Thursday, 22 March 2018

ருத்ராட்சம் அணிவதால் ஏற்படும் நன்மைகள்

ருத்ராட்சம் அணிவதால் ஏற்படும் நன்மைகள்

ருத்ராட்சம் அணிவதால் ஏற்படும் நன்மைகள் வளரும் ஒருவகையான மரத்தின் விதைதான் ருத்ராட்சம். இதற்கு தனித்துவமான சிறப்புகள் பல உண்டு. தன்னைச் சுற்றிலும் அபூர்வமான அதிர்வலைகளை இது கொண்டிருக்கிறது. எனவே இதை அணிவதால் பல நன்மைகள் ஏற்படுகிறது. நீங்கள் புதுஇடங்களுக்கு செல்லும் போது அங்கிருக்கும் அதிர்வுகள் உங்களுக்கு ஏற்றதாக இல்லையென்றால் உங்களால் அமைதியாக இருக்க முடியாது. ஆனால்இ ருத்ராட்சம் அணிந்தால் எவ்விதமான பாதிப்பும் நம்மை தீண்ட முடியாது.மனநிலை சாந்தமாகவே இருக்கும். சக்திவட்டம் நம்மைக் கவசம் போல் பாதுகாக்கும். ஐந்துமுகம் கொண்ட ருத்ராட்சம் உடல் ஆரோக்கியம் தரும். ஆண்பெண் பேதமின்றி எல்லோரும் அணியலாம். இது ரத்த அழுத்தத்தை சீராக்கிஇமன அமைதியையும்இ சுறுசுறுப்பையும் தரும். ஆறுமுகம் கொண்ட சண்முகி ருத்ராட்சத்தை 14 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் அணிவதால் தாயின் பூரண அன்பிற்கு பாத்திரமாகலாம் எப்படி ருத்திராட்சம் தோன்றியது ? ருத்திரன் என்ற பெயரில் இருந்து வந்ததே ருத்திராட்சம் ஆகும். சிவபெருமானின் முக்கண்களிலிருந்தும் தெறித்த ஆனந்தக் கண்ணீர் சொட்டுகளே ருத்திராட்சங்களாகின. மொத்தம் முப்பத்தெட்டு விதமான ருத்திராட்சங்கள் தோன்றின. வலது கண்ணிலிருந்து மஞ்சள் நிற ருத்திராட்சங்கள் பன்னிரண்டும் இடது கண்ணில் இருந்து பதினாறு வெண்ணிற ருத்திராட்சங்களும் தோன்றின. நெற்றிக் கண்ணிலிருந்து கருப்பு வண்ணத்தில் பத்து ருத்திராட்சங்கள் வெளிப்பட்டன. தோற்றம் ஒரு முகம் முதல் 16 முகம் வரை கொண்ட பதினாறு வகை ருத்திராட்சங்கள் உண்டு. ருத்திராட்சத்தின் மேல் உள்ள கோட்டின் எண்ணிக்கையைக் கொண்டு ருத்திராட்சம் எத்தனை முகம் கொண்டது என்பதை அறியலாம். சாணைக்கல்லில் உரைத்தால் மஞ்சளாக தங்கம்போல் பிரகாசிப்பதும்இ நல்ல வர்ணமுள்ளதுமான ருத்திராட்சம்இ த ண்ணீரில் போட்டால் மூழ்குவதும்இ இரு செப்புத் தகட்டுக்கு இடையில் வைத்து சோதனை செய்தால் சுற்றக்கூடியது மான ருத்திராட்சம் ஆகியவை மிகவும் விசேஷமானவை. கழுத்தில் மாலையாக 32 ருத்திராட்சங்களும்இ கை மணிக்கட்டுகளில் 12 ருத்திராட்சங்களும்இ மேல் கையில் பதினாறும்இ மார்பில் நூற்றியெட்டும் தரிக்கலாம். ருத்திராட்ச மாலையின் பெருமை என்று சொன்னால் இ ஏக முக ருத்திராட்சத்தின் அதி தேவதையாக தத் பரமசிவனைக் கூறுவார்கள். இந்த ஏக முக ருத்திராட்சத்தை அணிவதால் சிவபெருமான் ப்ரீத்தி அடைந்து பிரம்மஹத்தி தோஷம் விலகும். இரண்டு முக ருத்திராட்சத்தின் அதிதேவதை ஸ்ரீகண்ட பரமசிவம். இந்த இரண்டு முக ருத்திராட்சத்தை அணிவதால் சிவசக்தி ப்ரீதி ஏற்பட்டு பசுவைக் கொன்ற தோஷம் விலகும். மூன்று முக ருத்திராட்சத்தின் அதிதேவதை அக்னி தேவனாகும். இதை அணிவதால் மும்மூர்த்திகளும் சந்தோஷம் அடைகிறார்கள். ஸ்திரீகளுக்குச் செய்த தோஷம் விலகும். நான்கு முக ருத்திராட்சத்தின் அதிதேவதை பிரம்மாவாகும். இதை அணிவதால் பிரம்மா ப்ரீதி அடைவதுடன்இ மனிதர்களுக்கு இழைத்த பாவம் விலகும். ஐந்து முக ருத்திராட்சத்தின் அதிதேவதை காலாக்னி ருத்ரன். இதை அணிவதால் சதாசிவம் சந்தோஷம் அடைகிறார். செய்யக்கூடாத செயல் களைச் செய்வதால் உண்டாகும் தோஷம் விலகும். ஆறு முக ருத்திராட்சத்தின் அதிதேவதை சுப்ரமணியராகும். இதை அணிவதால் ஆறுமுகன் சந்தோஷம் அடைவதுடன்இ பிரம்மஹத்தி தோஷம் விலகும். ஏழு முக ருத்திராட்சத்தின் அதிதேவதையாக ஆதிசேஷன் சொல்லப்படுகிறது. இதை அணிவதால் சப்தமாதர்கள் சந்தோஷம் அடைவதுடன் களவு தோஷமும் கோபத் தீயும் விலகும். எட்டு முக ருத்திராட்சத்தின் அதிதேவதை விநாயகப் பெருமானாகச் சொல்லப்படுகிறது. இதை அணிவதால் அட்டவித்யேச்வரர் சந்தோஷம் அடைவதுடன்இ செய்யக்கூடாத பாவங்களைச் செய்த தோஷம் விலகுகிறது. ஒன்பது முக ருத்திராட் சத்தின் அதிதேவதை பைரவர். இதை அணிவதால் நவதீர்த்தங் களில் குளித்தால் என்ன புண்ணியமோ அந்தப் புண்ணியம் கிட்டும்; பைசாச உபாதைகளும் துஷ்டப் பிரயோகங்களும் விலகும். பத்து முக ருத்திராட்சத் தின் அதிதேவதை விஷ்ணு. இதை அணிவதால் அஷ்டதிக் பாலகர்களும் சந்தோஷம் அடைவதாகச் சொல்லப்பட்டுள்ளது. ஜோதிடத் தில் வரும் நாக தோஷமும்; பூத- பிரேத- பைசாச தோஷங் களும் விலகும். பதினோரு முக ருத்திராட் சத்தின் அதிதேவதை பதினோரு ருத்ரர்களாகச் சொல்லப்பட்டுள் ளது. இதை அணிவதால் 11 ருத்திரர்களும் ப்ரீதி அடைகிறார்கள். பல அஸ்வமேத யாகம் செய்த பலன் களும் பல வாஜபேய யாகம் செய்த பலனும் கிட்டும். பலன்? ருத்திராட்சம் அணிவதால் அனைத்து நற்குணங்களும் அவர்களால் பிறர் அனைவரும் பயன்பெறும் வகையிலும நன்மைகளும் அமையும். ருத்திராட்சம் தாம் அணியாவிட்டாலும்இ அப்படி ருத்திராட்சம் அணிந்தவருக்கு அன்னமளிப்பவர்களும்இ ருத்திராட்சமரத்தைப் பராமரிக்கிறவர்களும்இ புதிய ருத்திராட்சத்தை தானம் செய்பவர்களும்இ சிவபெருமானுக்கு ருத்திராட்ச ஆபரணம் அணிவிப்பவர்களும் பல சிறப்பு நலன்களைப் பெற்று வாழ்வாங்கு வாழ்வார்கள். ருத்திராட்சத்தால் ஜபம் செய்கிறவருக்கு அனைத்து மந்திர சித்திகளும் எளிதில் கைவரப்பெறும். ஒரு முக ருத்திராட்சம் முதல் பதினாறு முகம் ருத்திராட்சம் வரை அணிவதன் மூலம் பல பலன்களை அடையலாம். குணங்கள் சிவ தத்துவத்தில் இருக்கும் முனிவர்கள் வைத்திருக்கும் பொருட்களை கவனித்தால் சங்குஇ ஜடாமுடிஇ மண்டை ஓடுஇ ருத்ராஷம்இமிருக தோல் அனைத்தும் இயற்கையாக கிடைத்த பொருட்கள். இந்த பொருட்களை செயற்கையாக உருவாக்க முடியாது. சில பொருட்களை உருவாக்கினாலும் செயற்கை என தெரிந்துவிடும். செயற்கை நிலையில் இயங்கக்கூடிய மனிதன் இயற்கை நிலை எனும் நிர்விகல்ப சமாதியை அடைய அவனுக்கு இயற்கையன பொருட்கள் உதவுகிறது. இயற்கை பொருட்கள் மூலம் மனிதன் தனது சுயதன்மையான புருஷ நிலையை அடைய முயற்சிக்கும் பொழுதுஅதிகம் பயன்படுவதும் எளிமையாக கிடைப்பதும் ருத்ராஷம் எனும் இயற்கையானமணிகள் ஆகும். ருத்ராஷம் எனும் இயற்கையில் விளையும் இந்த காய் (விதை) கனி வடிவம் பெருவதில்லை. அத்தி பூக்காது விதை அளிப்பது போல ருத்ராஷம் விதை தன்மை கொண்டது.மித வெப்பமும் மிதமான குளிரும் கொண்ட பகுதிகளில் ருத்ராஷம் விளைகிறது. நேபாள தேசம் மேலே குறிப்பிட்ட தட்ப வெட்ப நிலையில் இருப்பதால் அதிகமான ருத்ராஷத்தை விளைவிக்கும் நாடாக திகழ்கிறது. இந்தியாவில் அதிக அளவில் ருத்ராஷம் கிடைப்பதில்லை. ருத்ராஷத்தின் வடிவம்இ அதில் உள்ள துளை அனைத்தும் இயற்கையானது. பார்க்கும்பொழுது எந்த வித செயல்படும் இல்லாத பொருளாக தெரிந்தாலும் ருத்ராஷத்திற்குள் புதைந்திருக்கும் ஆற்றல் விவரிக்க முடியாத ஒன்று. சிறந்த ருத்ராஷத்தை தேர்ந்தெடுத்துஇ ஆன்மீக ஆற்றல் கொண்டவர்களிடம் சக்தியூட்டப் பணிந்தோம் என்றால் அத்தகைய ருத்ராஷம் பிரஞ்சத்தின் சிறு மாதிரி வடிவமாகி உங்களை பிரபஞ்சத்தை கையில் வைத்திருப்பவராக மாற்றும். ருத்ரன் எனும் சிவ அம்சம் அதிக ஆற்றல் வாய்ந்தஇ வேகமான ஆன்ம உணர்வை ஊட்டும் நிலையாகும். தவநிலையிலிருந்து வெளிப்பட்டவுடன் அதிக வேகமான இயக்க நிலைக்கு சிவன் மாற்றம்மடையும் தன்மை ருத்ராம்சம் என அழைக்கப்படும். சூரியனுக்கு ஒப்பான ஆற்றல் கொண்டது ருத்ராக்ஷம் என்றும் மனதில் கொள்ளவேண்டும். சூரியன் எவ்வாறு தன்னுடைய ஆற்றல் மூலம் சூரிய மண்டலத்தை உருவக்கியதோ அது போல ருத்ராக்ஷம் தனது ஆற்றல் மூலம் அதன் சூழ்நிலை முழுவதும் கட்டுப்பட்டில் வைக்கும் சக்தி கொண்டது. ருத்ராக்ஷத்திற்கு என சில இயல்பு குணங்கள் உண்டு. சக்தியூட்டப்பட்ட ருத்ராக்ஷம் அணிந்திருப்பவர்களை மிருகம் மற்றும் விஷ ஜந்துக்கள் தீண்டாது என்பது அறிவியலுக்கு அப்பாற்பட்ட உண்மை. இதனால்தான் காடுகளில் தவம்செய்ய செல்லும் ரிஷிகள் தங்களின் உடல் முழுவதும் ருத்ராக்ஷத்தை அணிந்தார்கள். ருத்ராக்ஷம் என்பது நமக்கு நிகரான ஒர் உயிரின் வடிவம் என அறிந்து கொள்வது அவசியம்.நீங்கள் ருத்ராக்ஷத்தை தொடர்ந்து அணிபவராக இருந்தால் உங்களுக்கு ஏற்படும் சுக-துக்கங்களின் வெளிப்பாடு ருத்ராக்ஷத்திலும் தெரியும். உங்களின் உடலில் அதிகமான உடலுக்கு ஒத்துக்கொள்ளாத வேதிப்பொருட்கள் இருந்தால் ருத்ராக்ஷம் தனது இயல்பு நிறத்தை மற்றிக்கொள்ளும். விஷபொருட்கள் உடலில் கலந்தால் ருத்ராக்ஷம் அந்த விஷப்பொருட்களைப் பிரித்தெடுத்து தனது வாழ்க்கையை முடித்துக்கொள்ளும். ருத்ராக்ஷம் பயன்படுத்த எந்த ஒரு கட்டுப்பாடும் இல்லை. குறிப்பிட்ட ஜாதிஇ மதஇ இன வேறுபாடு கிடையாது. ஆண்ஃபெண் என இருவரும் பயன்படுத்தலாம். வயது மற்றும் இதர விசயங்கள் தடையாக இருக்காது. ஆனால் ஒழுக்கமும் தூய்மையும் ருத்ராக்ஷத்திற்கு முக்கியமான ஒன்று. தூய்மையற்ற நிலையிலும் ஒழுக்கமற்ற நிலையிலும் பயன்படுத்தும் பொழுது ருத்ராக்ஷத்தின் இயல்பு நிலையான தன்மை பாதிக்கப்படுகிறது. மேலும் தெய்வீகமான ஒர் பொருளை எவ்வாறு பாதுகாப்போமோ அதற்குண்டான மரியாதை செலுத்துவது நல்லது. குரு தீஷை பெற்றவர்கள் தினமும் ஜெபம் செய்த பிறகு ருத்ராக்ஷ மாலையை கழுத்தில் அணிவது நல்லது.ஜெபிக்கப்பட்ட மந்திரமானது ருத்ரக்ஷ மாலையில் தொடர்ந்து அதிர்வுகளை உண்டு பண்ணி அன்ரு முழுவதும் அவர்களை ஆனந்திக்கச் செய்யும். மந்திர ஜெபம் செய்யாதவர்கள் கூட ஆன்மீக ஆற்றல் வாய்ந்தவர்களிடத்தில் பிரசாதமாக வாங்கி அணிந்து கொள்ளலாம். இதை தவிர வேறு தன்மையில் ருத்ராக்ஷம் அணிந்தால் அது ஓர் சாதாரண அணிகலனுக்குச் சமமானது. வேரு விசேஷம் அதில் இல்லை. ருத்ராக்ஷ மாலையை பயன்படுத்தும் பொழுது நன்றாக பாதுகாப்பது முக்கியமான ஒன்று. கெமிக்கல் பொருட்கள்இ சோப் மற்றும் இதர செயற்கைப் பொருட்கள் படாமல் பாதுகாக்க வேண்டும். பயன்படுத்த துவங்குவதற்கு முன்னால் ஒரு வார காலம் பசு நெய் அல்லது நல்லெண்ணையில் ஊறவைக்க வேண்டும். பின்பு நீரால் கழுவி ஈரம் போக துடைத்து விட்டு திருநீறில் ஒரு நாள் முழுவதும் வைக்கவேண்டும். பின்பு காய்ச்சாத பசும்பாலில் கழுவி நீரில் முக்கி எடுத்து நன்றாக துடைத்துக் கொள்ளவும். பின்பு பூஜையில் வைத்து ஜெபங்கள் செய்து அணியலாம். இந்த தூய்மையாக்கும் முறையை வருடத்திற்கு ஒரு முறை செய்ய வேண்டும். மாத சிவராத்திரி அல்லது மஹாசிவராத்திரி அன்று அணியுமாறு தூய்மை வேலையை துவக்க வேண்டும். ருத்ரக்ஷத்தை தூய்மை செய்ய இத்தனை வேலை செய்ய வேண்டுமா என்ற மனநிலை ஏற்படுகிறதா? இதை செய்ய வேண்டிய அவசியத்தை நிதர்சனமான விஷயத்திலிருந்து பார்ப்போம். உங்கள் உடலில் மேல்தோல் முழுவதும் இல்லாமல் வெறும் சதைப்பகுதி மட்டும் வெளியே தெரிந்தால் உங்கள் உடல் எவ்வளவு உணர்வு மயமாக இருக்கும். இதற்கு ஒப்பானது ருத்ராக்ஷத்தின் உணர்வு நிலை. அதனால் தான் மேற்பகுதியை கடினமாக்கவும்இ உணர்வு மிகாமல் சரியான நிலையை அடைய இயற்கையான பொருள் மூலம் சுத்திகரிக்க முயல்கிறோம். ருத்ராக்ஷ மணிகளில் பல வகைகள் உண்டு. ஒன்று முதல் பதினான்கு முகங்கள் வரை ருத்ராக்ஷ மணிகள் கிடைக்கிறது. முகம் என்பது ருத்ரக்ஷ மணிகள் மேல் உள்ள செங்குத்தான கோடுகள் ஆகும். ஆரஞ்சு பழத்தை தோல் உரித்தால் உள் பகுதியில் ஒவ்வொரு சுளைக்கும் இடையே தெரிவது போல உள்ள பகுதியை முகம் என அழைக்கிறார்கள். ஒவ்வொரு முக தன்மைக்கு ஏற்ப ருத்ராக்ஷம் ஆற்றலை வேறுபடுத்துகிறது என்றும் அதன்மூலம் கிடைக்கும் பலன்கள் வேறுபடுகிறது என்றும் கூறுகிறார்கள். உண்மையில் ருத்ராக்ஷத்திற்கு பலன் தருவதுஇ செல்வம் கொடுப்பது போன்ற செயல் கிடையாது.நவரத்தின கல் போல இதனையும் வியாபாரமாக்கும் யுக்தியே இந்த பிரச்சாரம். ருத்ரக்ஷத்தை தங்கம்இ தாமிரம் அல்லது பருத்தி நூலில் மாலையாக அணிவது நல்லது. நூலில் அணியும் பொழுது மட்டும் நெருக்கமாக கோர்த்து அணிய வேண்டும். ருத்ரக்ஷ வடிவங்களுக்கு என்று சில முக்கிய செயல்கள் உண்டு. இந்த ஒவ்வொரு வகையான ருத்ரக்ஷமும் அடிப்படையில் ஒன்றான செயல்களை செய்தாலும்இ சில பிரத்யேக காரணங்களுக்கும் பயன்படுத்தலாம். 1. ஐந்து முக ருத்ராக்ஷத்தை மட்டுமே (கிரஹஸ்தர்கள்) குடும்ப வாழ்க்கையில் உள்ளவர்கள் பயன்படுத்தலாம். 2. ஏக முகி என அழைக்கப்படும் ஒருமுக ருத்ராக்ஷம் சன்யாசிகள் மட்டுமே அணியவேண்டும். பிறர் வீட்டில் உள்ள சாலிக்ராமம் மற்றும் விக்ரஹம் போல வைத்து பூஜை செய்யலாம். 3. நான்கு முக ருத்ராக்ஷத்தை பயன்படுத்தினால் கலை நயம்இ சங்கீத ஞானம் போன்ற கலையாற்றல் வளரும். குழந்தை பிறப்பு இல்லாமல் சிரமப்படுபவர்களுக்கு நான்கு முக ருத்ராக்ஷத்தை பயன்படுத்துவதால் தடை நீங்க வாய்ப்பு உண்டு. 4. துடிப்பு இல்லாமல் சோர்வுடன் இருக்கும் பன்னிரெண்டு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு ஆறுமுக (ஷண்முகி) ருத்ராட்சம் நல்ல பலனை அளிக்கும். 5. மணவாழ்க்கையில் வாழ்க்கைத் துணைவருடன் பிரிவு உள்ளவர்கள் கௌரி சங்கர் என்ற ருத்ராட்ச வகையை அணிந்தால் மண வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டு. தனியாக ஒரே ஒரு ருத்ராக்ஷம் அணிவதை விட மணிமாலையாக அணிவது நல்லது. பஞ்சமுக ருத்ராக்ஷத்தை தவிர வேறு வகையான ருத்ராக்ஷம் அரிது. எனவே நமது பஞ்ச ப்ராணன்களில் சக்தி நிலை மேம்பட 108 மணிகள் கொண்ட ஐந்துமுக ருத்ராக்ஷத்தை அணிந்தால் அனைத்து மேம்பாட்டையும் பெறலாம். ருத்ராக்ஷத்தில் போலியான மணிகள் வருவதுண்டு. இதை எவ்வாறு கண்டறிவது என குழப்பம் அனைவருக்கும் உண்டு. ருத்ராக்ஷம் தனக்கெனசில தனித் தன்மைகளைக் கொண்டது. தாவர வகையாக இருந்தாலும் நீரில் மூழ்கிவிடும். மரவகைகள் நீரில் மிதப்பதைப் போல மிதக்காது. ருத்ராக்ஷத்தில் செயற்கையாக எதையும் இணைக்க முடியாது. ருத்ராக்ஷ மணியின் துளைகளுக்கு அருகே செப்பு நாணயங்களை வைத்தால் ருத்ராக்ஷம் காந்தப்புலம் விலகுவதை போல வேறு திசைக்கு மாற்றமடையும். ருத்ராக்ஷம் போன்ற உருவத்தில் இருக்கும் சில மரவகைகள் உண்டு. இதை” பத்ராட்சம் ” என அழைப்பார்கள். இதில் சாயத்தைக் கொடுத்து ருத்ராக்ஷம் போல விற்பனை செய்வார்கள். தகுந்த பரிசோதனைக்குப் பிறகு வாங்குவது நல்லது. ஜோதிட ரீதியாக ருத்ராக்ஷம் பயன்படுமா என்றால் முடியும் என்றே கூறலாம். ஒருமுக ருத்ராக்ஷம் முதல் அதன் வரிசைகிரமமாக உள்ள முக அமைப்புகள் சூரியன் முதல் சனி வரை உள்ள வானியல் அடிப்படையான கிரக வரிசைக்கு சமமானவை. எந்த கிரகத்தின் ஆற்றல் தேவையோ அந்த கிரகத்தின் அமைப்பு கொண்ட ருத்ராக்ஷத்தில் கிரகத்தின் மூலமந்திரத்தை ஜெபம் செய்து அணியலாம். ருத்ராக்ஷத்தை பல லட்ச ரூபாய் விலையில் விற்கவும் வாங்கவும் ஆட்கள் தயாராக இருக்கிறார்கள். பத்திரிகையிலும்இ தொலைக்காட்சிகளிலும் விளம்பரம் செய்கிறார்கள். பல கோடி ரூபாய் செல்வம் சேர ருத்ராக்ஷம் அணியுங்கள் என பிரச்சாரம் செய்கிறார்கள். எனக்கு தெரிந்தவரை எந்த ஒரு உடல் முழுவதும் ருத்ராக்ஷம் அணியும் எந்த சிவனடியாரும் கோடிஸ்வரராக இருந்து பார்த்ததில்லை. பிறருக்கு கோடிகளை அளிக்கும் ருத்ராக்ஷத்தை விற்கும் வியாபாரி ஏன் கோடீஸ்வரன் ஆவதில்லை என சிந்தித்துப் பார்த்தால் நிதர்சனம் புரியும். ருத்ராக்ஷத்தைக் கொண்டு கோடீஸ்வரனாக முடியாது. ஆனால் அண்டத்தைப் படைத்த ஈஸ்வரனாக முடியும். லஷ்மியை அடைய முடியாவிட்டாலும் ஆன்ம லஷியத்தை அடையமுடியும். பிறப்பு இறப்பு அற்ற நிலையை அடையும் முக்தி எனும் விருட்சத்தை வளர்க்க ருத்ராக்ஷம் என்ற விதையை விதையுங்கள். இறந்த வீட்டிற்கு செல்லும் பொழுது சிலர் அணிய கூடாது என சொல்லுவார்கள். ருத்திராட்சத்தை காக்கும் கடவுளாக பார்க்க வேண்டும். எங்கெல்லாம் உங்கள் உடல்இமனம் மற்றும் ஆன்மா தவறான சக்திக்கு ஆட்படுமோ அங்கெல்லாம் அணியலாம். எப்பொழுதும் ஜபம் செய்த மாலையை கழுத்தில் அணிவது நல்லது. ஜபிக்கபட்ட மந்திரங்கள் அதில் நிறைந்திருக்கும். உங்கள் அலைபேசியில் சார்ஜ் செய்து விட்டுஇ வீட்டில் வைத்திருந்தால் என்ன பலன்? ஜபம் செய்ததும் மாலையை அணிந்தால் அன்று வித்தியாசமான உள்ளுணர்வு இருப்பதை உணரலாம். முயற்சித்து பார்த்து விட்டு சொல்லுங்கள். ஆன்மீக குருஇ ஆன்மீக வாழ்க்கை வாழ்பவர்கள் மூலம் மந்திர உபதேசம் பெற்று ஜபம் செய்ய துவங்கலாம். ஜபம் செய்யும் மந்திரம்இ மாலை அனைத்தும் அவர்க்ளின் கருத்தாக இருக்கவேண்டும். நாம் முடிவு செய்ய கூடாது. இரு முக ருத்திராட்சம் தம்பதிகளுக்கு நல்லது. அதைகாட்டிலும் கெளரிஷங்கர் எனும் வகை உண்டு. அது சிறப்பு வய்ந்தது. இரவில் அணிய கூடாது என சொல்லுவதற்கு காரணம். தாம்பத்திய காலத்தில் ருத்திராக்‌ஷம் அசுத்தமாக கூடாது என்பதற்காக தான். உடலுறவு காலத்தில் உடலின் ப்ராண சக்தி அதிகமாக குறைவு ஏற்படுவதால்இ அத்தருணத்தில் ருத்திராக்‌ஷம் செயல் இழக்க வாய்ப்பு உண்டு. ருத்திரஷத்தை வேறு எந்த பொருளுடனும் இணைக்காமல் தனியே அணிவதே சிறந்தது. ஸ்படிகம்இ முத்துஇ பவளம் என எதையும் பயன்படுத்தாமல் இருப்பதே நல்லது. ஒன்றரை அடி உயர அபூர்வ ருத்ராட்சம்! ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த மகேஷ்வரன், ஒன்றரை அடி உயர ருத்ராட்சத்தை பாதுகாத்து வருகிறார். கிருஷ்ணன்கோவில் காயத்ரி தியான பீடத்தை நடத்தி வரும், ஸ்ரீவில்லிபுத்தூர் வக்கீல் மகேஸ்வரன், ருத்ராட்ச மரம் வளர்க்கிறார். தியான பீடத்திற்கு வந்த, வட மாநில பக்தர்கள், முக்கால் அடி, ஒரு அடி, ஒன்றே கால் அடி, ஒன்றரை அடி உயரமுள்ள ஒரு முக ருத்ராட்சங்கள் நான்கை வழங்கினர். இதை அவர் பாதுகாத்து வருகிறார். அவர் கூறியதாவது,"" 21 முகம் வரை ருத்ராட்சம் கிடைத்தாலும், ஒரு முக ருத்ராட்சம் கிடைப்பது அரிது. இதை வீட்டில், செம்பு, பித்தளை, வெள்ளி குடங்களில் , கண்ணாடி கூண்டில் வைத்து பாதுகாத்து வருகிறேன். மேலும், கவுரி சங்கரம், திரிவேணி அம்சம், சூரிய கலை, சந்திர கலை உள்ளிட்ட வடிவங்களிலும், எட்டு அபூர்வ ருத்ராட்சங்களும் உள்ளன.

கள்ளக்காதல் ரகசியம்

கள்ளக்காதல் ரகசியம்

குரு போக காரகன், சுக்கிரன் காம காரகன். இந்த இருவரும் இணைவது, பார்ப்பதில் நல்லதும் கெட்டதும் இருக்கிறது. இந்த இரண்டு கிரகங்களுக்கும் பாவ கிரக பார்வை, நீச்ச சேர்க்கை ஏற்பட்டால் ரகசிய உறவுகள் ஏற்படலாம். 8-ம் இடத்தில் குரு அல்லது சுக்கிரன் இருப்பதால் ஒன்றுக்கும் மேற்பட்டவர்களுடன் காதல் கொள்வதற்கான, கள்ளக்காதல் ஏற்படுவதற்கான சூழல் உள்ளது.


காமம், காதல், கள்ள உறவுகள் ...
ஜோதிடம் ஒரு முழுமையான அறிவியல்.ஒழுங்காக உழைத்துப்பிழைக்கத் தெரியாத பல சோம்பேறிகள் ஜோதிடத்தொழிலுக்கு வந்து ஜோதிடத்தின் மரியாதையைக் கெடுத்துவிட்டனர்.
ஒரு மனிதன் ஏன் காதல் வயப்படுகிறான்? ஏன் தகாத உறவுகள்..? பொருத்தம் பார்த்த கல்யாணம் ஏன் தடுமாற வைக்கிறது? கட்டுப் படுத்த முடியாத காமம் ஏன் ஒருவர் வாழ்க்கையை புரட்டி போடுகிறது..?  ஆயில்யம், சுவாதி, அவிட்டம், அசுபதி,திருவாதிரை இந்த நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் அதே நட்சத்திரங்களில் பிறந்தவர்களை திருமணம் செய்வதே நல்லது.மற்ற நட்சத்திரங்களில் பிறந்தவரை மணம் முடித்தால் ஒருவரின் புத்திசாலித்தனத்திற்கு மற்றவர் அடிமையாகத்தான் வாழ வேண்டியிருக்கும்.

இன்று ரோட்டோரக்கடைகளில் ஒரே நிமிடத்தில் திருமணப்பொருத்தம் பார்ப்பது எப்படி? என ரூ.10/-க்கு புத்தகம் விற்பனையாகிக்கொண்டு இருக்கிறது.அதில் வெறும் நட்சத்திரப் பொருத்தம் மட்டும்தான் இருக்கும்.அது மட்டும் கொண்டு ஒரு திருமணத்தை முடிப்பதால்தான் இன்று நீதிமன்றங்களில் தினமும் விவாகரத்து வழக்குகள் குவிகின்றன. தவிர, திருமணத் தரகர்கள் இன்றைய காலகட்டத்தில் ஒரு திருமணம் நடப்பதற்காக என்னவேண்டுமானாலும் செய்கின்றனர்.உதாரணமாக ஜாதகத்தையே போலியாக தயாரிக்கின்றனர். சில பெண்கள் யோகக்காரிகளாக இருப்பர்.அது முறையாகக் கற்ற ஜோதிடர்களுக்கு மட்டுமே தெரியும்.அதனால் தான் மனைவியை மகாலட்சுமி என்று அழைக்கிறோம். அது போன்ற யோக்காரப்பெண்களால்தான் உங்களின் தெருவில் வாழும் சாதாரண ஆண் சில வருடங்களில் கோடீஸ்வரனாகியிருக்கின்றனர்.  இன்றைய காலகட்டத்தில் உங்கள் ஜாதியைச் சேர்ந்த ஜோதிடரிடம் ஜாதகம் பார்க்காமல் இருப்பது மிக நன்று.(இதில் விதிவிலக்கும் உண்டு). பல வருடங்களுக்கு முன் அந்த நமது ஜாதியை சேர்ந்த ஜோதிடருக்கும் நமது குடும்பத்தாருக்கும் ஏதாவது பகை ஆகியிருக்கும்.நாம் மறந்திருப்போம்.அவர் பலனில் சூப்பராக பழிவாங்கிவிடுவார். சில பெண்களை ஒருபோதும் மணம் முடிக்ககூடாது.ஏனெனில், சில குறிப்பிட்ட கிரகநிலையில் பிறந்த பெண்கள் திருமணம் முடிந்தபின்னரே விபச்சாரியாகிறார்கள்.தகுந்த ஜோதிடரைக் கொண்டு பெண்ணின் பிறந்த ஜாதகத்தைப் பார்த்து மணம் முடிக்கவும். காதல் படுத்தும் பாடு - பொருத்தம் பார்க்காமல் நிறைய மணங்கள் நடக்கின்றன. நல்லவிதமாய் பொருத்தம் இருந்தால் சரி.. பொருந்தாதவை ... உடனே மன (மண) முறிவை ஏற்படுத்தி விடுகின்றன. சில சினிமா நடிகைகளை பார்த்தால் , பாவமாக இருக்கும். அவர்கள் சொந்த வாழ்வு அவ்வளவு சோகமாக இருக்கும்.. பணம், புகழ் இருக்கும். ஆனால் வாழ்க்கை துணை... ...?
தாலி கட்டினால் தான் மனைவி என்று இல்லை. இந்த கலி காலத்தில் விருப்பத்துடன் உறவு கொண்டாலே அவர் மனைவி ஸ்தானம் தான். ஒருவர் ஜாதகம் பார்க்கும்போதே தெரியும். இவருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட மனைவிகள்  என்று. அப்படி என்றால் அவர் தாலி கட்டி குடும்பம் நடத்துவார் என்று இல்லை.  .


ஒருவருக்கு ஏற்படும் காம கொந்தளிப்பு அவர்களை விலை மாதுக்களிடம் செல்ல வைக்கிறது. அவர்களின் ஜாதக நிலைமை யாருக்கு தெரியும்? அப்படி செல்பவர்களுக்கு , அந்த பெண்களின் ஜாதகப்படி கண்டிப்பாக இவரது வாழ்க்கையில் ஏற்ற இறக்கங்கள் இருக்கும்.  அதனால் தான் பொருத்தம் பார்த்து மனம் முடித்து தாம்பத்யம் தொடங்குகின்றனர்.  சில பெண்களை தொட்ட உடனே , பெரிய அளவில் பிரச்னைகள் , நிம்மதியின்மை ஏற்படும்.. .... சில பெண்களை தொட்டாலே மரணம் தான்.. சில பெண்களுடன் உறவு கொண்டால் அவரது ஆண்மை பறிபோய் விடும்.....

மனைவியை தவிர மற்றவரை பார்த்து ஏங்குவதொடு  நிறுத்திக் கொள்ளுங்கள். ... தப்பி தவறி தொட்டு விட்டால்... எதுவும் நடக்கும்..  எதற்கு வம்பு? 


இந்துக்கள் அதிகம் மதம் மாறுவதற்கு காரணம் என்ன?

இந்துக்கள் அதிகம் மதம் மாறுவதற்கு காரணம் என்ன?

பிற மதத்தவர்கள் மூளைச் சலவை செய்வது, கஷ்டப்படுபவர்களை தேர்ந்தெடுத்து சேலை, பணம் கொடுத்து கரெக்ட் செய்வது, நோயை குணமாக்குகிறேன் என்று ஏமாற்றி வித்தைகள் காட்டுவது, ஜாதி ஏற்றத்தாழ்வு இருப்பது என்று ஏகப்பட்ட காரணங்கள் நம்மில் பலருக்கும் தோன்றலாம். ஆனால், நன்கு யோசித்து பார்த்தால் வேறு ஒரு முக்கிய காரணம் இதன் பின்னணியில் இருப்பது தெரியும்..

சுதந்திரம். இதுதான், இந்து மதத்தின் பலவீனம். பலமும் அதுதான். மதமாற்றத்திற்கு இம்மக்கள் உள்ளாகுவதற்கு, சுதந்திரம் முக்கிய காரணம். மலைக்காடுக்குள் மரங்களை கும்பிட்டு, இலைதழைகளை கட்டிக் கொண்டு ஜிம்பாலே, ஜிம்பாலே என்று ஆடும் மலைவாசிகளாகட்டும், வேத மந்திரங்கள் ஓதி, யாகம் வளர்க்கும் பிராமணர்களாகட்டும் இந்துக்களாகவே கருதி அரவணைப்பதுதான் இந்த மதம்.

வழிபடும் முறை முக்கியமில்லை, நோக்கம்தான் முக்கியம் என்ற நல்ல கொள்கை கொண்டது இந்து மதம். இதனால்தான், ஒரு இந்து என்பவன் இப்படி, இப்படித்தான் இருக்க வேண்டும் என்று எந்த வரைமுறையும் வகுக்கப்படவில்லை. தினமும் இத்தனை முறை சாமி கும்பிட வேண்டும், ஞாயிற்றுக்கிழமை போன்ற நாட்களில் எல்லோரும் கூடி நின்று வழிபட வேண்டும், முக்கியமாக, பகவத் கீதையை படித்தே ஆக வேண்டும் என்று எந்த கட்டுப்பாடும் இந்து மதத்தில் கிடையாது.

ஆனால், பிற மதங்களில் இதுபோன்ற கட்டுப்பாடு மிக கடுமையாக செயல்படுத்தப்படுகிறது. குர்ஆன் படிக்காத முஸ்லீமோ, பைபிள் படிக்காத கிறிஸ்தவரோ இருக்க முடியாது. அவ்வாறு செய்யாவிட்டால், அது பெரும் பாவம் என்று போதிக்கப்படுகிறது. ஆனால், பகவத்கீதை எப்படி இருக்கும் என்று தெரியாதவர்கள் தங்களை இந்துக்கள் என்று சொல்லிக்கொள்ள முடியும். அந்த அளவுக்கு இந்து மதத்தில் சுதந்திரம் உள்ளது. இந்த சுதந்திரத்தை பயன்படுத்தி நம் வழியில் நாம் சென்றுகொண்டிருந்தால் பரவாயில்லை.

ஆனால் தனது மதத்தை பற்றியோ, கீதையை பற்றியோ கூட தெரியாத ஒருவன், பிற மதத்தவர்கள் தங்கள் மதத்தை பற்றி படித்ததை பிரமாண்டப்படுத்தி சொல்லும்போது, வாயில் கொசு போவது தெரியாமல், ஆ.. என்று வாய் திறந்து கேட்டுக்கொள்கிறான். நமது மதம் எத்தகைய பாரம்பரியம் மிக்கது, ஹரப்பா, மொகஞ்சதாரோ காலத்தில் கண்டெடுக்கப்பட்ட நாணயங்களில் கூட சிவபெருமான், நாராயணர் உருவங்கள் உள்ளதே, 2000 வருடங்கள் பழமையான திருக்குறளில் கூட, விஷ்ணுவை பற்றி புகழப்பட்டுள்ளதே என்பதையெல்லாம் இந்து தெரிந்து வைத்திருக்க மாட்டான்.

இந்து மதம் கொடுத்த சுதந்திரத்தை நாம் சரியாக பயன்படுத்தாமல், முட்டாள்களாக வாழ பயன்படுத்திவிட்டோம். இந்துக்கள் மதத்தை ஒரு பெரிய விஷயமாக எடுத்துக்கொள்வதில்லை. அது நல்ல விஷயமாக இருக்கலாம். ஆனால் மதம் மாற்றுவோர்கள் நம்மை சுற்றி பெருத்துவிட்ட இக்காலகட்டத்தில், இந்து மதத்தின் பெருமையை அறிய வேண்டியது அவசியம். இந்துக்கள் எப்போதும் தங்கள் வழியை மட்டும் பார்த்துக்கொண்டு செல்பவர்கள். எப்போதும் மதத்தை பற்றியே பேசுவோரை நாம் எரிச்சலோடுதான் பார்ப்போம். ஆனால், அதுவே பிற நாட்டுக்காரர்களுக்கு சாதகமாகிவிட்டதை தன்மானம், நாட்டுபற்று உள்ளோர் எண்ணிப் பார்க்க வேண்டும்.

தனது தந்தை, தாய் பெருமையை உணராதவன்தான் அடுத்த வீட்டுக்காரர்களை பற்றி பெருமையாக நினைத்துக்கொண்டிருப்பான். எனவே, இந்து மதத்தை பற்றி தெரிந்துகொள்ளுங்கள். அதில் அக்கறை காட்டுங்கள். அப்போதுதான், நமது கலாச்சாரமும், தேசப்பற்றும் காப்பாற்றப்படும். அல்லது மீண்டும் இந்த நாடும், நாட்டு மக்களும் அடிமையாக மாறுவார்கள். எல்லோரையும் நேசிப்பது இந்துக்கள் குணம். நல்லது. ஆனால், முதலில் உன்னை நேசிக்க கற்றுக்கொள்.


மச்ச ஜாதகம் பெண்களுக்கு

மச்ச ஜாதகம் பெண்களுக்கு

ஒரு பெண்ணின் நெற்றியில் குங்குமம் வைத்துக் கொள்கிற இடத்தில் மச்சம் இருந்தால் அவளுக்கு உயர் பதவியிலும் பெரிய அந்தஸ்திலும் உள்ள லட்சாதிபதியான கணவன் அமைவான். அவனுக்கு வாழ்க்கையில் எல்லா வசதி, வாய்ப்புகளும் கிடைக்கும்.

நெற்றியின் வலது புறத்தில் சிவந்த மச்சம் இருந்தால் அப்பெண் அதிர்ஷ்டம் நிறைந்தவளாக இருப்பாள். தன்னம்பிக்கை மற்றும் தைரியம் மிக்கவளாக இருப்பாள். யார்க்கும், எதற்கும் அடங்கிப் போகாத குணம் இருக்கும்.

நெற்றியின் இடது புறத்தில் சிவந்த மச்சம் இருந்தால் அப்பெண் ஒழுக்கத்தில் சிறந்தவளாக இருப்பாள். அதே மச்சம் கருப்பாக இருந்தால் அப்பெண் அற்பகுணம் உடையவளாகவும், வேண்டாத நபர்களின் சகவாசம் உள்ளவளாகவும் இருப்பாள்.

மூக்கின் மீது எங்காவது மச்சம் இருந்தால் அப்பெண் எடுத்த காரியங்களை செய்து முடிக்கும் ஆற்றல் மிகுந்தவளாக இருப்பாள்.

மூக்கின் நுனிப்பகுதியில் மச்சம் இருந்தால் அப்பெண்ணுக்கு அமையும் கணவர் மிகப்பெரிய செல்வந்தராக இருப்பார்.

மேல் உதடு அல்லது கீழ் உதட்டில் மச்சம் இருந்தால் அவள் அதிர்ஷ்டம் மிகுந்தவளாக, நல்லொழுக்கம் உடையவளாக, வாசனை பொʊருட்களின் மீது பிரியம் உள்ளவளாக, சிறந்த கணவனை அடைந்தவளாக இருப்பாள்.

மோவாயில் மச்சம் உள்ளவள் மிக உயர்ந்த எண்ணங்களைப் பெற்றிருப்பாள். பொறுமையும், அமைதியும் அவளின் உடன் பிறந்ததாக இருக்கும். குணத்திலும், தோற்றத்திலும் அழகான ஆணை கணவராக அடைந்திடுவாள்.

இடது கன்னத்தில் மச்சம் உள்ளவள் மற்றவர்களை வசீகரிக்கும் ஆற்றல் உள்ளவளாக இருப்பாள். அவள் விரும்பியதை செய்து முடிக்க பலர் காத்திருப்பார்கள்.

வலது கன்னத்தில் மச்சம் உள்ளவர்கள் கஷ்டங்கள் பலவற்றை சந்தித்து முன்னேற்றம் அடையும் திறனைப் பெற்றிருப்பாள். கஷ்டமும்_சந்தோஷமும் சமமாக அனுபவிப்பாள்.

கழுத்தில் வலப்புறத்தில் மச்சம் உள்ளவள் முதல் பிரசவத்தில் ஆண் குழந்தையை பெறுவாள். பிறந்த வீட்டுக்கும், புகுந்த வீட்டிற்கும் அதிர்ஷ்டத்தை தேடித் தருவாள்.

தலையில் மச்சம் : தலையில் எங்கு மச்சம் இருந்தாலும் அந்தப் பெண்ணிடம் பேராசையும், பொறாமை குணமும் நிறைய இருக்கும். வாழ்க்கையில் சந்தோசமோ, மன நிறைவோ இருக்காது.

ஆடம்பர வாழ்வு :  நெற்றியின் நடுவில் மச்சம் இருந்தால் அவள் அதிகார பதவியில் அமர் வாள். ஆடம்பர வாழ்வு கிடைக்கும். செய்வது எல்லாம் வெற்றியாகும். இரு புருவத்துக்கிடையே மச்சம் இருந்தா லும் மேற்சொன்ன பலனே. நெற்றியில் வலது பக்கம் மச்சம் இருந்தால் வறுமை வாட்டும். ஆனாலும் நேர்மையுடன் வாழ்வாள்.

கன்னத்தில் மச்சம் காதுக்கும், கண்ணுக்கும் இடையே உள்ள கன்னப் பகுதியில் இடது பக்கம் மச்சம் இருந்தால் வாழ்க்கை வசதிகர மாக இருக்கும். சந்தோசம் குடிகொண்டு இருக்கும். இதுவே வலதுபக்கம் என்றால் வறுமை வாட்டும்.

இடது தாடையில் மச்சம் இருந்தால் ஆள் அழகாக இருப்பாள். ஆண்கள் இவளைத் துரத்தித் துரத்திக் காதலிக்கத் துடிப்பார்கள். நற்குணமுடையவள். வலது தாடையில் மச்சம் என்றால் பிறரால் வெறுக்கப்படுவாள்.

கண்களில் மச்சம் இருந்தால் வாழ்க்கை ஏற்றமும், இறக்கமும் நிறைந்ததாக இருக்கும்.

மூக்கு மீது மச்சம் இருந்தால் மிகப் பெரிய அதிர்ஷடம். நினைத்ததெல்லாம் நடக்கும். ஆடம்பர வாழ்வு, அந்தஸ்து இருக்கும். சமூக மதிப்பு கிடைக்கும்.

காதுகளில் மச்சம் இருந்தால் ஏகப்பட்ட செலவு செய்வார்கள். என்ன செலவு செய்தாலும் அதற்குத் தக்கபடி பணமும் வரும். சமுதாயத்தில் இவர்களுக்கு தனி மதிப்பு இருக்கும்.

நாக்கில் மச்சம் இருந்தால் அவள் கலைஞானம் கொண்டவளாக இருப்பாள். ரசனை அதிகம் இருக்கும்.

கழுத்தில் எங்கு மச்சம் இருந்தாலும் வாழ்க்கையில் 7 முறை அதிர்ஷடம் அடிக்கும்.

இடதுபக்க தோளில் மச்சம் கொண்டவள் ஏகப்பட்ட சொத்துகளுக்கு அதிபதியாவாள். பரந்த மனப்பான்மையுடன் பிறருக்கு தான தர்மம் செய்யும் குணம் இவளிடம் இருக்கும்.

மார்பில் மச்சம் : பெண்ணின் இடதுபக்க மார்பகத்தில் வலது பக்கமாக மச்சம் இருந்தால் வாழ்வில் படிப்படியாக முன்னேறுவாள். அதுவே இடதுபுறமாக மச்சம் இருந்தால் உணர்ச்சிகள் அதிகம் இருக்குமாம். வலது பக்க மார்பில் எங்கு மச்சம் இருந்தாலும் வாழ்க்கையில் போராட்டம் இருக்கும்.

நெஞ்சின் இடப்பகுதியில் மச்சம் இருந்தால் அவளுக்கு காலாகாலத்தில் திருமணம் நடக்கும். நல்ல கணவன் அமைவான்.

தொப்புளுக்கு மேலே, வயிற்றில் மச்சம் காணப்பட்டால் அமைதியும், இன்பமும் கலந்த வாழ்க்கை அமையும். பிறரால் போற்றப்படுபவளாக இருப்பாள்.

தொப்புளில் மச்சம் இருந்தால் வசதியான வாழ்க்கை. தொப்புளுக்கு கீழே மச்சம் இருந்தால் வறுமையும், செல்வமும் மாறி மாறி வரும்.

முதுகில் மச்சம் : கண்களுக்குத் தெரியாமல் முதுகில் எங்கு மச்சம் இருந்தாலும் துணிச்சலான காரியங்கள் அந்தப் பெண்ணிடத்தில் இருக்கும். வாழ்க்கை வசதிகரமானதாக இருக்கும். உடலில் ஆரோக்கியம் திகழும்.

உள்ளங்கை, முழங்கை, மணிக்கட்டு ஆகியவற்றில் எங்கு மச்சம் இருந்தாலும் அவளது குடும்பம் இனிமையாக இருக்கும். கலாரசனை உடைய பெண் இவள். சிறந்த நிர்வாகியும்கூட.

பிறப்புறுப்பில் மச்சம் இருக்கும் பெண்ணைவிட வேறு ஒரு அதிர்ஷடசாலி பெண் இருக்க மாட்டாள். உயர்ந்த பதவிகள் தேடி வரும்.

தொடை : இடதுதொடையில் மச்சம் இருந்தால் படிப்படியாக கஷடப்பட்டு வாழ்க்கையில் மிக உன்னத நிலைமை அடைவாள். வலது தொடையில் மச்சம் என்றால் தற்பெருமையும் அடங்காபிடாரித் தனமும் இருக்கும்.

இடது முழங்காலில் மச்சம் இருக்கும் பெண், புத்தி கூர்மையானவளாகவும், தன்னம்பிக்கை உடையவளாகவும் இருப்பாள். அதுவே வலது முழங்காலில் என்றால் அவள் பிடிவாதக்காரி.

ஏழரைச் சனி என்ன செய்யும்?

ஏழரைச் சனி என்ன செய்யும்?

காலத்தை கி.மு.& கி.பி. என வரலாறு பிரிக்கிறது. அதுபோல வாழ்க்கையை ஏ.மு.& ஏ.பி. என ஜோதிடம் பிரித்துக் காட்டுகிறது. அதாவது ஏழரைச் சனிக்கு முன், ஏழரைச் சனிக்குப் பின் என்று வாழ்வு கனிகிறது. ஏழரைக்குப் பிறகு வரும் தெளிவும் நிதானமும் ஆச்சரியமானது.

இந்த ஏழரைச் சனி என்னதான் செய்யும்? உங்கள் ராசிக்குப் பின் ராசியிலும் உங்கள் ராசிக்குள்ளும் உங்கள் ராசிக்கு அடுத்த ராசியிலும் சனி சஞ்சரிக்கும் காலத்தையே ஏழரைச் சனி என்கிறோம். சிறு வயதில் வரும் முதல் சுற்றை மங்கு சனி என்றும் வாலிப மற்றும் மத்திம வயதின்போது வரும் இரண்டாம் சுற்றை பொங்கு சனி என்றும் கொஞ்சம் வயதான காலத்தில் வரும் மூன்றாம் சுற்றை கங்கு சனி என்றும் அழைப்பர்.

முதல் சுற்று

பிறந்ததிலிருந்து இருபது வயதுக்குள் ஏற்படும் ஏழரைச்சனியின் தாக்கம் சிறுவர்களிடம் மிகத் தெளிவாகக் காணலாம். சனியின் முழுத் திறனும் இவர்களிடம் ஒளிவு மறைவில்லாமல் வெளிப்படும். முதல் சுற்று, முடக்கி முயற்சியை தூண்டும். ‘‘எதுக்கெடுத்தாலும் கத்தி கலாட்டா பண்றான்; எத்தனை தடவை அடிச்சாலும் துடைச்சுப் பொட்டுட்டு மறுபடி மறுபடி தப்பு பண்றான்; எத்தனை தடவை டாக்டர் கிட்ட காண்பிச்சாலும் மூக்கு ஒழுகிட்டே இருக்கு...’’ என்று பலவிதத்தில் பாதிப்புகள் இருக்கும். ஏழரைச் சனியின்போது பிறக்கும் குழந்தைகளின் பெற்றோரிடம் டாக்டர் கையெழுத்து வாங்கிக் கொள்ளும் அளவுக்கு உடல்நிலை பாதிக்கும்.

குழந்தைப் பருவம் முதல் டீன் ஏஜ் வரையிலான இந்த சுற்றில் பெற்றோருக்குள் கருத்து மோதல், பிரிவு, சந்தேகத்தால் சண்டை என்று பிரச்னைகள் வந்து நீங்கும். இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில், கணவன் மனைவிக்குள் நேரடியாக எந்தப் பிரச்னையும் இருக்காது. ‘‘அவங்க சொன்னாங்க, இவங்க சொன்னாங்க’’ என்று மூன்றாவது நபர் தலையீட்டால்தான் பிரச்னை உருவாகும். அதிலும் முக்கியமாக குறுகிய காலத்தில் அறிமுகமாகி நெருங்கிய நண்பராக மாறுவோரால்தான் கருத்து மோதல் பெரிதாகும். தேன் கூடாக இருந்த குடும்பம் தேள் கொட்டின மாதிரி ஆகும் சூழ்நிலை நேரும். 13லிருந்து 19 வரையுள்ள ஏழரைச் சனி நடக்கும் பிள்ளைகளுக்கு செல்போன் தராதீர்கள். கூடா நட்பினில் சிக்குவார்கள். திணறி வெளியே வருவார்கள். அவர்களை கண்கொத்தி பாம்பாக பாதுகாக்கவேண்டும்.

மந்தம், மறதி, தூக்கம் என்று இருப்பார்கள்.‘‘அடங்காதே, அலட்சியப்படுத்து’’ என்ற மனநிலை! பிறகு, ‘‘அப்பவே அம்மா சொன்னாங்க. அப்பா சொன்னாங்க நான் கேட்கலை’’ என்று வருந்துவார்கள். ‘‘வீட்ல அடங்காத பிள்ளை ஊர்ல அடங்கும்.’’ இதுதான் சனிபகவானின் திருத்தும் முறை. தடவித் தடவி சொன்னால் கேட்காத பிள்¬ளயை தடியெடுத்து திருத்தும் வாத்தியார்தான் சனிபகவான். ‘‘சுவாமிக்கு நமஸ்காரம் பண்ணிட்டுப்போடா’’ என்றால், ‘‘எங்கயோ இருக்கற சாமி என் பிரேயருக்குத்தான் வெயிட் பண்ணிகிட்டிருக்காரா’’ என்பார்கள். ஆனால், இடரும்போதும், சிக்கலில் சிக்கும்போதும் தாயின் சொற்கள் நினைவுக்கு வரும். ‘‘மத்தவங்க சொல்றபோது செய்யக் கூடாது; தனக்குன்னு எப்போ தோணுதோ அப்போ செய்யணும்’’ என்று முரண்டு பிடிப்பார்கள். தாமதித்து எதையும் செய்ய வைக்கும்.

ஏழரைச் சனியில் பெறக்கூடிய அனுபவங்களும் அவமானங்களும் காயங்களும் வடுக்களாகி, வாழ்க்கை முழுதும் மறக்க முடியாதபடி இருக்கும். இப்படி வருத்தப்பட வைத்தே வாழ்க்கையை வளர்ப்பார், சனிபகவான். அப்போ என்னதான் செய்யறது?‘‘குழந்தைகளை விட்டுப் பிடியுங்கள். நீ இப்படிப் பண்ணா இதுதான் ரிசல்ட்’’ என்று அன்பை மனதிற்குள் பூட்டி, வெளியே கண்டிப்பு காட்டுங்கள்.

சனி நேர்மறையாக மாறுவார். சனி தர்மதேவன். அதர்மத்தில் திருப்பி விட்டு சோதிப்பார். வலையில் மாட்டாது வெளியேற வேண்டும்; அதற்கு சில உபாயங்களையும் சொல்லித் தருவார்; இவற்றை நாம்தான் சரியாகப் புரிந்துகொண்டு கெட்டியாகப் பிடித்துக் கொள்ளவேண்டும். ‘‘நீ படிக்கறியோ இல்லையோ. வாராவாரம் அந்த கோயிலுக்கு மட்டும் போயிட்டு வந்துடு. காலையில சீக்கிரமா எழுந்திரு. பத்து நிமிஷம் சுவாமிகிட்ட உட்கார்ந்து நான் சொல்ற சுலோகத்தை மட்டும் சொல்லு’’ என்று பழக்குங்கள். சனி என்கிற கரி, வைரமாக மாறும் அதிசயம் நிகழும்.

இரண்டாவது சுற்று

இருபத்தேழு வயதுக்கு மேல் யாருக்கு ஏழரைச் சனி நடந்தாலும் அதற்கு பொங்கு சனி என்று பெயர். பறித்தல், பாதுகாத்தல், பலமடங்காக பெருக்கித் தருதல் & இதுதான் இரண்டாவது சுற்றின் கான்செப்ட். உள்ளுக்குள் கிடந்த திறமைகளை பூவாணம்போல பொங்க வைக்கும். செல்வத்தை அள்ளிக் கொடுக்கும். ஆனால், கொஞ்சம் கெடுக்கும். அதனால்தான் கொடுத்துக் கெடுப்பவர்; கெடுத்து கொடுக்கிறவர் என்ற பெயர் சனிக்கு உண்டு. ‘‘சும்மா, ஒண்ணுமே இல்லாத ஒட்டாண்டியா வந்தான். இப்போ உசரத்துக்கு போயிட்டான்’’ என்பார்கள். காசு, பணம், பதவி, கல்யாணம், சொத்து, சுகம் எல்லாவற்றையும் கொடுப்பார். ஆனால், நடுவில் பிடுங்கிக் கொள்வார். ஏன் எடுத்துக் கொள்ள வேண்டும்?

‘‘என்னால்தான் எல்லாமும் நடக்கிறது, எனக்கு மிஞ்சி என்ன இருக்கு!’’ என்று ஆணவத்தோடு பேசுவோரின் அனைத்து செல்வங்களையும் பறிக்கிறார். ஏனெனில், இந்த இரண்டாவது சுற்றின்போது சில மிதமிஞ்சிய செல்வ வளத்தால் தாமே சில பிரச்னைகளை உருவாக்கிக் கொள்வார்கள். ‘‘நான் யார் தெரியுமா?’’ என்று ஆணவத்துடன் தன் செல்வாக்கை நிரூபிக்க துணிவார்கள். தான்தான் பெரிய ஆள் என்று அடக்கமற்ற மனோநிலையில் திரிவார்கள். அப்படி மாறிய அடுத்த நிமிடமே சனி உங்களை ஆட்டம் காண வைக்கும் முயற்சியில் இறங்குவார். ஆகவே பேச்சிலோ, செயலிலோ கர்வக் கொம்பு முளைக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

சனிபகவானால்தான் நம் அறிவுக்கும் சக்திக்கும் அப்பாற்பட்ட பல விஷயங்கள் இருக்கிறது என்பதை உணருவோம். ‘‘நம்ம கையில எதுவும் இல்லை’’ என்கிற சரணாகதி தத்துவமும் புரியும். ஏழரைச் சனியின்போது முடிந்தவரை கோர்ட் கேஸ் என்று போகக் கூடாது. பத்து லட்ச ரூபாய் பொருளுக்காக காக்கிக்கும் கருப்புக்கும் இருபது லட்ச ரூபாய் செலவு செய்வீர்கள். எல்லா வி.ஐ.பி.யையும் தெரிந்து வைத்திருப்பீர்கள். ஆனால் ‘‘இந்த விஷயத்தைப்போய் நாம எப்படி சொல்றது! அவர் என்னை தப்பா நினைச்சிட்டா...?’’ என்று தயங்குவீர்கள்.

அப்போது எப்படித்தான் இருக்க வேண்டும்?

வசதி இருக்கும்போது எதையும் தலையில் ஏற்றிக் கொள்ளாமல் இருங்கள். கூழ் கிடைத்தாலும் குடியுங்கள். ஸ்டார் ஹோட்டலில் இருந்தாலும் கூழ் குடிக்கும் மனோநிலையிலேயே இருங்கள். அத்தனைக்கும் ஆசைப்பட்டு அத்தனையும் தனக்கே என்று வாரி சுருட்டும்போது சனிபகவான் சும்மாயிருக்க மாட்டார். அமைதியாக இருந்தால் வேலை பார்க்கும் நிறுவனத்தையே விலை பேசும் நிலைக்கு உயர்த்துவார். இந்த இரண்டாவது சுற்றில்தான் வியாபாரம் விருத்தியாகும். அதனால் தைரியமாக தொழில் தொடங்கலாம். ‘‘ரெண்டாவது ரவுண்டுல ரெட்டை வருமானம்’’ என்றொரு வாக்கியம் உள்ளது.

ஆனால், பாதை மாறினால் அதல பாதாளம்தான். ‘‘சார், நம்ம பிராண்டுக்கு மார்க்கெட்ல தனி மவுசு இருக்கு. அதனால டூப்ளிகேட்டையும்நாமே விடுவோம்’’ என்று சனி சிலரை அனுப்பி சோதிப்பார். ஏனெனில், ஒரு மனிதனின் மனதை சோதித்துப் பார்ப்பதில் இவருக்கு நிகர் எவருமிலர். ‘‘சாப்பாட்டுக்கே வழியில்லாம வந்து சேர்ந்தான். சரின்னு சேர்த்துகிட்டேன். அவன் கொடுத்த ஐடியாவை நம்பினேன். இப்போ அம்போன்னு நிக்கறேன். தப்பான வழியை காட்டிட்டு என்னையும் காட்டிக் கொடுத்துட்டான்’’ என்பீர்கள். நேர்மை என்கிற வார்த்தையை கல்வெட்டாக பதித்துக் கொள்ளுங்கள். ஏழரைச் சனியின் முடிவில் நீங்கள்தான் அந்த வட்டாரத்தின் முக்கியஸ்தர். செல்வந்தர்.
கோடிகோடியாக வைரம், வைடூரியம் குவிந்திருக்கும் திருப்பதியில், வெங்கடாஜலபதிக்கு மண் சட்டியில், தயிர் சாதம்தான் நிவேதனம். பெருமாளே அத்தனை எளிமையெனில் நாமெல்லாம் எப்படியிருக்க வேண்டும் என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும்.

இன்னொரு விஷயம். நம்பிக்கை துரோகம் செய்தவர்களைப் பார்த்து துடிக்காதீர்கள். டென்ஷன் ஆகாதீர்கள். ஆரோக்யம் பாதிக்கும். ஏழரைச் சனியில் யார் உங்கள் காசை சாப்பிட்டாலும் அது ஏற்கனவே நீங்கள்பட்ட கடன் என்று நினைத்துக் கொள்ளுங்கள். அது பூர்வ ஜென்ம தொடர்பு என்பதாகவே எடுத்துக் கொள்ளுங்கள். முக்கியமாக இந்த இரண்டாவது சுற்று ஜென்ம சனியின்போது பார்ட்டி, கேளிக்கைகளையெல்லாம் கொஞ்சம் குறைத்துக் கொள்ளுங்கள். எல்லாவற்றையும் தானே அனுபவிக்க வேண்டும் என்று ஆசைப்படக் கூடாது. சனி

பகவான், ‘‘நீ போய் கேளு. அவர் தறாரா இல்லையான்னு பார்க்கறேன்’’ என்று சிலரை அனுப்பி வைப்பார். அதனால் பிரதிபலன் பாராத உதவிகள் செய்தால் பொங்கு சனி நல்ல பலன்களை கொடுக்கும்.

மூன்றாவது சுற்று

கிட்டத்தட்ட ஐம்பது வயதைத்தாண்டி வரும் ஏழரைச் சனி. இதுதான் உங்களுக்கு கடைசி சனி என்று யாராவது பயமுறுத்தினால் பயப்படாதீர்கள். படபடப்பையும், பயத்தையும் தரும் சுற்று இது. உங்களை முடக்க முயற்சி செய்யும். அதற்குள், உங்களை மீறி உங்களிடத்தில் ஒரு கட்டுப்பாடு வந்துவிட வேண்டும். ‘‘காலையில நாலு இட்லி சாப்பிடுவேன்’’ என்றால் அதை மூணாக்கி அப்புறம் இரண்டே போதும் என்று நிறுத்திக் கொள்ளும் தெளிவு வேண்டும். அவ்வளவுதான். அதீத இயக்கத்தை கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும். தன்னை தாழ்த்தியே உயர்த்திக் கொள்ள தயாராக இருக்க வேண்டும். மருமகள் மார்க்கெட்டிற்கு போக தயாராக இருந்தால் நீங்கள்போய் வாங்கிக் கொண்டு வரவேண்டும்.

எது நடந்தாலும் குற்றத்தை கண்டுபிடித்துக் கொண்டிருக்கக் கூடாது. இள வட்டங்கள் ஏளனமாகப் பேசும். இந்த மூன்றாவது சனியில் முதல் மரியாதையை எதிர்பார்க்கக் கூடாது. ‘‘எங்க போறாங்கன்னு எங்கிட்ட சொல்றதேயில்லை’’ என்று அடிக்கடி சொல்லக் கூடாது. வீட்டில் தனக்குத் தெரியாமல் எதுவும் நடக்கக் கூடாது என்று நினைக்கக் கூடாது. ‘‘நான் எவ்ளோ பெரிய போஸ்ட்டுல இருந்தேன்’’ என்றெல்லாம் பேசிக்கொண்டு வீட்டை அலுவலகமாக்கக் கூடாது. ஆடையைத் துறந்தால் மகாத்மாவாகலாம். ஆசையைத் துறந்தால் புத்தனாகலாம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

எல்லோருக்கும் எல்லா பணிகளிலும் உதவியாக இருங்கள். உங்களை சனி உயர்ந்த இடத்தில் வைத்து அழகு பார்ப்பார். ஏழரைச் சனியில் எப்படித்தான் நடந்து கொள்ள வேண்டும் என்று திரும்பத் திரும்ப சந்தேகம் வருகிறதா? ஏழரையில் மனசாட்சிக்கு பயப்படுங்கள். மனசாட்சியை மீறி எது செய்தாலும் சனியின் பாதிப்பிற்கு ஆளாவீர்கள். உங்கள் மனசாட்சி வேறல்ல... சனிபகவான் வேறல்ல என்பதை நீங்களே அறிவீர்கள்.

புத்திர தோஷங்கள் எத்தனை வகை?

புத்திர தோஷங்கள் எத்தனை வகை?
புத்திர தோஷங்கள் எத்தனை வகை? புத்திரதோஷங்கள் எப்படி எதனால் ஏற்படுகின்றன? மொத்தம் எட்டுவிதமான புத்திர தோஷங்கள் இருக்கின்றன.இவை அனைத்தும் நம்மைச் சுற்றியுள்ள பலரது வாழ்க்கையைக் கூர்ந்து கவனித்தால் அது தெரியும்.அவற்றை பார்ப்போம். 1.சர்ப்பசாபத்தால் ஏற்படும் புத்திர தோஷம்
 2.பித்ரு சாபத்தால் ஏற்படும் புத்திர தோஷம்
3.மாத்ரு சாபத்தால் ஏற்படும் புத்திர தோஷம்
4.சகோதர சாபத்தால் ஏற்படும் புத்திர தோஷம்
5.மாதுல சாபத்தால் ஏற்படும் புத்திர தோஷம்
6.பிராம்மண சாபத்தால் ஏற்படும் புத்திர தோஷம்
7.பத்தினி சாபத்தால் ஏற்படும் புத்திர தோஷம்
8.மந்திர சாபம்,பிரேத சாபத்தால் ஏற்படும் புத்திர தோஷம்
இந்த தோஷம் எப்படி செயல்படுகின்றது? குழந்தை பிறந்த சில நாட்களில் இறந்து போவது, பாசமுள்ள பிள்ளைகள் பிறந்து வளர்ந்து இளைஞர்,இளம் பெண்ணாக இருக்கும்போது திடீரென இறந்து போவது; பெண் குழந்தைகளுக்கு கல்யாணம் தள்ளிப்போவதால் காலங்கடந்து கல்யாணம் நடப்பது, திருமணம் முடிந்து சில காலத்திற்குள்ளாகவே வாழாவெட்டியாக பெற்றோர் வீட்டிற்குத் திரும்புவது; மூளை வளர்ச்சியின்றி குழந்தை பிறப்பது. சரி! எந்த காரணங்களால் இந்த புத்திர தோஷங்கள் உருவாகின்றன? முற்பிறவியில் பெற்ற தாய் தந்தையரை சரியாக கவனிக்காததாலும்,அவர்களை வேதனைப்படுத்தியதாலும்,அவர்களின் கடைசிக்காலத்தில் சரியான நேரத்தில் உணவு தராமலும் ஏற்படுவது பித்ரு அல்லது பிதுரு சாபம். இதனால் இப்பிறவியில் தன் தந்தையரோடும் தன் பிள்ளைகளோடும் ஒத்துப்போக முடியாது.எப்போதும் ரத்த உறவுகளான அப்பா மற்றும் பிள்ளைகளால் அவமானமும்,வேதனையும் தினசரி நடவடிக்கைகளாகும். சகோதரர்களுக்குச் சேரவேண்டிய சொத்துக்களைத் தராமல் வஞ்சகம் செய்து எடுத்துக்கொள்வதாலும்,சகோதரர்களைக் கொடுமைப்படுத்துவதாலும் ஏற்படுவது சகோதர சாபம்.அந்த சாபத்தால் புத்திர தோஷம் ஏற்படுவது.சொத்துப்பிரச்னையில் தாய்மாமனை அவமானப்படுத்தியும்,சண்டை போட்டும் தாய்மாமன் சாபத்தால் ஏற்பட்ட புத்திரதோஷம். இந்த சாபத்தால் தாய்வழிப்பகையும்,புத்திரர்கள் பகையும் அவமானமும் ஏற்படும்.பெண் பிள்ளைகள் வாழாவெட்டியாவதும்,விவாகரத்து ஆகி வாழ முடியாமல் தவிப்பதும் இந்த சாபத்தால் ஏற்படுகின்றது. சாதுக்கள்,மகான்களையும் சிவனடியார்களையும் அவமானப்படுத்துவதால் ஏற்படுவது பிராம்மண சாபம்.இந்த சாபத்தால் ஊனமுற்ற குழந்தைகள் பிறப்பது,மூளை வளர்ச்சி இல்லாத பிள்ளைகள் பிறப்பது,ஊமை,குருடு,செவிடு போன்ற குறையுள்ள குழந்தைகள் பிறப்பதும் ஒரு வித ஆனால் கடுமையான புத்திர தோஷம். மனைவியைக் கொடுமைப் படுத்துவதாலும், மனைவி குழந்தைகளை விட்டுவிட்டு வைப்பாட்டி வீடே கதி என இருப்பதாலும், பிள்ளைகளுக்குச் செய்ய வேண்டிய கடமைகளிலிருந்து விலகி குடும்பத்தை விட்டுப் பிரிவதாலும், மனைவியின் மனம் கொதித்து அந்த சாபத்தால் ஏற்படுவது பத்தினி சாபம்.இதனால், மனைவி மக்களால் அவமானப்படுதலும்,பண்டாரம்,பரதேசியாகி பிச்சை எடுத்தலும், கடைசிக்காலத்தில் தன்னைக் கவனிக்க ஆளில்லையே என வருந்துதலும், குடும்பத்தோடு இருந்தாலும் குடும்பத்தை விட்டுப் பிரிந்துபோய் அனாதையாக இறந்து போகுதலும் ஏற்படும். மந்திர சாபம்,பிரேத சாபம் இவற்றால் ஏற்படும் புத்திர தோஷம் என்பது மாந்தீரிகர்களைத் தேடிப் போய் நமக்கு வேண்டாதவர்களுக்கு பில்லி சூனியம் வைப்பதும், குல தெய்வத்தை மறந்து வணங்காமல் இருப்பதும் ஆகும். இந்த சாபத்தால் மருத்துவத்துக்குப் புலப்படாத நோய்கள் உருவாகுவதும், சம்பாதிக்கும் பணம் முழுவதும் அதற்கே செலவழிப்பதும்,குடும்பம் விருத்தியில்லாமல் இருப்பதும், தொழில் நட்டம், தொழில் அமையாமலிருப்பது,பிள்ளைகளால் ஏற்படும் ஊதாரித்தனம்,துஷ்ட குணமுள்ள பிள்ளைகளால் வரும் பிரச்னைகள் போன்ற பலன்கள் ஏற்படும். இந்த புத்திர தோஷத்தை நீக்கிட பரிகாரம் என்ன? எப்படிச் செய்வது? குருபகவானுக்கு வியாழக்கிழமையன்று அர்ச்சனை செய்யலாம்.வியாழக்கிழமை திருச்செந்தூரில் அன்னதானம் செய்யலாம். எந்தக்கிரகம் புத்திர தோஷத்தை உருவாக்கியதோ அந்த கிரகத்தின் திசை அல்லது புக்திகாலத்தில் அந்தக் கிரகத்தின் அதிதேவதைக்கு அர்ச்சனை செய்யலாம். குலதெய்வம் கோவிலில் அவரவர் ஜன்ம நட்சத்திரம் அல்லது பவுர்ணமி அல்லது தமிழ் மாதப்பிறப்பு அல்லது தமிழ் வருடப்பிறப்பு அன்று அன்னதானம் ஒரு வருடம் வரை அல்லது ஆயுள் முழுவதும் செய்துவரலாம். நமது பாவத்தை நாம் தான் சுமக்கிறோம்.அதுபோல,நமது பரிகாரத்தை நாம்தான் நேரடியாகச் செய்ய வேண்டும்.அல்லது  குருமூலம் செய்யலாம்.  



பரிகாரங்கள் உடனே பலன் தருமா...?

கிரக தோஷங்களுக்கப் பரிகாரம் செய்தபின் அந்தத் தோஷங்கள் நிவர்த்தி ஆகிவிட்டன என்பதை எதை வைத்து முடிவு செய்வது? இப்படி பட்ட சந்தேகம் பலருக்கு உண்டு. தீராத வயிற்றுவலி வருகிறது. அதற்கு நாம் மருந்து சாப்பிடுகிறோம். சாப்பிடும் மருந்து வேலை செய்கிறதா இல்லையா என்பதை நோய் குணமாகும் அனுபவத்திலிருந்து தான் தெரிந்து கொள்ள முடியும். அதே போன்று தான் தோஷங்களுக்கான பரிகாரங்களும் ஆகும்.

குறிப்பிட்ட தோஷ நிவாரணத்திற்காகச் செய்யப்படும். பரிகாரம் காலச்சூழலில் பலன் தருவதை வைத்து தான் உணர்ந்து கொள்ள முடியும். ஆனால் உடனடியாகப் பலன்கள் ஏற்பட்டு விடும். என்று பலர் நம்புகிறார்கள். இது தவறான எதிர்பார்ப்பாகும். எந்தத் துயரமும் உடனடியாக நம்மைத் தாக்குவதில்லை. நிதானமாகத் தான் நம்மை கஷ்டத்திற்கு உள்ளாக்கும்.

நிதானமாகத் தான் விடுதலையும் செய்யும். 10 வருடப் பிரச்சினை ஒரே நாளில்
எந்தப் பரிகாரத்தாலும் தீராது. சற்று காலம் பிடித்து தான் தீரும். எனவே
கிரக பரிகாரங்கள் பலன் தருவதற்குக் குறைந்த பட்சம் 3 மாதங்களாவது ஆகலாம். 3லிருந்து 6 மாதத்திற்குள் பிரச்சினையின் வேகம் குறைய அரம்பிக்கவில்லை என்றால் பரிகாரம் பலன் தரவில்லை அல்லது சரியான பரிகாரம் செய்யப்படவில்லை என்ற உண்மையை ஏற்றுக்கொள்ள வேண்டும்


 ஜோதிஷஆதித்யா,

பிரசன்ன திலகம் திரு.A.V. சம்பத் [எ] சண்முகராஜ் தம்பிரான் ஜி  
  திருவள்ளுவர் காலனி ராயபுரம் மேற்கு திருப்பூர்.


தொடர்புக்கு'  99941 50658 

அர்சனை பூக்களின் பலன்கள் -

அர்சனை பூக்களின் பலன்கள் -

 அர்ச்சனைப் பூக்களின் அருமையான பலன்கள்
அல்லிப்பூ - செல்வம்  பெருகும்     
பூவரசம்பூ  - உடல் நலம் பெருகும்
வாடமல்லி- மரணபயம் நீங்கும்
மல்லிகை - குடும்ப அமைதி
செம்பருத்தி -ஆன்ம பலம்
காசாம்பூ - நன்மைகள்
அரளிப்பூ - கடன்கள் நீங்கும்
அலரிப்பூ - இன்பமான வாழ்க்கை
செம்பருத்தி - ஆன்ம பலம்
ஆவாரம் பூ -நினைவாற்றல்  பெருகும்
கொடிரோஜா - குடும்ப ஒற்றுமை
ரோஜா பூ - நினைத்தது  நடக்கும்
மருக்கொழுந்து  - குலதெய்வம் அருள்
சம்பங்கி - இடமாற்றம்  கிடைக்கும்
செம்பருத்தி பூ - நோயற்ற வாழ்வு
நந்தியாவட்டை - குழந்தை குறை நீங்கும்
சங்குப்பூ (வெள்ளை) -  சிவப்பூஜைக்கு  சிறந்தது
சங்குப்பூ (நீலம்) - விஷ்ணு பூஜைக்கு  சிறந்தது
மனோரஞ்சிதம்  -  குடும்ப  ஒற்றுமை, தேவ ஆகர்­ணம்
தாமரைப்பூ  -  செல்வம் பெருகும் அறிவு வளர்ச்சி பெறும்
நாகலிங்கப்பூ - லட்சுமி கடாட்சம், ஆரோக்யம்
முல்லை பூ  -  தொழில் வளர்ச்சி,  புதிய தொழில்கள்  உண்டாகும்
பட்டிப்பூ (நித்திய கல்யாணி பூ) - முன்னேற்றம் பெருகும்
தங்க அரளி (மஞ்சள் பூ) -   குருவின் அருள் , பெண்களுக்கு மாங்கல்ய பலம் கடன்கள் நீங்கும் , கிரக பீடை நீங்கும்
பவள மல்லி -   இது தேவலோக புஷ்பமாகும். இந்த செடியினை வீட்டில் வளர்ப்பது மிக அவசியமாகும். இதன்மூலம் தேவர்களினதும், ரிஷிகளினதும் அருளும், ஆசியும் கிடைக்கும். பழைய புஷ்பங்கள், மலராத மொட்டுக்கள்,  தூய்மை இல்லாத பூக்களைக் கொண்டு இறைவனிற்கு அர்ச்சனை செய்யக்கூடாது. அரச்சனை செய்த பூக்கள்  கோவிலில்  சாமிக்கு போட்ட மாலைகள்  காலில் மிதிபடாதவாறு போட வேண்டும். முடிந்தால் தூய்மையான ஓடுகின்ற தண்ணீரில் விடலாம். அல்லது தூய்மையான இடத்தில் குழி தோண்டி போட்டு மூடிவிடலாம். கோவிலில்  சாமிக்கு போட்ட மாலைகளை வாகனங்களில்  முன்பக்கம் கட்டுவது மிகபெரிய சாபம் இதனால்  தீமைகள்  உண்டாகும்  நன்மைகள் கிடைக்காது.
திருமாலுக்கு -  பவளமல்லி , மரிக்கொழுந்து  துளசி
சிவன் - வில்வம்  செவ்வரளி
முருகன்  - முல்லை, செவ்வந்தி, ரோஜா
அம்பாளுக்கு  - வெள்ளை நிறப்பூக்கள் பூசைக்கு சிறப்பானவை.


பூஜைக்கு ஆகாதவை
ஆகாதபூக்கள்
விநாயகருக்கு - துளசி  
சிவனுக்கு  -  தாழம்பூ
அம்பாளுக்கு - அருகம்புல்
பெருமாளிற்கு - அருகம்புல்
பைரவர் -  நந்தியாவட்டை ,
சூரியனுக்கு - வில்வம்

Wednesday, 21 March 2018

எல்லாம் அஞ்சு தான் எம்பெருமானுக்கு

எல்லாம் அஞ்சு தான் எம்பெருமானுக்கு
 1.பஞ்ச பூதங்கள்
நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம்
2. பஞ்சாட்சரம்
நமசிவாய - தூல பஞ்சாட்சரம்
சிவாயநம - சூக்கும பஞ்சாட்சரம்
சிவயசிவ - அதிசூக்கும பஞ்சாட்சரம்
சிவசிவ - காரண பஞ்சாட்சரம்
சி - மகா காரண பஞ்சாட்சரம்
3.சிவமூர்த்தங்கள்
1.பைரவர் -வக்கிர மூர்த்தி
2.தட்சிணாமூர்த்தி -சாந்த மூர்த்தி
3.பிச்சாடனர் -வசீகர மூர்த்தி
4.நடராசர் -ஆனந்த மூர்த்தி
5.சோமாஸ்கந்தர் - கருணா மூர்த்தி
4.பஞ்சலிங்க சேத்திரங்கள்
1.முக்திலிங்கம் -கேதாரம்
2.வரலிங்கம் -நேபாளம்
3.போகலிங்கம் -சிருங்கேரி
4.ஏகலிங்கம் -காஞ்சி
5.மோட்சலிங்கம் -சிதம்பரம்
5.பஞ்சவனதலங்கள்
1.முல்லை வனம் -திருக்கருகாவூர்
2.பாதிரி வனம் -அவளிவணல்லூர்
3.வன்னிவனம் -அரதைபெரும்பாழி
4.பூளை வனம் -திருஇரும்பூளை
5.வில்வ வனம் -திருக்கொள்ளம்புதூர்
6.பஞ்ச ஆரண்ய தலங்கள்
1.இலந்தைக்காடு -திருவெண்பாக்கம்
2.மூங்கில் காடு -திருப்பாசூர்
3.ஈக்காடு -திருவேப்பூர்
4.ஆலங்காடு -திருவாலங்காடு
5.தர்ப்பைக்காடு -திருவிற்குடி
7.பஞ்ச சபைகள்
1.திருவாலங்காடு -இரத்தின சபை
2.சிதம்பரம் -பொன் சபை
3.மதுரை -வெள்ளி சபை
4.திருநெல்வேலி -தாமிர சபை
5.திருக்குற்றாலம் -சித்திர சபை
8.ஐந்து முகங்கள்
1.ஈசானம் - மேல் நோக்கி
2.தத்புருடம் -கிழக்கு
3.அகோரம் -தெற்கு
4.வாம தேவம் -வடக்கு
5.சத்யோசாதம் -மேற்கு
9.ஐந்தொழில்கள்
1.படைத்தல்
2.காத்தல்
3.அழித்தல்
4.மறைத்தல்
5.அருளல்
10.ஐந்து தாண்டவங்கள்
1.காளிகா தாண்டவம்
2.சந்தியா தாண்டவம்
3.திரிபுரத் தாண்டவம்
4.ஊர்த்துவ தாண்டவம்
5.ஆனந்த தாண்டவம்
11.பஞ்சபூத தலங்கள்
1.நிலம் -திருவாரூர்
2.நீர் -திருவானைக்கா
3.நெருப்பு -திருவண்ணாமலை
4.காற்று -திருக்காளத்தி
5.ஆகாயம் -தில்லை
12.இறைவனும் பஞ்சபூதமும்
1.நிலம் - 5 வகை பண்புகளையுடையது
(மணம் ,சுவை ,ஒளி ,ஊறு ,ஓசை )
2.நீர் - 4 வகை பண்புகளையுடையது
(சுவை ,ஒளி ,ஊறு ,ஓசை )
3.நெருப்பு - 3 வகை பண்புகளையுடையது
(ஒளி ,ஊறு ,ஓசை )
4.காற்று - 2 வகை பண்புகளையுடையது
(ஊறு ,ஓசை )
5.ஆகாயம் - 1 வகை பண்புகளையுடையது
(ஓசை )
13.ஆன் ஐந்து
பால் ,தயிர் ,நெய் ,கோமியம் ,கோசலம்
14.ஐங்கலைகள்
1.நிவர்த்தி கலை
2.பிரதிட்டை கலை
3.வித்தை கலை
4.சாந்தி கலை
5.சாந்தி அதீத கலை
15.பஞ்ச வில்வம்
1.நொச்சி
2.விளா
3.வில்வம்
4.கிளுவை
5.மாவிலங்கம்
16. ஐந்து நிறங்கள்
1.ஈசானம் - மேல் நோக்கி - பளிங்கு நிறம்
2.தத்புருடம் -கிழக்கு - பொன் நிறம்
3.அகோரம் -தெற்கு - கருமை நிறம்
4.வாம தேவம் -வடக்கு - சிவப்பு நிறம்
5.சத்யோசாதம் -மேற்கு - வெண்மை நிறம்
17.பஞ்ச புராணம்
1.தேவாரம்
2.திருவாசகம்
3.திருவிசைப்பா
4.திருப்பல்லாண்டு
5.பெரியபுராணம்
18.இறைவன் விரும்ப நாம் செய்யும் ஐந்து
1.திருநீறு பூசுதல்
2.உருத்ராட்சம் அணிதல்
3.பஞ்சாட்சரம் ஜெபித்தல்
4.வில்வ அர்ச்சனை புரிதல்
5.திருமுறை ஓதுதல்
19.பஞ்சோபசாரம்
1.சந்தனமிடல்
2.மலர் தூவி அர்ச்சித்தல்
3.தூபமிடல்
4.தீபமிடல்
5.அமுதூட்டல்
ஆடிய திருவடி சரணம்!! 

Tuesday, 20 March 2018

சீரடி சாய்பாபாவின் மனதில் இடம் பிடித்தவர்கள்

சீரடி சாய்பாபாவின் மனதில் இடம் பிடித்தவர்கள்


சீரடி சாய்பாபாவுக்கு சீடர்கள் என்று யாருமே கிடையாது. அவர் யாரையும் தன் சீடராக ஏற்கவில்லை. லட்சோப லட்சம் பக்தர்களில் யாரையும் அவர் சீடராக தேர்வு செய்து அறிவிக்கவும் இல்லை.

உண்மையில் சொல்லப் போனால் பாபாவுக்கு சீடராக இருக்கும் தகுதி இந்த உலகில் யாருக்குமே இல்லை. வான் மண்டலத்தில் உள்ள சூரியனுக்கு, குட்டி நட்சத்திரங்கள் எப்படி ஈடாக முடியும்?

சீரடியில் சாய்பாபா வாழ்ந்த 60 ஆண்டுகளில் எத்தனையோ பேர், அவரது சீடராக முயன்றனர். ஆனால் அவர்களது முயற்சிகள் எல்லாம் தோல்வியிலேயே முடிந்தன.

அப்படி வந்தவர்களில் குசபாவ் என்பவரும் ஒருவர். இவருக்கு கிருஷ்ணாஜி காசிநாத் கோஷி என்ற பெயரும் உண்டு.

இவருக்கு சிறு வயதிலேயே மந்திர - தந்திரங்களை கற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆசை இருந்தது. அதற்காக தத்த மகராஜ் என்பவரிடம் சென்று சீடராக சேர்ந்தார்.

தத்த மகராஜ் எல்லாவித யோகப் பயிற்சிகளையும் குசபாவுக்கு அளித்தார். ஆன்மிக பழக்க - வழக்கங்களில் நெறிப்படுத்தினார். குசபாவை மிகச் சிறந்த சீடர்களில் ஒருவராக மாற்றினார்.

என்றாலும் குசபாவ் ஆழ்மனதில் அசாதாரண சக்திகளையும் பெற வேண்டும் என்ற ஆசை இருந்தது. கையை உயர்த்தினால் தாம் நினைக்கும் பொருட்கள் எல்லாம் அதில் வர வேண்டும் என்று விரும்பினார்.

இதற்காக அவர் தன் குருவை வற்புறுத்தினார். குரு அவரைக் கண்டித்தார். தரக்குறைவான சக்திகளை தெரிந்து கொள்வதால் தீய வழியில் செல்ல நேரிடும் என்று எச்சரித்தார்.

என்றாலும் குசபாவ் விடவில்லை. தொடர்ந்து தினமும் வலியுறுத்தினார். இதனால் குரு ஓரளவு அவருக்கு இணங்க வேண்டியதாயிற்று.

குசபாவுக்கு அவர் சில ரகசிய மந்திரங்களை சொல்லிக் கொடுத்தார். சில சக்திகளை ஒரு இரும்பு வளையத்தில் ஏற்றிக் கொடுத்தார். குசபாவ் அந்த இரும்பு வளையத்தை தன் கையில் அணிந்து கொண்டார்.

ரகசிய மந்திரங்களை உச்சரித்ததும் அவருக்கு அந்த சக்தி கிடைத்தது. அவர் கையை உயர்த்தியதும் வெட்ட வெளியில் இருந்து அவர் கையில் இனிப்புகள், பழ வகைகள் தோன்றின.

அப்படி வருபவைகளை குசபாவ் ஒரு போதும் சாப்பிடக் கூடாது என்று நிபந்தனை விதிக்கப்பட்டிருந்தது. எனவே அவர் தன் கையை உணர்த்தி வரவழைக்கும் தின்பண்டங்களை மற்றவர்களுக்கு வினியோகம் செய்தார்.

இந்த வித்தையை கற்றபோது குசபாவுக்கு சுமார் 20 வயது இருக்கும். அந்த சமயத்தில் ஒருநாள் அவரது குரு இமயமலைக்கு புறப்பட்டார்.

அவர் குசபாவிடம், “இனி நான் உனக்கு குரு இல்லை. உனக்கு சீரடியில் உள்ள சாய்பாபாதான் குரு. இன்றே சீரடி புறப்படு. சாய்பாபாவை சந்தித்து ஆசி பெறு. அவர் தான் உன்னை மேம்படுத்துவார்” என்று கூறி விட்டு சென்று விட்டார்.

1888-ம் ஆண்டில் ஒருநாள், குசபாவ் சீரடிக்கு புறப்பட்டுச் சென்றார். பாபா வீற்றிருந்த மசூதிக்கு சென்றதும் அவருக்கு அதிர்ச்சிக் காத்திருந்தது.

மசூதி வாசலில் காலடி எடுத்து வைத்ததுமே பாபா அளவு கடந்த கோபத்துக்குள்ளானார் “உள்ளே வராதே அங்கேய நில்” என்றார்.

குசபாவ் எதுவும் புரியாமல் நின்றார். “கையை உயர்த்தியதும் தின்பண்டங்களை வரவழைக்கும் செயலை உடனே நீ நிறுத்த வேண்டும். அந்தச் செயல் திருட்டுக்கு சமமானது. அதை நீ நிறுத்தாத வரை இந்த மசூதிக்குள் வரக்கூடாது” என்றார்.

குசபாவுக்கு என்ன செய்து என்று புரியவில்லை. குரு கற்றுத் தந்த மந்திர வித்தையை தொடர்ந்து செய்வதா அல்லது சாய்பாபா சொல்வது போல அவற்றை கைவிட்டு சரண் அடைவதா? என்று குழம்பினார். அவருக்குள் மனப் போராட்டம் அதிகரித்தது.

பலத்த மனப் போராட்டத்துக்குப் பிறகு அவர் சாய்பாபாவிடம் சரண் அடைந்தார். தனது கையில் அணிந்திருந்த இரும்பு வளையலைக் கழற்றி வீசினார். கையை உயர்த்தியதும் இனிப்புகளை வரவழைக்கும் வித்தையையும் கைவிட்டார்.



ஆணவம், அகந்தையை கைவிட்ட அவர், சீரடியில் தங்கி சாதாரண வாழ்க்கை வாழ்ந்தார். சாப்பாட்டுக்காக பாபாவைப் போல பிச்சை எடுத்து சாப்பிட்டு காலத்தைக் கழித்தார்.

நீண்ட நாட்களுக்குப் பிறகு குசபாவை, சீரடி சாய்பாபா ஏற்றுக் கொண்டார். மசூதியின் ஒரு மூலையில் அமர்ந்து, பகல் முழுவதும் ராமதாசரின் “தாச போதா” என்ற நூலை படித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

பாபாவின் உத்தரவை ஏற்று ஒருநாள், இருநாள் அல்ல.... மூன்று ஆண்டுகள் குசபாவ் அப்படி நடந்து கொண்டார். பிறகு அவர் தினமும் காலை பாபாவை சந்தித்து ஆசி பெறுவதை அவர் வழக்கத்தில் வைத்திருந்தார்.

ஒரு நாள் அவரை அழைத்த பாபா, “மூன்று தலை கொண்டவரை (தத்தாத்ரேயர்) போய் பார்” என்று கூறினார். இதையடுத்து குசபாவ் கான்காபூருக்கு சென்று தத்தாத்ரேயரை வழிபட்டு விட்டு வந்தார்.

அதன் பிறகும் குசபாவை சோதிக்க பாபா தவறவில்லை. புனித நூலான ஸ்ரீகுரு சரித்திரத்தை 108 தடவை பாராயணம் செய்யும்படி உத்தரவிட்டார்.

ஸ்ரீகுரு சரித்திரத்தை ஒரு தடவை பாராயணம் செய்ய 3 நாட்கள் ஆனது. 108 தடவை பாராயணம் செய்து முடிக்க குசபாவுக்கு சுமார் ஓராண்டு ஆகி இருந்தது.

இந்த காலக் கட்டத்தில் குசபாவின் மனதை பாபா முழுமையான பக்குவத்துக்கு மாற்றி இருந்தார். என்றாலும் குசபாவிடம் இறுதியாக ஒரு சோதனையை பாபா நடத்தினார்.

ஏகாதசி தோறும் குசபாவ் உண்ணாவிரதம் இருப்பது வழக்கம். ஒரு ஏகாதசி தினத்தன்று அவரிடம் பாபா, “நீங்கள் ஏகாதசி தினத்தன்று எதை மட்டும் சாப்பிடுவீர்கள்?” என்று கேட்டார்.

அதற்கு குசபாவ், “நான் கந்தமூலம் மட்டும் சாப்பிடுவேன்” என்றார். கந்தமூலம் என்றால் ஒரு வகை சர்க்கரை வள்ளிக் கிழங்காகும்.

பாபா வேண்டும் என்றே கந்தமூலம் என்ற சமஸ்கிருத வார்த்தையை “கந்தா” என்று மாற்றிக் கூறினார். கந்தா என்றால் மராட்டிய மொழியில் “வெங்காயம்” என்று பொருள்.

பாபா ஒரு வெங்காயத்தை எடுத்து குசபாவிடம் கொடுத்து, “சாப்பிடு” என்றார். குசபாவுக்கு தர்மசங்கடமாக இருந்தது. ஏகாதசியன்று வெங்காயம் சேர்க்கக் கூடாது என்பதை அவர் கடைபிடித்து வந்தார். எனவே அவர் அதிலிருந்து தப்பிக்க, “பாபா, இன்று நீங்கள் வெங்காயம் சாப்பிட்டால் நானும் சாப்பிடுகிறேன்” என்றார்.

உடனே பாபா வெங்காயம் சாப்பிட்டார். இதையடுத்து குசபாவும் வெங்காயம் சாப்பிட்டார்.

சிறிது நேரத்தில் துவாரகமாயி மசூதிக்கு பக்தர்கள் வரத் தொடங்கினார்கள். அவர்களிடம் பாபா, “ஏகாதசி தினமான இன்று இந்த பிராமணர் வெங்காயம் சாப்பிட்டார்” என்று கூறி கேலியும் கிண்டலும் செய்தார்.

உடனே குசபாவ், “நான் மட்டுமல்ல பாபாவும் வெங்காயம் சாப்பிட்டார்” என்றார். அதை மறுத்த பாபா, அதை நிரூபிக்க வாந்தி எடுத்தார்.

அதில் எந்த வெங்காயத் துண்டுகளும் இல்லை. அதற்கு பதில் சர்க்கரை வள்ளிக்கிழங்குத் துண்டுகளாக இருந்தது.

இதைக் கண்டதும் குசபாவ் ஆச்சரியமடைந்தார். பாபா எடுத்த வாந்தியை பிரசாதமாகவே நினைத்தார். அதை எடுத்து உட்கொண்டார்.

மகான்களிடம் சிஷ்யர் என்ற அந்தஸ்தைப் பெற விரும்புபவர்கள் இப்படித்தான் செய்வார்கள். இந்த அடிப்படையிலேயே பாபாவின் உச்சிஷ்டத்தை குசபாவு எடுத்து உட்கொண்டார்.

தனது சாமர்த்தியமான இந்த செயல் மூலம் சாய்பாபாவின் சிஷ்யர் போல குசபாவ் மாறினார். பாபா, அதுவரை யாரையும் சிஷ்யராக ஏற்கவில்லை.

ஆனால் குசபாவ் மீது அவருக்கு கனிவு பிறந்தது. அவரை பாபா மனதார ஏற்றுக் கொண்டார்.

குசபாவுவை அழைத்து அவர் தலை மீது கை வைத்து பாபா ஆசீர்வாதம் செய்தார். பிறகு அவர் குசபாவிடம், “இன்று நான் உனக்கு ஒரு சக்தியை வழங்குகிறேன். என்னை நீ எப்போதெல்லாம் முழு மனதுடன் நினைக்கிறாயோ, அப்போதெல்லாம் உன் உள்ளங்கையில் இருந்து திருநீறு தோன்றும். அந்த திருநீறு பிரசாதத்தை என் மீது நம்பிக்கை உள்ளவர்களுக்கு நீ கொடுக்கலாம். அந்த திருநீறு மக்களின் துன்பங்களை தீர்க்கும்” என்றார்.

இதனால் குசபாவ் அளவு கடந்த மகிழ்ச்சி அடைந்தார். பாபாவை மனதில் நிறுத்தி ஜெபித்ததும், அவர் உள்ளங்கையில் இருந்து விபூதி மழை பொழிந்தது.

அதன்பிறகு குசபாவ் பாபாவை வணங்கி விடைபெற்றார். ஏழை-எளியவர்களுக்கு பாபா கொடுக்கும் விபூதி பிரசாதத்தை அளித்து அற்புதங்கள் செய்தார். ஆயிரக்கணக்கானவர்களின் நோயை பாபாவின்திருநீறு தீர்த்து வைத்தது.

பாபா தம் வாழ்நாளில் வேறு யாருக்கும் இந்த சக்தியை வழங்கவில்லை. எனவே பாபாவின் அற்புத அவதார வாழ்வில் குசபாவும் தனி இடம்பெற்றுள்ளார்.

இதுபோல பாபா மனதில் மேலும் பலர் இடம் பிடித்தனர்.  

Friday, 16 March 2018

🙏உமீழ் நீர்:உயிர் நீர்

🙏உமீழ் நீர்:உயிர் நீர்
 *_சர்க்கரை நோய்க்கான எளிய; முற்றிலும் இலவசமான, இயற்கை மருந்து!!_
_```சர்க்கரை நோய்க்கும் வாயில் ஊறக்கூடிய உமிழ்நீருக்கும் என்ன சம்மந்தம்?```_

_```உணவுடன் கலந்து செல்லும் உமிழ்நீர்தான், கணையத்திலிருந்து இன்சுலினைச் சுரக்கத் தூண்டும் இயற்கை மருந்து!!```_
_```உமிழ்நீர் எனும் இயற்கை மருந்தை நம் முன்னோர்கள், தாங்கள் உண்ணும் உணவுடன் , அதிக அளவு எடுத்துக் கொண்டனர்!!```_
_```வாழ்வதற்காக உண்டனர்! உண்பதற்காக வாழ்ந்தனர்!```_
_```அதனால்தான் பொறுமையுடனும், அமைதியுடனும், பொறுப்புடனும் உணவு சாப்பிட்டனர்!!```_
_```அதனால் அவர்கள் சாப்பிடும் உணவுடன் உமிழ்நீர் அதிக அளவு கலந்து வயிற்றுக்குள் சென்றது. கூடுதல் உமிழ்நீரை சுரக்கச் செய்வதற்காக ஊறுகாயைச் சிறிதளவு எடுத்துக் கொண்டனர். நம் முன்னோர்களுக்கு உமிழ்நீரின் அருமை தெரிந்திருந்ததால் ஊறுகாய் என்ற உணவுப் பொருளை கண்டுபிடித்துப் பயன்படுத்தினர்!!```_
_```உமிழ்நீரை அதிக அளவு எடுத்துக் கொண்டதால், கணையத்திலிருந்து இன்சுலின் சுரப்பதற்கு எந்தத் தடையும் ஏற்படவில்லை!!```_
_```"தூண்டல், துலங்கல்" என்ற விதியின் படி உமிழ்நீர் என்ற தூண்டுதலால் இன்சுலின் என்ற துலங்கல் சுரக்கப்படுகிறது!```_
_```நம் முன்னோர்கள் நாட்களைக் கணக்கிட்டு, மாதங்களைக் கணக்கிட்டு வேலை பார்த்தனர்!!```_
_```தற்காலத்தில் நாம் மணியைக் கணக்கிட்டு, நிமிடத்தைக் கணக்கிட்டு, நொடியைக் கணக்கிட்டு வேலை பார்க்கிறோம்!!```_
_```அந்த அளவிற்கு நமது வாழ்க்கையின் வேகம் அதிகரித்து விட்டது. உணவு சாப்பிடும் வேகமும் அதிகரித்துவிட்டது!```_
_```வாழ்க்கைக்கான சாப்பாடு என்ற மனநிலை மாறி, சாப்பிடுவதும் ஒரு 'வேலை'தான் என்ற மனநிலைக்கு வந்துவிட்டோம்!```_
_```உணவை ரசித்து, ருசித்து; உமிழ்நீர் கலந்து சாப்பிடாமல், அவசர அவசரமாக வாயில் போட்டு விழுங்குகிறோம்!!```_
_```நாம் விழுங்கும் உணவில் உமிழ்நீர் இல்லாததால், அந்த உணவுக்கு இன்சுலின் சுரக்காது!```_
_```உணவிலுள்ள குளுக்கோசு, கிளைக்கோசனாக மாறாமல், அது சர்க்கரையாகவே இரத்தத்தில் தங்கிவிடும்!```_
_```நாளடைவில் அது சர்க்கரை நோய் என்று அழைக்கப்படும் நீரிழிவு நோயாக மாறிவிடுகிறது!!```_
_```சர்க்கரை நோய்க்கு மிகச்சிறந்த இயற்கை மருந்து நம் வாயில் ஊறும் உமிழ்நீர்தான்!!```_
_```எனவே; நாம் சாப்பிடும் ஒவ்வொரு உணவிலும் உமிழ்நீர் கலந்து சாப்பிட பழகிக் கொள்ள வேண்டும்!```_
_```நாம் குடிநீர் அல்லது தேநீர் அருந்தினால் கூட உமிழ்நீர் கலந்துதான் வயிற்றிற்குள் அனுப்ப வேண்டும்!!```_
_```நீரிழிவு நோய் எனும் செயற்கையான நோயை உமிழ்நீர் எனும் இயற்கையான மருந்து கொண்டு அழித்து ஒழிப்போம்!!```_
_```இந்த உண்மையை உலகிற்கு சொல்வதால், சர்க்கரை நோயை வைத்துப் பிழைப்பு நடத்தும் பணப்பேய்கள் விடமாட்டார்கள். அந்தப் பணப் பேய்களிடமிருந்து நம் மக்களை மீட்க வேண்டும்.
👌நொறுங்கத் தின்னா நூறு வயசு..*_சர்க்கரை நோய்க்கான எளிய; முற்றிலும் இலவசமான, இயற்கை மருந்து!!_
_```சர்க்கரை நோய்க்கும் வாயில் ஊறக்கூடிய உமிழ்நீருக்கும் என்ன சம்மந்தம்?```_
_```உணவுடன் கலந்து செல்லும் உமிழ்நீர்தான், கணையத்திலிருந்து இன்சுலினைச் சுரக்கத் தூண்டும் இயற்கை மருந்து!!```_
_```உமிழ்நீர் எனும் இயற்கை மருந்தை நம் முன்னோர்கள், தாங்கள் உண்ணும் உணவுடன் , அதிக அளவு எடுத்துக் கொண்டனர்!!```_
_```வாழ்வதற்காக உண்டனர்! உண்பதற்காக வாழ்ந்தனர்!```_
_```அதனால்தான் பொறுமையுடனும், அமைதியுடனும், பொறுப்புடனும் உணவு சாப்பிட்டனர்!!```_
_```அதனால் அவர்கள் சாப்பிடும் உணவுடன் உமிழ்நீர் அதிக அளவு கலந்து வயிற்றுக்குள் சென்றது. கூடுதல் உமிழ்நீரை சுரக்கச் செய்வதற்காக ஊறுகாயைச் சிறிதளவு எடுத்துக் கொண்டனர். நம் முன்னோர்களுக்கு உமிழ்நீரின் அருமை தெரிந்திருந்ததால் ஊறுகாய் என்ற உணவுப் பொருளை கண்டுபிடித்துப் பயன்படுத்தினர்!!```_
_```உமிழ்நீரை அதிக அளவு எடுத்துக் கொண்டதால், கணையத்திலிருந்து இன்சுலின் சுரப்பதற்கு எந்தத் தடையும் ஏற்படவில்லை!!```_
_```"தூண்டல், துலங்கல்" என்ற விதியின் படி உமிழ்நீர் என்ற தூண்டுதலால் இன்சுலின் என்ற துலங்கல் சுரக்கப்படுகிறது!```_
_```நம் முன்னோர்கள் நாட்களைக் கணக்கிட்டு, மாதங்களைக் கணக்கிட்டு வேலை பார்த்தனர்!!```_
_```தற்காலத்தில் நாம் மணியைக் கணக்கிட்டு, நிமிடத்தைக் கணக்கிட்டு, நொடியைக் கணக்கிட்டு வேலை பார்க்கிறோம்!!```_
_```அந்த அளவிற்கு நமது வாழ்க்கையின் வேகம் அதிகரித்து விட்டது. உணவு சாப்பிடும் வேகமும் அதிகரித்துவிட்டது!```_
_```வாழ்க்கைக்கான சாப்பாடு என்ற மனநிலை மாறி, சாப்பிடுவதும் ஒரு 'வேலை'தான் என்ற மனநிலைக்கு வந்துவிட்டோம்!```_
_```உணவை ரசித்து, ருசித்து; உமிழ்நீர் கலந்து சாப்பிடாமல், அவசர அவசரமாக வாயில் போட்டு விழுங்குகிறோம்!!```_
_```நாம் விழுங்கும் உணவில் உமிழ்நீர் இல்லாததால், அந்த உணவுக்கு இன்சுலின் சுரக்காது!```_
_```உணவிலுள்ள குளுக்கோசு, கிளைக்கோசனாக மாறாமல், அது சர்க்கரையாகவே இரத்தத்தில் தங்கிவிடும்!```_
_```நாளடைவில் அது சர்க்கரை நோய் என்று அழைக்கப்படும் நீரிழிவு நோயாக மாறிவிடுகிறது!!```_
_```சர்க்கரை நோய்க்கு மிகச்சிறந்த இயற்கை மருந்து நம் வாயில் ஊறும் உமிழ்நீர்தான்!!```_
_```எனவே; நாம் சாப்பிடும் ஒவ்வொரு உணவிலும் உமிழ்நீர் கலந்து சாப்பிட பழகிக் கொள்ள வேண்டும்!```_
_```நாம் குடிநீர் அல்லது தேநீர் அருந்தினால் கூட உமிழ்நீர் கலந்துதான் வயிற்றிற்குள் அனுப்ப வேண்டும்!!```_
_```நீரிழிவு நோய் எனும் செயற்கையான நோயை உமிழ்நீர் எனும் இயற்கையான மருந்து கொண்டு அழித்து ஒழிப்போம்!!```_
_```இந்த உண்மையை உலகிற்கு சொல்வதால், சர்க்கரை நோயை வைத்துப் பிழைப்பு நடத்தும் பணப்பேய்கள் விடமாட்டார்கள். அந்தப் பணப் பேய்களிடமிருந்து நம் மக்களை மீட்க வேண்டும். எனவே இதை அதிக நபர்களுக்குப் பகிருங்கள்!
👌நொறுங்கத் தின்னா நூறு வயசு..
🙏உமீழ் நீர் : உயிர் நீர்

Sunday, 11 March 2018

ஒர் எச்சரிக்கைப் பதிவு...

ஒர் எச்சரிக்கைப் பதிவு...

 நீங்கள் 10 அடிக்கு 10 அடி அறைக் கதவை பூட்டிக் கொண்டு, சன்னல்களையும் பூட்டிக் கொண்டு தூங்குகின்றவரா?...
அப்படியானால் அவசியம் படியுங்கள்.
சிறுநீரக கோளாறு – ஏன் ஏற்படுகிறது ? - எப்படி தடுப்பது ?
நீங்கள் 10அடிக்கு 10 அடி அறைக் கதவை பூட்டிக் கொண்டு, சன்னல்களையும் பூட்டிக் கொண்டு தூங்குகின்றவரா, அப்படியானால் உங்களுக்கு சிறுநீரக செயலிழப்பு(KIDNEY FAILURE), மூட்டுக்களில் வலி (RHEUMATOID ARTHRITIS) (கழுத்து, முழங்கை, முன்கை மணிக்கட்டு, கீழ்முதுகு வலி, முதுகுத் தண்டுவட எலும்பில் வலி,முழங்கால் மூட்டு வலி,கணுக்கால் எலும்பில் வலி,குதிங்கால் வலி ), சிறு நீரகக் கல், இவை எல்லாம் உண்டாக வாய்ப்புள்ளது. இதை வாத நோய்கள் என்பார்கள்.
பழந்தமிழர் வாழ்வியலின்படி , ஒரு பெரியவர் சன்னலை மூடித் தூங்கினால் காற்று தீட்டுப்பட்டு விடும் என்று கூறினார். நான் அப்போது இது என்ன கூத்து காற்றுக்கும் தீட்டா? அக்கு பஞ்சர் விஞ்ஞானம் இதற்கு விளக்கம் அளித்தது.
அக்கு பஞ்சரில் சிறுநீரகத்தை இரண்டாவது நுரையீரல் என்பார்கள்.ஒரு நீங்கள் 10அடிக்கு 10 அடி அறைக் கதவை பூட்டிக் கொண்டு, சன்னல்களையும் பூட்டிக் கொண்டு ஒருவர் மட்டுமே தூங்கினாலே 3அல்லது 31/2 மணி நேரத்திற்குள்ளாக அறைக்குள்ளே உள்ள காற்றில் உள்ள பிராண வாயுவின்,(ஆக்ஸிஜன்,OXYGEN,02) அளவு குறைந்து விடும். இதையே அந்தப் பெரியவர் தீட்டு என்கிறார்.
பொதுவாக காற்றில் பிராண வாயுவின் அளவு 21% இருக்கும்.ஆனால் பூட்டிய அறையில் ஒருவர் தூங்கும்போது மூச்சின் அளவு அதிகரிக்கும் வேகத்தாலும் சாதாரணமாக உட்கார்ந்திருக்கும் போது 15 மூச்சும்,தூங்கும்போது 64 மூச்சும்) அறையில் உள்ள காற்றில் பிராண வாயுவின் அளவு குறைந்து 10% சதவிகிதத்துக்கும் கீழே வந்து விடும்.
அப்போது நுரையீரலால் இரத்தத்தில் பிராண வாயுவின் அளவை சரியாக வைக்க முடியாத போது,உடலில் உயிர் காப்பாற்றப்பட பிராண வாயுவின் தேவை அதிகரிக்க அதிகரிக்க,சிறுநீரகம் அந்த அத்தியாவசியமான வேலையை செய்ய முற்படுகிறது. அது நம் உடலில் தண்ணீரில் உள்ள ஆக்ஸிஜனை எடுத்து உடலுக்கு கொடுக்கும் வேலையை செய்கிறது.(தண்ணீரில் இரு பங்கு ஆக்ஸிஜனும் ஒரு பங்கு ஹைட்ரஜனும் உள்ளது,இது போக நீரில் ஆக்ஸிஜனும் கரைந்து உள்ளது).எனவேதான் சிறுநீரகம் இரண்டாவது நுரையீரல் என்றழைக்கப்படுகிறது.
சிறுநீரகம் மேற்கண்ட வேலையை செய்ய ஆரம்பித்தவுடன் அதுவரை அது செய்து கொண்டிருக்கும் வேலையான இரத்தத்தை வடிகட்டி சுத்தப்படுத்தும் வேலை நிறுத்தப்படுகிறது.நம் உடலில் உள்ள தண்ணீரில் ஆக்ஸிஜன் அளவு குறைந்தவுடன் அந்த கழிவு நீர் வெளியேற நமக்கு சிறுநீர் கழிக்கும் உணர்வு தூண்டப்படுகிறது.மீண்டும் புதிய ஆக்ஸிஜன் நிறைந்த தண்ணீர் தேவைப்படுவதால் தண்ணீர் தாகமும் தூண்டப்படுகிறது.இதனாலேயே சிறுநீரகம் அதீதமான வேலைப் பழுவுடன் தள்ளாடுகிறது.
இதனால் சிறுநீரகத்தில் அழுக்குகள், தேங்குவதோடு, இரத்தத்தில் யூரிக் அமிலம் முதலான அழுக்குகள் அதிகரிக்கின்றது,மூட்டுகளில் மூட்டுகளில் யூரிக் அமிலம் படிவங்களாக படிகின்றன.
விளைவு யூரிக் அமிலம் படிவுகளாக சிறுநீரகத்தில் படிந்து கற்களாக மாறுகிறது.இரத்தத்தில் யூரிக் அமிலத்தால் இரத்தம் அழுக்கடைந்து இரத்தத்தின் தடிமம் அதிகரித்து இரத்த அழுத்தம் அதிகரிக்கிறது. இதனால் இதயம் அதிக வேலைப் பழுவுக்கு ஆளாகிறது.
மூட்டுகள் யூரிக் அமிலப் படிவங்களால் அரிக்கப்படுகின்றன. இதனால் மூட்டுக்களில் வலி உண்டாகின்றது. இதனாலேயே A/C அறையில் தூங்கும் போது அதிக தண்ணீர் தாகம் எடுக்கிறது. மூட்டுக்களில் வலி வருகிறது
இவ்வளவு பிரச்சினைகளையும் உண்டாக்கும் காற்றோட்டமில்லாத அறையில் தூங்காதீர்கள்.
ஆரோக்கிய வாழ்வுக்கு அடிப்படையான இது போன்ற விஷயங்களை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
ஜன்னலை திறந்து வைத்து தூங்குங்கள்...

பழமொமிகள்_பலவிதமாய்


1. தங்கச் செருப்பானாலும் தலைக்கு ஏறாது.
2. தீயில் இட்ட நெய் திரும்ப வராது.
3. நாடு கடந்தாலும் நாய்க்குணம் போகாது.
4. தேரோடு போச்சுது திருநாள். தாயோடு போச்சுது பிறந்தகம்.
5. தெய்வம் காட்டுமே தவிர ஊட்டாது.
6. செத்த பிணத்திற்கு அருகே இனி சாகும் பிணம் அழுகிறது.
7. தீயில் இட்ட நெய் திரும்ப வராது.
8. கடலைத் தாண்ட ஆசையுண்டு, கால்வாயைத் தாண்ட கால் இல்லை.
9. கரும்பு கசப்பது வாய்க்குற்றம்.
10. கடன் வாங்கிக் கடன் கொடுத்தவனும் கெட்டான்.
மரம் ஏறிக் கை விட்டவனும் கெட்டான்.
11. காட்டிலே செத்தாலும் வீட்டிலே தான் தீட்டு.
12. கூப்பாட்டால் சாப்பாடாகுமா?
13. எரிகிற வீட்டை அவிக்க கிணறு வெட்ட நாள் பார்த்தது போல,
கும்பிட்ட கோயில் தலை மேல் இடிந்து விழுந்தது போல,
சில்லரைக் கடன் சீரழிக்கும்.
14. சொப்பனங்கண்ட அரிசி சோற்றுக்கு ஆகுமா?
15. உறவு போகாமல் கெட்டது, கடன் கேளாமல் கெட்டது.
(எத்தனை பெரிய உண்மை. போய் வந்து கொண்டிருந்தால் தான் உறவு நிலைக்கும். கொடுத்த கடனைக் கேட்டுக் கொண்டே இருந்தால் தான் திரும்பக் கிடைக்கும்).
16. அடி நாக்கில் நஞ்சும், நுனி நாக்கில் அமிர்தமுமா?
(இன்று பலரும் இப்படித்தானே இருக்கிறார்கள்?)
17. ஆனை இருந்து அரசாண்ட இடத்தில் பூனை இருந்து புலம்பி அழுகிறது!
(எல்லாம் காலத்தின் கோலம்!)
18. அறப்படித்தவன் அங்காடிக்குப் போனால் விற்கவும் மாட்டான், வாங்கவும் மாட்டான்.
(அதிகமாய் படித்தவர்கள் பலரும் இப்படித்தான்).
19. உள்ள பிள்ளை உரலை நக்கிக் கொண்டிருக்க மற்றொரு பிள்ளைக்கு திருப்பதிக்கு நடக்கிறாள்.
(இருக்கிற குழந்தைக்கு சோறு போடாமல் அது உரலில் ஒட்டிக் கொண்டிருக்கும் தானியத்தை நக்கிக் கொண்டிருக்கிறது. இந்த நிலைமையில் அடுத்த பிள்ளை வேண்டும் என்று திருப்பதிக்கு வேண்டிக் கொண்டு நடக்கிறாளாம். இப்படியும் இருக்கிறார்கள்).
20. இறுகினால் களி. இளகினால் கூழ்.
21. ஊன்றக் கொடுத்த தடி மண்டையைப் பிளந்தது.
(யாருக்கு உதவுகிறோம் என்று சிந்தித்து உதவா விட்டால் இப்படித்தான்)
22. எடுப்பது பிச்சை. ஏறுவது பல்லாக்கு.
(பலருடைய போக்கு இப்படித்தான் இருக்கிறது)
23. எட்டி பழுத்தென்ன? ஈயாதார் வாழ்ந்தென்ன?
(எட்டி பழுத்தாலும் அதன் கசப்பால் சாப்பிட உதவாது. கஞ்சனுக்கு எத்தனை செல்வம் வந்தாலும் அதில் யாரும் பலன் அடைய முடியாது).
24. விசாரம் முற்றினால் வியாதி.
(கவலை அதிகமானால் வியாதியில் தான் முடியும்).
25. பைய மென்றால் பனையையும் மெல்லலாம்.
(நிதானமாக சிறிது சிறிதாக மென்றால் பனையைக் கூட மென்று விடலாம். அதாவது நிதானமாக தொடர்ந்து செய்து கொண்டே இருந்தால் எத்தனை பெரிய காரியத்தையும் செய்து முடித்து விடலாம்.)
26. காற்றில்லாமல் தூசி பறக்காது.
(நெருப்பில்லாமல் புகையாது என்ற பழமொழிக்கு இணையான இன்னொரு பழமொழி)
27. பண்ணின புண்ணியம் பலனில் தெரியும்.
(நாம் அனுபவிக்கும் பலன்களைப் பார்த்தாலே சேர்த்திருக்கும் புண்ணியம் எவ்வளவு என்பது தெரிந்து விடும்).
28. பிடித்த கொம்பும் ஒடிந்தது, மிதித்த கொம்பும் முறிந்தது.
(துரதிர்ஷ்டம் எப்படி எல்லாம் சோதிக்கிறது என்பதற்கு அழகான பழமொழி. ஒரு மரத்தில் ஏறி ஒரு கொம்பைப் பிடித்துக் கொள்ளும் போது அது ஒடிந்து போக, கீழே விழாமல் இருக்க இன்னொரு கொம்பில் காலை வைத்து ஊன்றினால் அந்தக் கொம்பும் முறிந்தால் எப்படி இருக்கும்?)
29. பாடுபட்டுக் குத்தினாலும் பதரில் அரிசி இருக்காது.
(பதர் என்பதே அரிசி இல்லாத நெல் தான். அதனால் என்ன தான் குத்தினாலும் அதில் அரிசி கிடைக்க வாய்ப்பில்லை. மனிதனின் பயனில்லாத முட்டாள்தனமான முயற்சி குறித்துச் சொல்லும் பழமொழி)
30. இட்டதெல்லாம் பயிராகாது. பெற்றதெல்லாம் பிள்ளையாகாது.
(விதைத்ததெல்லாம் பயிராகி பலன் தருவதில்லை. அது போல பெற்றதெல்லாம் பிள்ளையாகி நல்லபடியாக நம்மைப் பார்த்துக் கொள்ளும் என்று நினைத்துவிட முடியாது).
31. கடைந்த மோரிலே குடைந்து வெண்ணைய் எடுப்பான்.
(தயிரில் வெண்ணெய் எடுத்த பிறகு தான் மோராகிறது. அந்த மோரிலேயே மீண்டும் வெண்ணெய் எடுக்கும் அளவு சாமர்த்தியம் வாய்ந்தவர்களைப் பற்றி இந்தப்பழமொழி சொல்கிறது.
32. வாங்குகிற கை அலுக்காது.
(வாங்கிக் கொண்டே இருப்பவர்களுக்கு அலுப்பே இருக்காது. லஞ்சம் வாங்கும் அதிகாரிகளுக்கும், அரசியல்வாதிகளுக்கும் என்றே சொல்லப்பட்ட பொருத்தமான பழமொழியோ?)
33. அடுத்த வீட்டுக்காரரே பாம்பைப் பிடியுங்க. அது அல்லித்தண்டு போல ஜில்லென்றிருக்கும்.
(என்ன சாமர்த்தியம் பாருங்கள்!)
34. உயிரோடு ஒரு முத்தம் தராதவள், செத்தால் உடன்கட்டை ஏறுவாளா?
35. அய்யாசாமிக்குக் கல்யாணம், அவரவர் வீட்டில் சாப்பாடு.
36. அவனே இவனே என்பதை விட சிவனே சிவனே என்பது நல்லது.
37. அன்பான சினேகிதனை ஆபத்தில் அறி.
38. ஆகிறவன் அரைக்காசிலும் ஆவான்.
ஆகாதவனுக்கு ஆயிரம் கொடுத்தாலும் விடியாது.
39. ஆயிரம் உடையான் அமர்ந்திருப்பான்,
அரைப்பணம் உடையான் ஆடி விழுவான்.
40. ஆனை மேல் போகிறவனை சுண்ணாம்பு கேட்டால் கிடைக்குமா?
41. இந்த எலும்பைக் கடிப்பானேன், சொந்தப்பல்லுப் போவானேன்?
42. இந்தக் கூழுக்கா இத்தனை திருநாமம்?
43. இமைக் குற்றம் கண்ணுக்குத் தெரியாது.
44. இடுகிறவள் தன்னவள் ஆனால் முதல் பந்தியில் உண்டால் என்ன, கடைப் பந்தியில் உண்டால் என்ன?
45. உண்டு கொழுத்த நண்டு வளையில் தங்காது..


Thursday, 8 March 2018

காரடையான் நோன்பு"

காரடையான் நோன்பு"

                                           விளக்கம்-விரத முறைகள்
மாசியும் பங்குனியும் கூடும் வேளையில் நோற்கப்படுவது காரடையான் நோன்பு. மாசி மாத கடைசி நாள் இரவு ஆரம்பித்து பங்குனி முதல் நாள் காலையில் முடிப்பர். இந்த நோன்பை காமாட்சி நோன்பு, கவுரி நோன்பு, சாவித்திரி விரதம் என்றும் சொல்வார்கள். சுமங்கலிப் பெண்கள் தங்கள் கணவரின் ஆயுள் விருத்திக் காக காரடையான் நோன்பு அனுஷ்டிக்க வேண்டும். கார்காலத்தில் விளையும் நெல்லைக் குத்தி, பச்சரிசி மாவுடன் இனிப்பு கலந்து தயாரிப்பதே காரடை ஆகும். மந்திர தேசத்து மன்னன் அஸ்வபதியின் மகள் சாவித்திரி, வீரத்தில் சிறந்தவள். இவள் ஒருநாள் வேட்டைக்குச் செல்லும்போது, தியானத்தில் இருந்த சாளுவதேசத்து இளவரசன் சத்தியவானைப் பார்த்தாள். அவனது தந்தை ஒரு போரில் நாட்டை இழந்து விட்டார். அதனால், காட்டில் மகனுடன் வசித்தார். பார்வையற்ற பெற்றோரை சத்தியவான், அன்புடன் கவனித்துக் கொண்டான். அவனையே திருமணம் செய்வதென்று முடிவு செய்தாள் சாவித்திரி. மந்திர தேசத்திற்கு வந்த நாரதர், சாவித்திரியின் தந்தையிடம் இன்னும் ஓராண்டு காலத்தில் சத்தியவான் இறந்து விடுவான் என்றும், அதனால் சாவித்திரியை அவனுக்கு திருமணம் செய்து கொடுக்க வேண்டாம் என்றும் எச்சரித்தார். ஆனால், சாவித்திரி விடாப்பிடியாக சத்தியவானையே திருமணம் செய்து கொண்டாள். கணவனையும், பார்வையற்ற மாமனார், மாமியாரையும் அவள் அன்புடன் கவனித்துக் கொண்டாள். அரண்மனைவாசியான அவள் காட்டில் பல சிரமங்களை அனுபவித்தாலும், பொறுமையுடன் ஏற்றுக் கொண்டாள்.
சத்தியவானின் ஆயுள் முடியும் நாள் வந்தது. அன்று அவள் கணவனைப் பிரியவே இல்லை. அவர்கள் காட்டில் பழம் பறித்துக் கொண்டிருந்தனர். திடீரென சத்தியவான், மயங்கி விழுந்து இறந்தான். அவனது உயிரை எமதர்மராஜா, எடுத்துச் சென்றார். சாவித்திரி எமனைப் பின்தொடர்ந்தாள். தலை சிறந்த கற்புக்கரசி என்பதாலும், கணவன் இறப்பான் என்று தெரிந்தும், தைரியத்துடன் அவனை திருமணம் செய்து கொண்டதாலும், பார்வையற்ற முதியவர்களுக்கு தளராத சேவை செய்தவள் என்பதாலும் அவளுக்குக் காட்சி தந்த எமதர்மர், அவளை திரும்பிப் போகச் சொன்னார். அவரிடம், நான் என் கணவருடன் வாழ விரும்பு கிறேன். நான் பதிவிரதை என்பது உண்மையானால், அவரது உயிரைத் திருப்பித்தர வேண்டும், எனக் கேட்டாள். இறப்புக்குப் பிறகு யாருக்கும் வாழ்வு கிடையாது என மறுத்த எமதர்மர், அதற்குப் பதிலாக வேறு எந்த வரம் கேட்டாலும் தருவதாகக் கூறினார். சாவித்திரி சமயோசிதமாக,என் மாமனார், மாமியாருக்கு மீண்டும் பார்வை வேண்டும். ஆண் வாரிசு இல்லாத என் தந்தைக்கு ஆண் குழந்தை பிறக்க வேண்டும். எனக்கு நூறு குழந்தைகள் வேண்டும், என்றாள். சற்றும் யோசிக்காத எமதர்மன் அந்த வரங்களைக் கொடுத்து விட்டார். எனக்கு நூறு குழந்தைகள் பிறக்க வேண்டுமென்றால், என் கணவன் உயிருடன் இருந்தாக வேண்டுமே! அவரது உயிரை திரும்பக் கொடுங்கள், என யாசித்தாள் சாவித்திரி. எமதர்மராஜா அவளது அறிவின் திறனை வியந்து, சத்தியவானை அங்கேயே விட்டுச் சென்றார். மாசியும், பங்குனியும் இணையும் சமயத்தில் காரடையான் நோன்பு நோற்பது வழக்கம்.
மாங்கல்ய பாக்கியத்திற்காக பெண்கள் அனுஷ்டிக்கும் விரதம் காரடையான் நோன்பாகும். மாசி மாதம் முடிந்து, பங்குனி மாதம் துவங்கும் வேளையில் இந்த விரதம் அனுஷ்டிக்கப்படும்.
விரதமுறை: விரதம் இருக்கும் நாளில் பெண்கள் அதிகாலையில் நீராடி, பூஜையறையை சுத்தம் செய்ய வேண்டும். ஒரு கலசத்தின் மேல் தேங்காய், மாவிலை வைக்க வேண்டும். கலசத்திற்கு சந்தனம், குங்குமம், மஞ்சள் பூசி, அதன் மேல் மஞ்சள் கயிறை கட்ட வேண்டும். அருகில் இஷ்ட அம்பாள் படம் வைத்து, அவளை காமாட்சியாக அல்லது சாவித்திரியாகக் கருதி வழிபட வேண்டும். அம்மனுக்கு கார் அரிசியும் காராமணியும் கலந்து செய்த அடையும், உருகாத வெண்ணெயும் நிவேதனம் செய்வார்கள். நோன்புச் சரட்டில் மலரைக் கட்டி பூஜையில் வைத்து கழுத்தில் கட்டிக் கொள்வார்கள். மாசிக்கயிறு பாசி படியும் என்று, பங்குனி முதல் நாளில் புதிய மங்கலச் சரடை மாற்றிக் கொள்வது விசேஷமானதாகக் கருதப்படுகிறது.
பலன்: காரடையான் விரதம் இருக்கும் பெண்கள் தீர்க்க சுமங்கலிகளாக இருப்பர்."[- மார்ச் 14 ந்தேதி]

Monday, 19 February 2018

கவலையை விரட்டுங்கள்

கவலையை விரட்டுங்கள்

 கவலை மகிழ்ச்சிக்கு எதிரி.
கவலைக்கு மனதில் இடம் கொடுக்காதீர்கள். கொடுத்தால் வாழ்க்கையே திசைமாறிப் போகும். அதை தவிர்க்க சாதுர்யம் அவசியம்.
கவலை ஏன் வந்தது?
அதை தீர்க்க வழி என்ன?
என்று புரியாமல் கவலையை வளர்த்து பலர் மனநோயாளிகளாக மாறிவிடுகிறார்கள்.
மேலும் பலர் தவறான வழிகாட்டுதல்களால் மது, மாதுக்கு அடிமையாகிறார்கள்.
இன்னும் சிலர் திருட்டு, வஞ்சகம்,
குறுக்குவழி என திசைமாறிப் போகிறார்கள்.
இன்றைய இயந்திர வாழ்க்கையில்
கவலைகள் இல்லாத மனிதர்களே இல்லை.
இதற்கு என்ன காரணம்?
கவலைக்கு மருந்து எது?
என்பது பற்றி இந்த கட்டுரையில் விளக்கப்படுகிறது.
கவலைக்கு காரணம்
எதிர்காலத்தின் பொருளாதார பாதுகாப்பு பற்றிய அச்சம், செய்யும் தொழிலில் ஏற்படும் கஷ்ட நஷ்டங்கள், குடும்பத்தில் ஏற்படும் பிரச்சினைகள், நோய் நொடிகளால் வரும் தொல்லை, நண்பர்கள், எதிரிகள், போட்டியாளர்களால் ஏற்படும் பிரச்சினைகள் போன்ற பல காரணங்கள் நம்மை கவலையில் ஆழ்த்துகிறது.
கவலைக்கு நம்முடைய மனதில் இடம் கொடுக்கத் தொடங்கிவிட்டால் நம்மால் தெளிவாகச் சிந்தனை செய்ய முடியாது. நம்முடைய செயல்திறனும் பாதிக்கப்படும். உழைக்கும் ஆற்றலையும் சிறிது சிறிதாக இழந்து விடுவோம். சிடுசிடுப்பு, முன்கோபம் மற்றும் பல தீய பழக்கங்கள் நம்மை தொற்றிக்கொள்ளும். நாளடைவில் இந்த பழக்கங்கள் மனநோய், தற்கொலை எண்ணம், பிறரை தொந்தரவு செய்தல் உள்ளிட்ட பல விபரீதங்களை ஏற்படுத்திவிடும்.
கவலையை தீர்க்கும் வழிகள்
கவலை என்பது தீராத வியாதி இல்லை. கவலைப்படுவதால் எந்த ஒரு பிரச்சினையும் தீரப்போவதில்லை. சோதனைகளைக் கண்டு அஞ்சுவது கோழைத் தனமாகும். சிந்திக்கத் தொடங்கினாலே கவலைகள் கரையத் தொடங்கிவிடும்.
கவலையை மறக்க என்னென்ன செய்யலாம் என்பது பற்றி இனி காணலாம்.
* அமைதியான ஓரிடத்துக்கு சென்று அமருங்கள். கவலைக்கான காரணங்களை பற்றி சிந்தியுங்கள். கவலைக்கு காரணம் கடன்தொல்லையா?, தொழில் பிரச்சினையா?, வேலை கிடைக்காமை போன்ற பொருளாதார பிரச்சினையா? அல்லது குடும்ப உறவு, நட்புறவு போன்றவற்றால் ஏற்படும் பிரச்சினைகளா? நோய் நொடிகள் போன்ற சிக்கல்களா? என்று பிரித்து அறியுங்கள்.
* கவலை எதை அடிப்படையாக கொண்டது என்று தெரிந்ததும் அதற்கான காரணம்? எதனால், யாரால் ஏற்பட்டது. எப்போதில் இருந்து வரத்தொடங்கியது. இதில் எந்த அளவுக்கு நாம் காரணமாக இருந்திருக் கிறோம்? என்பதை ஆராயுங்கள்.
* வேரும், கிளைகளும் தொல்லை என்று தெரிந்தால் வெட்ட வேண்டியதுதானே பாக்கி. காரணம் தெரிந்ததும் அவற்றை களைய வழிகளை யோசியுங்கள். சில வழிகளை பட்டியலிடுங்கள். சிறந்த வழியை தேர்ந்தெடுங்கள்.
* பின்னர் சிந்தனையை செயலுக்கு கொண்டு வாருங்கள். தடைகளை தகர்த்து வெற்றி வாகை சூடுங்கள்.
* பின்னரும் அதுபோன்ற கவலைகள் தொடராத வண்ணம் வாழும் கலையை கற்றுக்கொள்ளுங்கள்.
கவலைகள் வராமல் தடுக்ககவலைகள் வரும் முன்னரே சமாளிக்க பின்வரும் சிலவற்றையும் பின்பற்றலாம்.
தினமும் கொஞ்ச நேரம் நண்பர்களுடன் மனம் திறந்து பேசுங்கள்.
பெரியோர் துணையை நாடுவதும் சிறந்தது. பெரியோர்கள் குழப்பமான சூழ்நிலையிலும் சிறந்த வழிகாட்டுவார்கள்.
ஓய்வு நேரங்களை பயனுள்ள புத்தகங்கள் படிக்க செலவு செய்வதும் வாழ்க்கையில் பலவகையிலும் கைகொடுக்கும். அவை எந்த இக்கட்டான சூழ்நிலையிலும் வழிகாட்டும். கவலைகளை விரட்டியடிக்கும்.
உடற்பயிற்சிகள், யோகாசனப் பயிற்சி ஆகியவையும்
சிறந்த பலன்களைத் தரும்.
விருப்பமான பாடல்களை கேட்க தினமும் சிறிது நேரம் ஒதுக்குங்கள். இடையிடையே சினிமாவுக்கு சென்று வாருங்கள்.
தனிமை பல விஷயங்களுக்கு தீர்வு கொடுக்கும். இருந்தாலும் தனிமை கவலைக்கும் ஒரு காரணமாக அமைந்துவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
அன்றைய வேலைகளை அன்றே முடிப்பது, தேவைகள், விருப்பங்களை உடனுக்குடன் நிறைவேற்றிக் கொள்வது போன்றவை கவலையை வரவிடாமல் தடுக்கும் சிறந்த வழியாகும்.
உணர்வுகளை தூண்டி கோபம் ஏற்படுத்தக்கூடிய மற்றும் பிரச்சினைக்குரிய எந்த ஒரு சம்பவம் நடந்தாலும் உடனடியாக முடிவெடுப்பதையும் தவிர்க்க வேண்டும்


Saturday, 17 February 2018

ஆறில் ஆரோக்கியம் !

ஆறில் ஆரோக்கியம் !

*ஆறு அறிவு மனிதன் என்கிறோம். ஆனால் இவனுக்குத்தான் ஓராயிரம் நோய்கள்.*
*ஆறு விடையத்தை நீங்கள் கடைப்பிடித்தால் உங்களுக்கு உள்ள பிரச்சனை தீர்வதுடன் வாழ்நாள் முழுவதும் எந்த நோய்களும் வராது.*
*இதோ !*
----------------
*1 - பசி*
*2 - தாகம்*
*3 - உடல் உழைப்பு*
*4 - தூக்கம்*
*5 - ஓய்வு*
*6 - மன அமைதி*
*பசி !*
-----------
*உங்கள் உடலுக்கு உணவு தேவையா இல்லையா என்பது சுவரில் தொங்கும் கடிகாரத்திற்கு தெரியுமா ? தெரியாதல்லவா பின் ஏன் நேரம் பார்த்து சாப்பீடுகிறீர்கள்.*
*யாரெல்லாம் நேரம் பார்த்து வேளாவேளைக்கு சரியாக சாப்பிடுகிறாரோ அவர் மிகப்பெரிய நோயாளி ஆகப்போகிறார் என்று அர்த்தம்.*
*இதைத்தான் வள்ளுவப்பெருமான் சொல்கிறார்*
*"மருத்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது*
*அற்றது போற்றி உணின்."*
*விளக்கம் - நாம் ஏற்கனவே உண்ட உணவு செரித்த பின் மீண்டும் பசித்து சாப்பிட்டால் இந்த உடலுக்கு எந்த மருந்தும் தேவையில்லை என சொல்லியிருக்கிறார்.*
*"தீயள வன்றத் தெரியான் பெரிதுண்ணின்*
*நோயள வின்றிப் படும்."*
*விளக்கம் - பசியின் அளவு தெரியாமல் அதிகமாக சாப்பிட்டால் நோய் அளவில்லாமல் வரும் என்கிறார்.*
*பசியின் அளவு தெரியாமல் அதிகமாக உண்டால் நோய் அளவில்லாம் வரும் போது, பசியே இல்லாமல் சாப்பிட்டால் என்னவாகும் !*
*உணவை பசித்து, சவைத்து, சுவைத்து கவனித்து, இடையில் தண்ணீர் குடிக்காமல் உண்ண வேண்டும்.*
*இதை நீங்கள் சரியாக செய்ததின் மூலம் ஆரோக்கியத்தின் முதல் படியில் கால் வைக்கிறீர்கள்.*
*தாகம் !*
----------------
*அனைவருக்கும பொதுவாக தண்ணீரின் அளவு நிர்ணயிக்கப்படுகிறது, இது தவறு. Ac யில் வேலை பார்க்கும நபருக்கு 3 லிட்டர் தண்ணீர் தேவைப்படாது, மீறி குடித்தால் சிறுநீரகம் பாதிக்கப்படும்.*
*வெயிலில் கட்டிட வேலை செய்பவருக்கு 3 லிட்டர் போதாது, இவருக்கு அதிகம் தேவைப்படும், இவர் 3 லிட்டர் குடித்தால் சிறுநீரகம் பாதிக்கப்படும்.*
*சரி எவ்வளவுதான் குடிப்பது என கேட்கிறீர்களா ! ஒரு மனிதர் உண்ணும் உணவு, வாழும் இடம், செய்யும் வேலை இதை பொருத்து தண்ணீரின் அளவு மாறுபடும்.*
*தாகம் எடுக்கும் போது குடியுங்கள், தாகம் தீரும் வரை குடியுங்கள், மீண்டும் தாகம் எடுத்தால் குடியுங்கள். அளவுகளை பார்க்க வேண்டிய அவசியம் இல்லை.*
*Ro, Mineral, Filter, boiled water பேராபத்து*
*இதை நீங்கள் குடித்தால் சிறுநீரகம் சிதைந்து, இது தொடர்பான் ஆயிரம் நோய்கள் வரும். சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால் குழந்தை பிறக்காது.*
*தண்ணீரை இயற்கை முறையில் சுத்திகரிக்க பருத்தி துணியில் வடித்து மண் பானை, செம்பு பாத்திரத்தில் ஊற்றி வைத்து குடிக்கலாம்.*
*"தாயை பழித்தாலும் தண்ணீரை பழிக்காதே"*
*என்பார்கள்*
*நீரின் முக்கியத்துவத்தை இந்த பழமொழி நமக்கு உணர்த்தும்.*
*தண்ணீரை இயற்கை முறையில் சுத்திகரித்து குடித்ததின் மூலம் நீங்கள் ஆரோக்கியத்தின் இரண்டாவது படியை அடைந்தீர்கள்.*
*உடல் உழைப்பு !*
-------------------------------
*ஒரு வாகனத்தை 3 மாதம் ஓட்டாமல் வைத்திருந்தால் என்னவாகும். அதே நிலைதான் உடலுக்கும். குறைந்தபட்சம் ஒரு நாளைக்கு ஒரு மணி நேரமாவது உடல் உழைப்பு அவசியம்.*
*இதற்கு நீங்கள் Walking, yoga, Gym இதை செய்ய வேண்டிய அவசியம் இல்லை, வீட்டு வேலைகளை இயந்திரத்துனையின்றி செய்தாலே போதுமானது.*
*உடலுக்கு வேலை கொடுத்ததின் மூலம் நீங்கள் ஆரோக்கியத்தின் மூன்றாம் படி அடைந்தீர்கள்.*
*தூக்கம் !*
------------------
*யாருக்கு தூக்கம் வரும் ? உடலுக்கு வேலை கொடுப்பவருக்கே தூக்கம் வரும். மனதிற்கு வேலை கொடுப்பவருக்கு தூக்கம் வராது. மனதிற்கு மட்டும் வேலை கொடுத்துவிட்டு நீங்கள் தூக்கத்தை எதிர்பார்க்க கூடாது.*
*ஒரு நாள் குனிந்து நிமிர்ந்து உடலுக்கு வேலை கொடுத்து பாருங்கள் எப்படி தூக்கம் வருகிறதென்று.*
*ஒரு மனிதன் உயிர் வாழ உணவு, காற்று, நீர் எவ்வளவு முக்கியமோ அதே அளவு தூக்கமும் முக்கியம்.*
*இரவு கண் விழித்து வேலை பார்ப்பது உங்கள் உயிருக்கே ஆபத்தாக முடியும்.*
*பகலில் உறங்கி சமன் செய்யதுவிடலாம் என நினைக்காதீர்கள். நீங்கள் தலைகீழாக நின்றாலும், கோடி கோடியாய் கொடுத்தாலும் இரவு உறக்கத்தை உங்களால் ஈடு செய்யவே முடியாது. இரவு தூங்க வேண்டிய சரியான நேரம் 9மணி.*
*நீங்கள் 10 மணிக்கு மேல் கண் விழித்திருப்பவராக இருந்தால், மருத்துவ செலவிற்கு பணம் சேர்த்து வைத்துக்கொளுங்கள், உங்களுக்கு மிகப்பெரிய நோய் வரப்போகிறது.*
*இரவு உறக்கம் சரி இல்லை என்றால் கல்லீரல், பித்தப்பை தொடர்பான ஆயிரம் நோய்கள் வரும்.*
*நீங்கள் இரவு 9மணிக்கு உறக்கச்சென்றதின் மூலம் ஆரோக்கியத்தின் நான்காம் படியில் கால் அடி எடுத்து வைத்துள்ளீர்கள்.*
*ஓய்வு !*
---------------
*சளி, காய்ச்சல், தலைவலி, அசதி போன்ற உடலின் கழிவு நீக்க செயலுக்கு நாம் ஓடி ஓடி மருந்து மாத்திரை எடுக்காமல், உடலிற்கு ஓய்வு கொடுக்க வேண்டும்.*
*சளி, காய்ச்சலுக்கு ஆங்கில மருத்து எடுப்பது தற்கொலை செய்வதற்கு சமம்.*
*உடல் கேட்கும் போது ஓய்வு கொடுத்ததால் நீங்கள் ஆரோக்கியத்தின் ஐந்தாம் படி அடைந்தீர்கள்.*
*மன நிம்மதி !*
--------------------------
*ஐந்து கட்டத்தை வெற்றிகரமாக தாண்டி வந்த உங்களுக்கு மன நிம்மதி என்று ஒன்று இல்லை என்றால் பின் கீழ் சறுக்கி பழைய நிலைக்கு சென்றுவிடுவீர்கள்.*
*மனம் நிம்மதியாக இருக்க யாரிடமும் எதற்காகவும் கடன் வாங்காதீர்கள். உங்களுக்கு பிடித்ததை படியுங்கள், பிடித்த வேலை செய்யுங்கள், மாதம் ஒரு நாளாவது உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலங்களுக்கு சென்று வாருங்கள்.*
*மனதை நிம்மதியாக வைக்கும் கலைகளை கற்று தேர்ந்து ஆறாவது படியில் வீற்றிருக்கும் ஆரோக்கிய அன்னையை அடைந்துவிட்டீர்கள்.*
*இனி எமன் உங்களை கண்டு அஞ்சுவார்.*
*ஆறு படியை கடந்தோம்*
*ஆரோக்கியத்தை அடைந்தோம்.*


Thursday, 15 February 2018

பிரம்மஹத்தி தோஷம்

பிரம்மஹத்தி தோஷம்

 பிரம்மஹத்தி தோஷம் என்பது ஆசிரியர்களுக்கு உத்தம குருவுக்கு பிராமணர்களுக்கு எந்த வழியிலேனும் துரோகம் செய்வதாலும், பலரின் சொத்துக்களை நேர்மையற்ற வழியில் அபகரித்ததாலும், கன்னி பெண்ணை ஏமாற்றி கற்பை சூரையாடிவிட்டு பின் திருமணம் செய்து கொள்ளாமல் ஏமாற்றியதாலும்,
தன்னுடைய பதவி அதிகாரத்தை பயன்படுத்தி பிறரை இம்சித்ததாலும், நல்ல பாம்பை வெள்ளிக்கிழமை தினம் அடித்து கொன்ற பாவத்தினாலும் ஏற்படுகிறது, இந்த தோஷம் சென்ற பிறவியில் உண்டானதா, இந்த பிறவியில் உண்டானதா என்பதை உங்கள் பிறப்பு ஜாதகம் மூலம் கண்டறியலாம்.
ஜோதிட சாஸ்த்திரத்தின் படி குருவை சனியை எந்த விதத்தில் தொடர்பு கொண்டாலும் பிரம்மஹத்தி தோஷம் உண்டு, குரு சனி சேர்க்கை, பார்வை, குரு சனி சாரம் பெறுதல், சனி குரு சாரம் பெறுவது, குரு சனி பரிவர்த்தனை பெறுவது முதலிய அம்சங்கள் பிரம்மஹத்தி தோஷத்திற்கான கிரக -நிலைகள் ஆகும்.
பைரவர் - பிரம்மனின் தலையை கொய்தமையால் பிரம்மஹத்தி தோசம் ஏற்பட்டது.
சப்தகன்னியர் - மகிசாசுரன் எனும் அரக்கனை கொன்றமையால் பிரம்மஹத்தி தோசம் ஏற்பட்டது.
இராமர் - இராவணனைக் கொன்றமையால் பிரம்மஹத்தி தேசம் ஏற்பட்டது.
வீரசேனன், வரகுண பாண்டியன் - பிராமணனைக் கொன்றமையால் பிரம்மஹத்தி தோசம் ஏற்பட்டது

ஹோமம்

ஹோமம்

=========
பரிகாரங்களில் மிக சிறந்து விளங்குவது ஹோமங்கள் ஆகும். தேவர்கள், சித்தர்கள், ஞானிகள், யோகிகள் தொடங்கி நாடாளும் அரசர்கள் முதல் சரித்திர காலம் தொட்டு இன்றுவரை தங்கள் இஷ்ட காரியங்களை யாகத்தின் மூலமே பூர்த்தி செய்து கொண்டனர். ஹோமத்தில் தீயில் நாம் இடும் மூலிகை பொருட்கள் தெய்வத்திற்கு உணவாகின்றன.
இந்த ஹோமத்தீயில் இடும் மூலிகைக்கு சக்திகள் உள்ளன. உதாரனமாக புல்லுருவி சர்வ வசியத்தையும், தேள் கொடுக்கு இராஜ வசியத்தையும், செந்நாயுருவி ஆண் வசியத்தையும், நில ஊமத்தைப பெண் வசியத்தையும், வெள்ளெருக்கு சத்ரு வசியத்தையும், சீந்தில் தேவ வசியத்திற்கும் இன்னும் பலப்பல மூலிகைகள் பல காரயங்களுக்கும் பயன்படுகிறது.
ஹோமத்தின் போது புனித நீரால் கும்பத்தை நிரப்பி, அலங்கரித்து வேண்டிய தெய்வங்களை அதில் ஆவாஹனம் செய்து (வரவழைத்து), குத்து விளக்கில் அஷ்ட லட்சுமிகளை ஆவாஹனம் செய்து, ஹோமத்தீயில் தெய்வங்களை வசியம் செய்து பால், பழம், தேன், மூலிகை சமித்துகளை ஹோமத்தில் தெய்வத்திற்கு உணவாக கொடுத்து, உரிய மந்திரமோதி நம் குறைகளை தேவைகளை தெய்வத்திடம் கூறும் போது தெய்வங்கள் அதனை ஏற்று நமக்கு மகிழ்வுடன் பலனை தருகின்றன.

சில ஹோமங்களும் அதன் பயன்களும் :
1. கணபதி ஹோமம் : தடைகள் விலகும், எடுத்த காரியங்கள் வெற்றி அடையும்.
2. சண்டி ஹோமம் : பயம் போக்கும், வாழ்வில் தொடர்ந்து வரும் தரித்திரம் நீக்கும்.
3. நவகிரஹ ஹோமம் : கிரக தோஷங்கள் போக்கி மகிழ்ச்சியும், வளமும் உண்டாகும்.
4. சுதர்ஸன ஹோமம் : ஏவல் பில்லி சூனியங்கள் நீங்கும், சகல காரியங்களிலும் வெற்றி தரும்.
5. ருத்ர ஹோமம் : ஆயுள் விருத்தி உண்டாகும்.
6. மிருத்யுஞ்ச ஹோமம் : மந்தி தோஷம் போக்கும், பிரேத சாபம் நீக்கும்.
7. புத்திர கமோஷ்டி ஹோமம் : புத்திர பாக்கியத்தை உண்டாக்கும்.
8. சுயம்வர கலா பார்வதி ஹோமம் : பெண்களுக்கு திருமண தடை நீக்கி விரைவில் நடைபெறும்.
9. ஸ்ரீ காந்தர்வ ராஜ ஹோமம் : ஆண்களுக்கு திருமண தடை நீக்கி விரைவில் நடைபெறும்.
10. லக்ஷ்மி குபேர ஹோமம் : செல்வ வளம் தரும், பொருளாதார பெருக்கம் ஏற்படும்.
11. தில ஹோமம் : சனி தோஷம் போக்கும், இறந்தவர்களின் சாபங்களை நீக்கும்.
12. ஸ்ரீ ப்ரத்யங்கிரா ஹோமம் : நோய்கள் நீங்கும், எதிரிகளின் தொல்லைகள் நீங்கும்.
13. ஸ்ரீ பிரம்மஹத்தி ஹோமம் : எதிரிகளின் சூழ்ச்சிகள் தொல்லைகள் நீங்கி, வெற்றி மேல் வெற்றி உண்டாகும்.
14. கண்திருஷ்டி ஹோமம் : திருஷ்டி தோஷங்கள் விலகும், காரிய தடைகள் நீக்கும்.
15. கால சர்ப்ப ஹோமம் : திருமண தடை உத்தியோக தடை நீங்கும்,
வாழ்வில் சோதனைகள் நீங்கி சாதனைகள் மலரும்.
. ஜோதிட ரீதியாக கிரக நிலைகளை ஆராய்ந்து உரிய ஹோமங்களை செய்து வாழ்வில் வளம் பல பெற்று வாழ வாழ்த்துகிறேன்.

நாம் தவிர்க்க வேண்டிய 8 மன விஷங்கள்!

 நாம் தவிர்க்க வேண்டிய 8 மன விஷங்கள்! நமது மன அமைதியையும் மகிழ்ச்சியையும் நாமே அறியாமல் அழிக்கும் 8 நச்சு எண்ணங்கள் என்னென்ன என்று தெரிந்துக...