவாள்.

Sunday, 2 September 2018

ஆலய அதிசயங்கள்!!*

                                                              ஆலய அதிசயங்கள்!!*

 1. திருவண்ணாமலை சுவாமி எப்போதுமே ராஜகோபுரம் வழியாக வராமல் பக்கத்து வாசல் வழியாகத்தான் வெளியே வருவார்.
2. மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் மொத்தம் 14 கோபுரங்கள் உள்ளன. வேறு எந்த கோவிலிலும் இவ்வளவு அதிகமான கோபுரங்கள் இல்லை.
3. கும்பகோணம் அருகே உள்ள திருநாகேஸ்வரம் ஒப்பிலியப்பன் கோவிலில் தயாராகும் எந்த நைவேத்தியப் பண்டங்களுக்கும் உப்பு சேர்ப்பதில்லை.
4. ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவிலில் பெருமாள் கோவில்களில் கொடுப்பதுபோல் தீர்த்தம் கொடுக்கிறார்கள். வேறு எந்த சிவன் கோவிலிலும் இது போன்று தீர்த்தம் கொடுப்பது கிடையாது.
5. மூலவரே வீதிவலம் வருவது, சிதம்பரம் நடராஜர் மட்டுமே.
6. மதுரை அருள்மிகு ஸ்ரீ மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள பொற்றாமரைக் குளத்தில் மீன்கள் வளராது.
7. கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகிலுள்ள கேரளபுரத்தில் சிவபெருமானுக்கு கோயில் உள்ளது. இங்கு அரச மரத்தடியில் நிறம் மாறும் அதிசய விநாயகர் இருக்கிறார். ஆவணி மாதத்திலிருந்து ஆறு மாதங்கள் வெள்ளை நிறமாகவும், மாசி மாதத்திலிருந்து ஆறு மாதங்கள் கறுப்பாகவும் மாறி விடுகிறார். சந்திர காந்தக் கல்லால் உருவாக்கப்பட்ட இந்தச் சிலைக்கு இப்படி ஒரு சக்தி இருக்கிறது.
8. சிதம்பரம் ஆலயத்தில் ஒரே இடத்தில் நின்றபடி, ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாளையும், ஸ்ரீ நடராஜரையும் தரிசிக்கலாம்.
9. சைவர்களுக்குரிய திருவாதிரையும், வைணவர்களுக்குரிய வைகுண்ட ஏகாதசியும் ஒரே மாதத்தில் ஒரே திருக்கோயிலில் நடைபெறுவது சிதம்பரத்தில்.
10. எல்லாத் திருத்தலங்களிலும் பெருமாளின் இடது கையில் தான் சங்கு காணப்பெறும், திருக்கோவிலூரில் மட்டும் வலது கையில் சங்கு வைத்துள்ளார்.
11. இமயமலைச் சாரலில் இருக்கும் திருத்தலங்களில் ஒன்று பத்ரிநாத். மே மாதம் முதல் வாரம் நடைதிறப்பார்கள். நவம்பர் மாதம் முதல் வாரத்தில் மூடுவார்கள். நவம்பரில் கோயிலை மூடும் போது ஒரு தீபம் ஏற்றுவார்கள். அந்த தீபம் மீண்டும் கோயில் திறக்கப்படும்வரை அதாவது, ஆறுமாதம் எரிந்துகொண்டே இருக்கும்.
12. காசியில் பல்லிகள் இருந்தாலும் ஒலிப்பதில்லை.
13. காசி நகரைச் சுற்றி 45 கல் எல்லை வரை கருடன் பறப்பதில்லை.
14. குளித்தலை, மணப்பாறை வழியில் இருப்பது ஐவர் மலை என்ற ரத்தினகிரி மலை உள்ளது. இம்மலை மேல் காகங்கள் பறப்பதில்லை.
15. நவக்கிரகப் பிரதிஷ்டை கோவிலில் வடகிழக்குப் பகுதியில்தான் அமைய வேண்டும் என்று சிற்ப சாஸ்திரம் கூறுகிறது.
16. ஆழ்வார்குறிச்சியில் நடராஜர் சிலை ஒரே கல்லினால் ஆனது. தட்டினால் வெண்கல ஓசை வரும்.
17. சமயபுரம் ஸ்ரீமாரியம்மன் உட்கார்ந்த கோலத்தில் மிகப் பெரிய திருமேனி. இவ்வளவு பெரிய ரூபமுள்ள அம்பிகை வேறு எந்த கர்பகிரகத்திலும் இல்லை. இத்திருமேனி சில மூலிகைகளால் ஆக்கப்பட்டது.
18. தேனி மாவட்டம் கம்பம் அருகில் உள்ள சுருளிமலையில் குகையில் விபூதி அள்ள அள்ள வந்து கொண்டே இருக்கும். இந்தக் குகைக்குப் பெயர் திருநீர்குகை. திருநீறு தானாகவே விளையும் மற்ற திருத்தலங்கள், கதிர்காமம், மருதமலை, திருநீற்று மலை, கங்கை கரையில் உள்ள திருவருணை.
19. ரத்னகிரி மலையில் உள்ள முருகனுக்கு அபிஷேகம் செய்யும் பால் சிறிது நேரத்தில் தயிராக மாறும் அதிசயம் நடக்கிறது.
20. சென்னிமலை முருகனுக்கு அபிஷேகம் செய்யும் தயிர் புளிப்பதில்லை.
21.தேனி மாவட்டம் தெப்பம்பட்டியில் உள்ள வேலப்பர் கோவிலில் உள்ள மூலவர் சுயம்பு மூர்த்தி. இந்தக் கோவில் அருகில் உள்ள மாமரத்தின் அடியில் இருந்து ஊற்று நீர் பொங்கி வந்து கொண்டேயிருக்கிறது.
22. அம்மன் சந்நிதி இல்லாத கோயில் காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில்.

Saturday, 1 September 2018

*உணவே_மருந்து**

                                                                 *உணவே_மருந்து**
**மூளை முதல் மலக்குடல் வரை... உறுப்புகளை பலப்படுத்த சில எளிய வழிகள்**
👽மூளை
கறிவேப்பிலைத் துவையலை 48 நாள்கள் சாப்பிட்டு வந்தால் மூளையின் செயல்பாடு சீராகி, நாம் சுறுசுறுப்புடன் இருப்போம்.
குறைந்தது ஆண்டுக்கு இருமுறையாவது கைகளில் மருதாணி வைத்தால், மனம் தொடர்பான கோளாறுகள் நீங்கும். அதன் குளிர்ச்சி மூளைக்கு ஓய்வைத் தரும்.
வல்லாரை இலைகளை நெய்யில் வதக்கி சுடுசாதத்துடன் இரண்டு கவளம் சாப்பிட்டு வர வேண்டும்.
தினசரி இரண்டு துண்டு தேங்காயை மென்று தின்பதால் மூளையில் எந்தப் புண்களும் வராது.
👀கண்கள்
பாலுடன் குங்குமப்பூ சேர்த்துக் குடித்து வருவது நல்லது.
தினமும் 50 கிராம் அளவுக்கு மாம்பழம் அல்லது பப்பாளியைச் சாப்பிட்டு வர பார்வைத்திறன் மேம்படும்.
அரைக்கீரையை வாரம் இருமுறை சாப்பிட்டு வந்தால் கண்கள் குளிர்ச்சியடையும். அதுபோல் பொன்னாங்கண்ணி, முருங்கைக் கீரைக்ச் சாப்பிட்டாலும் பார்வைத்திறன் மேம்படும்.
வெண்டைக்காய் மோர்க்குழம்பு, வெண்டை மசாலா, வெண்டைக்காய் பொரியல் என சாப்பிட கண்களுக்கு நல்லது.
தினந்தோறும் நெல்லிக்காய் ஜூஸ் குடித்து வந்தால், கண் தொடர்பான பிரச்னைகள் வராது.
தினமும் 5 பாதாம்களை சாப்பிட்டு வரவேண்டும்.
😁பற்கள்
மாவிலைப் பொடியை பற்பொடியாகப் பயன்படுத்தி பல் தேய்த்து வந்தால் பற்கள் உறுதியாகும்.
கோவைப்பழம் சாப்பிட்டால் பல் தொந்தரவுகள் வராது. உணவிலும் அடிக்கடி கோவைக்காயைச் சேர்த்துக்கொள்ளலாம்.
செவ்வாழைப் பழத்தை தினமும் இரவில் சாப்பிட்டு வர பல்லில் ரத்தக்கசிவு, பல் சொத்தை ஆகியவை வராது.
பல் உறுதியாக, உணவை நன்றாக மென்று சுவைக்க வேண்டும். கேரட், கரும்பு, ஆப்பிள் போன்றவற்றைப் பத்து முறையாவது நன்றாக மென்று சாப்பிட வேண்டும்.
🍁நரம்புகள்
சேப்பங்கிழங்கை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொண்டால் நரம்புகள் பலம் பெறும்.
இரண்டு அத்திப்பழத்தை தினந்தோறும் சாப்பிட்டு வரலாம்.
மாதுளைப் பழச்சாற்றில் தேன் கலந்து 48 நாள்கள் குடித்து வரலாம்.
இலந்தைப் பழத்தை அவ்வப்போது சுவைத்து வரலாம்.
கரிசலாங்கண்ணிக் கீரையை அடிக்கடி சாப்பிட்டு வருவது நல்லது.
🌹ரத்தம்
வாரம் இரண்டு நாள்கள் பீட்ரூட் ஜூஸ் குடிப்பதால் ரத்தம் உற்பத்தியாகும்.
திராட்சைப் பழ ஜூஸ் ஒரு டம்ளர் அல்லது ஒரு ஸ்பூன் இஞ்சிச் சாற்றில் சிறிது தேன் கலந்து குடித்து வந்தால் ரத்தம் சுத்திகரிக்கப்படும்.
தினம் ஒரு கப் அளவுக்கு தயிர் சாப்பிட்டு வந்தால், ரத்தக் குழாய் அடைப்புகள் நீங்கும்.
அடிக்கடி விளாம்பழம் சாப்பிட்டு வந்தால், ரத்தத்தில் உள்ள கிருமிகள் அழியும்.
இரண்டு லிட்டர் நீரைக் கொதிக்க வைத்து, அதில் சீரகத்தைப் போட்டு 10 மணி நேரம் கழித்து, அந்தத் தண்ணீரை நாள் முழுவதும் குடித்து வந்தால் ரத்தம் சுத்தமாகும்.
💃சருமம்
தேகம் பளபளப்பாக மாற ஆவாரம் பூ டீ குடித்து வரலாம். ஆரஞ்சுப் பழத்தையும் சாப்பிட்டு வரலாம்.
முட்டைக்கோஸ் சாற்றை முகத்தில் தடவி வர முகத்தில் ஏற்படும் சுருக்கங்கள் மறையும்.
சந்தனக் கட்டையை இழைத்து அதனுடன் எலுமிச்சைச் சாறு கலந்து முகத்தில் பூசினால் பருக்கள் நீங்கும். முகம் பிரகாசமாகும்.
ஆரோக்கியமான உடல், பொலிவான முகம், பளபளப்பான சருமம் பெற அறுகம்புல்லை நீர் விட்டு அரைத்து, வெல்லம் சேர்த்து வாரம் மூன்று முறைக் குடித்து வரவேண்டும்.
💓நுரையீரல் & இதயம்
தேனில் ஊறவைத்த நெல்லிக்காயை தினசரி சாப்பிட்டு வர நுரையீரல், இதயம் பலமாகும்.
கரிசலாங்கண்ணிக் கீரையை வாரம் இருமுறை சாப்பிட்டு வந்தால் நல்லது.
ஆர்கானிக் ரோஜாப்பூ, பனங்கற்கண்டு, தேன் ஆகியவற்றை லேகியம் போல கலந்து, தினமும் ஒரு ஸ்பூன் சாப்பிட்டு வர இதயம் பலமாகும்.
இஞ்சி முரப்பா, இஞ்க்ச் சாறு, இஞ்சித் துவையல் ஆகியவற்றைச் சாப்பிட்டால் இதயம் ஆரோக்கியமாக துடித்துக் கொண்டிருக்கும்.
சுண்டை வற்றலை உணவில் அடிக்கடி சேர்த்துக்கொண்டால் நுரையீரல் ஆரோக்கியத்துடன் இருக்கும்.
திராட்சை ஜூஸ், உலர் திராட்சையை சாப்பிட இதயம் பலம் பெறும்.
முள்ளங்கிச் சாற்றை அரை கப் அளவுக்கு மூன்று வாரங்களுக்கு குடித்து வருவது நல்லது. இதனால், நுரையீரல் தொடர்பான பிரச்னைகள் நெருங்காது.
ஆளிவிதைகள், பாதாம், வால்நட் ஆகியவற்றில் ஒமேகா 3, நல்ல கொழுப்பு இருப்பதால் இதயத்துக்கு நல்லது.
🍒வயிறு
காலையில் எழுந்ததும் ஊறவைத்த ஒரு டீஸ்பூன் வெந்தயத்தை சாப்பிட்டு சிறிதளவு தயிரையும் குடிக்க வேண்டும். வயிறு சுத்தமாகும்.
மாதுளம்பூவை தேநீராக்கிக் குடித்து வந்தால், வயிறு தொடர்பான பிரச்னைகள் நீங்கும்.
*வறுத்துப் பொடித்த சீரகத்தை ஒரு டம்ளர் மோரில் போட்டுக் குடிக்க வேண்டும்.*
*வாரத்தில் இரண்டு நாள்கள் ஒரு டம்ளர் தேங்காய்ப்பாலுடன் கருப்பட்டி சேர்த்துக் குடித்து வருவதால், வயிறு தொடர்பான பிரச்னைகள் எதுவும் வராது.*
*சுரைக்காயை வாரம் இருமுறை உணவில் சேர்த்துக்கொள்ள தொப்பை கரையும்.*
வாழைப்பூ, மணத்தக்காளிக் கீரையை வாரம் ஒருமுறையாவது சாப்பிட வயிற்றுத் தொந்தரவுகள் நீங்கும்.
வாரம் ஒருமுறை கொள்ளு ரசம் சாப்பிடக் கெட்டக் கொழுப்பு கரையும். தொப்பையும் குறையும்
🍅கல்லீரல் & மண்ணீரல்
கரிசலாங்கண்ணிக் கீரையைக் கூட்டாக செய்துச் சாப்பிடலாம். கீழாநெல்லியை புளியங்கொட்டை அளவு வெறும் வயிற்றில் மாதந்தோறும் ஐந்து நாளைக்குச் சாப்பிட வேண்டும்.
மாதத்தில் இரண்டு நாள்கள் வேப்பம்பூ ரசம் வைத்துச் சாப்பிடுங்கள்.
திராட்சை பழச்சாற்றை அருந்தி வந்தால் கல்லீரல், மண்ணீரல் உறுப்புகளுக்கு நன்மையைச் செய்யும்.
🍓மலக்குடல்
அகத்திக்கீரையை வாரம் ஒருநாள் சமைத்துச் சாப்பிட வேண்டும். இதனால், மலக்குடல் சுத்தமாக இருக்கும்.
பப்பாளிப் பழத்தை வாரம் மூன்றுமுறை சாப்பிடுவது நல்லது.
அடிக்கடி முளைக்கீரையை சமையல் செய்து சாப்பிட்டு வரலாம்.
மாலை ஆறு மணி அளவில், மாம்பழ சீசனில் மாம்பழத்தைத் தொடர்ந்து சுவைத்து வரலாம்.
மாதுளைப்பூ சாறு 15 மி.லி, சிறிதளவு பனங்கற்கண்டு சேர்த்து மூன்று வேளையும் குடித்து வரவேண்டும்.
👣பாதம்
விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய் சம அளவு எடுத்து பாதத்தில் தடவி வந்தால் பாதம் மிருதுவாக இருக்கும்.
லேசாக சூடு செய்த வேப்பெண்ணெயை விரல்களின் இடுக்கில் தடவினால் சேற்றுப் புண்கள் சரியாகும்.
வாழைப்பூவை பருப்பு சேர்த்துச் சமைத்து சாப்பிட்டு வந்தால், கை, கால்களில் வரும் எரிச்சல் நீங்கும்.
இரண்டு கால் விரல்களையும் தினமும் ஐந்து நிமிடத்துக்கு நீட்டி - மடக்கும் பயிற்சியைச் செய்து வரவேண்டும். ரத்த ஓட்டம் சீராகும்.**மூளை முதல் மலக்குடல் வரை... உறுப்புகளை பலப்படுத்த சில எளிய வழிகள்**
👽மூளை
கறிவேப்பிலைத் துவையலை 48 நாள்கள் சாப்பிட்டு வந்தால் மூளையின் செயல்பாடு சீராகி, நாம் சுறுசுறுப்புடன் இருப்போம்.
குறைந்தது ஆண்டுக்கு இருமுறையாவது கைகளில் மருதாணி வைத்தால், மனம் தொடர்பான கோளாறுகள் நீங்கும். அதன் குளிர்ச்சி மூளைக்கு ஓய்வைத் தரும்.
வல்லாரை இலைகளை நெய்யில் வதக்கி சுடுசாதத்துடன் இரண்டு கவளம் சாப்பிட்டு வர வேண்டும்.
தினசரி இரண்டு துண்டு தேங்காயை மென்று தின்பதால் மூளையில் எந்தப் புண்களும் வராது.
👀கண்கள்
பாலுடன் குங்குமப்பூ சேர்த்துக் குடித்து வருவது நல்லது.
தினமும் 50 கிராம் அளவுக்கு மாம்பழம் அல்லது பப்பாளியைச் சாப்பிட்டு வர பார்வைத்திறன் மேம்படும்.
அரைக்கீரையை வாரம் இருமுறை சாப்பிட்டு வந்தால் கண்கள் குளிர்ச்சியடையும். அதுபோல் பொன்னாங்கண்ணி, முருங்கைக் கீரைக்ச் சாப்பிட்டாலும் பார்வைத்திறன் மேம்படும்.
வெண்டைக்காய் மோர்க்குழம்பு, வெண்டை மசாலா, வெண்டைக்காய் பொரியல் என சாப்பிட கண்களுக்கு நல்லது.
தினந்தோறும் நெல்லிக்காய் ஜூஸ் குடித்து வந்தால், கண் தொடர்பான பிரச்னைகள் வராது.
தினமும் 5 பாதாம்களை சாப்பிட்டு வரவேண்டும்.
😁பற்கள்
மாவிலைப் பொடியை பற்பொடியாகப் பயன்படுத்தி பல் தேய்த்து வந்தால் பற்கள் உறுதியாகும்.
கோவைப்பழம் சாப்பிட்டால் பல் தொந்தரவுகள் வராது. உணவிலும் அடிக்கடி கோவைக்காயைச் சேர்த்துக்கொள்ளலாம்.
செவ்வாழைப் பழத்தை தினமும் இரவில் சாப்பிட்டு வர பல்லில் ரத்தக்கசிவு, பல் சொத்தை ஆகியவை வராது.
பல் உறுதியாக, உணவை நன்றாக மென்று சுவைக்க வேண்டும். கேரட், கரும்பு, ஆப்பிள் போன்றவற்றைப் பத்து முறையாவது நன்றாக மென்று சாப்பிட வேண்டும்.
🍁நரம்புகள்
சேப்பங்கிழங்கை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொண்டால் நரம்புகள் பலம் பெறும்.
இரண்டு அத்திப்பழத்தை தினந்தோறும் சாப்பிட்டு வரலாம்.
மாதுளைப் பழச்சாற்றில் தேன் கலந்து 48 நாள்கள் குடித்து வரலாம்.
இலந்தைப் பழத்தை அவ்வப்போது சுவைத்து வரலாம்.
கரிசலாங்கண்ணிக் கீரையை அடிக்கடி சாப்பிட்டு வருவது நல்லது.
🌹ரத்தம்
வாரம் இரண்டு நாள்கள் பீட்ரூட் ஜூஸ் குடிப்பதால் ரத்தம் உற்பத்தியாகும்.
திராட்சைப் பழ ஜூஸ் ஒரு டம்ளர் அல்லது ஒரு ஸ்பூன் இஞ்சிச் சாற்றில் சிறிது தேன் கலந்து குடித்து வந்தால் ரத்தம் சுத்திகரிக்கப்படும்.
தினம் ஒரு கப் அளவுக்கு தயிர் சாப்பிட்டு வந்தால், ரத்தக் குழாய் அடைப்புகள் நீங்கும்.
அடிக்கடி விளாம்பழம் சாப்பிட்டு வந்தால், ரத்தத்தில் உள்ள கிருமிகள் அழியும்.
இரண்டு லிட்டர் நீரைக் கொதிக்க வைத்து, அதில் சீரகத்தைப் போட்டு 10 மணி நேரம் கழித்து, அந்தத் தண்ணீரை நாள் முழுவதும் குடித்து வந்தால் ரத்தம் சுத்தமாகும்.
💃சருமம்
தேகம் பளபளப்பாக மாற ஆவாரம் பூ டீ குடித்து வரலாம். ஆரஞ்சுப் பழத்தையும் சாப்பிட்டு வரலாம்.
முட்டைக்கோஸ் சாற்றை முகத்தில் தடவி வர முகத்தில் ஏற்படும் சுருக்கங்கள் மறையும்.
சந்தனக் கட்டையை இழைத்து அதனுடன் எலுமிச்சைச் சாறு கலந்து முகத்தில் பூசினால் பருக்கள் நீங்கும். முகம் பிரகாசமாகும்.
ஆரோக்கியமான உடல், பொலிவான முகம், பளபளப்பான சருமம் பெற அறுகம்புல்லை நீர் விட்டு அரைத்து, வெல்லம் சேர்த்து வாரம் மூன்று முறைக் குடித்து வரவேண்டும்.
💓நுரையீரல் & இதயம்
தேனில் ஊறவைத்த நெல்லிக்காயை தினசரி சாப்பிட்டு வர நுரையீரல், இதயம் பலமாகும்.
கரிசலாங்கண்ணிக் கீரையை வாரம் இருமுறை சாப்பிட்டு வந்தால் நல்லது.
ஆர்கானிக் ரோஜாப்பூ, பனங்கற்கண்டு, தேன் ஆகியவற்றை லேகியம் போல கலந்து, தினமும் ஒரு ஸ்பூன் சாப்பிட்டு வர இதயம் பலமாகும்.
இஞ்சி முரப்பா, இஞ்க்ச் சாறு, இஞ்சித் துவையல் ஆகியவற்றைச் சாப்பிட்டால் இதயம் ஆரோக்கியமாக துடித்துக் கொண்டிருக்கும்.
சுண்டை வற்றலை உணவில் அடிக்கடி சேர்த்துக்கொண்டால் நுரையீரல் ஆரோக்கியத்துடன் இருக்கும்.
திராட்சை ஜூஸ், உலர் திராட்சையை சாப்பிட இதயம் பலம் பெறும்.
முள்ளங்கிச் சாற்றை அரை கப் அளவுக்கு மூன்று வாரங்களுக்கு குடித்து வருவது நல்லது. இதனால், நுரையீரல் தொடர்பான பிரச்னைகள் நெருங்காது.
ஆளிவிதைகள், பாதாம், வால்நட் ஆகியவற்றில் ஒமேகா 3, நல்ல கொழுப்பு இருப்பதால் இதயத்துக்கு நல்லது.
🍒வயிறு
காலையில் எழுந்ததும் ஊறவைத்த ஒரு டீஸ்பூன் வெந்தயத்தை சாப்பிட்டு சிறிதளவு தயிரையும் குடிக்க வேண்டும். வயிறு சுத்தமாகும்.
மாதுளம்பூவை தேநீராக்கிக் குடித்து வந்தால், வயிறு தொடர்பான பிரச்னைகள் நீங்கும்.
*வறுத்துப் பொடித்த சீரகத்தை ஒரு டம்ளர் மோரில் போட்டுக் குடிக்க வேண்டும்.*
*வாரத்தில் இரண்டு நாள்கள் ஒரு டம்ளர் தேங்காய்ப்பாலுடன் கருப்பட்டி சேர்த்துக் குடித்து வருவதால், வயிறு தொடர்பான பிரச்னைகள் எதுவும் வராது.*
*சுரைக்காயை வாரம் இருமுறை உணவில் சேர்த்துக்கொள்ள தொப்பை கரையும்.*
வாழைப்பூ, மணத்தக்காளிக் கீரையை வாரம் ஒருமுறையாவது சாப்பிட வயிற்றுத் தொந்தரவுகள் நீங்கும்.
வாரம் ஒருமுறை கொள்ளு ரசம் சாப்பிடக் கெட்டக் கொழுப்பு கரையும். தொப்பையும் குறையும்
🍅கல்லீரல் & மண்ணீரல்
கரிசலாங்கண்ணிக் கீரையைக் கூட்டாக செய்துச் சாப்பிடலாம். கீழாநெல்லியை புளியங்கொட்டை அளவு வெறும் வயிற்றில் மாதந்தோறும் ஐந்து நாளைக்குச் சாப்பிட வேண்டும்.
மாதத்தில் இரண்டு நாள்கள் வேப்பம்பூ ரசம் வைத்துச் சாப்பிடுங்கள்.
திராட்சை பழச்சாற்றை அருந்தி வந்தால் கல்லீரல், மண்ணீரல் உறுப்புகளுக்கு நன்மையைச் செய்யும்.
🍓மலக்குடல்
அகத்திக்கீரையை வாரம் ஒருநாள் சமைத்துச் சாப்பிட வேண்டும். இதனால், மலக்குடல் சுத்தமாக இருக்கும்.
பப்பாளிப் பழத்தை வாரம் மூன்றுமுறை சாப்பிடுவது நல்லது.
அடிக்கடி முளைக்கீரையை சமையல் செய்து சாப்பிட்டு வரலாம்.
மாலை ஆறு மணி அளவில், மாம்பழ சீசனில் மாம்பழத்தைத் தொடர்ந்து சுவைத்து வரலாம்.
மாதுளைப்பூ சாறு 15 மி.லி, சிறிதளவு பனங்கற்கண்டு சேர்த்து மூன்று வேளையும் குடித்து வரவேண்டும்.
👣பாதம்
விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய் சம அளவு எடுத்து பாதத்தில் தடவி வந்தால் பாதம் மிருதுவாக இருக்கும்.
லேசாக சூடு செய்த வேப்பெண்ணெயை விரல்களின் இடுக்கில் தடவினால் சேற்றுப் புண்கள் சரியாகும்.
வாழைப்பூவை பருப்பு சேர்த்துச் சமைத்து சாப்பிட்டு வந்தால், கை, கால்களில் வரும் எரிச்சல் நீங்கும்.
இரண்டு கால் விரல்களையும் தினமும் ஐந்து நிமிடத்துக்கு நீட்டி - மடக்கும் பயிற்சியைச் செய்து வரவேண்டும். ரத்த ஓட்டம் சீராகும்.

#தாந்திரீகம்_4

#தாந்திரீகம்_4
~~~~~~~~~~~~
மாந்திரீகம் பெரியளவில் கையாளப்படும் இடங்களில் நீங்கள் இருந்தால், நகங்களைப்பற்றி மிக கவனமாகவே இருக்கவேண்டும். நகம், முடி குறித்து மிகவும் கவனமாக இருக்கவேண்டும்.
இந்தியாவின் சில பகுதிகளில், நீங்கள் அடுத்தவர் வீட்டிற்கு செல்லும் போது உங்கள் தலை முடியை சீவ அனுமதியில்லை. ஏனென்றால் தலைமுடி உதிரும், சிலர் இதற்காக காத்துக்கொண்டிருப்பார்கள். அவர்கள் அதை எடுத்து உங்களுக்கு சிலவற்றை செய்துவிடுவார்கள்.
பெண்கள் வெளியிடங்களில் தலைசீவ அனுமதிக்கப்படுவதில்லை. அவர்கள் வெளியில் செல்லும் போது தலையில் நன்றாக எண்ணெய் தடவி இறுக்கமான பின்னலிட்டுக்கொள்ள வேண்டும். இந்த மாதிரி சூழ்நிலைகளும் பிரச்சனைகளும் உள்ள போது இது போன்ற கவனம் மேற்கொள்ளப்பட்டது.
இன்று, நீங்கள் யாருடைய வீட்டிற்கோ சென்றால் அங்கே தண்ணீர் பருகுவதில்லை, மாறாக கையில் தண்ணீர் பாட்டிலுடன் செல்கிறீகள். ஆம், இன்று நீங்கள் மாயமந்திரங்களைப் பற்றி கவலைப்படுவதில்லை.
பாக்டீரியா, வைரஸ் மற்றும் பலவற்றைக் கண்டு கவலை கொள்கிறீர்கள். ஆகையால் அதைப்பற்றி நீங்கள் கவனம் கொள்கிறீர்கள். சில வகையான சமூகத்திலோ, உலகின் சில குறிப்பிட்ட பகுதிகளிலோ நீங்கள் இல்லையென்றால் பழங்காலங்களில் மேற்கொள்ளப்பட்ட இது போன்ற கவனங்கள் இன்று பொருத்தமானவை அல்ல.

நாம் தவிர்க்க வேண்டிய 8 மன விஷங்கள்!

 நாம் தவிர்க்க வேண்டிய 8 மன விஷங்கள்! நமது மன அமைதியையும் மகிழ்ச்சியையும் நாமே அறியாமல் அழிக்கும் 8 நச்சு எண்ணங்கள் என்னென்ன என்று தெரிந்துக...