Friday, 14 September 2018

சாபம்.

சாபம்.

 தபஸ்விகள், மகான்கள் ஏதாவது சாபம் கொடுத்தாலும், அது நன்மையிலேயே முடியும். சிலரை பார்த்து, “நீ நாசமற்றுப் போக…’ என்பர் பெரியோர். “நீ நாசமாப் போக…’ என்று சொல்வதில்லை. நாசமற்றுப் போக என்றால், “உனக்கு நாசம் வராமல் போகட்டும்…’ என்று பொருள்.
தேவாசுர யுத்தத்தின் போது, தசரதர் ரதத்தில் இருந்த கடையாணி முறிந்து விட்டது. கைகேயிதான் ரதத்தை ஓட்டி வந்தவள். அவள் உடனே, கடையாணிக்கு பதிலாக, தன் ஆள்காட்டி விரலையே, கடையாணியாக உபயோகித்து, ரதத்தை ஓட்டினாளாம். சந்தோஷமடைந்து கைகேயிக்கு இரண்டு வரங்கள் தருவதாகச் சொன்னார் தசரதர்.
அந்த இரண்டு வரங்களையும் உடனே வாங்கிக் கொள்ளாமல், பிறகு தேவையான போது வாங்கிக் கொள்வதாக சொல்லி, அதை, “ரிசர்வில்’ வைத்து, ராம பட்டாபிஷேகத்தின் போது பெற்றுக் கொண்டாள் கைகேயி; இது, ராமாயணக் கதை.
ரதத்தின் கடையாணிக்கு பதிலாக, ஆள்காட்டி விரலை கடையாணியாக பயன்படுத்த முடியுமா? என்றால், முடியும்!. ஏனெனில், அந்த விரல் மட்டும் இரும்பு விரலாக இருந்தது.
ஒரு சமயம், தசரதரின் அரண்மனையில் துர்வாசர் தங்கியிருந்த போது, அவருக்கு பணி விடை செய்தாள் கைகேயி. துர்வாசருக்கு அடிக்கடி கோபம் வரும்; சாபம் கொடுத்து விடுவார். துர்வாசர் இப்படி கோபம் கொண்டு சாபம் கொடுப்பது வழக்கம். அவருக்கு ஒரு வரம் இருந்தது. அவர் சாபமிட்டால் அவரது தவம் கூடுதலாகுமாம். அதனால், அவர் எப்போதுமே யாரையாவது சாபமிடுவது வழக்கம்.
தசரதருடைய அரண்மனையில் துர்வாசர் தங்கிவிட்டுப் போகும் போது, பக்கத்திலுள்ள தோழிகளிடம், “அதோ போகிறாரே, அவர்தான் துர்வாசர்…’ என்று, தன் ஆள்காட்டி விரலால் காண்பித்தாள் கைகேயி. இதை பார்த்த துர்வாசர், “அந்த ஆள் காட்டி விரல் இரும்பாகப் போகட்டும்…’ என்று சாபம் கொடுத்தார். கைகேயின் ஆள்காட்டி விரல் மட்டும் இரும்பாக மாறியது. ஆனால், அதுவே நன்மையாக முடிந்தது.
தசரதரின் ரதத்திலிருந்த கடையாணி ஒடிந்த போது, தன் ஆள்காட்டி விரலையே கடையாணியாக பயன்படுத்தி ரதத்தை ஓட்டினாள் கைகேயி. சந்தோஷப்பட்டு, இரண்டு வரங்களை தருவதாக சொன்னார் தசரதன். அதை உடனே பெற்றுக் கொள்ளாமல், ராம பட்டாபிஷேக ஏற்பாடுகள் நடந்த போது, அந்த வரங்களை கேட்டு, “ராமன், 14 வருஷம் காட்டுக்குப் போக வேண்டும், பரதன், பட்டாபிஷேகம் செய்து நாட்டை ஆள வேண்டும்…’ என்று கேட்டாள் கைகேயி.
துர்வாசர் கொடுத்த சாபம், கைகேயின் விரல் இரும்பாகட்டும் என்பது. அந்த சாபம், தசரதர் வந்த ரதத்தின் கடையாணிக்கு பதிலாக, கைகேயினுடைய இரும்பு விரல் பயன்பட்டது.

No comments:

Post a Comment

ஆண் அழுவான்...

 தாய் தந்தை இறந்தால் ஆண் அழுவான்... *தனக்கு குழந்தை பிறக்கப்போகிறது என்று நற்செய்தி கேட்டு ஆண் அழுவான்... *தன் குழந்தைகளில் ஒருவர் நோய்வாய்ப...