Thursday, 15 February 2018

பாகம்--1 ========.திருமணம்..

 பாகம்--1 ========.திருமணம்..

திருமண நடை முறைகளை நாம் அனைவரும் அறிய இந்த பதிவு
மிகவும் அவசியமானது ஆகையால் அனைவரும் படித்து பயனடையவேண்டுகிறேன்

 திரு’ என்பது தெய்வத்தன்மை எனவும், ‘மணம்’ என்பது இணைதல் எனவும் பொருள்பட்டு, ‘திருமணம்’ என்பது மேம்மையான தெய்வீகம் வாய்ந்த இணைதல் எனப்படுகின்றது. அதாவது இரு இதயங்கள் இணைவது எனவும் கூறலாம்.
தமிழர்களின் இந்துத் திருமணம் ஆகம மரபுச் சடங்குகளுடன் சில சிறப்பு அம்சங்களையும் தழுவி நடைபெறுகின்றன. இச்சடங்கு களை சமய குருக்கள் சமய முறைப்படி நெருப்பு முன்னினையில் இறைவன் ஆசி யுடன் நடத்தி வைக்கிறார். திருமண நிகழ் வில் முக்கியமான நிகழ்ச்சி நல்வேளையில் தாலி கட்டுதலாகும். இதனை “மாங்கல்ய தாரணம்” எனக் கூறுவர். தாலி கட்டியதும் அப்பெண் “சுமங்கலி” அதாவது திருமணமா னவள் என்ற தகுதி பெறு கின்றாள்.
இரு வீட்டாரும் முதலில் சாதகப் பொருத்தத்தை ஆராய்வார்கள். தமிழ்நாட்டில் பெண்பார்க்கும் படல்போன்று இலங்கையிலும் பெண்ணைப் பொதுவிடங்களில் பார்ப்பது வழக்கமாகவுள்ளது.
பின் நிச்சயதார்த்தத்தை உறுதிசெய்யப் பெண்வீட்டார் தாம்பூலம், பலகாரம், பழங்க ளோடும் உறவினரோடும் மணமகன் வீட்டிற்கு நல்ல நாள் பார்த்துச் செல்வர். இதன் பின் இரு வீட்டாரும் திருமண நாளைச் சோதிடரி டம் கேட்டு நிச்சயிப்பர். அத் தோடு பொன்னு ருக்கலிற்கும் ஒரு நாளை நிச்சயிப்பர்.
பொன்னுருக்கல்பொன் உருக்கும் பொழுது அதற்கு உரிய விஸ்வப்பிரம்மகுலத்தின் குறையற்ற,ஒருவரே தேர்வு செய்யப்படவேண்டும்.
1,திருமணமாகிக் குழந்தயுள்ளவர்,
2,பூரண சுகதேகி
3,சுகதேகியான மனைவி குழந்தை உள்ளவர்,
4,பூரண முள்ள அங்கக் குறையற்றவர்.
5,வலது கைப் பழக்கமுள்ளவர்,
6,பூரண விஸ்வப்பிரம்ம சாஸ்திரம் தெரிந்தவர்,
7,பூணூல் அணியும் தகுதி உள்ளவர்.
8,தாலிக்குக் கூலி பெறுவது கூடாது .ஆனால் அதற்கான தற்பணம், பொன் உருக்கும் இடத்தில் கொடுக்காவிட்டால் அதுதான் தாலி தோஷம் எனும் துர்ப்பாக்கியம்,(பிரம்மஹத்தி தோஷம்)
9.தாலிக்குப் பொன்தான் உருக்கவேண்டும்.அது இப்பொழுது தங்கமாக உருமாறி உள்ளது.
குறிப்பு
திருமணமாகாதவர்கள் எக்காரணம் கொண்டும் தாலிக்குப் பொன் உருக்கக் கூடாது.அப்படித் தாலிக்குப் பொன் உருக்கினால் பொன் உருக்குபவருக்கு இலகுவில் திருமணம் நடைபெறாது இதை நீங்கள் கண் முன்னாலே காணலாம்.
தாலி தோஷம் எனும் துர்ப்பாக்கியம்,(பிரம்மஹத்தி தோஷம்)
தாலி கட்டி, மாலை மாற்றிய பிறகு செய்யும் சடங்கு சப்தபடி. அதாவது ஏழு முறை தீ வலம் வந்து, ஆண் பெண்ணின் காலை அம்மியில் வைத்து , உறுதி அளித்தல்.
1. முதல் படி : மணமக்கள் தங்கள் குல தெய்வத்தினை அழைத்தல்
2. இரண்டாம் படி : அவர்கள் இருவரும் தெய்வத்தினிடம் தங்கள் இல்வாழ்க்கை சிறப்பாக அமைய எங்களுக்கு மன உறுதியையும் , உடல் உறுதியையும் அளித்து, எங்களுடன் துணையாக இருப்பாய் என்று இறைவனை வேண்டுதல்.
3. மூன்றாம் படி : நாங்கள் இல்லற தர்மத்தில் இருந்து , அனைவருக்கு உரிய கடமையை செய்வோம். அதில் தவற மாட்டோம்.
4. நான்காம் படி : மணமக்கள் வாழ்க்கை மகிழ்ச்சியுடன் இருக்க இறைவனை வேண்டுதல் .
5. ஐந்தாம் படி : உலகில் உள்ள அனைவரும் நலமாக வாழவும், திருமணத்திருக்கு வந்து எங்களை ஆசீர்வதிக்கும் அனைவரும் நலமாக இருக்க வேண்டும் என்று இறைவனை வேண்டுவது.
6. ஆறாம் படி : உலகத்தில் பருவ நிலை தவறாது இயற்கை மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்று வேண்டுவது.
7. ஏழாம் படி : இந்த திருமணத்தில் வரும் புண்ணியத்தை உலக நன்மைக்காக தானம் செய்வது .
இவை அனைத்தும், தீ வலம் வந்து மணமக்கள் கூறும் மந்திரத்தின் பொருளாகும்.
சிலப்பதிகாரம்
“சாலி ஒரு மீன் தகையாளைக் கோவலன்
மாமுது பார்ப்பான் மறை வழிகாட்டிடத்
தீ வலம் செய்வது காண்பார்கன் நோன்பு என்னை”
மேலும்
“தீ வலம் சுற்ற கனாக் கண்டேன் தோழி”
என்ற ஆண்டாள் பாடலின் மூலம் அறியலாம்.
பொன்னுருக்கலில் நடுவில் தங்க நாணயமும் உமியின் மே ல் சிரட்டைக் கரி இருக்கின்றது
திருமண நாளுக்கு முன்பு ஒரு சுப நாளில் மணமகன் இல்லத் தில் அல்லது ஆசாரி வீட்டில் பொன்னுருக்கல் நடைபெறும். இதில் மணப்பெண்ணைத் தவி ர பெண்ணின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்து கொள்வர். பெண்வீட்டார் ஓர் இனிப்புப் பண்டம் (கொழுக்கட்டை) கொண்டு செல்லுதல் சம்பிரதாயம்.
மணமகன் வீட்டு வாசலில் முறைப்படி நிறைகுடம், குத்துவிளக்கு, பன்னீர்தட்டு,குங்குமம், சந்தனம் வைத்து பொன்னுருக்கும் இடத்தில் ஒரு நிறைகுடம் குத்துவிளக்குகள் தேங்காய், மாவிலைகள், வெற்றிலை, பா க்கு, வாழைப்பழம், மஞ்சள்கட்டை (துண் டு), தேசி க்காய், அறுகம்புல், பூக்கள், ஒரு சட்டியில் தண்ணீர், தேங்காய் உடைக்கக் கத்தி, விபூதி, குங்குமம், சந்தனம், மஞ்ச ளில் பிள்ளை யார், சாம்பிராணியும் தட்டு ம், கற்பூரம் முதலிய முக்கியமாகத் தேவைப்படும் பொருட்களாகும்.
திருமாங்கல்யத்திற்குரிய தங்கநாணயத்தை (பவுணை) ஆலயத்தில் (இறைவனிடத்தில்) வைத்து பூசை செய்து ஒரு தட்டில் வெற் றிலை, பாக்கு, மஞ்சள், குங்கு மம், பூ, பழத்துடன் நாணயத் தையும் வைத்துக் கொண்டு வந்து பூஜையறையில் வைக்க வேண் டும். பொன்னுருக்கும் நாளன்று அதை மணமகனின் பெற்றோர் அல்லது பெரியோர் எடுத்து மண மகனிடம் கொடுக்க அவர் அதை ஆச்சாரியாரிடம் கொடுத்து உருக்கவேண்டும். ஆச்சாரியார் கும்பம் வைத்து விளக் கேற்றி தூபதீபம் காட்டி வெற்றிலை, பாக்கு வாழைப்பழம் முதலியவை வைத்து தேங்காய் உடைத்துப் பூசை செய்து பொன்னை உருக்குவார். உருக்கிய பின் தாய்மாமன் தேங்காய் உடைத்துப் பூசை செய்து அந்த இளநீரை உருக்கிய தணலில் ஊற்றி தீயை தணிப்பார். பின் ஒரு தட்டில் வெற்றிலை பாக்கு, பழம், பூ, மஞ்சள், குங்கு மம், தேசிக்காய் வைத்து வெற்றிலை மேல் உருக் கிய தங்க த்தையும் வைத்து மணமகனிடம் ஆசாரியார் கொடுப் பார். அதை மணமகன் வந்துள்ள சபையோ ருக்குக் காண்பித்து, அதன் பின் ஆசாரியாரிற்கு அரிசி காய்கறி யுடன் தட்சணை அளி த்து உருக்கிய தங்கத்தைத் திருமாங்கல்யம் செய்ய ஒப்படைக்க வேண்டும்.


பாகம்--2 ======== திருமணம்

பாகம்--2  திருமணம்
========


 கன்னிக்கால் ஊன்றல்
-----------------------------------
இதே நாள் பெண் வீட்டிலும் மணமகன் வீட்டிலும் தனித்தனியே அவர்கள் வளவில் ஈசான (வட கிழக்கு) மூலையில் முகூர்த் தக் கால் அல்லது கன்னிக்கால் ஊன்றவேண்டும். அதற்கு இப் போது கலியாண முள்முருங் கை மரத்தில் ஒரு தடியை வெட்டி அதன் மேல் நுனியில் 5 மாவிலைகளை மஞ்சள் பூசிய கயிறால் கட்டி, இடையில் ஒரு மஞ்சள் பூசிய வெள்ளைத் துணி யில் ஒரு செப்பு க்காசு முடிந்து கட்டிவிட வேண்டும். பெரியவர் ஒருவர் அத்தடியை நில த்தில் ஊன்றியதும் அதற்கு தேங்காய் உடைத்து சாம்பிராணி கற் பூரம் காட்டவேண்டும். அதனடியில் நவதானியத்தொடு பவளம் அல்லது நவமணிகள் இட்டு நீர் பால் ஊற்றி (3 சுமங்கலிப் பெண்கள்) மரத்திற்குத் திருநீறு, சந்தனம், குங்குமம் சார் த்தவேண்டும். இது நன்கு வளரவேண்டும் என்று நி னைத்து கும்பத்தண்ணீ ரை ஊற்றலாம்.
மஞ்சளில் பிள்ளையார் பிடித்து வைத்து வெற்றி லை பாக்கு பழம் வைத்து தேங்காய் உடைத்துத் தீபம் காட்டி பந்தல்கால் ஊன்று வார்கள். பந்தல் காலைத் தொடர்ந்து பந்தல் அமைக்கும் வேலை தொடரும். மணமகள் வீட்டில் ஊன்றிய பின் மணமகன் வீட்டிற்கும் செய்ய வேண்டும்.
முகூர்த்தக்கால் ஊன்றிய பின் இரு வீட்டாரும் திருமணச் சடங்கு கள் முற்றாக முடிவடையும் வரை எந்தவிதமான துக்க நிகழ்ச்சிக ளிலும் பங்குபெறுதல் கூடாது. (பந்தக்கால் ஊன்றுபவருக்குத் தட்சணை கொடுக்கவேண்டும்.)
முளைப்பாலிகை போடல்
-----------------------------------------
பெண் வீட்டில் மூன்று அல் லது ஐந்து மண்சட்டிகளில் மண்பரப்பி நீர் ஊற்றவும். பா லில் ஊறவைத்த நவதானிய ங்களை 3 அல்லது 5 சுமங்கலி ப் பெண்கள் அச்சட்டிகளில் தூவி நீரும் பாலும் தெளிக்க வேண்டும். (3 முறை). இவ ற்றைச் சாமி அறைக்குள் வைத்து திருமணத்தன்று மணவறைக்குக் கொண்டு போக வேண்டும். அநேக மாக பொன்னு ருக்கலன்று செய்வார்கள் (இதை 3 நாட்களுக்கு முன் னாவது செய் தால் நவதானியம் வளர்ந்து இருக்கும்.
முளைப்பாலிகை இடுவதன் நோக்கம் திருமணம் செய்து மண மக்களும் அவர்கள் குடும்பமும் முளைவிட்டு பல்கிப் பெருகி வாழ வேண்டும் என்பதே. “விரித்த பாலிகை முளைக்கும் நிரையும்” என்கின்றது சிலப்பதிகாரம். இந்தப் பாலிகையானது திருமணத்தி ற்குப் பின் நதியிலே சேர்த்து விடலாம்.
நவதானியம் ஆவன நெல், கோதுமை, பயறு, துவரை, மொச்சை, எள், கொள்ளு, உளுந்து, கடலை என்பனவாம்.
பந்தல் அமைத்தல்
-------------------------------------
முகடுடைய பந்தல் அமைக்கும் பழக்கம் அக்காலத்தில் நடை முறையில் இருந்து வந்துள்ளது. பந்தலின் உள்பகுதியில்மேலுக் கு துணிகளைக் கட்டுவார்கள். அழகுக்காகவும் திருமணச் சடங்குக ள் நடக்கும் பொழுது பந்தலின் மேலிருந்து தூசி அழுக்குப் பொருட்கள், பல்லி போன் றன விழுந்துவிடாமல் இருப்பதற்காகவும் இந்த ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. பந் தலை கமுகு, வாழை, தென்னை ஓலை களால் அலங்கரிப்பர்.
வாழைமரம் ஒருமுறைதான் குலைபோ டும் அதுபோல் எமது வாழ் விலும் திருமணம் ஒருமுறைதான் என் பதை உணர்த்துகிறது. பாக்கு கொத்துக் கொத்தாகக் காய்ப்பதால் இது தம்பதிகள் ஒற்றுமையாக வாழவேண்டும் என்பதை வலியுறு த்துகின்றது. வாழையும் தென்னையும் கற்பகதரு இவை அழியாப் பயிர்கள் ஆகும். தென்னை நூற்றாண்டு வாழக்கூடியது. “வாழையடி வாழையாக” வளர்வது தேங்காயும் வாழைப்பழமும் இறை வழிபாட்டில் முக்கியமாகின்றது. தம்பதிகள் நிலைத்து நின்று அனைவருக்கும் பயன்படக்கூடிய தாக வாழவேண்டும் என்ற தத்துவத்தையே உணர்த்துகிறது.
திருமணம் வசதிக்கேற்ப பெண் வீட்டி லோ, கோயிலிலோ அல்லது வேறுமண்ட பத்திலோ வைக்கலாம். அப்படி வேறு மண்டபத்தில் வைப்பதானால் இருவரது வீட்டு வாசல்களிலும் மண்டப வாயிலி ல் மாவிலை, தோரணம், வாழை மரங் களால் அலங்கரிக்கப்பட வேண்டும்.
வாழைமரம் கட்டுவதன் நோக்கம் வாழையடி வாழையாக வாழை மரம் தழைத்து வருவது போல, நமது சந்ததியும் பெருக வேண்டும் என்பதாகும். மாவிலை தோரணங்கள் மங்கள முறையாகக் கட்ட வேண்டும். வாசலில் நிறைகுடம் வைக்கவேண்டும். வசதிக் கேற்ப வீடுகளையும் மண்டபத்தையும் அலங்கரிக்கலாம். மண்டப த்தில் நன்கு அலங்கரிக்கப்பட்டே மணவறை கிழக்கு நோக்கி அமைக்கப் பட வேண்டும். மணவறையின் முன்பு சுவாமி அம்பாள் கும்பங்கள், சந்திரகும்பம், விநாயக பூஜை, பஞ்சகௌவ்விய பூசைகென ஒரு கும்பம், அக்கினி கிரியைக்குரிய பாத்திரம், அம்மி, மஞ்சள் நீர் ஆகியவை வைக்கப்படும்.
1 விநாயகர்
2 ஓமகுண்டம்
3 அரசாணி
8 சந்திர கும்பம்
9 அம்மி
10 7 ஈசானமூலை – சுவாமி அம்பாள்
11 மஞ்சள் பாத்திரம் – மோதிரம் போட்டெ டுத்தல்
அரசாணியைச் சுற்றி 4 விளக்குகள், 4 நிறைகுடங்கள், வைக்கப் படும் (4, 5, 6, 7) சந்திர கும்பத்திற்கு முன்பாக முளைப் பாலிகை சட்டிகள் வைக்கப்படும்.
குருக்கள் தன் முன்பாக புண்ணியதானத்திற்குரியவற்றை வைத்து அதன் பக்கத்தில் மஞ்சள் பிள்ளையாரும், ஒரு கிண்ணத்தில் பஞ்ச கவ்வியமும் வைத்திருப்பார். அரசாணி மரமும் அலங்கரிக்கப்பட் டிருக்கும். அதற்கு ஒரு பக்கம் பாலிகைச் சட்டியும், நடுவில் அம்மி யும், அதன் பின் சிவன், பார்வதி கும்பங்களும் மறுபக்கம் நவக்கிரக கும்பங்களும் ஆக முன்பாக அரசாணிப்பானையும் நான்கு கும்பங் களும் வைத்து கல்யாண மண்டபம் மேல் கூறியபடி நிறுவப்பட் டிருக்கும்.


திருமணம் ================ பாகம்--3

திருமணம்   பாகம்--3
================


 மணமகன் அழைப்பு
-------------------------------------
திருமணத்தன்று மணமகனை கிழக்கு முகமாக ஓர் பலகையில் இருத்தி அவ ரின் கைகளில் வெற்றிலையைச் சுருட்டி அதற்குள் சில்லைக் காசுகள் வைத்துக் கொடுக்கவேண்டும். அவருக்கு முன்னா ல் நிறைகுடம், குத்துவிளக்கு, தாம்பூலம் வைக்கவேண்டும். 3, 5, 7 என்ற எண்ணி க்கையில் ஆண்களும் பெண்களும் அறு கும் காசும் பாலும் கொ ண்ட கலவையை மணமகனின் தலையி ல் 3 முறை வைக்கவேண்டும். மணமகனி ன் தலையில் ஓர் வெள்ளைத் துண்டை விரித்து வைத்து அதன்மேல் பாலையி டலாம். முதல் பால் வைக்கும் போது வடக்கு முகமாயிருந்து தாய் மாமன் தேங்காய் உடைக்கவேண்டும். பால் வைத்ததும் மணமகன் போய் குளித்துவிட்டு வரவேண்டும். பெண்வீட்டாரும் இதில் கலந்து கொள்வார்கள். மணமகன் சாமி அறையில் சாமி கும்பிட்டு கற்பூரம் காட்டித் தாய் தந்தையரை விழுந்து வணங்க வேண்டும். பெண்வீட்டார் மணமகன் வீட்டிற்கு வரும்போது ஒரு தட்டில் வாழைப்பழம், ஒரு தட்டில் பலகாரம், இன்னொரு தட்டில் பூ எல்லா மாக 3 தட்டுகளுடன் வரவேண்டும். எல்லோருக்கும் விருந் தோம்பல் நடைபெறும்.
கடுக்கண் பூணல்
-----------------------------------
முன்னாளில் கடுக்கண் பூணல் என்ற சடங்கும் நடைபெற்றது இப்போது அது அருகிவிட்டது. மணமகனை கிழக்கு முக மாக அலங்கரிக்கப்பட்ட இடத்தில் இருத்தி விநாயகர் வழிபாடு செய்து தேங்காய் உடை த்து மணமகனுக்கு கடுக்கண் பூட்டு வைபவம் செய்யலாம்.
தலைப்பாகை வைத்தல்
------------------------------------------------
மணமகன் கிழக்கு நோக்கி நிற்க ஒரு பெரியவரைக் கொண்டு தலை பாகை வைக்கவேண்டும். உத்தரியம் அணியவேண்டும். உத்தரி யம் இடும்போது இடந் தோளின் மேலாக வந்து வலப்பாக இடுப்பளவில் கட்டவேண்டும் (அந்தணர் பூணூல் அணிவது போல). அங்கு அவருக்குப் பூமாலை அணிவிப்பர். தோழனுக்கும் இதே போல் உடை உடுத்தி தலைப்பாகையும் உத்தரியமும் இட்டு மணமகனோடு அழைத்து வருவர். தோழன் மணமகனின் இடப் பக்கமாக நிற்பார்.
மணமகன் புறப்படுதல்
----------------------------------------------
வீட்டைவிட்டுப் புறப்படும் முன் வாச லில் இரு சுமங்கலிப் பெண் கள் ஆரத்தி எடுப்பார்கள். மாப்பிள்ளையோடு தோழி (மாப்பிள்ளை யின் திருமணமான பெண் தோழியானவள் திருமணச் சடங் கில் முக்கிய பங்கு வகிப்பதால் நடை முறைகளை நன்கு தெரிந்த சுங்கலிப் பெண்ணையே அமர்த்தவேண்டும்). தோ ழன் (பெண்ணின் சசோதரன் அல்லது உறவு முறையில் உள்ள ஒரு ஆண் அநேகமாகத் திருமணமாகாதவராக இருக்கவேண்டும்). அவருடன் உற்றார் உறவினர்கள் திருமண மண்டபத்திற் குச் செல்வர். செல்லும்போது தோழி கூறைத்தட்டும் வேறு இரு பெண்கள் 3 தேங்காய் வைத்த தட்டமும் 3 அல்லது 5 பலகாரங்கள் கொண்ட ஒரு தட்டமும் எல்லாமாக 3 அல்லது 5 தட்டங்கள் கொண்டு போக வேண்டும். அலங்கரிக்கப்பட் ட வாகனத்தில் செல்வர்.

திருமணம் ================ பாகம்--4

திருமணம்    பாகம்--4
================


 பலகாரத் தட்டம்
----------------------------------
அரியதரம், அச்சுப்பலகாரம், பயற்றம் உருண்டை, வெள் ரொட்டி, சிற்றுண்டி போன்ற வை.
தேங்காய்த் தட்டம்
----------------------------------
3 முடியுள்ள தேங்காய்களுக்கு ச் சீவி மஞ்சள் பூசி வைக்க வே ண்டும்.
கூறைத்தட்டம்
-------------------------------
ஒரு பெரிய தட்டில் நெல் அல்லது பச்சையரிசி பரப்பி அதன் மேல் கூறைச்சேலை, சட்டை, வெற்றிலை 5 முழுப்பாக்கு, 3 கஸ்தூரி மஞ்சள், 1 குங்குமம் (டப்பி), 1 தேசிக்காய், 1 வாழைப்பழச் சீப்பு, 1 கொண்டைமாலை, அலங்காரப் பொருட்கள் முதலிய சாதனங்கள் சீப்பு, கண்ணாடி, ப்வுடர், வாசனைத்திரவியம், சவர்க்காரம் (சோப்) முதலியன. தாலிக்கொடியோடு மெட்டி1 சோடி ஆகியன வைக்க வேண்டும்.
பெண் புறப்படுதல்
-------------------------------------
பெண் வீட்டில் பெண்ணிற்கு அதே போல் அறுகு, காசு, பால் தலை யில் வைத்து நீராட்டி (ருது சாந்தி செய்யாத பெண்ணாகில் அன்று அல்லது முந்தைய நாளில் ருது சாந்தி செய்யவேண்டும்), மணப் பெண் போல் அலங்கரித்து மண்டப த்திற்கு அழைத்துச் செல்ல வேண் டும். மணப்பெண்ணோடு ஒரு தட் டில் கோயிலில் அர்ச்சனை செய்யத் தேவையான பொருட்களை அடுக்கி எடுத்துச் செல்ல வேண்டும். மண்ட பத்தில் பெண் அவருக்கென்று கொ டுக்கப்பட்ட அறையில் இருக்கவே ண்டும்.
அர்ச்சனைக்குரிய பொருட்கள்: வெற்றிலை, பாக்கு, தேங்காய், பழங்கள், பூக்கள்
மாப்பிள்ளை அழைப்பு
--------------------------------------
மாப்பிள்ளை மண்டபத்திற் கு வந்தவுடன் அவரை பெண் வீட்டார் மேளதாளத்தோடு வரவேற்பர். அங்கு தோழன் மாப்பிள்ளையின் காலைக் கழுவிவிடுவார். அதற்கு உப காரமாக மாப்பிள்ளைத் தோ ழனுக்கு மோதிரம் ஒன்றை அணிவிப்பார். பின் பெண் ணின் தகப்பன், மாப்பிள்ளை க்கு மாலை சூடி வரவேற்பார். இரு சுமங்கலிப் பெண்கள் ஆரத்தி எடுப்பர். பின் தோழன், மாப்பிள்ளையின் கைகோர்த்து அவரை வலமாக மணவறைக்கு அழைத்துச் செல்வார் (கும்பத்திற்கு வலது பக்கம்).
மணமகன் மணவறைக்கு வந்தவு டன் தொடங்கும் திருமணச் சட ங்கு புரோகிதரின் தலைமையில் நடை பெறும்.
கிழக்கு நோக்கியிருக்கும் மணவறை யில் தோழன் மணமகனுக்கு இட ப்பக்கத்தில் அமருவார். மணவறை யில் நெல் பரவி அதன் மேல் கம் பளம் விரித்து மணமகனை இருத்து வதுதான் மரபு. கிரி யை செய்யும் குருக்கள் மணவறையின் வலது பக்கத்தில் வடக்கு நோக்கியிருப்பார். மணமகனுக்கு திருநீறு கொடுத்து பவித்திரம் கொடுத்து வலக்கை மோதிரவிரலில் விநாயகர் பூஜை பஞ்ச கௌவிய பூஜை ஆகிய வற்றை மந்திர உச்சாடனத்துடன் செய்வர்.
பவித்திரம் வலது கை மோதிர விரலில் அணியவேண்டும். இந்தச் சடங்கு முடியும் வரை ஒரு குற்றமும் வராமலிருக்கவும் மனம், வாக்கு, காயங்களினால் வர த்தக்க பாவங்களினின்று காக்கவும் பவித்திரம் அணி யப்படுகின்றது. பஞ்சகௌவி யத்தை அவ்விடத்தில் சுற்றி த் தெளிந்து அதனைப் பரு கும்படி மணமகனின் அக மும் புறமும் சுத்தியடையும் என்பதாலும் இவை செய்ய ப்படுகின்றன. இதனை புண் ணியாகவாசனம் என்பர்.

சுப முகூர்த்த நிர்ணய விதிகள்-

சுப முகூர்த்த நிர்ணய விதிகள்-

 சுப நிகழ்வுகளுக்கான சுப முகூர்த்தத்தை நிர்ணயம்
செய்யும்போது கீழ்கண்ட 21 விதிகளை அவசியம் கடைபிடிக்கவேண்டும் என கால
விதானம் எனும் நூல் கூறுகிறது.
1.உல்கா:
சூரியன் நின்ற நட்சத்திரத்திலிருந்து 19 வது நட்சத்திரம் உல்கா
எனப்படும்.இதில் சுப முகூர்த்தம் கூடாது.
2.பூகம்பம்:
சூரியன் நின்ற நட்சத்திரத்திலிருந்து 9வது நட்சத்திரம் பூகம்பம்
எனப்படும்.இதுவும் சுபமுகூர்த்தத்திற்கு ஆகாது.
3.உபாகம்:
சூரிய கிரகணம்,சந்திர கிரகணம் ஏற்படும் நாளும் அதற்கு முன் மூன்று
நாட்களும்,பின் மூன்று நாட்களும் சுப முகூர்த்தத்திற்கு ஆகாத நாட்கள்.
4.குளிகன்(அ)மாந்தி:
ஒவ்வொரு நாளிலும் குளிகன் அல்லது மாந்தி உதயமாகும் நேரத்திற்குறிய
லக்னத்தில் முகூர்த்தம் வைக்கக்கூடாது.
5.சஷ்டாஷ்டம அந்திய இந்து:
முகூர்த்த லக்னத்திற்கு 6-8-12-ல் சந்திரன் இருக்கக்கூடிய காலம்
முகூர்த்தத்திற்கு ஆகாது.
6.அசத் திருஷ்டம்:
முகூர்த்தம் வைத்துள்ள நேரத்திற்கு உரிய லக்னத்தை பாபக்கிரகங்களான
சூரியன்,செவ்வாய்,சனி,ராகு,கேது ஆகியோர் பார்க்கக்கூடாது.அவ்வாறு
பாபக்கிரகங்கள் பார்க்கும் லக்னத்தில் முகூர்த்தம் வைக்கக்கூடாது.
7.அசத் ஆரூடம்:
பாபக்கிரகங்கள் அமர்ந்துள்ள ராசியில் முகூர்த்த லக்னம் அமைக்கக்கூடாது.
8.அசத் விமுக்தம்:
பாபக்கிரகங்களாகிய சூரியன்,செவ்வாய்,சனி,ராகு,கேது ஆகியோர்
அமர்ந்திருந்து பெயர்ச்சியான ராசியில் முகூர்த்த லக்னம்
வைக்கக்கூடாது.எனினும் இந்த ராசியில் சந்திரன் அமர்ந்திருக்குமானால் அந்த
தோஷம் பரிகாரமடைகிறது.
9.சித த்ருக்:
சுக்கிரன் பார்க்கும் ராசியை முகூர்த்த லக்னமாக அமைப்பது தோஷம்.ஆயினும்
சாந்தி முகூர்த்தத்திற்கு இந்த விதி பொருந்தாது.
10.சந்தியா காலம்:
சூரிய உதயத்திற்கு முன் இரண்டு நாழிகையும்(48 நிமிஷம்),சூரிய அஸ்தமனம்
அடைந்த பின் இரண்டு நாழிகையும் சந்தியா காலம் எனப்படும்.இதில் சுப
முகூர்த்தம் வைக்கக்கூடாது.
11.கண்டாந்தம்:
அஸ்வினி,மகம்,மூலம் ஆகிய நட்சத்திரங்களின் முதல் பாதமும்
ஆயில்யம்,கேட்டை,ரேவதி ஆகிய நட்சத்திரங்களின் நான்காம் பாதமும்
கண்டாந்தமாகும்.இதில் சுப முகூர்த்தம் வைக்கக்கூடாது.
12.உஷ்ணம்:
பின்வரும் நட்சத்திரங்கள் தொடங்கியது முதல் அதில் கொடுக்கப்பட்டுள்ள
நாழிகை வரை உஷ்ண காலமாகும்.இதில் சுப முகூர்த்தம் வைப்பது தோஷமாகும்.
A.அஸ்வினி,ரோகிணி,புனர்பூசம்,மகம்,ஹஸ்தம்(7.30 to 15)
B.பரணி,மிருகசீர்ஷம்,பூசம்,பூரம்,சித்திரை(55 to 60)
C.கிருத்திகை,திருவாதிரை,ஆயில்யம்,உத்திரம்,சுவாதி(21 to 30)
D.விசாகம்,மூலம்,திருவோணம்,பூரட்டாதி(0 to 6)
A.அஸ்வினி,ரோகிணி,புனர்பூசம்,மகம்,ஹஸ்தம்(7.30 to 15)
B.பரணி,மிருகசீர்ஷம்,பூசம்,பூரம்,சித்திரை(55 to 60)
C.கிருத்திகை,திருவாதிரை,ஆயில்யம்,உத்திரம்,சுவாதி(21 to 30)
D.விசாகம்,மூலம்,திருவோணம்,பூரட்டாதி(0 to 6)
E.அனுஷம்,பூராடம்,அவிட்டம்,உத்திரட்டாதி(52 TO 60)
F.கேட்டை,உத்திராடம்,சதயம்,ரேவதி(20 TO 30)
13.விஷம்:
தியாஜ்ஜிய காலமே விஷம் எனப்படும்.இதிலும் சுப முகூர்த்தம் கூடாது.
14.ஸ்திர கரணம்:
சகுனி,சதுஷ்பாதம்,நாகவம்,கிம்ஸ்துக்னம் ஆகிய நான்கும் ஸ்திர
கரணங்களாகும்.இதிலும் முகூர்த்தம் கூடாது.
15.ரிக்தை:
சதுர்த்தி,நவமி,சதுர்தசி இவை ரிக்தை எனப்படும்.இதுவும் விலக்கத்தக்கதே
16.அஷ்டமி:
அஷ்டமியிலும் முகூர்த்தம் கூடாது.தேய்பிறை அஷ்டமி சுபம் என்பது சிலர் கருத்து.
17.லாடம்:
சூரியன் நின்ற நட்சத்திரத்திலிருந்து மூல நட்சத்திரம் வரை எண்ணி வந்த
தொகையை பூராடம் முதல் எண்ணினால் கிடைக்கும் நட்சத்திரம் எதுவோ அதுவே லாட
நட்சத்திரமாகும்.இதிலும் சுபத்தை விலக்கவும்.
18.ஏகார்க்களம்:
அன்றைய சூரிய ஸ்புடத்தை 360 பாகையிலிருந்து கழித்து வரும் ஸ்புடத்திற்கு
உதய நட்சத்திரத்திலிருந்து 1,2,7,10,11,14,16,18,20 ஆகிய நட்சத்திரங்கள்
ஏகார்க்களம் ஆகும்.இதிலும் சுபத்தை விலக்கவும்.
19.வைதிருதம்:
சூரியன் நின்ற நட்சத்திரத்திலிருந்து 14 வது நட்சத்திரம் வைதிருதம்
ஆகும்.இதிலும் சுபத்தை விலக்கவும்.
20.அஹிசிரசு:
வியதீபாத யோகத்தின் பிற்பகுதி அஹிசிரசு எனப்படும்.இதிலும் சுபத்தை விலக்கவும்.
21.விஷ்டி:
வளர்பிறை அஷ்டமி,ஏகாதசியில் 6 முதல் 12 நாழிகை வரையிலும் பௌர்ணமியில்
18முதல் 24 நாழிகை வரையிலும் சதுர்தசியில் 24முதல் 30 நாழிகை வரையிலும்,
தேய்பிறை திருதியையில் 30முதல் 36 நாழிகை வரையிலும் சப்தமியில் 12முதல்
18 நாழிகை வரையிலும் தசமியில் 42முதல் 48 நாழிகை வரையிலும் சதுர்தசியில்
முதல் 6 நாழிகை வரையும் விஷ்டி எனப்படும்.இதிலும் சுபத்தை விலக்கவும்.
1.அம்ஹஸ்பதி:
ஒரு மாதத்தில் இரண்டு அமாவாசைகள் ஏற்படுமாயின் அது அம்ஹஸ்பதி
எனப்படும்.இதனை அதிமாதம் என்றும் சொல்லுவர்.இந்த மாதத்தில் முகூர்த்தம்
செய்யக்கூடாது.
ஆனால் சித்திரை,வைகாசி மாதங்களுக்கு இந்த தோஷம் இல்லை.
2.மலமாதம்:
ஒரு மாதத்தில் இரண்டு பௌர்ணமிகள் ஏற்பட்டால் அது மலமாசம் எனப்படும்.இந்த
மாசத்திலும் சுப முகூர்த்தம் செய்யக்கூடாது.
ஆனால் சித்திரை,வைகாசி மாதங்களுக்கு இந்த தோஷம் இல்லை.
3.சமசர்ப்பம்:
அமாவாசையே நேரிடாத மாதம் சமசர்ப்பம் எனப்படும்.இந்த மாதத்திலும் சுப
முகூர்த்தம் கூடாது.
4.திர்சியதாஹி குரு சிதயோஹோ:
சங்கவ காலமென்று சொல்லக்கூடிய சூரியன் உதித்து 6முதல் 12நாழிகைக்குள்
குரு,சுக்கிரர் தோன்றும் காலம் முகூர்த்தத்திற்கு கூடாது.
5.குரு,சுக்கிர மௌட்யம்:
குருவும்,சுக்கிரனும் அஸ்தமனம் அடைந்துள்ள காலம் சுப முகூர்த்தம்
வைக்கக்கூடாது.(ஒன்று அஸ்தமனமாகி மற்றது நட்பு,ஆட்சி,உச்சம்
பெற்றிருந்தால் அது தோஷமில்லை)
6.குரு சுக்கிர மிதோ திருஷ்டி:
குருவும் சுக்கிரனும் பரஸ்பரம் ஒருவரை ஒருவர் பார்த்துகொள்ளும் காலம்
முகூர்த்தத்திற்கு உகந்த காலம் அல்ல.மேலும்
கீழ்கண்ட கிழமைகளுக்கு எதிரில் கொடுக்கப்பட்டுள்ள திதி,நட்சத்திரங்கள்
அமையுமானால் அந்த நாளில் திருமணம் முதலிய சுப காரியங்களை செய்யக்கூடாது.
A.ஞாயிறு-பரணி
திங்கள்-சித்திரை
செவ்வாய்-உத்திராடம்
புதன்-அவிட்டம்
வியாழன்-கேட்டை
வெள்ளி-பூராடம்
சனி-ரேவதி
B.ஞாயிறு-பஞ்சமி&கிருத்திகை
திங்கள்-த்விதீயை&சித்திரை
செவ்வாய்-பௌர்ணமி&ரோகினி
புதன்-சப்தமி&பரணி
வியாழன்-த்ரயோதசி&அனுஷம்
வெள்ளி-ஷஷ்டி&திருவோணம்
சனி-அஷ்டமி&ரேவதி
C.ஞாயிறு-பஞ்சமி&அஸ்தம்
திங்கள்-ஷஷ்டி&திருவோணம்
செவ்வாய்-சப்தமி&அஸ்வினி
புதன்-அஷ்டமி&அனுஷம்
வியாழன்-திருதீயை&பூசம்
வெள்ளி-நவமி&ரேவதி
சனி-ஏகாதசி&ரோகினி
D.ஞாயிறு-சதுர்த்தி
திங்கள்-சஷ்டி
செவ்வாய்-சப்தமி
புதன்-த்விதீயை
வியாழன்-அஷ்டமி
வெள்ளி-நவமி
சனி-சப்தமி .. .

திருமணம்- பாகம்--5

திருமணம்-   பாகம்--5

 அரசாணிக்கல்
முற்காலத்தில் திருமண வைபவங்களுக்கு அரசனுக்கும் அழைப் பிதழ் அனுப்புவார்கள். அரசனுக்கும் எல்லாத் திருமணங்களுக்கும் செல்ல முடியாத நிலை இருக்கும். எனவே அவர் தனது ஆணை க்கோலை அனுப்பி வைப்பார். அரசு ஆணைக்கோல் மருவி அரசாணைக்கால் ஆகிவிட்டது. இன்று பதிவுத் திருமணம் போல் அன்று ஆணைக்கோல் வந்துவிட்டால் அரசனால் அங்கீகரிக்கப் பட்டது. ஆகவே அத்திருமணம் அங்கீகாரம் பெற்றுவிடுகிறது. இதுவே இன்று திருமணப் பந்தலில் கலியாண முருங்கை மரக் கிளை ஒன்றை வைத்து அதற்கு பட்டுச்சாத்தி அலங்கரித்து வைப் பர்.
அங்குரார்ப்பணம்
வித்திடுதல் என்று அர்த்தம். அதாவது முளைக்கும் விதைகளை பாலிகையிடல் என்பது. சந்திர கும்பத்தை பூசித்து அதற்கு முன் பாக இருக்கும் மண் சட்டி யில் 3 அல்லது 5 சும ங்கலிப் பெண்களை கொண்டு நவதானியம் இட்டு தண்ணீர் தெளித்து புஷ்பம் சாத்தி பூசைகள் செய்வது. இதன் அர்த்தம் நவதானியம் செழித்து வளர் வது போல இத் தம்பதிகளின் வாழ்வும் செழுப்புடையதாக அமைய வேண்டும் என்பதற்காக இப்பூஜை செய்யப்படுகின்றது. அப்பெண் களுக்கு வெற்றிலையில் பழம், பூ வைத்து உபசாரம் செய்தனுப் புவார்கள். அதன்பின் கற்பூரம் காட்டப்படும். (முன்பே பாலிகை போட்டிருந்தால் தண்ணீர் மட்டும் தெளித்தால் போதுமானது)
இரட்சாபந்தனம் (காப்புக்கட்டல்)
காப்புக்கட்டல் தொடங்கிய கருமம் நிறைபெறும் வரை எந்தவித தீட்டுக்களோ இடையூறுகளோ துக்கங்க ளோ மணமக்களைச் சாரா திருக்க வேண் டிய பாதுகாப்புக் கருதி செய்யப்படுவது. (கால மிருத்து அவமிருத்து போன்ற அபாயங்களில் இருந்து காப்பாற்ற வும்). சர்வரோகம் அணுகாமலும், பீடை, பிணி அணுகாமலும் இருக்கவேண்டி விவாகச் சடங்குகள் இனிதே நடைபெறவும் கட்டப் படுவது நூல் காப்புக் கட்டுதல் ஆகும்.
இதற்கு ஒரு தாம்பாளத்தில் அரிசி பரப்பி தேங்காய், வெற்றிலை, பாக்கு, பழம் காப்பு நூல் முதலியவற்றை வைத்து பூசித்து மாப்பிள் ளையின் வலது மணிக்கூட்டில் காப்புக் கட்டுவார்கள் காப்புக் கட்டும்போது மாப்பிள்ளை வீட்டார் ஒரு தேங்காய் உடைப்பார்கள். பின்னர் குருக்கள் சிவன், பார்வதி பூசை முதலியவற்றை மந்திர உச்சாடனத்துடன் செய்வர் (பின்னர் அக்கினி மூட்டப்பட்டு அதற்குரிய பூசை வழிபாடுகள் நடைபெறும்) முகூர்த்தோஷம், லக்கினதோஷம் போன்ற் தோஷங்கள் நீக்கும் பொருட்டும் இத் திருமணத்தின் போது நல்ல ருள் புரியவேண்டுமென நவக்கிரக தேவர்களு க்காக அமைக்கப்பட்டுள்ள கும்பங்களிற்கும் பூஜை செய்வார்கள். அதன்பின் அரசாணி மரத் திற்கும் அதன் நாலு பக்கங்களி லும் உள்ள கும்பங்களிற்கும் பூஜை செய்வர்.
மணமகளை அழைத்தல்
மணமகளை (பட்டாடை அணிந்து, அணி கலன் கள் பூண்டு முகத் தை மெல்லிய திரை யால் மறைத்த வண்ணம்) தோழிகள், மண மகளின் பெற்றோர் மற்றும் உறவினர் புடைசூழ மணமேடைக்கு அழைத்து வருவர். மண மக னுக்கு வலப்பக்கத்தில் பெண்ணை அமரச்செய்வர். மண மகனி ற்குச் செய்யப்பட்ட அத்தனை பூசைக ளும் இவருக்கும் செய்யப் படும். பவித்திரம் இடது கைமோதிரவிரலில் அணிவித்து ரட்சா பந்தனம் இடக்கை மணிக் கட்டில் கட்ட ப்படும். பெண் வீட்டார் ஒருவர் தேங்காய் உடைப்பார். பின் னர் இரு வரின் பெற்றோர் களை அழைத்து மணமகளின் பெற் றோர்கள் பெண்ணின் வலப் பக்கத்திலும் மண மகனின் பெற்றோர் மண மகனின் வலப்பக்கத்திலும் கிழக்கு நோக்கி அமர்வர். இவர்களும் குருக்கள், பவித்திரம், விபூதி கொடு த்து சங்கல்பம் செய்வித்து இரு வழியிலும் பிதுர்தோஷம் நீங்க வும் இரண்டு (நாந்தி தானம்) கொடுத்து பிதிரரின் ஆசியைப் பெறச்செய்வர். பின் கன்னிகா தானக் கிரியைகளை ஆரம்பிப்பார்.
தாலி கட்டுதல்
கூறை உடுத்தி வந்த மணமகள் மீண்டும் மணமகனின் வலப் புறத் தில் கிழக்கு நோக்கி அமர்வார். குறித்த சுபமுகூர்த்ததில் மண மகன் எழுந்து மணமகளின் வல ப்புறம் சென்று வடக்கு நோக்கி நின்று இறைவனைத் தியானித்து குருக்கள் ஆசிர்வதிதுக் கொடுக் கும் மாங்கல்யத்தை இரு கரங்க ளால் பற்றி கெட்டிமேளம் முழ ங்க, வேதியர் வேதம் ஓத, மாப்பிள்ளை வீட்டார் ஒருவர் தேங்காய் உடைக்க, பெரியோர் அட்சதை மலர்கள் தூவ, ஒரு பெண் பின்னால் தீபம் பிடிக்க மணமகன் மேற்கு திசை நோக்கி திரும்பிப் பெண் ணின் கழுத்தில் திருமாங்கல்யம் பூட்டுவார். அப்போது சொல்லப்படும் மந்திரம்
“மாங்கல்யம் தந்துநாநேந மம ஜீவனஹேதுநா கண்டே பத்தாமி ஸூபகே ஸஞ்ஜிவச ரதசதம்”
‘ஓம்! பாக்கியவதியே’ யான் சீர ஞ்சீவியாக இருப்பதற்கு காரண மாக மாங்கல்யத்தை உன் கழு த்தில் கட்டுகிறேன். நீயும் நூறாண்டு வாழ்வாயாக என்று குருக்கள் கூறும் மந்திரத்தை மனதில் கொண் டு தாலி முடிச்சில் திருநீறு இட்டு தனது இடத்தில் இருக்க வேண் டும். மணமகளின் உச்சந் தலையில் குங்குமத்தில் திலகமிட வே ண்டும்.
தாலி – தாலியில் சிவலிங்கம், விநாயகர் அல்லது லட்சுமியின் திருவுருவம் அமைத்தல் நல்லது. கொடியும், தாலியும் அதன ருகில் கோத்திருக்கும் இரு தங்க நாணயங்கள் சேர்த்து (9, 11, ….) என்ற ஒற்றை எண் வரக்கூடிய அளவு பவுணில் செய்யவேண்டும். தாலிக்கொடியில் சேர்க்கப்படும் தங்கநாணயம் ஆங்கில நாண யமாக இருக்கவேண்டும் என்ற நியதியில்லை. அந்த நாணயத்தில் கடவுளின் உருவங்களுக்கு விருப்பத்திற்கேற்ப அமைக்கலாம்.


திருமண முகூர்த்த நேரம் குறிப்பது எப்படி?

திருமண முகூர்த்த நேரம் குறிப்பது எப்படி?

திருமணம் செய்வதற்கு ஒரு ஆணும் பெண்ணும் எப்படி அவசியமோ, அதே போலத் தான் முகூர்த்த நாள் குறிப்பதும் முகூர்த்தம் என்பது மூனே முக்கால் நாழிகை( ஒன்றரை மணி நேர அளவுள்ள காலமாகும்).ஒரு குழந்தையின் எதிர்காலம், ஆரோக்கியம், புகழ், ஆயுள் போன்றவற்றைப் பார்க்க எப்படி குழந்தையின் ஜனன ஜாதகம் அவசியமோ அதே போல முகூர்த்த நாள் மற்றும் நேரம் பார்ப்பது அவசியமாகும்....
மணமக்களின் ஜாதகங்களில் ஒரு சில குறைகள் இருந்தாலும் இந்த முகூர்த்த நேர லக்னம் நன்கு அமையுமானால் அந்தக் குறைகள் காணாமல் போய்விடும்.குருபகவான் அவரவர் ஜென்ம ராசிக்கு 2, 5, 7, 9, 11 ம் இடங்களில் பிரவேசம் செய்யும் போது குரு பலம் ஏற்படும்.திருமணத்திற்கு ஒருவருக்கு குருபலமோ,விதியோ இருந்தால் போதும்.மணமக்கள் இருவருக்கும் குருபலம் இல்லாத சமயத்தில் இவர்களுக்கு சுக்ரன், அல்லது 2, 7, 11 ம் அதிபதிகளின் தசாபுக்திகள் நடந்தாலும் திருமணம் செய்விக்கலாம்.
வைகாசி, ஆனி, ஆவணி மற்றும் தை, ,பங்குனிமாதங்ளை தேர்வு செய்து இவைகளில் மலமாதம் இல்லாத மாதத்தை தேர்ந்தெடுக்க வேண்டும்.வளர்பிறையின் துவிதியை, திரிதியை, பஞ்சமி, சப்தமி மற்றும் திரயோதசி உள்ள நாட்கள் சிறப்பானவை.இரு கண்ணுள்ள நாட்களான புதன், வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகள் சிறந்தது. ஒரு கண்ணுள்ள நாட்களான ஞாயிறு மற்றும் திங்கள் பாதி சிறந்தது. குருட்டு நாட்களான செவ்வாய் சனியை தவிர்ப்பது நல்லது.
அக்னி ராசிகளான சிம்மம் மற்றும் மேசம் முகூர்த்த லக்னமாக இல்லாமல் இருப்பது சிறப்பு.முகூர்த்த லக்னத்திற்க்கு ஏழாமிடம் சுத்தமாக இருப்பின் நல்ல கணவன் மனைவி அமையும்எட்டாம் இடம் சுத்தமாயின் நீடித்த திருமணபந்தம். 12ம் இடம்
சந்தோசத்தை குறிக்கின்றது. ஆக 2,7,8ம் இடங்கள் சுத்தமாக இருக்க வேண்டும் மற்றும் எட்டாம் இடத்தை குரு அல்லது சுக்ரன் பார்க்கலாம். இந்த இடங்களில்இவர்கள் யாரும் இருக்கக்கூடாது.
சில பொதுவான சந்தேகங்களும் விளக்கங்களும்
1. பிறந்த நாளில் திருமணம் செய்யலாமா?
பிறந்த நாள் என்பது இங்கு நட்சத்திரத்தையே குறிக்கும் சிலர் ஆங்கிலத்தேதியையும், அல்லது கிழமையையும் நாள் என்று தவகறாகப்புரிந்து கொள்கின்றனர்.
2.பிறந்த நட்சத்திரத்தில் முகூர்த்தம் வைக்கலாமா?
மணப்பெண்ணின் ஜென்ம நட்சத்திரத்தில் முகூர்த்தம் வைக்கலாம். முகூர்த்தங்களுக்கு உகந்த நட்சத்திரமாய் இருப்பினும் மணமகனின் ஜன்ம, ஜன்மானு, திரிஜென்ம நட்சத்திரங்களில் முகூர்த்தம் வைக்கக்கூடாது. அதாவது பிறந்த ஜென்ம நட்சத்திரம் அதற்கு ஒன்பதாம் நட்சத்திரம், அதற்கு ஒன்பதாம் நட்சத்திரம். கீழ்வரும் பட்டியல் மூலம் அதனை எளிதில் தெரிந்தப கொள்ளலாம்.(உதாரணமாக மணமகனின் நட்சத்திரம் மகம் எனில் மூலம், அசுவனி ஆகியவை முறையே ஜென்மானு, திரிஜென்ம நட்சத்திரங்களாகும்)
அசுவனி -- மகம் -- மூலம்
பரணி் ---- பூரம்---- பூராடம்
கார்த்திகை---- உத்திரம்--- உத்திராடம்
ரோகிணி்---- அஸ்தம்----- திருவோணம்
மிருகசீரிஷம்----- சித்திரைம்----- அவிட்டம்
திருவாதிரை---- சுவாதி்---- சதயம்
புனர்பூசம்---- விசாகம்---- பூரட்டாதி்
பூசம்---- அனுசம்----- உத்திரட்டாதி்
ஆயில்யம்---- கேட்டை--- ரேவதி்
3. திருமணத் தேதி குறித்தபின்ப வயதானவர்கள் யாராவது இறந்து விட்டால் திருமணம் வைக்கலாமா?
திருமணத்தைக் குறித்த முகூர்தத்திலேயே தாராளமாக செய்யலாம். இறப்பு நிகழ்ந்த வீட்டில் திருமணத்தைத்தவிர வேறு சுபகாரியங்கள் செய்யக்கூடாது என்பது விதி.
4. நாட்காட்டிகளில் குறிக்கப்பட்டிருக்கும் முகூர்த்தங்களை எல்லோரும் பயன்படுத்தலாமா?
பொதுவாக இப்பொழுது எல்லா நாட்காட்டிகளிலும் முகூர்த்த நாட்கள் குறிக்கப்படாடுள்ளன, முன்கூட்டியே திருமணமண்டபத்தை பதிவு செய்வதற்கு அம்முகூர்த்தங்களையே பலர் பின்பற்று கின்றனர், மணமக்களுக்கு சந்திராஷ்டமி நாளாக அமைகிறதா, முன்பு கூறியபடி மணமகனுக்கு கற்பு நாள் என்று கூறப்படும் ஜன்ம,ஜென்மானு,திரிஜென்ம நட்சத்திரமாக அமைகின்றதா என்று ஜோதிடரிடம் கேட்டு அறிந்து கொள்வது நல்லது. மேலும் நாட்காட்டிக்கு முகூர்த்தங்களைக் குறித்துத்தருவோர், சில சிறப்பு விதிகளை அனுசரித்துக் குறிப்பதில்லை என்பது எல்லா ஜோதிடர்களும் ஏற்றுக்கொண்ட கருத்து. முகூர்த்த லக்கினத்திற்கு 7ஆம் வீட்டில் எந்த கிரகமும் இருக்கக்கூடாது, 8இல் குரு இருக்கக்கூடாது, குரு, சுக்கிரர் அஸ்தமன காலத்தில் முகூர்த்தம் வைக்கக்கூடாது எனப்பல விதிகள் உள்ளன அவைகளையும் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். எனவே நாட்காட்டி முகூர்த்தங்களைப் பயன்படுத்தும் முன் ஜோதிடரை ஆலோசிப்பது நல்லது.
5.தவிர்க்க முடியாத காரணத்தால் சுபமுகூர்தம் இல்லாத நாளில் திருமணம் செய்யவேண்டிய நிலை வந்தால் அல்லது குறித்த முகூர்த்த லக்கினத்தில் தாராமுகூர்த்தம் செய்யமுடியாது போகும் பட்சத்தில் என்ன செய்வது?
அவ்வாறான நேரத்தில் வினாயகருக்கு பால் அபிஷேகம் செய்து காலதோசத்தால் தீயபலன்கள் வராமல் காத்து அருளவேண்டும் என வேண்டிக்கொள்ளலாம், குலதெய்வத்தின் கோவிலுக்குச்சென்று பூஜிப்பதும் நல்லது மேலும் சாந்திமுகூர்த்தத்தை நல்ல நாளில் வைத்துக்கொள்ளவும் வேண்டும்.
6. எந்த கிழமை திருமணத்திற்கு உகந்தது?
வியாழக்கிழமை சிறப்பானது, புதன், திங்கள்,வெள்ளி கிழமைகள் உடன் நடைமுறையில் ஞாயிற்றுக்கிழமையும் ஏற்றுக் கொள்ளப்பட்டது, சனி, செவ்வாய்க்கிழமைகள் விலக்கப்பட்டன.
7.. 8ஆம் தேதி, 13,28 ஆம் தேதி மற்றும் கூட்டுத்தொகை 8 வரும் நாட்களில் திருமணம் செய்தால் பாதிப்பு ஏற்படும் என சில எண்கணித நிபுணர்கள் சொல்கிறார்களே?
பொதுவாக மக்களின் நம்பிக்கையை தங்கள் வியாபாரத்திற்கு பயன் படுத்துவோர் அவ்வறு கூறவார்கள் , இன்று நாம் பயன் படுத்தும் கிரிகோரியன் நாட்காட்டி விவிலியம் எனும் பைபிலை அடிப்படையாகக்கொண்டு கணிக்கப்பட்ட நாட்காட்டி, அதற்கு முன் வழக்கில் இருந்த ஜுலியஸ்சீசரின் நாட்காட்டியில் கிரிகோரியன் எனும் போப்பாண்டவர் மாற்றங்கள் செய்து வெளியிட்ட நாட்காட்டியாகும் இன்நாட்காட்டிக்கும் நம் பாரம்பரியம் மிக்க சூரியசித்தாந்த பஞ்சாங்கத்திற்கும் தொடர்பு துளியும் இல்லை, ஆங்கிலத்தேதிக்கும் உச்சமாக இருக்கும் இன்றைய நட்சத்திரம் முதலியவற்றிற்கு எவ்விதசம்பந்தமும் இல்லை, வழக்கமாக மேனாட்டுப்பழக்கங்க வழக்கங்களை கைகொள்ளுதல் நாகரீகமாக பகட்டுக்கு ஏற்றுக்கொள்வது போல சிலர் நம் ஜோதிட சாஸ்திரத்தில் கலக்குகிறார்கள் இது மனதிற்கு ஊக்கம் தருவதற்காக என்றும் அவர்களே(வாடிக்கையாளர்கள் விரும்புகிறார்கள்) என்றும் ஆங்கில எழுத்திற்கும் எண்கணிதம் என்ற பெயரில் எண்களைக்கொடுத்து அதை நம் நாட்டு சாஸ்திரத்துடன் கலந்து குழப்புகிறார்கள், பாலுடன் தேனைக்கலப்பதற்கும் மதுவைக்கலப்பதற்கும் வேறுபாடு அறியாதவர்களாக அவர்களைக்கொள்ள வேண்டி இருக்கிறது, நம் சாஸ்திரத்தை விட்டு விட்டு மேனாட்டு எண்கணித முறை என்று கூறினால் சீனவாஸ்து பெங்சூயி ஏற்றுக்கொள்வதைப்போல் வேண்டுமானால் ஏற்கலாம், ஆனால் உலகின் இளைய மொழிகளில் ஒன்றான ஆங்கில மொழிக்கும் நம் கிரககோச்சார உடுமகதசை போன்றவைகளுக்கும் தொடர்பு படுத்தி பாலில் மதுவைக்கலப்பதை ஏற்க முடியுமா?அப்படியே கூட்டுத்தொகையை கணக்கில் எடுக்க வேண்டும் எனில் ஆங்கிலத்தேதியை கவனத்தில் எடுக்கவேண்டிய அவசியம் இல்லை, மேலும் அன்று தமிழ் தேதி என்னவென்றும் பார்க்க வேண்டாமோ? நம் சுபமுகூர்த்தங்கள், நட்சத்திரம், லக்கினம் லக்கினத்திற்கு 3,6,7,,8,11 ஆகிய இடங்கள், மணமகனின் ஜென்மஜென்மானு,திரிஜென்ம நட்சத்திரங்களை, கவனத்தில் கொண்டு கணிக்கப்படுகிறது என்பதையும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும், ஆங்கிலத்தேதியை வைத்து அந்த நாள் தீயபலன் கொடுக்கும் என்ற தவறான எண்ணத்தைக் கைவிடவும்.

திருமணம் பாகம்--6

திருமணம்    பாகம்--6

 மாலை மாற்றுதல்
மணமகள் எழுந்து வடக்கு நோ க்கி இறைவனை தியானித்து மணமகள் கழுத்தில் மாலை சூட் டுவாள். மணமகள் மண மகளை த் தன் இடப்பக்கத்தில் அமரச் செய்து மாலை சூட்டுவாள். மாலை மாற்று தலின் பொருள் இருமனம் கலந்து ஒரு மனமாகி இல்வாழ்க் கையை ஆரம்பித்தல். மூன்று முறை மாலை மாற்ற வேண்டும்.
தொடர்ந்து கொண்டு வந்த மங்கலப் பொருட்களாகிய மஞ்சள், குங்குமம், பூ, வாசனைப் பொருட்கள், சீப்பு, கண்ணாடி முதலிய வற்றை மணமகன் மணமகளிடம் கொடுப்பார். கணவன் மனைவி யாக ஆனபின் தம் மங்கலக் கோலத்தை இருவரும் கண்ணாடியில் பார்த்து மகிழ்வார்கள்.
பால்பழம் கொடுத்தல்
பால், வாழைப்பழம் கலந்து மணமகள் முதலில் மண மகனுக்கு மூன்று முறை கொடுப்பார். பின் மணமகன் மணமகளுக்கு மூன்று முறை கொடுப்பார். நாயகன் நாயகி உணவு கொள்ளல் மறை வில் செய்யவேண்டும் என்ப தால் திரை ஒன்று முன்னால் பிடிக்கப்படும். முதன் முத லில் தம்பதிகளுக்குக் கொடுக்கும் இனிப்புப் பதார்த்த மாகையால் வாழ்க்கை இனிமையாக இருக்கவேண்டும் என்று உணர்த்தவே இச் சடங்கு.
கோதரிசனம்
இல்லறவாழ்வு தொடங்கும் தம்பதியர் வாழ்விற்கு வேண்டிய அட்ட ஐஸ்வரியங்களையும் வேண்டி பசுவை இலட்சுமிதேவியாக வணங்குவர். பசுவைக் கிழக்கு முகமாக நிறுத்திச் சந்தனம், குங்குமம், புஷ்பம் சாத்தித் தீபாராதனை செய்து வணங்குவர் பசுவின் உடலெங்கும் உறைகின்ற சகல தேவர்கள், முனிவர்கள், தெய்வங்கள் ஆசிர்வாதமும் இதன் மூலம் கிடைக்கும். அரிசி, காய்கறி, தட்சிணை வைத்துத் தானமும் வழங்கவேண்டும்.

பாணிக்கரம் (கைப்பிடித்தல்)
தருமம் செய்வதற்காகவும் சந்ததி விருத்திக்காகவும் திருமணம் செய்யப் படுகின்றது. பாணிக்கிரகணம் என்றால் மணமகளின் கையை மணமகன் பிடி ப்பது என்று பொருள். ‘நீயும் நானும் முதுமையடைந்து விட்டாலும் கூட ஒருவரை ஒருவர் பிரியா திருப்போம் என்று கையைப் பிடிக்கிறேன்’ என்று கூறி மண மகளின் கையைப் பிடிக்கவேண்டும். ஆணின் வலக்கை பெண் ணின் வலக்கையைப் பிடித்தல் வேண்டும். பின்னர் ஏழடி எடுத்து வைத்து அம்மி மிதித்து அக்கினியை வலம் வருவார்கள். வலம் வரும்போது தோழனும் தோழியும் சேர்ந்து வருவார்கள். பஞ்ச பூதங்களின் சாட்சியாக கையைப் பிடிப்பதாக ஒருகருத்து. மண ப்பெண்ணால் ஐம்புலன் களால் செய்ய ப்படும் செயல்கள் கணவனுக்கு மட்டு மே உரியவை. கன்னியின் கையை வரன் கிரகிப்பது என்று பொருள்.
ஏழடி நடத்தல்
பெண்ணின் வல காலை மணமகள் கை களாற் பிடித்து ஏழடி எடுத்து வைக்கும் படி செய்யவேண்டும். ஒவ்வொரு அடி க்கும் ஒவ்வொரு மந்திரம் சொல்ல ப்படும்.
உனக்கும் வாழ்க்கையில் உணவு குறை வில் அளிப்பதற்கு இறைவன் உன்னைப் பின் தொடர்ந்து வரட்டும்.
உடல் வலிமை கிடைக்க இறைவன் பின் தொடரட்டும்
விரத்தை அனுஷ்டிக்கும் பொருட்டு உன்னை இறைவன் பின் தொடர்ந்து வரட்டும்.
சுகமும் மனச்சாந்தியும் கிடை க்க இறைவன் உன்னைப் பின் தொடரட்டும்
பசுக்கள் தூயலான பிராணிகள் பின் தொடர்ந்து வரட்டும்.
சகல சௌபாக்கியங்களும் கிடைக்க பின் தொடர்ந்து வரட்டும்.
உடன் வாழ்வில் இடம்பெறும் சுபகாரியங்கள், ஹோமங்கள் குறை வின்றி நிறைவேற்ற இறைவன் உன்னை பின் தொடர்ந்து வரட் டும். ஏழடிகள் நடந்த நாமிருவர்கள் சினேகிதரானோம். இருவரும் சேர்ந்து அனுபவிப்போம். என்னுடன் கூடவா என்னும் பொருளில் இந்நிகழ்ச்சி அமையும். இதற்கு “ஸ்பத பதி” என்று பெயர்.
அம்மி மிதித்தல்
பெண்ணின் வலதுகாலை (அதாவது எட்டாவது அடி) மணமகன் கையால் தூக்கி அம்மியில் வைத்து பெருவிரலுக்கு அடுத் துள்ள விரலில் மெட்டி வைத்து அணிவிப்பார். இந்தக் கல் லைப் போல் நிலையாக நின்று உன் எதிரிகளைச் சகித்துக் கொள். இது பெண் ணிற்கு கற் பையும் ஆணுக்கு ஒழுக்கத்தை யும் புகட்டுகின்றது. கல் எப்படி எதையும் தாங்குமோ அது போல் வாழ்கையிலும் இன்ப துன்பங்களைக் கண்டு கலங்காமல் உறுதியான கொள்கைகளைக் கடைப்பிடித்து நடக்கவேண்டும் என்று உணர்த்துகிறது.
தொடர்ந்து அக்கினியை வலம் வந்து ஓம குண்டத்தில் நெற் பொரியும் ஓமப்பொருட்களையும் இடுவார்கள். திரும்பவும் இரண் டாம் முறை அக்கினியை வலம் வரும்போது இடக்காலை அம்மி யில் வைத்து மெட்டி அனுவிக்கப்படும். திருமணமான பெண் அவ ளைப் பார்க்கும் இன்னொரு ஆடவன் அவள் திருமணமா னவள் என்பதை உணர்த்த மெட்டி அணிவிக்கப்படுகின்றது.
அம்மி மிதித்தல் தொடர்பான மற்றொரு கருத்து:
மணமக்களிடையே ஊடற்காலத்தில் (சண்டையிட்ட காலத்தில்) சமாதானம் ஆக மனைவியின் காலையும் பிடிக்க வேண்டி வரும். அதற்காகத்தான் மனைவியின் காலை திருமணத்தின் போது அக்கினி சாட்சியாக கணவன் பிடிக்கிறான் என 18 ஆம் நூற்றாண்டு இலக்கியமான திருப்பேருர்ப் புராணம் கூறுகிறது.
கணையாழி எடுத்தல்
மூன்றாம் முறை அக்கினியை வலம் வரும்போது கிழக்குப் பக்கத் தில் வைத்திருக்கும் மஞ்சள் நீர் நிறைந்த பாத்திரத்தில் இருக்கும் தேடி எடுக்கவேண்டும். இது மூன்று முறைகள் நடைபெறும். இருவரும் ஒருவருக்குகொருவர் விட்டுக் கொடுத்து எடுத்தல் வேண்டும். இது தம் வாழ்க்கையிலும் விட்டுக்கொடுத்து வாழ வேண்டும் என்பதை எடுத்துக் காட்டுகிறது.
அருந்ததி பார்த்தல்
மூன்றாம் சுற்றில் அருந்ததி பார்த்தல் நடைபெறும். இரு வரையும் கூட்டிக் கொ ண்டு மண்டபத்தின் வடக்கு வாசலக்கு வந்து வானத்தில் இருக்கும் நடத்திரங்களுக்குப் பூஜை செய்து அருந்ததியைக் காண்பிப்பார்.
“நிரந்தரக் கற்பு நடசத்திரமாக மின்னுவேன்” என்று ஆணையிடுவ தாகும். சப்தரிசிகள் கிருத்திகை எனப்பெயர் கொண்ட தங்கள் மனைவிக்குள்ளே முதலானவளான அருந்தியை எப்படி நிலைத் திருக்கச் செய்ய செய்தார்களோ அப்படி மற்ற ஆறு கிருத்திகைக ளும் அருந்ததியைப் போலிருக்கச் செய்கின்றனர். இந்த அருந்ததியை தரிசனம் செய்தால் என்னு டைய மனைவி எட்டாளவாக வளர்ச்சி பெறட்டும் என்பதேயாகும். இந்த நட்சத்திரத்தைக் காட்டுவ து நல் வாழ்க்கையும் வழத்தையும் பெறுவதற்கே யாகும்.
அருந்ததி வசிட்டரின் மனைவி. சிறந்த பதிவிரதை. வானத்தில் துருவ மண்டலத்திற்கு அருகில் ஏழு நட்சத்திரங்களிற்கிடையில் வசிட்ட நட்சத்திரமும் அதன் அருகில் அருந்ததி இருப்பதாகப் புராணங்கள் கூறுகின்றன.
அருந்ததியோடு சேர்த்து துருவ நடத்திரத்தையும் காட்டுவாள். துருவ நட்சத்திரம் விண்ணில் ஒரு நிலையான இருப்பிடத்தை உடையவராகவும் மற்ற விண்மீன்கள் நிலைத்திருப்பதற்குக் காரண மாகவும் கட்டுத்தறியாகவும் இருப்பதால் எங்களை எதிரிகளிடமி ருந்து காப்பற்றுவீராக என்று தரிசிப்பதாகும். இவர்கள் எம்வாழ்க் கையில் ஒரு வழிகாட்டியாக அமைகிறார்கள். துணைவனைப்போ ல் மணமகனுக்கு ஸ்திரத்தன்மையும் அருந்ததியைப் போல் மண மகளுக்குப் பதிவிரதத்தன்மையும் இருத்தல் வேண் டும்.
பொரியிடல்
அக்கினியை மூன்று முறை வலம் வர வேண்டும். ஒவ்வொரு முறையும் வலம் வந்து மணமக்கள் கிழக்கு நொக்கி நிற்கத் தோழன் நெற்பொரியை குருக்களிடம் இருந்து பெற்று மண மகனின் கையில் கொடுக்க மணமகன் மணமகளின் கையி ல் கொடுத்து மணமகனின் கைகளை தன் கைகளால் தாங்கி ஓம் குண்டத்தில் இடு வார்கள். “அக்கினி பகவானே சகல் செல் வங்க ளையும் எமக்குத் தந்தருள வேண் டும்.”. என வேண்டிக் கொண்டு பொரியிடு தல் வேண்டும். நெல் பொரியாக மலர் வது போல் நம் வாழ்வு மலரவேண்டும் என்பதே தத்துவம்.
மூன்றாம் முறை சுற்றி வந்தவுடன் பூர்ணாகுதிற்குரிய பொருட் களை தட்டத்தில் வைத்து குருக்கள் மணமக்களுக்குக் கொடுக்க இருவரும் சேர்ந்து குண்டத்தில் சொரித்தல் வேண்டும்.
அக்கினி பகவானிடம் செர்க்கும் சகல் திரவியங்களும் அக்கினி பகவான் அந்ஹ்ட அந்தக் தெய்வங்களிடம் ஒப்படைத்து விடு வார்கள் என்பதை வேதங்கள் கூறுகின்றன. ஆகவே அக்கினி யில் ஆவாகனம் செய்யப்பட்ட மூர்திகளுக்கு செய்யும் சடங்கு குறை வின்றி செய்து அவர் களுக்குப் பரிபூரண பலன் வே ண்டி அனுப்ப வேண்டும் என்று பிராத்தித்து செய்வதே ஓமம்.
அதன் பின் தீபாரத்னை செய்து ஓமத்தில் இருந்து விடுவிக்கப் பட்ட ரட்சயை (கரிப்பட்டு) மணமக்களுக்கு திலகமிட்டு விபூதி சந்தனம் கொடுத்து ஆசி வழங்குவார் குருக்கள்.
ஆசிர்வாதம்
மணமக்களை கிழக்கு முகமாக நிற்க வைத்தக் குருக்கள் பிராத் தனன செய்து மந்திரத்துடன் ஆசீர்வாதம் சொல்லி மண மக்களு க்கு ஆசிர்வாதம்வாதம் சொல்லி மணமக்களுக்கு சிரசில் அட்சதை <யிட்டு ஆசீர்வதிப்பர். தொடர்ந்து மணமகளின் பெற்றோர் சபையில் ஆசிர்வதிப்பர்.
அட்சதை
முனை முறியாத பச்சையரிசி, அறுகம்புல், மஞ்சள்மா கலந்த கலவையே அறுகரிசி என்று சொ ல்வார்கள். பெரியோர் இரண்டு கைகளாலும் அறுகரிசி எடுத்து “ஆல்போல் தழைத்து அறுகு போல் வேரூன்றி மூங்கில்போ ல் சுற்றம் முழுமை யாய்ச் சூழ ப்பதினாறு பேறு பெற்றுப் பெரு வாழ்வு வாழ்க” என வாழ்த்தி உச்சியில் 3 முறை இடவேண் டும்
நிறைவு
மணமக்களின் கைகளில் கட்ட ப்பட்ட காப்புக்களை அவிழ்த்து பவித்திரங்களை கழற்றி அவற்றுடன் பெற்றோரின் பவித்திரங்க ளையும் வெற்றிலையில் வைத்து குருக்களின் தட்சணையும் சேர்த்து குருக்களிடம் கொடுக்கவேண்டும்.
ஆரத்தி
இரு தரப்பிலும் இருந்து ஒரு பெண்ணாக இரு சுமங்கலிப் பெண்கள் ஆரத்தி எடுப்பார்க ள். தம்பதிகளுக்கு தீய சக்தியி னால் தீமை ஏற்படாமலும் கண் திருஷ்டி நீங்கும் பொரு ட்டும் இவை செய்யப்படுகின் றன.
விருந்துபசாரமும் நடைபெறும். மணமக்கள் இருவரும் அர்ச னைத் தட்டோடு ஆலயம் சென்று வணங்கி அர்ச்சனை செய்து மண மகன் இல்லம் செல்வர். அங்கு வாசலில் ஆரத்தி எடுத்து வல்து காலை முதலில் வைத்து வீட்டுக்குள் செல்வர். முதலில் பூசை அறைக்குள் சென்று வணங்கிப் பின் பால் அருந்தக் கொடுப் பார்கள்.
பூதாக்கலம்
மணமக்கள் ஒரே இலையில் மணமகள் உணவு பரிமாறி மண மகனுக்கு முதலில் தன்கையா ல் உணவூட்டிய பின் மணமகன் மண மகளுக்கு உணவூட்ட வேண்டும்.
பின் மணமகன் மணமகளைத் தன் வீட்டுக்கு அழைத்து செல்வார். அங்கும் ஆரத்தி எடுத்து உள்செல்வார். வலது கால் எடுத்து உட் சென்று பூசை அறை சென்று வணங்கி பெற்றோர் காலி லும் விழுந்து வணங்குவர்.
சில தத்துவங்கள்
தாலி கட்டிய பின் மணமகள் மணமகளின் உசந்தலையில் குங்கும த்தால் திலகமிடுவார். இது அவள் தன் கணவனுக்கே உரியவள் என்பதை எடுத்துக்காட்டவே. அத்தோடு அவ்விடத்தில் தான் மகா லட்சுமி வாசம் செய்கின்றாள்.
மாங்கல்யம் சூட்டும்போது கெட்டி மேளம் கொட்டுவது சபையில் உள் ளோர் யாராவது தும்முதல், அபச குன வார்த்தைகள் பேசுதல் போன்ற வை மணமக்களிற்குக் கேட்கக் கூடாது என்பதற்காகவே.
மஞ்சள் கயிற்றில் தாலி கட்டும் போது மூன்று முடிச்சுப் போடுவார் கள். இதற்கு ஒரு விளக்கம்.
முதலாவது முடிச்சு – கணவனுக்குக் கட்டுப்பட்டவள் அல்லது பிறந்த வீட்டிற்கு இரண்டாவது முடிச்சு – தாய் தந்தைய ருக்குக் கட்டுப்பட்டவள் அல்லது புகுந்த வீட்டிற்கு.
மூன்றாம் முடிச்சு – தெய்வத்திற்குப் பயந்தவள்
தாலி கட்டும்போது தூவப்படும் அட்ச தை மணமக்கள் தீய சக்தி களிடம் இரு ந்து காப்பதற்கும் வளமான வாழ்க்கை அமைவதற்கும் ஆசீர்வதிப்பதாகும். தாலி கட்டும்போது கைவிள க்கு ஏந்தி நிற்பது ஏனென்றால் தாலி கட்டியதற்கு விளக்கு ஏந்திய வர் ஒரு சான்றா வார். இன்னொரு விளக்கம் சகுனத் தடைகள் ஏற்படாமலிருக்க.
திருமணத்தின் போது மணப்பெண் முகத்திரை அணிவது ஏன்?
முக்காலத்தில் மணமகள் தாலி கழுத்தில் ஏறும் வரை மண மக னைப் பார்ப்பதில்லை. ஆகவே முகத்திரை அணிந்து மணவறை க்கு அழைத்து வந்தார்கள். அத்தோடு கண் திருஷ் டிக்கும் விமர்சனங்களில் இருந்து விடுவிப்பது ம் ஒரு காரணமாகும். தாலி ஏறியதும் முகத்திரையை அகற்றி நான் இப்போது “இவரின் மனைவியாகி விட்டேன்” என்று சபை யோரிற்கு தன் முகத்தைக் காட்டுகி றாள்.
அட்சதை
அட்சதை என்றால் குத்துப் படாததும், பழுதற்றதும் என் று பொருள்படும். பழுதுபடாத பச்சைஅரிசியைப் போல் வா ழ்க்கையும் பழுது படாமல் இருக்கவேண்டும் என்பதற் காகவே ஆசி வழங்கும்போ து பெரியவர்கள் அதைத் தெளிக்கிறார்கள். (நுனி முறி யாத முழு அரிசியாக இருக் கவேண்டும்).
நெல்லில் இருந்து பிரித்தெடுக்கப்பட்ட முளையுள்ள அரிசியுடன் மஞ்சள்மா, பன்னீர், மலர் இதழ்கள் ஆகியவை கலந்து அட்சதை தூவுவதே முறையாகும்.
ஆரத்தி
ஒரு தட்டில் 3 வாழைப்பழத் துண்டுகள் வைத்து அதன் நடுவே திரியைச் செருகவேண்டும். இலகுமுறை ஒரு நெருப் புக் குச்சியில் பச்சைசுற்றி நெய்யில் தோய்த்த வாழைபழத்தின் நடுவே குத்து வதாகும்.
ஆரத்தி எடுக்கும் போது யாருக்கு திருஷ்டி கழிக் கின்றோமோ அவரை நிற்க வைத்து (கிழக்கு முக மாக அல்லது வடக்கு பார்க்க நிற்கவேண்டும்). அவரை இறை வனாக நினைத்து இறைவனுக்கு எப்படிக் கற்பூரம் காட்டுகிறோ மோ அதேபோல் ஆரத்தித் தட்டைச் சுற்றவேண்டும் (வலம் சுழியாக).
மணமக்களுக்கு எடுக்கும்போது மண மகன் பக்கத்தில் மேலெழும் பி மணமகளின் பக்கத்தில் கீழிறங்க வேண்டும். கீழே 3 முறை செய்ய வேண்டும். கீழே 3 தரம் ஆட்டி பின் மேலெழும்பிச் சுற்ற வேண்டும்.
திருமணத்தில் அறுகரிசி இடும் முறை
இந்துசமய விளக்கப்படி அறுகரிசி யை (அட்சதை) பெரியோர்கள் இரு கைகளாலும் எடுத்து மண மக்களின் சிரசில் தூவிப்பின் இரு தோழ்களிலும் இடுப்பு, முழந் தாள் என்று மேலிருந்து கீழே வர வாழ்த்த வேண்டும். (3 முறை அல் லது சிரசில் மட்டும் 3 முறை 3 தூவி ஆசிர்வதிக்கலாம்).
நாங்கள் மணமக்களைத் தெய்வமாகக் கருதுவதால் தெய்வத்திற்குப் பாதத்திலி ருந்து சிரசிற்குச் செல்ல வே ண்டும். என்று சொல்வார்க ள். மணமக்களை மானிடரா கக் கருதினால் சிரசில் இருந் து பாதத்திற்கு வர வேண்டு ம் என்று சொல்வார்கள். இவ் விரண்டு விதமான வருண ணைகளையும் இலக்கியங்களிற் காணலாம். பதாதி கேசமா? கேசா தி பாதமா? இவை வர்ணணைகளே அன்றி அட்சதை தூவுவதற் கல்ல. தெய்வத்திற்கு நாம் செய்வது பாத பூஜை பூச் சொரிவது அல்ல. அத்தோடு மணமக்களை பெரியோர்களே அட்சதை தூவி ஆசிர்வதிப்பார்கள். ஆகவே சிரசில் இருந்து தான் வர வேண்டும். மீனாட்சி சுந்தரேசர் கல்யாணத்தில் தேவர்கள் வானிலி ருந்து மலர் தூவி ஆசிர்வதித்து வாழ்த்தியதாகப் புராணம் சொல் கின்றது. ஆக வே அரிசி மேலிருந்து கீழே வருவதுதான் சாலப் பொருத்தம்.
மணமக்கள் வரவேற்பு / சடங்குகள்
(புகுந்த வீடு) நல்ல நேரம் பார்த்து மணமகன் விட்டுக்குப் மணப் பெண்ணை முதலில் மண மகன் வீட்டார் அழைத்துச் செல்வர். பெண்ணுடன் அவள் சகோ தரி அண்ணி போன்றோர் உடன் செல்வர். பெண்ணின் உடன் செல்லும் பிறந்த வீட்டு துணைகள் அவளுக்கு பிறந்த வீட்டு ஏக்க ம் வராமலிருக்கவும், புகுந்த வீட்டு மனிதர்களிடம் இயல்பாக ஏற்படும் பயத்தைப் போக்கவும் உதவி செய்வார்கள் என்பது எதிர் பார்ப்பு. புகுந்த வீட்டில் மண மக்க ளுக்கு ஆரத்தி எடுத்து வரவேற் பார்கள். வலது காலை எடுத்து வைத்து தம்பதிகள் வீட்டுக்குள் நுழைவார்கள். புகுந்த வீட்டில். பெண் தான் புகுந்த வீட்டில் முதன் முதலில் பூஜை அறையில் விளக்கேற்றுவாள். பின்பு சமையல றையில் பால் காய்ச்சுவாள். வீட்டில் திருவிளக்கு முன்பு தம்பதி யரை அமர் த்தி பாலும் பழமும் கொடுக்க வேண்டும்.
சாந்தி முகூர்த்தம்
பெரும்பாலும் முதலிரவு திருமணம் ஆன அன் றே நடத்தப்பட்டு விடுகிறது. அன்று மாலையில் மணமக்களை அருகிலுள்ள பிள் ளையார் கோவிலுக்கு அழைத்து செல்லுவார்கள். மணமக்கள் தங்கும் அறையை நன்கு அலங்கரிக்கவும். பால் , பழங்கள், மற்றும் இனிப்பு வகைகளுடன் திருவிளக்கு ஏற்றி வைக்கவும். மண மகளை , மணமகனின் சகோதரி அழைத்து வருவாள்.
மூன்றாம் நாள்
சம்பந்தம் கலக்கல் நல்ல நாள் பார்த்து நாள் பின் பெண்ணை மறு வீடு அழைத்து வர மணமகள் வீட்டார் புகுந்த வீடு செல்வர். திரு மணக் கூட்டத்தில் நெருங்கிய உறவினர்களை அறிமுகம் செய்து வைக்க நேரம் இரு க்காது. எனவே திருமணம் முடிந்து இரு வீட் டாரின் நெருங்கிய உறவினர்கட்கு மட்டும் விருந்தளிக்க ப்படும். இது ‘சம்பந்தம் கலக்கு தல்’ எனப்படும். குலதெய்வக் கோயில் கட்கும், உள்ளூர் கோயில் கட்கும் மணமக்களோடு சென் று பொங்கல் வைத்து பூசை செய்து வழிபடுவர். உறவினர் வீடுக ளுக்கு விருந்துண்ண செல்வர். சீர் செய்த சகோதரி இல்லம் சென் று சிறப்புச் செய்வர்.


Monday, 12 February 2018

சிவராத்திரியில் செய்ய வேண்டிய முக்கிய பூஜைகள்

சிவராத்திரியில் செய்ய வேண்டிய முக்கிய பூஜைகள்

 மாசிமாதம் கிருஷ்ணபட்சம் சதுர்த்தியன்று அமாவாசைக்கு முதல் நாள் மகா சிவராத்திரி கொண்டாடப்படுகிறது. மகா சிவராத்திரி தினமான நாளைய தினம் சிவபெருமானை நினைத்து விரதமிருந்து வழிபட்டால் கவலைகள் அனைத்தும் தீரும். மகா சிவராத்திரி விரதம் பல மகிமைகளை கொண்டது. திரயோதசி அன்று ஒருபொழுது மட்டும் சாப்பிட்டு விட்டு, விரதம் மேற்கொள்ளவேண்டும். முடியாதவர்கள், வயதானவர்கள், எளிமையான உணவை எடுத்துக் கொள்ளலாம். திரவ உணவாகவும் எடுத்துக் கொள்ளலாம்

.  சதுர்த்தசியில் விரதம் இருந்து, அன்றிரவு ஆலயங்களில் நான்கு ஜாமங்களில் நான்கு கால பூஜைகள் சிவன் கோயில்களில் விமரிசையாக நடைபெறும். அவற்றைக் கண் குளிரத் தரிசிக்கலாம். அல்லது வீட்டிலேயே இருந்து கொண்டு சிவபாராயணம் செய்யலாம். ருத்ரம் ஜபிக்கலாம். மகா சிவராத்திரி மகிமை மகா சிவராத்திரி மகிமை மகா சிவராத்திரி விரதம் இருந்து, சிவ தரிசனம் செய்து, தானங்கள் செய்பவர்களுக்கு சிவ கடாட்சம் நிச்சயம். முக்கியமாக, ஏழைகளுக்கு அன்னதானம் செய்வது மகா புண்ணியம் என்கின்றன சாஸ்திரங்கள்.

 சிவ ராத்திரி விரதம் இருப்பதால் தெரியாமல் செய்த பாவங்களுடன், தெரிந்தே பாவங்கள் செய்திருந்தாலும் அவை நம்மை விட்டு நீங்கிப் போகும் என்று ஐதீகம். சிவராத்திரி விரத மகிமை சிவராத்திரி விரத மகிமை மகாசிவராத்திரி நாளில் இரவெல்லாம் கண் விழித்து சிவபெருமானை வழிபட வேண்டும். இதனால் இறைவன் அருள் கிடைப்பதோடு நினைத்த காரியம் நடக்கும் என்பது முன்னோர்கள் வாக்கு. ஒரு வருடம் சிவராத்திரி விரதம் இருப்பது என்பது நூறு அசுவமேத யாகம் செய்த பலனும், பல தடவை கங்கையில் நீராடிய பலனும் புண்ணியமும் கிடைக்கும் என்பது நம்பிக்கை. விரதம் இருப்பதால் நன்மை

 விரதம் இருப்பதால் நன்மை மாசி மாதத்தில் தேய்பிறை சதுர்த்தசி நாள் மகா சிவ ராத்திரியாக கடைபிடிக்கப்படுகிறது. இந்த நாளின் சிறப்புகள் குறித்து கருட புராணம், கந்த புராணம், பத்ம புராணம், அக்னி புராணம் உள்ளிட்ட பல்வேறு நூல்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. மகா சிவ ராத்திரி நாளில் விரதம் இருப்போருக்கு கிடைக்கும் மகத்துவங்கள் என்ன என்பது பற்றியும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிவ பூஜை மகிமை சிவ பூஜை மகிமை இந்த நாளில் சிவன் கோயில்களுக்குச் சென்று ஈஸ்வரனை வழிபட்டால் மன அமைதி, வாழ்க்கையில் முன்னேற்றம், தீய சக்திகள் நீங்கி நன்மைகள் நமக்கு உண்டாகும்.

 சிவராத்திரிக்கு முதல் நாள் ஒரு வேளை மட்டுமே உணவு உண்ண வேண்டும். சிவராத்திரி அன்று அதிகாலையிலேயே எழுந்து குளித்து விட்டு, சூரிய உதயத்தின் போது காலையில் வீட்டில் செய்ய வேண்டிய பூஜையை முடிக்க வேண்டும். அதன் பின் சிவன் கோவிலுக்குப் போய் முறைப்படி தரிசனம் செய்ய வேண்டும். நான்கு ஜாம பூஜை நான்கு ஜாம பூஜை சிவபூஜை செய்யும் இடத்தை மலர்களால் அலங்கரித்து நண்பகலில் குளித்து மாலையில் சிவார்ச்சனைக்கு உரிய பொருட்களோடு சிவன் கோவில் சென்று ஏற்பாடுகளைச் செய்யலாம். மாலையில் மீண்டும் குளித்து வீட்டில் சிவபூஜை செய்ய வேண்டும். வீட்டிலேயே இரவின் நான்கு ஜாமங்களிலும் முறைப்படிப் பூஜை செய்தலும் நலம். வில்வ இலைகளால் அர்ச்சனை செய்தல் கூடுதல் உத்தமம். 

சிவராத்திரி விரதம் சிவராத்திரி விரதம் மகா சிவராத்திரி விரதம் மேற்கொள்பவர்கள் கோபத்தைக் கட்டுப்படுத்துவதுடன், பிரம்மச்சரியத்தைக் கடைபிடிக்க வேண்டும். சிவராத்திரி விரதம் இருப்பதால் தெரியாமல் செய்த பாவங்களுடன், தெரிந்தே பாவங்கள் செய்திருந்தாலும் அவை நம்மை விட்டு நீங்கிப் போகும். யார் வேண்டுமானாலும் சிவராத்திரி விரதத்தை மேற்கொள்ளலாம். சிவன் நாமம் சிவன் நாமம் சிவ ஆலயங்களில் நடைபெறும் நான்கு கால பூஜைக்கு பூக்கள் மற்றும் அபிஷேகப் பொருட்களை கோயில்களுக்கு வாங்கிக் கொடுத்தல் நலம். சிவராத்திரியன்று நள்ளிரவு 11.30 மணிமுதல் 1 மணிவரை லிங்கோத்பவர் காலமாகும். அந்த நேரத்தில் வழிபாடு செய்தால் நற்பலன்கள் நமக்கு கிடைக்கும். சிவனுக்குரிய பாடல்களைப் பாடி பஞ்சாட்சரங்களை பலநூறு முறை சொன்னால் பாவங்கள் விலகும். யோகங்கள் சேரும் என்கின்றனர். கண் விழிப்பதன் அவசியம் கண் விழிப்பதன் அவசியம்


 சிவராத்திரி தினத்தன்று இரவில் நான்கு ஜாமங்களிலும் தூங்காமல் பூஜை செய்து, மறுநாள் விடியற்காலையில் நீராடி, காலை அனுஷ்டானத்துடன் உச்சிக்கால அனுஷ்டானத்தையும் அப்போதே முடிக்க வேண்டும். அதன் பின் தீட்சை தந்த குருவைப் பூஜை செய்து விட்டு, உடைகள் மற்றும் உணவினை அந்தணர்க்கு தானமாக அளித்து விரதத்தை நிறைவு செய்யும் விதமாக உணவு உண்ண வேண்டும். சிவகதி கிடைக்கும் சிவகதி கிடைக்கும் பூஜை செய்ய முடியாதவர்கள் நான்கு ஜாமத்திலும் சிவபுராணம் கேட்டும்

, சிவன் கோயிலுக்குச் சென்று இரவைக் கழித்தும் சிவனை வழிபடலாம்.மகா சிவராத்திரி விரதம் இருப்போருக்கு நற்கதி கிடைப்பதுடன் இப்பூத உடல் மடிந்த பின் சொர்க்கத்தையும் இறைவன் அளிப்பான் என்பதே பின்னணித் தத்துவம். இப்படி இருபத்து நான்கு வருடங்கள் சிவராத்திரி விரதமிருந்தால் அவர்கள் சிவகதி அடைவார்கள் என்கின்றன புராணங்கள்.

Sunday, 11 February 2018

138 வீட்டுக் குறிப்புகள்:!!!

138 வீட்டுக் குறிப்புகள்:!!!

1. வெள்ளி ஆபரணங்களுடன் சிறிது கற்பூரத்தைப் போட்டு வைப்பதால் வெள்ளி ஆபரணங்கள் கறுப்பாவதைத் தடுக்கலாம்.
2. வீட்டில் எறும்புப் புற்று இருந்தால் அங்கே கொஞ்சம் பெருங்காயத் தூளைத் தூவிவிட்டால் எறும்புத் தொல்லை இருக்காது.
3. ஒரு டம்ளர் தண்ணீரில் நான்கு ஸ்பூன் டேபிள் உப்பு கலந்து அதை அறையின் நான்கு பக்க ஓரங்களில் தெளித்துவிட்டால் எறும்பு நடமாட்டம் இருக்காது.
4. குத்துவிளக்கு, காமாட்சி அம்மன் விளக்கின் மேல் நுனியில் ரப்பர் பேண்டைச் சுற்றிப் பூ வைத்தால் கீழே விழாது.
5. துணிகளில் எண்ணெய் கறையோ, கிரீஸ் தாரோ பட்டு விட்டால் அவற்றைத் துவைக்கும் போது சில சொட்டுக்கள் நீலகிரித் தைலம் விட்டுக் கழுவினால் கறைகள் போய்விடும்.
6. எவர்சில்வர் பாத்திரங்கள் நாளடைவில் பளபளப்பு மங்கினால் வாரத்துக்கு ஒரு முறை விபூதியைக் கொண்டு நன்கு தேய்த்து வாருங்கள். வெள்ளிப் பாத்திரங்கள் போல் மின்னுவதைப் பார்க்கலாம்.
7. கோடை காலத்தில் மதிய உணவில் வெஜிடபிள் சாலட் அவசியம் சேர்க்க வேண்டும். அதிக எண்ணெயில் பொரித்த உணவு வகைகளைத் தவிர்க்க வேண்டும்.
8. உங்கள் பிளாஸ்டிக் பக்கெட் ஓட்டையாகி விட்டால் அதைக் கவிழ்த்து பழைய டூத் பிரஷைத் தீயில் காட்டி உருகும் திரவத்தை அந்த ஓட்டை மீது படியச் செய்யவும். ஓட்டை அடைபடும்.
9. எப்பொழுதாவது உபயோகிக்கும் "ஷூ"க்களில் ரசகற்பூர உருண்டை ஒன்றை ஒவ்வொரு "ஷூ"விலும் போட்டு வைத்தால் பூச்சிகள் அணுகாது.
10. ஷாம்பு வரும் சிறு பிளாஸ்டிக் கவர்கள் காலியானதும் அவற்றைத் துணிகளை ஊறவைக்கும் போது அதனுடன் போட்டு ஊறவைத்தால் துணி வாசனையாக் இருக்கும்.
11. பிரஷர் குக்கரை உபயோகபடுத்தாத நேரங்களில் மூடி வைக்கக் கூடாது.
12. பிரிட்ஜ் இல்லாதவர்களுக்கு இட்லி மாவு, தோசை மாவு புளித்துப் போகாமல் தடுக்க அரைத்த மாவை பிளாஸ்டிக் டப்பா அல்லது பக்கெட்டில் போட்டு மூடினால் புளித்துப் போகாமல் இருக்கும்.
13. வீட்டில் குளிர்சாதனப் பெட்டி இல்லாதவர்கள் காய்கறிகளின் மீது ஈரத் துணியைப் போட்டு மூடி வையுங்கள். வாடாமல் இருக்கும்.
14. பொருட்களை கறையான் அரிக்காமல் இருக்க கற்பூரத்தைப் பொடி செய்து தூவி வையுங்கள்.
15. வெள்ளி சாமான்களை பீரோவில் வைக்கும்போது அதற்குள் கற்பூரத்தைப் போட்டு வைப்பது நல்லது.
16. அசைவம் சமைத்த பிறகு பாத்திரங்களில் வீசும் துர்நாற்றத்தை நீக்கப் பாத்திரங்களில் சிறிதளவு புளியைத் தடவிப் பிறகு வழக்கம் போல் கிளீனிங் பவுடர் போட்டுத் தேய்க்க வேண்டும்.
17. இஞ்சியை ஈரத்துணியில் சுற்றித் தண்ணீர்க் குடத்தின் மேல் வைத்திருந்தால் பத்து நாள் வரை புதிதாகவே இருக்கும்.
18. காய்ந்த எலுமிச்சை, ஆரஞ்சுத் தோல்களை அலுமாரியில் வைத்தால் பூச்சிகள் அணுகாது.
19. கடையில் மூக்குப் பொடி வாங்கித் தண்ணீரில் கரைத்து எறும்புப் புற்றின் மேல் தெளித்து விடுங்கள். எறும்புகள் மாயமாய் மறைந்து போகும்.
20. குழந்தைகளுக்கு வெஜிடபிள் சூப் தரும் போது அதில் துருவிய கசுக்கொட்டையை (முந்திரி) பொடியாக நறுக்கிய பிரெட்டை நெய்யில் வறுத்து சூப்பின் மேல் தூவித் தந்தால் குழந்தைகள் விரும்பிச் சாப்பிடுவர்.
21. புளித்த பாலில் (மோரில்) வெள்ளிப் பாத்திரங்களையோ, வெள்ளி நகைகளையோ அரை மணிநேரம் ஊறப் போட்டுப் பின் துலக்கினால் அவை புதியவை போல் இருக்கும்.
22. வெள்ளை நிற வாஸ்பேஷன், பாத்ரூம், டைல்ஸ் மற்றும் சிங்ககை க்ளீனிங் பவுடர்களைக் கொண்டு சுத்தம் செய்த பின், சொட்டு நீலம் கலந்த நீரால் அலம்பிவிட்டால் பளபளப்பு மேலும் கூடும்.
23. வீட்டில் ஹோமங்கள் செய்யும் போது ஒரு டேபிள் பானை (Fan) ஜன்னல் ஓரமாக வெளிப்பக்கம் பார்த்து வைத்துவிட்டால் புகை உள்ளே பரவாது.
24. வெண்ணெயில் உப்பைத் தூவி விட்டால் அது நாட்பட்டாலும் கெடாமல் இருக்கும்.
25. வெயில் காலத்தில் எங்கு நோக்கினும் ஈக்கள் மொய்த்துக் கொண்டிருக்கும். வீட்டைக் கழுவும் போது நீரில் சிறிது உப்பைச் சேர்த்துப் பின்பு கழுவுங்கள்.காய்ந்த பின் அறையில் ஈக்கள் வராது.
26. காய்கறி மற்றும் பழங்களை சிறிதளவு வினிகர் கலந்த குளிர்ந்த நீரில் ஒரு சில நிமிடங்கள் போட்டு வைத்தால் கிருமிகள் இறந்து விடும்.
27. பூண்டு, வெங்காயம் போன்றவைகளை நறுக்குவதால் கத்தியில் ஏற்படும் துர்நாற்றத்தை போக்க, சிறிதளவு உப்பை கத்தியில் தடவி குளிர்ந்த நீரில் கழுவவும்.
28. பால் பாத்திரத்தின் அடியில் ஒட்டிக் கொள்ளாமல் இருக்க பாத்திரத்தை முதலில் குளிர்ந்த நீரால் நன்கு கழுவ வேண்டும்.
29. கோதுமை உள்ள பாத்திரத்தில் ஒரு கொத்து வெந்தயக் கீரையை போட்டு வைத்தால் பூச்சிகள் வராது.
30. இரவில் படுப்பதற்கு முன் ப்ளீச்சிங் பவுடரைச் சிறிது எடுத்து கழிப்பறையிலும் குளியலறையிலும் தூவி விட்டு அப்படியே விட்டு விட வேண்டும். கரப்பான் பூச்சித் தொல்லை இருக்காது.
31. நறுக்கி வைத்த வெங்காயத்தில் சிறிதளவு வெண்ணெய் கலந்து வைத்தால் நீண்ட நேரம் பிரஷ்ஷாக இருக்கும்.
32. தேங்காய் முடியை தண்ணீரில் வைத்தால் அல்லது முடியில் சிறிது உப்பை தடவி வைத்தால் கெடாமல் இருக்கும்.
33. நகைகளை பஞ்சில் சுத்தி வைத்தால் புது பொலிவுடன் இருக்கும்.
34. வீட்டு ஜன்னல்களுக்கு கரும் பச்சை, கருநீலத்தினால் ஆன திரைச் சீலைகளைப் பயன்படுத்தினால் வெயிலின் உஷ்ணம் உள்ளே வராது.
35. சமைக்கும் போது எரிபொருள் சிக்கனம் செய்ய வேண்டும். கீரையைத் தவிர எது சமைத்தாலும் பாத்திரத்தை மூடி வையுங்கள்.
36. மொசைக் தரையில் அழுக்கு நீங்கி பளபளப்பாக இருக்க, வெதுவெதுப்பான நீரில் கொஞ்சம் சாக்பீஸ் தூள் மற்றும் சலவை சோடா கலந்து ஸ்பாஞ்சை வைத்து துடைத்து, பிறகு நல்ல தண்ணீரில் மீண்டும் ஒரு முறை துடைக்க வேண்டும்.
37. சமையலறையிலுள்ள பாத்திரம் கழுவும் தொட்டியைச் சுத்தப்படுத்த, பழைய செய்தித்தாள்களைக் கொண்டு தேய்த்தால் அழுக்கு நீங்கி சுத்தமாக இருக்கும்.
38. கத்தியைச் சூடாக்கி ரொட்டியை வெட்டினால் பிசிறு இல்லாமல் நினைத்த படி வெட்டலாம்.
39. மீன் பாத்திரத்தில் மீன் வாடை இருந்தால் சீயக்காய்த் தூளையும், புளியையும் சேர்த்துப் பாத்திரத்தைத் துலக்கினால் மீன் வாடை போய்விடும்.
40. எலுமிச்சம்பழம் உலர்ந்து விட்டால் கொதிநீரில் ஐந்து நிமிடம் போட்டு பிறகு சாறு பிழிந்தால் நிறையச் சாறு கிடைக்கும்.
41. மழை நீரில் பருப்பு வகைகளை வேக வைத்தால் ஒரு கொதியில் வெந்து விடும். ருசியும் அதிகரிக்கும்.
42. ஊறுகாயைக் கிளறுவதற்கு மர அகப்பை உபயோகிக்க வேண்டும்.
43. தயிர், மோர் பாத்திரங்களைச் சுத்தம் செய்து வெயிலில் காய வைத்தால் அந்த பாத்திரத்தில் உள்ள வாடை நீங்கி விடும்.
44. பிளாஸ்க்கில் உள்ள துர்நாற்றம் அகல வினிகர் போட்டு கழுவலாம்.
45. கறிவேப்பிலை காயாமல் இருக்க வேண்டுமானால் அதன் மீது ஓர் அலுமினியப் பாத்திரத்தை மூடி வைத்தால் அது காயாமல் இருக்கும்.
46. சின்ன வெங்காயத்தை வாங்கி வெயிலில் உலர்த்தி எடுத்து வைத்திருந்தால் ஒரு மாதம் வரை கெடாமல் முளை வராமல் இருக்கும்.
47. எலுமிச்சம் பழத்தை நாளொன்றுக்கு ஒரு மணி நேரம் தண்ணீரில் போட்டு எடுத்து வைத்திருந்தால் ஒரு வாரம் வரை வாடாமலும் கெட்டுப் போகாமலும் இருக்கும்.
48. இஞ்சியை ஈர மணலில் புதைத்து வைக்க வேண்டும்.
49. வாழைக்காயை தண்ணீரில் போட்டு வைத்திருந்தால் ஒரு வாரம் வரை கெடாமல் இருக்கும்.
50. வெண்டைக்காயின் காம்பையும், தலைப்பாகத்தையும் நறுக்கி விட்டு வைத்தால் மறுநாள் சமைப்பதற்குள் முற்றிப் போகாமல் இருக்கும்.
51. கடலை எண்ணெய் கெடாமல் இருக்க சிறிது புளியை போட்டு வைக்க வேண்டும்.
52. எரிந்து கொண்டிருக்கும் பல்பின் மேல் இரண்டு சொட்டு சென்டைத் தெளியுங்கள். அறை முழுக்க கமகமவென்று வாசனை பரவும்.
53. நைலான் துணியை தைக்கும் போது ஊசி லேசில் இறங்காது ஊசியை அடிக்கடி சோப்பில் குத்தி எடுத்து நைலானைத் தைத்தால் சுலபமாக ஊசி இறங்கும்.
54. டூத் பேஸ்டை கடைசி வரை எடுக்க அதனை வெந்நீரில் போட்டுச் சிறிது நேரம் கழித்துப் பின் அழுத்த மிச்சம் மீதி பேஸ்டும் வந்துவிடும்.
55. உப்புக் கரைந்த குளிர்ந்த நீரில் ரத்தக்கறை பட்ட துணிகளைக் கொஞ்ச நேரம் ஊறவைத்து பின் எடுத்துச் சுத்தம் செய்யுங்கள். கறை போய்விடும்.
56. மாவடு ஊறுகாயில் சிறிதளவு விளக்கெண்ணெய் விட்டால் பூச்சிகள் வராமல் நீண்ட நாள் இருக்கும். கெட்டுப் போகாது.
57. வெள்ளைத்துணி பளிச்சிட வெள்ளைத் துணிகளைத் துவைக்கும் போது தண்ணீரில் சிறிது டேபிள் சால்ட் சேர்த்துக் கொண்டால் துணிகள் வெள்ளை வெளேர் என்று இருக்கும்.
58. முகம் பார்க்கும் கண்ணாடியின் மீது தேயிலையினால் துடைத்தால் அழுக்கு நீங்கிக் கண்ணாடி பளபளவென்று இருக்கும்.
59. பச்சை கொத்தமல்லியையும் கறிவேப்பிலையையும் வதக்கக் கூடாது. பச்சையாக உணவில் சேர்த்தால் தான் சத்து அதிகமாக இருக்கும்.
60. கிழங்கு வகைகளை கறி செய்யும் போது அதிகமாக எண்ணெய் விட்டு வறுக்கக் கூடாது. எளிதில் ஜீரணமாகாது.
61. மின்சாரம் தடைப்பட்டிருக்கும் போது மெழுகுவர்த்தியை ஏற்றுவோம். மெழுகுவர்த்தியின் வெளிச்சத்தை அதிகரிக்க மெழுகுவர்த்திக்கு பின்புறம் முகம் பார்க்கும் கண்ணாடியை வைக்கவும். இரு மடங்கு வெளிச்சம் கிடைக்கும்.
62. வெல்லம் சேர்த்து செய்யும் பொருட்களுக்கு நெய் ஊற்றுவதால் சுவையும் மணமும் கூடும்.
63. கேரட், பீட்ரூட் வாடி போனால் அதை நறுக்குவது கடினம். உப்பு கலந்த நீரில் சிறிது நேரம் போட்டு வைத்தால் புதியது ஆகி விடும். வெட்டவும் எளிதாகிவிடும்.
64. சிறிது வெதுவெதுப்பான நீரில் அழுக்குத் துணிகளை ஊறவைத்து பிறகு சோப்பு போட்டு துவைத்தால் சுலபமாக வெளுக்கும்.
65. ஒரு டப்பாவில் சிறிதளவு சர்க்கரையை தூவி அதனுள் பிஸ்கட்டை வையுங்கள். பிஸ்கட் நீண்ட நாட்கள் கெடாமல் இருக்கும்.
66. அரிசி மற்றும் காய்கறிகள் கழுவிய தண்ணீரை வீணாக்காமல் அதனை செடிகளுக்கு கொட்டினால் செடிகள் செழிப்பாய் வளரும்.
67. மிளகாய் நீண்ட நாட்கள் இருக்க வேண்டுமானால் அதன் காம்பை எடுத்துவிட்டு பேப்பரில் சுற்றி ப்ரிட்ஜில் வையுங்கள். நீண்ட நாட்கள் கெடாமல் இருக்கும்.
68. உருளைக்கிழங்கு வேக வைத்த தண்ணீரில் பாத்திரங்களை கழுவினால் பாத்திரங்கள் ஜொலிக்கும்.
69. வீட்டில் புகை அதிகமாக காணப்படுகிறதா? அறையில் ஈரத் துணியை தொங்க விட்டால் புகை காணாமல் போய் விடும்.
70. அலுமினிய பாத்திரங்களில் அடிப்பிடிப்புக் கறையை நீக்க உப்பு காகிதத்தால் தேய்த்தால் பாத்திரம் புதுப்பொலிவுடன் இருக்கும்.
71. சமையல் மேடையில் கேஸ் ஸ்டவ்வைத் துடைக்க தேங்காய் எண்ணெய், கெரசின் இரண்டையும் சம அளவு கலந்து பயன்படுத்தினால் கிச்சன் பளிச்சென்று இருக்கும்.
72. ப்ரிட்ஜ், ஸ்டோர் ரூம், பாத்ரூம் இவற்றில் கரப்பான் பூச்சி தொல்லை இருந்தால் ஆஸ்பிரின் மாத்திரைகளை ஆங்காங்கே வைத்தால் கரப்பான் தொல்லை இருக்காது.
73. பச்சை வெங்காயம் சாப்பிட்ட நாற்றத்தை போக்க உப்பு கலந்த நீரில் வெங்காயத்தை ஊற வைத்து எடுத்து சாப்பிட்டால் காரம், நாற்றம் இருக்காது.
74. மிதியடிக்கு அடியில் அதே சைசில் பழைய நியூஸ் பேப்பரை வெட்டி வைத்துவிட்டால் மிதியடிகள் அழுக்கு எல்லாம் பேப்பரில் சேர்ந்திருக்கும்.
75. வாழைப்பழம் சீக்கிரம் கறுத்துவிடாமல் இருக்க ஈரத் துணியால் சுத்தி வைத்தால் பிரஷ்ஷாக இருக்கும்.
76. ப்ரிட்ஜில் ஆப்பிள், கேரட் இரண்டையும் ஒரே கம்பார்ட்மெண்டில் வைக்காதீர்கள். ஆப்பிளில் இருந்து வெளிவரும் ஒரு வித வாயு கேரட்டைக் கசக்கச் செய்துவிடும்.
77. பீன்ஸ், அவரை போன்ற காய்களை வேக வைக்கும் போது எலுமிச்சை, தக்காளி ஜூஸ் சிறிது பிழிந்தால் சீக்கிரம் வெந்துவிடும்.
78. லேசான வெந்நீரில் வெங்காயத்தை நனைத்து வெட்டினால் கண்கள் எரியாது.
79. உணவில் அதிக அளவு உப்பு சேர்ந்துவிட்டால் உரித்த உருளைக்கிழங்கை அப்படியே உணவில் போட்டு விடுங்கள். உணவில் அதிகமாக இருந்த உப்பு குறைந்துவிடும்.
80. சாப்பிட்ட பிறகு, சிறிது வினிகரும், பேரபின் எண்ணெயும் கலந்து மேஜையை துடைத்துவிட்டால் மேஜை பளபளப்பாக இருக்கும். நாற்றம் இருக்காது.
81. கொஞ்சம் நீரில் கடுகு எண்ணெய் கலந்து மிருதுவான துணியில் நனைத்து மரச் சாமான்களை துடைத்தால் வார்னீஷ் செய்தது போல் இருக்கும்.
82. பழைய புத்தகங்களை பூச்சி அரிப்பில் இருந்து பாதுகாக்க புத்தக அலமாரியில் சிறிதளவு புகையிலையை தூவினால் பூச்சி அரிப்பு இருக்காது.
83. வேக வைத்த உருளைக்கிழங்கு தோலை வீணாக்காமல் அந்த தோலைக் கொண்டு கண்ணாடிகளை துடைத்தால் பளிச்சென்று மின்னும்.
84. முட்டை நீண்ட நாட்களுக்கு கெடாமல் இருக்க முட்டை கூட்டின் மீது சிறிது அளவு ரீஃபைண்ட் ஆயில் தேய்த்தால் கெடாது.
85. உள்ளங்கையில் சில சொட்டு சமையல் எண்ணெய் ஊற்றி தேய்த்துக் கொண்டு மீனை சுத்தம் செய்தால் கைகளில் மீன் நாற்றம் அடிக்காது.
86. சர்க்கரை வைத்திருக்கும் பாத்திரத்தில் எப்போதும் எறும்புத் தொல்லை இருந்தால் அந்தப் பாத்திரத்தினுள் நான்கைந்து கிராம்பை போட்டால் எறும்பு வராது.
87. குழந்தைகள் போடும் சாக்ஸ் லூஸாகி விட்டால், சாக்ஸ் ஓரத்தில் அதன் சுற்றளவுக்கு ஏற்றபடி ரப்பர் பேண்டை வைத்து உருட்டி தைத்துவிட்டால் ஓரம் தொய்ந்து போகாமல் காலை அழுத்தமாக பிடித்துக் கொள்ளும்.
88. வாசனை கம்மியான ஊதுவத்திகள் மீது சிறிது யூபிகோலனைத் தடவிய பின் ஏற்றி வைத்தால் வீடு முழுவதும் வாசனை தூக்கும்.
89. மிக்ஸியில் அரைக்கப் போடும் பொருள்கள் ரொம்பக் கொஞ்சமாக இருந்தால், தட்டினால் மூடிவிட்டு அரைத்தால் நன்றாக அரைபடும்.
90. வெள்ளைக் கலர் டெலிபோன் அழுக்கு ஏறி இருந்தால் நெயில் பாலீஷ் ரிமூவரால் அழுந்தத் துடைத்தால் பளிச்சென்று ஆகும்.
91. பிளாஸ்டிக் குடம் வீணாகிப் போனால் பாதிக்கு மேல் வெட்டி (மேல் பாகத்தை) விட்டு குப்பைக் கூடையாக அல்லது செடி வளர்க்க உபயோகிக்கலாம்.
92. சோப்புத் தண்ணீர் கொண்டு கேஸ் அடுப்பைத் துடைக்கும் போது டியூபையும் துடையுங்கள். இதனால் டியூப் நெடுநாள் உழைக்கும். சுத்தமாகவும் இருக்கும்.
93. வீட்டில் மரச் சாமான்களுக்கு உபயோகிக்கும் பெயிண்டை முறத்தில் தடவி காய வைத்தால் நீண்ட நாட்கள் முறம் புதுசு போல இருக்கும். பூச்சிகளும் அரிக்காது.
94. டூல் பாக்ஸில் ஒரு சாக்பீஸ் கட்டி அல்லது கரித் துண்டை போட்டால், அது ஈரப் பசையை உறிஞ்சி டூல்ஸ் துருப்பிடிக்காமல் இருக்க உதவும்.
95. செருப்பின் மேல் பாகத்துத் தோலின் அடிப்பாகத்தில் மெழுகுவர்த்தியை நன்றாகத் தேய்த்து, பிறகு அணிந்து கொண்டால் செருப்பு கடிக்கவே கடிக்காது.
96. துணி பீரோவை சுத்தம் செய்யும்போது முதலில் பீரோ தட்டுகளில், பயன்படுத்திய கொசுமேட்டை ஐந்தாறு பரப்பி அதன் மேல் பேப்பர் போட்டுத் துணியை அடுக்கினால் ஒரு வருடம் வரை பூச்சிகள் நெருங்காது.
97. கொசு தொல்லைக்காகப் போடப்பட்டுள்ள நெட்லானில் சிறிய துளைகள் ஏற்பட்டு விட்டால், செலோடேப் கட் பண்ணி ஒட்டலாம்.
98. கருவேப்பிலைச் செடிக்குப் புளித்த தயிர் அல்லது மோர் விட்டால் நன்கு செழிப்பாக வளரும். தயிர் பாத்திரத்தின் உள்ளே தண்ணீர் விட்டுக் குழப்பி அந்நீரையும் விட்டு வரலாம்.
99. குழந்தைகளுக்கு உபயோகித்த சின்ன சைஸ் கொசுவலை துணியில், embroider கைவண்ணம் காட்டி டி.வி. கவராக பயன்படுத்தலாம்.
100. துணிகளில் ஹேர்-டை பட்டால் அந்த கறையை நீக்க, நெயில்பாலிஷ் ரிமூவரால் டை படிந்த பகுதியைத் துடைத்தால் கறை போய்விடும்.
101. ரப்பர் ஸ்டாம்ப் பேட், இங்க் காய்ந்து போய்விட்டால் நீலம் சில சொட்டுகள் விட்டால் அழகாக பதிய வரும்.
102. மாதுளம் பழத் தோல்களின் உள்பாகத்தை எடுத்து பல் தேய்த்தால் பல்லுக்கும் உறுதி, பல்லும் பளிச்சென்று இருக்கும்.
103. தேங்காய் உடைத்த இளநீரை சுண்ணாம்பு பாட்டிலில் சிறிது ஊற்றி வைத்தால் சுண்ணாம்பு சீக்கிரத்தில் காய்ந்து போகாமல் இருக்கும்.
104. மின்விசிறியில் தூசி படிந்து, கறை படிந்து விட்டதா? ஒரு துணியை மண்ணெண்ணையில் நனைத்து மின் விசிறியை அழுத்தித் துடையுங்கள். சிறிது நேரத்திற்குப் பிறகு நல்ல துணியால் துடைத்துப் பாருங்கள். பளிச்சென்றாகிவிடும்.
105. அரை வாளி தண்ணீரில், நான்கு மேஜைக்கரண்டி வினீகரை கலந்து ஜீன்ஸ் துணிகளை அலசினால் சாயம் போவதை தடுக்கலாம்.
106. புது வீட்டில் பெயிண்ட் அடித்த வாடை போக மறுக்கிறதா? ஒரு பக்கெட் நிறைய தண்ணீரை நிரப்பி அறைகளில் வையுங்கள். வாடை போய்விடும்.
107. ஆணி அடிக்கும் போது நுனியில் தேங்காய் எண்ணெய் தடவினால் சுவரில் சுலபமாக இறங்கும்.
108. சமையல் அறையில் எண்ணெய் பசையுள்ள இடத்தில் சுண்ணாம்புடன் மண்ணெண்ணெய் கலந்து அடிக்கலாம்.
109. கூர்மையான கத்திகளில் தேங்காய் எண்ணெய் தடவி வந்தால் அதன் கூர்மை மழுங்காது.
110. பால் பாக்கெட் வாங்கி காய்ச்ச நேரமில்லாமல் போனால் அதை தண்ணீருக்குள் போட்டு வைத்துவிட்டால் மூன்று மணி நேரம் கழித்துக் கூட காய்ச்சலாம்.
111. இனிப்பு பலகாரங்கள் உலர்ந்து கெட்டுப் போகாமலிருக்க அதன் மீது சிறிது தேன் பூசி வைக்கலாம்.
112. பால் காய்ச்ச மறந்து போய் விட்டீர்களா? பால் திரிந்து போகுமோ என்ற பயம் ஏற்படுகிறதா? கவலை வேண்டாம். பாலைக் காய்ச்சும் முன் ஒரு சிட்டிகை சமையல் சோடா மாவு கலந்து காய்ச்சினால் பால் திரியாது.
113. காபி பொடியை போடுவதற்கு முன் பில்டரின் அடிப்பாகத்தை தீயில் காட்டி விட்டு பின்பு உபயோகித்தால் டிகாஷன் கலகலவென்று இறங்கும்.
114. நெய் எவ்வளவு நாளானாலும் பிரஷ்ஷாக இருக்க அதோடு ஒரு வெல்லத் துண்டைப் போட்டு வைக்கவும்.
115. தக்காளி, எலுமிச்சைப் பழம் சீக்கிரம் கெடாமலிருக்க உப்பு கலந்த நீரில் போட்டு வைக்கவும்.
116. கோதுமை மாவை நன்கு சலித்து சிறிதளவு டேபிள் சால்ட்டை கலந்து வைத்தால் வண்டுகள் வராது.
117. தயிர் புளித்து விடுமோ என்ற பயம் வேண்டாம்.ஒரு துண்டு தேங்காயைப் போட்டு வைத்தால் தயிர் புளிக்காது.
118. ஆப்பிள் மிகவும் புளிப்பாக இருந்தால் தோல் சீவி நறுக்கி உப்பு, மிளகாய்ப் பொடி, வெந்தயப் பொடி, பெருங்காயப் பொடி கலந்து தாளித்துக் கொட்டுங்கள். புதுமையான ஊறுகாய் தயார்.
119. தேங்காயை சரிபாதியாக உடைக்க, தண்ணீரில் நனைத்து பின்னர் உடைக்க வேண்டும்.
120. கொத்தமல்லி இலைகளை நன்கு ஆய்ந்து சுத்தமாக தண்ணீரில் அலசி காய வைத்து காற்று புகாத டப்பாவில் போட்டு வைத்தால், நிறைய நாட்கள் கெடாமல் இருக்கும்.
121. குளிர்ந்த நீரில் சில சொட்டுகள் எலுமிச்சை சாற்றை விட்டு அதில் காய்கறிகளைப் போட்டு வைத்தால் காய்கறிகள் அப்போது பறித்தது போல் "பிரஷ்"ஷாக இருக்கும்.
122. உப்பு வைத்திருக்கும் பாத்திரத்தினுள்ளே ஒரு பிளாஸ்டிக் பேப்பரை போட்டு அதன் மீது உப்பைக் கொட்டி வையுங்கள். உப்புக்கல் கசியாமல் அப்படியே இருக்கும்.
123. குடிக்கும் தண்ணீர் மணமா இருக்கணுமா? வாட்டர் பில்டரில் சிறிதளவு துளசியை போட்டு வையுங்கள்.
124. முதல் நாள் சாதம் மீதி இருந்தால் கவலை வேண்டாம். அதை மிக்ஸியில் நன்கு அரைத்து எடுத்து இரண்டு பிடி கடலை மாவு, பச்சை மிளகாய் துண்டுகள், உப்பு, கறிவேப்பிலை, கொத்தமல்லி, ஒரு கரண்டி தயிர் விட்டு தண்ணீர் சேர்த்து தோசையாக வார்த்தால் மிகவும் சுவையாக இருக்கும்.
125. சப்பாத்தி எப்போதும் சூடாக இருக்க, அதை சில்வர் பேப்பரில் சுற்றி வைக்கவும்.
126. மழைக்காலங்களில் தீப்பெட்டியிலுள்ள குச்சிகள் நமத்து போகாமல் இருக்க பெட்டியினுள் நான்கைந்து அரிசியைப் போட்டு ஒரு டப்பாவில் போட்டு மூடிவிட்டால் குச்சிகள் எளிதில் தீப்பற்றும்.
127. உருளைக்கிழங்கு போண்டா செய்வது போல, எல்லா காய்கறிகளையும் ஒன்றாக வதக்கி உருட்டி கடலை மாவில் தேய்த்து எண்ணெயில் பொரித்தெடுக்க வெஜிடபிள் போண்டா செய்யலாம். குழந்தைகள் காய்களையும் சாப்பிட ஒரு சந்தர்ப்பம்.
128. தானியம் மற்றும் பயறு வகைகளை எட்டு மணி நேரம் ஊற வைத்து தண்ணீர் வடித்து ஹாட் பேக்கில் போட்டு மூடி மறுநாள் திறந்து பார்த்தால் முளை கட்டிய தானியம் தயார். தானியங்களை முளை கட்டுவதற்கு ஒரு எளிய வழி.
129. கோதுமையை நன்கு கழுவி நான்கு மணி நேரம் ஊற வைத்து உலர்த்தி பின் மிஷினில் அரைத்து சப்பாத்தி செய்தால் மிகவும் மிருதுவான சப்பாத்தி கிடைக்கும்.
130. சமையலில் உப்பு சற்று கூடுதலா? கவலை வேண்டாம். பால், க்ரீம், தயிர் இவற்றில் ஏதோ ஒன்றினைச் சேருங்கள். சரியாகிவிடும்.
131. வாழைப்பூ, வாழைத்தண்டு ஆகியவற்றை நறுக்கினால் உடனே அவற்றை மோர் கலந்த தண்ணீரில் போட்டு வைக்க வேண்டும். இதனால் வாழைப்பூ, வாழைத்தண்டின் நிறம் மாறாது. கறை பிடிக்காது. துவர்ப்பு நீங்கும்.
132. துவைத்த துணிகளுக்கு நீலம் போடும் போது நீலம் கரைத்த நீரில் சிறிது வாஷிங் சோடாவையும் கலந்து கொண்டால் துணியில் நீலம் திட்டுத்திட்டாக இல்லாமல் சமமாக இருக்கும்.
133. பாலேடு, தயிரேடுகளை பாட்டிலில் போட்டு குலுக்க வெண்ணெய், மோர் ஒரே சமயத்தில் கிடைக்கும்.
134. கறிவேப்பிலை, கொத்தமல்லித் தழையை வாங்கிய உடன் வாழைப் பட்டையில் சுற்றி வைக்க வாடாமல் இருக்கும்.
135. இட்லிக்கு மாவு அரைக்க அரிசியை ஊறப் போட மறந்து விட்டீர்களா? இதோ ஒரு வழி உடனே சுடு தண்ணீரிலே அரிசியை ஊறப் போடுங்கள். பத்து நிமிடத்தில் ஊறிவிடும்.
136. உங்கள் இஸ்த்திரி பெட்டி நைலான் துணி மீது தேய்த்தால் அடிப்பாகம் வீணாகிவிட்டதா? அப்பெட்டியினை சூடாக்கி பச்சை வாழை இலையின் மீது தேயுங்கள். பெட்டியின் அடிப்பாகம் சரியாகிவிடும்.
137. காபி, டீ கொடுக்கும் பீங்கானில் கறை படிந்து உள்ளதா? ஒரு பெரிய வெங்காயத்தினை வெட்டி நன்கு தேயுங்கள். கறைகள் விட்டு விலகும்.
138. பிளாஸ்கில் உள்ள துர்நாற்றம் போக வினிகர் போட்டு கழுவலாம்

*முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?*

*முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?*



முருகனுக்கு கந்தன், குமரன், வேலன், சரவணபவன், ஆறுமுகம், விசாகன், குருநாதன் என்று எத்தனையோ பெயர்கள் இருக்கிறது. முருகனுக்கு மட்டும் ஏன் இத்தனை பெயர்கள் வந்தது என்றும், ஒவ்வொரு பெயருக்கும் என்ன காரணங்கள் என்றும் இப்போது பார்க்கலாம்.
முருகன் :
முருகு என்றால் அழகு என்பார்கள். இந்த சொல்லுக்கு இளமை, அழகு, மணம், கடவுள் தன்மை, தேன் என்று பல பொருள்களும் இருக்கிறது. ஆதலால் முருகன் மாறாத இளமையும், அழியாத அழகும், குறையாத நறுமணமும் நிறைந்த தெய்வத்தன்மையும், இனிமையும் உடையவன் என்று பொருள் கொள்ளப்படுகிறது.
சரவணபவன் :
சரவண பவ என்கிற ஆறு அட்சரத்தையுடையவன். சரவணபவன் என்றால் நாணல் சு ழ்ந்த பொய்கையில் தோன்றியவன் என்றும் பொருள்படும்.
ச என்றால் மங்களம், ர என்றால் ஒளி கொடை, வ என்றால் சாத்வீகம், ந என்றால் போர், பவன் என்றால் உதித்தவன் என்கிற பொருளில் மங்களம், ஒளிக்கொடை, சாத்வீகம், வீரம் போன்ற சிறப்பியல்புகளுடன் தோன்றியவன் என்றும் கூறுவர்.
ஆறுமுகம் :
சிவ பெருமானுக்குள்ள ஐந்து முகங்களுடன், அதாவது ஒரு முக லிங்கத்தில் இருந்து ஐந்து முக லிங்கங்கள் வரை உடையவை ஆகும். ஒவ்வொரு முகமும் ஒவ்வொரு திசையைப் பார்த்துக் கொண்டு இருக்கும். ஆறாவது முகம் அதோ முகம் என்று சொல்லப்படும். அது பாதாளத்தைப் பார்த்துக் கொண்டு இருக்கும் எனவும், சக்திகள் அதில் இருந்தே ஆரம்பம் எனவும் சொல்லப்படுகிறது.
இந்த ஆறாவது முகத்தில் இருந்து தான் சிவஸ்வரூபம் ஆன சுப்ரமணியர், நெற்றிக் கண்ணில் இருந்து தோன்றியதாகவும் சொல்லப்படுகிறது. பரம்பொருளான அந்த ஈசனுக்கு ஆறுமுகங்கள் என்றாலும் நம்மால் அறியும் வகையில் இருப்பவை ஐந்து முகங்களே ஆகும். அதனால் தான் சுப்ரமணியருக்கு இறைவனின் சொரூபம் என உணர்த்தும் வகையில் ஆறுமுகங்கள் அமைந்தது எனவும் சொல்லப்படுகிறது. இதனால் தான் சிவ பெருமானுக்குள்ள ஐந்து முகங்களுடன் அதோ முகம் சேர்ந்து ஆறுமுகங்களானதால் ஆறுமுகம் எனும் பெயர் வந்தது. திரு, புகழ், ஞானம், வைராக்கியம், வீரியம், ஐஸ்வர்யம் என்பவைதான் ஆறுமுகங்கள் என்றும் கூறுவார்கள்.
கந்தன் :
கந்து என்றால் நடுவில் இருப்பது. சிவனுக்கும் உமையாளுக்கும் நடுவில் இருப்பதால் கந்தன் என்கிற பெயர் ஏற்பட்டது. ஸ்கந்தம் என்றால் தோள் என்ற அர்த்தமும் உண்டு. இதற்கு வலிமையுடையவன் என்றும் பொருள்படும்.
வேலன் :
வேலன் என்பது வெற்றியைத் தருகிற வேலைக் கையில் ஏந்தியதால் வந்த பெயர். முருகனுக்கு அடையாளமும் இந்த வேல்தான்.
சுப்பிரமணியம் :
சு என்றால் ஆனந்தம். இன்பமும் ஒளியும் வடிவாக உடையவன் என்பது இதன் அர்த்தம். புருவ மத்திய (ஆக்ஞை) ஸ்தானத்தில் ஆறு பட்டையாக உருட்சி மணியாக, பிரகாசம் பொருந்திய ஜோதிமணியாக விளங்குவதால் சுப்பிரமணியன் என்று அழைக்கப்பட்டார்.
கார்த்திகைப் பெண்கள் வளர்த்ததால் கார்த்திகேயன் என்றும், அப்பெண்களுக்கு வாகுலை என்ற மற்றொரு பெயர் உள்ளதால் வாகுலேயன் என்றும், ஆண்டிக் கோலத்தில் ஞானப்பழமாக விளங்குவதால் பழநி என்றும், தனது அடியவர்களை உற்ற வேளையில் வந்து காக்கும் சிறப்பால் வேளைக்காரன் என்றும் சிவன், சக்தி, திருமால் மூவரையும் இணைக்கும் தெய்வமாக இருப்பதால் மால் முருகன் என்றும் பெயர்கள் வழங்கப்படுகிறது.
இது தவிர இன்னும் எத்தனையோ பெயர்கள் முருகனுக்கு வழங்கப்படுகிறது. முருகக் கடவுள் தமிழர்களால் தமிழ்க் கடவுள் என்றும் அழைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.


Saturday, 10 February 2018

சுடலைமாடன் கதை

சுடலைமாடன் கதை

உலகுக்கு அம்மையும் அப்பனுமாக விளங்கும் சிவனாரும் பார்வதியும் கயிலையிலே
வீற்றிருந்தார்கள். அச்சமயத்தில் ஈசனார் "பார்வதி... நான் சென்று உலகின்
ஜீவராசிகளுக்கு அவர்களின் வினைப்பயன்படி படியளந்து வருகின்றேன்." என்று
சொல்லிப் புறப்பட்டார். ஈசனார் பூலோகத்தில் உள்ள எறும்பு முதலிய சிறிய
ஜீவராசிகள் முதற்கொண்டு கருப்பையில் தங்கியிருக்கும் ஜீவன் வரையிலான
அனைத்து ஜீவராசிகளுக்கும் அவர்தம் வினைப்பயன்படி படியளப்பது ஈசனாரின்
வழக்கம். ஈசனார் தன் பணியைத் தவறாமல் செய்கின்றாரா என்று பார்வதியாளுக்கு
சந்தேகம். எனவே ஈசனாரை சோதித்துப் பார்ப்போம் என்று முடிவு செய்தாள்.
எனவே குமிழ் ஒன்றை எடுத்து அதில் ஒரு சிற்றெரும்பைப் பிடித்துப்
போட்டாள். அதனுள் காற்றும் புக இயலாது... எனவே இந்த எறும்புக்கு ஈசனார்
எப்படிப் படியளப்பார் என்று எண்ணிக்கொண்டிருந்த வேளையில் படியளந்த பரமன்
கைலாயம் திரும்பினார்.
உமையவள் ஈசனாரிடம் "ஈசனே... தாங்கள் இன்றைக்கு அத்தனை ஜீவராசிகளுக்கும்
படியளந்துவிட்டீர்களா?" என்று கேட்டாள்..
"ஆம் தேவி.. அவரவர் முற்பிறவியில் செய்த பாவ புண்ணியங்களுக்கேற்பவும்,
இப்பிறவியில் அவர்கள் செய்து வருகின்ற பாவ புண்ணியங்களுக்கேற்பவும்
அனைத்து ஜீவராசிகளுக்கும் உணவளித்து விட்டு வந்தேன்" என்றார் பரமன்.
"தங்களின் பணியில் ஒரு உயிரினம் கூட விடுபட்டிருக்காதா?" என்று வினவினாள் அம்மை..
"அதெப்படியாகும்? இந்த பணியில் தவறு எதுவும் நேர்ந்துவிடக்கூடாது
என்பதற்காகத்தான் நானே நேரில் சென்று படியளந்து விட்டு வருகின்றேன்"
என்றார் இறைவன்.
"இன்றைக்கு நீங்கள் படியளந்ததில் ஓர் உயிரினம் விடுபட்டுவிட்டது"
"ஒருக்காலும் இல்லை.. அனைத்து ஜீவராசிகளுக்கும் படியளந்துவிட்டேன்"
"இல்லை. ஒரு சிற்றெறும்பு விடுபட்டு விட்டது" என்று சொல்லி பார்வதியாள்
அந்தக் குமிழைத் திறந்தாள்..
அங்கே அந்த சிற்றெறும்புவின் வாயில் ஓர் அரிசியைக் கவ்விக் கொண்டிருந்தது..
இதைக் கண்டதும் பார்வதியாளுக்குத் தன் தவறு புரிந்தது..
"இறைவா.. என்னை மன்னித்து விடுங்கள்.. நான் தவறு செய்து விட்டேன்...
எல்லோருக்கும் படியளக்கும் பரம்பொருளை சோதனை செய்து விட்டேன்" என்று
ஈசனாரின் பாதங்களில் வீழ்ந்தாள்..
ஈசனோ கடுங்கோபம் கொண்டார்..
"நீ என் மனைவியாக இருந்தாலும், என்னை சோதனை செய்த படியால், பூலோகம் போ...
வனப்பேச்சியாக சுற்றித் திரி..." என்று சாபமிட்டார். (இந்த இடத்தில்
வில்லுப்பாட்டு அருமையாக இருக்கும்... கணவனை சோதித்ததால்
காட்டுப்பேச்சியாகப் போ.... மன்னனை சோதித்ததால் மயானப் பேச்சியாகப்
போ...என்று அழகாகப் பாடுவார்கள்)
மனமுடைந்த அம்மை அழுது புலம்பினாள்..
"இந்த சாபத்திற்கு விமோசனம் எப்போது தருவீர்கள்?" என்று ஈசனைக் கேட்டாள்..
"நீ என்னை நினைத்து மயானத்தில் நின்று தவம் செய்.. உரியகாலத்தில் யாமே
வந்து உன்னை மீட்போம்" என்று சொல்லி பார்வதியாளை பூலோகம் அனுப்பினார்..
மயான பூமியில் அம்மை பேச்சியம்மனாக அமர்ந்தாள்.. மனம் ஒன்றி ஈசனை எண்ணி
மாதவம் புரிந்தாள்..
அம்மையின் தவத்தைக் கண்ட ஈசன் இரங்கினார்.. அம்மை முன் தோன்றினார்.  அவள்
சாபத்தை நீக்கினார்...
"தேவி.. உனக்கு என்ன வரம் வேண்டும் கேள்" என்று சொல்ல
தேவியும் "ஐயனே... தாங்கள் எனக்கு இரு புதல்வர்களை அளித்தீர்கள்..
அவர்களும் தங்கள் வயது வந்த பின்னே என்னை விட்டுப் போய்விட்டார்கள்..
தாங்களும் படியளக்கிறேன் என்று சொல்லி என்னைத் தனியே விட்டுப்
போய்விடுகின்றீர்கள்.. எனவே எனக்கு ஓர் ஆண் குழந்தை வேண்டும். இப்பொழுதே
வேண்டும்" என்று வேண்டினாள்..
ஈசனாரும், "தேவி..பார் அங்கே... மயானத்தில் பிணம் எரிகின்றதல்லவா..
அப்பிணம் கொடுஞ்சுடராக எரிகையில் நீ அங்கே நின்று என்னை நினைத்து உன்
முந்தானையை ஏந்து...உனக்கு ஓர் ஆண்குழந்தை பிறக்கும். நீ குழந்தையை
எடுத்துக் கொண்டு கைலாயம் வந்து சேர்வாயாக" என்று சொல்லி மறைந்து
விட்டாள்.
பேச்சியம்மனும் அதைப்போல் பிணமொன்று கொடுஞ்சுடராக எரியும் வேளையில்
அருகில் சென்று தன் முந்தானையை ஏந்த அவள் மடியில் சுடலை முத்துக்கள்
தெரித்து விழுந்தன. அவை உறுப்புகள் ஏதுமற்ற ஓர் சதைப் பிண்டமாக
பேச்சியம்மாளின் மடியில் இணைந்தன.. பிண்டத்திற்கு உயிர் உள்ளது.. ஆனால்
எந்த உறுப்புகளும் இல்லையே என்று கலங்கிய பேச்சி மீண்டும் ஈசனை நினைத்து
அழுதாள். "பிள்ளை வரங்கேட்ட எனக்கு இந்த முண்டத்தைத் தந்து விட்டீர்களே"
என்று புலம்ப ஈசனார் தோன்றி அப்பிண்டத்திற்கு உறுப்புகளை அளித்து
அழகியதோர் ஆண்குழந்தையாக மாற்றி அம்மையிடம் தந்தருளினார்...
அம்மையும் முண்டமாகப் பிறந்த அந்தக் குழந்தைக்கு முண்டனென்றும்,
சுடலைமுத்துக்களால் பிறந்ததால் சுடலைமாடன் என்றும் பெயர் கொடுத்தாள்...
பின்னர் அம்மயானத்திலேயே பிள்ளைக்கு அமுது ஊட்டினாள். பிறகு தன்
குழந்தையை எடுத்துக் கொண்டு கயிலாயம் வந்து சேர்ந்தாள்.
அன்னையுடன் கயிலாயம் வந்த சுடலை நாளொருமேனியும், பொழுதொரு வண்ணமுமாக
வளர்ந்து வந்தான்.
அன்னையின் அமுதுண்டு வளர்ந்துவந்த சுடலைக்கு வயிற்றுப்பசி தீரவில்லை..
ஓர் நாள்.. நடுசாமம்..
பார்வதியாள் சுடலைக்கு அமுதூட்டிவிட்டு படுக்கைக்கு சென்று விட்டாள்.
நடுசாமத்திலே சுடுகாட்டில் பிணமொன்று எரிந்து கொண்டிருந்தது... அந்த
வாசனை கயிலாயத்தின் தொட்டிலில் படுத்திருந்த குழந்தைக்கு எட்டியது..
சுடலை நினைத்தான் "நம் அம்மா ஊட்டும் அமுது நமக்குப் போதாது.. நாம்
சென்று எரியும் இப்பிணத்தைத் தின்று வருவோம்" என்று..
தொட்டிலில் இருந்து இறங்கிய சுடலை சுடுகாடு சென்று எரியும் பிணங்களைத்
தின்றான். அங்கே சுற்றித் திரியும் பேய்களுக்கும் உணவளித்தான். பேய்களோடு
பேயாக சுடலை அங்கே நடனமாடினான்...
தன் தாய் தன்னைத் தேடும் வேளை வந்த போது கயிலாயம் சென்று தொட்டிலில்
குழந்தையாகப் படுத்து விட்டான்.
அதோடு மட்டுமல்ல... பசியில் அழும் குழந்தைபோல் சுடலை அழ ஆரம்பித்தான்..
தன் குழந்தையின் அழுகையைக் கேட்ட பார்வதியாளும் ஓடிவந்தாள்..
வந்தவள் குழந்தையை எடுத்து அணைத்தாள்... அப்போது குழந்தையின் மேல்
பிணவாடை வீசியது... இதைக் கண்ட பார்வதியாள் திகைப்படைந்து அழுதாள்..
"உம்மிடம் குழந்தை வரம் கேட்டால், இப்படிப் பிணந்திண்ணும் பேயை எனக்குத்
தந்து விட்டீரே" என்று ஈசனாரிடம் கதறினாள்..
ஈசனாரும் "பிணத்தைத் தின்று வந்து விட்டதால் சைவமான என் கயிலாயத்திற்கு
இவன் ஆகமாட்டான். எனவே இவனை பூலோகம் அனுப்பி வைக்க வேண்டும்" என்று
சொல்லி சுடலையை அழைத்தார்.
"மகனே... நீ பூலோகம் செல்லும் காலம் வந்து விட்டது.. உனக்கு அங்கு பணிகள்
பல உள்ளன.. எனவே நீ பூலோகம் செல்" என்று பணித்தார்.
சுடலையும் "ஐயனே.. என்னைப் பெற்றெடுத்த நீங்களே என்னை அனுப்பும்போது
என்னால் என்ன செய்ய இயலும்.? நான் செல்கிறேன்.. ஆனால் என் பசிக்கு நான்
என்ன செய்வேன்... நித்தம் நித்தம் பிணங்களை எதிர்பார்த்து வாழ இயலுமா?"
என்றான்.
ஈசனாரும் "மாய உருக்கொண்டு பிறந்த மாயாண்டி சுடலையே...நீ பூலோகம்
சென்றதும் நானே உன்னை வழி நடத்துவேன்.. பூலோகத்தார் உனக்குக் கொடை விழா
கொடுக்க நான் ஏற்பாடு செய்கின்றேன்.. நீ போகலாம்" என்றார்.
இவ்வாறு உரைத்த ஈசனாரிடம் சுடலை

செய்வினை

செய்வினை

செய்வினை தோசம் இருப்பதை எவ்வாறு அறிவது?
இப்படிப்பட்ட செய்வினை, ஏவல், பில்லி, சூனியம், கண்திருஷ்டி மற்றும் பிற தீயசக்திகளும் எதிர்மறை சக்திகளும் அழிந்தோட ஒரு எளிய முறை உண்டு. இதோ அதன் செய்முறை…!
மனிதபிறவி எடுக்கும் ஒவ்வொருவரும் தமது கர்மவினைகளை அனுபவிக்க பிறந்தவர்களே…! நம்முடைய கர்மவினைகளுக்கு ஏற்ப நன்மையோ அல்லது தீமையோ நம் வாழ்வில் நடந்தவண்ணம் இருக்கும். ஒருவருக்கு செய்வினை பாதிப்பு ஏற்படுவதும் அவரது கர்மவினையை பொறுத்ததே. அந்த பாதிப்பிலிருந்து விடுபடுவதும் விடுபடாமல் பிறரால் ஏமாற்றப்படுவதும் அவரது கர்மவினை பலனே.
இக்காலத்தில் பொறாமை, வஞ்சனை கொண்ட மனிதர்கள் தமது எதிரிகளை நேரடியாக எதிர்க்க துணிவில்லாமல் மறைமுகமாக தாக்கி அழிக்கவே ஏவல், பில்லி, சூனியம் மற்றும் செய்வினை இவற்றை செய்கின்றனர். இது நம் நாட்டில் மட்டுமல்லாது வெளிநாடுகளிலும் நடந்து கொண்டு தான் இருக்கிறது. இது எல்லா மதங்களிலும் காணப்படுகிறது. இதற்கு சாதி, மதம், நாடு என்ற பேதம் இல்லை. வெகு சுலபமாக செய்வினை செய்கிறார்கள். ஒருவருக்கு செய்வினை செய்யும் எவரும் நல்ல முறையில் வாழ்ந்ததாக சரித்திரம் இல்லை. கடவுள் என்ற மாபெரும் சக்தியின் தண்டனையிலிருந்து எவரும் தப்ப முடியாது.
மாந்திரீகம் மூலம் மற்றவர்களுக்கு கெடுதலை உண்டாக்கும் மனிதர்களே இவ்வுலகில் தீய சக்தி ஆவார்கள். அவர்கள் மற்றவர்களைக் காட்டிலும் நன்றாக வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். ஆனால் இவர்களிடம் மாட்டிக்கொண்டு அவதிபடுபவர்கள் எண்ணிக்கை சொல்லிலடங்காது. இவ்வாறு அவதிபடுபவர்கள் தங்களின் துன்பம் தீர மந்திரவாதிகளை அணுகி தீர்வு பெற நினைக்கின்றனர். ஆனால் 100 க்கு 95 பேர் தீர்வு கிடைக்காமல் அந்த மந்திரவாதிகளின் பிடியில் சிக்கி தங்களின் பணத்தையும், வாழ்வையும், நிம்மதியையும் தொலைக்கின்றனர். அவ்வளவு ஏன் கற்பினை இழந்த பெண்களும் உண்டு.
செய்வினையால் பாதிக்கப்பட்டவர்களில் மகான்களும் உள்ளனர். ஆதிசங்கரர், அருணகிரிநாதர் போன்றோரே இதற்கு சாட்சி. மனிதர்களுக்கு மட்டுமல்லாமல் தெய்வத்திற்கே சூனியம் செய்த வரலாறும் உண்டு. பண்டாசூரன் விக்ன யந்திரத்தின் மூலம் சக்தியின் சேனைகளை நோயுற செய்தான். சக்தியால் அவனை வெல்ல இயலவில்லை. தடைகளும், அபசகுணங்களும் ஏற்பட்டன. அதன் பிறகே சக்தி தனது மைந்தனாகிய விநாயக பெருமானை வேண்ட விநாயக பெருமான் அந்த விக்ன யந்திரத்தை கிழித்து கடலில் எறிந்தார். அதன் பின்னரே சக்தி பண்டாசூரனை வதம் செய்தாள்.
இப்படிப்பட்ட செய்வினை, ஏவல், பில்லி, சூனியம், கண்திருஷ்டி மற்றும் பிற தீயசக்திகளும் எதிர்மறை சக்திகளும் அழிந்தோட ஒரு எளிய முறை உண்டு. இதோ அதன் செய்முறை…!
பொருட்கள் அளவு
வெண்கடுகு 250 கிராம்
நாய்க்கடுகு 250 கிராம்
மருதாணி விதை 250 கிராம்
சாம்பிராணி 250 கிராம்
அருகம்புல் பொடி 50 கிராம்
வில்வ இலை பொடி 50 கிராம்
வேப்ப இலை பொடி 50 கிராம்

மேற்கண்ட பொருட்களை தயார் செய்து கொள்ளவும். இவை அனைத்தும் நாட்டு மருந்து கடைகளில் வெகு எளிதாக கிடைக்கக்கூடியவை. எங்கும் தேடி அலைய வேண்டாம். சாம்பிராணியை மட்டும் பொடி செய்து கொண்டு மீதமுள்ள 6 பொருட்களுடன் சேர்த்து ஒரு கலனில் அடைக்கவும்.
இவ்வாறு தயாரிக்கப்பட்ட பொருட்களின் கலவையை செவ்வாய், வியாழன் மற்றும் ஞாயிறு கிழமைகளில் அடுப்புக்கரி நெருப்பில் தூவி தூபம் போடவும். தி்னமும் செய்தால் தவறில்லை. 48 நாட்களுக்குள் நிச்சயம் பலனுண்டாகும். ஏவல், பில்லி, சூனியம், செய்வினை, எதிர்மறை மற்றும் தீய சக்திகள் அனைத்தும் நிச்சயம் நீங்கும். குடும்பத்தில் அமைதி உண்டாகும். குடும்பத்தின் உறுப்பினர்களிடையே ஒற்றுமை உண்டாகும். லட்சுமி கடாட்சம் உண்டாகும்.
மேற்கண்ட கலவையை நெருப்பில் தூவும் போது கீழே சிந்தாமல் கவனித்துக் கொள்ளவும். ஏனெனில் மேற்கண்ட 7 பொருட்களும் தெய்வத்தன்மை பொருந்தியவை. யார் காலிலும் படக்கூடாது. மேற்கண்ட முறையை பயன்படுத்தி மாந்திரீக கோளாறுகளிலிருந்து பாதிக்கப்பட்ட குடும்பங்களை காப்பாற்ற by எல்லாம் வல்ல இறைவன் அருள் துணை நிற்கும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.

Monday, 5 February 2018

கோவில்களில் அபிசேக ஆராதனை செய்யும் போது

கோவில்களில் அபிசேக ஆராதனை செய்யும் போது

 கோவில்களில் அபிசேக ஆராதனை செய்யும் போது, பால், தயிர், பழங்கள், பஞ்சாமிர்தம் ... இது போன்ற பொருட்கள் கொண்டு அபிசேகம் செய்கின்றனர் ...? ஏன் ...?

அனைவரும் கோவிலில் அபிசேகம் பார்த்திருப்போம்,
இந்த செயல் நம்மைச் சுற்றியுள்ள காற்று மண்டலத்தில் இருக்கும் வைரஸ்கள் மற்றும் பாக்டீரியாக்களை கவர்ந்திழுத்து தம்முள் வைத்துக்கொண்டு, வளர்த்தி, அழித்து அதை மேலும் பரவாமல் தடுக்கும் பொருட்களால் நடக்கும்.
மேலும் இந்தப் பொருட்களில் இருக்கும் மினரல்கள் இறைவன் திருவுருவமாகிய கல்லின் உறுதிக்கு ஆதரவான, தேவையான பொருட்களை உள்ளடக்கம் கொண்டது. மேலும் இந்த செயல்கள் மனித உடலுக்கும் தேவையானதே.
அர்ஜனையின் போது முதலில் இறைவனை அகம விதியின் படி முதலில்
1) குளிர்ந்த நீரில் ஆரம்பிப்பார்கள்
2) பால்
3) தயிர்
4) பஞ்சாமிர்தம்.
5) பழங்கள்
6) இனிப்பு சுவையுள்ள பொருட்கள் (வெல்லம், கரும்புச்சாறு, கரும்புச்சர்க்கரை) போன்ற பொருட்கள்.
7) தேன்
8.)இளநீர்
9) சந்தனம்
10) திருமஞ்சன பொருட்கள் மற்றும் வாசனைத்திரவியங்கள்
11) உதிரிப்பூக்கள்
போன்ற பொருட்களைக்கொண்டு அபிஷேகம் செய்வார்கள்.
இதில் ஒவ்வொரு பொருட்களும் ஒரு கிருமிகள் இழுப்பானாக்ச் செயல்பட்டு, காற்றில் உள்ள கிருமிகளை தனக்குள் இழுக்கும்.
அதன் விளக்கம்
1) குளிர்ந்த நீர் :-
குளிர்ந்த நீரில் அபிஷேகம், இது கடவுள் சிலையை நுண்ணூட்டச் சத்துக்களை உள்ளிழுக்க தயார் செய்யும்.
2) அபிசேகப் பொருட்கள்
அபிசேகப் பொருட்களில் உள்ள அணைத்து ஊட்டச்சத்துக்களும் சிலைக்குள் செல்லாது, இங்குதான் அடுத்த சூட்சுமம் நடக்கத் துவங்குகிறது, அபிசேகப் பொருட்கள் அதன் அருகில் உள்ள காற்றுப் பகுதியில் உள்ள வைரஸ் மற்றும் பாக்டீரியாக்களை தன்பால் ஈர்க்கும். அதன்பால் ஈர்க்கப்பட்ட வைரஸ் மற்றும் பாக்டீரியாக்கள் அபிசேகப் பொருட்களுக்குள் சென்ன்றால் பின் அதன் அதனால் வெளிவரமுடியாது. அங்கு அது பல்கிப்பெருகி அந்தப் பொருளை அழிக்கும், ஆனால் அந்த பொருட்களைவிட்டு அதனால் வெளியே வந்து காற்றில் கலக்க முடியாது. பின் உயிரிழக்கும்.
இந்த செயல்பாடுகலுக்கானதே இந்த அபிசேகப் பொருட்களின் வேலை. .
இதில் இந்த செயல்பாடுகள் நடக்கும் போது பொருட்கள் கெட்டுப்போய் அதன் கெட்டுப்போன வாசம் அதிகமாக வரும், அதன் காரணமாக அதைத் தடுக்க சந்தனம் மற்றும் திருமஞ்சனப் பொருட்கள் உபயோகப்படுத்துகின்றோம்.
இவைகள் அனைத்தும் தினமும் ஏதாவது ஒரு கோவில்களில் நடந்துகொண்டே இருக்கும் அபிசேக நடைமுறைகளாகும்.
காற்று மண்டலத்தில் மனிதனுக்கு மிக அருகில் இருக்கும் வைரஸ்கள் மற்றும் பாக்டீரியாக்களை கட்டுப்படுத்தி அவைகளை பரவிடாமல் அழிக்கும் வேலைகள் இந்த செயல்பாடுகளின்மூலம் நடக்கின்றன.
3) இனிப்பு சுவையுள்ள வெல்லம், கரும்புச்சாறு, கரும்புச்சர்க்கரை, தேன் போன்ற பொருட்கள்.
இந்த அபிஷேகம் தொடர்ச்சியாக நடந்துகொண்டிருக்கும் கோவில்களின் கழிவு நீர் மற்றும் கழிவுப் பொருட்கள் தேங்கும் நிலப்பரப்பின் மேல்பகுதி காற்று அதிகமாக உட்புக முடியாமல் கெட்டிப்படும். அந்த செயல்பாடுகளை தவிர்க்க நமக்கு மிகுந்த உதவி செய்பவை எறும்புகளும், கரையான்களும். இவைகள் மண்ணின் உட்பக்கமிருந்து மண்ணைக் குடைந்துகொண்டு மேலே வரும் இனிப்புப் பொருட்களை சாப்பிட, அதன் மூலம் அந்த நிலப்பகுதியில் நீர் வேகமா நிலப்பரப்பினுள் செல்லும், காற்றும் அதிகமாக மண்ணினுள் செல்லும். அந்தப் பகுதி மண்ணும் வளப்படும்.

இதுதான் நாம் செய்யும் அபிசேகத்தின் முக்கியமான பின் செயல்பாடுகள்.
இந்த அபிசேகத்தின் மூலம் நம் மனதை ஒருமுகப்படுத்தி அங்கு அமர்ந்து கடவுளின்பால் நமது முழு மனதையும் செலுத்தி வணங்குவதன் மூலம் நமது மனம் செம்மைப்படும்.

பிரசாதப் பொருட்களாக இதை நாம் அருந்தினால் அது நம் உடலுக்குத் தேவையான பல மினரல்களை நமக்குக் கொடுக்கின்றது.


Saturday, 3 February 2018

கர்மவீரர் காமராசர்..

 கர்மவீரர் காமராசர்..


 இவரது வாழ்க்கைக் பற்றி அனைத்து தமிழர்களுக்கும் நன்கு தெரியுமாதலால் வழக்கமாக சொல்லும் பிறப்பு இறப்பு விசயங்களை தவிர்த்துவிட்டு பெருந்தலைவர் பற்றிய சில துணுக்குகள்.. படித்து உங்கள் கருத்துக்களை பகிருங்கள் நண்பர்களே..
1. காமராஜர், ஒருவரை ஒரு தடவை பார்த்து பேசி விட்டால் போதும், அவரை எத்தனை ஆண்டுகள் கழித்து பார்த்தாலும், மிகச் சரியாக சொல்வார். அந்த அளவுக்கு அவரிடம் ஞாபகசக்தி மிகுந்திருந்தது.
2. கட்சி சுற்றுப் பயணத்தின் போது எல்லோரும் சாப்பிட்ட பிறகுதான் காமராஜர் சாப்பிடுவார்.
3. காமராஜரிடம் பேசும் போது, அவர் "அமருங்கள், மகிழ்ச்சி, நன்றி'' என அழகுத் தமிழில்தான் பேசுவார்.
4. காமராஜரின் ஆட்சி இந்தியாவின் மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாய் இருக்கிறது என்று முன்னாள் குடியரசுத் தலைவர் பாபு ராஜேந்திர பிரசாத் சொல்லி இருக்கிறார்..
5. நேரு, சர்தார்படேல், சாஸ்திரி உள்ளிட்ட வட மாநில தலைவர்களுடன் பேசும் போது மிக, மிக அழகான ஆங்கிலத்தில் காமராஜர் பேசுவதை பலரும் கேட்டு ஆச்சரியத்தில் வாயடைத்து போய் இருக்கிறார்கள்.
6. காமராஜருக்கு கோபம் வந்து விட்டால் அவ்வளவுதான், திட்டி தீர்த்து விடுவார். ஆனால் அந்த கோபம் மறுநிமிடமே பனி கட்டி போல கரைந்து மறைந்து விடும்.
7. தமிழ்நாட்டில் எந்த ஊர் பற்றி பேசினாலும், அந்த ஊரில் உள்ள தியாகி பெயர் மற்றும் விபரங்களை துல்லியமாக சொல்லி ஆச்சரியப்படுத்துவார்.
8. காமராஜர் தன் ஆட்சி காலத்தில் உயர் கல்விக்காக ரூ.175 கோடி செலவழித்தார். இது அந்த காலத்தில் மிகப் பெரிய தொகையாகும்.
9. தனது பாட்டி இறுதி சடங்கில் கலந்து கொண்ட காமராஜர் தோளில் துண்டு போடப்பட்டது. அன்று முதல் காமராஜர் தன் தோளில் துண்டை போட்டுக் கொள்ளும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டார்.
10. காமராஜருக்கு மலர்மாலைகள் என்றால் அலர்ஜி. எனவே கழுத்தில் போட விடாமல் கையிலேயே வாங்கிக் கொள்வார்.
11. கதர்துண்டுகள் அணிவித்தால் காமராஜர் மிக, மிக மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்வார். ஏனெனில் அந்த கதர் துண்டுகள் அனைத்தையும் பால மந்திர் என்ற ஆதரவற்றோர் இல்லத்துக்கு கொடுத்து விடுவார்.
12. பிறந்த நாளன்று யாராவது அன்பு மிகுதியால் பெரிய கேக் கொண்டு வந்து வெட்ட சொன்னால், " என்னய்யா... இது?'' என்பார். கொஞ்சம் வெட்கத்துடன்தான் "கேக்'' வெட்டுவார்.
13. 1966ம் ஆண்டு ஜெய்ப்பூரில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் பேசிய காமராஜர், "மக்களுக்கு குறைந்த விலையில் பொருட்களை வழங்கும் தொழில்களை நிறைய தொடங்க வேண்டும்'' என்றார். இந்த உரைதான் இந்திய பொருளாதார துறையில் மாற்றங்களை ஏற்படுத்தியது.
14. பெருந்தலைவரை எல்லாரும் காமராஜர் என்று அழைத்து வந்த நிலையில் தந்தை பெரியார்தான் மேடைகள்தோறும் "காமராசர்'' என்று கூறி நல்ல தமிழில் அழைக்க வைத்தார்.
15. காமராஜருக்கு "பச்சைத்தமிழன்'' என்ற பெயரை சூட்டியவர் ஈ.வெ.ரா.பெரியார்.
16.காமராஜர் தன் டிரைவர், உதவியாளர்களிடம் எப்போதும் அதிக அக்கறை காட்டுவார். குறிப்பாக அவர்கள் சாப்பிட்டு விட்டார்களா என்று பார்த்து உறுதிபடுத்திக் கொள்வார்.
17. காமராஜருக்கு ராமரை மிகவும் பிடிக்கும். எனவே அவர் ஓய்வு நேரங்களில் ராமாயணம் படிப்பதை வழக்கத்தில் வைத்திருந்தார்.
18. காமராஜர் ஒரு தடவை குற்றாலத்தில் சில தினங்கள் தங்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது அவர் சாமிதோப்பு அய்யா வைகுண்டரின் வரலாற்று காவியமான அகிலத்திரட்டு நூலை ஒருவரை வாசிக்கச் சொல்லி முழுமையாகக் கேட்டார்.
19. ஒரு தடவை 234 பஞ்சாயத்து விரிவாக்க அலுவலர்களை பணி நீக்கம் செய்யும் கோப்பு காமராஜரிடம் வந்தது. அதில் கையெழுத்திட மறுத்த காமராஜர் அந்த 234 பேரையும் வேறு துறைக்கு மாற்றி உத்தரவிட்டார்.
20. பிரதமர் நேரு, காமராஜரை பொதுக் கூட்டங்களில் பேசும் போதெல்லாம், "மக்கள் தலைவர்'' என்றே கூறினார்.
21. வட மதுரையில் இருந்து அரசாண்ட கம்சனின் மந்திரி சபையில் 8 மந்திரிகள் இருந்ததாக பாகதம் கூறுகிறது. இதை உணர்ந்தே காமராஜரும் தன் மந்திரி சபையில் 8 மந்திரிகளை வைத்திருந்ததாக சொல்வார்கள்.
22. தமிழ்நாட்டில் காமராஜரின் காலடி தடம் படாத கிராமமே இல்லை என்று சொல்லும் அளவுக்கு அவர் எல்லா கிராமங்களுக்கும் சென்றுள்ளார். இதனால்தான் தமிழ்நாட்டின் பூகோளம் அவருக்கு அத்துப்படியாக இருந்தது.
23. காமராஜர் திட்டத்தின் கீழ் காமராஜரே முதன் முதலாக தாமாக முன் வந்து 2.10.1963ல் முதல் அமைச்சர் பதவியை ராஜினமா செய்தார்.
24. 9 ஆண்டுகள் முதல்-மந்திரியாக இருந்த காமராஜர் சட்டசபையில் 6 தடவைதான் நீண்ட பதில் உரையாற்றி இருக்கிறார்.
25. காங்கிரஸ் கட்சியை மிக, மிக கடுமையாக எதிர்த்து வந்தவர் ராமசாமி படையாச்சி, அவரையும் காமராஜர் தன் மந்திரி சபையில் சேர்த்துக் கொண்ட போது எல்லோரும் ஆச்சரியப்பட்டனர்.
26. சட்டத்தை காரணம் காட்டி எந்த ஒரு மக்கள் நல திட்டத்தையும் கிடப்பில் போட காமராஜர் அனுமதித்ததே இல்லை. "மக்களுக்காகத்தான் சட்டமே தவிர சட்டத்துக்காக மக்கள் இல்லை'' என்று அவர் அடிக்கடி அதிகாரிகளிடம் கூறுவதுண்டு.
27. தவறு என்று தெரிந்தால் அதை தட்டி கேட்க காமராஜர் ஒரு போதும் தயங்கியதே இல்லை. மகாத்மா காந்தி, தீரர் சத்தியமூர்த்தி உள்பட பலர் காமராஜரின் இந்த துணிச்சலால் தங்கள் முடிவை மாற்றியது குறிப்பிடத்தக்கது.
28. காமராஜர் எப்போதும் "முக்கால் கை'' வைத்த கதர்ச் சட்டையும், 4 முழு வேட்டியையும் அணிவதையே விரும்பினார்.
29. காமராஜர் மனிபர்சோ, பேனாவோ ஒரு போதும் வைத்துக் கொண்டதில்லை. ஏதாவது கோப்புகளில் கையெழுத்து போட வேண்டும் எனறால், அருகில் இருக்கும் அதிகாரியிடம் பேனா வாங்கி கையெழுத்திடுவார்.
30. காமராஜர் எப்போதும் ஒரு பீங்கான் தட்டில்தான் மதிய உணவு சாப்பிடுவார். கடைசி வரை அவர் அந்த தட்டையே பயன்படுத்தினார்.
31. காமராஜர் தினமும் இரண்டு அல்லது மூன்று தடவை குளிப்பார். அவருக்கு பச்சைத் தண்ணீரில் குளிப்பது என்றால் மிகவும் பிடிக்கும். குளித்து முடித்ததும் சலவை செய்த சட்டையையே போட்டுக் கொள்வார்.
32. காமராஜரின் எளிமை நேருவால் போற்றப்பட்டிருக்கிறது. `எனக்குத் தெரிந்து இவருடைய சட்டைப் பையில் பணம் இருந்ததில்லை' என்று நேரு குறிப்பிட்டதுண்டு.
33. காமராஜர் நாளிதழ்களை படிக்கும் போது எந்த ஊரில் என்ன பிரச்சினை உள்ளது என்பதை உன்னிப்பாக படிப்பார். பிறகு அந்த ஊர்களுக்கு செல்ல நேரிடும் போது, அந்த பிரச்சினை பற்றி மக்களுடன் விவாதிப்பார்.
34. காமராஜர் ஒரு தடவை தன் பிரத்யேக பெட்டிக்குள், இன்சைடு ஆப்பிரிக்கா, என்ட்ஸ் அண்ட் மீனஸ், டைம், நியூஸ்வீக் ஆகிய ஆங்கில இதழ்களை வைத்திருப்பதை கண்டு எழுத்தாளர் சாவி ஆச்சரியப்பட்டார்.
35. எந்தவொரு செயலையும் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று செய்து விட மாட்டார். நிதானமாக யோசித்துத்தான் ஒரு செயலில் இறங்குவார். எடுத்த செயலை எக்காரணம் கொண்டும் செய்து முடிக்காமல் விட மாட்டார்.
36. காமராஜருக்கு மக்களுடன் பேசுவது என்றால் கொள்ளைப் பிரியம் உண்டு. தன்னைத் தேடி எத்தனை பேர் வந்தாலும் அவர்கள் எல்லாரையும் அழைத்து பேசி விட்டுத்தான் தூங்க செல்வார். அவர் பேசும் போது சாதாரண கிராமத்தான் போலவே பேசுவார்.
37. காமராஜர் 1920-ம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரஸ் உறுப்பினர் ஆனார்.
38. 1953-ல் நேருவிடம் தமக்கு இருந்த நட்பை பயன்படுத்தி, நாடாளுமன்றத்தில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக முதல் சட்டத் திருத்தம் கொண்டு வந்தவர் பெருந்தலைவர் காமராஜர் என்பது குறிப்பிடத்தக்கது.
39. வட இந்திய மக்கள் காமராஜரை `காலா காந்தி' என்று அன்போடு அழைத்தார்கள். `காலா காந்தி' என்றால் `கறுப்பு காந்தி' என்று அர்த்தம்.
40. சட்ட சபையில் சமர்ப்பிக்கப்படும் வரவு செலவு திட்டத்தை முதல் முறையாக தமிழில் சமர்ப்பித்த பெருமை காமராஜரையே சேரும்.
41. 12 ஆண்டுகள் காமராஜர் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக இருந்து தமிழ்நாட்டில் காங்கிரஸ் வேரூன்றவும், காங்கிரஸ் ஆட்சி ஏற்படவும் பாடுபட்டார்.
42. காமராஜர் அகில இந்தியக் காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக சுமார் 2 ஆண்டு காலம் பதவி வகித்து, இந்தியாவிலுள்ள எல்லா மாநிலங்களுக்கும் சுற்றுப் பயணம் செய்து காங்கிரஸ் கட்சி வளர்ச்சிக்கு அரும் பாடுபட்டார்.
43. காமராஜர் இளம் வயதில் கொஞ்சக் காலம் இன்சூரன்ஸ் ஏஜெண்டாக இருந்தார். பின்பு அதை விட்டு விட்டார்.
44. காமராஜர் புகழ் இந்தியா மட்டுமின்றி உலகமெங்கும் பரவியது. அமெரிக்காவும், ரஷியாவும் அவரைத் தங்கள் நாடுகளுக்கு அரசு விருந்தாளியாக வர வேண்டும் என்று வேண்டுகோள்கள் விடுத்தன.
45. காமராஜர் 1966-ம் ஆண்டு சோவியத் நாட்டுக்குச் சென்றார். கிழக்கு ஜெர்மனி, ஹங்கேரி, செக்கோஸ்லேவாக்கியா, யூகோஸ்லோவாக்கிய, பல்கேரியா போன்ற ஐரோப்பிய நாடுகளுக்கும் சென்று வந்திருக்கிறார்.
46. தனுஷ்கோடி நாடார், முத்துசாமி ஆசாரி ஆகிய இருவரும் காமராஜரின் நண்பர்களாக அவர் வாழ்நாள் முழுவதும் இருந்தார்கள்.
47. 1953-ல் ஒரே கிளை நூலகம் மட்டும் இருந்தது. ஏழை மாணவர்கள் பொது அறிவு பெறுவதற்காக 1961-ல் 454 கிளை நூலகங்கள் ஆரம்பிக்கப்பட்டது. ஆரம்பித்து வைத்தவர் பெருந்தலைவர் காமராஜர்.
48. 1947-க்கு முன்பு காமராஜர் சென்னைக்கு வந்தால் ரிப்பன் மாளிகையின் எதிரில் ரெயில்வே பாதையை ஒட்டியுள்ள `ஓட்டல் எவரெஸ்ட்'டில் தான் தங்குவது வழக்கம். ஒரு நாளைக்கு இரண்டு ரூபாய்தான் வாடகை.
49. காமராஜர் தனது ஆடைகளைத் தானே துவைத்துக் கொள்வார். பாரதி பக்தர் காமராஜர். எப்போதும் தன்னோடு பாரதியார் கவிதைகளை வைத்திருப்பார்.
50. காமராஜர் ரஷியப் பயணத்தின் போது மாஸ்கோ வரவேற்பில் காமராஜர், பாரதியின் ஆகா வென்றெழுந்து பார் யுகப் புரட்சி' என்ற பாடலைப்பாடி ரஷிய மக்களின் பாராட்டுக்களைப் பெற்றார்.
51. பிரிட்டிஷ் இளவரசியும், அவரது கணவன் எடின்பரோ கோமகனும் சென்னைக்கு வந்திருந்த போது காமராஜர் தமிழகத்தின் முதல்-அமைச்சர். அவர்களோடு ஆங்கிலத்தில் பேசி ஆச்சரியப்படுத்தினார்.
52. காமராஜர் ஆட்சியில் தமிழ்நாட்டில் சுமார் 33,000 ஏரி, குளங்களை சீர்படுத்த சுமார் ரூ.28 கோடி செலவிடப்பட்டது.
53. காமராஜரால் அறிமுகப்படுத்தப்பட்ட இலவசக் கல்வி முதன் முதலாக திருச்செந்தூரில் ஆரம்பிக்கப்பட்டது.
54. பயிற்சி டாக்டர்களுக்கு முதன் முதலாக உதவித் தொகை வழங்கியது காமராஜர் ஆட்சியில்தான்.
55. காமராஜர் என்றுமே பண்டிகை நாட்களை கொண்டாடியதும் இல்லை. அந்நாட்களில் ஊருக்குப் போவதுமில்லை.
56. காமராஜருக்கு சாதம், சாம்பார், ரசம், தயிர், ஒரு பொறியல் அல்லது கீரை இவ்வளவுதான் சாப்பாடு. காரமில்லாததாக இருக்க வேண்டும். இரவில் ஒரு கப் பால், இரண்டு இட்லி, காஞ்சீபுரம் இட்லி என்றால் விரும்பி சாப்பிடுவார்
57. காமராஜரின் முகபாவத்தில் இருந்து எளிதில் யாரும் எதையும் ஊகித்து விட முடியாது. எந்தவொரு வேண்டுகோளுக்கும் `யோசிக்கலாம்', `ஆகட்டும் பார்க்கலாம்' என்று சிறுவார்த்தைதான் அவரிடம் இருந்து வெளிப்படும்.
58. காமராஜர் விருது நகரில் இருந்து சென்னைக்கு கொண்டு வந்த ஒரே சொத்து ஒரு சிறிய இரும்பு டிரங்குப் பெட்டிதான்.
59. காமராஜரின் சகோதரி மகன் 62-ல் எம்.பி.பி.எஸ். சீட் கேட்டு சிபாரிசு செய்யக் கூறினார். ஆனால் காமராஜர் `மார்க் இருந்தா சீட் கொடுக்கிறாங்க' என அனுப்பிவிட்டார். பிறகு அவர் 2 வருடம் கழித்தே எம்.பி.பி.எஸ்.-ல் சேர்ந்தார்.
60. 1961-ம் வருடம் அக்டோபர் மாதம் 9-ந்தேதி காமராஜரின் உருவச் சிலையை நேரு திறந்து வைத்தார். இந்த விழாவில் காமராஜரும் கலந்து கொண்டார்.
61. பெருந்தலைவர் காமராஜர் எவரையும் மனம் நோகும்படி பேச மாட்டார். அரசியல் காழ்ப்புணர்ச்சி எதுவும் கருதாமல் நட்பு முறையுடன் மகிழ்ச்சியோடு பேசுவார்.
62. 1947-ம் ஆண்டு அரசியல் சட்டத்தை தயாரித்த அரசியல் நிர்ணய சபையில் தலைவர் காமராஜர் அவர்களும் ஒருவராக இருந்தார் என்ற செய்தி பலருக்கும் தெரியாது.
63. காமராஜர் தீவிரமாக அரசியல் பங்கு பெறக் காரணமாக இருந்தவர்கள் சேலம் டாக்டர் வரதராஜுலு நாயுடு, திரு.வி.கல்யாணசுந்தரனார், சத்தியமூர்த்தி ஆகிய மூவரும்தான்.
64. பெருந்தலைவர் காமராஜரின் கல்வி புரட்சியால் 1954-ல் 18 லட்சம் சிறுவர்கள் மட்டுமே படித்துக் கொண்டிருந்த நிலை மாறி 1961-ல் 34 லட்சம் சிறுவர்கள் படிக்கும் நிலை ஏற்பட்டது.
65. 1960-ம் ஆண்டு முதல் 11-வது வகுப்புவரை ஏழைப் பிள்ளைகள் அனைவருக்கும் இலவசக் கல்வி அளிக்க உத்தரவு இட்டு அதை செயல்படுத்தி காட்டி, இந்தியாவை தமிழ்நாட்டு பக்கம் திரும்பி பார்க்க வைத்தார்.
66. கஷ்டப்பட்ட மாணவர்களுக்கும், நன்றாக படிக்கும் மாணவ-மாணவிகளுக்கும் இலவச ஸ்காலர்ஷிப் பணமும் பெருந்தலைவர் காமராஜர் ஆட்சியில்தான் ஏற்படுத்தப்பட்டது.
67. காமராஜர் ஆட்சியில்தான் 60 வயது முதியவர்களுக்கும் பென்ஷன் திட்டம் கொண்டு வரப்பட்டது.
68. காமராஜர் தனது ஆட்சியில் ஒவ்வொரு பெரிய கிராமத்திலும் பிரசவ விடுதிகள், ஆஸ்பத்திரிகள் திறந்து வைத்து சாதனை படைத்தார்.
69. கேரளா மாநிலத்துடன் இணைக்கப்பட்டிருந்த நாகர்கோவில், செங்கோட்டை, சென்னையில் ஒரு பகுதியையும் தமிழ்நாட்டுடன் இணைத்த பெருமை காமராஜரையே சேரும்.
70. காமராஜரின் மறைவு கேட்டுப் பிரிட்டிஷ் அரசாங்கமே இரங்கல் செய்தி பிரதமர் இந்திரா காந்திக்கு அனுப்பி வைத்திருந்தது. அதில் காமராஜரின் தியாகமும், தேசத்தொண்டும், ஏழை மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த அவர் பாடுபட்டு வந்ததும் நினைவு கூறப்பட்டிருந்தது.
71. காமராஜர் ஆட்சி காலத்தில் மின்சாரம் வழங்குவதில் இந்தியாவிலேயே தமிழகமே முதலிடம் வகித்தது. விவசாயத்திற்கு மின்சாரத்தை பயன்படுத்துவதிலும் தமிழகமே முதல் மாநிலமாக காமராஜர் ஆட்சியில் திகழ்ந்தது.
72. இந்திய மொழிகளிலேயே முதன் முதலாக தமிழ் மொழியில் கலைக் களஞ்சியம் காமராஜர் ஆட்சி காலத்தில்தான் உருவாக்கப்பட்டது.
73. பெருந்தலைவர் காமராஜருக்கு "பாரத ரத்னா" எனும் பட்டத்தை இந்திய அரசு அளித்துப் பெருமைப்படுத்தியது.
74. காமராஜர் கண்ணீர் விட்டது மூன்று சந்தர்ப்பங்களில்தான். 1), காந்திஜி சுட்டுக் கொல்லப்பட்ட சேதி கேட்ட போது, 2). கட்சி விஷயங்களில் தனது வலக்கரமாக விளங்கிய செயலாளர் ஜி.ராஜகோபாலின் மறைவின் போது, 3). நெருங்கிய நண்பர் தியாகி பாலன் மறைந்த போது.
75. காமராஜர் பொது கூட்டங்களில் பேசுவதற்காக எதுவும் குறிப்புகள் எடுத்துக் கொள்வதில்லை. எதையும் நினைவில் வைத்து கொண்டு அவற்றை மிக எளிமையாகப் பேசுவார்.
76. காமராஜர் வெளிநாடு சுற்றுப் பயணம் செய்த போது அனைவரது பார்வையும் காமராஜர் பக்கம்தான் இருந்தது. காரணம் நாலு முழ கதர் வேட்டி, முக்கால் கை கதர் சட்டை, தோளில் கதர் துண்டு, இதுதான்.
77. ஆளியாறு திட்டத்தை முடியாதென்று பலர் கூறிய போதிலும் முடித்துக்காட்டினார் பெருந்தலைவர் காமராஜர்.
78. காமராஜர் விரும்பி படித்த ஆங்கில புத்தகம் பேராசிரியர் ஹாரால்டு லாஸ்கி என்பவர் எழுதிய அரசியலுக்கு இலக்கணம் Grammar of politics என்ற நூலை படித்து அனைவரையும் வியக்க வைத்தார்.
79. காமராஜருக்கு பிடித்த தமிழ் நூல்கள் கம்பராமாயணமும், பாரதியாரின் பாடல்களும்.
80. முதல்வர் ஜெயலலிதா தமிழ்நாடு அரசு சார்பில் காமராஜர் நூற்றாண்டு விழா எடுத்து சிறப்பித்தார்.
81. பெருந்தலைவர்காமராஜரின் முதலாம்ஆண்டு நினைவு நாளன்று15.7.1976-ல் இந்திய அரசு 25காசு தபால் தலையைவெளியிட்டது.
82. தமிழ்நாடு சட்டப்பேரவையில் பெருந்தலைவர்காமராஜரின் திருவுருவப்படம்அப்போதைய குடியரசுதலைவர் என். சஞ்சீவிரெட்டியால் 1977-ம் ஆண்டுதிறந்து வைக்கப்பட்டது.
83. டெல்லியில் காமராஜரின்திரு உருவச் சிலைஅமைக்கப்பட்டுள்ளது. சென்னையில் பிரசித்தி பெற்ற மெரினாகடற்கரைச்சாலை காமராஜர் சாலை என்று தமிழக அரசால் பெயர்மாற்றம் செய்யப்பட்டது.
84. தமிழக அரசு வாங்கிய கப்பலுக்கு `தமிழ் காமராஜ்' என்றுபெயரிடப்பட்டுள்ளது. சென்னை கிண்டியில் காமராஜர் நினைவாலயம்,அமைக்கப்பட்டுள்ளது.
85. மதுரைப் பல்கலைக்கழகத்திற்கு மதுரை காமராஜர் பல்கலைக்கழகம்என்று பெயரிடப்பட்டு, விருதுநகரில் காமராஜர் பிறந்த இல்லத்தை அவரதுநினைவுச் சின்னமாக தமிழக அரசு மாற்றியது.
86. காமராஜரிடம் உள்ள மற்றொரு சிறப்பு அவர் மற்றவர்களுடையபணிகளில் குறுக்கிடுவதில்லை என்பதுதான்.
87. தன்னைப் பாராட்டி யாராவது அதிகம் பேசினால், `கொஞ்சம்நிறுத்துன்னேன்' என்று சட்டையைப் பிடித்து இழுப்பார். அடுத்த கட்சியைமோசமாகப் பேசினால், `அதுக்கா இந்தக் கூட்டம்னேன்' என்றும் தடுப்பார்!
88. மாதம் 30 நாளும் கத்திரிக்காய் சாம்பார் வைத்தாலும் மனம்கோணாமல் சாப்பிடுவார். என்றைக்காவது ஒரு முட்டை வைத்துச்சாப்பிட்டால் அது அவரைப் பொறுத்தவரை மாயா பஜார் விருந்து!
89. சுற்றுப் பயணத்தின்போது தொண்டர்கள் அன்பளிப்பு கொடுத்தால், `கஷ்டப்படுற தியாகிக்குக் கொடுங்க' என்று வாங்க மறுப்பார்!
90. பந்தாக்களை வெறுத்தவர். முதல் தடவை சைரன் ஒலியுடன்அவருக்கான பாதுகாப்பு கார் புறப்பட்டபோது தடுத்தார். `நான்உயிரோடுதான இருக்கேன். அதுக்குள்ள ஏன் சங்கு ஊதுறீங்க' என்றுகமென்ட் அடித்தார்!
91. இரண்டு முறை பிரதமர் ஆக வாய்ப்பு வந்தபோதும் அதை நிராகரித்துலால் பகதூர் சாஸ்திரி, இந்திரா காந்தி ஆகியோரை பிரதமர் ஆக்கினார். `கிங் மேக்கர்' என்ற பட்டத்தை மட்டும் தக்க வைத்துக்கொண்டார்!
92. காமராஜரிடம் அனுபவம் இருந்தது. தீர்க்கமான அரசியல் நோக்கு,தன்னலமற்ற தன்மை, மக்களுக்கு சேவை செய்கிற ஆசை இருந்தது.
93. ஆட்சியில் இல்லாதவர்களின் குறுக்கீட்டை அவர் ஒரு போதும்அனுமதித்தது கிடையாது. சிபாரிசுகளை அவர் தூக்கி எறிந்து விடுவார்.
94. மக்களுக்கு நன்மை செய்யக் கூடிய திட்டங்களை சட்டவிஷயங்களைக் காட்டிக் கிடப்பில் போடுவதையோ தவிர்க்கமுற்படுவதையோ அவரால் பொறுத்துக் கொள்ள முடியாது.
95. வெற்றியைப் போலவே தோல்வியையும் இயல்பாக எடுத்துக்கொள்கிற மனப்பக்குவம் கொண்டவர் காமராஜர்.
96.அவர் `ஆகட்டும் பார்க்கலாம்' என்றாலே காரியம் முடிந்து விட்டது என்றுஅர்த்தம். தன்னால் முடியாவிட்டால் `முடியாது போ' என்று முகத்துக்குநேராகவே சொல்லி அனுப்பி விடுவார்.
97. காமராஜர் எதிர்க்கட்சிகளின் கருத்துக்களுக்கு எப்போதும்மதிப்பளிப்பவர். அவர் எதையும் மேம்போக்காகப் பார்ப்பதில்லை. அவர்கள்சொல்வதைக் கவனமுடன் கேட்டு ஆவண செய்வார்.
98. சராசரிக்குடி மகனும் அவரை எந்த நேரத்திலும் சந்திக்க முடியும். யார்வேண்டுமானாலும் அவரிடம் நேரில் சென்று விண்ணப் பங்களைக்கொடுக்க முடிந்தது.
99. ஆடம்பரம், புகழ்ச்சி, விளம்பரம் எல்லாம் அறவே பிடிக்காது அவருக்கு.
100. சொற்களை வீணாகச் செலவழிக்க மாட்டார். ரொம்பச்சுருக்கமாகத்தான் எதையும் சொல்வார். அனாவசிய பேச்சைப் போலவேஅனாவசிய செலவையும் அவர் அனுமதிப்பதில்லை.
101. எல்லாத் தகவல்களையும் விரல் நுனியில் வைத்திருந்தார். ஆனால்'எல்லாம் எனக்கு தெரியும்' என்கிற மனோபவம் ஒரு போதும் அவரிடம்இருந்ததில்லை.
102. மாநிலத்தில் எங்கே எந்த ஆறு ஓடுகிறது. எந்த ஊரில் என்ன தொழில்நடக்கிறது. எந்த ஊரில் யார் முக்கியமானவர் என்பதெல்லாம் அவருக்குத்தெரியும்.
103. அரசுக் கோப்புகளை மிகவும் கவனமாகப் படிப்பார். தேவைப்பட்டால்அவற்றில் திருத்தங்கள் செய்யத் தயங்குவதில்லை.
104. சொல்லும் செயலும் ஒன்றாக இல்லாவிட்டால் அவருக்குக் கோபம்வந்து விடும். உண்மையில்லாதவர்களை பக்கத்தில் சேர்க்க மாட்டார்.
105. ஒரு தலைவனுக்குரிய எல்லாப் பண்புகளையும் அவர் முழுமையாகப்பெற்றிருந்தார். அதனால்தான்அவரால் கட்சியை ஆட்சியை மக்களைச்சிறப்பாக வழிநடத்த முடிந்தது.
106. சிலசமயம் இரவு படுக்கை இரண்டு மணிகூட ஆகி விடும்.முக்கியமான பிரச்சினை பற்றிய விவாதங்கள் அதிகாலை ஐந்துமணிவரையும் நீடிப்பதுண்டு. எத்தனை மணிக்குப்படுத்தாலும் காலைஏழுமணிக்கு விழித்துக் கொண்டு விடுவார் அவர்.
107. காமராஜ் மக்களுக்காகத் தீட்டிய ஒவ்வொரு திட்டமும் ஒரு மகத்தானகுறிக் கோளாகவே இருந்தது.
108. காமராஜர் ஒன்பது ஆண்டுகள் ஆட்சி செய்தார். ஆனால் ஒருமுறைகூட அவர் ஆட்சி மீது ஊழல் புகார்கள் எழவிலை. கறைபடாதகரங்களுக்குச் சொந்தக்காரர் அவர்.
109. பணியாளர்களை மதிக்கும் பண்பு இருந்தது அவரிடம். தம்முடையகருணை மனம் காரணமாகவே ஏழைகள் மனதில் இன்றளவும் நிலைத்துநிற்கிறார் காமராஜர்.
110. காமராஜர் எந்த வேலையை யும் தள்ளிப் போட்டதில்லை. அன்றையவேலைகளை அன்றே முடித்து விட்டு மறு நாளுக்கான வேலைத்திட்டத்தையும் ஒழுங்கு செய்து கொண்டு விடுவார்.
111. காமராஜருக்கு தினமும் புத்தகம் படிக்கிற பழக்கம் உண்டு. ஏதாவதுஒரு புத்தகத்தைப் படித்த பின்பே உறங்கச் செல்வார்.

நாம் தவிர்க்க வேண்டிய 8 மன விஷங்கள்!

 நாம் தவிர்க்க வேண்டிய 8 மன விஷங்கள்! நமது மன அமைதியையும் மகிழ்ச்சியையும் நாமே அறியாமல் அழிக்கும் 8 நச்சு எண்ணங்கள் என்னென்ன என்று தெரிந்துக...