Thursday, 15 February 2018

பிரம்மஹத்தி தோஷம்

பிரம்மஹத்தி தோஷம்

 பிரம்மஹத்தி தோஷம் என்பது ஆசிரியர்களுக்கு உத்தம குருவுக்கு பிராமணர்களுக்கு எந்த வழியிலேனும் துரோகம் செய்வதாலும், பலரின் சொத்துக்களை நேர்மையற்ற வழியில் அபகரித்ததாலும், கன்னி பெண்ணை ஏமாற்றி கற்பை சூரையாடிவிட்டு பின் திருமணம் செய்து கொள்ளாமல் ஏமாற்றியதாலும்,
தன்னுடைய பதவி அதிகாரத்தை பயன்படுத்தி பிறரை இம்சித்ததாலும், நல்ல பாம்பை வெள்ளிக்கிழமை தினம் அடித்து கொன்ற பாவத்தினாலும் ஏற்படுகிறது, இந்த தோஷம் சென்ற பிறவியில் உண்டானதா, இந்த பிறவியில் உண்டானதா என்பதை உங்கள் பிறப்பு ஜாதகம் மூலம் கண்டறியலாம்.
ஜோதிட சாஸ்த்திரத்தின் படி குருவை சனியை எந்த விதத்தில் தொடர்பு கொண்டாலும் பிரம்மஹத்தி தோஷம் உண்டு, குரு சனி சேர்க்கை, பார்வை, குரு சனி சாரம் பெறுதல், சனி குரு சாரம் பெறுவது, குரு சனி பரிவர்த்தனை பெறுவது முதலிய அம்சங்கள் பிரம்மஹத்தி தோஷத்திற்கான கிரக -நிலைகள் ஆகும்.
பைரவர் - பிரம்மனின் தலையை கொய்தமையால் பிரம்மஹத்தி தோசம் ஏற்பட்டது.
சப்தகன்னியர் - மகிசாசுரன் எனும் அரக்கனை கொன்றமையால் பிரம்மஹத்தி தோசம் ஏற்பட்டது.
இராமர் - இராவணனைக் கொன்றமையால் பிரம்மஹத்தி தேசம் ஏற்பட்டது.
வீரசேனன், வரகுண பாண்டியன் - பிராமணனைக் கொன்றமையால் பிரம்மஹத்தி தோசம் ஏற்பட்டது

No comments:

Post a Comment

ஆண் அழுவான்...

 தாய் தந்தை இறந்தால் ஆண் அழுவான்... *தனக்கு குழந்தை பிறக்கப்போகிறது என்று நற்செய்தி கேட்டு ஆண் அழுவான்... *தன் குழந்தைகளில் ஒருவர் நோய்வாய்ப...